ஸ்ரீமத் பாகவதம் பிரார்த்தனை ஸ்லோகங்கள்
மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |
யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் | |
ரமாபதி பதாம் போஜ பரிஸ்புரித மானஸம்
ஸேநாபதிம் அஹம் வந்தே விச்வக்ஷேனம் நிரந்தரம்
ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய ஜனனீ ஸர்வ மங்களா!!
ஜனக: சங்கரோ தேவ: தம் வந்தே குஞ்ஜராரனனம்
பகவன் நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ ஸர்வஸ்ய விக்ரஹம்
ஸ்ரீமத் போதேந்த்ர யோகேந்த்ர தேஸீகேந்த்ரம் உபாஸ்மஹே!
ப்ரஹ்லாத நாரத பராஸர புண்டரீக வ்யாஸ அம்பரீஷ ஸுக ஸௌநக பீஷ்ம தால்ப்யான்
ருக்மாங்கத அர்ஜுன வஷிஷ்ட விபீஷனாதீன் புன்யாநிமான் பரம பாகவதான் ஸ்மராமி!!
ஜந்மாத்யஸ்ய யதோன்வயா திதரத ச்சார்தேஷ் ஸ்வபிந்ஞ: ஸ்வராட்
தேநே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதிகவயே முஹ்யந்தி யத்ஷூரய:
தேஜோ வாரி ம்ருதாம் யதா விநிமயோ யத்ர த்ரிஸர்கோ ம்ருஷா
தாம்நா ஸ்வேத ஸதா நிரஸ்த குஹகம் சத்யம் பரம் தீமஹி
தர்ம ப்ரோஜ்ஜித கைதவோ த்ர பரமோ நிர்மத்ஸராநாம் ஸதாம்
வேத்யம் வாஸ்தவ மத்ர வஸ்து ஸிவதம் தாபத்ர யோன்மூலனம்
ஸ்ரீமத் பாகவதே மஹா முனிக்ருதே கிம் வா பரைரீஸ்வர:
ஸத்யோ ஹ்ருத் ய வ்ருத்யதே (அ)த்ரக்ருதிபி: ஶூஶ்ரூஷிபி ஸ்தத்க்ஷ்ணாத்
நிகம கல்பதோர் களிதம் பலம் ஸுகமுகா தம்ருத த்ரவஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸமாலயம் முஹுரஹோ ரஸிகா புவிபாவுகா:
யம் பிரவ்ரஜந்த மநுபேத மபேத க்ருத்யம் த்வைபாயனோ விரஹகாதர ஆஜுஹாவ
புத்ரேதி தன்மய தயா தரவோ பிநேது ஸ்தம் சர்வ பூதஹ்ருதயம் முநிமானதோஸ்மி!!
ய:ஸ்வாது பாவ மகில ஸ்ருதிசாரம் ஏகமத்யாத்ம தீப மதி திதீர்ஷதாம் தமோந்தம்
ஸம்ஸாரிணாம் கருணயா(ஆ)ஹ புராண குஹ்யம் தம் வ்யாஸ ஶூநும் உபயாமி குரூம் முனீநாம்
நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்
கிருஷ்ணாய வாசு தேவாய தேவகி நந்தநாய ச
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:
நம: பங்கஜ நாபாய நம : பங்கஜ மாலினே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே
ஸ்ரீமத் பாகவதாக்யோ யம் பிரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவஹி
ஸ்வீக்ருதோ ஸி மயாநாத முக்தை யர்தம் பவசாகரே
யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதி கஸு மதுரம் முக்தி பாஜாம் நிவாஸோ
பக்தாநாம் காம வர்ஷத்யுதரு கிஸலயம் நாததே பாதமூலம்
நித்யம் சித்தஸ்திதம் மே பவனபுரபதே க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ
ஹ்ருத்வா நிஸ்ஸேஷ தாபான் பிரதிஷது பரமானந்த ஸந்தோஹ லக்ஷ்மீ
நாம சங்கீர்த்தனம் யஸ்ய சர்வ பாப ப்ரநாஸநம்
ப்ரணாமோ துக்க ஸமனஸ் தம் நமாமி ஹரிம் பரம்!!
ஆதவ் தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவித அபஹரணம்
கோவர்த்தன உத்தாரணம்
கம்ச சேதன கௌரவாதி ஹனனம்
குந்தி ஸூதா பாலனம்
ஏதத் பாகவத புராண கதிதம்
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்
ஸ்ரீ நாரதர் ஸ்ரீ வேத வியாசருக்கு உபதேசம் -சதுஸ் ஸ்லோகங்கள் —
ஸ்கந்தம் -2-அத்யாயம் -9-ஸ்லோகங்கள் –33-தொடங்கி -36-வரை
இவற்றை விளக்கியே முழு ஸ்ரீமத் பாகவதமும்
கிருஷ்னே ஸ்வ தமோபாகதே -தர்ம ஞானதிபி ஸஹ
கலவ் நஷ்ட த்ர்சம் ஏச புராணர்கோ துணோதித –ஸ்ரீ மத்ஸ்ய புராண ஸ்லோகம்
ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைச்சோதிக்கு எழுந்த அருளின பின்பு -அஞ்ஞான அந்தகாரத்தில் இருக்கும்
கலியுக மக்களுக்காகவே ஸ்ரீமத் பாகவத்துக்குள்ளே உறைந்துள்ளான்
சர்க்கஸ் ச பிரதி சர்க்கஸ் ச வம்சோ மன்வந்தராணி ச
வம்சய அநு சரிதஸ் ச ஐவ புராணம் பஞ்ச லக்ஷணம்
ஸ்ருஷ்ட்டி -சம்ஹாரம் -வம்சாவளி -மன்வந்தரங்கள் -பிரதான அரசர்களின் நடவடிக்கை -ஆகிய
ஐந்தும் உள்ளவையே புராணம் எனப்படும்
வைஷ்ணவம் நாரதியஞ்ச தத பாகவதம் கருடஞ்ச தத் பத்மம் வராஹம் -ஸூப தர்சனே சாத்விகநி புராணாநி விஜிநேயாநி ஸூபாநி வை
ப்ரஹ்மாண்டம் ப்ரஹ்ம வைவர்த்தம் மார்க்கண்டேயம் ததைவ ச பவிஷ்யம் வாமனம் ப்ரஹ்மம் ரஜஸாநி நிபோதமே
மத்ஸ்யம் கூர்மம் தத் லிங்கம் ஸ்கந்தம் ததைவ ச அக்நேயம் சதேதாநி தமஸாநி நிபோதமே
யத்ர அதிக்ரித்ய காயத்ரீம் வர்ணியதே தர்ம விஸ்தார
விருத்தாசுர வதோபேத மத் பாகவதம் இஷ்யதே
லிகித்வா தச் ச யோ தத்யாத் தேமஸி ம்ஹாசம் அந்விதம்
ப்ரவ்ஷ்ட தபத்யாம் பவ்ர்நாம் ஆஸ்யா ம ச யாதி பரமாம் கதிம்
அஷ்ட தச சஹஸ்ராணி புராணம் தத் ப்ரகீர்த்திதம் -ஸ்ரீ மத்ஸ்ய புராணம் -(53.20-22),
இந்த ஸ்ரீமத் பாகவதத்தை எழுத்து சிம்ஹாசனத்தில் வைத்து புரட்டாசி மாச பவ்ரணமி அன்று
தானம் செய்பவர் பரம புருஷார்த்தம் அடைவார்கள்
அர்த்தோயம் ப்ரஹ்ம ஸூத்ரணம் பாரத அர்த்த விநிர்ணய காயத்ரி பாஷ்ய ரூபோசவ்
வேதார்த்த பரிப்ரும்ஹித புராணம் சம ரூப சாஷாத் பாகவதோதிதா
துவாதச ஸ்கந்த யோக்தோயம் சத விச்சேத சம்யுத கிரந்தோ
அஷ்டா தச சஹஸ்ரா ஸ்ரீ மத் பாகவதபிதம் — ஸ்ரீ கருட புராணம் –ஸ்ரீ ஹரி பக்தி -விலாசம் –10.394-395:
ப்ரஹ்ம சூத்ர சாரம் -மஹா பாரத சாரம் -காயத்ரி மந்த்ர வியாக்யானம் –
வேதார்த்த நிர்ணயம் -மிக உயர்ந்த புராண ஸ்ரேஷ்டம்-
பரம காருணிகனான ஸூஹ்ருத் தானே ஸ்ரீ மத் பாகவதமாக திரு அவதாரம் –
சேது -சம்சாரம் கடக்க தானே அணையாக –
முதல் இரண்டு ஸ்கந்தங்கள் திருவடிகள்
அடுத்த இரண்டும் திருத் தொடைகள்
ஐந்தாவது ஸ்கந்தம் திரு நாபி
ஆறாவது ஸ்கந்தம் திரு மார்பு
ஏழாவதும் எட்டாவதும் திருக்கைகள்
ஒன்பதாவது ஸ்கந்தம் திருக்கழுத்து
பத்தாவது ஸ்கந்தம் திரு முகராவிந்தம்
அடுத்த ஸ்கந்தம் -லலாட பட்டகம்
இறுதி ஸ்கந்தம் -திரு அபிஷேகம் –ஸ்ரீ பத்ம புராணம்
அஹம் வேத்மி ஸூகோ வேத்தி வியாஸோ வேத்தி ந வேத்தி வ
பக்த்யா பாகவதம் க்ராஹ்யம் ந புத்தயா ந ச திகயா–ருத்ர வசனம் –
நான் அறிவேன் -ஸூகர் அறிவார் -வியாசர் அறிவாரோ அறியாரோ என்னும் படி இருக்கும்
பக்தி ஒன்றாலே பாகவதர்கள் அறிவார்கள் -கேவல ஞானத்தாலோ-வியாக்கியானங்களைப் படித்தோ அறிய முடியாதே
ஸ்வயம்பூர் நாரத சம்பு குமார கபிலோ மனு ப்ரஹலாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாசகிர் வயம் –
நாரதர் -சம்பு -வையாசகி என்னும் ஸூக தேவர் -மூவரும் இறையடியாக பிருந்தாவன மதுரா ரசம் பருகினார்கள்
ஸூக தேவர் -பிராட்டி உடைய கிளி ஸ்வரூபம்
நாரதர் -ராச லீலை அனுபவித்து -கோபி ஸ்வரூபம் –
சம்பு -ராச லீலை அனுபவித்து -கோபி ஸ்வரூபம்
———————————–
கலி யுகம் ஆரம்பம் -2:27a.m. on February 18th in the year 3102 B.C-
ஸ்ரீ கிருஷ்ணர் -125-வர்ஷங்களும் -4-மாதங்களும் இங்கு இருந்து அருளி தன்னுடைச் சோதி எழுந்து அருளிய பின்பு
—————————–
ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஜென்மாதி அஸ்ய யதா அன்வயத் இதரச அர்த்தேசு அபிஜன ஸ்வராட்
தேந ப்ரஹ்ம ஹ்ருதய ய ஆதி காவ்யே முக்யந்தி யத் ஸூரா தேஜா வரி ம்ருதம் யதா வினிமய
யத்ர த்ரி சர்க்க அமர்ச ஸ்வேந சதா நிரஸ்த குஹ்யாம் சத்யம் பரம் தீமஹி –1-1-1-
———————————————–
ஸ்ரீ கிருஷ்ணன் திருஅவதாரம்–– ஸ்ரீமத் பாகவத புராணம் -10 வது ஸ்கந்தம் – அத்தியாயம் 3 – ஸ்லோகம் 9,10
தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர் புஜம் ஶங்க கதார் யுதாயுதம் |
ஸ்ரீவத்ஸ லக்ஷ்மம் களஶோபி கௌஸ்துபம் பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம் | |
மஹார்ஹ வைதூர்ய கிரீட குண்டல த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ர குந்தளம் |
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபிர் விரோசமாநம் வஸுதேவ ஐக்ஷத” | |
——
ஸ்ரீ கிருஷ்ண பகவான் எங்கும் எதிலும் இருப்பவன் என்ற தத்துவத்தை முதலில் உணர்ந்தவர்கள், பகவான் மேல் எளிமையான பக்தி கொண்டிருந்த கோபிகைகளும், கோபாலர்களும் தான். எனவே தான் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் தெரிந்தான். பார்க்கும் பொருள் எல்லாவற்றிலும் இருப்பவன் அவனே என்ற தத்துவம். காணாமல் போன கோபாலர்களுக்காக அவர்கள் வடிவில் ஒவ்வொரு வீட்டிற்கும் கிருஷ்ணனே சென்றான்
இது, எல்லாம் அவன் வடிவமே என்ற அரும் பொருள். இந்த இரண்டும் அவர்களுக்கு அல்லவா கிடைத்தது. அதனால்தான் சுகபிரம்ம ரிஷி, பாகவதத்தில் வரும் கோபிகைகளின் கீதத்தினை மிகமிக உயர்ந்தது என்கிறார். அதை பரீட்ஷத் மகாராஜாவுக்கு உபதேசமும் செய்தார். மகரிஷிகளும், மகான்களும் போற்றியதும்; மகத்தான பலனைத் தரக்கூடியது கோபிகா கீதம்.
கோபிகா கீதை -19-கொண்டது -கடைசி ஸ்லோகம் வேறே விருத்தம்
மற்றவை -ஒவ்வொரு அடியிலும் -பாதத்திலும் இரண்டாம் எழுதும் பெரும்பாலும் ஒன்றாகவே இருப்பதாகக் காண்கிறோம்
அவ்விதமே சில ஸ்லோகங்களில் ஒவ்வொரு அடியில் உள்ள முதல் எழுத்தும் aஏழாம் எழுத்தும் ஒன்றாகவே இருப்பதையும் காண்கிறோம்
இது ஒரு சித்ர காவ்யம்
நான்கு கீதையாலும் ஒரே கருத்தையே சொல்லும்
பகவத் கீதை தத்வ த்ரய விவரணம்
அநு கீதை –தேஹ யாத்ரை விவரணம் ஆத்ம உஜ்ஜீவனம்
உத்தவ கீதை–ஆத்ம ப்ரபாவம -பக்தி பிரபாவம்
கோபிகா கீதை -ஈஸ்வர பிரபாவம்
——–
ஜயதிதே அதிகம் கிருஷ்ண ஜன்மனாவ்ரஜ:
ஸ்ரயத இந்திரா கிருஷ்ண ஸஸ்வதத்ர ஹி
தயித த்ருஸ்யதாம் கிருஷ்ண திக்ஷீதாவகா
த்வயித்ருதாஸவ: கிருஷ்ணத்வாம விசின்வதே
வ்ரஜ:–கோக்குலமானது
தே –உன்னுடைய
ஜன்மனா-அவதாரத்தால்
அதிகம்–மிகவும்
ஜயதி–மேன்மையுடன் விளங்குகிறது
ஹி –எக் காரணத்தால்
அத்ர –இங்கு
இந்திரா–லஷ்மி யானவள்
ஸஸ்வத்-எக்காலத்திலும் ஒரு நாளும் மாறாமல்
ஸ்ரயதே –வாஸம் செய்கின்றாளோ –அக் காரணத்தாலேயே
தயித –காதலனே
தாவகா–உன்னைச் சேர்ந்தவர்கள் –
நாங்களோ என்றால்
த்வயி–உன்னிடத்தில் -உனக்காகவே
த்ருதாஸவ:–தரிக்கப் பட்ட பிராணனை யுடையவர்களாய்
திக்ஷீ–திக்கு களில்
த்வாம் -உன்னை
விசின்வதே -தேடுகிறோம்
த்ருஸ்யதே –எங்களுக்குக் காணப் பட வேண்டும்
பொருள்: ஓ கிருஷ்ணா! தாங்கள் இங்கு பிறந்ததால் ஸ்ரீ மகாலட்சுமி எங்களுடைய இந்த இடைச்சேரியில் நித்யவாசம் செய்கிறாள். இந்த கோகுலம் வைகுண்டத்தை விட அதிகமாக ஜொலிக்கிறது. உம்மிடம் உயிரை வைத்து நாநா திசைகளிலும் தேடிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்க்க வேண்டும்.
அதிகம் -முன்பை விட அதிகம் -எல்லாவற்றையும் விட அதிகம் -அவதரித்த மதுரையை விட அதிகம் -ஸ்ரீ வைகுண்டத்தை விட அதிகம் –
செல்வச் சிறுமீர்காள் -இங்கு உள்ள செல்வம் அங்கு கூட இல்லாததால் அன்றோ வைதிகச் சிறுவர்களை அங்குக் கொண்டு சென்று கண்ணன் யுடைய திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்க பிராட்டிமார் செய்த லீலைகளை அறிவோம் –
இந்திரா ஸஸ்வத் ஸ்ரயத–ஸ்ரீ வைகுண்டத்தை விட செல்வம் மிக்கு இருப்பதால் இங்கேயே நீடித்து நித்ய வாஸம் செய்து இருக்கிறாள்
அங்கு தான் ஒருத்தியே -இங்கு தானே செல்வச் சிறுமியர்கள் கோபிகள் பலர் உண்டு -எப்போது தனக்கு அவசரம் கிடைக்கும் என்று எப்போதுமே ஆஸ்ரயித்து இங்கு தானே ஸர்வ காலமும் நித்ய வாஸம் செய்து இருப்பாள் –ஸ்ரயதே -ஆத்மநே பதத்தின் கருத்து -ஆஸ்ரய பலன் தனக்கேயாக
2. சரதுதாஸயே கிருஷ்ண ஸாதுஜாதஸத்
ஸரஸிஜோதா க்ருஷ்ண ஸ்ரீமுஷா த்ருஸா:
ஸுரதநாத தே கிருஷ்ண அஸுல்க தாஸிகா
வரத நிக்நதோ க்ருஷ்ண கே ஹகிம்வத:
ஹே ஸுரதநாத –ஸம்போகத்தை வளர்ப்பவனே
வரத-அபீஷ்ட வரங்களை எல்லாம் அளித்து அருள்பவனே
சரதுதாஸயே -சரத் காலத்திலுள்ள தாமரை ஓடையில்
ஸாது ஜாத ஸத்-நன்கு உண்டான அழகிய
ஸரஸிஜோதர –தாமரை மலரின் உள் இதழினுடைய
ஸ்ரீமுஷா–சோபையைத் திருடுகின்ற
த்ருஸா: தே -கண்ணால் உனக்கு
அஸுல்க தாஸிகா–கூலி வாங்காமல் அடிமைப்பட்ட எங்களை
தே ஸுல்க தாஸிகா-என்றும் கொண்டு உனது சவுந்தர்யமாகிய மூலத்துக்குத் தாஸ்யைகளான எங்களை என்றுமாம்
நிக்நதோ தே –கொல்லுகின்ற உனக்கு
இஹ -இந்த உலகத்தில்
ந கிம் வத–இது வதமாக ஆகவில்லையா -கண் அழகால் வதம் செய்வது வதமல்லை என்று திரு உள்ளமா
உனது கண்ணால் அபஹரித்த எங்கள் பிராணனைத் திருப்பிக் கொடுப்பதற்காகவும்
எங்களை கடாக்ஷித்து அருளுவதற்காகவும் நீ புலப்படுaவாயாக என்று வேண்டிக் கொள்கிறார்கள்
பொருள்: சம்போக பதியான ஸ்ரீகிருஷ்ணா, சரத்காலத்து ஓடையில் தாமரைப் பூக்கள் அழகாக மலர்ந்துள்ளன. அந்த மலரின் நடுவிலுள்ள ஸ்ரீயை (லட்சுமியை) நோக்குகிறாய். அதே கண்களினால் வேலைக்காரிகளான எங்களைக் கொல்வதானது வதமல்லவா கிருஷ்ணா?
ஸூரத நாத –கலந்து களிக்க ஆசைப்பட்ட எங்களுக்கு கலவி கிடைக்காமல் -நடுவில் மரணம் உண்டாவதே
த்ருஸா ஸூரத நாத–திருக்கண் கடாக்ஷத்தாலே ஸம்போக ஸூகத்தை அளிக்கிறாய்
கடாக்ஷங்களாலே ஸூரதத்தை யாசிப்பவனே என்றுமாம்
நீ யாசித்த படியாலேயே எங்களுக்கும் ஸம்ஸ்லேஷ ஆசை உண்டாயிற்று
இஹ -இந்த புண்ய ஷேத்ரத்தில் ஜன ஹத்தி செய்து அப கீர்த்தியை ஸம்பாதித்துக் கொள்கிறாயே –
———-
3.விஷஜலா சயாத் கிருஷ்ண வ்யாள ராக்ஷஸாத
வர்ஷமாருதாத் க்ருஷ்ண வைத்யு தானலாத்
வ்ருஷமயாத் மஜாத் க்ருஷ்ண விஸ்வதோ பயாத்
வ்ருஷப தே வயம் க்ருஷ்ண ரக்ஷிதா முஹு
வ்ருஷப–ஸ்ரேஷ்டனே
விஷஜலாசயாத் -விஷமான காளிய மடுவில் இருந்தும்
விஷ ஜல அப்யயாத் -பாட பேதத்தில் -விஷமான காளிய மடுவில் இருந்து உண்டான நாஸத்தில் இருந்து
கிருஷ்ண
வ்யாள ராக்ஷஸாத் –மலைப் பாம்பு உருக் கொண்ட அகாசூரனிடம் இருந்தும்
வர்ஷ மாருதாத் -பெரு மழையில் இருந்தும்
க்ருஷ்ண
வைத்யுத அனலாத்-இடியில் இருந்தும் நெருப்பில் இருந்தும்
வ்ருஷ மயாத்மஜாத் -அரிஷ்டாசூரனிடம் இருந்தும் மயனின் புதல்வனான வ்யோமாசூரனிடமிருந்தும்
க்ருஷ்ண
விஸ்வதோ பயாத்-மற்றும் பல பயங்களில் இருந்தும்
முஹு-அடிக்கடி
தே வயம் –அந்த நாங்கள்
க்ருஷ்ண
ரக்ஷிதா –காப்பாற்றப் பட்டவர்களாக இருக்கிறோம்
பொருள்: சிரேஷ்டரான ஹே கிருஷ்ணா! காளிங்கன் என்ற கொடுமையான விஷப் பாம்பினால் மரணமடையாமல் எங்களைக் காத்தாய். மழை, காற்று, இடி ஆகியவற்றிலிருந்தும் காப்பாற்றினாய். அகாசுரன், அரிஷ்டாசுரன், மயன், வ்யோமாசுரன் ஆகியோரிடத்திலிருந்தும், எல்லாவிதமான பயத்திலிருந்தும் எங்களை அடிக்கடி காப்பாற்றிய நீ எங்களைக் கைவிட்டு விடாதே என்று பிரார்த்திக்கிறோம்.
கண்ணனிடம் உள்ள அதிக பிரேமை அடியாகவே
பின்பு வரப் போகும் ஆபத்துக்களையும் சர்வஜ்ஞத்வத்தால் அறிந்து சொல்கிறார்கள்
முன்பு ரக்ஷித்து அருளி இப்போது உன்னைக் காட்டாமல் வதைப்பது கோ பாலனான உனக்குத் தகுமோ –
————–
4. நகலு கோபிகா க்ருஷ்ண நந்தனோ பவான்
அகில தேஹினாம் க்ருஷ்ண அந்தராத்மத்ருக்
விகள ஸார்த்திதோ க்ருஷ்ண விஸ்வகுப்தயே
ஸக உதேயிவான் க்ருஷ்ண ஸாத்வதாம் குலே
நகலு கோபிகா க்ருஷ்ண நந்தனோ பவான்–நீ யசோதை என்னும் கோபிகையின் குமரன் அல்லன் -நிச்சயம்
அகில தேஹினாம் க்ருஷ்ண அந்தராத்மத்ருக்-ஸமஸ்த பிராணிகளுக்கும் அந்தராத்மாவாய் பிராணிகள் செய்யும் சுப அசுப கார்யங்களைப் பார்ப்பவன் அன்றோ
விகநஸ-பிரம்மனால் -எல்லாப் பிராணிகளின் புத்தி ஸாஷியாய் இருப்பவன் அன்றோ
அர்த்திதோ க்ருஷ்ண விஸ்வகுப்தயே-உலகைக் காப்பாற்றுவதற்காக பிரார்த்திக்கப் பட்டவன் அன்றோ
ஸக உதேயிவான் க்ருஷ்ண ஸாத்வதாம் குலே–யாதவர்களின் குலத்தில் ஆவிர்பவித்தவன் அன்றோ
பொருள்: ஹே கிருஷ்ணா! நீர் இடைச்சாதியான யசோதையின் பிள்ளை அல்ல! (தேவ ரஹஸ்யம் சாதாரண பக்தைகளின் பர ப்ரம்ம மனதுக்குத் தோன்றியிருக்கிறது.) எல்லா ஜீவன்களுக்கும் உள்ளிருக்கும் அந்தர்யாமி நீங்கள். பிரும்மாவினால் பிரார்த்திக்கப்பட்டு உலகைக் காத்து ரட்சிப்பதற்காக யதுகுலத்தில் வந்த ஏ தோழனே ! நீர் அவதரித்ததே எங்களுக்காகத் தான்.
அகில தேஹினாம் க்ருஷ்ண அந்தராத்மத்ருக்–எங்கள் தாபங்களையும் அறிபவன் தானே -நாங்கள் அறிவிக்க வேண்டும்படியாய் இருக்கிறாயோ
இப்படி இருந்தும்
ஸஹா வாயும் இருந்தும்
எங்கள் குலத்தில் எங்களைத் தேடி திரு அவதரித்த பின்பும்
விஸ்வகுப்தயே-எங்களை உலகில் உள்ளவர்களாக நினைத்தாவது ரஷிக்கலாவதா -என்கிறார்கள்
———-
எங்கள் அபிமதங்களான நான்கையும் அளித்து அருள வேண்டும் என்று
பிரார்த்திக்கிறார்கள் அடுத்த நான்கு ஸ்லோகங்களால்-5. விரசிதாபயம் க்ருஷ்ண வ்ருஷ்ணிதுர்ய தே
சரணமீயுஷாம் க்ருஷ்ண ஸம்ஸ்ருதேர் பயாத்
கரஸரோருஹம் க்ருஷ்ண காந்த காமதம்
ஸிரஸி தேஹி ந க்ருஷ்ண ஸ்ரீகரக்ரஹம்வ்ருஷ்ணிதுர்ய–வ்ருஷ்ணி களுக்குத் தலைவனே
காந்த-அழகியவனே
ஸம்ஸ்ருதேர் பயாத்–ஸம்ஸாரத்திருந்து பயத்தாலே
சரணமீயுஷாம் –உனது திருவடித் தாமரைகளை சரணம் அடைந்தவர்களுக்கு
விரசிதாபயம் –கொடுக்கப்பட்ட அபயத்தை யுடையதும்
ஸ்ரீகரக்ரஹம்–ஸ்ரீ மஹா லஷ்மி பிராட்டியாரின் திருக் கரங்களைப் பிடிப்பதும்
காமதம்-இஷ்டங்களை அளிப்பதுமான
காந்த காமதம்-ஒரே பதமாக்கி -இஷ்டங்களை அளிப்பதுமான-என்றுமாம்
தே கர ஸரோருஹம் -உனது தாமரைக் கையை
ஸிரஸி தேஹி ந க்ருஷ்ண –எங்களுடைய தலைகளில் வைத்து அருள வேண்டும்
பொருள்: ஹே கிருஷ்ணா, ஹே காந்தா! உமது கரங்கள் சாதாரணமானவையல்ல. உம்முடைய பாதத்தில் சம்சார பயத்தால் சரணமடைந்துவிட்டவர்களுக்கு அபயமளிப்பவை அவை. அவர்கள் கோரியதை வரமாக அளிப்பவையும் அவையே. ஸ்ரீமகாலட்சுமியின் கரங்களைப் பிடிப்பவையான அந்தத் தாமரை போன்ற கையை என்னுடைய சிரசில் வைக்க வேண்டும்.
ஸிரஸி தேஹி ந க்ருஷ்ண-வைத்தவாறே எங்கள் தாபத்தின் மிகுதியை உணர்வாய் -வைத்தவுடன் அவை எல்லாமே அழிந்து விடுமே
ஸிரஸி தேஹி ந க்ருஷ்ண-எங்கள் தலைகளில் ஏக காலத்தில் திருக் கரத்தை வைத்து அருள வேண்டும் -கால விளம்பம் பொறுக்க மாட்டோம் –
————-
6. வ்ரஜ ஜனார்திஹன் க்ருஷ்ண வீரயோஷிதாம்
நிஜஜனஸ்மய க்ருஷ்ண த்வம் ஸநஸ்மித
பஜஸகேபவத் க்ருஷ்ண கிங்கரி: ஸ்மநோ
ஜலருஹானனம் க்ருஷ்ண சாரு தர்சய
வ்ரஜ ஜனார்திஹன் க்ருஷ்ண –இடைச்சேரி ஜனங்களின் ஆர்த்திகளைப் போக்கி அருள்பவனே
வீர–வீரனே
நிஜஜனஸ்மய த்வம்ஸந க்ருஷ்ண –தனது ஜனங்களின் கர்வங்களை நசிக்கும் படி செய்ய வல்லவனே
ஸ்மித–மந்த ஹாஸ புன்னகை யுடையவனே
ஸகே-தோழனே
பவத் க்ருஷ்ண கிங்கரி: பஜ–உனக்கு அந்தரங்க கிங்கரர்களான எங்களை அடைவாயாக –
எங்களுக்கு அநுகூலனாக இருப்பாயாக
ஜல ருஹானனம் க்ருஷ்ண சாரு தர்சய யோஷிதாம்–அழகிய தாமரை போன்ற திரு முகத்தை யுடைய நீ பெண்களான எங்களுக்கு உன்னைக் காட்டி அருள்வாயாக
பொருள்: கோகுல வாசிகளின் அனைத்து மனக்கவலைகளையும் போக்கும் வீரனும் நீயே, தோழனும் நீயே! சொந்த ஜனங்களுக்குள் எவருக்கேனும் தங்களைப் பற்றி கொஞ்சம் கர்வம் தோன்றினால் கூட, உன் புன்முறுவலைக் கண்டால் அந்த கர்வம் அழிந்து விடும். உமது வேலைக்காரிகளான எங்களிடம் நீ வரவேண்டும். பத்மம் போன்ற அழகிய முகத்தை பெண்களான எங்களுக்கே முதலில் காண்பிக்க வேண்டும். கிருஷ்ணரைத் தவிர மற்றவர்கள் யாவரும் பெண்களே என்பது கோபியர் எண்ணம். ஸ்ரீ கிருஷ்ணனே புருசோஷத்தமன்.
உனது தாமரை போன்ற திருமுகத்தை நாங்கள் கண்டு களிக்கும் படி ஸேவை சாதித்து அருளின பின்பு உனது திருக் கரங்களை எங்கள் தலைகளில் வைத்து அருள பிரார்த்தனை இதில்
———-
7. ப்ரணததேஹினாம் க்ருஷ்ண பாபகர்சனம்
த்ருணசாரனுகம் க்ருஷ்ண ஸ்ரீநிகேதனம்
பணிபணார்பிதம் க்ருஷ்ண தேபதாம்புஜம்
க்ருணுகுசேஷு ந: க்ருஷ்ண க்ருந்திஹ்ருச்சயம்
ப்ரணததேஹினாம் -உன்னை வணங்கின பிராணிகளுடைய
க்ருஷ்ண பாபகர்சனம்–பாபங்களைப் போக்கி அருள்வதும்
த்ருணசாரனுகம் க்ருஷ்ண -புல்லைத் தின்னும் கறைவைகள் பின்னால் செல்பவனும்
ஸ்ரீநிகேதனம்-ஸ்ரீ மஹா லஷ்மி பிராட்டியாருக்கு இருப்பிடமாய் உள்ளதும்
பணிபணார்பிதம் க்ருஷ்ண -காளியனின் பணங்களின் மேல் வைக்கப்பட்டதுமான
தே பதாம் புஜம்–உன்னுடைய தாமரை திருவடியை
க்ருணுகுசேஷு ந: க்ருஷ்ண க்ருந்திஹ்ருச்சயம்–எங்களுடைய கொங்கைகளின் மேல் வைத்து காம வேதனையை அறுத்து அருள்வாயாக –
பொருள்: உன்னுடைய பாதங்கள் சாதாரணமானவையா என்ன? அதைப் பிடித்து நமஸ்காரம் செய்பவர் எந்த குலத்தவாரக இருந்தாலும் சரி, அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வாய். அது பசுக்களுடன் துணைபோகும் மகாலட்சுமியின் இருப்பிடம். காளீயனின் சிரசின் மேல் நின்றவை உங்கள் பாதங்கள் எங்கள் மனத்தை ஆக்ரமித்துக் கொள்ள வேண்டும்.
பசுக்களின் பின்னே செல்லும் பொழுது கரடு aமுரடான காட்டை விட கடினமானவையா எங்கள் கொங்கைகள்
நாங்களும் பசு பிராயர்கள் அன்றோ
ஸ்ரீ நிகேதனம் மங்கள கரமான உனது திருவடிகளின் ஸ்பர்சம்-காம வேதனைகளை போக்குவதும் அன்றியே எங்கள் கொங்கைகளுக்கு அணி அலங்காரமும் ஆகும்
தங்கக் குடத்தின் மேல் தாமரைப் பூவை வைத்தால் போல் அன்றோ ஆகும்
———–
8. மதுரயா கிரா க்ருஷ்ண வல்குவாக்யயா
புதமனோக்ஞ்யா க்ருஷ்ண புஷ்கரேக்ஷண
விதிகரீரிமா: க்ருஷ்ண வீரமுஹ்யதீ :
அதரசீதுனா க்ருஷ்ண ப்யாயஸ்வந:
புஷ்கரேக்ஷண–தாமரைக் கண்ணனே
வீர-வீரனே
புதமநோஜ்ஞாயா -வித்வான்களின் மனத்துக்கு இனியதும்
வல்குவாக்யயா-அழகிய வாக்யங்கள் அமைக்கப் பெற்றதும்
மதுரயா -செவிக்கு இனியதுமான
கிரா -உனது மொழியாலே
வீமுஹ்யதீ :-மயங்கிக் கிடக்கும்
விதிகரீரிமா: -பணியாட்களான இந்த எங்களை
அதரசீதுனா -உனது திருவாய் அமுதத்தால்
ஆப்யாயஸ்வந:–பிழைப்பிப்பாயாக
பொருள்: செந்தாமரைக் கண்ணா! ஹே வீரா! உம்முடைய இனிமையான வார்த்தைகள், அமுத மொழிகளினால் வித்வான்களே தங்கள் மனத்தை இழந்து உம்பால் ஈர்க்கப்படுகின்றனர். அதேபோல் உமது வார்த்தைகளினால் வேலைக்காரிகளான நாங்களும் தன் வயமிழந்து தவிக்கின்றோம். எங்களையும் திருப்தி செய்வீர்களா?
வீர-உனது வாக்குக்கும் அப்படிப்பட்ட சாதுர்யம் உண்டே
தயா வீரனாயும்
தான வீரனாயும் அன்றோ உள்ளாய்
புஷ்கரேக்ஷண-கடாக்ஷத்தாலும் எங்களை மோஹிக்கும் படி செய்கிறாய்
உள்ளே உண்ணும் மருந்து போல் உனது திருவாய் அம்ருதம் -மற்றவை மேல் பூச்சு போலே
கீழ் சொன்னதையும் வேண்டும் -இதுவும் வேண்டும் -என்கிறார்கள் –
முஹ்யதீ :-நீ க்ஷண காலம் தாமதித்தால் தரியோம் என்றவாறு
——–
9. தவகதாம்ருதம் க்ருஷ்ண தப்த ஜீவனம்
கவிபிரீடிதம் கிருஷ்ண கல்மஷாபஹம்
ஸ்ரவண மங்களம் கிருஷ்ண ஸ்ரீமதாததம்
புவிக்ருணந்தி தே க்ருஷ்ண பூரிதா ஜனா:
தப்த ஜீவனம் –தாபத்தராயத்தால் வருத்தம் அடைந்தவர்களைப் பிழைக்கச் செய்வதும்
கவிபிரீடிதம் -நான்முகன் போன்ற கவிகளால் ஸ்தோத்ரம் செய்யப்பட்டவனும்
கல்மஷாபஹம்–பாபங்களைப் போக்குவதும்
ஸ்ரவண மங்களம் -கேட்பதால் மட்டுமே மங்களங்களை அளிப்பதுமான
ஸ்ரீமத் –சாந்தி போன்ற நல்ல குணங்களை பிறப்பிப்பதுமான -மேன்மை பெற்றதுமான
ததா கதா அம்ருதம் -கதையாகிய அம்ருதத்தை
ஆததம்–விஸ்தாரமாய் இருக்கும் படி
யே புவி க்ருணந்தி –எவர்கள் இவ்வுலகில் சொல்லுகிறார்களோ
தே பூரிதா ஜனா:–அந்த ஜனங்கள் பெரிய கொடையாளிகள்
பொருள்: ஹே கிருஷ்ணா, உம்முடைய பிரிவால் நாங்கள் இறந்திருப்போம். ஆனால் மகான்கள் உன் கதாம்ருதத்தைக் கூறி எங்களைப் பிழைக்க வைத்து விட்டார்கள். தாபத்ரயம் அடைந்தவர்களை உயிர்ப்பிப்பதும்; வியாசர், சுகர் போன்றவர்களால் கொண்டாடப்பட்டதும், ஆசையால் ஏற்படக்கூடிய அல்லல்களைப் போக்கடிக்கக்கூடியதும், கேட்பதாலேயே <உடனே மங்களத்தை அளிக்கக் கூடியதும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக்கூடியதுமான உமது கதையாகிய அமிர்தத்தை எவர் சொல்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்கள் பலப்பல பிறவிகளில் வெகுவாக தானங்கள் செய்திருக்க வேண்டும்.
தவகதாம்ருதம்–பாபங்களையும் போக்கி
உனது கதாம்ருதத்தைக் கேட்க்கவும் பண்ணி அருளும் ப்ரபாவம் உண்டே
பாப மூலமான ஸம்ஸாரத்தையே போக்கி அருளும்
சாதனமாகவும் சாத்யமாகவும் இருக்கும்
எங்கள் ஜீவனைத்தே அருளும் இவர்கள் மிக்க கொடையாளிகள் அன்றோ
———
10. ப்ரஹஸிதம் ப்ரிய க்ருஷ்ண ப்ரேம வீஷீதம்
விஹரணம் சதே க்ருஷ்ண த்யான மங்களம்
ரஹஸிஸம் விதோ க்ருஷ்ணயா ஹ்ருத் ஸ்ப்ருஸ
குஹக நோ மநஸ் க்ருஷ்ண ஷோபயந்தி ஹே
ப்ரிய–ப்ரியனே
குஹக –வஞ்சகனே
தே ப்ரஹஸிதம் –உனது அழகிய புன்னகையும்
ப்ரேம வீஷீதம்-அன்பு ததும்பிய உனது கடாக்ஷமும்
த்யான மங்களம்–நினைப்பதாலும் ஸூகத்தை தருவதுமான
விஹரணம் ச –உனது விளையாடலும்
ஹ்ருதி ஸ்பர்ஸ –மனத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கிற -மனத்திலே மாறாது இருக்கும்
ய ரஹஸிஸம் விதோ -ரஹஸ்யத்தில் செய்யப்பட்ட உனது ஸங்கேத ப்ரதிஜ்ஜைகள் உண்டோ –அவைகளும்
நோ மநஸ் க்ருஷ்ண க்ஷோபயந்தி ஹே –எங்களுடைய மனத்தை கலக்குகின்றனவே
பொருள்: ஹே கிருஷ்ணா! உம்முடைய புன்முறுவலையும் அன்பும் கருணையும் நிரம்பிய பார்வையையும் சிந்தித்தால் அது மங்களத்தைத் தரும். அந்த விளையாட்டையும், ரஹஸ்ய சமிக்ஞை நிறைந்த பார்வையையும் நினைப்பதாலேயே எங்கள் உள்ளத்தையெல்லாம் வற்றச் செய்து விடுகிறாயே!
கீழ் சொன்னவை எல்லாம் மயக்கத்தையே உண்டு பண்ணுகின்றன
அந்த மயக்கத்தைப் போக்க அதர அமுதம் வேண்டும்
நீ முன் வந்து கண்ணாலே நோக்கி அருளாய்
மந்த ஹாஸம் கடாக்ஷம் இவை மநோ பாவத்தால் உண்டா கும் செயல்கள்- ஹ்ருதி ஸ்பர்ஸ -இவை நினைத்த மாத்திரத்திலே கலங்கு கிறோம்
விஹரணம் -சரீரத்தின் செயல் -இது கீழ் சொன்னதை விட அதிக கலக்கம் கொடுக்கும்
நர்மப்பேச்சு -வாக்கின் செயல் -இது கீழ் சொன்னதை விட அதிக கலக்கம் கொடுக்கும்
நீ எங்களை உபேஷிக்கையாலும் சொன்ன படி செய்யாமையாலும் உனது கபடத்தன்மை உலகு எங்கும் பரவும்
—————-
11. சலஸியத் வ்ரஜாத் க்ருஷ்ண சாரயன் பசூன்
நளின சுந்தரம் க்ருஷ்ண நாத தே பதம்
சிலத்ருணாங்குரை: க்ருஷ்ண ஸுதத்திந:
கலிலதாம் மன: க்ருஷ்ண காந்த கச்ச தீ
நாத–நாதனே
காந்த–மனத்துக்கு இனியவனே
யத்-எப்போது
சாரயன் பசூன்-பசுக்களை மேய்க்கும் பொருட்டு
சலஸி வ்ரஜாத் க்ருஷ்ண –இடைச்சேரியில் இருந்து pபுறப்படுகிறாயோ
அப்போது
நளின சுந்தரம் க்ருஷ்ண தே பதம்–தாமரை போல் அழகிய உனது திருவடி
சிலத்ருணாங்குரை: க்ருஷ்ண -கடினமான புற்களாலும் முளைகளாலும்
ஸுதத்திந:-வருத்தம் அடையும் என்று
கலிலதாம் மன: க்ருஷ்ண கச்ச தீ-எங்களுடைய மனது மோஹத்தை அடைகிறது
பொருள்: ஹே நாதா! எப்பொழுது கோகுலத்திலிருந்து பசுக்களை ஓட்டிக் கொண்டு நீங்கள் புறப்படுகிறீர்களோ, அப்போதே தாமரை போன்ற தங்களது அழகிய பாதம் சிறு கற்களாலும் புற்களின் சிறு நுனிகளாலும் குத்தப்படுமே யென்று எங்கள் மனம் கலங்கத் தொடங்கி விடுகிறது.
பகலில் பசு மேய்க்க காட்டுக்கு போனாலே கலங்கு கிறோம்
இரவில் போனால் சொல்லவும் வேண்டுமோ
இப்படி மனமுள்ள எங்களை நீ வஞ்சிக்கலாமா
————–
12. தின பரிக்ஷயே க்ருஷ்ண நீலகுந்தலை:
வனருஹானனம் க்ருஷ்ண பிப்ரதாவ்ருதம்
வனரஜஸ்வலம் க்ருஷ்ண தர்சயன் முஹு
மனஸிந: ஸ்மரம் க்ருஷ்ண வீர யச்சஸி
க்ருஷ்ண வீர -ஹே வீரனே
தின பரிக்ஷயே க்ருஷ்ண –மாலை வேளையில்
நீலகுந்தலை:கறுத்த முன் நெற்றி மயிர்களால்
ஆவ்ருதம்-சூழப் பட்டதும்
வனரஜஸ்வலம்–காட்டில் உள்ள தூளிகள் படிந்ததுமான-கனரஜஸ்வலம்
வன ருஹானனம் க்ருஷ்ண -தாமரை போன்ற திரு முகத்தை
பிப்ரதா-தரித்துக் கொண்டு
தர்சயன்முஹு -அடிக்கடி அதைக் காண் பித்துக் கொண்டும்
கன க்ருஷ்ண மனஸிந: ஸ்மரம் யச்சஸி-எங்களுடைய மனத்தில் மன்மத விஹாரத்தை உண்டு பண்ணுகிறாய்
பொருள்: மாலை வேலைகளில் கருத்த கேசத்தின் முன் நெற்றிக் குழல்கள் சூழ நீவிர் வரும்போது, உமது முகத்தில் பாலாடைக் கட்டிகளின் தூள்கள் மறைந்து மறைந்து காணப்படுகின்றன. (ஏற்கெனவே பால் போன்ற முகத்தில் பாலாடைக் கட்டிகளின் துகள்கள் ஒட்டிக் கொண்டிருப்பதால் முகம் மேலும் பிரகாசமடைகிறது. அதன் பின்னணியில் முன் நெற்றிக் கருங்குழல்கள் மேலும் ஒளியை உமிழ்கின்றன.) அந்த மிருதுவான தாமரை முகத்தை எங்களுக்கு அடிக்கடி காட்டுவதன் மூலம் எங்கள் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தூண்டுகிறீர்கள்.
கனரஜஸ்வலம்-பாட பேதம் –தூளி மிகப்படிந்த என்றபடி
தனரஜஸ்வலம்-பாட பேதம் -கோ தனம் என்றும் கோபிகளுக்குத் தனமான பசுக்களின் தூள் படிந்த
தர்சயன் முஹு-பசுக்களைத் தட்டிக் கொடுத்து -மெள்ள மெள்ள நடந்து திருமுகத்தையும் பின் புறத்தையும் மீண்டும் மீண்டும் எங்களுக்கு காட்டி காம வேதனையை மிகவும் கொடுக்கிறாய்
ஆகவே தாமதியாமல் எங்களுடன் கூடி இஷ்டத்தைப் பூர்த்தி செய்து அருள வேண்டும் என்ற பிரார்த்தனை –
———–
13. ப்ரணத காமதம் க்ருஷ்ண பத்மஜார்ச்சிதம்
தரணி மண்டனம் க்ருஷ்ண த்யேயமாபத்
சரண பங்கஜம் கிருஷ்ண சந்த
ரமண ந: ஸ்தனேஷு க்ருஷ்ண அர்ப்பயாதீஹன்
ரமண–ப்ரீதியைக் கொடுப்பவனே
ஆதீஹன்-மநோ வியாதியைத் தீர்க்குமவனே
ப்ரணத காமதம் –தனது ஆஸ்ரிதர்களின் இஷ்டங்களைத் தீர்த்து அருளுபவனும்
க்ருஷ்ண பத்மஜார்ச்சிதம்–தாமரையில் உதித்த பிரமானால் பூஜிக்கப் பட்–லஷ்மி தேவியால் பூஜிக்கப் பட்டதும் என்றுமாம்
தரணி மண்டனம் –பூமிக்கு அணிகலனாய் இருப்பதும்
த்யேயம் ஆபதி -ஆபத்துக் காலத்தில் த்யானிக்கத் தக்கதும்
கிருஷ்ண சந்தநம் ச -ஸேவிக்கும் போதே ஸூகமாய் இருப்பதும்
தே சரண பங்கஜம் –உனது தாமரை போன்ற திருவடியை
ஸ்தனேஷு க்ருஷ்ண அர்ப்ப–எங்கள் கொங்கைகளிலே வைத்தது அருள வேண்டும்
பொருள்: மனோ வியாதியைப் போக்கும் ரமணா! பிரம்மனால் பூஜிக்கப்பட்டதும், ஆபத்துக் காலத்தில் அவசியம் தியானம் செய்ய வேண்டியதும், நினைத்த மாத்திரத்திலேயே ஆபத்தைப் போக்கக் கூடியதும், கேட்டவுடன் கிடைக்க அருள் பாலிப்பதுமான உமது பாத சரணங்களை எங்கள் மார்பில் (நெஞ்சில்) வைக்க வேண்டும்.
தரணி மண்டனம்–தாமரை த்வஜம் அடையாளங்களால் பூமிக்கு அலங்காரம் செய்யும் திருவடிகள்
பூமியில் உள்ளாருக்கு பக்தி ரூபா பன்ன ஞானம் -பக்தியையும் ப்ரீதியையும் அளித்து அலங்கரிக்கும் திருவடிகள்
பத்மஜா –அர்ச்சிதம் -கன்றுகளையும் கோபர்களையும் மறைத்து அபராதம் செய்ததால் தினமும் கோகுலம் வந்து திருவடிகளைப் பூஜிக்கிறான்
————-
14. ஸுரத வர்த்தனம் க்ருஷ்ண ஸோக நாசனம்
ஸ்வரித வேணுனா க்ருஷ்ண ஸுஷ்ட்டு சும்பிதம்
இதாராகவி க்ருஷ்ண ஸ்மரணம் ந்ருணாம்
விதாவீரந: க்ருஷ்ண தே அதராம்ருதம்
ஹே வீர
ந்ருணாம்-மனிதர்களுக்கு
இதாராகவி க்ருஷ்ண ஸ்மரணம் –மற்ற விஷயாந்தரங்களில் ஆசையை அறுக்கும்படி செய்வதும்
ஸ்வரித வேணுனா க்ருஷ்ண -இனிய நாதமுள்ள வேணு வாத்யத்த்தால்
ஸுஷ்ட்டு சும்பிதம்–நன்கு சேர்ந்து இருப்பதும்
ஸோக நாசனம்–துக்கம் போக்குவதும்
ஸுரத வர்த்தனம் க்ருஷ்ண -ப்ரீத்தியை மென்மேலும் வளர்ப்பதும்
விதர ந: க்ருஷ்ண தே அதராம்ருதம்-உனது அதர அம்ருதத்தை எங்களுக்கு அளித்து அருள்வாய்
பொருள்: ஹே வீரா! காமத்தை விருத்தி செய்வதும், சோகத்தை அழிப்பதும், இசைக்கும் குழலால் நன்கு முத்தமிடப்படுவதும், மனிதர்களின் பிற ஆசைகளை அறவே செய்வதுமான உமது இதழ்ச் சுவையை அளித்திட வேண்டும்.
ஸுஷ்ட்டு சும்பிதம் வேணு நா -அதர அம்ருதத்தை வேணு பருகிற்றே ஒழிய நாங்கள் பருக வில்லையே
ந விதர -விரஹ தாபதத்தால் தவிக்கும் நாங்கள் அன்றோ இத்தைப் பருக அர்ஹர்கள்
———–
15. அடதி யத் பவான் க்ருஷ்ண அன்ஹி கானனம்
த்ருடிர்யுகாயதே க்ருஷ்ண த்வாம பஸ்யதாம்
குடிலகுந்தலம் க்ருஷ்ண ஸ்ரீமுகம் ச தே
ஜட உதீக்ஷதாம் க்ருஷ்ண பக்ஷ்மக்ருத் த்ருஸாம்
அடதி யத் பவான் க்ருஷ்ண அன்ஹி காநநம் -நீ எப்போது பகலில் காட்டை நோக்கிச் செல்கிறாயோ
அப்போது
த்வாம் அபஸ்யதாம்–உன்னைக் காணாத பிராணிகளுக்கு
த்ருடிர்யுகாயதே க்ருஷ்ண -அரை க்ஷணமும் யுகங்கள் போல் அன்றோ வளர்ந்து உள்ளது
குடிலகுந்தலம் க்ருஷ்ண ஸ்ரீமுகம் ச தே-சுரி குழல் சேர்ந்து இருந்த சோபை மிக்குள்ள உனது திருமுக மண்டலத்தை
உதீக்ஷதாம் க்ருஷ்ண த்ருஸாம்-ஆவலுடன் காணும் அந்தப் பிராணிகளுடைய கண்களுக்கு
பக்ஷ்மக்ருத்–இமைகளைப் படைத்த பிரமன்–
ஜட -மூடனே
பொருள்: எப்பொழுது நீர் பிருந்தாவனம் குறித்துக் கிளம்புகிறீர்களோ, அப்பொழுதே உம்மைப் பார்க்காத பிராணிகளுக்கு அரை விநாடி கூட ஒரு யுகமாக நகர்கிறது. பிறகு மாலை வேளைகளில் கண்டபடி கலைக்கப்பட்ட நெற்றி மயிர்களுடன் கூடியிருக்கும் உமது திரு முகத்தைப் பார்க்கும்போது அதைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அப்போது உம்மைப் பார்க்கத் தடையாக இருக்கும் இமைகளைப் படைத்த பிரும்மனே ஒரு ஜடமாக உணர்ச்சி யற்ற மரமாகத் தென்படுகிறார். (கண்ணைக் காக்கும் இமை கூட அநாவசியமாகி விடுகிறது).
பக்ஷ்மக்ருத் ஜட-இழிவான அஸ்திரமான வற்றைப் பார்க்க இமையாத தேவர்களை படைத்து
உன்னையே காணத் த் வரிக்கும் எங்களுக்கு இமையை படைத்தது மூடனின் செயல் தானே
————-
16. பதிஸுதான்வய க்ருஷ்ண ப்ராத்ரு பாந்தவான்
அதிவிலங்க்ய தே க்ருஷ்ண அந்த்யச்யுதா கதா
கதிவிதஸ்தவோத் க்ருஷ்ணகீத மோஹிதா:
கிதவ யோக்ஷித: க்ருஷ்ண கஸ்த்ய ஜேந்நிஸி
யச்யுதா
பதிஸுதான்வய க்ருஷ்ண -பதிகளையும் பிள்ளைகளையும் அவர்களைச் சேர்ந்த மற்றவர்களையும்
ப்ராத்ரு பாந்தவான்-உடன் பிறந்தவர்களையும் -மற்ற சுற்றத்தார்களையும்
அதிவிலங்க்ய -கடந்து -விட்டு
கதி விதஸ்தவோத் க்ருஷ்ண-எங்கள் வரவை அறிந்த உன்னுடைய
உத் கீத மோஹிதா -உரத்த பாடல் களால் மோஹித்த நாங்கள்
தே க்ருஷ்ண அந்தி -உன் சமீபத்துக்கு
கிதவ ஆகத -துஷ்டனே வந்துள்ளோம்
யோக்ஷித: க்ருஷ்ண கஸ் த்யஜேந் நிஸி-இப்படிப்பட்ட பெண்களான எங்களை இரவில் எவன் தான் விடுவான் –
பொருள்: ஹே அச்சுதா! கணவன், குழந்தை, வம்சம், உடன்பிறப்புகள், உறவினர்கள் என்று அனைவரையும் மீறி, நற் கதி உன்னிடம்தான் கிடைக்குமென்று ஓடி வந்துவிட்டோம். உமது வேணு கானத்தால் வசீகரிக்கப்பட்டு மோகத்தால் வாடும் பெண்களை இரவில் எவன் கை விடுவான்.
கதி வித -கணங்களின் கதிகளை அறிந்தவன் என்றும்
உனது நடத்தையை அறிந்த நாங்கள் என்றுமாம்
அச்யுத நாமம் நிலை பெற எங்களை அனுக்ரஹித்து அருள வேண்டாமோ
——————
17. ரஹஸி ஸம்விதம் க்ருஷ்ண ஹ்ருச்சயோதயம்
ப்ரஹஸிதானனம் க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்
ப்ருஹது: ஸ்ரியோ தாம க்ருஷ்ண வீக்ஷ்ய தே
முஹுரதிஸ்ப்ருஹா க்ருஷ்ண முஹ்யதே மன:-
ரஹஸி தே ஸம்விதம் -ரஹஸ்யத்தில் செய்த உன்னுடைய சங்கேதப் பேச்சுக்களையும்
க்ருஷ்ண ஹ்ருச்சயோதயம்-மன்மத விஹாரங்களைச் செய்யும்
ப்ரஹஸிதானனம் -புன்னகை பூத்த திருமுகமும்
க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்-ப்ரீதி பொதிந்த திருக் கடாக்ஷத்தையும்
ப்ருஹது: ஸ்ரியோ க்ருஷ்ண தாம தே-மஹா லஷ்மிக்கு உறைவிடமான அகன்ற திரு மார்பையும்
வீக்ஷ்ய–பார்த்து
முஹுரதிஸ்ப்ருஹா க்ருஷ்ண முஹ்யதே மன:-மிகுந்த ஆசை யுண்டாகி -அதனால் மிக்க மோஹாமும் உண்டாகிறதே –
பொருள்: ஏகாந்தத்தில் உமது சங்கேத வார்த்தைகள் காமத்தைக் கிளரும். உமது முறுவல் பூத்த முகம், பிரியமான பார்வை, மகாலட்சுமிக்கு இருப்பிடமான உமது பரந்த மார்பு-இதையெல்லாம் நினைத்து நினைத்து எங்கள் மனமானது அதிக ஆசை கொண்டு அடிக்கடி மோகமடைகிறது.
——
18. வ்ரஜவநௌகஸாம் க்ருஷ்ண வ்யக்தி ரங்கதே
வ்ருஜின ஹந்த்ரீ யலம் க்ருஷ்ண விஸ்வமங்களம்
த்யஜ மனாக்ச ந: கிருஷ்ண த்வத் ஸ்ப்ருஹாத்மனாம்
ஸ்வஜனஹ்ருத்ருஜாம் க்ருஷ்ண யந்நிஷீதனம்
அங்க தே–ஏ கிருஷ்ண உனது
வ்யக்தி –அவதாரமானது
வ்ரஜவநௌகஸாம் க்ருஷ்ண –கோகுலத்திலுள்ள கோபர்களுடைய
வ்ருஜின ஹந்த்ரீ யலம் க்ருஷ்ண –பாபத்தை அடியோடு போக்குவதாயும்
விஸ்வமங்களம்–உலகங்களுக்கு எல்லாம் மங்களத்தை அளிப்பதாகவும்
கிருஷ்ண த்வத் ஸ்ப்ருஹாத்மனாம்-உன்னிடத்தில் ஆசை கொண்ட மனமுடைய
த்யஜ மனாக்ச ந: -எங்களுக்குக் கொஞ்சமாயினும் விடு -அதாவது அதைக் கொடு
எத்தை என்றால்
ஸ்வஜன ஹ்ருத்ருஜாம் க்ருஷ்ண யந்நிஷீதனம்-உனது அடியார்களான எங்கள் மநோ வியாதியைப் போக்க வல்லதை –
அம் மருந்து எது என்பது உனக்குத் தெரியுமே
பொருள்: ஹே அங்கா, உன் உருவத்தைப் பார்த்த உடனேயே கோகுலத்தில் உள்ள பிராணிகளின் அனைத்து பாவங்களும் நசித்துப் போகின்றன. உலகுக்கே மங்களம் பெருக்கெடுக்கின்றன. எங்களுடைய ஹ்ருதய ரோகங்களுக்கு நிவிருத்தியைத் தருகின்றது எதுவோ, அதைக் கொஞ்சம் தருவீராக.
——-
19. யத்தே ஸுஜாத சரணாம்புருஹம் ஸ்தனேஷு
பீதா சனை: ப்ரிய ததீமஹி கர்கசேஷு
தேனாடவீமடஸி தத்வ்யத்ததே ந கிம்ஸ்வித்
கூர்பாதிபிர் ப்ரமதி தீர்பவதாயுஷாம்
ப்ரிய–ஹே பிரியனே
யத் தே ஸுஜாத சரணாம்புருஹம் -எந்த உனது அழகிய திருவடித் தாமரையை
கர்கசேஷு-மிகவும் கடினமான
ஸ்தனேஷு-கொங்கைகளில்
பீதா -மிகவும் பயந்தவர்களாய்
சனை: ததீமஹி –மெள்ள மெள்ள வைத்துக் கொள்ளுகிறோமோ
தேனாடவீம் –அத்தகைய திருவடிகளால் -காட்டை -காடுகளில் –
அடeஸீ –அலைகிறாய்–
தத் -அந்தத் திருவடிகள்
கூர்பாதிபிர் –கூரிய சிறிய கற்கள் முதலியவை களால்
வ்யத்ததே ந கிம்ஸ்வித்-எப்படி வருந்தாது இருக்கும் -வருந்தவே செய்யும் –
பவதாயுஷாம்-உன்னையே பிராணனாக வுடைய
ப்ரமதி தீர் ந –எங்களுடைய மதி மயக்கம் அடைகிறது –
தேந அடவீம் நயஸீ –பாட பேதம் -அப்படிப்பட்ட ஸூ குமாரமான திருப் பாதங்களால் பசுக்களை காட்டில் அழைத்துச் செல்கிறாயே
பொருள்: எங்கள் நெஞ்சில் உன் பாதம் பட்டால் நோகுமென்று நாங்கள் பயப்படுகிறோம். அத்தகைய கால்கள் காட்டில் சுற்றினால் சின்ன கற்களினால் அந்தச் சரணம் நோகாதோ என்று எங்கள் புத்தியே பேதலிக்கிறது.
——
உத்தர ஸ்லோகம்
20. இதிகோப்ய: ப்ரகாயந்த்ய ப்ரலபந்த்யஸ்ச சித்ரதா
ருருது ஸுஸ்வரம் ராஜன் க்ருஷ்ண தர்ஸன லாலஸா
ராஜன் –அரசனே
இதி–இவ்விதம்
ப்ரகாயந்த்ய-கண்ணனின் குணங்களை பாடுகிறவர்களும்
சித்ரதா-அநேக விதமாக
ப்ரலபந்த்யஸ்ச -பிதற்றிக் கொண்டு இருந்தவர்களுமான
கோப்ய: -கோபிகைகள்
க்ருஷ்ண தர்ஸன லாலஸா–கண்ணனைக் காண்பதில் பேர் அவாக் கொண்டு
ருருது ஸுஸ்வரம்-இனிய குரலுடன் உரக்கப் புலம்பினார்கள்
பொருள்: ஓ ராஜன் என்று பரீட்சித்து மகாராஜனை அழைத்த சுக பிரும்மரிஷி மேலும் சொன்னார். இம் மாதிரி கோபாலனைக் காண வேண்டுமென்ற ஆவலுடன் உரத்த குரலில் விசித்திரமாக புலம்பி அழுதனர்.
அநேக விதமாகப்
பாடி
பிதற்றி
அழுதது
கண்ணனைக் கண்களால் காண வேண்டம் என்ற ஆசை துண்டச் செய்தனர்
சித்ரதா-ப்ரலபந்த்யஸ்ச-நான் ஒரு விதம் சொன்னேன்
கோபிகளோ பல விதமாகச் செய்தனர்
———
21. தாஸாமவிர்பூச்சௌரி ஸ்மயமான முகாம்புஜ:
பீதாம்பரதா ஸ்ரக்வி ஸாக்ஷõன் மன்மத மன்மத:
பீதாம்பரதா –பீதாம்பரம் உடுத்தினவனும்
ஸ்ரக்வி -வனமாலை அணிந்தவனும்
ஸாக்ஷன் மன்மத மன்மத:–சாஷாத் மன்மதனுக்கும் மயக்கத்தைக் கொடுக்கும் படியான பேர் அழகனுமான
சௌரி
ஸ்மயமான முகாம்புஜ:-புன்னகை பூத்த திரு முகாரவிந்தத்தை யுடையவனாய்
தாஸாம் -அந்த கோபிகள் முன்னிலையில்
ஆவிர்பூத் -வந்து தோன்றினான்
பொருள்: மன்மதனே ஆசைப்படும் மாறனான கோபாலன் பீதாம்பரம் தரித்து, புஷ்ப மாலைகள் மார்பில் தவழ, அந்த கோபிகைகளின் முன் ஆவிர்பவித்தார்.
மன்மத மன்மத -இங்கு
ஏகி பவத் ப்ரயுதைர் அபி மன்மதாநாம் யத் காந்தி ப்ருக்ஷத அநு க்ருதிர் ந சக்யா
ஸம் பிரேஷ்ய தம் யது பதிம் யமிநோ அபி நூநம் ஸ்த்ரீ பால மேவ மநஸா பிபராம் பபூவ –-யாதாவாப்யுதம் –24-82-
பதினாயிரம் மன்மதர்கள் ஓன்று சேந்த போதும் அழகு எவனுடைய அழகு சமுத்திரத்தின் ஒரு திவலையைப் போல் இருக்க முடியாதோ
யதுபதியான அந்தக் கண்ணனைக் கண்டு யோகிகளும் ஸ்திரீயாய் இருக்கும் தன்மையை மனத்தால் அடைந்தார்கள்
பீதாம்பர தர – கண்ணன் அரை குலைய ஓடி வர -பீதாம்பரம் நழுவ –பீதாம்பர தாரயாம் -அத்தைப் பிடித்துக் கொண்டே ஒடி வருகிறானாம்
—–
22. தம்விலோக்யாகதம் பிரேஷ்டம் ப்ரீத்யுத்புல்ல த்ரு ஸோ அபலா
உத்தஸ்த்துர்யுகபத் ஸர்வாஸ்தன்வ: ப்ராணமிவாகத்
பொருள்: அமர்ந்துகொண்டே கானம் செய்த கோபிகைளை ஆவிர்பவித்த அந்த கோபாலனைக் கண்டவுடன் மீள உயிர்பெற்றவர்கள் போல துள்ளி எழுந்தார்கள் கோபியர். அவர்களுக்கு யாதொரு பிணியும் வராது என்றும் சகல செல்வமும் சேரும் என்றும் அருளினார் ஆனந்த கிருஷ்ணன்.
அவன் த்வரித்து வர
மலர்ந்த கண்களுடன் கோபிகைகள் அனைவரும் ஒரே தடவையில் எழுந்து இருந்து
ஒரு கோபிகை அஞ்சலியினால் அவானுடைய திருக் கரங்களைப் பிடிக்க
ஒருத்தி சந்தனம் பூசப்பெற்ற திருத்தோள்களை அணைக்க
ஒருத்தி தாம்பூலத்தை இரு கைகளால் வாங்கிக் கொள்ள
ஒருத்தி திருவடித் தாமரைகளை ஸ்தனங்ள் மேல் அணைத்துக் கொள்ள
ஒருத்தி யோகிகள் போல் ஆனந்த சாகரத்தில் மூழ்கி
தாபங்கள் தீரப் பெற்றார்கள்
பின்னர் வேறு ஒரு மணல் குன்றில் ராஸ க்ரீடை தொடர்கிறது
————————
ஹே—-பிரபோ—–வ்ருந்தாவநம் உமது அவதார மகிமையால் செழிப்பை அடைகிறது;
நீர் எங்களுடன் கூடவே வாழ்வதால் ஸ்ரீ லக்ஷ்மி இங்கு நித்ய வாஸம் செய்கிறாள்;
ஹே தயித—-உமது கருணா ஸ்வரூபத்தை எங்களுக்குக் காண்பியுங்கள்;
நாங்கள், உம்மையே நம்பி ,உமது நாம ஸ்மரணம் செய்து கொண்டு,
உமது புண்ய கதைகளைக் கீர்த்தனம் செய்து கொண்டு உம்மையே ஒவ்வொரு திக்கிலும் தேடுகிறோம்.
சரத் காலத்தில், உமது பிரிவால் துக்கப்படுகிறோம்;
தடாகத்தில் உதித்த தாமரைப் புஷ்பத்தின் ஸ்ரீ முஷா— அழகு—–பொலிவைக் கவர்ந்து,
உமது பார்வையால் சந்தோஷமும், வருத்தமும் அடைகிறது;
அந்தத் தாமரைப் புஷ்பத்தைப் போல நாங்களும், உம்முடன் கூடுவதால்
சம்ஸ் லேஷமும் —–பிரிவினால் துக்கமும் அடைகிறோம்;
ஹே,சுரத நாத, ஹே,வரத —நாங்கள் உம்முடைய தாசிகள் —-உம்முடைய இச்சையாலே தாசிகள்
உமது பிரிவினாலே எங்களைத் துன்புறுத்தலாமா ?
உமது பிரிவு எங்களை வதம் செய்வது போல இருக்கிறது.
விஷ ஜலத்திலிருந்தும் காளியன் என்கிற கொடிய சர்ப்பத்தினின்றும் எங்களைக் காத்தீர்’;
அகாசுரன் போன்ற மழைப் பாம்பின் பிடியில் இருந்து காத்தீர்
பேய்க்காற்று, மேக கர்ஜனை, இடி மின்னல் பிரம்மாண்ட மழை இவைகளிருந்து ,
கோவர்த்தன கிரியைக் குடைபோலப் பிடித்து எங்களைக் காத்தீர்
கன்றைப் போன்று பொய்வேஷம் தரித்த அசுரனிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்
நீர் , யசோதை தேவகி இவர்களின் புத்ரன் மட்டுமல்ல;
சர்வத்துக்கும் ஆத்மா—-அந்தராத்மா-எல்லாவற்றையும் பார்க்கும் சாக்ஷி
எல்லா வஸ்துக்களையும் அனுபவிப்பவர்; எல்லாவற்றையும் நியமித்து தரிப்பவர்;
ஹே,விஸ்வகுப்தா—ஸ்நேக உள்ளம் உள்ள பிரபோ—
பூமிப் பிராட்டி, பிரம்மா, தேவர்கள் பிரார்த்தனைக்கு இரங்கி உலகைக் காக்க
யது குலத்தில் அவதரித்து இருக்கிறீர் ;
வ்ருஷ்ணீ துர்ய—-எங்களுக்கு அபயம் அளித்த பிரபுவே– உமது சரணங்களைப் பற்றினோம் ;
உமது கிருபையால் மறுபிறவி பயம் எங்களுக்கு இல்லை;
காந்த—-காமத்தின் பீடையை அடைந்துள்ளோம்;
எங்கள் சிரஸ் ஸில் உமது தாமரைக் கைகளை வைத்து,
நாங்கள் ஸ்ரீ யின் அனுக்ர ஹத்தை அடையும்படி செய்வீராக ;
வீர–வ்ரஜ ஜனார்த்திஹந்—-உமது ஸ்மிதம்—புன்சிரிப்பு—
எங்களுக்கு இயற்கையாக உள்ள அஹம்பாவத்தை அழிக்கிறது;
ஹே–ஸகே —-உம்மைப் பூஜிக்கும் எங்கள் அன்பை ஏற்றுக் கொள்வீராக ;
ஜலத்தில் அமிழ்ந்து பூர்ண பொலிவுடன் விகசித்து இருக்கும்
அழகான தாமரை போன்ற உமது திருமுக தர்சநம் தருவீராக
ப்ரணத தேஹினாம்—-உம்மை வணங்கிய எங்கள் பாபங்களைப் போக்குவீராக;
புல்லைத் தின்னும் பசுக்களை வளர்க்கும் எங்கள் இடங்களில்
ஸ்ரீ லக்ஷ்மீ வாஸம் செய்யும்படி அருளுவீராக;
பல தலைகளுடன் படம் விரித்து ஆடிய காளிங்க னுடைய தலைகளில்,
உமது பாத பத்மங்களை வைத்த மாதிரி ,எங்கள் ஹ்ருதயத்திலும்
உமது பாத பங்கஜங்களை வைத்து ,எங்கள் தாபத்தைப் போக்குவீராக;
புஷ்கரேக்ஷண—–தாமரை கண்ணா—உமது திருஷ்டி கடாக்ஷம் எங்கள் மீது படும்படி செய்வீராக;
உமது மதுரமான பேச்சுக்களால் ,எங்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்குவீராக;
உமது பேச்சு, மேதாவிகளின் மனங்களையும் சந்தோஷப் படுத்தக் கூடியது;
வீர—-உமது ஆக்ஜையை சிரமேற் கொண்டிருக்கும் ,
அதைச் செய்யத் தயாராக இருக்கும் எங்களுக்கு
உமது அதர பானத்தைக் கொடுத்து நாங்கள் உயிர் பிழைக்கும்படி செய்வீராக;
உமது கதாம்ருதம், மங்களங்களை அளிப்பவை;
உமது கீர்த்தனம் ஐஸ்வர்யங்களை வ்ருத்தி செய்பவை;
இதனால், எல்லாம் நிரம்பிய குண பூர்த்தி உள்ள மகாத்மாக்கள்,
உமது கீர்த்திகளை அடிக்கடி சொல்கிறார்கள்;
அடிக்கடி பாடிக் கேட்கிறார்கள்;
உமது இத்தகைய நாமஸ்மரணம், கீர்த்தனம் இவை,
எங்கள் பாபங்களை—கல்மிஷங்களை—அடியோடு அழிக்கின்றன;
ஹே—ப்ரிய—-புன்சிரிப்புள்ள, பிரேமை ததும்பும் உமது பார்வை —
பால லீலைகள்—–கோபர்களுக்குச் செய்த அதிசயச் செயல்கள்—
லீலா விநோதங்கள்—-எல்லாமே, எல்லோருடைய த்யானத்துக்கு உரியது; மங்களங்களைக் கொடுப்பது;
உமது ரஹஸ்யமான பேச்சுக்கள், கண் ஜாடைகள், சிரிப்பு, பார்வை,
செய்கைகள் எல்லாமே எங்கள் ஹ்ருதயத்தைத் தொட்டு,
எங்களை உமக்கு ஆட்படுத்தி அடிமையாக்கி, எங்களுடைய ஹ்ருதயத்தைப் பிளக்கின்றன
ஹே, நாத—- நீர் வ்ருந்தாவனத்தில் பசுக்களை மேய்த்து சஞ்சரிக்கும் போது
உமது பாதங்களை, சிலா,(கல்) , புல் ,முளை இவைகள் குத்தி புண்படுத்தியது,
எங்கள் மனத்தில் காயம் ஏற்பட்டது போல இருக்கிறது;
மனஸ் புண்பட்டு இருக்கிறது;
ஹே,வீர —ஒவ்வொரு நாள் சாயங்காலமும், நீர் பசுக்களுடன்
க்ருஹத்துக்குத் திரும்பும்போது, நீல மலர்களால் நிரம்பிய வனத்தைப் போல
உமது கேச பாசங்கள், உமது கரிய அழகிய திருமேனி,
பசுக்களின் சுவடுகளிலிருந்து கிளம்பிய புழுதி படிந்து வாடிய திருமுகம் ,
இவைகளைப் பார்க்கும்போது ,எங்களுக்கு என்ன தோன்றும் தெரியுமா !
தாமரைப் பூவில் தேனீக்களும் மகரந்தங்களும் உள்ளவை போலத் தோன்றும்;
கருத்த கேசங்கள் தேனீக்களைப் போலவும்
திரு முகம் மகரந்தம் போலவும் தோன்றும் ;
எங்கள் மனத்தில் மன்மத ரூபம் தோன்றும்;
நாங்கள், மன்மதனை மனஸ் ஸால் உபாசிப்பது போலத் தோன்றும்;
ஜனங்களின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்பவரே —-
ஸ்ரீ மகாலக்ஷ்மியாலும் ,ப்ரம்மாவாலும் அர்ச்சனை செய்யப்படும் உமது பாதங்கள்,
பூமி தேவிக்கு ஆபரணங்களைப் போல இருக்கின்றன;
சதா நாங்கள் த்யானம் செய்வதற்கு உரியதாக இருக்கின்றன;
வணங்குபவர்களுக்கு, காமதேனுவைப் போல ,
எதைக் கேட்டாலும் கொடுக்கச் சக்தி உள்ளவையாக இருக்கின்றன;
நித்தியமான சுகத்தை அளிப்பதாக இருக்கின்றன;
அப்பேற்பட்ட மகிமை உள்ள உமது சரண பத்மங்களை —
சுந்தரமான திருவடிகளை– எங்கள் ஹ்ருதயத்தில் இருத்தி அநுக்ரஹம் செய்வீராக ‘
ஹே, வேணு கோபாலா—–உமது திவ்ய உதடுகளில் பெருகும் அதர அம்ருதம்
எங்கள் சோகங்களை நாசம் செய்பவை;
வேணுவின் நாதம் எழும்போது, அந்த அம்ருத தாரைகள் பொங்குகின்றன;
அதர முத்தத்தினால் எழும் நாதம் ,எங்கள் துக்கங்களை அழிக்கிறது;
ஆசா பாசங்களை நாசம் செய்கிறது;
உம்மிடத்தில் பக்தியை வளரச் செய்கிறது;
உமது அதர அம்ருதத்தை புல்லாங்குழலுக்குக் கொடுத்ததைப் போல ,
எங்களுக்கும் பகிர்ந்து அளிப்பீராக,
பகிர்ந்து எங்களுக்கும் அதர பானம் கொடுப்பீராக
ஹே–பிரபோ—நீர் காட்டில் பசுக்களுடன் சஞ்சரிக்கும் அந்த அரைநாள் பொழுது,
அந்தப் பிரிவு—எங்களுக்கு –பல யுகங்களில் பிரிந்து இருப்பதைப் போல துக்கத்தை ஏற்படுத்துகிறது;
உமது குடில குந்தலம் — மற்றும் நாங்கள் கண் இமைத்தல் இவை
உமது பூரண சௌந்தர்யமான திருமுகத்தைத் தர்சிக்கவிடாமல் தடுக்கிறதே ?
இவை எல்லாம் ஸ்ருஷ்டி கர்த்தாவான ப்ரம்மாவுக்குத் தெரியாமல் அவர் ஜடமாக இருப்பாரோ !
எங்களுடைய மனஸ் ஸின் அனுபவங்களைப் பார்க்க முடியாதபடி
அவரின் ஸ்ருஷ்டி இருக்கிறதே, ஆச்சர்யம் !
ஹே,அச்யுதா—உமது புல்லாங்குழல் இசையைக் கேட்டதும்
எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மிடம் ஓடோடி வந்து இருக்கிறோம்.
நீயே எங்களுக்குக் கதி—-அடைக்கலம் என்று வந்திருக்கிறோம்;
பதி ,பிள்ளைகள், பந்துக்கள், சஹோதரர்கள் எல்லாரையும் த்யாகம் செய்து
நீயே எல்லாம் என்று வந்து இருக்கிறோம்
ஹே,பிரபோ—-ரகஸ்யமாக எங்களிடம் விளையாடி, பேசி,
எங்களிடம் உமக்குள்ள அன்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்;
எங்கள் ஹ்ருதயங்களைப் பிளந்து அதில் ஆசையை உண்டாக்கி,
அவைகளை, நீர் பகிரங்கமாகச் சொல்லும்போது ,உமது முக விகாஸம் பொலிவு அடையும்;
உமது அகன்ற மார்பு;
இதுவே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நித்ய வாஸம் செய்யும் வாசஸ் தலம் ;
உம்மைப் பிரியத்தால் அடைந்து உம்மையே காதலித்து அடி பணிந்து ,
நாமும் இப்படியே வாஸம் செய்யலாமே ,என்று மனம் மோஹம் அடைகிறது.
ஹே,விஸ்வ மங்களப்ரபு —–இந்த ஸ்தலத்தில் ஏற்பட்டுள்ள உமது அவதாரம்,
எங்களுக்கும் , எல்லாப் பிராணிகளுக்கும் துக்கங்களைப் போக்குகிறது;
சுந்தரவடிவம் மங்களத்தை ஏற்படுத்துகிறது;
நீரும், எங்களை, உம்முடைய பந்துக்கள் என்று ஸ்வீகரித்து, கபட வேஷத்தை விடுவீராக;
உம்மிடம் அசாத்திய பக்தி செலுத்தும் எங்களிடம் கபட வேஷத்தை விடுவீராக.
ஹே—-ப்ரிய— காட்டில் அலைந்து கல்லும் முள்ளும் குத்தும் போது ,
உமக்கு ஏற்படும் அந்த வலி ,எங்கள் ஹ்ருதய வலி ;
காரணம், உமது பாதாம்புஜங்கள்,எங்களது ஹ்ருதயத்தில் படிந்து இருக்கிறது;
உமக்கு வன சஞ்சார வலி
எங்களுக்கு ஹ்ருதய வலி;
இது பக்தியின் விஸ்லேஷ துக்கத்தின் உச்ச நிலை
( நாரதாதி மகரிஷிகள், விஸ்லேஷ துக்கத்தையே பக்தியின் உச்ச நிலையாகக் கொண்டாடி இருக்கிறார்கள் )
கோபிகைகள், இவ்வாறு விரஹ தாபத்தைப் பொறுக்க இயலாத துக்கத்துடன் கீதமாகப் பாடினார்கள்
ஸ்ரீ கோபிகா கீதம் அத்யாயம் நிறைவடைந்தது.
—————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply