ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள்–மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்–

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

——

அவதாரிகை –

உங்களுக்கு அபேஷிதம் என் -என்ன
நோன்புக்கு வேண்டும் உப கரணங்களையும் அபேஷிக்கிறார்கள் –

கிருஷ்ண சம்ஸ்லேஷ ரச உத்சாகரான இவர்கள்
இவற்றை அபேஷிக்கைக்கு அடி -என் என்னில்

அந்த சம்ஸ்லேஷத்துக்கு ஏகாந்தமான நோன்பை பிரஸ்தாவிக்கையாலும்
கிருஷ்ணன் முகத்தை வெளியிலே காண்கைக்கு ஹேதுவாகையாலும் –
அவனுடைய திரு நாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு ஹேதுவாகையாலும்
இடையர் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலும்
நோன்புக்கு அங்கங்களை வேண்டிக் கொள்கிறார்கள்-

(சாம்யா பத்தி இதில் -அஷ்ட குணங்களில் ஸாம்யம் –
அபஹத பாப்மாதிகள் -தடங்கல் இல்லாமல் முழுமையாக நாம் பெறுவோம் அங்கே –
சாயுஜ்யம் அடுத்து -கைங்கர்யம் கொண்டு அவன் ஆனந்தம் -செய்து நாம் ஆனந்தம் –
சரணாகதியும் கைங்கர்ய பிரார்த்தனையும் மேல் இரண்டாலும்
நீராட்டம் உத்சவம் -உபகரணங்களைப் பெற்று ஏழு நாள்கள்
தை முதல் நாள் ஜீயர் படி உத்சவம்
பரத்வம்-ஆலின் சிலையாய்
சவுந்தர்யம் -மணி வண்ணன்
ஸுலப்யம் -மாலே
மூன்றும் விழிச் சொற்கள்)

பெண்காள்-உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்று சொன்னி கோள்-
நம்முடைய சம்ஸ்லேஷ ரஸ உத்ஸாகம் உடையவர்கள்
வேறு ஒன்றை அபேக்ஷிக்கக் கூடாமையாலே அது என் சொன்னி கோள் என்று
அதிலே ஒரு சம்சயம் வர்த்தியா நின்றது –

(பறை)அதாகிறது ஏது-
அதுக்கு மூலம் ஏது –
அதுக்கு வேண்டுவன எவை –
அவற்றுக்கு ஸங்க்யை எத்தனை -அவற்றைச் சொல்லுங்கோள் என்ன –

உன் முகத்தை வெளியிலே கண்டு
உன் திரு நாமங்களை வாயாலே சொல்லுகைக்கு ஹேதுவாய் இருபத்தொரு நோன்பை
இடையர் பிரஸ்தாபிக்கையாலே
உன்னோட்டைக் கலவிக்கு அது அவிருத்தமாய் இருக்கிற படியைக் கண்டு
இடையர் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே அந்நோன்பிலே இழிந்தோம்

அதுக்கு முன்பு உள்ளார் செய்து போருவது ஓன்று உண்டு –
அது தனக்கு வேண்டும் உபகரணங்களான அங்கங்களும் இவை
அவற்றையும் தந்து அருள வேணும் என்று வேண்டிக் கொண்டு
அவனை ஆசைப் பட்டவர்களாகச் சொல்லிக் கொண்டார்கள் –

இதுக்கு முன்பு எல்லாம் தங்கள் பட்ட வியசனங்களைச் சொல்லி வந்தார்கள்

இப்போது அவனைக் கண்டவாறே
அவனுடைய வ்யாமோஹம் கடல் போலே எட்ட முடியாதபடி இருந்ததே
தங்களுடைய வ்யாமோஹம் குளப்படியாய்-
அத்வேஷ கோடியிலேயாய் என்னலாய் இருந்தது –
அவனுடைய பிச்சு வடிவு கொண்டால் போலே இருந்தது –

இது கொண்டு இத்தனை நாளும்
நாங்கள் வரும் தனையும் பாடு ஆற்றின படி தான் எங்கனே என்று
மாலே என்கிறார்கள் –

(முக்தன் -சாம்யா பத்தி -புண்ய பாப விதூய பரமம் ஸாம்யம் உபைதி -அபஹத பாபமத்வாதிகள் -ஸ்வரூப ஆவிர்பாவம்-ஸ்வேன ரூபம் –
சாந்தோக்யம் -8-1-1-2-3-ஏவ மே விஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்சோதி ரூப சம்பத்ய
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -இயல்பான நிலை-
சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா -விஜர-விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்ய காம சத்ய சங்கல்ப
ஸாம்ய ஸ்ருதி -ஸஹ ஸ்ருதி -சாதர்ம்ய ஸ்ருதி
கூடிற்றாகில் நல்லுறைப்பு  கூடாமையைக் கூடினால்– அது அதுவே -ஸ்வாமி சேஷபூதன் தன்மை மாறாதே
சாம்யா பத்தி பிரார்த்தனை இதில் -நோன்புக்கு உப கரணங்கள் இதில-
இதுவே தினப்படி ஸ்ரீ வில்லிபுத்தூரில் நாள் பாட்டு
தை மாத உத்சவம் 8 நாள் உத்சவம் -மா முனிகளுக்காக – கூடவே எழுந்து அருளி இவருக்கு முன் நீராட்டு உத்சவம் நடக்கும்
மூடு பல்லக்கில் வட பெருமாள் சந்நிதியில் நின்று நாள் பாட்டு மாலே மணி வண்ணா அனுசந்தேயம் ஆகும்-அன்றைக்கு பாசுரம் அல்ல -)

(ஸ்ரீ வில்லி புத்தூரில் காலை 9.30 மணிக்கு மேல் தங்கப் பல்லக்கில் ஆண்டாள் கோயிலில் இருந்து எழுந்து அருளி மாட வீதிகள் வழியாக
ராஜ கோபுரம் முன் எழுந்து அருளி அங்கு போர்வை படி களைந்து திருவடி விளக்கம் அரையர் சேவை நடந்து
பின்பு மண்டபங்கள் எழுந்து அருளி ரத வீதி சுற்றி மதியம் 1 மணிக்கு மேல் எண்ணெய் காப்பு மண்டபத்துக்கு எழுந்து அருளினார்
மதியம் 3 மணிக்கு மேல் எண்ணெய் காப்பு சேவை பக்தி உலாத்துதல் நடைபெறும்
இரவு 8 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் ரத வீதி புறப்பாடு -மூல ஸ்தானம் வந்து அடைதல் நடைபெறும்
தை முதல் தேதி மணவாள மா முனிகள் மங்களா சாசனம்-(1371-1443)
அடுத்த கனு அன்று பெரியாழ்வார் சந்நிதியில் கனு வைபவம் நடைபெறும்)

(நாராயண பரமாத்மா பரஞ்சோதி பரம தத்வம் பராயணம்-ஆனந்த மயன் -சாம்யாபத்தி பிரார்த்தனை இதில்
சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மம் -புண்ய பாப விதூய -நிரஞ்சன் பரம சாம்யம் உபைதி –
கண்ணனையே கையில் கொண்ட இவர்கள் திண்ணைப் பேச்சும் ஸாஸ்த்ரம் -)

(மாலே -ஆஸ்ரித பவ்யன் -ஸுலப்யம்
மணி வண்ணா -ஸுந்தர்யம்
ஆலினிலையாய்-மேன்மை -பரத்வம்

அச்யுதா -அமரர் ஏறே -ஆயர் தம் கொழுந்தே
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை போல் இங்கும்
மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -ஆகார த்ரயம் அவளுக்கு -அநந்ய சரண்யத்வம் அநந்யார்ஹத்வம் அநந்ய போக்யத்வம்
இற் பிறப்பு இரும் பொறை கற்பு மூன்றும் -களி நடம் புரியக் கண்டேன்

1-ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன-பூமியே நடுங்கும் படி
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே-அவனது நம்மிடம் வர வேண்டுமே
அப் பாஞ்ச ஜன்யம் -பெரியாழ்வார்-அங்கு மங்களாசாசனம் இங்கு சாம்யா பத்தி பிரார்த்தனை
போல்வன சங்கங்கள் –பல வேண்டும் -மத்த பரதரம் கிஞ்சித் நாஸ்தி –

2-போய்ப் பாடுடையனவே சாலப் பெரும்பறையே -இடமுடைத்தான-பேரி வாத்யம் -மேலே பறை கொள்வான் அன்று –
அறிந்து அறிந்து தேறி தேறி உணர வேண்டாமோ -கைங்கர்ய பிரார்த்தனை என்று உணர வேண்டாமோ –
3-பல்லாண்டிசைப்பாரே-
4-கோல விளக்கே -அழகிய மங்களமான விளக்கு
5-கொடியே-த்வஜம்
6-விதானமே-மேல் கட்டி
ஆறு விஷயங்கள் -அபஹத -இத்யாதி ஆறும் ஸூசகம்-பிரார்த்தித்தே பெற வேண்டும் -அருள் என்கிறார்கள் )

(நோன்புக்கு ஸம்மானம் நாளைக்கு பாசுரம்-

பெண்காள்-உங்களுக்கு அபேக்ஷிதம் என் என்று கிருஷ்ணன் கேட்க
நோன்புக்கு வேண்டும் உபகரணத்தைச் சொல்லி
அவற்றைத் தர வேணும் என்கிறார்கள் –

(பத்துடை அடியவர்க்கு எளியவன் -முதலில் -அத்வேஷம் மாத்திரமே போதும் –
பிறருக்கு அறிய வித்தகன் -சொல்லி எத்திறம் உரலினோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே -மோஹித்து -ஆறு மாதங்கள் –
தப்பைச் செய்தேன் தப்பைச் சொன்னேன் -அனுபவத்துக்கு போகாமல் உபதேசிக்க வேண்டும் -எளிமையே ஸ்வபாவம் –
மாலே மணி வண்ணா ஆலினிலையாய் -பரத்வம் வந்தேறி என்னும்படி
ஸுவ்லப்யம் -ஆஸ்ரித வ்யாமோஹம் நீரோட்டம் தெரிகிறதே கீழே உள்ளபடி அறியாமல் சொன்னது )

இப்பாட்டில்
பகவத் சம்ஸ்லேஷத்துக்கு வேண்டும்
உபகரணங்களை வேண்டிக் கொள்கிறார்கள் –

போக உபகரண சித்தியும் அவனாலே என்கிறது

நோன்பே நோற்காமல் சிம்மாசனம் அடுத்த பாசுரம் –
மேல் பறை வேண்டி சரணாகதி -பறை என்பதன் விளக்கம் -இரண்டு பாசுரங்களில்)

———

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்

மாலே-

முன்பு -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்து இருந்தார்கள் –
இப்போது இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் –
சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள்
மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –
மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் –
இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —

மாலே –
நாங்கள் தெளிந்து
நோன்பு நோற்க வாகிலும் வல்லோம் ஆனோம் –

நோற்கவும் ஷமன் அன்றிக்கே
நாங்கள் வந்து எழுப்பும் அளவும்
எழுந்து இருக்கவும் மாட்டாதே
வ்யாமோஹம் இருந்த படி என் –

மாலே
நாராயணன் —
பையத் துயின்ற பரமன் –
தேவாதி தேவன் -என்று முன்பு அபரிச்சேதயமான மேன்மை
யுனக்கு உள்ளது என்று இருந்தோம் –

இப்போது மேன்மை இடு சிவப்பு –
வாத்சல்யமே உனக்கு பிரகிருதி என்று நிலையிட்டோம் காண் –
உன்னைக் கண்ட வாறே –

பெருமாளுக்கு பிரதானமான குணத்தை –
சரணாகதர் வத்சலர் -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடாக நிலையிட்டாள் பிராட்டி –

அப்படியே
கிருஷ்ணனுக்கு பிரதான குணமாய்
மஹா பாரதத்துக்கு உள்ளீடான ஆஸ்ரித வியாமோஹத்தை
மாலே என்கிற சம்புத்தியாலே
வெளியிடுகிறார்கள் இடைப் பெண்கள்

ராவணன் பின்னே பிறந்த நம்மை
ரகு குலத்தில் பிறந்தார் கைக் கொள்ளுவார்களோ -என்று இருந்தான் விபீஷணன் –

ராவணன் பின்னே பிறந்தவனை ராவணனை ஆசைப்படுகிற நமக்கு
சித்திக்கப் புகுகிறதோ என்று இருந்தார் பெருமாள் –

இது இறே இரண்டு தலைக்கும் வாசி

இத் தலை ஒரு மாசம் ஜீவியேன் என்னில்
ஒரு க்ஷணம் ஜீவியேன் என்று இறே அத் தலை

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் -என்கிற அளவு இறே இவர்களது –
என்னில் முன்னம் பாரித்து பருகினான் இறே அவனது -(கார் ஒக்கும் காட்கரை அப்பன் )

(கோதண்ட ராமர் சந்நிதியில் பராங்குச பரகால யதிராஜர் முன்னே வர
நம்பெருமாள் பாய்ந்து முன்னே வர அவர்கள் பின்னே எழுந்து அருளி வியந்து இருக்க
இன்றும் இத்தை மணல் வெளியில் சேவிக்கிறோமே )

எனைத்தோர் பல நாள்,அழைத்தேன் இறே -இவர்களது –
என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் இறே -அவனது –

அதனில் பெரிய என்னவா இறே -இவர்களது –
அவா அறச் சூழ்ந்தாயே இறே அவனது –

நாராயணனை நமக்கு கிடைக்குமா -என்பது பெண்கள் நினைவு
யது குலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப் புகுகிறதோ என்று அவன் நினைவு

ஒருத்தி மகனானத்தை விட்டு ஒருத்தி மகனாய்த்து இவர்களுக்கு இறே –
ஒளித்து வளர்ந்தது கம்சனுக்கு அன்றே –
பெண்களை பிரியாமைக்கு இறே

நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்–(நாச்சியார் -3-9 )
நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த –

மாலே
இவர்கள் பக்கல் பிச்சு இறே ஒரு பிறவியிலே இரு பிறவி யாய்த்து –
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை –
பிச்சாய்ப் பிறந்து பெண்களையும் பிச்சேற்றித் தன்னோடு ஒரு கோவையாக்கும் –
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் -(நாச்சியார் -11-2)
(அங்கு அஷ்ட குண ஸாம்யம்
இங்கு மாலாவதற்கு ஸாம்யம் )

தெளிவுடையார் பெண்களை சந்தியில் வைப்பார்களா-

நம்முடைய வியாமோஹம் நீங்கள் அறிந்த படி என் என்ன –

அகவாயில் வியாமோஹம் வடிவிலே நிழல் இட்டுக் காட்டுகையாலே தெரிந்தது என்கிறார்கள்
(ரத்ன கர்ப்ப ஸாளக்ராமம் உண்டே )
மணி வண்ணா
பெண்கள் பிச்சுக்கு நிதானம் இருக்கிறபடி

மாலே-
தங்கள் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் இருக்கிற படி –
இவர்கள் பேச்சைக் கேட்ட பின்பு பண்டையிலும் பிச்சின் மேல் பிச்சாயிற்று –
பண்டு -சர்வேஸ்வரன் -நிர்வாஹகன் -சர்வஞ்ஞன்- சர்வசக்தன் -என்று இருப்பார்கள்
இப்போது இத் தத்துவத்தை அழகிதாக நிலையிட்டாள்
வாத்சல்யமே ஸ்வரூபம் என்றபடி

(ஆத்மாவுக்கு பாகவத  சேஷத்வமே யாதாத்ம்ய ஸ்வரூபம்- அடியேன் உள்ளான்-நெடுமாற்க்கு அடிமை -உற்றதும் உன் அடியாருக்கு அடிமை )

பிராட்டி சக்ரவர்த்தி திருமகனை -விஹிதஸ்ய தர்மஞ்ஞய சரணாகத வத்ஸல-என்று ஸ்வரூபத்தை நிலையிட்டாள் –
அதுவே ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணம் –
இங்கு இவள் சரணாகத பக்ஷபாதி -என்று நிலையிட்டார்கள்
இதுவே மஹா பார்த்ததுக்கு உள்ளீடான பிரதான குணம்(மம ப்ராண பாண்டவர் என்று இருப்பவன் )

(குடப் பாம்பில் கை இட்டவன் -நடுநிலை அல்லவே ராஜா வான குலசேகரப்பெருமாள்
சுப்ரமண்ய பட்டர் ஐதிகம் -மத்யஸ்தராக இருக்க மாட்டேன் என்றாரே -பாகவதர் ஏற்றம் அறிந்து)

மாலே -மாலை உடையவனே சொல்லாமல் அன்பே–அன்பு வேற அவன் வேற இல்லை

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் இவர்–ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து –தான் என்னை முற்ற பருகினான்
இவர் விழுங்க திட–பருகினான் -த்ரவ்ய–வ்யாமோஹம் கண்டு ஆழ்வார் உருக அத்தை பருகினான் –
எனைத்தோர் பல நாள் அழைதேற்க்கு–எந்தன் கருத்தோடு வீற்று இருந்தான்
அதனில் பெரிய அவா–தத்வ த்ரயம் விட பெரிய என் அவா -விளாக்கொலை கொண்ட ஆழ்வார் ஆசை–அவா அற என்னை சூழ்ந்தாரே -அவனது
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளன்-மன்றில் குரவை மால் செய்தான்-
கண்ணன் என்னும் கரும் தெய்வம் – உன் கரிய திருமேனி –வேதாஹமேதம் -ஒத்தார் மிக்கார் இல்லா பெரியவன் –
இத்தனை -அரங்கனாய பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே -திருமாலை -4-
சதுர்விஜா ஆர்த்தா விஞ்ஞாசு அர்த்தாதி ஞானி – அல்பத்துக்கும் தன்னிடம் வருகிறாள்
ஞானி து ஆத்மைவ மே மதம் -என் மதம் இது நிச்சயம் அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் -ஆளவந்தார்
அறிவார் ஞானிகளுக்கு உயிர் ஆனவனே ஆளவந்தார் கேட்டு – அன்மொழித் தொகை அறிவாரை உயிர் ஆக உடையவனை
உன்னை அர்த்தித்து வந்தோம் -நீயே வேணும் என்பாரை நவ கோடி நாராயணன் வேண்டாம் நீ தான் வேணும் என்ற அர்ஜுனன் போலே
என்னையே விரும்பி – சேவை சாதிக்க அவயவ பூதிகள் இவைகள் பறை கரங்க மன்றில் கூத்தாடினான் காணேடி என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே —

மால் பெரியோன்-கருமை- பெருமை -மையலுமாம்

—————-

மணி வண்ணா –
அபரிச்சேத்யனாய் இருக்கச் செய்தேயும்
முந்தானையிலே முடிந்து ஆளலாம் படி இருக்கை –
கீழ்ச் சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழல் இடுகை –
இந் நீர்மை இன்றிக்கே
காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
பெண்கள் பிச்சுக்கு நிதானமான வடிவு -என்னவுமாம் –
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -என்னக் கடவது இறே-
நீங்கள் வந்தது என் -என்ன
வந்த கார்யத்தைச் சொல்லுகிறார்கள் –

மணி வண்ணா
தாமரையில் இருக்கிறவள் அத்தை விட்டு வருவது இவ் வடிவைக் கண்டு இறே –
பனி மலராள் வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன் (பெரிய திருமொழி-2-2)

மணி வண்ணா
வியாமோஹன் அன்றிக்கே காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு

மாலே மணி வண்ணா
இப்படி வடிவு படைத்தாரும் பிறரத்தை ஆசைப் படுவார்களோ
பிச்சர் கையில் மாணிக்கமாய் -உன்னுடம்பு உன்னதாமோ
(ந தே ரூபம் –பக்தாநாம் அன்றோ )

அன்றிக்கே –
மால் -என்று
பெரியோன் -என்றபடியாய்
சூட்டு நன் மாலைகள் எடுத்து ஸூரிகள் சேவிக்க இருக்கும் ஈஸ்வரத்வம் சொல்கிறது

மணி வண்ணா -என்று
வெண்ணெய் தொடு உண்ணப் போந்து -அபரிச் சேதியனாய் இருக்கச் செய்தே-
முந்தானையில் முடிந்து
பெண்களுக்கு அடக்கி ஆளலாம் படி இருக்கிற ஸுலப்யத்தை சொல்லுகிறது ஆகவுமாம்-

மணி வண்ணா -என்று மணியினுடைய ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –
அதாவது –
1-உண்டு -என்ன உயிர் நிற்கையும்
2-உடையவன் காலில் சர்வரும் விழும்படியாய் இருக்கையும் –
3-இழந்தார் பிழையாது ஒழிகையும்
4-கைப் பட்டார்க்கு பூணலாய் இருக்கையும்-
5-பூணாதார்க்கு அழித்து உண்ணலாய் இருக்கையும் –
6-கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கையும் –
7-பிறர்க்கே யாய் இருக்கையும்
8-அளவு படாமல் உபகரிக்கையும் –
9-கொடுத்தோம் என்று நினைத்திராது ஒழிகையும்
10-வேறு ஒன்றில் கண் வைக்க ஒட்டாது ஒழிகையும் தொடக்கமான ஸ்வபாவங்கள் –

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை என்று
நம்மை ஆச்சி பல காலம் சொல்லும் –
தாய்க்கு மணி வண்ணன் அத்தனை அன்றோ
மணி மாமை குறைவில்லாதே -(4-8 )
அழகியார் இவ் வுலகம் மூன்றுக்கும் (6-2 )-என்கிற உங்களுக்கு ஏற யுடம்பு படைக்கப் போமோ
இத்தனை மிகை நம்மை சொல்லுகிறது என் –
போந்த காரியத்தை சொல்லுங்கோள் என்ன

மணி வண்ணா
அபரிச்சேதனாய் இருக்கச் செய்தே-முந்தானையில் முடியலாம் படி இருக்கை

மணி வண்ணா
பிச்சு வடிவில் தெரிந்து இருக்கும் என்றுமாம்

மணி வண்ணா
பெண்கள் பிச்சுக்கு நிதானம்(கண்ணன் என்னும் கரும் தெய்வம் அன்றோ )
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
நீர்மை இன்றிக்கே காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு என்று

(மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை –
மயலை ஊட்டி விட்டு சமன் கொள் தரும் தடம் குன்றம் போல்
இவனும் தனது பிச்சை அருளி-இதிலும் -பித்திலும் – சாம்யா பத்தி அளிப்பானே)

(மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே)

மாலே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-விபீஷணோ மஹா ப்ராஜ்ஜோ பூமிம் சமவ லோகயன் -என்று
பெருமாளைக் கிட்டின பின்பு
நம்மைக் கைக் கொண்டு நம்மை உளோமாகப் பண்ண வல்லரே என்று
தான் இருந்த இருப்பைப் பெருமாள் நினைந்து இருந்தமை முகத்திலே தோற்றி இருந்தது
முற்பட்ட நினைவுக்கு ருஷி உவாச ச மஹா ப்ராஜ்ஞ- என்றான்-
பிற்பட்ட பெருமாள் பிரக்ருதியை அறிந்தபடிக்கு
விபீஷணோ மஹா ப்ராஜ்ஜோ பூமிம் சமவ லோகயன் -என்றபடியே நிலையிட்டார்கள் இவர்களும் –

(ராகவேண அபயம் தத்தே ஸன்னதோ – ராவணன் அனுஜனுக்கு தம்பிக்கு சரணாகதி தந்த பின்பே அவதார பிரயோஜனம் பெற்றான்
கிட்டாவிடில் பரமாத்ம ஸ்வரூப நாஸம் ஆகி இருக்குமே-விஜ்வர கிருதக்ருத்யன் ஆனான்
அந்தாம அன்பு –ஆரம் உள -ஆழ்வாரைப் பெற்ற பின்பே எல்லாம் சத்தை பெற்றதே)

(ருக்மிணி ஸந்தேஸம் –கல் நெஞ்சமோ -எனக்கோ எழுத்தாணி எடுத்து எழுதி உம்மையே அனுப்பி –
நானோ உருகி அன்றோ இருக்கிறேன்
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் -போல் இவர்கள் போக –
என்னில் முற்றம் பாரித்து என்னை முற்றம் பருகினான் போல் இவன் மாலாகி நிற்கிறான்)

(மணல் கொட்டகையில் இன்றும் பராங்குச பரகால யதிராஜர் நாலடி முன்னே வர நம்பெருமாள் விரைந்து வந்து விழுங்குவதை
நித்யம் மாலையில் உத்சவத்தில் காண்கிறோமே-)
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று இவர்கள் இருக்க
பெண்கள் நம்மை கடாக்ஷிப்பது காண் என்று பகவான் இருந்து இருப்பைக் கண்டு தலை சீய்க்கிறார்கள்

வந்த காரியம் இருவரும் மறந்தார்கள்
இருவர் நெஞ்சும் கல்லால் பண்ணினது போல் திகைத்து போய் அசைவில்லாமல்  இருந்தார்கள்
ஆகிலும் இவர்கள் விடார்களே(ருக்மிணி பிராட்டியைப் போல்)

இவர்கள் அவனுக்கு வரிசை கொடுக்கிறார்கள் -செய்ய வேண்டிய கையோலை இட்டுக் கொடுக்கிறார்கள்
வைதேஹிக்கு பெருமாள்  சொன்னது போல்-

(ரமதே கச்சித் பஸ்யத் சித்ர கூடே மயா ஸஹ -இவைற்றைப் பார் என்று பெருமாள் சீதைக்கு காட்டினால் போல் )

செம்படவன் -மாணிக்கம் -வியாபாரி -அரசன் -கதை–பெருமை அறியாதார் அல்ப பலம் பெற்று போவார் -ஐஸ்வர்யம்
ரிஷிகள் போல்வார் தபஸ் துருவ பதம் பரும ரிஷி மோஷம் வியாபாரி போலே -கைவல்யம் -சாதனாந்தர நிஷ்டர்
பிரபன்னர் -சாதனம் ஆக்காமல் ஸ்வயம் போக்கியம் ஞானி வாசுதேவம் சர்வம் இதி –
வண்ணம் ஸ்வ பாவம்

——————

மார்கழி நீராடுவான் –
மார்கழி நீராடுகைக்கு உப கரணங்கள் வேண்டி வந்தோம்-
ஆஸ்திக்யாதிரேகத்தாலே -அங்கி கைப்படத் இருக்கச் செய்தேயும் –
அங்கத்தை விடாது ஒழிகிறார்கள் –
மார்கழி நீராட்டமாவது என் -என்ன –
இது பிரசித்தம் அன்றோ -என்ன –

மார்கழி நீராடுவான்
மகிழ்ந்து -மார்கழி நீராட -என்று ஊராக சங்கல்பித்த கார்யம் தலைக் கட்டுகைக்காக –

சாத்தியம் கைப் பட்டு இருக்கச் செய்தே
ஆன்ரு சம்சயத்தாலும்
ஆஸ்திக்ய அதிசயத்தாலும்
க்ருத்யாம்சம் விடார்கள் இறே
மார்கழி நீராடுகைக்கு உபகரணங்கள் வேண்டி வந்தோம்

இவர்கள் சொல்லுமது கேட்க்கைக்காக இத்தை ஷேபித்து
இது எங்கே உள்ளது என்று தான் என்றான்

இது இங்கனே அப்ரஸித்தமாய் இருந்ததோ -என்றார்கள் –

காமநாதிகாரிகளுடைய ஜ்யோஷ்டோமாதி விதி போலே ப்ரசித்தமோ என்ன –

அனன்ய பிரயோஜனைகளான எங்கள் முன்னே
பிரயோஜனாந்தர பரருடைய விதியைக் காட்டினாயே என்று இவர்கள் சொல்ல

முமுஷுக்களுடைய த்யான விதி போலே பிரசித்தமாய் இருந்ததோ என்று அவன் சொல்ல

நாஸ்திகரைப் போலே நீ சொல்லுகிறது என் –
ஆள் அறிந்து வார்த்தை சொல்லாய்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்பவருடைய அனுஷ்டானம்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லுகிறவை போலே அல்ல காண் –
பிரபல பிரமாண சித்தம் காண் என்கிறார்கள் –

(ஸ்ருதி ஸ்ம்ருதி உணர்ந்த வைதிகர் அனுஷ்டானம் தான் பிரபல பிரமாணம்
வேதங்களும் பிரமாணம் மேலையார் செய்வனகள் )

மார்கழி நீராடுவான்-
மார்கழி நீராடுகைக்கு உபகரணம் தேடி வந்தோம் -என்ன –
அங்கி கைப் பட்ட இடத்திலும் அங்கம் கைப் படாது ஒழிவதே –
நாஸ்திகரைப் போலே -மார்கழி நீராட்டாவது என் என்ன
இது அறியாயோ என்ன

ஜ்யோதிஷ்டோ மேந ஸ்வர்க்க காமோ யஜேத -என்கிறபடியே ஸித்தமாய் இருந்ததோ -என்ன
எங்களுக்கு ஸ்வர்க்காதிகளில் ஸ்ரத்தை யுண்டோ என்ன

நிதித்யாசிதவ்ய-என்கிறால் போலே தான் உண்டோ என்ன
பிரமாணங்களை விஸ்வசித்தால் பலிக்கிலும் பலிக்கும் -தவிரிலும் தவிரும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட-என்று பூர்வர்கள் அனுஷ்டித்தது ஆகையால் பலத்துக்கு இழவில்லை –
அது தானே அமையும் -நீ – இறை இறை -அறிவது ஓன்று அன்று(நீ தேவாதி தேவன் -நாங்கள் அடியாருக்கு அடியார் -விஜாதீயன் )

(திரிபுரா தேவி -உடையவர் கை காட்டும் இடம் வியக்தியே பர தேவதை)

மார்கழி நீராடுவான்-
மார்கழி மாசத்தில் நோன்புக்கு அங்கமாக குளிக்கை —இந்நோன்பு தான்–காம்யார்த்திகளுக்கு சாதகமாயும்
நிஷ்காமருக்கு நித்தியமாயும்–பிரபன்ன அதிகாரிகளுக்கு பகவத் கைங்கர்யமாயும் -இருக்கும்
ஆகையாலே
பிரபன்ன அதிகாரிகளுக்கு சொல்லுகிற கர்ம த்யாகம்–சாஸ்த்ரோக்தமான ஆகாரத்தாலே அனுஷ்டியாது ஒழிகை ஒழிய
கேவலம் அனநுஷ்ட ரூப த்யாகமாகம் அன்று என்றது ஆய்த்து

—————

மேலையார் செய்வனகள் –
பிரசித்த தமம் காண் இது –
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலும் சிஷ்டாசாரம் இறே பிரசித்த பிரமாணம் –
ஆகில் வேண்டுவது சொல்லுங்கோள் என்ன –

மேலையார் செய்வனகள்
விதி ப்ரவ்ருத்தமானால் பல வ்யாப்தமாந்தனையும் சம்சயத்துக்கு விஷயம் உண்டு –
அனுஷ்ட்டித்து பல சித்தி உண்டானதுக்கு சம்சயம் இல்லையே –

விச்வாமித்ரன் சொன்னான்
கண்டு சொன்னான் என்றால் போலேயோ
கபோதம் அனுஷ்டித்தது -(புறா கதை )

மேலையார் செய்வனகள்
நிர்தோஷ பிராமண சாஸ்திரம் தானும்
வியாசன் சொன்னான்
மனு சொன்னான்
ப்ரஹ்மாவாதிகள் சொல்லுவார்கள்
யாதொரு படி அவர்கள் அவ்விடத்திலே வர்த்தித்தார்கள் அப்படி வர்த்தி என்று –
ஞானவான்களுடைய வசனத்தையும்
அனுஷ்டானத்தையும்
அன்றோ பிரமாணமாகச் சொல்கிறது –

வேதங்களுக்கு முன்னே அன்றோ
தர்மஞ்ஞருடைய ப்ராமாண்யம் சொல்லப் படுகிறது

மேலையார் செய்வனகள் –
என்ன தப்பைச் சொன்னோம் -நம்மைக் கோபியாதே வேண்டுவன சொல்லலாகாதோ என்றான்

பட்டர் வேடர்-வணங்கி தேன் தினை மா கொடுத்து-காட்டில் விசேஷம்-முயல் -ஓட -குட்டி முயல் கிடைக்க-தாய் முயல் முன்னே சுற்றி வர
எழுந்து நிற்க-பரிதாபம்- பட்டு குட்டி விட்டேன்-நஞ்சீயர்-சரணாகதி சாஸ்திரம் சொல்லிக் கொடுத்தவர் இல்லை-பலம் உண்டு முயலுக்கு யார் உபதேசித்தார் –
யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள்-யாதொரு அளவு செய்தார்கள் அவ்வளவு லோகம், அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று தேர் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ

—————

வேண்டுவன கேட்டியேல் –
கேட்புதியாகில் -என்கிறது
அந்ய பரதையாலே –
அந்ய பரதை என் -என்னில்
பஞ்ச லஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே
இவர்கள் முலையிலும் இடையிலும் கண்ணிலும் முகத்திலும்
துவக்குண்டு ஆனைக்குப்பு ஆடுவாரைப் போலே இருக்கையாலே
தட்டி எழுப்புகிறார்கள் –

இத்தால் -ஸ்வாபதேசத்தில்
ஜ்ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –
இவை இறே ஒரு அதிகாரிக்கு அழகு ஆகிறது –
காண்கைக்கு ஹேது வாகையாலே கண் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
போக உபகரணம் ஆகையாலே முலை -என்று பக்தியைச் சொல்லுகிறது –
கார்ச்யத்தாலே இடை என்று வைராக்யத்தைச் சொல்லுகிறது –

கார்ச்யத்தாலே -வைராக்கியம் தோற்றுமோ -என்னில்
கர்ச்யத்தாலே விரக்தியைச் சொல்லிற்றாய்
அத்தால்
விஷயாந்தர ஸ்பர்ச ராஹித்யத்தை சொல்லுகிறது –

உங்கள் வடிவு கண்ணுக்கு போக்யமோபாதி
உங்கள் வார்த்தை செவிக்கு போக்கியம் அன்றோ
சொல்லுங்கோள் என்ன -சொல்லுகிறார்கள்

வேண்டுவன கேட்டியேல்
யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள் –
யாதொரு அளவு செய்தார்கள் -அவ்வளவு லோகம் அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று
தேர்த் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ –

சாஸ்திரம் விதித்ததே யாகிலும்
சிரேஷ்டர் அனுஷ்டானம் இல்லாத இடத்தில் தவிரக் கண்டு அறியாயோ –

அஷ்டகையில் -பசு விசசநம் கர்த்தவ்யம் என்னும் இடம் பசு மேய்ப்பார்க்குத் தெரியாதே –

உன்னை பர தேவதை என்றும்
உனக்கு வாசக சப்தம் நாராயணன் என்றும்
நாங்கள் ஆதரிக்கிறது வேத சாஸ்த்ர சித்தம் என்று அன்று இறே
விட்டு சித்தர் தங்கள் தேவரை -என்றும்
விட்டு சித்தன் விரும்பிய சொல் -என்றும் அன்றோ –

வைதிக விதிகள் எல்லாம்
உன்னுடையாருடையான கம்பீரமான மனசை அனுவர்த்தித்து இறே பிரமாணம் ஆகிறது

ஒத்த ஓதா நிற்கச் செய்தே ஒரு மந்த்ரத்தை ஸ்வீகரித்து
இதர மந்த்ரங்களைக் கை விட்டது
சிஷ்ட அசிஷ்ட பரிக்ரஹங்கள் ஆகையால் இறே –

அப்படி பரிக்ரஹித்த மந்த்ரம் தன்னில்
மந்த்ர ரத்னத்துக்கு உத்கர்ஷம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் என்று இறே –
திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின்-என்னக் கடவது இறே

வேண்டுவன
லோக ஸங்க்ரஹத்தயா அனபேஷிதங்களும் செய்யா நிற்பர்கள் –
அவர்கள் செய்யுமா போலே அவை எல்லாம் செய்யப் போகாதே என்ன

வேண்டுவன
அவர்கள் செய்து போருமவற்றில் இப்போது அதிகரித்த காரியத்துக்கு அபேக்ஷிதமுமாய்
ஸ்வரூப விரோதமும் பிறவாதே இருக்குமவை-

இவர்கள்
மணி வண்ணா என்று அவன் வடிவிலே கண் வைத்துக் கொண்டு இருக்கிற மாத்ரம்-
அஞ்சு லக்ஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே அவர்கள்
கண்ணிலும் முலையிலும் இடையிலும் துவக்குண்டு அந்நிய பரனாய் இருந்தான் –
தட்டி யுணர்த்தி
கேட்டி
என்கிறார்கள் –

இவர்களாலும் புறம்புள்ள அந்நிய பரதை இறே தவிர்க்கலாவது-
தங்கள் பக்கல் அந்நிய பரதை தவிர்க்கப் போகாது இறே
ஊரார் இசையாத போது இறே -ஓடி அகம் புக வேண்டுவது –
இப்போது வைத்த கண் வாங்காதே அனுபவிக்கலாமே-
ஆகையால் பார்த்துக் கொண்டு இருந்தான் –

சிலர் பட்டினி கிடக்க சிலர் உண்டு ஸூகிக்குமா போலே
கெடுவாய் நீ என் செய்கிறாய்
கேட்க்கிறாயீ -என்கிறார்கள் –

உங்களுடைய ஞான பக்தி வைராக்யங்களினுடைய நிழலீடு ஆகையால்
கண்ணும் முலையும் இடையும் போக்யமாகையாலே
உங்கள் வடிவைப் பார்த்துக் கொண்டு இருந்தோம் –
உங்களுடைய மழறு தேன் மொழிகள் (6-2 )செவிக்கு போக்யமாம் படி கேட்க்கிறோம்-
திரு உள்ளமாகல் ஆகாதோ –
வேண்டுவது எல்லாம் -என்றான்

வேண்டுவன கேட்டியேல்
உன் அந்நிய பரதையாய் கெட்டால் சொல்ல வேணுமோ என்ன
அந்நிய பரதை என் என்னில்
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் முன்னே வந்து நிற்கையாலே
ஆனைக்குப்பாடுவாரைப் போலே (சதுரங்கம் -chess)எங்கள் வார்த்தை கேளாதே இவர்கள்
கண்ணிலும் முலையிலும் இடையிலும் வடிவு அழகில் மண்டினான் என்கை
இவர்கள் உன் காரியத்துக்கு வந்தோமோ என்ன
உங்கள் வடிவு அழகு கண்ணுக்கு இலக்கானவோபாதி
உங்கள் வார்த்தை என் செவிக்கு இலக்கு அன்றோ –
அதுவும் என் கார்யம் அன்றோ -சொல்லுங்கோள்-என்ன

(ப்ராப்தாவும் ப்ராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே-God proposes God disposes Man poses-)

———————————–

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
ஜகத்தை எல்லாம் வாழும்படிக்கு
த்வநிக்கைக்கு இடமுடைத்தானவை –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலி இறே தாரகம் –
அப்படியே நாடெல்லாம் இந்த-த்வனி கேட்டு வாழ வேணும் –
இவர்கள் தாங்களும் -வலம்புரி போல் நின்று அதிர வேணும் -என்று இறே சொல்லிற்று –

பாலன்ன –
பாலைத் திரட்டினாப் போலே இருக்கை —இப்படி இருப்பன பல சங்கு வேணும் –

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன–பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே-
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே-
என்கிறார்கள் –

ஜகத்து எல்லாம் அதிரும் படியான த்வனியை யுடைத்துமாய் –
இடைமுடைத்தாய் –
பாலைத் திரட்டினால் போலே அழகிய நிறத்தை யுடைத்தாய் –
பல சொல்லுகிறது என்
உன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கும் அநேக சங்கங்கள் வேணும்

ஞாலத்தை எல்லாம் நடுங்க
பாரத சமரத்தில் முழக்கம் துர்யோத நாதிகளை நடுங்கப் பண்ணின அளவிலே
இச் சேர்த்திக்கு பிரதிகூலராய் இருப்பர் யாவர் சிலர் –
அவர்கள் எல்லாம் நடுங்க வேணும் –

பற்றார் நடுங்க -(பெரிய திருமொழி 3-3)
பூங்கொள் திரு முகத்து
சிலரை வாழ்விக்கும் –
சிலரைக் கெடுக்கும் –

வர்ஷார்த்தமாக பெண்கள் புறப்படும் போதை சங்க த்வனி கேட்டு
வலம் புரி போல் நின்று அதிர்ந்து -என்னும் படி
மேகங்களும் உட்பட முழங்கும் படி சப்திக்க வேணும்

பாலன்ன வண்ணம்
மணி வண்ணா என்று இவன் நிறம் உத்தேசியமானால்
இவனோடு ஸ்பர்சம் யுடையார் நிறமும் உத்தேச்யமாகச் சொல்ல வேணுமோ –

உன் பாஞ்ச சைன்யம்
தாமோதரன் கையில்(நாச்சியார்-7-5 ) என்கிறபடியே

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன-பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே-போல்வன சங்கங்கள் –
இடமுடைத்தாய் உன் திரு மேனிக்குப் பகைத் தொடையாம்படி
பாலைத் திரட்டினால் போலே இருக்கிற நிறத்தை யுடைத்தாய்
ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -என்கிறபடி அன்றிக்கே நின்று முழங்கக் கடவதுமாய்
பல சொல்லி என் -உன் கையில் பாஞ்ச ஜன்யம் போல் இருப்பன
பல சங்கங்கள் வேணும் என்கிறார்கள் –

இத்தால் –
அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானம் வேணும் -என்கிறது –சங்க த்வனி ஓங்காரம் என்று ஜகத்திலே பிரசித்தமாய் இருக்கையாலே
ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே-லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது   –

————-

போய்ப்பாடு –
பேரிடமாய் இருக்கை –
இடம் உண்டாகில் இறே த்வனி முழங்கி இருப்பது –
புகழ் என்றுமாம் –
ருக்மிணி பிராட்டி போல்வாருக்கு உதவினான் என்கிற புகழ் –

பின்னையோ வென்ன –
சாலப் பெரும் பறையே –
ஒரு மன்றில் த்வநிக்கை அன்றிக்கே
எங்கும் ஒக்க த்வநிப்பது ஒரு பறை வேணும் –

போய்ப்பாடுடையன
பேரிடமாய் இருக்கை-இடமுண்டாகில் இறே த்வனி முழங்கி இருப்பது –
போய்ப்பாடு -என்று புகழுடைமை யாகவுமாம் –
அதாவது
ருக்மிணி பிராட்டி போல்வாருக்கு உதவினது அன்றிக்கே-
சங்கரய்யா யுன் செல்வம் -என்றும் –
பொதுவாக உண்பதனை -என்றும் –
நாய்ச்சிமாரும் கூட ஊடும் படியான வேண்டற்பாட்டை யுடையவன் ஆகையால் வந்த புகழ் –

அல்லாதவை வேண்டுவதுக்கு முன்னே பிரதானம் மங்கள சப்தம் ஆகையால் வேண்டுகிறார்கள்
உன் பாஞ்ச சன்னியம் என்கிறார்கள் –

இயல் அறிபவன் ஒருவன் ஆகையால் தானே அறியும் என்று –
தன்னுடைய பாஞ்ச சன்னியம் போலே இருக்கும் சங்கு இல்லையே
உன்னோடு உடனே (நாச்சியார் 7-5 )
அதுக்கு ஈடாக தான் உகக்கும் ஆகையால் (நாச்சியார் )
அது கூடாமைக்கு தானே கூட வருவான் என்று நினைத்து –

ஓன்று கண்டோம் –
பின்னையோ என்றான்

சாலப் பெரும் பறையே
எழுச்சிக்கு சங்கு ஊதினால் புறப்பாடுக்கு கொட்ட வேண்டாவோ –
பாஞ்ச ஜன்ய த்வனி ஓடின திக்கு எல்லாம்
முழங்க வல்ல மிகவும் பெருத்த தொரு பறை வேணும் –

பின்னையோ என்றான் –

போய்ப் பாடுடையனவே
இடமுடைமை- பெருமை -புகழ் என்றுமாம் –
ருக்மிணிப் பிராட்டி மற்றையார்க்கு உதவியது என்கிற புகழ்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்-இத்யாதி

(கோங்கலரும் பொழில் மா லிருஞ்சோலயில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்க வில்
நாணொலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ)

இது ஓன்று – இனியோ என்ன

சாலப் பெரும் பறையே
ஒரு மன்று அளவில் த்வநிக்கை அன்றிக்கே எங்கும் கேட்க த்வநிக்கிறது ஒரு பறை வேணும் –
யயவ் தூர்ய ப்ரணாதே ந பேரீணாம் ச மஹா ஸ்வநை
இதுவாய்த்து பின்னையோ என்ன

மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே
பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில்
ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய்
மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –

————————

பின்னையோ வென்ன
பல்லாண்டு இசைப்பாரே –
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் –

பல்லாண்டிசைப்பாரே
கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –

பல்லாண்டிசைப்பாரே
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போவார் வேணும் என்கை -பின்னையோ என்ன

—————

பின்னையோ வென்ன –
கோல விளக்கே
அழகிய விளக்கு -அதாவது மங்கள தீபம் –

பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து
நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி
தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –

பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு
அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற–பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –

கோல விளக்கே
மங்கள தீபம் வேணும் என்ன -பின்னையோ என்ன

———–

கொடி
திருக் கொடியாட வேண்டும் –

கொடியே
கிட்டினார்க்கு விளக்கு பிரகாசிப்பது –
எங்களைக் கண்டு தூரத்திலே வாழும் படி முன்னே பிடித்துக் கொண்டு போம் படி ஒரு கொடி வேணும்-

கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான-கைங்கர்யமும் வேணும் –

கொடியே
திருக் கொடி யாட வேணும் -பின்னையோ என்ன

—————–

விதானம் –
மேல் கட்டி வேணும் –
என்று இவற்றை அபேஷிகக –

விதானமே
புறப்படும் போதே பனி தலையில் விழாத படி ஒரு மேற் கட்டி வேணும் –

குளிக்கப் போம் போதைக்கு வேண்டும் அளவு இது என்கிறார்கள் –

அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்-

விதானமே
திரு மேல் கட்டு
இவை வேணும் என்ன

—————-

சங்கும் பல கிடையாது–
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை கொள்ளுங்கோள்-என்றான்
தன்னைப் போலே இருப்பார் சில உண்டாகில் இறே
புறம்பு–ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கும் சங்கு உண்டாவது –

பறைக்கு பாரோர்கள் எல்லாம் மகிழ–
பறை கறங்க கூத்தாடின போது
திரு வரையில் கட்டின பறையையும்
திருப் பல்லாண்டு பாடுகைக்கு -பெரியாழ்வாரையும்
விளக்குக்கு -நப்பின்னைப் பிராட்டியையும் –
கொடிக்கு -பெரிய திருவடியையும்
மேல் கட்டிக்கு -அத்த வாளத்தையும்-கொள்ளுங்கோள் என்றான் –

விதானத்துக்கு திருவவதரித்த அன்று
பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த-திரு வநந்த வாழ்வானைக் கொடாது ஒழிவான் என் என்னில்
எல்லாரையும் போகச் சொன்னாலும் தன்னை ஒழிய-ஓரடி இட மாட்டாதவன் ஆகையாலே –
அத்த வாளத்தைக் கொடுத்தான் –
பெருமான் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு இறே வாட்டம் தணிய சொல்லிற்று –

ஓர் ஓன்று போராது –
இப்படி இருப்பன பல வேண்டும் -என்ன

இல்லாததை தேடப் போமோ -என்ன
உனக்கு அரியது உண்டோ -என்ன–எனக்கு எளியதாய் இருந்ததோ -என்ன

ஆலினிலையாய் –
சிறியதொரு வடிவைக் கொண்டு–சர்வ லோகத்தையும் திரு வயிற்றிலே வைத்து–
பவனாய் இருந்ததொரு ஆலம் தளிரிலே
கண் வளர்ந்த உனக்கு முடியாதது உண்டோ —
லோகத்தில் இல்லாததும் எங்களுக்காக உண்டாக்க வல்லை என்று கருத்து –

பெண்காள் இப்படி இருப்பன தேடப் போமோ
துர்க்கடன்களை சொன்னி கோளே என்ன –

உனக்கு அரியது உண்டோ என்றார்கள் –

எனக்கு எளிதாய் இருந்ததோ என்றான்

ஆலினிலையாய்
உன்னுடைய சிறிய வயிற்றில் பெரிய லோகங்கள் எல்லாவற்றையும் வைத்து
ஒரு பவனான ஆலிலையில் கிடந்து அகடிதங்களை
செய்ய வல்ல உனக்கு அரியது யுண்டோ –
லோகத்தில் இல்லாதது எல்லாம் எங்களுக்காக யுண்டாக்க வல்லவன் அன்றோ –

ஆலினிலையாய
பாலன் தனதுருவாய்-(முதல் திருவந்தாதி -69 )
வட தள சாயியுடைய விருத்தாந்தம் கிருஷ்ணன் பக்கலிலே இறே காண்பது –
(சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு -அப்பாசுரம் )
பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் -(1-4 )
வையம் ஏழும் கண்டாள்-
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இல்லையே –
(all in ilaiyaay )

வஸ்துக்களை உள்ள தாங்கி ஆலின் இலையை வெளியில் தாங்கி அவனுக்கும் ஒரு ஆதாரம் உண்டோ -பட்டர் –
ஆலின் நிலையாய் -ஆதாரமாக இருந்தவன்–வடதல சாயி ஆலிலை கண்ணன் -சந்தான கோபாலன்

மாலே மணி வண்ணா -என்கிற இடத்தில் ஸுலப்யம் சொல்லுகிறது –
ஆலினிலையாய் -என்ற இடத்தில் சர்வ சக்தி யோகத்தவம் சொல்லுகிறது –

அது மாமின் அர்த்தம் –
இது அஹம் -என்கிறத்தின் அர்த்தம் –
மாலாய் ஆலிலையில் வளர்ந்து(பெரிய திருமொழி – 5-7) -என்னக் கடவது இறே –

மாலே மணி வண்ணா -என்கிற இத்தால் –மாம் -சௌலப்யத்தை சொல்லிற்று
ஆலினிலையாய் -அஹம் -என்கிற இடத்தில்-சஹாயாந்தர நிரபேஷமான உபாய வேஷத்தை சொல்லிற்று –சுருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது-

ஆலின் நிலையாய்-
பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன்
அபரிமிதமான சாகைகள் உள்ள ஆல மரம் போல் சிஷ்ய கோடிகள் நிறைந்து
சங்கம் -ஸ்பர்சத்தால் துருவனுக்கு
ஸ்வாமி ஸ்பர்சத்தால் ஆண்டான் ஆழ்வான் எம்பார் அனந்தாழ்வான் பிள்ளான் போல்வார்
கோல விளக்கு -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம்
கொடி -சித்தாந்த விஜய த்வஜம்
விதானம் -தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீரார் அரவணை-

———-

அருள்–
வேண்டாது ஒழியில்-செய்யலாவது இல்லை —
சக்தி இல்லாமை இல்லை
இத் தலையில் பேற்றுக்கு எல்லாம் ஹேது அவன் பிரசாதம் என்கை –

மாலே மணி வண்ணா -என்கிற இத்தால் –மாம் -சௌலப்யத்தை சொல்லிற்று
ஆலினிலையாய் -அஹம் -என்கிற இடத்தில்–சஹாயாந்தர நிரபேஷமான உபாய வேஷத்தை சொல்லிற்று
ஸ்ருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது-

அருளேலோ ரெம்பாவாய்
சக்தி இராமை இல்லை –
வேண்டி இராது ஒழியில் செய்யலாவது இல்லை –
தரில் அரியது இல்லை –
தராது ஒழியில் வளைப்பிட ஒண்ணாது –

ஆலினிலையாய் அருள்
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது-(நாச்சியார் -2-2 )என்னக் கடவது இறே –
இப்போது அகடிதம் இறே என்று கண் அழியாதே கிருபை பண்ண வேணும் –

ஆலினிலையாய் அருள்
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் (மூன்றாம் திருவந்தாதி -19) என்று
வட தள சாயி யருள் இறே பிரசித்தமாய் இருப்பது –

பெண்காள் இவை நம்மால் செய்யலாய் இருந்தது இல்லை -என்ன
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்-
சர்வ லோகத்தையும் உன் திரு வயிற்றிலே வைத்து ஓர் பவனான ஆலிலையிலே
கண் வளர்ந்த உனக்கு முடியாதது உண்டோ
பெண்காள் -தந்தோம் என்னும் அத்தனை அன்றோ(அஸ்து தே என்னவே வேண்டும்-ஏன கேந பிரகாரம் த்வயம் அனுசந்தானமே போதும் என்றானே )-என்ன

அப்படி யாகிறது -என்று புறம்பு தன்னைப் போலே ஒரு தத்வம் உண்டாகில் இறே
தன் கையில் சங்கு போலே இருக்கும் சங்கு உண்டாவது

தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ -என்று இவர்கள் உகந்த சங்கு தன்னைக் கொடுத்தான்

(தாமுகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே)

பாரோர் எல்லாம் மகிழப் பறை கறங்க-என்றும்
கன்றப் பறை கறங்க -என்று மரக்கால் கூத்தாடுகிற போது அறையில் கட்டின பறையையும்
பறை அடிக்கைக்கு ஸ்ரீ ஜாம்பவான் மஹா ராஜரையும் கொடுத்தான்

(பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –-சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே -சிறிய திருமடல்)

(கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே -11-5-6-)

திருப் பல்லாண்டு பாடுகைக்கு-
அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும்
பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் -நம்மாழ்வாரையும் கொடுத்தான்

மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்
கொடிக்கு பெரிய திருவடியையும்
விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த
திரு அநந்த ஆழ்வானையும் கொடுத்தான்

ஆலினிலையாய்
எல்லாம் கொடுத்தாலும் தன்னைக் கொடுத்தது ஆகாமையாலே அத்தவாளத்தையும் கொடுத்தான்
எல்லாத்தையும் கொடுத்தாலும் தன்னை ஒழிய ஓர் அடி இடாத பெண்கள் ஆகையாலே-
நயாமி பரமாம் கதிம்-(ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் )என்கிறபடியே அத்தவாளத்தலையைக் கவித்துக் கொண்டு போனான் என்றும்
கள்வன் கொல் -லில் -பிராட்டியை போலே ஒளித்துக் கொண்டு போக வேண்டாவோ
அது வேண்டாவே -ஊர் இசைந்ததே

கள்வன் கொல் யானறியேன் கரியானொரு காளை வந்து,
வள்ளி மருங்குல் என்றன் மடமானினைப் போதவென்று,
வெள்ளி வளைக் கைப்பற்றப் பெற்ற தாயரை விட்டகன்று,
அள்ளலம் பூங்கழனி யணி யாலி புகுவர் கொலோ.-3-7-1

அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே ஒருவனே எல்லா அடிமையும் செய்வானை யுடையனாய் நின்றால்
சென்றால் குடையாம் -என்கிறபடியே
எல்லா அடிமையும் செய்ய வல்ல ஒருவனையும் கொடுத்து விடாதே
நித்ய விபூதியில் உள்ளார் அனைவரையும் கொடுக்கிறது என் என்னில்
எல்லாரும் ஸ்வரூப லாபம் பெறுகைக்காக-

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –முதல் திருவந்தாதி -53-)

(ஆதி சேஷன் விட்டுப்பிரியானே -படுக்கை விட்டு தூங்க முடியாதே -அக்குளத்தில் மீன் அன்றோ –
உத்தரீயம் விதானமாகக் கொடுத்தான் -ந ச தே விநா நித்ராம் –
முனிவன் வேண்ட திறல் விலங்கு இலக்குமனைப் பிரிந்தான் அன்றோ )

கருளப் புட்கொடி சக்கரப் படை வான நாட என் கார் முகில் வண்ணா-(ஸ்ரீ திருவாய் மொழி -5-7-3-)

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்-( பெருமாள் திருமொழி -1-2 )

———————————

மாலே மணி வண்ணா –
சர்வாதிகனாய்
சர்வ சுலபன் ஆனவனே -என்னுதல் –
ஆஸ்ரித வ்யாமோஹமே ஸ்வரூபமாய்
அதி மநோஹரமான விக்ரஹத்தை
உடையவனே -என்னுதல் –
இப்படி சம்போதிதவாறே –

நீங்கள் வந்த கார்யம் என் -என்ன –
மார்கழி நீராடுவான்-
மார்கழி மாசத்தில் நோன்புக்கு அங்கமாக குளிக்கை –
இந்நோன்பு தான்
காம்யார்த்திகளுக்கு சாதகமாயும்
நிஷ்காமருக்கு நித்தியமாயும்
பிரபன்ன அதிகாரிகளுக்கு பகவத் கைங்கர்யமாயும் -இருக்கும்
ஆகையாலே
பிரபன்ன அதிகாரிகளுக்கு சொல்லுகிற கர்ம த்யாகம்
சாஸ்த்ரோக்தமான ஆகாரத்தாலே அனுஷ்டியாது ஒழிகை ஒழிய
கேவலம் அனநுஷ்ட ரூப த்யாகமாகம் அன்று என்றது ஆய்த்து

அதில் பிரமாணம் என் என்ன –
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
பிரமாணங்களில் தலையான
சிஷ்டாசார்யம் -என்ன
அதுக்கு வேண்டுவது என் என்ன
பராக்கில்லாமல் கேட்டாயாகில் சொல்லுகிறோம் -என்ன
ஆகில் -இதுவும் உங்கள் பேச்சு அன்றோ -கேட்கிறேன் -சொல்லுங்கோள் என்ன
சொல்லுகிறார்கள் –

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்து-பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே-
பூமிப் பரப்பில் உள்ள அஹங்கார சேதனரடைய நடுங்கும்படி த்வநிக்குமதாய் –
அதுக்குத் தக்க குடைகையை உடைத்தாய் –
அதி போக்யமாய்
அதி பரிசுத்தமாய்
உன் திருக் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற
பல சங்கங்கள் வேணும்

இத்தால் –
அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானம் வேணும் -என்கிறது –
சங்க த்வனி ஓங்காரம் என்று ஜகத்திலே பிரசித்தமாய் இருக்கையாலே
ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே
லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது   –

சாலப் பெரும்பறையே –
மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே
பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான
ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்
சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ
போக்த்ருத்வங்களையும்
நிவர்ப்பிக்குமதாய்
மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்
உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –

பல்லாண்டிசைப்பாரே-
சத் சஹாவாசம் வேணும் –

கோல விளக்கே –
பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு
அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற
பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –

கொடியே –
கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான
கைங்கர்யமும் வேணும் –

விதானமே-
அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்

இல்லாததை உண்டாக்கவோ -என்ன
ஆலினிலையாய் –
முன்பு இல்லாததை உண்டாக்கினவன் இல்லையோ –

அருள்
கிருபை உண்டாகில்
செய்யத் தட்டில்லை – 

மாலே -மாமின் அர்த்தம் -ஆலின் நிலையாய் -அஹமின் அர்த்தம் -சரமஸ்லோகார்த்தம் அருளிச் செய்கிறார்கள் -பறையே இத்யாதிகள் எவகாரம் -அனைத்தும் அவனே -கன்றுகளை பிரம்மன் திருடிப்போக அனைத்துமாய் அவனே யானதை அறிந்தவர்கள் அன்றோ -பறையே -குருபரம்பரையே -பக்தி பிரேமம் அருளும் உபகரணம் தந்து அருளினவன் அன்றோ -ஆலின் நிலையாய் -ஆலமரம் நிழல் போல் நம் ஆச்சார்யர்கள் –

————————————————————-

ஆலினிலையான் மாலை –
ஆலினையாய் அருள் –
அம்புலியை அழைக்கும் இடத்து -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவனிவன்
செங்கீரை யாட -உய்ய உலகு படைத்ததுண்ட –ஆலினை அதன் மேல் பையவு யோகு துயில் கொண்ட பரம்பரனே –
அக்காக்காய் கோல் கொண்டு வா -என்னும் போதும் ஆலத்திலையான் அரவின் அணை மேலான் –
பூச்சூட அழைக்கும் பொழுதும் உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையில் துயில் கொண்டே
நளி மதிச் சடையனும் –ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்பெருமான் மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையோமொயாமே -திருவாசிரியம் –
ஆலினிலையானுடைய இதிகாசம் இதர தெய்வங்களின் அவரத்வத்தையும்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய பரதத்வத்தையும் கையிலங்கு நெல்லிக் கனியாக தெரிவிக்க அவதரித்தது ஆயிற்று
பாலனதனதுருவாய் ஏழ் உலகுண்டு–ஆலினிலை மேல் அன்று நீ வளர்ந்த மெய்யன்பர்
ஆலன்று நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு —அகடிதகட நா சாமர்த்தியம்
க்ருத்சன பிரசக்திர் நிரவயவத்ய சப்த கோபோ வா -ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-1-26-பூர்வபஷ ஸூ த்ரம்
ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் -2-1-27-சித்தாந்த ஸூ த்ரம் -து சப்தம் பூர்வபஷத்தை வ்யாவர்த்திக்கும்
ப்ரஹ்மம் நிரவவயம் –நிவிகாரம் -என்றால் ஜகத் காரணமாக ஒண்ணாது பூர்வ பஷம்
பிரமத்தின் உடைய அநீர்வசநீயமான சக்தி சாஸ்திரம் கொண்டே அறிய முடியும்
பச்யத்ய சஷூ ஸ்ருணோத்யகரண அபாணி பாதோ ஜவநோ க்ருஹீதா
சப்தைக பிரமாண கத்வேன சகல இதர வஸ்து விசஜாதீயத்வாத்
அச்யார்த்தச்ய விசித்திர சக்தி யோகோ ந விருத்யதே -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
அப்பு அசக்தி அத்புத சக்திமான் -தேசிகன்
ஆலின் நிலையாய் -என்று பிரித்து
எம்பெருமான் திருவடியில் ஒதுங்குதல் பனை நிழலில் ஒதுங்கினால் போலே
எம்பெருமானார் திருவடிகளிலே ஒதுங்குதல் ஆலமரத்தின் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே -அம்மங்கி அம்மாள் வார்த்தை –

———————

26. மாலே : ஆர்த்தி பூர்த்தி :

சரணமானால் வைகுந்தம் சேர் வழக்கு கொண்டு
மரணமானால் மேவப் பெறுவதூம் — ஆரணமால்
ஊழ் வினை நம் போக்க மற்ற பற்று அற்றராய்
சூழ் வினை அவனடியார் காத்து.

ஆலின் இல்லையாய் – பரத்வம்.
மாலே – சௌலப்யம்.
மணிவண்ணா – சௌந்தர்யம்.
ஸ்ரீ ராமாயணத்தில் எப்படி சரணாகத வத்சலத்வம் ராமனுடைய பிரதான குணமோ, அதுபோல
மஹா பாரதத்தில் கிருஷ்ணனுக்கு பிரதான குணம் ஆஸ்ருத வியாமோகம் என்பது .
நாராயணன்
ஓங்கி உலகளந்த உத்தமன்
தேவாதி தேவன்
என்று கீழே பரத்வத்தை பிரஸ்தாபித்த ஆண்டாள், 25 வது பாசுரம் வந்த வாறே
வந்து தலைப் பெய்த்தோம் ;
வந்து நின்றோம்;
இன்று யாம் வந்தோம்;
யாம் வந்த காரியம் – என்று இவர்கள் தாங்கள் வந்தமைக்கு இரங்கு என்று சஹேதுகமாய் சொல்லி வந்தவர்கள்,

அத்தை மாறி
ஆலின் இலையாய் அருள் – என்று நிர்ஹேதுக மாக்கினர்.
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்
ஈண்டு அன்றன்னை புலம்பப்போய் ஓர் ஆய்க்குலம் புக்கதும்
காண்டலின்றி வளர்ந்து –என்கிற படியே – க்ஷீராப்தியிலிருந்து மதுரைப்போந்து, அங்கிருந்து
திருவாய்ப்பாடிக்கு தான் வந்த வரத்தை கணிசித்தார்கள் இல்லையோ என்று கண்ணன் வாய் திறவாமல் இருக்க
நாராயணனே நமக்கே பறைதருவான் என்று ஸ்வ யத்ன ராஹித்யம் சொன்னவர்கள்
தாங்கள் வந்தமை உபாயமாக நினைப்பிட்டனரோ என்று உதாசீனனாகவும் இருந்தமை போக்கி
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் என்று
அனன்ய பிரயோஜனர்களாக வந்தார்களே என்று வியாமுக்தனாய் அது மணியின் நீரோட்டம் புறம்
பொசிந்து காட்டுமா போலே அவனில் வெளிக்காட்ட ,
மாலே! மணிவண்ணா என்கிறார்கள்.

இதம் ஸ்ரீரங்கம் தியஜதாம் இஹாங்கம்
புனர்நசாங்கம் யதிஸாங்கமேதி
பானொவ் ரதாங்கம் சரணேச காங்கம்
யாநேச விஹங்கம் ஸயநேச புஜங்கம் — ஆதி சங்கரர்.

ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்ய பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை
பல்லாண்டு இசைப்பார்
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி
என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே – என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.

ததா வித்வான் -; தியானம், வேதனம், நிதித்யாசனம் இவை ஒருபொருள் பன் மொழியாய்,
ஜ்ஞான யோக அதிகாரி தம் முயற்சியால் பக்தி செய்து புண்யபாபங்களைத் தொலைத்து
சாம்யாபத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான். அதேபோல
ததா வித்வான் -; சரணாகதனான ஒருவன் – பகவான் அவனே உபாயம் என்று பிரபத்தி பண்ணின அதிகாரி –
தன் முயற்சி ஏதும் இன்றி பகவத் சங்கல்பத்தாலே புண்ய பாபங்களை உதரி சாம்யாபத்தி மோக்ஷத்தைப் பெறுகிறான்.
வித்யாசம் என்னவென்றால் இருவருடைய சஞ்சித கர்மங்களையம் பகவான் போக்கிக் கொடுத்தாலும் , உபாசகனான
பக்தி யோக நிஷ்டன் தன்னுடைய பிராரப்த கர்மங்களை
(இந்த ஜன்மத்தில் கழிக்க வேண்டியுள்ள புண்ய+பாபங்களின் கூட்டறவு) தானே போக்கிக் கொள்ள வேண்டும்.
யாவந்ன விமோக்ஷே அசஸம்பத்ச்யே தஸ்ய தாவதேவ சிரம் – என்பதாக இவர்களுக்கு ஜன்மாந்தரத்திலே மோக்ஷம்.

ஆனால் பிரபன்னாதிகாரியினுடைய சஞ்சித + ஆரப்த கர்மங்கள் இரண்டையும் பகவான் தானே –
அஹம் துவா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்று காணாக் கண்ணிட்டு தள்ளி விடுகிறான்.
என்றாலும் பிரபன்னாதிகாரி விஷயத்திலும்
1. விஷயாந்தர ஸம்பந்தம்
2. தேவதாந்தர ஸம்பந்தம்
3. பாகவத அபசாரம்
மூன்றின் சம்பந்தமும் இல்லாத பக்ஷத்தில் மட்டும் – அஸ்மாத் சரீராது ஸமுத்தாய பரஞ்சோதிர் உபஸம்பத்ய – என்று
தேஹாவசானே மோக்ஷம் என்ற படி .

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-என் பக்கலிலே அதி வியாமோஹத்தை யுடையவன்-இவர் பக்கல் பண்ணின வியாமோஹம் முனியே நான்முகன் அளவும் செல்லுகிறது ஆயிற்று-அவன் தெளிந்து வந்து முகம் காட்டி க்ரமத்தாலே கொடுபோகப் பற்றாத கலக்கத்தின் கார்யம் நடுவடைய நெடுமால் –வீடு திருத்தும் ஸ்வபாவன்-என்று அந்வயம் –
மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-ஸ்வரூபத்தாலும் ஐஸ்வர்யத்தாலும் யுண்டான வை லஷண்யத்தை யுடையவனே-ஆச்சர்யமான குணங்களை யுடையவனே-ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடையவனே-இவற்றை அனுசந்தித்து பிச்சேறி-அதகிறது -அயோக்யன் என்று அகலுகை-அவனும் தன் வியாமோஹத்தால் யாயிற்று இவரைச் சேர்த்துக் கொண்டது-அவன் தன் செல்லாமையைக் காட்டி சேர்த்து கொண்ட படியைக் கண்டு ப்ரீதராய் அது உள்ளடங்காமையாலே வழிந்து புறப்பட்ட இத் திருவாய்மொழிக்கு உண்டான லோக பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது இங்கும் கீழே நெடுமாலே -வசுதேவர் தேவகிப்பிராட்டியார் பக்கலில் -இங்கு மாலே -ஆய்ப்பெண்கள் பக்கல் –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே-கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே-விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே –-ஐஸ்வர் யத்துக்கு எல்லை இல்லாமை –
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலை யுடையவனே –அவர்களுக்கு தோள் மாலை இட்டு ஒப்பித்துக் காட்டினபடி –ஆஸ்ரித வியாமுக்தனாய் -அந்த வியாமுக்தத்துக்கு எல்லை இல்லாதபடி இருக்குமவனாய் –
அந்த வியாமோஹம் ப்ரேரிக்க ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஆஸ்ரிதற்கு பவ்யனாய் இருக்குமவனாய்-இந்நிலையில் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான பெருமையை யுடையனாய் –அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –
அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –-தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –-அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்-தம்மை விஷயீ கரித்து அருளிய நீர்மைக்கு ஆறு விளிகள்-ஆறும் பரத்வமாகவும் ஸுலப்யமாகவும் கொண்டு வியாக்யானம்-மாலே -நெடியோனே -கண்ணனே -விண்ணோர்க்கு மேலா – வியன் துழாய் கண்ணியனே -மேலால் விளவின் காய் குன்றினால் வீழ்த்தவனே -என்தன் அளவன்றால் யானுடைய வன்பு -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்க்க வேண்டும்-

———————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading