நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–ஸ்ரீ திரு நெடும் தாண்டகம்-22-
நைவளம் –
கேட்டாரோடு சொன்னாரோடு வாசி அற -நைவிக்கும்படியான
அழகை உடைத்தான பண்ணை நுணுக்கி
நட்ட பாஷையை -குண யோகத்தால் –நைவளம் –என்று பேரிடுகிறது –
நுடங்கு கேள்வி இசை -என்னக் கடவது இறே –
பால்என்கோ! நான்கு வேதப் பயன்என்கோ! சமய நீதி
நூல்என்கோ! நுடங்கு கேள்வி இசைஎன்கோ! இவற்றுள் நல்ல
மேல்என்கோ! வினையின் மிக்க பயன்என்கோ! கண்ணன் என்கோ!
மால்என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே.–3-4-6-
ஓன்று –
அல்லாத இசைகளில் காட்டிலும் பிறரை வசீகரிக்க வற்றாய் இருக்கையும் –
இதுக்கு வசீக்ர்தராகா விட்டால் வேறு கதி அற்று இருக்கையும் -பற்ற அத்விதீயம் -என்கிறது –
(‘நைவளம்‘ என்று ஒரு பண்ணுக்குப் பெயர்.
பாட்டுப் பாடுகிறவர்களையும் பாட்டு கேட்கிறவர்களையும் நைவிக்கும்படியான வளத்தை யுடைய தாதல் பற்றி
நைவளமென்று பெயரிடப்பட்ட தென்று யோகார்த்தமும் அருளிச் செய்வர்.
மற்ற இசைகளிற் காட்டில் இந்த இசை பிறரை வசீகரி்க்கும் விஷயத்தில் இன்றியமையாததாதலாலும்
இதற்கு வசப்படா விட்டால் வேறு கதி யில்லாமையாலும் ‘நைவளம் ஒன்று‘ எனப்பட்டது.
கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,”நைவளம் பழநிய பாலை வல்லோன் கைவிர் நரம்பின் இம்மென இமிரும்…”(146-147)
நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப் பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும்
யாழ் நரம்பின் ஓசை போன்ற…. என்பதாம்.
மேலும், இடை கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க் காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.
“பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ
நைவளம் பழநிய நயம் தெரி பாலை கைவல் பாண் மகள் கடனறிந்து இயக்க”- சிறுபாணாற்றுப்படை (34-37)
பொற்கம்பியினை யொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையை யுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,
நட்டராகம் என்னும் பாலைப் பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமை யறிந்து வாசிக்க…. என்பதாம்.
மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப்பெறும் இராகமாகும்.
பாலை யாழில் வாசிக்கப் பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே.
பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப் பண்கள், பகற் பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப் பண்கள்
எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக் கருவிகள் என இயற்கையோடும்,
இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசை பட வாழ்ந்தார்கள்.)
நைவளம் என்னும்-குறிஞ்சி யாழ்ப் பண்ணின் வகையாகிய நட்டபாடைப்பண் போல
கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,
“நைவளம் பழநிய பாலை வல்லோன் கைவிர் நரம்பின் இம்மென இமிரும்…” (146-147)
நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப்பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும் யாழ்நரம்பின் ஓசை போன்ற…. என்பதாம்.
மேலும், இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க் காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.
“பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ
நைவளம் பழநிய நயம்தெரி பாலை கைவல் பாண்மகள் கடனறிந்து இயக்க”- சிறுபாணாற்றுப்படை (34-37)
பொற்கம்பியினையொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி, நட்டராகம் என்னும் பாலைப் பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமை யறிந்து வாசிக்க…. என்பதாம்.
மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப் பெறும் இராகமாகும். பாலையாழில் வாசிக்கப்பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே.
பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப்பண்கள், பகற்பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப் பண்கள் எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக் கருவிகள் என இயற்கையோடும், இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசை பட வாழ்ந்தார்கள்.
சங்க இலக்கியங்களில் பண்கள் பற்றிய குறிப்புகள் காணப் பெறுகின்றன.
ஆம்பல் பண், காஞ்சிப் பண், குறிஞ்சிப் பண், நைவளம் போன்ற பண்களைப் பற்றிய குறிப்புகள் உள.
- ஆம்பல்பண்
ஆம்பல் என்பது ஒருவகைப் பண்ணாகும்.
இப்பண்ணைப் பற்றிய செய்திகள் நற்றிணை (123 : 10), ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு (221-222)ஆகிய பாடல்களில் காணப் பெறுகின்றன.
கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர்.
தட்டை, தண்ணுமை போன்ற இசைக் கருவிகளுடன் மாலைக் காலத்தில் இசைத்து மகிழ்கின்றனர்.
| ஆம்பலங் குழலின் ஏங்கி (நற்றிணை : 123: 10) |
- காஞ்சிப் பண்
காஞ்சிப் பண் துயருறும் மக்களின் துயரம் போக்கப் பயன்படுத்தப்பட்டு்ள்ளது.
விழுப்புண் பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் வருத்தம் தீர இப்பண்ணினைப் பாடிய குறிப்பு, புறநானூறு 296-யில் காணப்பெறுகிறது.
- குறிஞ்சிப் பண்
மலையுறை தெய்வங்களை மகிழ்விக்க, கூத்தரும் விறலியரும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியதாக மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.
- நைவளம்
நைவளம் எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு(146), சிறுபாணாற்றுப்படை(36-38),பரிபாடல்(18-20-21) வரிகளில் குறிப்புகள் உள. இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும், பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
மேலும் குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற பண்களைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. இப்பண்கள் இசைக்கும் காலம், நிலம், இப்பண்கள் தரும் உணர்வுகள் பற்றியும் தமிழர் இசை எனும் நூலில் ஏ.என். பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.
|
வ. எண்
|
பண்
|
காலம்
|
நிலம்
|
உணர்வு
|
|
1.
|
ஆம்பல்
|
மாலை, முன்னிரவு
|
முல்லை
|
ஏக்கம்
|
|
2.
|
காஞ்சி
|
—-
|
—-
|
துன்பம்
|
|
3.
|
காமரம்
|
—-
|
மருதம்
|
இன்பம்
|
|
4.
|
குறிஞ்சி
|
நள்ளிரவு
|
குறிஞ்சி
|
அச்சம்
|
|
5.
|
செவ்வழி
|
மாலை
|
முல்லை, நெய்தல்
|
இரக்கம்
|
|
6.
|
நைவளம்
|
பகல்
|
—-
|
இன்பம்
|
|
7.
|
பஞ்சுரம்
|
—-
|
பாலை
|
அச்சம்
|
|
8.
|
படுமலை
|
—-
|
—-
|
இன்பம்
|
|
9.
|
பாலை
|
நண்பகல்
|
பாலை
|
இன்பம்
|
|
10.
|
மருதம்
|
காலை
|
மருதம்
|
இன்பம்
|
|
11.
|
விளரி
|
—-
|
நெய்தல்
|
ஏக்கம்
|
.
|
1150.
|
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும். வையம் நுகர் கொற்றவனும். மா தவரும். அல்லார் கைகள் தலைபுக்கன; கருத்துளதும் எல்லாம் தெய்வம் என உற்ற; உடல் சிந்தை வசம் அன்றோ? |
|
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்-நைவளம் என்னும்
குறிஞ்சி யாழ்ப் பண்ணின் வகையாகிய நட்டபாடைப்பண் போல இனியமொழிபேசும் பிராட்டி. அருகே நெருங்கி வருகின்ற அளவில்; வையம் நுகர் கொற்றவனும் மாதவரும் அல்லார் கைகள் தலைபுக்கன -பூவுலகை ஆண்டு. அதன் (இன்பதுன்பங்களை) நுகர்கின்ற தசரத வேந்தனும் (வசிட்டன். விசுவாமித்திரன்) ஆகிய முனி சிரேட்டர களும் அல்லாத அனைவர் கரங்களும் (பிராட்டியை வணங்குமுகமாக) அவரவர் தலைகளின் மேலே (இயல்பாகவே) சென்று குவிந்தன; கருத்து. உளதும் எல்லாம் தெய்வம் என உற்ற – ஏன் எனில். அனைவரது மனமும். மற்றும் உள்ள புத்தி முதலிய அந்தக் கரணங்கள் யாவையும் (பிராட்டியைத்) தெய்வம் என்றே கருதின; உடல் சிந்தை வசம் அன்றோ? – (செயல் கருவியாகிய) உடல் (எண்ணுதற் கருவியாகிய) மனத்தின் வசப்பட்டுச் செயல்படுவதன்றோ? வையம் நுகர் மாதவர் என்பதில். இரட்டுற மொழிதலாகக் கொண்டு
இராமனையும் சனகனையும் அடக்குவர். கருத்தும் (மற்றும்) உளதும் எல்லாம் எனற்பாலது உம்மை விகாரத்தால் தொக்கு கருத்துளதும் எல்லாம் என்றாகியது. பிராட்டியைத் தெய்வம் எனத் தான் கருதும் கருதுகோளை. இடம் அறிந்து ஏற்றி. வணங்குவித்த கவிஞர்பிரான் திறம் உணர்க. உளதும் எல்லாம் – ஒருமை பன்மை மயக்கம். சீதை வணங்குரியார் சிலர் தவிர. அவையிருந்த ஏனையோர் அனைவரின் கரங்களும் சிரமேற் குவிந்தன என்பதற்கு. உளநூல் அறிஞரான கவிஞர் பிரான் கூறும் காரணம்: உடல் சிந்தை வசம் என்பது. சிந்தை சீதையைத் தெய்வம் என நினைக்க. கடையுடைக் காவலாளர் (மெ.நா.9) அனைவோர் கரங்களும் தெழுது செயற்படுத்தின. மனந்தூயதாயின். ஒழிந்த மொழியும் செயலும் தாமே தூயவாகும் எனும் அடிப்படையில் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” (திருக். 34) என மொழிந்தமையும் இங்கு நினைக. 34 |
|
சம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதற்பாட்டு நைவளம் (நட்டபாடை) என்னும் பண்ணிலும்
காரைக்கால் அம்மையாரிம் சில முதல் பாட்டுகளும் இதே பண்ணில் பாடப்பட்டதும் ஒப்புநோக்கத் தக்கது.
————————————————————————————————————————–
2. தக்கராகம் – காம்போதி
3. தக்கேசி – காம்போதி
4. பழந்தக்கராகம் – சுத்தசாவேரி
5. குறிஞ்சி – ஹரிகாம்போதி
6. வியாழக்குறிஞ்சி – ஸெளராஷ்ட்ரம்
7. அந்தாளிக்குறிஞ்சி – சாமா
8. மேகராகக் குறிஞ்சி – நீலாம்பரி
9. யாழ்மூரி – அடாணா
10. காந்தாரம் – நவரோஸ்
11. பியந்தைக் காந்தாரம் – நவரோஸ்
12. கொல்லி – நவரோஸ்
13. கொல்லிக் கௌவாணம் – நவரோஸ்
14. இந்தளம் – மாயாமாளவகௌளை
15. சீகாமரம் – நாதநாமக்ரியா
16. நட்டராகம் – பந்துவராளி
17. சாதாரி – பந்துவராளி
18. செவ்வழி – யதுகுலகாம்போதி
19. காந்தார பஞ்சமம் – கேதாரகௌளை
20. பஞ்சமம் – ஆகிரி
21. பழம்பஞ்சரம் சங்கராபரணம்
22. கௌசிகம் பைரவி
23. புறநீர்மை (நேர்திறம்) – பூபாளம், பௌளை
24. செந்துருத்தி (செந்திறம்) – மத்யமாவதி
25. திருக்குறுந்தொகை – மாயாமாளவகௌளை
26. திருத்தாண்டகம் – ஹரிகாம்போதி
27.திருநேரிசை – நவரோஸ் (ஸாமகான இசை போல)
28. திருவிருத்தம் – பைரவி, சங்கராபரணம், அல்லது ஒத்த ராகங்கள்.
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply