ஸ்ரீ சுதர்சனாழ்வார் – ஹேதீஶ்வரர் – எல்லா ஆயுதங்களுக்கும் ராஜா அவர். 8,16,32 என்ற எண் வரிசையில் காட்சி அளிக்கிறார்.
சில ஆகமங்களில் 8,16,32 ஆயுதங்களுடன் சக்க்ரத்தாழ்வாரை ப்ரதிஷ்டை செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரங்கத்தில் 32 என்ற எண் கணக்கில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம்.
அங்கு இருக்கும் 32 பேர் சக்கரத்தாழ்வாரின் 32 ஆயுத மூர்த்திகளாக இருக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரும் நித்ய ஸூரிகள், அவர்கள் சுதர்சனாழ்வார் போல் ஆயுத ரூபம் தரித்துப் பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணுகிறார்கள்.
ஆக, ஸ்ரீரங்கத்தில் உள்ள சுதர்சனாழ்வார் மூலவரைச் சுற்றி ஆயுத மூர்த்திகள் உள்ளனர் எனத் தெரிகிறது.
சுதர்சன ஆழ்வார் 8 பூஜங்களுடனும் 8 ஆயுதங்களுடனும் இருக்கின்றார். எல்லா ஆயுதங்களுக்கும் ராஜாவாக இருக்கிறார். அதை காண்பிக்கும் படியாக 8 பூஜங்களில் 8 ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றார். 8 என்பது உபலக்ஷணம் தான்.
32 என்பது ஸம்ப்ரதாயத்தில் விசேஷமானது. வேதம், இதிஹாச புராணங்களில் இதன் சிறப்புக் காணப்படுகிறது.
நடாதூர் அம்மாள் இயற்றிய ஹேதி புங்கவஸ்தவத்தில் 32 வரிகள். ஒவ்வொரு வரியும் ஜய என்கின்ற சப்தத்தில் ஆரம்பமாகின்றது.
இதைப் பின்பற்றி ஸ்வாமி தேசிகனும் சுதர்ஶனாஷ்டகத்தில் 32 முறை உபயோகப்படுத்தி இருக்கின்றார். ஒரு ஶ்லோகத்தின் உடைய கடைசியில் நான்கு முறை ஜய வருகின்றது. 8 ஶ்லோகம் என்பதால் 32 கணக்காகின்றது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
—————————-
ராமாயணத்தில் 18 சர்க்கம் திருப்பு முனையாக இருக்கும்
பால காண்டத்தில் ராமாவதாரம்
அயோத்யா காண்டத்தில் கைகேயி வரம்
ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகை முக்கு அறுபட்டது
கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி வதம்
ஸூ ந்தர காண்டத்தில் திருவடி சீதாப்பிராட்டியைக் காண்பது
யுத்த காண்டத்தில் இந்திரஜித்தை கொல்லும் ரஹஸ்யத்தை விபீஷணன் தெரிவித்தல்
உத்தர காண்டத்தில் வேகவதியின் சாபம்
ஆக அனைத்துமே ராவண வத நோக்குக்கே அமைந்தவை –
——————————-
தமிழ் மெய் எழுத்துகள், ‘பதினெட்டு’
இலக்கியங்கள், ‘பதினெட்டு’
இணையில்லா சித்தர்கள், ‘பதினெட்டு’
குழந்தைகள் பேசும் மழலை மொழிக்கு செவிகொடுக்காத தாயும் உலகில் உண்டோ! குழந்தைகளின் குரலுக்கு இரங்காத ஒரு தாய் உலகில் உண்டோ? அதிலும் பெரும் பாரத நாட்டிற்கே அரசியான கோமகளுக்கு அந்த நிலை வருமா? என்று கவிஞர் கேட்கிறார். பாரதி காலத்தின் கணக்குப்படி பாரத மக்களின் மொழிகள் மொத்தம் பதினெட்டு. இன்றும் அம்மொழிகள் பாரத மக்களால் பேசப்பட்டும், வளர்க்கப் பட்டும் வருகின்றன. பாரத மக்கள் தங்களுடைய பதினெட்டு மொழிகளிலும் பாரத அன்னையைப் புகழ்ந்து, பாராட்டிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பெருமை வேறு எந்த நாட்டிற்கு இருக்கிறது? அன்புடன் வந்து எங்களை ஆண்டு அருள் செய்வாயாக! ஈன்றவளே! உனது உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எங்களைக் காப்பாயாக! என்று மகாகவி பாரதி பாடுவது நம் அனைவரின் உள்ளத்தை உருக்குவதாகும்.
மதலையர் எழுப்பவும் தாய் துயில் வாயோ மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?
குதலை பொழிக்கிரங்கா தொரு தாயோ? கோமகளே! பெரும் பாரதர்க்கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி வேண்டிய வாறுனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்தெமை ஆண்டருள் செய்வாய் ஈன்றவளே! பள்ளி யெழுந்தருளாயே!
என்று பாரதி பாடி பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை உணர்ச்சி பொங்கப் பாடி முடிக்கிறார்.
பழந்தமிழ்ச் சமுதாயத்தில் எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை, எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும், எண் எழுத்து இகழேல் என்ற கூற்றுக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். கணித மேதை ஆரியபட்டரின் கண்டுபிடிப்பான பூச்சியம் ,கணித உலகுக்குக் கிடைத்த பெரிய வரம்.
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்:
1.காமம்:
பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2.குரோதம்:
கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3.லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
4.மதம்:
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5.மாத்ஸர்யம்:
மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6.டம்பம் (வீண் பெருமை):
இது பெரிய அசுர குணத்தை உருவாக்கும்.அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7.அகந்தை:
தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8.சாத்வீகம்:
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9.ராஜஸம்:
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10.தாமஸம்:
அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது. 11.ஞானம்:
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12.மனம்:
நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும். 13.அஞ்ஞானம்:
உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள். 14.கண்:
ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15.காது:
ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16.மூக்கு:
ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17.நாக்கு:
கடுஞ் சொற்கள் பேசக்கூடாது. 18.மெய்:
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.
———–
1 முதல் 9 வரையிலான எண்கள் அராபிய எண்கள் என்று ஐரோப்பியர்கள் சொல்வதை நமது தேச பாடநூல்களிலும் அப்படியே கற்பிக்கின்றோம். ஆனால் அராபிய வரலாற்றாசிரியர்களோ இவற்றை ஹிந்துக்கள் தந்த கொடை என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். ‘ஹிந்தஸா’ என்று இவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள்.
கணிதத்தை பல வகையாகப் பிரித்துள்ளனர்.
வியக்த கணிதம் – கால்குஸ்
அவ்வியக்த கணிதம் (அல்லது)
பீஜ கணிதம் – அல்ஜீப்ரா
க்ஷேத்ர கணிதம் – திரிகோணமிதி
“லீலாவதி சம்ஹிதை” என்ற நூல் நமது முன்னோரின் கணிதப் புலமையை பறைசாற்றும் நூல்.
நமது முன்னோர்கள் பயன்படுத்திய மிகப் பெரிய எண் 1053. இதை கி.மு. 5000 ஆவது ஆண்டிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரேக்கர்களும், ரோமானியர்களும் பயன்படுத்திய மிகப்பெரிய எண் 106. நவீன காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெரிய எண் 1012 தான்.
பத்மம் என்றால் லட்சம்-கோடி, அதாவது 1012. பிரம்மாவின் ஒரு பகல் 432 கோடி மனித ஆண்டுகள். பிரம்மாவின் ஒரு பகலும் ஓர் இரவும் சேர்ந்து 824 x 107 ஆண்டுகள்
நூறு ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் கோடி சங்கம் மஹாசங்கம் பத்மம் என்றாற்போன்ற எண்கள் அலகு எனப்படும்;
சமஸ்க்ருதத்திற்கு பாணினி உருவாக்கிய கட்டமைப்பின் காரணமாக அது இன்று கம்ப்யூட்டருக்கு மிகவும் ஏற்ற ஊடகமாக ஏற்கப்படுகிறது.
பூமி சூரியனை சுற்ற ஆகும் காலத்தை அறிஞர் ஸ்மார்ட் கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாஸ்கராச்சாரியார் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு சொல்லிவிட்டார். (365.258756484 நாட்கள்.) மயம்
ஒரு விநாடி நேரத்தை 33.750 பகுதிகளாகப் பிரித்து அதை ‘த்ருதி’ என்ற நுண்ணிய கால அளவை கணக்கிட்டுள்ளார்கள்.
உலோகவியல்
4,000 ஆண்டுகளுக்கு முன்பே தரமான உருக்கு தயாரானது என்பதற்கு டில்லியில் 10 டன் எடையுள்ள 24 அடி உயரமுள்ள துருப்பிடிக்காத தூண் சாட்சியாக உள்ளது.
2,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன எஃகு உற்பத்திக் கூடம் சென்னிமலை அருகில் கொடுமணல் என்ற ஊரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
1896 வரை உலகத்திலேயே பாரதத்திலிருந்து தான் வைரம் வந்ததாக அமெரிக்க வைர ஆராய்ச்சிக் கழகம் கூறுகிறது.
பேராசிரியர் வில்சன், “அண்மைக் காலத்தில்தான் இங்கிலாந்தில் நாம் இரும்பை உருக்கி வார்க்கும் கலையைக் கையாண்டு வருகிறோம். ஆனால் ஹிந்துக்கள் இரும்பை உருக்குகிற, இணைக்கின்ற மற்றும் எஃகு இரும்பை உருவாக்கிற கலையை மிகப் பழங்காலம் முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கையாண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
———–
தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன்
செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன்.
தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன்.
அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்” என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா” என்றார் தேவசேனாபதி.
சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பியையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.
இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா” என்ற சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறா?” என்றும் வினவினார்.
மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு” என்று.
‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.
மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
மயூரா… ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறாய்?” என்றான் மன்னன்.
மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?” மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.
இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்” என்றான் மன்னன்.
மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.
மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்.”
மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம் வரை பாதையாக அமைத்து விடலாம்” என்றான் மயூரசன்மன்.
சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?” என்றான் மன்னன்.
மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.
பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப் பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்று விடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்து கொண்டே வரும்” என்றான் மயூரசன்மன்.
செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்” என்றான் மன்னன்.
தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே #நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் #திருநறையூரில் நிற்கிறது.
மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!..
———–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய திருவடி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply