இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-
“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
————
அவதாரிகை –
இவர்களைத் திருக் காப்பு நீக்கி உள்ளே புகுர விட –
ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள் –
முற்பட கிருஷ்ணனை பெண்கள் களவு காண்கிறார்களோ -என்று நினைத்து
காவலாக புறக் கட்டிலே கிடக்கிற ஸ்ரீ நந்த கோபரை எழுப்பு கிறார்கள் –
அநிருத்த ஆழ்வானை அகப்பட களவு காணக் கடவ பெண்கள்
அவன் அழகுக்கும் வாய்த்தலையாய்
சாஷாத் மன்மத -என்கிற கிருஷ்ணனைக் களவு காண சொல்ல வேணுமோ –
நேச நிலைக் கதவம் நீக்கு -என்றார்கள் திரு வாசல் காப்பானை –
அவன் கருந்தாளை யுருவி உள்ளே புக விட்டான் –
ஒருவரை ஒருவர் சென்று எழுப்புகிற போது அங்கே தனித் தனியே பட்டதை
இங்கே எல்லாரும் திரள படுகிறார்கள் –
இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைப் பெற்று (திரு விருத்தம் -97)
அனுபவிக்கிற திரள் இறே உள்ளுத் திரள்
பெறுகைக்குப் படுகிற திரள் –
பெற்று அனுபவிக்கிற ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள்-
அவர்கள் முன்னாக கிருஷ்ணனைப் பெற வேண்டுகையாலே –
அதாவது
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் -(4-6-8 )
கால நல் ஞானத் துறை படிந்து ஆடி (திரு விருத்தம் -93)–என்னுமா போலே –
நல் ஞானம் ஆகிறது –
ப்ராப்ய
ப்ராபகங்கள்-இரண்டும் அவன் என்கை –
விஞ்ஞானம் யதிதம் பிராப்தம் -என்னுமா போலே –
துறை யாகிறது –
முறை தப்பாமே குரு பரம்பரை வழியே பற்றுகை –
த்வய நிஷ்டருக்கு குரு பரம்பரையே பிரதானமாகக் கடவது –
துறை தப்பாத ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –
வேதம் வல்லார்கள் -என்ற இடத்தில் குரு பரம்பரையை நினைத்து
கீழ்ப் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள் –
விண்ணோர் பெருமானில்-
விண்ணோர் ஆகிறவர்கள்-த்வார பாலகர் தொடக்கமாக திவ்ய மஹிஷிகள் ஈறாக உள்ளவர்கள் இறே
திரு வாசல் காப்பாரை அனுமதி கொண்டு உள்ளே புகுந்த அளவிலே
முதல் கட்டிலிலே பிள்ளைக்கு காவலாகக் கிடந்தார் ஸ்ரீ நந்த கோபர் –
கிருஷ்ணனை பெண்கள் களவு காண்பார்கள் என்று நோக்கிக் கிடப்பர் –
அநிருத்தனை அகப்பட களவு காண்கிற பெண்கள்
இவனுடைய சம்பந்தம் கொண்டு அவன் அழகுக்கும் வாய்த்தலையான இவனைப் பெற்றால் விடார்களே
சாஷான் மன்மத -என்கிற கிருஷ்ணனைப் பெற்றால் விடார்கள் என்று
நோக்கிக் கொண்டு கிடக்கிறவரைச் சென்று பற்றினார்கள்
உள்ளுக் கிடக்கிறது வைத்த மா நிதியுமாய் –
தாம் எடுத்த பேராளனுமாய் –
நிதி எடுத்தவருமானால் நோக்காது இரார் இறே –
இப்பாட்டில் கீழ் எழுப்பின கோயில் காப்பான் அனுமதியால்
திருவாசல் காப்பான் உள்ளே புகுர விட
முந்துற ஆச்சார்யனை எழுப்பி
நம்பி மூத்த பிரான் முன்னாக
ஈஸ்வரனை எழுப்புகிறார்கள் –
(இரக்கமே உபாயம் -நிர்ஹேதுகம் -தடுக்காமையே வேண்டுவது –
விசேஷ கடாக்ஷம் -அநந்யார்கர்களுக்கு -அவனையே விரும்புவர்களுக்கு —
தேவதாந்தர உபாயாந்தர உபேயாந்தர சம்பந்த லேசமும் இன்றிக்கே –
வாஸூ தேவ சர்வம் இதி துர்லபம் -உண்ணும் சோறு இத்யாதி
இவை அனைத்தும் ஆச்சார்யர் அபிமானமே -என்று காட்டி அருளி ஆண்டாள் –
அம்பரமே -தண்ணீரே சோறே -அனைத்துமே கண்ணன் -அவனை தந்து அருளும் நந்தகோபன் –
என்னையும் என் உடைமையையும் ஸ்வ கைங்கர்யத்துக்கு உபகரணமாகக் கொண்டு அருள்வாய் -நியாஸ திலகம் –
என்றே பிரார்த்திக்க வேண்டும் -ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –
அவனைக் கொடுத்து அருளும் ஆச்சார்யர் தானே நமக்கு எம்பெருமான் –
இங்கே நந்த கோபனை எம்பெருமான் -என்றே அழைக்கிறார்கள்
யசோதை எம்பெருமாட்டி -ஆறு கால சிறு வண்டே -ஆச்சார்யர் பத்னி புத்ராதிகளும் பூஜ்யர்
ஷட் பதம் -த்வயம் -வண்டு -இரண்டும் ஆச்சார்ய விஷயம் – )
(உதாசீனனாக நம்முள்ளே இருந்து தான் ஏற நாள் பார்த்து இருப்பான் அவன்
ஸ்வ அபிமானத்தால் அளியல் நம் பையல் என்ற ஈஸ்வர அபிமானத்தைக் குழைத்துக் கொண்ட இவனுக்கு
ஆச்சார்ய அபிமானம் தவிர வேறே விரகு இல்லையே
விண்ணோர்கள் -அந்தரங்கர் மூலம் 16-தொடங்கி ஐந்து பாசுரங்கள் -பிராட்டி பர்யந்தம் உண்டே)
(ஆத்ம குணம் -ஆச்சார்ய சம்பந்தம் -மந்த்ரம்- எம்பெருமான் -வைகுண்டம் படிக்கட்டுகள்)
(உம்பர் கோமானே–தேவாதி தேவனே!-குத்தல் பேச்சு -தேவர்களுக்கு மட்டும் கார்யம் செய்து அந்தப்புர மக்களைக் கை விட்டவன் )
(நம்பி மூத்த பிரான் கண்ணன் அவதாரத்துக்கு பொற் கால் இட்டார் –
பொய்கை ஆழ்வார் -ஆழ்வார்களுக்கு பொற் கால் இட்டார்
நாதமுனிகள் ஆச்சார்ய பரம்பரைக்கு பொற் கால் இட்டார்)
கருந்தாளை யுருவித் திரு வாசல் காப்பானும் உள்ளே புகுருங்கோள்-என்று சொல்ல
உள்ளே புக்கவாறே பிள்ளைக்குக் காவலாகப் பெண்கள் களவு காணப் போவர்கள் என்று
நோக்கிக் கிடக்கிற ஸ்ரீ நந்த கோபரை எழுப்புகிறார்கள் –
பேரனான அநிருத்த ஆழ்வானை அகப்படக் களவு காணக் கடவ அவர்கள்
சாஷான் மன்மத மன்மதனாய் அழகுக்கு வாய்த் தலையான இவனை விடுவார்களோ -என்று காத்துக் கொண்டு கிடந்தார் –
(தாஸாம் ஆவிரபூத் சவுரி ஸ்மயமான முகாம் புஜ பீதாம்பர தரஸ் ஸ்ரக்வீ சாஷான் மன்மத மன்மத–மந்த்ர புஷ்பம் நித்ய அனுசந்தான ஸ்லோகம் சொல்கிறோம் )
—————–
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
அம்பரமே தண்ணீரே சோறே –
புடைவையோடு
தண்ணீரோடு
சோறோடு
வாசி அற
வேண்டுவார்க்கு வேண்டுவதெல்லாம் புஷ்கலமாக கொடுக்கை –
ஏவ காரத்தாலே -இதுவோ இவன் கற்றது என்னும்படி கொடுக்கை –
அம்பரமே- தண்ணீரே சோறே
எங்கள் அபிமதம் பெறாமைக்கு லுப்தன் வாசலிலேயே நாங்கள் துவண்டு கூப்பிடுகிறது –
அர்த்திகள் கொண்டு அல்லது தரியாதாப் போலே-
கொடுத்து அல்லது தரியாத உம்முடைய வாசலிலே நாங்கள் வந்தது
எங்கள் குறை தீர்க்கைக்காகவோ –
உம்முடைய குறை தீர்க்கைக்கு நாங்கள் வந்து நிற்க நீர் உறங்குவது என்
தன் பக்கல் கார்யம் கொள்ளுமவர்களை உதார என்று கிருஷ்ணன் சொல்லுவது
உம்முடைய வயிற்றில் பிறப்பால் அன்றோ
பெற்றாலும் அங்கனேயோ என்று பெறா விட்டாலும் தரிக்கலாமவையோ நீர் கொடுப்பது
அர்த்தித்தவர்களுக்கு ரூப சாதனமான வஸ்திரம் –
தாரகமான தண்ணீர் –
போஷகமான சோறு –
வேண்டுவார்க்கு வேண்டுவது எல்லாம் கொடுக்கிற உமக்கு
நாங்கள் வேண்டிற்று எல்லாம் தர வேண்டாவோ –
அம்பரமே என்கிற அவதாரணத்தாலே
ஓர் ஒன்றையோ இவர் கொடுக்கத் தக்கது என்னும் படி இருக்கையும் –
அது தான் புஷ்க யசஸ்ஸூ க்கு கொடுக்கை இன்றிக்கே-
பல அபிசந்தி ரஹிதமாகக் கொடுக்கையும்
கர்த்தவ்யம் என்கிற பிரதிபத்தியோடே -தன் பேறாக ஆன்ரு சம்சயத்தாலே கொடுக்கையும் –
———–
அறம் செய்யும் –
பால அபிசந்தி ரஹிதமாக-ஆன்ரு சம்ச்யத்தாலே கொடுக்கை –
இத்தால்
நாட்டுக்கு தாரகாதிகளைக் கொடுக்கிற நீ -எங்கள் தாரகத்தையும் தாராய் என்கை –
செய்யும்
மஹதா தபஸா ராம -என்று சக்கரவர்தியைப் போலே
அவதாரத்துக்கு அதிருஷ்ட யத்னம் பண்ண வேண்டா இறே-
எடுத்த பேராளன் ஆகையால்
இனி பண்ணுகிறது பிள்ளையினுடைய மங்களார்த்தமாகவும்
விஜயார்த்தமாகவும் அத்தனை -இறே
பெறிலுமாய் இழக்கலு மானவையையோ இப்படி கொடுக்கலாவது –
எங்கள் தாரகாதிகளை தரலாகாதோ
பல கூடி தாரகமானவையோ தரலாவது
எல்லாம் ஒன்றேயான வஸ்துவைத் தரலாகாதோ
ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவா -என்று எல்லாம் கண்ணன் என்று இருக்குமவர்கள் -நாங்கள் –
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
புடவை யோடு தண்ணீரோடு சோற்றோடு வாசியற வேண்டுவார்க்கு வேண்டிற்றுத்
தடை இன்றிக்கே கொடுக்குமவனே என்கிறார்கள்
ஏவகாரத்தாலே இதுவேயோ இவன் கற்றது -என்னும்படி இருக்கை –
அறம் செய்யும்
பலாபி சந்தி ரஹிதமாக ஆந்ரு சம்சயத்தாலே கொடுக்கை —
சக்ரவர்த்தியைப் போலே
மஹதா தபஸா ராம -என்ன வேண்டுவது இல்லையே –
(சாத்விக தானம் லக்ஷணம் கீதையில் -பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் –
பிரயோஜனம் கருதாமல் -கண்ணன் திரு உள்ளம் உகக்கும் என்றே கொடுப்பதே)
(ஸ்ரத்தயா தேயம் அஸ்ரத்தயா தேயம் -தானம் வாங்குபவன் இடமும் ஸ்ரத்தை வைத்து- தானம் கொடுக்கும் பொருள்களில் அஸ்ரத்தை வைத்து அறம் செய்ய வேண்டும் -வேதம் கோஷிக்கும்)
வைத்த மா நிதி –
இவன் எடுத்த பேராளன் இறே –
எங்கள் தாரக த்ரவ்யத்தையும் தாராய் -என்கிறார்கள்
————-
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய் –
எங்களுக்கு தாரக போஷக போக்யங்கள் எல்லாமான கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த ஸ்வாமி-எழுந்திராய் –
வாஸூதேவ சர்வம் இதி
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லா பேறும் தானே யானவன் இறே கிருஷ்ணன் –
எம்பெருமான்-
நாட்டில் பெண்களுக்குத் தானம் கொடுப்பார் இல்லை-தானம் கொள்ளுகைக்கு அதிகாரிகள் அல்லாமையாலே –
வாஸூதேவ சர்வமிதி என்று இருக்கிற எங்களுக்கு-கிருஷ்ணனைத் தரப் புகுகிற நீ
விசேஷித்து எங்கள் நாயகன் அன்றோ –
உணர்ந்து-அவன் அனுமதி பண்ணினபடி தோற்றிக் கிடக்க –
எம்பெருமான்-
எங்களுக்கு கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த ஸ்வாமி யானவனே
எம்பெருமான்
நாட்டில் பெண்களுக்கு தானம் கொடுப்பார் இல்லை கொள்ளுகைக்கு அதிகாரிகள் அல்லாமையாலே
வாஸூதேவஸ் சர்வம் என்று இருக்கிற எங்களுக்கு
கிருஷ்ணனை உபகரிக்கையாலே விசேஷித்து எங்களை எழுதிக் கொண்டவனே
எம்பெருமான்
பெண்களுக்கு கிருஷ்ணனைப் பெற்றுத் தந்தவன் –
ஏகைக பல லாபாயா சர்வ லாபாய கேசவ -என்றும் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்று என்றே –
எல்லாமாய் இருக்குமவர்களுக்கு அவ்வொன்றையும் தாராய்
——-
நந்த கோபாலா
நந்தகோபன் குமரன் என்று உம்முடைய ஆன்ரு சம்சயத்தைக் கொண்டு
உம்முடைய பிள்ளை என்று அன்றோ நாங்கள் ஆசைப்பட்டது –
பெற்றுத் தந்த நீர்
குறையும் தாரீரோ நாங்கள் அனுபவிக்கும் படி –
தாரா பித்ரு க்ருத இதி என்னப் பண்ணீர்-
கிருஷ்ணனையும்
(ஐயர் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டுமே )
பெருமாள் பிராட்டியை உகப்பது
ஆபி ஜாத்தியத்தாலும் (மம ஸூதா)
அழகாலும் (இயம் சீதா)
குணத்தாலும் அல்ல -(ஸஹ தர்ம சாரிணி )
ஐயர் விவாஹம் பண்ணி வைத்தவள் என்றே
எழுந்திராய்
உதாரர்க்கும் உறங்க விரகுண்டோ-
உதாரா என்றது இவர் சம்பந்தம் கொண்டே காணும் மகனுக்கும் –
குணைர் தசரதோ உபம -என்னக் கடவது இறே சக்கரவர்த்தி திருமகனையும் –
ஸர்வேஸ்வரத்வ குணங்களும் பிறந்து படைத்த குணங்களும் எல்லாம் கூடத் தும்பு கூட்டினால் சக்கரவர்தியோடே ஓப்பன் என்னப் போரும் அத்தனை
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
வேண்டுவார்க்கு வேண்டுவது கொடுக்கிறவர் ஆகையாலும் –
அறம் செய்கிறவர் ஆகையாலும்-
எங்களுக்கு ஸ்வாமிகள் ஆகையாலும்
நீர் தாம் கோபாலர் ஆகையாலும்
ஜீவ லோக ரக்ஷணம்
ஸ்வ ஜன ரக்ஷணம் –
ஸ்வ தர்ம ரக்ஷணம் பண்ணாதே உறங்கக் கடவீரோ –
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் –
இவர் மகன் தூரஸ்தன் ஆனாலும் பேர் சொல்ல புடவை வழங்குகிறதும் –
இனிது மறித்து நீரூட்டுகிறதும்
வேண்டு அடிசில் உண்ணும் போதுகளிலே சோறு வாங்கி இடுகிறதும்
இவர் வயிற்றில் பிறப்பால் இறே
ஹித புத்தி இறே பிதாவின் பக்கலில் உள்ளது –
உள்ளே புகுருங்கோள் என்னாதே உணர்ந்து
அனுமதி பண்ணினமை தோற்றக் கிடந்தார் –
அவர் அனுமதியைப் பெற்று
நடுவில் கட்டிலிலே புக்கு யசோதை பிராட்டியை எழுப்புகிறார்கள் –
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்-
ஆத்ம ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும்
தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்
தத்தேதுவான கைங்கர்யத்தையும்
ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி
தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக
கொடா நின்றுள்ள
நமக்கு வகுத்த சேஷியாய்
ஆனந்த நிர்ப்பரனாய்
ஆஸ்ரித ரஷகனான
ஆசார்யனே -நீ உணர வேணும் –
நந்த கோபாலா எழுந்திராய்
நந்த கோபன் குமரன் -என்று உம்முடைய ஆந்ரு சம்சயத்தைக் கண்டு
உம்முடைய பிள்ளை என்று அன்றோ நாங்கள் ஆசைப்பட்டது
(அர்த்த பஞ்சகம் சுருக்கி -ஸ்வ ஞானம் ப்ராபக ஞானம் ப்ராப்ய ஞானம் -மூன்றாக்கி -ப்ராப்யம் ஒன்றாக்குமா போல்)
குணைர் தசரதோபம்-(குணங்களால் தசரதனுக்கு சமம் -பெருமாள் தனது குண சம்பத்து சக்ரவர்த்தியாலேயே வந்தது என்பார் )
கிருஷ்ணனைப் பெற்று தந்த நீர் குறையும் நாங்கள் பெறும்படி பாரீர் -என்கிறார்கள்
ஹித புத்தி பிதாக்கள் பாடே உண்டாகையாலே புகுருங்கோள்-என்றான் இறே
உணர்ந்து அவரும் அனுமதி பண்ணின படி தோற்றக் கிடந்தார் -அவரை விட்டு
உள்ளே புகுந்து யசோதைப் பிராட்டியை எழுப்புகிறார்கள் –
—————-
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்-
பிராட்டி முன்னாக அவனை எழுப்புமா போலே
இவள் முன்னாக ஸ்ரீ நந்த கோபரை எழுப்பாமல் விட்டது என் என்னில்
பிள்ளை மேல் சங்கத்தாலே அணித்தாக உள் கட்டிலே கிடைக்கையாலே
பிற்பட அவளை எழுப்பு கிறார்கள் –
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே-
பெண் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவளே
கொம்பனார்-
கொம்பு -வஞ்சிக் கோடி
அனார் அத்தை அளையவர்கள்-ஒத்தவர்கள்
குல விளக்கே –
இக் குலத்துக்கு மங்கள தீபம் ஆனவளே-
பெண் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே -என்னவுமாம்
கொழுந்தே
பெண்களுக்கு ஒரு குறை வரில்-உன் முகம் அன்றோ வாடுவது
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
பிராட்டியை எழுப்பி அவள் முன்னாக அவன் பக்கலிலே கார்யம் கொள்ளுமா போலே
யசோதைப் பிராட்டியை எழுப்பி
பின்னை ஸ்ரீ நந்தகோபரை எழுப்ப ப்ராப்தமாய் இருக்க –
முற்பட அவரை எழுப்பி பின்னை இவளை எழுப்புவான் என் என்னில்
பிள்ளை பக்கல் உண்டான ஸ்நேஹத்தாலே என் புகுகிறதோ என்னும் பயத்தால் –
கூர் வேல் கொடும் தொழிலன்-என்னும்படி
உருவிப் பிடித்த வேலும் தாமுமாய் புறக் கட்டிலிலே கிடப்பர் ஸ்ரீ நந்தகோபர்
இவள் பிள்ளை பக்கல் வாத்சல்யத்தாலும்
பர்த்ரு சங்கத்தாலும் உள் கட்டிலிலே நடுவே யாய்த்து கிடப்பது –
இவைகள் இடைப் பெண்கள் ஆகையால் கண்டதுக்கு மேற்பட்ட
அடைவு அறிந்து எழுப்புமவர்கள் அல்லரே-
ஆகையால் பிற்பட்ட எழுப்புகிறது
ஸ்ரீ நந்த கோபருடைய படுக்கைத் தலையையும் விடாள்-
பிள்ளையுடைய தொட்டில் காற்கடையையும் விடாள் –
அவரைத் தன் முலையால் அணைக்கைக்கும்
இவர்களுக்கு முலைப் பால் கொடுத்து வளர்க்கைக்கும் நடுவிலே கட்டிலே கிடக்கும்
பிராட்டி சர்வேஸ்வரனையும் விபூதியையும் கை விடாதே இருக்குமா போலே –
இது இறே விபூதி த்வயத்துக்கும்
நிருத்தி த்வயத்துக்கும் விஷயம் -(ஸ்ரீ யதே ஸ்ரியதே
த்ரயாணாம் பரதாதி நாம் ப்ராத்ரூணாம் தேவ தாசய
ராமஸ்ய சமன காந்தா ப்ராணே ப்யோபி கரீ யஸீ —
(மைத்துனன் மார்கள் மூவரும் சீதா பிராட்டியை வணங்க இவள் பெருமாளை ஆஸ்ரயித்து )
உன் திரு (10-10-2 )–
நங்கள் திரு -(இரண்டாம் திருவந்தாதி 56)
திவ்ய மஹிஷீம் அகில ஜெகன் மாதரம்
யஸ்ய காடாஷா லக்ஷணம் –
ஜனன பவன ப்ரீதியா-
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே
இரண்டுக்கும் கடவ அவன் உணர்ந்தால் ஒன்றுக்கும் கடவ நீ உறங்கக் கடவையோ –
வஞ்சிக் கொம்பு போலே இருந்துள்ள ஸ்திரீகளுக்கு எல்லாம் தலையானவளே
கொழுந்தே
பெண்களுக்கு ஒரு குறை வரில் உன் முகம் அன்றோ வாடுவது –
நாரீணாம் உத்தமா என்கிற பதம் பெறும் போது அவள் படி உனக்கு உண்டாக வேண்டாவோ
தன்னை நலிகிற ராக்ஷஸிகளுக்கு பவேயம் சரணம் ஹிவ-என்று அவள் சொன்னால் போலே
ஆர்த்தைகளாய் வந்த எங்களையும் அஞ்சாதே என்ன வேண்டாவோ –
குல விளக்கே
எங்களுக்கும் உன்னுடைய குலத்துக்கும் மங்கள தீபையாய்க் கொண்டு ப்ரகாசகை ஆனவளே-
விளக்கு அந்நிய நிரபேஷமாக பதார்த்த தர்சனத்துக்கும்
தன்னுடைய தர்சனத்துக்கும் ஹேது வாமா போலே –
கொழுந்தே குல விளக்கே
ஆயர் கொழுந்தையும்
ஆய்ப்பாடிக்கு அணி விளக்கையும் –
நீ கொழுந்தும் விளக்குமானால் அனுபவிக்கத் தர வேண்டாவோ –
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
நாங்கள் வரும் தனையும் அன்றோ நீ காப்பது என்கை –
யசோதைப் பிராட்டியை எழுப்பி ஸ்ரீ நந்த கோபரை எழுப்பாமல் ஒழிவான் என் என்னில்-
பிள்ளை மேல் சங்கத்தால் அவனுக்கு அணித்தாயும்
பர்த்ரு சம்ஸ்லேஷத்துக்காக இரண்டுக்கும் நடுவாக உள் காட்டிலே கிடக்கை யாலே
பிற்பட யசோதைப் பிராட்டியை எழுப்புகிறார்கள்
(ரக்ஷணத்துக்கு முதல் அகாரம் -மகாரத்துக்கு உகாரம் அருகில் இருக்க வேண்டுமே -ஆகவே உகாரம் நடுவில்
பெருமாள் சீதா மத்யே ஸூ மத்யமா இளைய பெருமாள் -நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ)
கொம்பனார் -இத்யாதி
நாரீணாம் உத்தம –என்று பெண்களாய்ப் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவனே
கொம்பு அனார்-வஞ்சிக் கொம்பு போன்றவளே –
குல விளக்கே
பெண்களாய்ப் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே -இக் குடிக்கு மங்கள தீபம் என்னவுமாம் –
எம்பெருமானைப் பெற்ற ஸ்திரீகளுக்குள் கொழுந்தே இவள்
அதிதி -பெற்ற அன்றே அழுது–கௌசல்யை–தேவகி–அனுபவம் இவளுக்கு தான் -தெய்வ நங்கை எல்லாம் பெற்றாளே
குல விளக்கே -எங்களுக்கு மங்கள தீபம்–பதார்த்த தன்னுடைய தர்சனம் ஹேது போலே–உன்னையும் கண்ணனையும் கொடுக்க
ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கைத் தர வேண்டாவோ
——–
எம்பெருமாட்டி –
கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த-எங்களுக்கு ஸ்வாமிநி ஆனவளே
எம்பெருமாட்டி –
எங்களுக்கு கிருஷ்ணணைப் பிள்ளையாக பெற்று உபகரித்து
எங்களுக்கு ஸ்வாமி நியானவளே
எம்பெருமாட்டி
நானயோர் வித்யதே பரம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-அந்த மிதுனத்தில் சொல்லுகிறது எல்லாம் இங்கே சொல்லுகிறார்கள் –
கண்ணன் எம்பெருமான் (6-7-1 )-என்று கிருஷ்ணனைச் சொல்லும் பாசுரம் —
எம்பெருமான் நந்த கோபாலா என்று
ஸ்ரீ நந்த கோபரைச் சொல்லக் கடவதானால்-
எம்பெருமாட்டி என்பது இவளை இறே
நாரீணாம் உத்தமைகள் அகப்பட உன் கை பார்த்து இருக்கும் படி அன்றோ உன் வேண்டற்பாடு
கிருஷ்ணன்
நீளா நாயகனாய்
கோபி ஜன வல்லபனாய் இருக்கும் அளவன்றிக்கே-
மண் மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் (பெரிய திருமொழி 10-7-)-என்று
இடைச்சேரியாய் சொல்லும் படி
ஸ்ரீ பூமி வல்லபன் ஆகையால்
பிரதான மஹிஷிகளும் கும்பிடும் படி அன்றோ உன்னுடைய ஏற்றம் இருப்பது –
———-
யசோதாய்
ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்றியே
சஜாதீயை யாகையாலே நோயும் அறியுமவளே –
ஹித காமரான ஸ்ரீ நந்த கோபர் எழுந்து இருக்கச் செய்தேயும்
பிரிய காமையாய் இருக்கிற நீ
கிடக்கக் கடவையோ –
யசோதாய்
சஜாதீயை யாகையாலே
வியதிரேகத்தில் தங்கள் நோவு அறியும் என்கிறார்கள்
யசோதாய்
கிருஷ்ணனும் பெண்களுமான சேர்த்திக்கு உகக்குமவள் என்று இருக்கிறார்கள் இவளை
ஹித காமரான ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்று இறே
பிரிய காமையான நீ –
(அறம் செய்யும் அவன் ஹித புத்தி -இவள் பிரிய காமை )
அஞ்ச யுரப்பாள் யசோதை (நாச்சியார் -3-9 )-என்கிற
இது பற்றாசாகக் கொண்டு நாங்கள் வந்தது –
இவள் பிள்ளையுடைய அருமையாலே ஊர் இத்தனையும் திரிந்து அழிவு செய்து மூலை அடியே திரிந்தாலும்
ஏதேனும் ஒரு படி செய்து இவன் ஸூகமே இருக்க அமையும் என்று
ஒரு நாள் ஒழியாமே தீம்புக்கு பெரு நிலை நிற்கும்
ஊரடைய முறைப்பட்டவாறே ஸ்மிதம் பண்ணிக் கொண்டு செய்தாயோ என்றும்
இங்குத்தை அளவு அறிவோம் என்று துணிகைக்கு உடலாய் இருக்கும் –
இது பற்றாசாக அன்றோ வந்தது
———
அறிவுறாய் –
நீ அறிந்தால் எங்களுக்கு ஒரு குறை உண்டோ -என்கை-
அவள் சம்வதத்தாலே உள்ளே புக்கு-கிருஷ்ணனை எழுப்புகிறார்கள் –
அறிவுறாய்
இவள் அறிய அமையும் -பின்னை தங்களுக்கு ஒரு குறை இல்லை என்று இருக்கிறார்கள் –
ஸ்ரீ நந்த கோபரை -எழுந்திராய் என்றும்
இவளை அறிவுறாய் என்றும் சொல்லுகையாலே
இவள் நெஞ்சில் உணர்த்தி உண்டானால்
நமக்கு அவனைப் பெறலாவது என்று குவாலாக உணர்த்துகிறார்கள் –
அவளுடைய சம்வதம் கொண்டு உள்ளே புக்கு கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
நதி பிரவாஹங்களுக்கு வளைந்து பிழைக்கும் நீர் வஞ்சிக் கொம்பு போலே
சம்சாரிகள் உடைய அபிமானத்துக்கு அனுரூபமாக
தங்களை அமைத்து வைக்கும்
பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய்
பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய்
எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய்
தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி
சகல அதிசய பிரதமான
திருமந்த்ரமே -அறிவுறாய் –
திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை
எம்பெருமாட்டி
கிருஷ்ணனைப் பெற்றுத் தந்து எங்களுக்கு ஸ்வாமிநீ யானவனே –
யசோதா –
கிருஷ்ணனுக்கும் பெண்களுக்கும் உள்ள சேர்த்திக்கு உகக்குமவள் அன்றோ -நீ
அஞ்ச யுரப்பாள் யசோதை -(3-9)என்றது பற்றாசாக அன்றோ நாங்கள் வந்தது
(கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை
அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் –
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்–3-9-)
அறிவுறாய்
நீ அறிந்த அன்று எங்களுக்கு ஒரு குறை யுண்டோ என்கிறார்கள் –
இவர்கள் வந்தது தங்கள் ஆற்றாமை இறே –
உள்ளே புகுருங்கோள் என்று அவள் அனுமதி பண்ண அவள் சம்மானத்தோடே உள்ளே புக்கு
கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்
———–
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் –
பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக
ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க
ஒரு பிரதேச நியதி இல்லாதபடி
ஊடருத்து-விம்ம வளந்த –
இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே
ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –
உலகளந்த
உறங்குகிற பிரஜையை-தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
இருந்ததே குடியாக எல்லார் தலையிலும்
ஊர் எண்ணெய் வார்த்தாப் போலே
திருவடிகளை குளிர வைத்தபடி –
உம்பர் கோமானே –
அச் செயலாலே தேவர்களை எழுதிக் கொண்ட படி –
நித்ய ஸூரிகளை என்னவுமாம்
அதாவது
நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு
காடும் ஓடையும் அளப்பதே
இது ஒரு வாத்சல்யமே -என்று வாத்சல்யத்துக்கு தோற்கை –
உறங்காது எழுந்திராய் –
ஆண்களுமாய்
பிரயோஜனாந்த பரருமாய்
வேணுமோ முகம் கொடுக்கைக்கு –
அநந்ய பிரயோஜனைகளுமாய்
அபலைகளுமானால் ஆகாதோ
எங்களுக்கு முகம் காட்டும் போது சிறுப்பது பருப்பதாக வேணுமோ –
இருந்தபடியே காட்ட அமையாதோ
உன் வாசி அறியாதே
அந்ய பரமான நாட்டுக்கு சுலபமான திருவடிகளை
உன் வாசி அறியும் எங்களுக்கு காட்டல் ஆகாதோ
அம்பரமூடறுத்து
மாதா பிதாக்களுக்கு நான் பரதந்த்ரன் அன்றோ என்று
உனக்கு கண் அழிவு சொல்ல ஒண்ணாத படி அக்குறை தீர்ந்து
அவள் அனுமதி கொண்டு வந்து புகுந்தோம் –
நீ இனி உறங்குகிறது என் என்கிறார்கள்
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே
திருக் கையில் நீர் விழுந்தவாறே ஆகாசம் அவகாசம் அடைய விம்ம வளர்ந்து வரையாதே எல்லார் தலைகளிலும்
திருவடியை வைத்து பூமியை அளந்து கொண்டு தேவ ஜாதிக்கு குடியிருப்பைக் கொடுத்து
இந்த்ராதிகளை எழுதிக் கொண்டவனே –
இரு விசும்பினூடு போய் இத்யாதி -(திரு நெடும் தாண்டகம் )
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே
இத்தால் நிருபாதிக ரக்ஷகன் ஆகையால் ரக்ஷகமே விளைநிராக வளர்ந்த படி
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே
உறங்குகிற பிரஜையைத் தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் திருவடி களை வைத்தபடி –
உம்பர் கோமானே –
இச் செயலால் தேவ ஜாதியை எழுதிக் கொண்டவனே
———–
உறங்காது எழுந்திராய்
எங்களை உறக்கம் எழுப்ப வந்த நீ
உறங்கக் கடவையோ
அழகாய் இருந்ததீ-
இப்படிச் சொல்லவும் எழுந்திரா மையாலே-முந்துற நம்பி மூத்த பிரானை எழுப்பாதே
முறை கேடாக செய்தோம் என்று அவனை எழுப்பு கிறார்கள்-
உறங்காது எழுந்திராய்
ரக்ஷகராய் இருப்பாற்கு உறங்க விரகுண்டோ –
ஆண்களுமாய் பிரயோஜனாந்தர பரர்களாய் மானவர்களுக்கோ கார்யம் செய்யலாவது –
அபலைகளுமாய் அனன்யா பிரயோஜனைகளுமான வர்களுக்கு கார்யம் செய்யலாகாதோ
வரையாதே உகப்பாரையும் யுகவாதாரையும் தீண்டுகிற நீ -ஆசைப்பட்ட எங்களைத் தீண்டல் ஆகாதோ
நீயே அர்த்தியாய் கார்யம் செய்யக் கடவ யுனக்கு நாங்கள் அர்த்திக்கை குற்றமோ –
நீ நிபுணரான இந்த்ராதிகளுக்கோ கார்யம் செய்யலாவது -அநிபுணரான எங்கள் கார்யம் செய்யலாகாதோ
உறங்குவாரை தழுவக் கடவ உனக்கு உணர்ந்து வந்தாரை தழுவல் ஆகாதோ
அவிசேஷஞ்ஞமான விபூதிக்காக உன்னைக் கொடுத்தால் வாசி அறிவார்க்கு உன்னைக் கொடுக்கலாகாதோ –
கழஞ்சு மண்ணை ஆசைப்படாதே உன்னை ஆசைப்பட்டது இழவுக்கு உடலாயத் தாகாதே
உம்பர் கோமானே
நித்ய ஸூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு நிற்கிற இருப்பாகவுமாம் –
நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளையிட்டோ காடும் மோடையும் அளப்பது –
இது ஒரு வாத்சல்யமே -என்று
அவர்களும் தோற்கும் படி இருக்கை-
உறங்காது எழுந்திராய்
சதா பஸ்யந்தி என்று இமை கொட்டில் மூச்சடங்கும் படியான வர்களை படவடித்து-
எங்களை உகந்து
எங்களுக்கு முகம் காட்டாதே உறங்கி எங்களையும் படவடியாதே எழுந்திராய்
உறங்காது எழுந்திராய் –
இங்கு இருக்கவும் அளக்கவும் வேண்டா -அவ்வடிவை அனுபவிக்க அமையும்
உலகு அளந்த இளைப்பாலே உறங்குகிறாய் -என்கிற எங்கள் வயிறு எரிச்சலை தீர்க்க அமையும் —
நடந்த கால்கள் நொந்தவோ -(திருமழிசை )
இப் படி தான் நீண்டு தாவிய அசைவோ -(8-3-)
அன்று இவ் வுலகு அளந்த அசைவே கொல்-(பேயாழ்வார் )
தாளால் உலகு அளந்த அசைவே கொல் (பெரிய திருமொழி )-என்று இறே இவர்கள் வயிறு எரிவது –
உறங்காது எழுந்திராய்
எல்லிப் பகல் என்னாது எப்போதும் (பெரிய திருமொழி ) -என்கிறபடியே
இரா உறக்கமும் இன்றி -பகல் உறக்கமும் இன்றி -பாண்டவர்கள் கார்யம் செய்து திரிந்து –
அது தலைக் கட்டின பின்பும் –
ரிணம் ப்ரவ்ருத்தம் -என்று புண் பட்ட பின்பும் தான் உறங்காதவன் அன்றோ –
அனித்ரஸ் சததம் ராம -என்று கேட்டு இருந்த படி அழகியதாய் இருந்தது –
கோவிந்தா என்ற சொல்லோடே அவள் முன்னே நிற்கப் பெற்றிலோம் –
அவதார பிரயோஜனம் பெற்றிலோம் என்று இருந்தபடிகள் எல்லாம் அறிந்தோம் -இறே
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
உபய விபூதி யோகத்தால் வந்த செருக்கடைய பிரணயிநிகளோடேயோ காட்டுவது –
இப்படி இவர்கள் சொல்லச் செய்தேயும்
அண்ணனை எழுப்பி நம்மை எழுப்பிற்றிலர்கள்-முறை தப்பினார்கள்
எழுந்திருக்கில் நாமும் கூட்டாவுதோம் என்று பேசாதே கிடந்தான் –
ஆக்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா-(உள்ளமும் உள்ளமும் பேசிக்கொள்ளும் )என்றும்
ப்ரேஷி தஜ் ஞாஸ்து கோசலா (நினைப்பதை அறிவார்கள் கோசல குலத்தார் )-என்று
நினைவும் பார்வையும் அறியுமவர்கள் ஆகையால்
க்ரமம் தப்பினோம் ஆகாதே என்று நம்பி மூத்த பிரானை எழுப்புகிறார்கள் –
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்தஉம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-
நிரீஸ்வர வாதம் பண்ணுபவர்களுக்கு
அவகாசம் அறும்படி அபிவிருத்தனாய்
இவ் விபூதியைத் தன் திருவடிகளின் கீழே சேர்த்துக் கொண்ட
நித்ய ஸூரி நிர்வாஹகன் ஆனவனே
சம்சாரிகள் உறக்கம் தீர்க்க அவதரித்த நீ
உறங்காது ஒழிய வேணும்
இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்திராமையாலே
அவனை எழுப்புகைக்காக
நம்பி மூத்த பிரானை எழுப்பு கிறார்கள்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-
என்கிறார்கள் -(பத்து தோறும் உலகு அளந்த சேஷ்டிதம் உண்டே -இரண்டாம் பத்து பாட்டுக்களில் இது )
உம்பர் கோமானே
அச் செயலாலே தேவர்களை எழுதிக் கொண்ட படி –
நித்ய ஸூரிகளை-என்னவுமாம்
ஐயரும் ஆய்ச்சியும் சொல்ல வேண்டாவோ என்ன
பரதந்த்ரன் என்று கண் அழிவு சொல்ல ஒண்ணாது -அவர்களை அனுமதி கொண்டோம் -எழுந்திராய் என்கிறார்கள்
அநந்ய ப்ரயோஜனராய் அணைய வந்தார்க்கு முகம் கொடுக்க ஒண்ணாதோ
ஆண்களுமாய் பிரயோஜனாந்தர பரர்க்கோ கார்யம் செய்யலாவது –
தேவர்களுக்குக் குடியிருப்பைக் கொடுத்த நீ எங்கள் குடியிருப்பை அழிக்கவோ பார்த்தது
உறங்குவாரைத் தழுவக் கடவ உனக்கு உணர்ந்து வந்தவர்களைத் தழுவலாகாதோ –
மண்ணைத் தழுவிய நீ பெண்ணைத் தழுவலாகாதோ அண்ணரை எழுப்பிற்றிலர்களோ என்ன
நம்பி மூத்த பிரானை எழுப்ப மறந்தோம் –
இது ஒரு தப்புப் பிறந்தது என்று நம்பி மூத்த பிரானை எழுப்புகிறார்கள்
————
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா –
பிள்ளை பெருகைக்கு பொற் கால் பொலியப் பிறந்த சீமானே –
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே –
இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்ற
அவரைப் போலே முன் பிறந்து கைங்கர்ய ஸ்ரீ யைப் படைத்தால் –
அவரைப் போல் உறங்காது இருக்கவும் வேண்டாவோ –
பெருமாளும் பிராட்டியும் கண் வளரும் போது புறம்பு மதிளாய் நின்று நோக்கும் அத்தனை இறே அவர்
கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ –
சந்தே சைஸ் சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர்விதை ராமேனாச்வா சீதா கோபியோ ஹரினா ஹ்ருத சேதச -என்கிறபடியே
எங்களையும் அவனையும் பொருந்த விடுகிற உனக்கு உறங்க விரகு உண்டோ
பல தேவா
பல தேவர் என்று திரு நாமம் -பலைகதாமநி
(பொன்னடி சாத்த பிராத்திக்கிறோம் அன்றோ -செம் பொன் கழல் அடி செல்வன் – கீர்த்திமான் ஸூஷேணன் பத்ரசேனன் ருது சம்மர்த்தனன் பத்ரன் –மக்கள் அறுவரைக் கல்லிடை மோத -ஆறு பேருக்குப் பின் இவர் பின் நம் கண்ணன் பாதுகாப்பாக அவதரித்தான் -ஸங்கர்ஷணன் -கர்ப்பத்தில் மாற்றி -இவரே நம்பி மூத்தபிரான் -சென்றால் குடையாம் –திருமாருக்கு அரவு-கௌசல்யா ஸூப்ரஜா ராமா -விஸ்மாமித்ரர் -லஷ்மணனைக் காணாமல் -பாயாக மாறி பெருமாளுக்குப் படுக்கை -உறங்கா வில்லி -பாயை உருவி அவனை எழுப்புகிறாள் -நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய் -மற்ற பாசுரங்கள் ஏல் ஓர் எம்பாவாய் -இங்கு மட்டுமே மாறி வருமே -புத்தாண்டில் மாற்றம் -இங்கு தூங்கினால் நற் செல்வன் மாறி வெறும் செல்வன் ஆகிறான் -)
———–
உம்பியும் நீயும் –
உனக்கு பவ்யமான தம்பியும்-அவனுக்கு பவ்யமான நீயும் –
உறங்கேலோ ரெம்பாவாய்
உறங்காது ஒழிய வேணும்-
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ-
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
உனக்கு பவ்யனான தம்பியும் -அவனுக்கு பவ்யனான நீயும் உறங்காது ஒழிய வேணும் –
அவனும் பிறப்பால் பாரதந்தர்யம் கொண்டாட –
நீ உன் ஸ்வரூபத்தால் பாரதந்தர்யம் கொண்டாட நாங்கள் இழந்தே போம் எத்தனையோ –
திரு வனந்த ஆழ்வானுக்கு பாரதந்தர்யம் ஸ்வரூபம் இறே –
சென்றால் குடையும் -இத்யாதி
உம்பியும் நீயும்
உன்னுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிறவனும் –
அவனுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிற நீயும் –
அவன் பாரதந்தர்யத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும் –
இவன் ஆற்றாமையால் கட்டிக் கொண்டு கிடக்கும் –
புல்கும் அணையாம்-என்று
நாய்ச்சிமாரைப் பிரிந்தால் ஆற்றலாய் இறே இருப்பது –
பிராட்டியைப் பிரிந்து நெடு நாள் இருந்தார் –
இளைய பெருமாளை பிரிந்த பின்பு அமுது செய்திலர்
லஷ்மனேந கதாம் கதிம்-என்று
என் தம்பி போன வழியே நானும் போம் அத்தனை என்று எழுந்து அருளினார்
உம்பியும் நீயும் உறங்கேல்
படுக்கையில் சாய்ந்தார் உறங்கும் அத்தனை போக்கி
படுக்கைக்கு உறக்கம் உண்டோ
அவன் படுக்கையான நீ உணர்ந்து
எங்கள் படுக்கையையும் (அயனம் ஆஸ்ரயம் அன்றோ )உணர்த்தி எங்களுக்குத் தாராய்
பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்(திருமாலை )
உம்பியும் நீயும் உறங்கேல்
இப்போது கிடந்தது உறங்க –
நாங்கள் அர்த்திகளாய் வந்து எழுப்பின பின்பு எழுந்து இராதே
நாங்கள் பட்டது எல்லாம் நீ எங்கள் வாசலிலே பட விறே புகுகிறாய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
நாங்கள் உன்னைக் கால் காட்டுகிற போதே எழுந்து இராதே
பின்னை தனித் தனியே கால் கட்ட இறே நீ புகுகிறது
(ஸ்வரூப நாசம் ஆகுமே பாகவத அபசாரம்
அம்பரீஷன் துர்வாசர் )
இழவிலே-
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தி-என்பார்கள்
ஊடின போது –
தீ முகத்து நாகணை -என்பார்கள்
உகந்த போது –
நாகணை மிசை நம்பிரான்
ஸ்ரீ குஹப் பெருமாள் -மஹா ராஜர் -திருவடி -விபீஷண ஆழ்வான்-எல்லார்க்கும்
இளைய பெருமாள் இறே புருஷகாரம்
ஆன பின்பு அவனையும் எழுப்பி நீயும் எழுந்திராய் என்கிறார்கள் –
செம்பொற் கழல் அடிச் செல்வா பல தேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
சிவந்து
ஸ்ப்ருஹணீயமான
ஸ்வர்ணத்தாலே செய்யப்
வீரக் கழலை உடைய
ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே
திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்
செல்வா பலதேவா –
இப்படி சம்பன்னனான பல தேவனே
உம்பியும் நீயும் உறங்கேல்
உனக்கு பவ்யனான கிருஷ்ணனும்
கிருஷ்ணனுக்கு பவ்யனான நீயும்
உறங்காது ஒழிய வேணும்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
பொற் கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –
பலதேவன் என்று திரு நாமம்-செல்வா பட்டம் –
பலை கதா மநி -(ஆளவந்தார் )
அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்-
இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )
சந்தேசை சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர் விதை –
ராமேண ஆஸ்வாசிதா கோப்ய ஹரிணா ஹ்ருத சேதச -என்கிறபடியே
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ
திருவனந்த ஆழ்வான் இறே தமையனாய்ப் பிறந்தான்
சென்றால் குடையாம் -இத்யாதியாக வேண்டாவோ –
உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –
(நாரங்களுக்கு ஆஸ்ரயம்-நாராயணனே எங்கள் படுக்கை நீ தான் தர வேண்டும் என்கிறார்கள்)
(இடையாளொடும் இளையானொடும் போனான் -இடையில் -உகாரம் -இளையான் -விளையாமல் சர்வவித்த கைங்கர்யம் செய்யும் ஜீவாத்மா)
(கணவன் புண்ணியங்களின் பாதி மனைவிக்கு உண்டு -பாபங்களின் துளியும் அவளுக்குச் சேராது -மனையவின் புண்ணியங்களின் துளியும் அவனுக்குச் சேராது -பாபங்களில் பாதி கணவனுக்கும் சேரும் -அதனாலே BETTER HALF–இரண்டு அடிகளில் ஒவ்வொருவரையும் இப்பாசுரத்தில் அருளிச் செய்து -இரண்டடி வாமனன் கிருத்யமும் அருளிச் செய்துள்ளார்-உத்தமனே சொல்ல வந்தவள் -இவனிடம் பதில் கிடைக்காததால் உம்பர் கோமானே என்று குத்தலாக அருளிச் செய்கிறாள் – தர்மம் அறியா குறும்பனாய் இருக்கிறானே-தன் சரண் தந்திலன் -தானது தந்த எம்பெருமானைக் பற்றுகிறார்கள் —)
—————————————————————
17. அறம் :
அம்பரமே தண்ணீரே சோறே அறம் கண்ணன்
எம்பெருமான் தம்மின் இரக்கமும் — அம்மனோய்!
செம்மை சேர் நற் தருமம் என்றாக செய்த வேள்வி
தன்மையார் நற் பேறும் அஃது.
வஸ்திர தானம், தீர்த்த தானம், அன்ன தானம் என்று வேண்டியவர்களுக்கு அத்தை கொடுத்ததைப் போல்
தாரக போஷக போக்கியம் எம்பெருமான் கண்ணன் என்றிருக்கிற எங்களுக்கு அவனைத் தந்தால் ஆகாதோ?-என்கிறார்கள்.
சாதன தர்மங்களைக் கொண்டு கண்ணனை அடைகையிலும், சித்த தர்மமான கண்ணனைக் கொண்டே அவனை அடைகை உத்தேச்யம்.
அவனைக் கொண்டு அவனை அடையாகிறது, அவனுடைய கிருபை வாத்சல்யத்துக்கு இலக்காகை.
ந சமஸ்ய கஸ்ச்சிது அப் அதிக குதோந்யோ? என்கிற ரீதியில், தனக்குத்தானே பிரதிபந்தியாய்,
தன்னை ஆஸ்ரயித்துள்ள குணங்களுக்கு இடையில் போட்டி இருந்தால், வெல்லுகிற குணம் தயையும், இரக்கமும் ஆம்.
ரக்ஷிக்கும் போது அதற்கு பிரதி பந்தகங்களான புண்ய பாபங்களைத் தொலைத்தே ஸ்வீகரிக்கிறான்
எம்பெருமான் என்பது புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபயிது – என்பதிலிருந்து தெரிகிறது.
அப்படி புண்ய பாபங்களை கழித்தலாவது
ஈஸ்வரன் அவைகளை தன் அஜ்ஞானத்துக்கு விஷயமாக்குகையும் காணாக் கண் வைகையும் என்பர்.
இப்படி கிருபை உயர்ந்து, அவனுடய ஞானத்துக்கு – அஜ்ஞானமாகிற கொத்தை தோஷமன்றோ என்னில்
அநிருஸம்சயமடியாக வருகிற எதுவும் அடிக்கழஞ்சு பெறும் .
ஆக , அதுவே பற்றாசாக சரணாகதியை அனுட்டித்தவர்கள் – செய்த வேள்வியராய், சித்த தர்மம் கை புந்தவாறே,
சாதன தர்மங்கள் பார்த்தியாஜ்யமோ என்றால்? அன்று.
பகவத் ப்ரீதிகாரித்த முக்கோலாச கார்யம் கைங்கர்யம் என்று பகவத் ஆநிருஸம்சயத்துக்கு விஷயமாய்
வர்ண தர்மம்,புருஷ தர்மம் புத்ர தர்மம் ஆகிய
சாமான்ய விசேஷத்தர விசேஷதம தர்மங்களை விடாதே பாலாபிஸந்தி இன்றி, கிருஷ்ணார்ப்பணம் என்கிற அளவிலே
அனுஷ்டித்துப் போர வேண்டுவது அவஸ்யாபேக்ஷித்தம் என்பதே இப்பாசுர ஸ்வாபதேசம்.
எம்பெருமான் நந்த கோபாலன் :
சுள்ளிக்கால் அன்ன அடியார் அவர் தலைவர்
உள்ளம் பெரியதன் போதமுடன் — எள்ளி நமைத்
தள்ளாதே கொள்ளும் தகைமை கொழு கொம்பாய்
வள்ளி மேய பந்தல் கிடத்து.
————————————————
ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் –சூரணை -96-
இந்த இரண்டும் உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –
என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —சூரணை -97-
பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்யா லாபம் ஆத்ம குணத்தாலே –சூரணை -98-
இதில் நான்கையுமே சொன்னவாறு-
அம்பரம் தண்ணீர் சோறு
பரம ஆகாசம் -விரஜை -அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் -ப்ரஹ்ம அனுபவம் –
க்ருபா மாத்ர பிரசன்னாச்சார்யார்
அப்பரமபதத்தை ஊடறுத்தவர் இடைச்சுவர் தள்ளி
ஆசார்யன் கை புகுரவே மற்றது கை யதுவே -பிராப்ய பூமி
தண்ணீரே -விரஜா நதி ஸ்நானம் சூஷ்ம ஒட்டு நீரிலே கழித்து உமி தவிடு இரண்டும் போக்க வேணுமே
அன்னம் ப்ரஹ்மேதி -பரப்ரஹ்மமே அன்னம் -அனுபவிக்கப்படுகிறோம் –
அறம் செய்யும் நந்ததீதி -நம்பிள்ளை -எங்கே வரும் தீ வினைகள் -ப்ரஹ்மானந்தம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று என்றே-
உறங்கா மாலை -சாற்றி அருளுகிறாள்
உம்பியும் நீயும் உறங்கேல்
நந்த கோபன் -ஆச்சார்யன் -அம்பரம் -பரம ஆகாசம் -தண்ணீர் -விரஜா நதி -அன்னம் ப்ரஹ்மேதி வியாஜா நாத் -ப்ரஹ்ம அனுபவம்
எடுத்த பேராளான் -நிதி எடுத்தால் போலே
யசோதை -திரு மந்த்ரம் -ஞாலத்துப் புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை – பெரிய திருமந்தரம் பிரதானம்
கண்ணபிரான் -திரு மந்தார்த்தம் -சர்வ வ்யாபகத்வம் -மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் -அநந்தரம்
ஒண் மிதியில் புனலருவி -என்று அருளிச் செய்தார் இ றே
பலராமன் -திருமந்த்ரார்த்த சாரம் -நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை
பகவத் பாகவத சேஷத்வமும் ஒன்றை ஓன்று பிரியாது என்பதை உணர்த்தவே உம்பியும் நீயும் உறங்கேல்
யஸ் சப்த பர்வ வ்யவதான துங்காம் சேஷத்வ காஷ்டாம் அபஜன்முராரே-பாதுகா சஹச்ரம்
ஸ்வாபதேசம் –
ஆசார்யர் -நந்த கோபாலன் -ஆனந்தம் கொடுத்து
அடுத்து திரு மந்த்ரம் கொம்பனார் மந்த்ரங்கள் எல்லாரையும் ரஷிக்கும் தாய் போலே
குலம் தரும் குல விளக்கு
யசஸ் தரும் யசோதை
திருவிக்கிரம அபதானம் வியாப்தி -மந்த்ரத்தை -அடுத்து ஒண் மிதியில் –
ஸ்வரூப வியாப்தி விக்ரக வியாப்தி மூலம் காட்டி
தாத்பர்யம் பாகவத சேஷத்வம் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
விஷ்வக்சேன -நாயகன் -அம்பரமே பிரம்பின் கீழே வளருவது போலே
வான மா மலை ஜீயர் செம் பொற் கழல் அடி ஸ்ரீ மான் மா முனிகள் பொன்னடிக்கால் ஜீயர்-பொன்னடியாம் செங்கமல போது இவர் தானே-
ஆச்சார்யர் -திருமந்திரம் -மந்திரத்தின் பொருள் -மந்த்ர சாரம் -நால்வருக்கும் இரண்டு அடிகள் வைத்து அருளிச் செய்த பாசுரம்
ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் –ஸ்ரீ வசன பூஷணம் -96-
இந்த இரண்டும் உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –
என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —97-
பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்யா லாபம் ஆத்ம குணத்தாலே -–98-
—————————————————————————————————————————————————-
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply