ஸ்ரீ: எம்பெருமானாரருளிச் செய்த ஸ்ரீ: ஆளவந்தார் தனியன்
யத் பதாம்போருஹ த்யாந வித்வஸ்தா ஶேஷ கல்மஷ:
வஸ்துதா முபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம்
————
ஸ்ரீமத் பகவத் கீதா ஸாரம்:
இங்கும் 32 ஸ்லோகங்கள் -32 பத்ததி பாதுகா சஹஸ்ரம் -32அதிகாரங்கள் ரஹஸ்ய த்ரயம் –
1) ஸ்வ தர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண: பரம் ப்ரஹ்ம கீதா ஶாஸ்த்ரே ஸமீரித:
பூர்வ ஷட்கம்:–2)
ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே யோக லக்ஷ்யே ஸுஸம்ஸ் க்ருதே
ஆத்மாநுபூதி ஸித்த் யர்த்தே பூர்வ ஷட்கேந சோதிதே–
மத்யம ஷட்கம்:-3)
மத்யமே பகவத் தத்த்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே
ஜ்ஞாந கர்மாபி நிர்வர்த்யோ பக்தி யோக:ப்ரகீர்த்தித:
அந்திம ஷட்கம்:-4)
ப்ரதாந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்தி ரித்யாதி: பூர்வ ஶேஷோந்தி மோதித:
1: அர்ஜுன விஷாத யோகம்:-5)
அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபந்ந முத்திஶ்ய ஶாஸ்த்ர அவதரணம் க்ருதம்
2: ஸாங்க்ய யோகம்:6)
நித்யாத்மா ஸங்க கர்மேஹா கோசரா ஸாங்க்ய யோகதீ:
த்விதீயே ஸ்திததீலக்ஷா ப்ரோக்தா தந் மோஹ ஶாந்தயே
3: கர்ம யோகம்:-7)
அஸக்த்யா லோக ரக்ஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
ஸர்வேஶ்வரே வாந்யஸ் யோக்தா த்ருதீயே கர்ம கார்யதா
4: ஜ்ஞான யோகம்:–8)
ப்ரஸங்காத் ஸ்வ ஸ்வபாவோக்தி: கர்மணோ கர்மதாஸ்ய ச
பேதா:ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே
5 – கர்ம ஸந்யாஸ யோகம்: 9)
கர்மயோகஸ்ய ஸெளகர்யம் ஶைக்ர்யம் காஶ்சந தத்விதா:
ப்ரஹ்ம ஜ்ஞாந ப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே
6 – அத்யாத்ம யோகம்:–10)
யோகாப்யாஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக ஸாதநம்
யோக ஸித்தி:ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட்ட உச்யதே
7 – விஜ்ஞான யோகம்:–11)
ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதி: ஶரணாகதி:
பக்த பேத:ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் ஸப்தம உச்யதே
8 – அப்யாஸ யோகம்:-12)
ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம்
வேத்யோபாதேய பாவாநாம் அஷ்டமே பேத உச்யதே
9 – ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்:-13)
ஸ்வ மாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம்
விஶேஷோ நவமே யோகோ பக்தி ரூப:ப்ரகீர்த்தித:
10 – விபூதி யோகம்:–14)
ஸ்வ கல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதாமதி:
பக்த்யுத் பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா
11 – விஶ்வரூப தர்சனம்:–15)
ஏகாதஶே ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்காரா வலோகநம்
தத்த முக்தம் விதி ப்ராப்த்யோர் பக்த் யேகோபாயதா ததா
12 – ஸ்ரீ பக்தி யோகம்:–16)
பக்தே:ஶ்ரைஷ்ட்ய முபாயோக்தி ரஶக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் ப்ரகாராஸ்த் வதிப்ரீதிர் பக்தே த்வாதஶ உச்யதே
13 – ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:–17)
தேஹ ஸ்வரூப மாத்மாப்தி ஹேது ஆத்ம விஶோதநம்
பந்த ஹேதுர் விவேகஶ் சத்ர யோதஶ உதீர்யதே
14 – குண த்ரய விபாக யோகம்:–18)
குண பந்தவிதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தநம்
கதி த்ரயஸ்வ மூலத்வம் சதுர்த் தஶ உதீர்யதே
15 – ஸ்ரீ புருஷோத்தம யோகம்:–19)
அசிந் மிஶ்ராத் விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத ஶோதித:
16 – தேவாசுர ஸம்பத் விபாக யோகம்:–20)
தேவாஸுர விபாகோக்தி பூர்விகா ஶாஸ்த்ர வஶ்யதா
தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ் தேம்நே ஷோடஶ உச்யதே
17 – ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்:–21)
அஶாஸ்த்ரம் ஆஸுரம் க்ருத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் குணத: ப்ருதக்
லக்ஷணம் ஶாஸ்த்ர ஸித்தஸ்ய த்ரிதா ஸப்தத ஶோதிதம்
18 -ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:–22)
ஈஶ்வரே கர்த்ருதா புத்திஸ் ஸத்வ உபாதேயதா அந்திமே
ஸ்வ கர்ம பரிணாமஶ்ச ஶாஸ்த்ர ஸாரார்த்த உச்யதே
மேல்- 10 ஸ்லோகங்களால் தேறின கருத்துக்களைத் தொகுத்து அருளிச் செய்கிறான்-
23) கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம்
ஜ்ஞாந யோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநி ஸ்திதி:
24) பக்தி யோக: பரைகாந்த ப்ரீத்யா த்யாநாதி ஷூஸ்திதி:
த்ரயாணாமபி யோகாநாம் த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:
25) நித்ய நைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
ஆத்ம த்ருஷ்டேஸ்த்ர யோப்யேதே யோக த்வாரேண ஸாதகா:
26) நிரஸ்த நிகில அஜ்ஞாந: த்ருஷ்ட்வா ஆத்மாநம் பராநுகம்
ப்ரதி லப்ய பராம் பக்திம் தயா ஏவ ஆப்நோதி தத் பதம்
27) பக்தி யோகஸ் ததர்த்தீ சேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
ஆத்மார்த்தீ சேத்த்ர யோப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:
28) ஐகாந்த்யம் பகவத் யேஷாம் ஸமாநமதி காரிணாம்
யாவத் ப்ராப்தி பரார்த்தீ சேத் தத் ஏவ அத்யந்தம் அஶ்நுதே
29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ தத் யாதத்த ஆ த்ம ஜீவந:
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்கஸ் ததேக தீ:
30) பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை:
லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:
31) நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ:
32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத் பதமாப்நுயாத்
தத் ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:
—————-
1) ஸ்வதர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண: பரம் ப்ரஹ்ம கீதாஶாஸ்த்ரே ஸமீரித:
ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும்,
இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
கீதாஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப்பட்டுள்ளான
———–
பூர்வ ஷட்கம்:
2) ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே யோக லக்ஷ்யே ஸுஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே பூர்வஷட்கேந சோதிதே
ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
நன்கு அலங்கரிக்கப்பட்ட,
சம்ஸ்காரம் -பகவத் கைங்கர்ய அர்த்தம் ப்ரீதி அர்த்தம் என்ற எண்ணத்துடன் -த்ரிவித தியாகங்கள் உடன் செய்வதே வைராக்யம்
அதுவே நன்கு ஸம்ஸ்கரிப்பட்ட யோகம்
ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,
யோகம் -சன்னகனம் -சேகரிப்பது உபாயம் த்யானம் சங்கதி யுக்தி -ஐந்து பொருள்கள்
இங்கு உபாயம்
யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
இங்கு யோகம் த்யானம்
அஷ்டாங்க யோகம் -ஆசனம் பிராணாயாமம் போல்வன இங்கு
படித்து கற்று நினைத்து ஆள் மனதில் பதிய வேண்டுமே
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
சோதிதே – விதிக்கப்பட்டன.
———
மத்யம ஷட்கம்:
3) மத்யமே பகவத் தத்த்வ யாதாத்ம்யாவாப்தி ஸித்தயே
ஜ்ஞாந கர்மாபி நிர்வர்த்யோ பக்தி யோக:ப்ரகீர்த்தித:
மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு,
ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
பக்தி யோக: – பக்தி யோகம்,
ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.
பகவத் தத்வம் உள்ள படி அறியவும் பக்தி வேண்டும்
ஞான தர்சன பிராப்தி மூன்று நிலைகளுக்கும் பக்தி வேண்டுமே
இதுவே பரபக்தி பரஞானம் பரமபக்தி ஆகும்
அறிந்தால் தானே அடைய ஆசை வரும்
ப்ரகீர்த்தித்த -நன்றாக -பக்தன் பெருமை -அங்கங்கள் இவற்றை விவரித்து அருளிச் செய்கிறான் அன்றோ
————
அந்திம ஷட்கம்:
4) ப்ரதாந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்தி ரித்யாதி: பூர்வ ஶேஷோந்தி மோதித:
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூல ப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
வ்யக்த-பிரக்ருதியில் தோன்றிய பொருள்கள் –
கர்ம: – கர்ம யோகமும்,
தீ: – ஜ்ஞாந யோகமும்,
பக்தி: – பக்தி யோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வ ஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.
விவேசநம்-பகுத்து அறிவு
த்ரிகம் -பிரித்து
முதல் த்ரிகத்தால் -13-14-15-அத்யாயங்களால் கீழே சொல்லிவற்றின்-தத்வம்- சேஷம்
இரண்டாம் த்ரிகத்தால் -16-17-18- அத்யாயங்களாலால் -கீழே சொல்லிவற்றின்-ஹிதம்- சேஷம்
——–
1: அர்ஜுன விஷாத யோகம்:-5) அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்
அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும்,
உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.
———
2: ஸாங்க்ய யோகம்:6) நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாங்க்யயோகதீ:
த்விதீயேஸ்திததீலக்ஷாப்ரோக்தா தந்மோஹஶாந்தயே
நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோகதீ – ஆத்மஜ்ஞானமும், கர்மயோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.
————-
3: கர்ம யோகம்:-7) அஸக்த்யா லோக ரக்ஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
ஸர்வேஶ்வரே வாந்யஸ் யோக்தா த்ருதீயே கர்ம கார்யதா
லோகரக்ஷாயை – (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில்
அக் கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.
—————
4: ஜ்ஞான யோகம்:–8) ப்ரஸங்காத் ஸ்வ ஸ்வபாவோக்தி: கர்மணோ கர்மதாஸ்ய ச
பேதா:ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே
சதுர்த்தாத்யாயே – நான்காமத்தியாயத்தில்,
கர்மண: அகர்மதா உச்யதே – (ஞானமடங்கிய) கர்மயோகம் ஞானயோகமாகவேயிருத்தல் சொல்லப்படுகிறது;
அஸ்ய பேதா: ச (உச்யதே) – கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன;
ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) – (கர்மயோகத்தில் அடங்கிய) ஞானபாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது;
ப்ரஸங்காத் – (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்கவேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே,
ஸ்வஸ்வபாவோக்தி: – (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.
————–
5 – கர்ம ஸந்யாஸ யோகம்: 9) கர்மயோகஸ்ய ஸெளகர்யம் ஶைக்ர்யம் காஶ்சந தத்விதா:
ப்ரஹ்ம ஜ்ஞாந ப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே
கர்மயோகஸ்ய – கர்மயோகத்தினுடைய,
ஸெளகர்யம் – செயற்கெளிய தன்மையும்,
ஶைக்ர்யம் – விரைவில் பலனளிக்கும் தன்மையும்,
காஶ்சந தத்விதா: – அதற்குறுப்பான சில அங்கங்களும்,
ப்ரஹ்மஜ்ஞாநப்ரகார: ச – ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்,
பஞ்சமாத்யாயே – ஐந்தாமத்தியாயத்தில், உச்யதே – கூறப்படுகிறது.
————–
6 – அத்யாத்ம யோகம்:–10) யோகாப்யாஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக ஸாதநம்
யோக ஸித்தி:ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட்ட உச்யதே
யோகாப்யாஸவிதி: – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும்,
சதுர்த்தா யோகீ – நாலுவகைப்பட்ட யோகிகளும்,
யோக ஸாதநம் – (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும்,
யோக ஸித்தி: – (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தியடையும் என்பதும்,
ஸ்வ யோகஸ்ய பாரம்யம் – தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும்,
ஷஷ்ட்டே – ஆறாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.
—————
7 – விஜ்ஞான யோகம்:
11) ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதி: ஶரணாகதி:
பக்த பேத:ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் ஸப்தம உச்யதே
ஸப்தமே – ஏழாவது அத்தியாயத்தில்,
ஸ்வயாதாத்ம்யம் – (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மைநிலையும்,
ப்ரக்ருத்யா – மூலப்ரக்ருதியினாலே,
அஸ்யதிரோதி: – இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும்,
ஶரணாகதி: – (அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும்,
பக்த பேத: – உபாஸகர்களில் (நாலு) வகையும்,
ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் – (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்,
உச்யதே – கூறப்படுகிறது
—————-
8 – அப்யாஸ யோகம்:
12) ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம்
வேத்யோபாதேய பாவாநாம் அஷ்டமே பேத உச்யதே
ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம் – (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய ஆத்மஸ்வரூபத்தை
அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித்தாமரையைப் பெறவிரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும்,
வேத்யோபாதேயபாவாநாம் – அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின்,
பேத: – வேறுபாடு,
அஷ்டமே – எட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.
——————-
9 – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்:
13) ஸ்வ மாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம்
விஶேஷோ நவமே யோகோ பக்தி ரூப:ப்ரகீர்த்தித:
ஸ்வமாஹாத்ம்யம் – தன்னுடைய பெருமை,
மநுஷ்யத்வே பரத்வம் – மனிதனாய் அவதரிக்கும்போதும் மேன்மையையுடைத்தாயிருக்கை,
மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய),
பக்திரூப: யோக: ச – பக்தியோகம் எனப்படும் உபாஸனம்,
நவமே – ஒன்பதாவது அத்தியாயத்தில்,
ப்ரகீர்த்தித: – நன்றாகச் சொல்லப்பட்டது.
—————-
10 – விபூதி யோகம்:
14) ஸ்வ கல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதாமதி:
பக்த்யுத் பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா
பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.
————–
11 – விஶ்வரூப தர்சனம்:
15) ஏகாதஶே ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்காரா வலோகநம்
தத்த முக்தம் விதி ப்ராப்த்யோர் பக்த் யேகோபாயதா ததா
ஏகாதஶே – பதினோராமத்தியாயத்தில்,
ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் – தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்,
தத்தம் உக்தம் – (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது;
ததா – அவ்வண்ணமே,
விதி ப்ராப்த்யோ – (பரம்பொருளை) அறிவது, (காண்பது), அடைவது ஆகியவை,
பக்த்யேகோபாயதா – பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்),
உக்தம் – சொல்லப்பட்டது
—————
12 – ஸ்ரீ பக்தி யோகம்:
16) பக்தே:ஶ்ரைஷ்ட்ய முபாயோக்தி ரஶக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் ப்ரகாராஸ்த் வதிப்ரீதிர் பக்தே த்வாதஶ உச்யதே
பக்தே:ஶ்ரைஷ்ட்யம் – (ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) பகவதுபாஸனமாகிற பக்தியின் சிறப்பும்,
உபாயோக்தி: – அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும்,
அஶக்தஸ்ய – பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு,
ஆத்மநிஷ்டதா – ஆத்மோபாஸனமும்,
தத் ப்ரகாரா: – கர்ம யோகம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான குணங்களின் வகைகளும்,
பக்தே அதிப்ரீதி: து – தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும்,
த்வாதஶே – பன்னிரண்டாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.
————-
13 – ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:
17) தேஹ ஸ்வரூப மாத்மாப்தி ஹேது ஆத்ம விஶோதநம்
பந்த ஹேதுர் விவேகஶ் சத்ர யோதஶ உதீர்யதே
தேஹஸ்வரூபம் – தேஹத்தின் ஸ்வரூபமும்,
ஆத்மாப்திஹேது: – ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும்,
ஆத்மவிஶோதநம் – ஆத்மாவை ஆராய்ந்தறிதலும்,
பந்தஹேது: – (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும்,
விவேக: ச – (ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தநுஸந்திக்கும் முறையும்,
த்ரயோதஶே – பதிமூன்றாவது அத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப் படுகிறது
—————.
14 – குண த்ரய விபாக யோகம்:
18) குண பந்தவிதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தநம்
கதி த்ரயஸ்வ மூலத்வம் சதுர்த் தஶ உதீர்யதே
குணபந்தவிதா – (ஸத்வம் முதலான மூன்று குணங்கள்) ஸம்ஸார பந்தத்துக்குக் காரணமாகும் முறையும்,
தேஷாம் கர்த்ருத்வம் – அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும்,
தந் நிவர்த்தநம் – அந்த குணங்களை நீக்கும் முறையும்,
கதி த்ரயஸ்வ மூலத்வம் – (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும்
தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும்,
சதுர்த்தஶே – (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப்படுகிறது.
—————-
15 – ஸ்ரீ புருஷோத்தம யோகம்:
19) அசிந் மிஶ்ராத் விஶுத்தாச்ச சேதநாத் புருஷோத்தம:
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத ஶோதித:
அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
அந்ய: – வேறுபட்டவனான,
புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத் தில் சொல்லப்பட்டன.
——————
16 – தேவாசுர ஸம்பத் விபாக யோகம்:
20) தேவாஸுர விபாகோக்தி பூர்விகா ஶாஸ்த்ர வஶ்யதா
தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ் தேம்நே ஷோடஶ உச்யதே
தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ்தேம்நே – (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டாநத்தையும்
பற்றிய அறிவை உறுதிப்படுத்துவதற்காக,
தேவாஸுர விபாக உக்திபூர்விகா – (மனிதர்க்குள்) தேவப் பிரிவு, அஸுரப் பிரிவு என்னும் இரு பிரிவுகள் இருப்பதை
முன்னிட்டுக்கொண்டு,
ஶாஸ்த்ர வஶ்யதா – (மனிதன்) சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை,
ஷோடஶே – (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.
————
17 – ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்:
21) அஶாஸ்த்ரம் ஆஸுரம் க்ருத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் குணத: ப்ருதக்
லக்ஷணம் ஶாஸ்த்ர ஸித்தஸ்ய த்ரிதா ஸப்தத ஶோதிதம்
க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் – ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆஸுரம் – அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது என்றும்),
ஶாஸ்த்ரீயம் – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம்,
குணத: – (ஸத்வரஜஸ்தமோ) குணங்கள் மூன்றையிட்டு,
ப்ருதக் – மூன்று விதமாயிருப்பது என்றும்,
ஶாஸ்த்ர ஸித்தஸ்ய – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான் கர்மங்களுக்கு,
த்ரிதா லக்ஷணம் – “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள்
(தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்),
ஸப்ததஶோதிதம் – பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது.
————
18 -ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:
22) ஈஶ்வரே கர்த்ருதா புத்திஸ் ஸத்வ உபாதேயதா அந்திமே
ஸ்வ கர்ம பரிணாமஶ்ச ஶாஸ்த்ர ஸாரார்த்த உச்யதே
ஈஶ்வரே கர்த்ருதாபுத்தி: – கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும்,
ஸத்வ உபாதேயதா – ஸத்வ குணம் கைக்கொள்ளத் தக்கது என்னும் விஷயமும்,
ஸ்வ கர்மபரிணாம: – (முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும்,
ஶாஸ்த்ரஸாரார்த்த ச – இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகளும்,
அந்திமே – கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.
———-
—————
இங்கும் 32 ஸ்லோகங்கள் -32 பத்ததி பாதுகா சஹஸ்ரம் -32அதிகாரங்கள் ரஹஸ்ய த்ரயம் –
இந்த 10 ஸ்லோகங்களால் தேறின கருத்துக்களைத் தொகுத்து அருளிச் செய்கிறான்-
23) கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம்
ஜ்ஞாந யோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநி ஸ்திதி:
கர்மயோக: – கர்மயோகமாவது,
தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்த யாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில்
இடைவிடாது ஈடுபடுதலே யாகும்.-பல பர்யந்தம் ஸேவை தொண்டு கைங்கர்ய ரூபமாகவே -13 வகைகள் கீழேயே பார்த்தோம் –
ஜ்ஞாந யோக: – ஜ்ஞாந யோகமாவது,
ஜிதஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
பரிஶுத்தாத்மநி ஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலை நிற்றலே யாகும்.
இந்திரியங்களை மனசில் அடக்கி- -கூர்மம் போல் -ஆத்மா இடமே ஈடுபட்டு -திரும்ப திரும்ப அப்யாஸம் -இதன் ஏற்றமும் தாழ்ந்த அவற்றின் தோஷமும் அறிந்து -முழுவதும் அடங்கினால் தான் ஞான யோகம் கைகூடும் -கரணங்களை முழுவதும் அடக்க இயலாதவனுக்கு கர்மயோகம் -திசை திருப்பி ஆத்மாவையே அனுபவிக்க வேண்டுமே -பரிஶுத்தாத்மநி-நிஷ்க்ருஷ்ட ஆத்ம முக்த நிலை –
————
தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந பர்யுபாஸதே—-
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞே நைவோப ஜுஹ்வதி—৷৷4.25৷৷
ஒரு வகைக் கர்ம யோகிகள் தேவர்களைப் பூஜிப்பதாகிய யாகத்தையே விசேஷமாகச் செய்கிறார்கள் -இங்கு தேவதையின் மூர்த்திக்குச் செய்யும் அர்ச்சனாதிகளை சொன்னவாறு -பர் யுபாஸதே -முக்கரணங்களாலும் செய்வதைச் சொன்னவாறு
மற்ற ஒரு வகைக் கர்ம யோகிகள் ப்ரஹ்மமாய் இருக்கும் அக்னியில் யஜ்ஞ சாதனமான ஹவிஸ்ஸை
யஜ்ஞத்திற்கு உரிய உபகரணமான ஸ்ருக் முதலியவைகளால் ஹோமம் செய்வதிலேயே ஊன்றி இருக்கிறார்கள்
மேலே -13-வித கர்ம யோகங்கள் அருளிச் செய்கிறான் -பேதங்கள் –இருவரை பற்றி இங்கு –
திவ்ய மங்கள விக்ரஹம் வைத்து திருவாராதனம் –
ஸ்ரோத்ராதீ நீந்த்ரியாண் யந்யே ஸம்ய மாக்நிஷு ஜுஹ்வதி.—
ஸப்தாதீந் விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி—৷৷4.26৷৷
மற்றும் சில கர்ம யோகிகள் செவி முதலிய இந்திரியங்களை புலன் அடக்கமாகிய அக்னியில் ஹோமம் செய்கிறார்கள் –
வேறு சில கர்ம யோகிகள் சப்தம் முதலான விஷயங்களை இந்திரியங்கள் ஆகிற அக்னியில் ஹோமம் செய்கிறார்கள்
ஸர்வாணீந்த்ரிய கர்மாணி ப்ராண கர்மாணி சாபரே.—
ஆத்ம ஸம்ய மயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாந தீபிதே—৷৷4.27৷৷
மற்றும் சில கர்ம யோகிகள் அறிவாகிய விளக்கால் கொளுத்தப் பெற்ற மன வடக்கம் எனும் நெருப்பில்
இந்திரியங்களின் செயல்கள் அனைத்தையும் பிராணங்களின் செயல்கள் அனைத்தையும் ஹோமம் செய்கிறார்கள்
த்ரவ்யயஜ்ஞாஸ் தபோ யஜ்ஞா யோக யஜ்ஞாஸ் ததாபரே—
ஸ்வாத்யாய ஜ்ஞாந யஜ்ஞாஷ் ச யதய ஸம்ஸித வ்ரதா—-৷৷4.28৷৷
முயற்சியும் உறுதியும் உடைய சில கர்ம யோகிகள் நல் வழியில் சேர்த்த செல்வத்தைக் கொண்டு
தானம் முதலிய நற் செயல்கள் ஆகிய யஜ்ஞங்களைச் செய்வார்கள் –
மற்றும் சிலர் உடலை வருந்திச் செய்யும் தவங்கள் ஆகிய யஜ்ஞங்களைச் செய்வார்கள் –
அது போல் வேறு சிலர் புண்ணிய ஸ்தலம் புண்ணிய தீர்த்தம் முதலியவற்றை அடைதல் ஆகிய யஜ்ஞங்களைச் செய்வார்கள் –
வேறு சிலர் வேத அத்யயனம் செய்தலாகிய யஜ்ஞங்களைச் செய்பவர்களாவும்
வேறு சிலர் வேதத்தின் பொருளை அறிவதாகிய யஜ்ஞங்களைச் செய்பவர்களாயும் உள்ளனர் –
ஐந்து அதிகாரிகள் இதில் -முயற்சி உள்ளவர்கள் -விடா முயற்சி உத்ஸாகத்துடன் இருந்து -மனம் தளராமல் –
அபாநே ஜுஹ்வதி ப்ராண ப்ராணேபாநம் ததாபரே—
ப்ராணா பாநகதீ ருத்த்வா ப்ராணாயாம பராயணா—-৷৷4.29৷৷
அபரே நியதாஹாரா ப்ராணாந் ப்ராணேஷு ஜுஹ்வதி
ஸர்வேப்யேதே யஜ்ஞ விதோ யஜ்ஞக்ஷபித கல்மஷா—-৷৷4.30৷৷
ஸர்வேப்யேதே யஜ்ஞ விதோ யஜ்ஞக்ஷபித கல்மஷா—-13 வித கர்ம யோகிகளுக்கும் -3 அத்யாயம் ஆரம்பம் -நீங்கள் யஜ்ஜ்ங்கள் செய்து தேவர்களுக்கு கொடுக்க-அவர்கள் மழை பொழிய -அதனால் பெரும் உபகரணங்களைக் கொண்டு மீண்டும் தேவர்களுக்கு செய்ய வேண்டும்
இந்த சுழற்சி முன்பே சொல்லப்பட்டது -அத்தை இங்கே நினைவு படுத்துகிறான்
அறிந்தவர்கள் என்றாலே அறிந்து கடைப்பிடிப்பவர்கள் என்றே கொள்ள வேண்டும்-இந்த அடிப்படை அனைவருக்கும் பொது –
———
24) பக்தி யோக: பரைகாந்த ப்ரீத்யா த்யாநாதி ஷூஸ்திதி:
த்ரயாணாமபி யோகாநாம் த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:
பக்தியோக: – பக்தியோகமாவது,
பரைகாந்த ப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
த்யாநாதி ஷூ ஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலை நிற்றலே யாகும்.
த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.
முக் கரணங்களையும் அவன் இடமே ஈடுபடுத்தி-
த்யாநாதி ஆதி -பிராணாயாமம் அர்ச்சனை நாம சங்கீர்த்தனம்
மஹநீய விஷய ப்ரீதியே பக்தி
ஸ்நேஹம் -உயர்ந்தவன் தாழ்ந்தவன் இடம் கொண்ட அன்பு
தசரதன் ராமன் இடம் உள்ள ஸ்நேஹமும் பக்தியும் எனக்கு உண்டு என்றானே திருவடி
செயல்படுதல் -கர்ம -அறிவு -ஞானம் -அன்பு -பக்தி –
த்யானம் அர்ச்சனம் பிரணாமம்-இதி கர்தவ்ய –
அன்பு கலந்த -அநு த்யானம் -சிந்தனைத் தொடர்ச்சி –
காதல் அவா வேட்க்கை அன்பு அபி நிவேசம் -ஸூ ஸூகம் கர்தவ்யம் -ஸ்வயம் ப்ரயோஜன பக்தி
ஷூஸ்திதி-ஆ பிரயாணாதி-பல பர்யந்தம் நிலை நிற்க வேண்டுமே
த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – கர்ம யோகம் செய்ய ஆத்ம பரமாத்ம ஞானமும் உண்டே -வறட்டு த்யானம் இல்லாமல் அன்புடன் செய்ய வேண்டுமே –
பக்திக்கு செயல்பாடுகள் உண்டே -அந்யோன்யம் ஒன்றுக்கு ஓன்று இருக்குமே –
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே -ஸர்வ ரஸ –
————
25) நித்ய நைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
ஆத்ம த்ருஷ்டேஸ்த்ர யோப்யேதே யோக த்வாரேண ஸாதகா:
பராராதந ரூபிணாம் – பரம புருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
நித்ய நைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்,
(த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தி யுண்டு),
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
யோக த்வாரேண – (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
ஆத்ம த்ருஷ்டே – ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு,
ஸாதகா: – உபாயங்களாகின்றன.
பக்தி யோகம் ஆத்ம சாஷாத்காரத்துக்கு சாதகம் ஆகுமோ -ஆத்ம தர்சனத்துக்குப் பின்னே தான் –
பக்தி பிறந்து பரமாத்மா ப்ராப்யம் என்றால் -அது பர பக்தி தசை
ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்து சேஷத்வ பாரதந்த்ர ஆகாரம் உணர சாமான்யமான பக்தி வேண்டுமே அத்தைச் சொல்கிறது இங்கு
நித்ய நைமித்திக கர்மங்கள் -ஸூர்யாதி அந்தர்யாமி யான பர ப்ரஹ்மம் குறித்தே செய்வதாகவே அனுசந்தானம் –
பரிமித பலம் தானே தேவதாந்த்ரங்கள் தர முடியும் -அல்பம் அஸ்திரம் –
பரன் திறம் அன்றி மற்று தெய்வம் இல்லையே -சரீர பூதர்களே –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
ஸாஷாத் ஸப்தமே அவனையே குறிக்கும் -அக்ர நயன அக்னி -பரம ஐஸ்வர்யம் இந்திரன் –
——————-
26) நிரஸ்த நிகில அஜ்ஞாந: த்ருஷ்ட்வா ஆத்மாநம் பராநுகம்
ப்ரதி லப்ய பராம் பக்திம் தயா ஏவ ஆப்நோதி தத் பதம்
நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப் பட்டிருக்கும்,
ஆத்மாநம் – தன் ஸ்வரூபத்தை,
த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
பராம் பக்திம் – பரபக்தியை,
ப்ரதி லப்ய – அடைந்து,
தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நோதி – அடைகிறான்.
அஞ்ஞானம் விலகி -ஆத்ம தர்சனம் -பர பக்தியாலேயே -அது முதிர்ந்து பர ஞானம் பரம பக்தி நிலை வந்த பின்பே ப்ராப்யம்
உபாசகனுக்கு பர பக்திக்கும் பர ஞானத்துக்கும் நெடு காலம் விளம்பம் உண்டே –
பிரபன்னனுக்கு ப்ராப்திக்கு முன்னே ஸித்திக்கும்-அர்ச்சிராதி மார்க்கம் -ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டனுக்கும் இதே போல் ஆகும் –
ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் பூ மணம் ரத்னம் ஒளி போல் -அடியேன் உள்ளான் -உடல் உள்ளான் –
சென்று சென்று பரம் பரமாய் -அன்ன மயம் தொடங்கி மேல் மேல் தாஸ பூத ஸ்வாபாவிக -சேஷ பூதனான இவன் -ஞான ஆனந்த மயன் என்று உணர வேண்டும் -சேஷத்வமே அந்தரங்க ஸ்வரூபம்
———
27) பக்தி யோகஸ் ததர்த்தீ சேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
ஆத்மார்த்தீ சேத்த்ர யோப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:
பக்தியோக: – பக்தி யோகமானது,
ததர்த்தீ சேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தை யளிக்கும்.
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,
ஆத்மார்த்தீ சேத் – ஆத்ம ஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்,
தத் கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்ம மாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.
பிரதிபத்தி வைசிஷ்யாத் –யதோ உபாசனம் ததோ பலம் -கதி த்ர்ய மூலத்வாத்-
மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணுவை ஆராதித்து நான்முகன் ப்ராப்யம் அடைகிறான் –
தன்னையே ஆஹுதியாகக் கொடுத்து ருத்ரன் பதவி பெற்றான்-ப்ரசாதத்தில் இருந்து நான்முகன் கோபத்தில் இருந்து ருத்ரன்
கேவலம் -ஐஸ்வர்ய பகவத் அனுபவம் கலசாமல் ஆத்ம அனுபவம் ஒன்றே -ப்ராப்யமாகவே பகவானைப் பற்றினவன்
—————-
28) ஐகாந்த்யம் பகவத் யேஷாம் ஸமாநமதி காரிணாம்
யாவத் ப்ராப்தி பரார்த்தீ சேத் தத் ஏவ அத்யந்தம் அஶ்நுதே
ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
பகவதி – எம்பெருமானிடம்,
ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
ஸமாநம் – பொதுவானது;
யாவத் ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
பரார்த்தீ சேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரம ப்ராப்யமான பரம புருஷனின் திருவடிகளை
அடைய விரும்பினானாகில்,
தத் ஏவ – அந்தத் திருவடியையே,
அத்யந்தம் – எப்போதும்,
அஶ்நுதே – அடைகிறான்.
(உபாஸக ஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில்,
அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)
யாவத் பிராப்தி -அடைவதற்குள் -ஸூ பாஸ்ரயமான திரு மேனி அவர்கள் மனமும் மாறும் படி வைக்கும் அன்றோ -இங்கு புத்தி மாற வேண்டும்
அடையும் வரையில் -தியானம் பண்ணினால் தான் பேறு என்றுமாம் -இங்கு புத்தி ஸ்திரமாக இருக்க வேண்டும் –
——————
29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ தத் யாதத்த ஆ த்ம ஜீவந:
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்கஸ் ததேக தீ:
பரமைகாந்தீ ஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
தத் யாதத்த ஆ த்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வை யுடையவனாய்,
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும்,
அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
ததேக தீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.
து -கீழ் சொன்னவர்களை விட வியாவ்ருத்தி ஸ்வயம் ப்ரயோஜன பக்தன் -தேவதாந்த்ர பரன் –
ப்ரயோஜனாந்தர பரன் -ஸூய முயற்சியால் பகவத் லாபார்த்தி-அனைவரிலும் ஸ்ரேஷ்டன்
வைப்பும் வாழ்வும் அவனே
தனியேன் வாழ் முதல்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து தாளிணைக் கீழ் வாழ்ச்சி
ஊனில் உயிரில் உணர்வில் -அவனே –
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று
பத்ரு போகத்தை விலைக்கு உறுப்பு ஆக்க மாட்டான் –
தழுவி முழுசி அணைக்க -முக்கரணங்களாலும் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை
கடியேன் கொடியன் நெடிய மால் மாயத்தன் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவனே என்று கிடக்கும் -தத் ஏக தீ -இங்கு
——————-
30) பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை:
லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:
பகவத் த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
அவனை வணங்குவது, துதிப்பது, திரு நாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தி இந்த்ரிய க்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள்
ஆகியவற்றின் செயல்களை உடையவன்.
போற்றி புகழ்ந்து வருவதையே ஸ்துதி கீர்த்தனை இங்கு
இவை எல்லாம் செய்ததாலேயே சத்தை லப்த ஆத்மா
முக்கரணங்களும் ஈடுபட்டு -ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:-பஞ்ச பிரயாணங்கள்
அத்யவசாயம் புத்தி உறுதி -அபிமானம் அஹங்காரம் சித்தம் நினைக்கும் -மனசின் வியாபாரங்கள்
பஞ்ச பிராணங்கள் –
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாத சேவகம் –இத்யாதி -பிரகலாதன்
அக்னியில் பிராமணர் களுக்கு -யோகிகளுக்கு ஹ்ருதயத்தில் -ஸர்வத்ர சம தர்சனருக்கு எங்கும் -நம் போல்வாருக்காகவே அர்ச்சை பிரதிமாஸூ அப்ரபுத்தர்
பாஹ்ய யோ திரிவனே -எண் திசையும் அறிய இயம்புவேன்
வாசித்தும் எழுதியும் பூசித்தும் போது போக்கினேன் தரித்து இருந்தேன் -திருமழிசை ஆழ்வார்
ராக பிராப்தம் அன்றோ -ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்புமே -சஷுஸ் ஸ்ரவா -கட்ச்செவி
காலும் எழா கண்ண நீரும் எழா -ஆடி ஆடி அகம் கரைந்து –
உயிர் முதலாய் வாழ் முதலாய் மகிழ் முதலாய் கொள்கிறானே -மாயா சிரஸ் -நான் இருக்க பெருமாள் இருக்கிறார் -அறிகிறேன் சத்தயா தாரகம்
அன்று எனக்கு பட்டினி நாளே -செல்கின்றது என் நெஞ்சமே -மனமும் கண்ணும் ஓடி அங்கு அணைந்ததே
——————
31) நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ:
நிஜ கர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கைவிட்டு,
ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
குர்யாத் – (பரமை காந்தியான ஜ்ஞாநி) செய்யக் கடவன்;
அபீ: – பயமற்றவனாய்,
தாம் – அந்த உபாயத்வத்தை,
தேவே து – எம்பெருமானிடமே,
ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.
சரம ஸ்லோகார்த்தம்
ப்ரீதியாலேயே தூண்டப்பட்டு-வர்ணாஸ்ரம கர்மங்களை-பக்தி பர்யந்தம் ஆஜ்ஜா ரூபம் -ஆராதன ரூபம் -சிஷ்டாசாரம் – கைங்கர்ய ரூபம் -கர்மம் பரிணாமம் –
வகுத்த ஸ்வாமி -ப்ராப்தம் -செய்கிறான் -ஆசையால் -போஜனத்துக்கு ஷுத்து பசி போல் -உபாயமாக இல்லாமல் -பல அனுபவ யோக்யதா ஆ பாதமாகவே செய்கிறான்
தர்ம ஸ்வரூபம் விட மாட்டான் – பலம் முன்பே விட்டான் உபாய புத்தி விடுகிறான் -பரந்த ரஹஸ்யம் பெரியவாச்சான் பிள்ளை
கிருபை ஜன்யம் என்கிற புத்தி கூடாதே -கிருபையாலேயே தூண்டப்பட்டு செய்கிறான்
பல கரண கருவி உபாயம் -பக்தி என்று நினையான் – தூண்டும் அவனே கொடுக்கிறான் -பல ப்ரதனும் அவனே என்று எண்ணுகிறான்
————
32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத் பதமாப்நுயாத்
தத் ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:
ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
தத் பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நுயாத் – அடைவான்;
இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
தத் ப்ரதாநம் – சேதனனைப் பரமை காந்தி யாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
இதி – இவ்வண்ணமாக,
கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.
நாஸ்திகனாய் இருப்பவனையும் பரம ஏகாந்தியாக்கும் கீதை என்பதே கீதார்த்த சாரம்
அவன் ஆனந்தத்துக்காகவே -ஏகாந்தம் -அத்யந்தம் -முக மலர்த்தியே அனைத்து செயல்களையும் செய்கிறான்
தாஸ்யம் ஏக ஆசை கொண்டவன்
மஹா க்ரம -செங்கண் சிறு சிறிதே விழித்து மேலே மேலே கூட்டிப் போகிறான்
வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே
ஒழிவில் காலம் எல்லாம் வழு விலா அடிமை செய்யப் பெறுவேன் ஆக வேண்டும்
ஸத்வ நிஷ்ட சம் ப்ரதாயம் -பரம்பரா -திரு உள்ளத்துக்கு ஏற்றது -யோக மஹிமை -முமுஷுக்களுக்கு சிறந்த பொக்கிஷம்
நாதனுக்கு நாலாயிரம் அளித்து உள்ளம் கையில் நெல்லிக்கனி போல் ஸ்வரூப ரூப விபூதி குணங்களை கண்டு அவற்றை
மணக்கால் நம்பி மூலம் பெற்ற அர்த்தங்கள் இவையே
——————————-
அத்தியாயங்களின் ஸாரப் பொருள்:
1-2.9 உறவினர்களிடம் தகாத அன்பினாலும், கருணையினாலும், தனக்கு தர்மமான யுத்தத்தை அதர்மம் என
நினைத்துக் கலங்கிச் சரண் அடைந்த அர்ஜுனனைக் குறித்து அவனது மயக்கம் தெளிவடைவதற்காக
ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரம் தொடங்கப்பட்டது.
2 ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவுடையவனாய், கர்ம யோகத்தை அநுஷ்டிப்பவனுக்கு ஸ்திதப்ரஜ்ஞ நிலை எனப்படும்
ஜ்ஞாந யோகம் ஏற்பட்டு, அது நிறைவடைந்தால் ஆத்மா (மனத்தால்) நேரே காணப் படுகிறது.
3 ஜ்ஞாந யோகத்தை அநுஷ்டிக்க ஶக்தி யில்லாதவனும், ஶக்தி யிருந்த போதிலும் சான்றோனாகப் புகழ் பெற்றவனும்,
தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை (செயல் புரியும் தன்மையை) குணங்களிலோ, ஸர்வேஶ்வரனிடமோ சேர்ப்பதாகிற
கர்த்ருத்வ த்யாகத்தைச் செய்து, மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்வதாகிற
(ஞானத்தோடு கூடிய) கர்ம யோகத்தை அநுஷ்டிப்பதாலேயே ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடையலாம்.
4 1.அவதார ரஹஸ்ய ஜ்ஞானம்.
2. ஞானத்தை உள்ளடக்கிய கர்ம யோகம் ஞான யோகமாகவே யுள்ளது.
3. கர்ம யோக ஸ்வரூபம்.
4. அதன் வகைகள்.
5 1.கர்ம யோகம் செய்வதற்கு எளியது; ஜ்ஞாந யோகத்தைக் காட்டிலும் விரைவில் ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற பலனை அளிப்பது.
2. அந்த கர்ம யோகத்தின் அங்கங்கள்.
3. ஶுத்தமான (ஶரீர ஸம்பந்தமற்ற) ஆத்மாக்கள் அனைவரும் ஸமமாயிருப்பவர்கள் என்று காண்பதற்கு உறுப்பான கர்ம யோகியின் நிலை.
6 1-ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைப் பழகும் முறை.
2.ஆத்ம ஸாக்ஷாத்காரம் செய்யும் யோகிகளில் நாலு வகை.
3. அவ் வாத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமாயிருக்கும் அப்யாஸம்(சிந்தநம்), வைராக்யம் முதலானவை.
4. தொடங்கிய யோகம் இடையில் தடைப் பட்டாலும், அடியோடு அழிந்து விடாமல் கால க்ரமத்தில் ஸித்தி யடையும்.
5. ஸர்வேஶ்வரனை விஷயமாகக் கொண்ட பக்தி யோகம் முற்கூறிய ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைக் காட்டிலும் சிறப்புற்றது.
7 -1. பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
2.அது ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் ஜீவர்களுக்கு மறைக்கப் பட்டுள்ளது.
3.பரம புருஷனை ஶரணமடைவதால் அம் மறைவு நீங்கும்.
4.பக்தர்களில் நாலு வகை.
5.இந் நால்வரில் ஞானியின் சிறப்பு.
8 -ஐஶ்வர்யத்தை அல்லது கைவல்யத்தை அல்லது பரம புருஷனை அடைய விரும்புகிறவர்கள் அறிய வேண்டியவைகளும்,
கைக் கொள்ள வேண்டியவைகளும் யாவை என்பதன் விளக்கம்.
(பரமபுருஷனே ப்ராப்யம், ப்ராபகம், தாரக போஷக போக்யங்கள் முதலான எல்லாமாயிருப்பவன் என்று உணர்ந்த ஞானிக்கு
உபாயாநுஷ்டாநம் எதையும் எதிர்ப்பாராமல் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையாலேயே
மோக்ஷம் கிடைக்கிறது என்பது 7-8 அத்தியாயங்களின் பரம ஸாரம்.)
9 (1) எம்பெருமானுடைய பெருமை, (2) மனிதனாயிருக்கும்போதே மேன்மையுடையவனாயிருக்கை,
(3) ஜ்ஞானிகளுக்குள்ள சிறப்பு, (4) பக்தியோக மெனப்படும் உபாஸனம் ஆகியவை விளக்கப்பட்டது.
10 ஸாதந பக்தி உண்டாகி வளர்வதற்காக, தனது கல்யாண குணங்கள் அளவற்றவை என்றும்,
எல்லாப் பொருள்களும் தனக்கு வசப்பட்டவை என்றும் விரிவாக உபதேசிக்கப்பட்டது.
11 (1) தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண் அர்ஜுனனுக்குக் கண்ணனால் கொடுக்கப்பட்டது.
(2) பரம்பொருளை அறிவது, காண்பது, அடைவது ஆகியவை பக்தி ஒன்றையே காரணமாகக் கொண்டவை என்று சொல்லப்பட்டது.
12 (1) ஆத்மாவைப் ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பதை காட்டிலும், பகவானை ப்ராப்யமாக நினைத்து உபாஸிக்கிற பக்தியின் சிறப்பு.
(2) இந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தல்.
(3) பக்தியில் சக்தியில்லாதவன் ஆத்மாவையே உபாஸிக்க வேண்டும்.
(4) கர்மயோகம் அனுஷ்டிப்பவர்கள் கைக்கொள்ள வேண்டிய ஆத்மகுணங்கள்.
13 (1) தேஹத்தின் ஸ்வரூபம், (2) ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயம், (3) ஆத்மாவை ஆராய்ந்து அறிதல்,
(4) ஆத்மாவுக்கு அசித்தோடு தொடர்பு ஏற்படுவதற்குக் காரணம், (5) ஆத்மாவை அசித்திலிருந்து பிரித்து அனுஸந்திக்கும் முறை.
14 (1) ஸத்வம் முதலான மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாகும் முறை.
(2) அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மை.
(3) அந்த குணங்களை நீக்கும் முறை.
(4) ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத் ப்ராப்தி என்னும் மூன்று பலன்களும் எம்பெருமானிடமிருந்தே கிடைக்கின்றன.
15 அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்தஜீவனைக் காட்டிலும், ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப்
பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும், (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும், (அவர்களைத்) தாங்குகையாலும்,
(அவர்களை) உடையவனாயிருக்கையாலும் வேறுபட்டவன் புருஷோத்தமனான நாராயணன்.
16 (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டா நத்தையும் பற்றிய அறிவு உறுதிப்படுவதற்காக,
(மனிதர்களுக்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இருபிரிவுகள் இருப்பதை விளக்கிய பின்
மனிதன் சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மையை விளக்குதல்.
17 (1) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும் அஸுரர்க்குரியது; ஆகையால் பயனற்றது.
(2) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம் ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் மூன்றை யிட்டு மூன்று விதமாய் இருப்பது.
(3) “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள் ஶாஸ்த்ர விஹித கர்மங்களோடு சேர்வதன் மூலம்
(அவற்றை மற்ற கர்மங்களினின்று வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன.
18 (1) கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவு அவசியம்.
(2) ஸத்வகுணம் கைக் கொள்ளத் தக்கது.
(3) முற்கூறிய நினைவுடன் அனுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் மோக்ஷமாகும்.
(4) இந்த ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகள்.
————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply