ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள்–ஒருத்தி மகனாய் பிறந்து–

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

——

அவதாரிகை –

உங்களுக்கு வேண்டுவது என் -என்ன
ஏதேனும் பிரதி பந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி
எங்கள் துக்கம் எல்லாம் கெட
விஷயீ கரிக்க வேணும் -என்கிறார்கள்

பெண்காள் உங்கள் பிறப்பால் நம் விஜயத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை ஸ்வரூபம் இறே –
இக் குளிரில் உங்களைப் பேணாதே க்லேசித்து வந்திகோளே
உங்கள் நெஞ்சிலே ஓடுகிறது வெறும் பறையோ-
வேறு ஏதேனும் உண்டோ என்ன –

உன்னுடைய குண கீர்த்தனம் பண்ணிக் கொண்டு வருகையால்
ஒரு கிலேசங்களும் படாதே ஸூகமே வந்தோம் –
பறை என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நாங்கள் உன்னை இறே அர்த்தித்து வந்தது என்கிறார்கள் –

பறை கொள்ள வந்தோம் இரங்கு என்று நம்மை வடிம்பிடா நின்றி கோளே –
நீங்கள் சொன்ன போதாகச் செய்யப் போமோ
பிரதிபந்தகங்கள் உண்டாய் இருக்குமே என்ன –

பிரதிபந்தகங்களைப் போக்கி அரியது செய்த உனக்கு எளியது செய்யத் தட்டுண்டோ-
எங்களோடு சஜாதீயரிலே சிலர் நோன்பு நோற்றுப் பெற்றது
எங்கள் நோன்பு பலித்த படி அன்றோ -என்கிறார்கள் –

தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம் ஸ்ரீவத்ச லக்ஷ்மம் ஸ்ரீவத்ச லக்ஷ்மம் கலசோபி கௌஸ்துபம்பீதாம்பரம் சாந்த்ர பயோத லௌபகம் மஹார்ஹ வைடூர்ய கிரீட குண்டலத்விஷா பரிஷ் வக்த சஹஸ்ர குந்தலம் உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபிஹி விரோசமாநம் வசுதேவ ஜக்ஷத

( சங்கு, சக்கரம், கதை, பத்மம் தாங்கிய நான்கு திருக்கரங்கள் , திருமறு,கவுத்துவம், வனமாலை
தாங்கிய மார்பு, பீதகவாடை, மின்னும் முடி-குண்டலங்கள், மேகலையும் கங்கணமும். தாமரைக்கண்கள் கொண்ட அற்புத வடிவம்.
வசுதேவர் கண்ணிமைக்காமல் பார்த்தார்)

பெண்காள் நோன்பு ஒழிய உங்கள் நெஞ்சிலே ஓன்று உண்டு இறே என்ன
பறை என்று ஒரு பேர் நாங்கள் உன்னை அர்த்தித்து வந்தோம் -என்ன
என்னை அர்த்தித்துப் பெற்றார் உண்டோ என்ன
எங்களோட்டையார் பெற்றார் உண்டு -என்கிறார்கள் –

(எங்களோட்டை இடைச்சிகள் பெண்கள் சிறுமிகள் -அவனையே ப்ராப்யமாக கொண்ட –
நமக்கே -உபாய அத்வசயாம் கொண்டு ப்ராப்ய த்வரை உள்ளவர்கள்-நாயமாத்மா ஸ்ருதி சித்தம்
யாம் பாடி -உபாயமும் ப்ராப்யமும் அவனே என்று இருப்பவர்கள் -மாதா பிதா –மத அன்வாயானாம் -ஆளவந்தார் –
உடையவர் சம்பந்தம் இருக்கவே ஆழ்வார் சம்பந்தம் கிட்டும் -எங்களோட்டை அங்கும் உண்டே )

இப்பாட்டில் –
கீழ்ப் பாட்டில் -ஏற்றிப் பறை கொள்வான் -இன்று யாம் வந்தோம் -இரங்கு -என்று
இவர்கள் அபேஷிக்கையாலே
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன –
நெடுமாலே -நீ புருஷார்த்தத்தை கொடுத்தாயாகில் –
நாமும்
உன்னையும் உன் குணங்களையும்
ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி
பட்ட வ்யசனம் எல்லாம் தீர்ந்து
மகிழக் கடவோம் –
என்கிறார்கள் –

ஸ்வரூப லாபத்தோ பாதி
துக்க நிவ்ருத்தியும் தத் ஆஸ்ரயணத்தாலே -என்கிறது –

———-

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

ஒருத்தி –
சர்வ லோகங்களையும் நியாமகன் ஆனவனையும் கூட
நியமிக்குமவள் ஆகையாலே
நாட்டில் தனக்கு ஒப்பற்று இருக்குமவள்-

ஒருத்தி மகனாய்-
சர்வ லோகங்களுக்கும் பிதாவானவன்
ஒருத்தி மகனாய் ஆவதே –
சக்கரவர்த்தி தபஸ் ஸூபண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளைப் பெற்றாப் போலே
நால்வரும் கூடி தபஸ் ஸூ பண்ணி 
ஒரு மகனைப் பெற்றபடி –

ஒருத்தி மகனாய்–
ஒருவன் சாதன அனுஷ்டானம் பண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளை பெற்றால் போலே
நால்வரும் கூடி தபஸ்ஸூ பண்ணி -(ஒருவனைப் பெற்றதாலே )
பேறு ஒருத்தியது யாகையாலே -ஒருத்தி -என்கிறார்கள் –

ஊழி முதல்வன் ஒருவனே
என்கிற வஸ்துவை வயிற்றிலே அடக்கப் பெற்றாள் ஒருத்தி இறே

ஒருத்தி மகனாய்
சர்வ லோகங்களுக்கும் சர்வ பூதங்களுக்கும் முந்தைத் தாய் தந்தையாய் இருப்பான் ஒருவனைத் (5-7 )
தனக்குப் பிள்ளையாக பெறுகைக்கு நோன்பு நோற்க
ஜகத்துக்கு சேஷியுமாய்
சர்வ வியாபகனுமாய்
நித்யனுமாய் இருக்கிற
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் (மூன்றாம் )
சிலர் அபேக்ஷித்தத்துக்காக மகனானான் என்னும் அளவன்றிக்கே –
தேவகீ புத்ரன் என்றே தன்னை நினைக்கும் படி
அவ்வருகு தனக்கு ஒரு ஏற்றம் உண்டு என்று அறியாதபடி பிள்ளையானான் –

ஒருத்தி மகனாய் –
சர்வ லோகத்துக்கு பிதாவானவன் ஒருத்தி மகனாகப் பெறுவதே-(தேவ தேவோ ஹரி பிதா)
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் இறே(மூன்றாம் திருவந்தாதி)

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

(அகில காரணம் நிஷ் காரணம் அத்புத காரணம்
த்வம் மாதா -பிதா லோகஸ்ய
எவ்வுயிர்க்கும் தாயாய் தந்தையாய்
உலகு எல்லாம் ஒரு பகல் தன் வயிற்றில் கொண்டவனை தன் வயிற்றில் வைத்தவள் )

ஒருத்தி
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனாநாம் சர்வாத்மா -என்கிறபடியே
சர்வ லோகங்களுக்கும் நியாமகனானவனையும் கூட நியமிக்குமவள் என்கையாலே
நாட்டில் தனக்கு ஒப்பு இன்றிக்கே இருக்குமவன்

(ஆணும் அல்லன் பெண்ணும் அல்லன் அல்லா அலியும் அல்லன் )

மகனாய்
பிறந்த போதே சொல்லிற்றுச் செய்கை –
ஸ்துதோ ஹி யத் த்வயா பூர்வம் புத்தரார்த்திந்யா ததத்ய தே-சபலம் தேவி சஞ்ஜாதம் ஜாதோ அஹம் யத் தவோ தராத்-(ஸ்ரீ விஷ்ணு புராணம்)

(இருள் அன்ன மா மேனி -பிறந்ததும் இருளில் -சிரிக்க அந்த முத்துப்பல் ஒளியால் கண்டாள்
(ஸூதபா பிருஸ்னி – அதிதி கஸ்யபர் முன்பு இது மூன்றாம் தடவை -பிரார்த்தித்து பெற்றார்கள்- -பிரார்த்தனை சபலம் ஆயிற்று என்றான் )
சக்கரவர்த்தி திருமகன் வளர்ந்த பின்பு பித்ரு வசனம் பரிபாலனம் பண்ணினான்
இவன் பிறந்த போதே தோள்களை மறைத்துத் திருவாய்ப்பாடியிலே போகச் சொல்ல போனான் –
சோபனம் கூறுகைக்கும் வேறு ஆள் இல்லை –தானே(ஜன்ம கர்ம மே திவ்யம் -வண்ண மாடங்கள் பெரியாழ்வார் பின்னர் )

(ஆண்டு தோறும் ஸ்ரார்த்தம் -கயாவில் பிண்ட தானம் -இருக்கும் பொழுது சொன்ன சொல் படி நடப்பது –
தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை
பிது நரகம் போக வேண்டாதபடி காப்பவன் புத்ரன்
பிறந்த பொழுதே சொன்னபடி -உப ஸம் ஹரதி -மறைத்துக் கொண்டானே
பெருமாள் 25 திரு நக்ஷத்திரத்தில் தண்டகாரண்யம் போனார்)

(மகனாய் -தசரதன் மகன் அன்றி -இரண்டு பிரயோகங்களும் -வெள்ளை வேஷ்ட்டி -தண்டீ புருஷ -போல் -ப்ருதக் -அப்ருதக் -ஸ்திதிகள் -இரண்டும் -ஆயவையாய் ஆமவையாய் -சர்வாத்ம பாவம் -புகழும் நல் ஒருவன் -மாயா வாமனா –வியாப்ய கத தோஷம் அற்றும் -ஏற்றுக்கொண்ட அதில் பூர்ணத்வமும் இவனுக்கு உண்டே-)

———–

மகனாய் பிறந்து –
பிறந்த போதே
சொல்லிற்று செய்கை –
சக்கரவர்த்தி திருமகன் பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் –
இவன் பிறந்த போதே
ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –

பிறந்து –
ஆவிர்பவிக்க லாகாதோ –
பத்து மாசம் வயிற்றிலே இருப்பார்கள் ஆகில் பன்னிரண்டு மாசம் வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டவிறே –

பிறந்தான் -என்கை அவத்யம் -என்று பரிஹரித்தான் ரிஷி
அது தான் அவத்யம் என்று பிறந்தான் என்கிறார்கள்

நம்முடைய கர்மம் நம்மோடு அவனை சஜாதீயன் ஆக்கும்
அவனுடைய கிருபை நம்மை அவனோடு சஜாதீயன் ஆக்கும் –

அவன் பிறவி நமக்கு என்று கோல –
நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் –

நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –

பிறந்து
சிலர் மகனாக வேணும் என்று ஆசைப்பட்டால்
தூணிலே தோன்றினாலே போலே ஆதல் –
ஆனைக்கு உதவினால் போலே யாதல் –
வந்து உதவ அமைந்து இருக்க
ஈஸ்வரனே வந்து பிறக்க வேணும் என்று நோற்ற படியால் பூர்வ வ்ருத்தாந்த அனுசந்தானம் இன்றியே
கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து
உம்முடைய வயிற்றின் நின்றும் நாம் பிறந்தோமே என்று சோபனம் சொல்லிக் கொண்டு வந்து பிறந்தான்(தூணைப் பிளந்தோ கருடன் மேல் பறந்தோ வராமல் கர்ப்ப வாஸம் செய்து பிறந்து )

பிறந்து
கர்ம வஸ்யர் படுவது எல்லாம் கிருபா பரதந்த்ரனாய் படுவதே -என்று
தீமதாம் அக்ரேஸர் -பிறந்தவாறும் -என்று ஆழங்கால் படும்படி யாய்த்து பிறந்தது

ஆவிர்பவித்தான் என்கிறது
கர்ப்பத்தில் தோஷ ஸ்பர்சம் இல்லை என்கைக்காக

நித்ய ஸூரிகள் அதிபதியாய் இருக்கிறவன் சம்சாரத்தில் பிறந்த இக் குணம்
இழக்க ஒண்ணாது என்று ரிஷிகளைப் போலே ஆவிர்பவித்தான் என்று
அவத்யம் சொல்லாதே
நிறம் பெறும்படி பிறந்தான் என்பார்கள் ஆழ்வார்கள் –

மகனாய் பிறந்து –
மகனாகை யாவது மாதா பித்ரு பரதந்த்ரனாகை இறே –
பெருமாள் பக்வரான பின்பு மாதா பித்ரு வசன பரிபாலனம் பண்ணினார்
இவன் பிறந்த போதே
ஆழ்வார்களையும் திருத் தோள்களையும் மறைக்க வேணும் என்ன உப சம்ஹரித்தான் –

பிறந்து
கர்ம வஸ்யர் படுமவற்றை அகர்ம வஸ்யன் கிருபாவஸ்யனாய் பிறந்து படுவதே
உப சம்ஹார -இத்யாதி
அஜோபிஸந் நவ்யயாத்மா (அபிஸந்)பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.
கர்ம வஸ்யர் கூறான ஜென்மாதி தோஷங்கள் இன்றிக்கே இருக்கை
என் பிறவாமைக்குத் தட்டு வாராதபடியும் எனக்கு நிறம் உண்டாம்படியும் காண் நான் பிறப்பது
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான(பிறக்க பிறக்க தேஜஸ் மிக்கு இன்னும் கார் வண்ணனே -தோற்றமாய் நின்றசூடார் அன்றோ )
பூதா நாம் ஈஸ்வரோ அபி சன்(இன்னும் கார் வண்ணனே -கருமை தீராதே )

(குறைத்துக் கொள் என்றாலே விட்டுக் கொடுக்காமல் அவதாரம்
பிறப்பிலி விட்டுக் கொடுக்காமல் பிறக்கிறேன் அஜன் –
கர்மத்தால் பிறக்க வில்லை கிருபையால் அவதாரம்-அஜோபிஸந் நவ்யயாத்மா (அபிஸந்)பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.
நியந்தாவும் நானே -அனைவருக்கும் ஈஸ்வரன் நானே-அஜன் ஸ்தம்ப சம்பவாத் -இதர விஜாதீயன் -நரஸிம்ஹன் )

தேவகி பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர் பூதம் மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
(அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானு -தேவகியை கிழக்கு திக்கு -ஸூர்ய உதயம் போல் )

பிறக்கையும் பிறவாமையும் கிடக்கப் பிறக்கும் பிறப்பு நித்யர்க்கும் உண்டாகையாலே அவ்வளவே அல்ல
அல்லாதார் பிறப்பையும் நீக்க வல்ல ஸ்வதந்த்ரன் பிறப்பு அன்றோ என்கை –
சிறையர் சிறைக் கூட்டத்தில் பிணை உண்கைக்குப் புகும் -நியாமகன் சிறைக் கூட்டத்தை விடுவிக்கப் புகும்
புகுகையிலே இத்தனை நெடுவாசி உண்டு
அவன் பிறந்தால் இவன் பிறவி தனக்குத் தட்டாமை யல்ல
நம் பிறவியைப் போக்கி நம்மை தன் போலே யாக்க வல்லனாய் இருக்கும்
ஜென்ம கர்ம ச மே திவ்யம் இத்யாதி

(தந்தை கால் விலங்கு அற அன்றோ தோன்றினான் -ஸ்வ தந்த்ரன் அவதாரம் போல் அல்லவே பரதந்த்ரர் அவதாரம்
நித்யர்களை ஏவிப் பணி செய்து இங்கு வரவைக்கிறான்)

நம் பிறவி நம்மையும் அவனையும் உறவு அறுகைக்கு உடலாய் இருக்கும்(இத்தை அறிவதே யோ வேத்தி தத்வத )
இப்படி அல்லனாகைக்கு அடி சாவுதல் பிறத்தல் செய்ய வேண்டாத நித்தியமான உடம்பு உடையனாகை
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –
யத்ர அவ தீர்ணம் கிருஷ்ணாக்யம் பரம் ப்ரஹ்ம நராக் ருதி-
அவனுக்கு பிறக்கை யாகிறது அத்தை நாம் பிறவாதபடி சஜாதீயமாக்கிக் கொண்டு தோன்றுகை
புன்னாம்நோ நரகாத் த்ராயத இதி புத்ர -என்கிறபடியே இவர்கள் தாளில் தளை கழலப் பிறந்தபடி)11-5)
என்றும் பிறவி நமக்கென்று கோல நம் பிறவியாக விலக்கப் படும்
அறுவர் தம் பிறவி அஞ்சிறையே (1-3-11)-

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

அவன் பிறப்பு கூட்டும் –
அவனை விட்டு நீங்கவே  நம் பிறப்பு
பிரபத்தி யாவது இந்த ஞானமே -(பிரபத்தி இந்த பிரதிபத்யே )

நம்முடைய கர்மம் அவனை நம்மோடே சஜாதீயனாக்கும்
அவனுடைய கிருபை நம்மை அவனோடே பரமம் சாம்யம் உபைதி -என்று சஜாதீயர் ஆக்கும்
பிறந்தவாறும்

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே உன்னை என்று கொல் சேர்வதுவே –5-10-1-

மகனாய் பிறந்து
பிறக்கை தவிராதாகில் தமப்பானானாலோ என்னில் தன்னுடைய பிறவி
விசஜாதீயத்துக்குப் போராத பின்பு ஆராய்ப் பிறக்கில் என் என்றுமாம்

ஒருத்தி
இன்னாள் என்னாதே-தங்கள் பயத்தால் மறைத்துச் சொல்லுகிறார்கள்
அத்தத்தில் பத்தா நாள் (1-2)-என்னுமவர்கள் இறே

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே–பெரியாழ்வார்-1-2-6-

பிறந்து
ஆவிர்பவித்தால் ஆகாதோ –
பன்னிரண்டு மாசம் வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மனா என்று -பிறந்தான் என்கை
அவத்யம் என்று பரிஹரித்தான் ருஷி
அது தான் அவத்யம் என்று -பிறந்தவாறும் -என்று பிறக்க வல்லன் என்று சொல்லுகிறார்கள்

—————-

ஓர் இரவில் –
அவ்விரவிலே யசோதை பிராட்டிக்கும் பிள்ளையாக வேண்டுகையாலே
திருவாய்ப்பாடியிலே புக்கு –
நாய்க் குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே
கம்சாதிகள் தன்மை ஸூதிகா கிருஹத்திலே
ஓர் இராத் தங்க ஒட்டிற்றிலை -என்கை –

ஓர் இரவு –
அவ் விரவை ஒக்கும் இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை –

ஓர் இரவில் –
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்தில் வஸ்து
கால அதீனமான தேசத்தில் பிறப்பதே –
அவர்கள் தங்களோபாதியும் பெற்றிலன் -என்கை –

ஓர் இரவில்
பிறந்த இடத்தில் ஓர் இரவும் வசிக்கப் பெற்றது இல்லை இறே
சம்சாரிகள் கீழ் -நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே
சம்சாரிகள் தண்மை கர்ப்ப க்ருஹத்தில் ஓர் இராத் தங்க ஒட்டிற்று இல்லை –
சம்சாரிகள் பிறந்தால் பெறுவதுவும் பெறப் பெற்றது இல்லை –
நால்வர் இருவர் அறிந்து சோபனம் சொல்லி
தூரியம் கொட்டி
கண் கண்டு நெய்யாடல் போற்றப் (போத்தப்) பெற்றது இல்லை –

சர்வேஸ்வரன் இங்கே வந்தால் நம்முடைய கர்மம் நம்மோடே அவனுக்கு சாம்யத்தைக் கொடுக்கும் –
நாம் அங்கே சென்றால் அவனுடைய கிருபை அவனோடே பரம சாம்யத்தைத் தரும் –
இணைவனாம் எப்பொருட்க்கும் –(நாம் சமமாக ஆக்க இந்த பிரமாணம் )
தம்மையே ஓக்க அருள் செய்வர்–(அவன் சமமாக ஆக்க இந்த பிரமாணம் )

நம் பிறவி அவனை அகற்றும் –
அவன் பிறவி அணுகைக்கு உடலாம் –
அவன் பிறவி நமக்கு என்று கோல
நம் பிறவி அவனைப் பெற்றவர்கள் காலில் விலங்கு பட்டது படும் –

ஓர் இரவில்
கால க்ருத பரிமாணம் இல்லாத தேசத்திலே வஸ்து காலாதீனமான தேசத்திலே பிறந்து
ஓர் இரவில் பட்ட பாடு தான் என் –

வீங்கிருள் வாய் பூண்டு
இவ் விரவோடு ஒத்த இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை

ஓர் இரவில்
நாய்க்குடலுக்கு நறு நெய் வகுக்குமோ
சம்சாரிகள் பொல்லாங்கு அவனை ஓர் இராத் தங்கிப் போக ஒட்டிற்று இல்லை என்கை –
அவ்விரவோடு ஒக்கும் இரவும் இல்லை -பகலும் இல்லை
மாதா பிதாக்கள் கை விட்ட அளவிலே கை தந்த ராத்திரி-
பிறவா நின்றால் கண் காண வந்து பிறந்து தூர்யம் கொட்டப் பெறாது ஒழிவதே

(ஆனக துந்துபி -வாசுதேவர் பிறக்க ஆகாசம் முழுவதும் துந்துபி கொட்டிற்றே -அதனால் இந்தப்பெயர் அவருக்கு)

(பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை வணங்கி -அவனையே ரஷித்த இரவு அன்றோ )

இரவு
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசத்திலே வர்த்தித்த இவன்
காலக்ருத பரிணாமமான தேசத்திலே பிறந்தால் பெறுவதும் பெறாது ஒழிய வேணுமோ

—————

ஒருத்தி மகனாய் –
ஒருத்தி -இவனை மகனாய் பெற வேணும் -என்று ஆஸ்ரயிக்க
அவளுக்கு அவதார ரசத்தைக் கொடுத்து
இவளுக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்த படி –
ஓர் அவதாரத்திலே யாதவ சஜாதீயனுமாய்
கோப சஜாதீயனுமாய் -ஆனபடி –

மகனாய்
பிறப்பில் புரை இல்லாதாப் போலே
இவள் மகனான இடத்திலும் புரை அற்று இருக்கை –

ஒருத்தி மகனாய்
அங்கே பிறந்து
இங்கே வளர்ந்தானாய் இருக்கை அன்றிக்கே
இங்கே பிறந்தானாய் இருக்கிறபடி

ஓர் இரவில் ஒருத்தி மகனாய்
அவ் விரவிலே யசோதை பிராட்டிக்கு பிள்ளையாக வேண்டுகையாலே
ஒருத்திக்கு அவதார ரசத்தைக் கொடுத்து
ஒருத்திக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்தான்

ஒருத்தி மகனாய்
அவ் விடத்தில் முலைச் சுவடு அறியாமல் போந்த படியால்
அழுது முலைப் பால் குடித்த இடம் இறே பிறந்த இடமாவது –

திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும்
ஜீரண உத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்

யாதவத்தையும் கோபவத்தையும் ஏக காலத்திலேயே யாக்கினான் –

யது குல உத்பவன் என்ற ரிஷி தானே
கோபாலன் யாதவ குலத்தை எடுக்கக் கடவன் என்றான் இறே
(விஷ்ணு புராணம் ஸ்லோகம் கோபாலன் யது குலத்தைத் தூக்கி வைத்தான் என்று சொல்கிறது
வராக கோபாலர் பூமி ஜென்ம உத்தாரணம் -நாயனார் )

அவளுக்கு முலை சுரவா நின்றதாகில்
இவன் அழுது முலை உண்ணா நின்றான் ஆகில் உமக்குச் சேதம் என் என்று பட்டர் –

யசோதை பிராட்டியாக பூதனை பாவித்து
இவன் உண்ணாத போது முலை விரியும்படியான தசையை யுடையாளாய்
பிள்ளையாக கொண்டு எடுத்து முலை கொடுக்க அது பெறா விடில் வயிறு ஆராத படியாய்
இவனும் முலை உண்ண-இவனை பிள்ளை என்று
அவள் விசுவசிக்க ஒண்ணாதே துணுக் துணுக் என்னும் படி இவளாக பாவித்து அவள் பக்கல் பரிமாறுபவன்
இவள் பக்கல் பிள்ளைத் தனத்தில் தப்ப நில்லானே –
மகனாகக் கொண்டு எடுத்தாள் இத்யாதி (இரண்டாம் திருவந்தாதி )

ஒருத்தி மகனாய்
அவள் இங்கே ஏற நியமித்து போக விட்ட மாத்ரம் –
இவள் காடு ஏறப் போ என்னலாம் படி இருக்கை –
கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் -(பெரியாழ்வார் -3-2 )
அசேஷ ஜகத்துக்கும் சாஸ்தா வான  வஸ்து
இவள் கட்டவும்
அடிக்கவும் படி நியமிக்கலாம் படியாய்த்து இருப்பது –

மகனாய்
அங்கு பிள்ளையாய் பெற்றவளுக்கு யாய்த்து இழவு உள்ளது –
நந்தன் -பெற்றனன்-யசோதை பிராட்டியைக் கைப் பிடித்த பாக்யாதிகர் பெற்றார் –
என்னைக் கைப் பிடித்த முஹூர்த்தத்தாலே ஸ்ரீ வஸூ தேவர் இழந்தார்

மருவு நின் திரு நெற்றி (பெருமாள் திருமொழி )-திருப் பவளத்தில் முலையைக் கொடுக்கப் புக்கவாறே
திரு நெற்றியில் சாத்தின சுட்டியில் அசைவையும் முறுவலையும் கண்டு
தமப்பனாரைக் கொண்டான் என்று அகவாய் பணைக்கும்-
அந்த ப்ரீதியாலே தனக்கும் வாசி தெரிக்க ஒண்ணாத விரலை வாயிலே இட்டுக் கொண்டு
ஒரு வார்த்தை சொல்லும் போது பெரிய தேற்றத்தோடே தொடங்கின மழலைச் சொல்லும்
பாஹ்ய ஹீனையான நான் இழந்தேன் –
பாக்யவதியான அவள் பெற்றுப் பூர்ணை யானாள்

ஒருத்தி மகனாய்
கம்சன் முடிந்து பழை நாள் பட்டு இருக்கச் செய்தேயும்
இந்நாள் என்னாதே மறைத்து போருகிறார்கள் பொல்லாங்கு விளையும் என்னும் அச்சத்தால் –
அத்தத்தின் பத்தா நாள் -என்னுமா போலே

ஒருத்தி
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் –
ஞாலத்தில் புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று ஆரும் இல்லை –

ஒருத்தி மகனாய்–
இருவரும் (தேவகியும் யசோதையும் )அவனைப் பெற வேணும் என்று ஆஸ்ரயிக்க –
அவளுக்கு அவதார ரசத்தைக் காட்டிக் கொடுத்து
இவளுக்கு லீலா ரசத்தை அனுபவிப்பிக்கிற படி
அம்ச அவதாரோ ப்ரஹ்மர்ஷே யோ அயம் யது குலோத்பவ(ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்ற ருஷி தானே
கோபாலா யாதவம் வம்சம் மக்ந மப் யுத்தரிஷ்யதி -என்றான்
அவள் கரும்பின் கோதைக் (கேளை -வேரை )கொண்டவோபாதி
இவளும் கரும்பின் நடுவைக் கொண்டால் போலே இருக்கிறது –
ஆப்புண்டு -10-6-1-
தீங்கரும்பு -2-5-1-
அங்கு ஈஸ்வர லக்ஷணத்தோடு பிறந்தது பிறப்பில் புரையற்றால் போலே –
இவள் மகனான வளவிலும் பிறப்பில் புரை அற்று இருக்கை

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே-10-6-1-

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப் படு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே முளைத்து எழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போர்ஏற்றினை புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே ————–2-5-1-

திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும்–ஜீரணோத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்-ஈன்ற முதல்  தாய் சடகோபன் -மொய்ம்பால்  வளர்த்த இதத்தாய் இராமானுசன் –இதனால் தான் இராமானுசன் தர்சனம் என்று பேரிட்டு நம் பெருமாள் நாட்டி வைத்தார் –

———————-

ஒளித்து வளரத் –
கம்சனுடைய விஷ திருஷ்டி படாமே வளர்ந்தபடி-

நாட்டார் செய்வன செய்யப் பெறாதே
கள்ளர் பட்டது படுவதே
திரு அவதரித்து இருக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது படுவதே –
உள்ளே இருக்கச் செய்தேயும் இவனில்லை என்று எழுத்திடுமவன்
முகம் காண சம்மதிக்குமோ -என்கை –
அந்தர்யாமியாய் மறைய நிற்கிறது -பிச்சேறின பிரஜை தாய் முன்னே நிற்கில் தாயைக் கொல்லும் –
அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொள்ளும்-
அதுக்காக முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கும் மாதாவைப் போலே
இசைந்து அம்மே -என்றால் ஏன் என்கைக்கு கிட்டே விருக்கிறபடி -என்றுமாம் –
பேர் சொல்லாதே ஒருத்தி -என்றது
அத்தத்தின் பத்தா நாள் -என்றவள் மகள் ஆகையாலே
பயத்தாலே ஒளிக்கிறாள் –
அபிசரிக்கிலும் அதுவோ இதுவோ என்று சந்தேஹிக்கைக்காக –

மாமனார் மாமியார் பெயர்களைச் சொல்லக் கூடாதே – கீழே நந்தகோபர் யசோதை நமக்குக் காட்டதான் -கண்ணன் உடன் சேர்ந்த பின்பு பெயர்களைச் சொல்லக் கூடாதே – ஒப்பற்ற என்றும் ப்ரஸித்தம் என்பதால் ஒருத்தி -என்கிறாள் –

ஒளித்து வளரத்
பிறந்த இடத்தில் தோன்றப் பெறா விட்டால் –
போன இடத்தில் ஒளியாமல் தான் வளரப் பெற்றதோ
விஷ த்ருஷ்டிகளான பூதநாதிகள் கண் பட ஒண்ணாது என்று
நாட்டார் செய்வன செய்யப் பெறாதே நில வறைகளிலே இறே வளர்ந்தது –
வானிடைத் தெய்வங்கள் காண (பெரிய திருமொழி )-என்று
அனுகூலர் கண் உட்பட பட ஒட்டாதவள் பிரதிகூலர் கண் பட ஓட்டுவாளோ –
கன்றின் பின் போக்கில் என்று புறப்பட ஓட்டாள்

ஒளித்து வளர
உகப்பார் சதா தர்சனம் பண்ணி அனுபவிக்க கடவ வஸ்து
கண்ணுக்கு தோற்றாத படி மறைக்க வேண்டும் படி
கள்ளர் பட்டது படுவதே –
அவதரிக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது பட்டான்

ஒளித்து வளர
உள்ளே இருக்கச் செய்தேயும்
இவன் இல்லை என்று எழுதி எழுத்து இடுமவன் முகம் காட்ட சம்வதிக்குமோ-
பிச்சேறின பிரஜை முன்னே தாய் நிற்கிலும் கொல்லும்-
இவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொல்லும்
அப்படியே அவதரிக்கில் எதிர் இடுவார்கள் –
பரம பதத்தில் இருக்கில் அசத் கல்பர் ஆவார்கள்
அந்தர்யாமியாய் முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கி
தெளிவு பிறந்து அம்மே என்றால் ஏன் என்கைக்கு பதிக்கிடைக் கிடக்கிறபடி –

ஒளித்து வளர –
கம்சாதிகளுடைய விஷ த்ருஷ்டிகள் படாமே –
நாட்டார் செய்வன செய்யப் பெறாதே –
கள்ளர் பட்டது படுவதே
அந்தர்யாமி பட்டது படுவதே
உள்ளே இருக்கச் செய்தே இவனை இல்லை என்று எழுதி எழுத்திடுமவன் முகம் காண சம்மதிக்குமோ
பிச்சேறின பிரஜை தாய் முன்பே நிற்கில் தாயைக் கொல்லும்
அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொள்ளும்
அதுக்காக முகம் தோற்றாதே நின்று (இரா மடம் ஊட்டுவாரைப் போலே உள்ளேயே கிடந்து )நோக்குமா போலே
இவனும் முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்குகிறான்
இசைந்து அம்மே என்றால் அடியேன் என்கைக்குக் கிட்டவே இருக்கிறான் –

(அந்தர்யாமி -நியமிக்க -அந்தராத்மா சத்தைக்கு –
பரஞ்சோதி -அர்ச்சிஸ்-அர்ச்சிராதி கதிக்கு -வழி காட்ட -ஒளித்து நம்முள் )

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்-ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்-உபநயனம் -ப்ராஹ்மண ஜென்மம் கொடுக்கும் -ஸமாச்ரயணம் ப்ரபந்ந ஜென்மம் கொடுக்கும் -சடக்கென பண்ண வேண்டும் –

———–

தரிக்கிலானாகித் –
கிருஷ்ணன் வலரா நின்றான் -என்று கேட்ட பின்பு அவன் தரிக்க மாட்டிற்று இலன் –
ஈஸ்வர சத்தையையும் பொறாத ஆஸ்ரயம் இறே –

ஒளித்து வளரத் தரிக்கிலானாகித்-தான்
நாரதாதிகள் சென்று உன்னுடைய சத்ரு திருவாய்ப் பாடியிலே வளரா நின்றான் -என்று
சொல்லக் கேட்ட மாத்திரத்தில்
நம் கண் வட்டத்தில் இல்லையாகில் அவன் என் செய்யில் என் என்று இராதே
சதுரங்க பல உபேதனாய் ஐஸ்வர்யத்துக்கு ஹானி இன்றிக்கே இருந்தோம் ஆகில்
வந்த அன்று பொருகிறோம் என்று ஆறி இராதே தரிக்க மாட்டிற்று இலன்

அஸஹ்ய அபசாரமாவது
பகவத் பாகவத விஷயமாக அவர்கள் சத்தையும் பொறாது ஒழிகை இறே
கம்ச வதத்து அளவும் அனுசந்திக்கிறவர்கள் ஆகையால்
மேலே படப் புகுகிற பாட்டை அனுசந்தித்து ஸூத்ரனான பையில்
தானே சிம்ஹத்தோடே நரி எதிர் இடுமா போலே எதிர் இட்டவன் சிறுமையைச் சொல்கிறார்கள்

ஒளித்து வளரத் தரிக்கிலானாகித்
நாரதாதிகள் கிருஷ்ணன் வளரா நின்றான் என்று சொல்லக் கேட்ட பின்பு தரிக்க மாட்டிற்று இலன்
திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்(பெரியாழ்வார் -1-2)
ஈஸ்வர சத்தையும் பொறாது ஒழிகை

விண் கொளமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர் தம் மக னாய் வந்து
திண் கொளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே–1-2-16-

————–

தான் தீங்கு நினைந்த –
பயத்தாலே பரிந்து மங்களா சாசனம் பண்ணும் விஷயத்தில் தீங்கு நினைத்தது –
துஷ் பிரகிருதி யாகையாலே

தான்
உத்தர ஷணத்திலே படப் புகுகிற பாடு அறியாத தான் –

தீங்கு நினைந்த –
தங்கள் வாயாலே சொல்ல மாட்டாமையாலே -தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும்
வில் விழவுக்கு என்று அழைத்து நலியத் தேடின படி –

தீங்கு
பரிய வேண்டும் விஷயத்தில் பொல்லாங்கை நினைப்பதே –
என்ன துஷ் ப்ரக்ருதி தான்
இன்னது என்று தன் வாயால் சொல்ல மாட்ட்டாமையாலே தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும் –
வில் விழவுக்கு என்று அழைத்ததும்
நலியத் தேடின எல்லா வற்றையும் நினைத்து –

நினைந்த
இதுக்கு மனஸ் சஹகாரம் உண்டாவதே –
சிந்தையினால் இகழ்ந்த -என்கிறபடி
யுக்தி மாத்ரமான அளவில் நலியாதே
நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் யாய்த்து கை விடுவது –
கைக் கொள்ளும் இடத்தில் கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான்

தீங்கு நினைந்த
தீய புந்திக் கஞ்சன் இறே-

தான் தீங்கு நினைந்த
எத்திறம் என்று அங்குத்தைக்கு பரிய –
மோஹிக்க வேண்டும் விஷயத்திலே இறே தீங்கு நினைத்தது -துஷ் ப்ரக்ருதி யாகையாலே –

(கம்சன் அசுரப்பிறவி இல்லையே -மனிதன் அசுரத்தன்மை கொண்டவன்
மூவாறு மாதம் மோஹித்து -பத்துடை எளியவர் -பிறந்தவாறும் -கண்கள் சிவந்து )

தான் தீங்கு நினைந்த
உத்தர ஷணத்திலே படப் புகுகிற தான் –
தீங்கு என்கிறது அப் பொல்லாங்கு தன் வாயால் சொல்ல மாட்டாமை
அஸ்மாந் ஹந்தும் ந சம்சய -(விபீஷணன் -நமக்கு எல்லாம் உயிரான பெருமாளை நம்மை அழிக்க வருகிறான் என்றாரே சுக்ரீவ மகா ராஜர் )
மாயத்த்தல் எண்ணி -(4-3)
தங்களை நலிந்ததாய் இருக்கை
பூதனை யுள்ளிட்டாரையும் வரக் காட்டியும் வில் விழவுக்கு என்று அழைத்தும் நலியத் தேடின படியும்

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய்உயிர்
மாய்த்த ஆய மாயனே!வாஅ மனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டுஉன்னைப் போதால் வணங்கே னேலும்,நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.—திருவாய் -4-3-4-

—————

கருத்தைப் பிழைப்பித்துக் –
பூதனை முதலானோர் நலிவுகளைப் பண்ணப் புக –
அத்தைத் தப்பி தன்னை நமக்குத் தந்தபடி –
அவன் நினைவை அவன் தன்னோடு போம்படி பண்ணி -என்றுமாம் –

கருத்தைப்
அம்மானாய் –
கண்ண நீர் விழ விட்டு இருக்க –
நினைத்த அபிப்ராயத்தை –

பிழைப்பித்துக் –
அவன் நினைவை
அவன் தன்னோடே போம் படி பண்ணி

கருத்தைப் பிழைப்பித்துக்
அவன் நினைத்ததைப் பிழைக்கும் படி பண்ணி -அவன் நினைவை அவனோடே போம்படி பண்ணினான்

அவன் நினைத்த தீங்கை பிழை யாம்படி பண்ணி
கொல்ல வேண்டும் என்ற நினைவால் தான் கொலை யுண்டான்
செயற்கையாக அழ த்ரவ்யம் பூசி இவன் இருக்க
ஜராசந்தன் பெண்கள் இருவர் இவன் மனைவிமார் – அழும் படி பண்ணினான் )

(போஜன் ஸ்தாலி -கண்ணன் ஒளிந்து விளையாடிய இடங்கள் –
இவன் வாய் அமுதத்தால் நிறைந்த புஷ்கரணி
விஷ்ணு சித்தர் மனத்தைக் கோயிலாகக் கொண்டு பெரியாழ்வார் அஸ்தானே பயம் போக்கி அருளினான் )

————–

கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற –
கம்சன் அநாதி காலம் சஞ்சிதமான பாபம் இத்தனையும்
கண்ட காட்சியிலே அனுபவித்து அறும்படி நின்றவன்
ஆஸ்ரிதர் வயிற்றில் நெருப்பை கம்சன் வயிற்றில் கொளுத்தினவன் என்கை
அதாவது பாகனி கொளுத்துகை –

கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற
கிருஷ்ணன் என்றால் வயிறு எரிதலோடே இருக்கக் கடவ பெண்களுடைய பயத்தை
எல்லாம் அவன் வயிற்றிலே யாக்கின படி

கஞ்சன் வயிற்றில்
கம்சனுடைய தப்புக்களை நினைத்து –
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் –(பெரியாழ்வார் -3-3 )
வாழ கில்லேன் வாசுதேவா –
ஊடுற என்னுடைய ஆவி வேமால் -என்கிற
ஆஸ்ரிதருடைய பயாதிகளை எல்லாம் கம்சன் வயிற்றிலே கொளுத்தினான்

கஞ்சன் வயிற்றில்
தேவகி வயிற்றில் பிள்ளை –
கம்சன் வயிற்றில் நெருப்பு

நெருப்பன்ன
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் -(பெருமாள் -7-10 )
தேவகியார் வயிற்றில் நீரைச் சொரிகிறவன் காணும்
கம்சன் வயிற்றில் நெருப்பைச் சொரிகிறான்

நெருப்பன்ன நின்ற
கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு உருவன்-

நெருப்பென்ன நின்ற
கம்சன் அநாதி காலம் சஞ்சிதமான பாபம் இத்தனையும்
கண்ட காட்சியில் அனுபவித்து அறும் படி நின்ற நிலை

கஞ்சன் வயிற்றில்-நெருப்பன்ன நின்ற
ஆஸ்ரிதர் வயிற்றில் நெருப்பை கம்சன் வயிற்றிலே புகும்படி பண்ணி

(திருவடி -பிராட்டி சோக நெருப்பை -வாயு புத்ரனாகையாலே கொண்டு இலங்கைக்கு வீசிய படி)

தேவகி வயற்றில் பிள்ளை–அண்ணன் வயிற்றில் நெருப்பு–கஞ்சன் –நெருப்பு கரு முகில் எந்தாய் -தேவகி வயிற்றில் நீர்
கம்சன் -கண்ட காட்சியில் -பாபம் கழிய நின்ற நிலை —வெந்நரகம் சேரா வகையே சிலை குணித்தான் இதுவே நரகம்
இப்படி சொன்னவரை பார்க்க வேண்டும்–நஞ்சீயர் மடலும் தமிழும் முன்பே தெரியும்

————————

நெடுமாலே –
இது எல்லாம் பட வேண்டிற்று –
ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோகத்தால் -என்கை –
அப்போது ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும்
திரு உள்ளம் மண்டின படி என்றுமாம் –

நெடுமாலே
இது எல்லாம் பட வேண்டிற்று ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹத்தாலே

நெடுமாலே
அப்போது ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும் திரு உள்ளம் மண்டி –
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் –காணுமாறு இனி யுண்டு எனில் அருளே
என்று அவள் பட்ட இழவுகள் எல்லாம் தீர
முலைப் பால் திரு மேனியில் பாய
அவளுக்கு நின்று பால சேஷ்டிதங்களைக் காட்டின வ்யாமோஹத்தை
அவள் தான் காண்பதற்கு முன்னே மஞ்சங்களில் பெண்கள் கண்டு வாழும் படி
வ்யாமோஹ அதிசயத்தை நெடுமாலே என்கிறது –
(மாலும் நெடுமாலும் -தாய் மார் இடமும் கோபிகள் இடமும்
அடுத்த பாசுரம் மாலே )

கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் ஆவர் அச்சோ ஒருவர் அழகிய வா (பாசுரம் -6)-என்று
இறே பெண்கள் பார்த்துக் கொடு நின்றது –

நாம் அவ்விடத்தில் அப்படி செய்த செய்த தீமை யுண்டு –
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன

நெடுமாலே –
இது எல்லாம் பட வேண்டிற்று ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹ அதிசயத்தாலே என்கை
வஸூதேவ தேவகிப் பிராட்டிகள் பக்கல் திரு உள்ளமன்றே-தாயாருக்கும் தமப்பனார்க்கும் செய்தன இவை
அவர்களையும் ஒளித்துச் செய்யுமவர்கள் அன்றோ நாங்கள் என்கை

(காணுமாறு உண்டு எனில் அருளே என்றதும் அனைத்தையும் காட்டி அருளினானே –
அது மால் என்னும் படி இவர்கள் பக்கல் நெடுமால்)

அஹங்காரத்தின் உடைய வயிற்றிலே–நெருப்பைக் கொளுத்தினாப் போலே ஜ்வலித்து-அவன் அருகே நின்ற ஸ்வ சேஷ பூத சேதன விஷய–வ்யாமோஹ அதிசயத்தை உடையவனே –

————–

உன்னை –
அர்தித்வத்தில் நிரபேஷனான உன்னை –
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய் இவ்வளவும் வந்தது ஆர் அபேஷித்து –
நெடுமாலே உன்னை அர்தித்து வந்தோம் –
பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே
பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –
அர்த்தித்தின் அளவு எங்கள் வடிவைப் பார்க்க அமையும் –

யுன்னை அருத்தித்து
எங்களுக்கு பிறந்து காட்டவும் வேண்டாம் –
வளர்ந்து காட்டவும் வேண்டாம் –
கொன்று காட்டவும் வேண்டாம் –
உன்னைக் காட்ட அமையும் –

உன்னை அருத்தித்து
உன் பக்கலிலே ஓன்று வேண்டி வந்தோம் அல்லோம் –
உன்னையே வேண்டி வந்தோம்

உன்னை அருத்தித்து
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் (2-7-11)-என்று
அர்த்தித்தவ நிரபேஷமாக அர்த்திகளையும் யுண்டாக்கி
உன்னையும் கொடுப்புதி இறே
உன்னுடைய உதார குணம் எல்லாம் அசத் கல்பமாக்கி
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாக வந்தது –
யார் அபேக்ஷித்து
(வேண்டித் தேவர் இரக்க நீயே அன்றோ உன்னைப் பிரார்த்தித்து வேண்டி வந்தாய் )

நெடுமாலே உன்னை அருத்தித்து
பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே
பெரும் பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –

யுன்னை-அர்த்தித்து வந்தோம்
அர்த்தித்வாதி நிரபேஷனான உன்னை-
பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் -(உபாய நிரபேஷன் -கைங்கர்ய பிரார்த்தனை -ஏவிப் பணி கொள்ள வேண்டுமே -)
உன்னைப் பெறவே இருக்கிறோம்
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய் இவ்வளவும் வந்தவன் இறே -(ஏஷ நாராயண ஸ்ரீ மான்–ஆகாதோ மதுராம் புரம் )
எங்கள் வடிவைப் பாராய்
மாசுடை யுடம்பு இத்யாதி(நாச்சியார் )

———–

வந்தோம்
எங்கள் மிகைச் செயல் கண்டாயே –
உன் வ்யாமோஹம் எல்லாம் அத்வேஷம் என்னும் படிக்கு ஈடாய் நாங்கள் வந்தது

வந்தோம்
எதிர் சூழல் புக்கு –
ஆள் பார்த்து உழி தருகின்றாய் –
ஆயர் குலத்தினில் வந்து தோன்றின உன் வியாமோஹம் எல்லாம்
நாலடி இட்டு அசத் கல்பம் ஆக்கினோம்

———

பறை தருதியாகில் –
எங்களுக்கு உத்தேச்யம் செய்குதியாகில்

ஆகில் -என்றது
நம்முடைய அர்த்தித்வாதிகள் அப்ரயோஜகம் –
அவன் நினைவாலே பலம் என்கை –
உன் அழகாலே பிழைப்பியாதே செய்தருளப் பார்ப்பாயாகில் -என்னவுமாம் –

பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் -என்று சொல்வது –
உன்னை அருத்தித்து வந்தோம் -என்பதாய்
வியாஹதமாக வார்த்தை சொன்னி கோளே என்ன

பறை தருதியாகில்
எங்களுக்கு உத்தேச்யம் செய்ய நினைவாகில்
(ஆகில் -கொடுக்க நீ திரு உள்ளம் பற்ற வேண்டுமே
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் )

தருதியாகில்
அவர்கள் அர்த்தித்தவம் அப்ரயோஜம் –
அவன் நினைவாலேயே பலம் என்கைக்காக
ஆகில் என்கிறது

இவன் எல்லாம் செய்தாலும்
அவன் அல்லேன் என்றவாறே
ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே
இவர்கள் அர்த்தித்தவம் அவன் ஸ்வாதந்தர்யத்தை போக்க மாட்டாதே –
ஆகையால் தருதியாகில் என்கிறார்கள்

எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள்
திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் என்று இறே சொல்வது

ஆகிறது நினைவு சுருக்கம் ஒழிய அறிந்தோம் –
வந்தபடி தான் என் –
வருகிற போது கிலேசித்தி கோளே என்ன

ஒரு கிலேசம் இன்றியிலே உகப்போடே வந்தோம் –

பிரிந்து இருக்கிற நீங்கள் உகப்போடே வந்த படி என் என்ன

பறை தருதியாகில்
தாழ்ந்தார் உயர்ந்தாரை திரு உள்ளமாகில் செய் என்னுமா போலே
உன் அழகாலே எங்களை மயக்காதே –
செய்து அருளப் பார்த்தாயாகில் -செருக்கு அடியாதே செய்து அருளப் பார்த்தாயாகில்

(நெறி காட்டி நீக்குதியோ -கரு மேனி காட்டுதியோ
அழகைக் காட்டி மயக்கி கைங்கர்யம் கொடுக்காமல் –
ஸ்வா தந்தர்யத்தாலும் கைங்கர்யம் கொடுக்காமல் )

ஆகில் -என்றது
நம்முடைய அர்த்தித்வாதிகள் அப்ரயோஜகம் –அவன் நினைவாலே பலம் என்கை –பொது நின்ற பொன் அம் கழல் சடாரி
உன் அழகாலே பிழைப்பியாதே செய்தருளப் பார்ப்பாயாகில் -என்னவுமாம் –
அவன் நினைவே பல சாதனம்–இவன் எல்லாம் செய்தாலும்–அவன் அல்லேன் என்ற வன்று ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே
ஆகையால் தருதியாகில் -என்கிறார்கள்–எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள்
திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் -என்று இ றே சொல்வது

————

திருத் தக்க செல்வமும் –
ஸ்ரீய பதித்வத்தால் வந்த சம்பத்தையும் –
பிராட்டி ஆசைப் படும் சம்பத் -என்னவுமாம்

திருத் தக்க செல்வமும்
ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த சம்பத்தையும் –
பிராட்டியை எனக்கு என்னும் பெருமை யுண்டாம் போது அவள் ஆசைப்பட்டு
மேல் விழும்படி அதுக்கு ஈடான சம்பத் உண்டாக வேணும் இறே –

திருத் தக்க செல்வமும்
செல்வச் சிறுமியரான இவர்களுக்கு செல்வம் தக்காப் போலே
போதமர் செல்வக் கொழுந்தான -பெரிய பிராட்டியாருக்கு தகுதியாய்
இருக்கும் செல்வத்தினால் வளர் பிள்ளையுடைய செல்வம்

திருத் தக்க செல்வமும்
திருவுக்கு தக்க செல்வம்
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிற படியே
பிராட்டி ஆசைப்படும் சம்பத்து –
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே –
ஸ்ரிய ஸ்ரியம் (ஆளவந்தார் )

திருத் தக்க செல்வமும் -சம்ப்ரதாயம் திரு ஆராதனம் -திருத் துழாய் -திரு மடப்பள்ளி –
திரு சப்தம் சொல்லாமல் சொல்லி திருடன் வர டன் வந்தான் -கதை –திரு மால் உரு ஒக்கும் மேரு —
அம்மேருவில் செஞ்சுடரோன் –சின்னமே பிதற்றவே நிற்பதோர் -திருமால் -எங்கே வரும் தீவினையே ஆழ்வார் –ஸ்ரீ மத் ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் பர்யந்தம் ஸ்ரீ மத் பாகவதம் -பூர்ண அவதாரம் அன்றோ

————-

சேவகமும் –
அத்தை காத்தூட்ட வல்ல வீரியமும்

சேவகமும்
அவ் வைஸ்யர்வத்தைத் காத்தூட்ட வல்ல ஆண் பிள்ளைத் தனமும் –
பிராட்டியுடைய விரோதிகளை பெண்களுடைய விரோதிகளை போக்கி
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் காத்தூட்ட வல்ல வீர்யம் –
என்று என்றும் உன் சேவகமே ஏத்தி (24 )என்கிற இடத்தில் இரண்டும் உண்டு இறே

செல்வமும் சேவகமும்
ஆற்றப் படைத்தான் மகனே(செல்வமும்) என்றதுவும் –
கப்பம் தவிர்க்கும் கலியே-(சேவகமும்)என்றதுவும்

சேவகமும்
இத்தைக் காத்தூட்ட வல்ல வீர்

—————

யாம் பாடி –
உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்
உகப்போடே அத்தைச் சொல்லி –

யாம் பாடி
உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்
உன் பேர் சொல்ல ஒட்டாதார் முன்னே உகப்போடே பாடி –
புள்ளின் வாய் கீண்டானை (கீர்த்திமைப்பாடி )என்று ஊர் எல்லாம் பாடிக் கொண்டு திரிகிறார்கள் இறே

யாம் பாடி-வருத்தமும் தீர்ந்து
வருத்தம் உன்னை நீ கண்டு அறியாயே-பிரிந்தார் படும் பாடு பாராய் -என்கை
சொல்லப் பெறாத நம் வருத்தமும் தீர்ந்து

———

வருத்தமும் தீர்ந்து –
உன்னைப் பிரிந்து படும் துக்கமும் தீர்ந்து
பிரிந்தார் படும் பாடறிய
உன்னை நீ பிரிந்து அறியாயே –

வருத்தமும் தீர்ந்து
உன்னைப் பிரிந்து நெடு நாள் பட்ட கிலேசம் எல்லாம் தீர்ந்து –
கேவலரைப் போலே துக்க நிவ்ருத்த மாத்திரமே அன்றி இவர்களுக்கு பிரயோஜனம்
பாடுகிற போது ப்ரீதிக்கு போக்கு வீடாகை யாலே
அனுபவ காலத்தில் அநந்தம் போலே அனுசந்தான சமயத்தில் ஹர்ஷம் கனக்க யுடையோமாய்

உனது வருத்தமும் தீர்ந்து நீ மகிழ அது கண்டு நாமம் மகிழ-என்றுமாம்

———

மகிழ்ந்து –
கைவல்யம் போலே துக்க நிவ்ருத்தி மாத்ரமே அன்றி
ப்ரீதிக்கு போக்கு விடும்படி யாகவேணும்-

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் –(பெரியாழ்வார் 5-4 )
உகந்தே உன்னை உள்ளும் என்னுள்ளம் (திருவாய் -9-4-7 )-என்கிறபடி
அனுசந்தான காலத்தில் அனுபவ காலம் போலே இறே இருப்பது
தூய வமுதை பருகி பருகி (திருவாய் – 1-7 )-கிருஷ்ண அனுசந்தானம் தித்திக்கும் இறே –
(மருந்து சாப்பிட்டு விருந்து இல்லாமல்
விருந்தேயாக பிறவி போக்கவும் அனுபவத்துக்கும் )

வருத்தம் தீருகைக்கு சேவகம் பாடினார்கள் –
மகிழ்ச்சி பிறக்கைக்கு செல்வம் பாடினார்கள் –

ஸுர்ய வீர்யாதிகள் கிலேச நிவ்ருத்திக்கு உடல் –
ஐஸ்வர்யம் ஆனந்த ஹேது

பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
இசை மாலைகளில் ஏத்தி மேவப் பெற்றேன் (திருவாய் 4-5-2)
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய –(திருவாய் 4-5-3)
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனம்-

(ராஜகுமாரனுக்கு முடி சூட்டி பின்பு சிறையில் இருந்து விடுவிக்குமா போல் )

விரோதி நிவ்ருத்தியும் யாய்த்து –
அபிமத சித்தியும் யுண்டாய்த்து —
பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம் –

மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் எல்லாம் ஏற்ற
கைவல்யம் போலே துக்க நிவ்ருத்தி யன்று தேட்டம்
ப்ரீதிக்குப் போக்கு விட வேண்டும்படி யாகை-(பாடுவதே ஆனந்தம் பரிவாஹமாய் கைங்கர்யம் )

பறை தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம் –

வருத்தம் தீர்ந்து–மகிழ்ந்து–கேவலர் போலே இல்லை–அநிஷ்ட நிவ்ருத்தி வியாதி போக்க–இஷ்ட பிராப்தி அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடுவது ஆனந்தம்–நினைந்து இருந்தேன் சிரமம் தீர்ந்தேன் -வருத்தம் தீர்ந்து–உகந்தென் என் உள்ளம் -மகிழ்ந்து –
சாதனமே பலம் -இங்கு-அனுசந்தானம்–தூய அமுதை பருகி மாய பிறவி மயர்வு அறுத்தேன்–வருத்தம் தீர சேவகம் பாடி–மகிழ-வீவில் இன்பம்
அபிமத சித்தி உண்டானதே –

சேவகமும் யாம்பாடி–வருத்தமும் தீர்ந்து–மகிழ்ந்து–உன்னை அருத்தித்து வந்தோம் -என்று அந்வயம் -மகிழ்ந்திடுவோம் என்றது ஆயிற்று-

————————————————————————

வருத்தம் தீர் மாலை –சாற்றி அருளுகிறாள்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து –
திருத்தக்க செல்வமும் -துல்ய சீல வயோ வ்ருத்தாம் -எம்பெருமானார் -பிராட்டி ஒத்த செல்வம் -எம்பெருமான் அடி சேர்ப்பிக்கை
சேவகம் -பரதவ சௌலப்யம் இரண்டையும் பாடி–பாங்கு அல்லர் ஆகிலும் திருத்திப் பணி கொண்டு
இராமுனுசா இம்மண் அகத்தே இருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் –
பணிமானம் பிழையாமே யடியேனைப் பணி கொண்ட –
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
மால் வ்யாமோஹம் அதற்கும் திரு சேர்த்து அருளினார் ஆழ்வார்
திரு -தக்க செல்வம் -நம் சம்ப்ரதாயம் -என்றபடி
திருவுக்கும் திருவாகிய செல்வன் -சுவையன் திருவின் மணாளன்
பரம ரசிகன் இந்த ரசிகத்துக்கு ஊற்று வாய் சொல்கிறது மேல் திருவின் மணாளன் என்று-பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் என்னப் பிறந்தவன்

நெடுமால்–அச்யுத பதாம்புஜ யுகம ருக்ம வ்யாமோஹத
நித்ய கைங்கர்ய அபேஷை 16 தடவை கத்ய த்ரயம்-மெய் தானா -ராமோ   த்வைய இரண்டாவது வார்த்தை பேசாதவன்-இது மயைய உக்தம் நித்ய கைங்கரோ பவோ-உற்றோமே ஆவோம் உனக்கே ஆட் செய்வோம்-

——————

25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் கரும வினை
கூற பிரிவினை இங்காகல் — மாறமால்
தானும் பிறந்து இருமை வினை தீர்த்துப்
பேணும் கருணை பெரிது.

ஜன்ம கர்மச மே திவ்யம் யோ வேத்தி தத்வத : என்றும்
அப்யுக்தானம் அதர்மசஸ்ச ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் என்றும்
தேவகி பூர்வஸந்தியாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா என்றும்
தாஸாம் ஆவீரபூத் பூமௌ ஸ்வயமான முகாம்புஜ : என்றும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாரத்தை உயர்வான வார்த்தைகளால் ஸ்ரீ கிருஷ்ணன் தானும், ரிஷிகளும் பேசி இருக்க,
ஆண்டாள் அவன் பிறந்தமையை மநுஷ்யர்கள் பிறப்பைப் போலே கூறல் தகுமோ? என்னில்
ஆவிர் பூதம்
பிராதுர் பூதம்
என்பதற்கு மறைந்து இருந்தவன் வெளிப்பட்டானாக, தோற்றினதாக பொருள் படும்.
இல்லாதது உண்டாகாது. இருப்பதுதான் புலன்களுக்குத் தோற்ற புலப்படும்.
பூ = ஸத்தாயாம் என்று இருப்பைச் சொல்லி, ஆவிர்பூதம், பிராத்துர்பூதம் என்று வெளிப்படுதலைச் சொல்லுகிறது.

மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்பது ஜனி = ஜாயதி என்ற பொருளில் பிறப்பு என்றாகிறது.
எனவே அர்த்தத்தை வைத்துப் பார்க்கில், இருவருடைய பிறப்பும் வெளிப்படுகை அன்றி உண்டாகுகை இல்லை.
என்றானால் நம்முடையது பிறப்பு, அவனுடையது அவதாரம் என்பது ஏன்?
இருப்பு இருவருக்கும் பொது. எப்படி இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டால் இருவருமே ஜ்ஞான, ஆனந்த ஸ்வரூபத்தோடே
இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதுவரை ஸாம்யாப்பத்தி போல தோன்றினாலும் ,
ஆத்ம பரமாத்ம ஸ்வரூபத்தில் தாரதம்யம், மற்றும் ஆத்ம தத்வங்களிடையே தாரதமயத்துக்கும் ஹேது
இன்னும் வேறு சில குணங்கள் காரணம்.
அவற்றில் இருவர் பிறக்கைக்கும் பிரதான காரணம் பகவானுடையது கிருபை. நம்முடையது கர்மம்.

பூ ஸத்தாயாம் என்று இருக்கும் நாம் கர்மத்தால் பாதிக்கப் பட்டு வெளிப்படுவது பிறப்பு.
பூ ஸத்தாயாம் என்று இருக்கும் அவன் கிருபையால் உந்தப்பட்டு கண்களுக்கு புலப்படும்படியாக வெளிப்படுவது
அவதாரம் (அ)ஆவிர்பூதம் . இப்படி இருவர் வெளிப்படுகைக்கும் பிரயோஜனம் ,
நம்முடையது சேர்த்து வைத்த, சேர்த்துக் கொள்கிற புண்ய, பாபங்களை அனுபவிக்க (அ) நஷ்டமாக்கை .
அவனுடையது நம்மை தன் கிருபைக்கு இஷ்டமாக்கை .

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் கடலை கழிமினே .

ஜனனோ ஜன ஜன்மாதிஹி பீமா பீம பராக்கிரம :
இருவரும் ஜன என்பது பொதுவானாலும்,
அவர் ஜனன : கர்ம பாரவஸ்யத்தால் நமக்கு சரீரத்தை கொடுத்து பிறப்பிக்குமவர். தவிர
ஜன -; ஜனங்களின்
ஜன்மம் -; பிறப்புக்கு
ஆதி -; நிமித்தம் (அ) பிரயோஜனம்
பகவான் – அவர் தான். ஆக, நம்முடைய பிறப்புக்கு பிரயோஜனம் அவரை அடைவது .
அவருடைய பிறப்புக்கு பிரயோஜனம் ஜனங்களைத் திருத்திப் பணிக் கொள்வது.

இப்படி கர்மா கழிந்தபின் உண்டாகிற ஜ்ஞான ஆவிர்பாவத்தை உபநிஷத்
ஸதா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்றும்
அஸ்மாது சரீராய ஸமுத்தாய பரம்ஜியோதிர் உபஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே – என்றும்
கர்மம் தொலைந்து ஜ்ஞானம் விகசித்து பக்குவமான சக்கரைப் பொங்கல் பிரசாதம் போலே இவன் விளங்க
அத்தை அவன் ஆனந்தமாக விநியோகம் கொண்டு களிப்பிக்கிறான்.
இது நடத்தவே ஒருத்தி மகனாய் அவன் பிறந்து என்கிறாள் ஆண்டாள்.

————————

ஒருத்தி மகனாய் பிறந்து –
அஷ்டாஷரீ பிரதிபாத்யனாய்க்-
குண விக்ரஹ விபூதி விசிஷ்டனாய்
அவதரித்து –

ஓர் இரவில் ஒருத்தி மகனாய் –
லௌகிகர் அறியாத அத்விதீய காலத்தில்
வாசுதேவ த்வாதச அஷரீ பிரதிபாத்யனாய் –

ஒளித்து வளரத்-
குண விக்ரஹ விபூதி களாலே
சங்குசித்து
ஸ்வரூப மாத்ரேண வளரா நிற்க –

தரிக்கிலானாகித் –
ஸ்வரூப மாத்ரேண-ஈஸ்வர சத்தையையும் பொறாதவனாய் –

தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –
அநவரதம் மங்களா சாசனம் பண்ணக் கடவ விஷயத்திலே
அவனால் ஒரு உபத்ரவம் உண்டாய்
பொல்லாமையை நினைக்கை அன்றிக்கே –
தானே
த்வேஷத்தை நினைந்த அபிப்ராயத்தை வ்யர்த்தமாக்கி
அஹங்காரத்தின் உடைய வயிற்றிலே
நெருப்பைக் கொளுத்தினாப் போலே ஜ்வலித்து
அவன் அருகே நின்ற ஸ்வ சேஷ பூத சேதன விஷய
வ்யாமோஹ அதிசயத்தை உடையவனே –

யுன்னை அருத்தித்து வந்தோம் –
உன்னை அபேஷித்து வந்தோம்

பறை தருதியாகில்-
நீ புருஷார்த்தத்தை கொடுப்பாயாகில்

திருத் தக்க செல்வமும் சேவகமும் –
பெரிய பிராட்டியாருக்கு தகுதியான
ஸ்வரூப ரூப குண விக்ரஹ விபூதி -விசிஷ்டனாய்
இருக்கிற செல்வத்தையும் வீர சரிதையையும் –

யாம் பாடி-
அதுவே தாரகமான நாம் பாடி –

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
உன்னைப் பிரிந்து பட்ட வ்யசனம் எல்லாம்
நிஸ் சேஷமாக தீர்ந்து
ஆனந்திக்கக் கடவோம் –

போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்றும் –
பள்ளிக் கட்டில் கீழே -என்றும்
சீரிய சிங்காசனத்து இருந்து -என்றும் –
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும்
மாலே ஆலினிலையாய் அருளாய் -என்றும் –
கூடி இருந்து குளிர்ந்து என்றும் –
நீ தாராய் பறை -என்றும்

சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –

1- பிறந்து -2-ஒளித்து -3-வளர்ந்து -4-கஞ்சன் வயிற்றில் நெருப்பென்று இருந்து -5-நெடுமாலாகி -6-வருத்தமும் தீர்ந்து -7-மகிழ்ந்து -ஆகிய ஆகாரங்கள்
கண்ணனுக்கும்
ராமானுஜருக்கும்
திருவாய் மொழிக்கும்
ஈட்டுக்கும் உண்டே

———————

god proposes god disposes mam poses மட்டுமே

ஆச்ரித ரக்ஷணம் திருத்தக்க செல்வம் -திரு உன்னை விரும்ப
திருவாலே வந்த செல்வம் என்றுமாம்-அவனே திருத்தக்க செல்வம் என்றுமாம் -திரு செல்வச் சிறுமீர்களுக்கு தக்கவன் என்றுமாம்

யார் வருத்தம் தீர்ந்து -அவன் காத்து இருந்தது பல ஜென்மங்கள் -உன்னை மகிழ்வித்து நாங்கள் மகிழ்வோம்

ஆச்சார்யர் -ஒருத்தி பிறந்து -ஞான ஜென்மம்-திருமந்திரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து

ஒளித்து வளர ஆதி சேஷன் -ஆயிரம் வாதங்கள் -கலி யுகம் கம்சன்
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் -நித்யம் -அப்பா இருந்தாலும் செய்ய வேண்டும்
350 வருஷங்கள் முன்பு நடந்தது-சாஷாத் ஸ்வாமி நீராடிவிட்டு வர மீண்டும் மீண்டும் எச்சில் துப்ப கோபிக்காமல் நீராட–எய்தவன் இருக்க அம்பு மேல் கோபிக்கவா -உன்னை கருவியாக அந்தப் ரெங்கனே இப்படி ஐந்து தடவை துலா நீராட வைத்தாய் அன்றோ -என்று உபகாரமாக அருளிச் செய்ய -அவன் திருந்தி இவருக்கே கைங்கர்யமாக -அவன் சொத்தை ஆற்றில் போட்டு அம்மா மண்டபம் கட்ட வைத்தானாம் –
உன்னையே அர்த்தித்து வந்தோம் கையில் கனி என்ன கண்ணனைக் காட்டித் தரிலும் உன் மெய்யில் பிறங்கிய சீர் ஒன்றுமே வேண்டுவேன்
அந்த வண்ணானை மன்னிக்க மோக்ஷம் நீர் இருக்க அரங்கன் இடம் கேட்க வேண்டுமோ

————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading