திருநாட்டுக்குப் புறப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்ட உகப்பின் மிகுதியினால் ஸ்தாவரஜங்கமங்களுக்குண்டான வேறுபாட்டை யருளிச்செய்கிறார். தமக்கான பேறுதன்னை இங்ஙனே அசலிட்டுச் சொல்லுகிறபடி,
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-
பதவுரை
| என் அப்பன் |
– |
அஸ்மத் ஸ்வாமியாய் |
| வாழ்புகழ் |
– |
நித்ய கீர்த்தியுக்தனான |
| நாரணன் |
– |
ஸ்ரீமந் நாராயணனுடைய |
| தமரை |
– |
அடியார்களை |
| கண்டு உகந்து |
– |
வரக்கண்டு களித்து |
| சூழ் விசும்பு |
– |
எங்கும்பரந்த ஆகாசத்திலே |
| அணிமுகில் |
– |
அழகிய மேகங்கள் |
| தூரியம் முழக்கின |
– |
வாத்ய கோஷம் செய்தன போன்றிருந்தன; |
| ஆழ் கடல் |
– |
ஆழமான கடல்கள் |
| அலை திரை |
– |
அலைந்து வருகிற திரைகளை |
| கை எடுத்து |
– |
கையாகக் கொண்டு |
| ஆடின |
– |
கூத்தாடின; |
| ஏழ் பொழிலும் |
– |
ஸப்த த்வீபங்களும் |
| வளம் ஏந்திய |
– |
உபஹாரங்களைக் கையேந்தின. |
எங்குஞ் சூழ்ந்த ஆகாசப்பரப்படங்கலும் ஆபரணம் போன்று விளங்குகின்ற மேகங்களின் முழக்கம் மங்கள வாத்ய கோஷம்போல் செவிப்பட்டது.
ஆழ்ந்த கடல்களானவை அலையா நின்றுள்ள திரைகளாகிற கைகளை யெடுத்துக் கூத்தானெ.
கீழே சொன்ன மங்களவாத்ய கோஷத்திற்குச் சேர இந்த நா;த்;தனமும் மங்கலமாகக் கூடிற்றென்கை. ஸப்தத்வ{பங்களும் புதுக்கணித்தனர்; (அல்லது) உபஹாரங்களை ஏந்தி நின்றன.
இதெல்லாம் யாரைக் கண்டென்ன; (என்னப்பன் வாழ்புகழ் நாரணன்தமரைக் கண்டுகந்தே) ஸ்ரீவைகுண்டத்திற்கு வரப்புறப்பட்ட மஹாபாகவதர்களைக் கண்டு.
இது ஒருவருடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டுச் செய்ததன்று; ப்ரீதி உள்ளடங்காமற் செய்தது என்பதைக் காட்டும் உகந்து என்பது.
————
மேலுண்டான லோகங்கள் பண்;ணின ஸத்காரங்களை யருளிச்செய்கிறாரிதில்;
நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
பதவுரை
| நாரணன் தமரை கண்டு |
– |
பாகவதர்களைக் கண்டு |
| நல் நீர் முகில் |
– |
நல்ல தீர்த்தம் நிறைந்த மேகமானது |
| உகந்து |
– |
மகிழ்ந்து |
| உயர் விண்ணில் |
– |
உயர்ந்த ஆகாசத்திலே |
| பூரணம் பொன் குடம் பூர்த்தது |
– |
பூர்ண கும்பம் நிறைத்து வைத்தாற்போன்;றிருந்தது; |
| நீர் அணி கடல்கள் |
– |
நீரை வஹிக்கிற கடல்களானவை |
| நின்று ஆர்த்தின |
– |
நிலைநின்று கோஷித்தன |
| உலகு |
– |
அந்தந்த லோகங்களிலுள்ளார் |
| எங்கும் தொழுதுனர் |
|
எங்கும் தொழுதுகொண்டிருந்தார்கள் |
| நெடுவரை தோரணம் நிரைத்து |
– |
பெரியமலைகளைத் தோரணங்களாக ஒழுங்குபடுத்தி. |
நல்ல தீர்த்தம் நிரம்பிய மேகங்களானவை நாராயணன் தமரைக் கண்டவுகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக அமைந்தன.
கீழ்ப்பாட்டிலே சூழ்விசும்பணி முகில் தூரியமுழக்கினவென்று சொல்லியிருக்கச் செய்தேயும் அந்த ஒரு கிஞ்சித்காரமும் பண்ணினபோலும்.
“ஆகாசசரரான தேவர்களாலே ஆகாசமெல்லாம் பூர்ண கும்பம் வைக்கப்பட்டதென்றுமாம்’ என்பது ஈடு.
நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன-நீரணிந்த கடல்களானவை ஒரு கால் ஆடினோமே யென்றிராமல் ஹா;ஷத்தாலே நிரந்தரமாக ஆர்த்துக்கொண்ன்.
(நெடுவரையித்யாதி.) அந்தந்த லோகங்களிலுள்ளோர் பெரிய மலைபோலே யிருந்துள்ள தோரண ஸ்தம்பங்களை நட்டுத் தாங்களும் தொழுதார்கள்.
உலகு என்றது உலகர் என்றபடி; உயந்தோர் என்று பொருள்.
————
ஆதிவாஹிக லோகங்களென்று சிலவுண்டு; வழிநடத்துகிறவர்களாமவர்கள்; அவர்கள் எதிரே வந்து பூமார் பொழிந்து கொண்;டாடும்படியை யருளிச்செய்கிறார்.
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-
பதவுரை
| அன்று |
– |
முன்பொருகால் |
| பூமி அளந்தவன் தமர் முன்னே |
– |
பூமியை அளந்துகொண்ட பகவானது அடியார்களின் ஸன்னிதியிலே |
| தூபம் |
– |
தூபம் ஸமரிப்பிப்பதோடு |
| நல் மலர்மழை |
– |
நன்றான புஷ்பவர்ஷத்தைப் பொழிகின்றவர்களாய்க்கொண்டு |
| உலகர்கள் |
– |
அந்தந்தலோகங்களிலுள்ளவர்கள் |
| தொழுதனர் |
– |
தொழுதார்கள்; |
| முனிவர்கள் |
– |
ஆங்காங்குள்ளமுனிவர்கள் (தாங்கள் மௌனமாயிருக்கும் விரதத்தை தவிர்ந்து) |
| வைகுந்தர்க்கு |
– |
ஸ்ரீ வைகுண்டத்தை நோக்கிப் போமவர்களுக்கு |
| வழி இது என்று |
– |
இதுதான் வழி என்று சொல்லி |
| எதிரே வந்து |
– |
அபிமுகர்களாக வந்து |
| எழுமின் என்று |
– |
எழுந்தருளவேணும் எழுந்தருளவேணுமென்று எச்சாரிக்கையிட்டு |
| இருமருங்கு இசைத்தனர் |
– |
இருபக்கங்களிலும் சொன்னார்கள் |
உலகர்கள் தொழுதனர்-இங்குப் பொதுவாக உலகர்களென்றது ஆதிவாஹிக தேசங்களிலுள்ளார்களைச் சொல்லும். அவர்கள் கைபடைத்த பயன் பெற்றோற்மென்று தொழுது நின்றார்கள்;
அவ்வளவோடும் நில்லாமல் தூபத்தையும் நல்ல மலர்மழையையும் ப்ரயோகித்துத் தொழுதார்கள்.
என்னபாசுரஞ் சொல்லிக் கொண்டு தொழுதார்களென்னில்; (பூமியன்றளத்தவன் தமர்முன்னே) ‘எம்பெருமான் உலகளந்தருளின் செயலுக்குத்அதற்கு று அடிமைப்பட்டவர்களன்றோ இவர்கள் என்று சொல்லிக் கொண்டே தொழுதார்களாயிற்று.
அங்குள்ள முனிவர்களும் இரண்டருகும் நின்றுகொண்டு ‘இங்கே யெழுந்தருளவேணும், இங்கே யெழுந்தருளவேணும்’ என்று நல்வரவு கூறி உபசாரித்தார்கள்; பரமபதம் போவார்க்கு இதுவே வழியென்று எதிரேவந்து சொன்னார்கள்.
————–
மேலுலகங்களில் தேவர்கள், இவர்கள் போகிற வழிகளிலே தங்குகைக்குத் தோப்புகள் சமைத்தும் வாத்யகோஷம் முதலானவற்றைப் பண்ணியும் கொண்டாடும்படியைக் கூறுகிறார்.
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-
பதவுரை
| மது விர் துழாய் முடி, |
– |
தேன் பெருகுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலேயுடைய |
| மாதவன் |
– |
திருமாலினது |
| தமர்க்கு |
– |
அடியாரான பாகவதர்களுக்கு தேவர்கள் |
| எதிரி எதிரி |
– |
இவர்கள் போகிற வழிக்கு முன்னே |
| இருப்பு இடம் வகுத்தனர் |
– |
தங்குமிடங்களைச் சமைத்தார்கள் |
| கதிரவர் |
– |
த்வாதசாதித்யர்களும் |
| அவர் அவர் |
– |
மற்றுமுள்ளவர்களும் ஆதி வாஹிக கணங்களெல்லாம் |
| கை நிரை காட்டினர் |
– |
பார்த்தருளீர் பார்த்தருளீர்!! என்று கைகாட்டிக் கொண்டேசென்றார்கள் |
| அதிரி குரல் |
– |
அதிருகிற முழக்கத்தையுடைய |
| முரசங்கள் |
– |
போரிகளானவை |
| அலைகடல் முழக்கு ஒத்த |
– |
அலையெறிகின்ற ஸமுத்ரகாரிஜனை போன்றிருந்தனர். |
இவர்கள் இங்கே தங்கிப் போவார்களோ! இங்கே தங்கிப் போவார்களோ!’ என்னும் நசையாலே பார்த்தவிடமெங்கும் தேவர்கள் தோப்புச் சமைத்தார்கள். போகிறவர்கள் அங்கே தங்கிப் போகாமற் போனாலும் தங்களுடைய ஸ்வரூப ஸித்திக்காகக் கிஞ்சித்காரிக்கவேணுமே.
“ராஜாக்கள் ஒருகால் கண்டு சிரித்து ‘அழகிது’ என்று போகைக்காக மானாவி சமைப்பாரைப்போலே’ என்பது ஈடு.
(மானாவி யென்றது மஹாநவமி யென்றபடி. மஹா நவமி யுத்ஸவக் காட்சியை மானாவியென்று இலக்கணையாற் சொல்லுகிறபடி.
கதிரவரவரவர் கைந்நிரைகாட்டினர்-ஆதித்யர்கள் நிலைவிளக்குப்போலே ‘இங்ஙனே யெழுந்தருள்க, இங்ஙனே யெழுந்தருள்க, பார்த்தருள்க, பார்த்தருள்க, என்று கைகளை நிரையே காட்டினார்கள். அர்ச்சிராதிகளான ஆதிவாஹிக கணங்களைச் சொன்னதாகவுமாம்.
(அதிரி குரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த) அதிரல நின்றுள்ள தொனியையுடைய முராஜவாத்யங்கள் அலையெறிகின்ற கடல்போலே முழங்கின.
இப்படிப்பட்ட ஸத்காரங்கள் நடைபெறுவது யாவர்க்கு? என்னில்; மதுவிர்துழாய் முடி மாதவன் தமர்க்கே-எம்பெருமானுடைய திவ்யாலங்காரங்களிலேயீடுபட்டவர்களும், பிராட்டி முன்னாகப் பணிந்தவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு.
இவ்விடத்து நம்;பிள்ளையீட்டிலே அற்புதமானவொரு ஸ்ரீஸீக்தியுள்ளது; “இங்கே வைஷ்ணவர்களென்பதுவே ஹேதுவாகப் பங்குபெறாதே திரியுண்ட வைஷ்ணவர்களை அங்குள்ளார் எதிரிகொண்டு இருப்பிடங்கள் கொடுக்கப்படுகிறபடி” என்று.
அதாவது-திருநாட்டிலே இப்படிப்பட்ட ஸத்காரம்; பெறும் ஸ்ரீவைஷ்ணவர்கள் இந்த நாட்டில் வர்த்திக்கிற காலத்திலே இங்குள்ளவர்களால் ஒரு ஸத்காரமும் பெறாததோடு திரஸ்காரமும் பெறுகிறார்களே யென்று திருவுள்ளம் நொந்து அருளிச்செய்தபடி.
இதற்காக ஒரு இதிஹாஸமுமருளிச் செய்கிறார்-“மிளகாழ்வான் படைவீட்டிலே அகரத்துக்குச் செல்ல ‘நீ ஆந்தராளிகன், உனக்குப்பங்கில்லைக் என்ன, ‘நன்மையல் குறையுண்டாய்ச் சொல்லுகிறிகோளோ? அன்றே’ என்ன,
‘நன்மையில் குறையில்லை, இதிறேஹேது’ என்ன
‘நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்கள் வைஷ்ணவர்களென்று கைவிடப் பெற்றோமிறே’ என்று புடவையை முடிந்து எறட்டுக் கூத்தாடினான்” என்று.
(இதன் கருத்தாவது) மிளகாழ்வானென்கிற ஸ்ரீ வைஷ்ணவர், அரசன் வித்வானாகையாலே தமக்கும் அவை கிடைக்கூடுமென்றெண்ணி அவ்வரசனிடம் சென்றார்; அரசன் வீரசைவனாகையாலே இவர்க்கு ஒன்றும் தரமாட்டேனென்றான்; ‘ஏன் எனக்குத் தரமாட்டேனென்கிறாய்? எனக்குத் தர்க்கம் தெரியாதா? வியாகரணம் தெரியாதா? மீமாம்ஸை தெரியாதா? எந்த சாஸ்த்ரத்தில் வேணுமானாலும் பாரிiகூஷ செய்துகொள்ளாலாமே’ என்றார்.
அதற்கு அரசன் ‘ஓய்! உமக்குப் பாண்டித்யத்தில் குறையொன்றும் நினைத்திலேன்; நீர் மஹாவித்வானென்பதறிவேன்; ஆனால் நீர் வைஷ்ணவராகை யாலே தரமாட்டேன்’ என்றான்.
அதுகேட்டு மிளகாழ்வான் ‘உண்மையில் நமக்கு வைஷ்ணத்வம் இல்லையாகிலும் இவனுடைய எண்ணத்தினாலாவது நமக்கு வைஷ்ணத்வ இல்லையாகிலும் இவனுடைய எண்ணத்தனாலாவது நமக்கு வைஷ்ணத்;வம் முண்டாகப் பெற்றதே! என்று ஆனந்தக் கூத்தடித்து க்ராமபூமிகள் பெற்றதற்கு மேற்பட மகிழ்ந்தாராம்.
இதனால் ப்ராக்ருதர்கள் வைஷ்ணவனென்று திரஸ்காரிப்பதும் நன்றேயென்று காட்டினபடி.
இராவணன் த்வாம் து திக் குலபாம்ஸநம் என்று சொல்லி கர்ஹித்ததையே விபீஷணாழ்வான் சிறப்பாகக் கொண்டானிறே.
————
***- வாசலில் வானவரென்ரது அர்ச்சிராதி மார்க்கத்திலே தலைநின்ற வருண இந்த்ர ப்ரஜாபதிகளை, அவர்கள் மதவன்தமரென்று கொண்டாடினார்களம். இவர்கள் பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயித்த அந்தப்புரபரிகர பூதர்களென்று சொல்லிக் கொண்டாடினார்களாம்.
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-
பதவுரை
| வானவர் |
– |
வருணன் இந்திரன் பிரஜாபதி ஆகிய தேவர்கள் |
| வாசலில் |
– |
தம்தம் ஸ்தானங்களின் வாசல்களிலே வந்து |
| மாதவன் தமர் என்று |
– |
‘இவர்கள் பரமபாகவதர்கள்‘ என்று சொல்லி ஆதரித்து |
| போதுமின் |
– |
‘இங்ஙனே எழுந்தருளுங்கள்! |
| எமது இடம் புகுதுக |
– |
எங்களது அதிகார ஸ்தலங்களிலே பிரவேசியுங்கள் |
| என்றலும் |
– |
என்று சொன்னவாறே |
| வேதம் நல் வாயவர் |
– |
(மேலுலகங்களிலே) வைதிகராயுள்ளவர்கள் |
| வேள்வி உள்மடுத்து |
– |
தாங்கள் செய்த தேவபூஜைகளின் பலன்களை ஸமர்பிக்க |
| கின்னரர் கெருடர்கள் |
– |
கின்னர்ர்களும், கருடர்களும் |
| கீதங்கள் பாடினர் |
– |
கீதங்களைப் பாடினார்கள் |
போதுமின் எமதிடம் புகுதுக – ‘இங்ஙனே யெழுந்தருளவேணும், எங்களதிகாரங்களைக் கைக்கொள்ளவேணும்‘ என்று பிரார்த்தித்தார்களாம்.
அப்படி அவர்கள் ப்ரார்த்திக்கிறவளவிலே கின்னரர்களும், கருடர்களும் பாட்டுக்களைப் பாடினார்கள், கின்னர தேசமென்றும் கருடதேசமென்றும் அங்கே சில நாடுகளுண்டு, அந்நாடுகளிலுள்ளார் பாடினார்களென்றபடி.
(வேதநல்வாயவர் வேள்வியுள்மடுத்தே) மேலுலகங்களில் வைதிகர்களாய்க்கொண்டு ஸமாராதனம் பண்ணுமவர்கள் தங்கள் ஸமாராதன பலன்களை இவர்களது திருவடிகளிலே ஸமர்ப்பித்தார்கள்.
முக்திக்குச் சொல்லுகிறவிவர்கள் எதையும் விரும்பாமற் சென்றாலும் தங்கள் தங்களதிகாரங்களைக் கொடுப்பாரும் பாடுவாரும் யாகபலன்களை ஸமர்ப்பிப்பாருமாய் நிற்பது அவரவர்கள் ஸத்தை பெறுவதற்காகவென்க.
———
திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினபடியை யருளிச்செய்கிறார்.
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-
பதவுரை
| வேள்வி உள் மடுத்தலும் |
– |
வைதிகர்கள் தம்தம் தேவ பூஜா பலன்களை ஸமரிப்பித்தவளவிலே |
| விரை கமிழ |
– |
பரிமளம் மிக்க |
| நறுபுகை |
– |
ஸீகந்த தூபங்களானவை |
| எங்கும் கலந்து |
– |
எங்கும் வியாபிக்க |
| காளங்கள் வலம் புரி |
– |
திருச்சின்னங்களையும் சங்கு களையும் |
| இசைத்தனர் |
– |
ஊதினார்கள் |
| வாள் ஒண் கண் மடந்தையர் |
– |
ஒளிமிக்க கண்களையுடைய தேவஸ்த்ர்கள் |
| ஆழியான் தமர் |
– |
“திருவாழியை யேந்திய எம்பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களே! |
| வானகம் ஆண் மின்கள் என்று |
– |
இந்த ஸ்வர்க்காதிபதங்களை ஆளுங்கோள்” என்று சொல்லி |
| மகிழ்ந்து வாழ்த்தினா |
– |
ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள். |
வேள்வியுள் மடுத்தலும்-கீழ்ப்பாட்டிற் சொன்ன யாகபல ஸமரிப்பணம் நடைபெற்றவளவிலே யென்றபடி.
வேறே சிலர்நறுமணம் மிக்க தூபங்களையிட்டார்கள்.
வேறே சிலர்காளங்களையும் சங்குகளையும் ஒலிப்பித்தார்கள் காளமென்பது திருச்சின்னம்; காஹளம் காஹளீ என்;பர்வடநுற்லார்.
காஹன மென்ற சொல்லே காளமெனத் திரிந்தது.
ஆழியான்தமர் வானகம் ஆண்மின்கள் என்று வாளொண்கண் மடந்தையர் மகிழ்ந்து வாழ்த்தினர்-
எம்பெருமானுடைய கையுந்திருவாழியுமான அழகிலே யீடுபட்டவர்களன்றோ நீங்கள்; வாருங்கள்! இவ்விடத்தை யாறுங்கள்! என்று சொல்லி திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினர்.
வாளொண்கண் என்ற அடைமொழியின் கருத்தை நம்பிள்ளை விவாரித்தருளுகிறார் காண்மின்-“தேசாந்தரத்தில் நின்றும் போந்த ப்ரைஜையைத் தாய்மார் குளிரப் பார்க்குமாபோலே ஒளியையுடைய அழகிய கண்களாலே குளிர நோக்கினபடி”.
(மகிழ்ந்து) என்பதனால் ஒருவருடைய நிர்ப்பந்தத்திற்காகச் செய்கிறார்களல்லர், ப்ரீதி தூண்டச் செய்கிறார்களென்பது போதரும்
முடிவில் நம்பிள்ளை ஸ்ரீஸீக்தி;-“இங்கு பகவத் ஸம்பந்தமே ஹேதுவாக நீசராலே பரிபூதனாய்ப் போந்தவன் சாரிர வியோக ஸமநந்தரத்தில் தங்களுக்கு அவ்வருகில்லா தார் கொண்டாடும்படியிறே பெறும்பேறு.” தங்களுக்கு அவ்வருகில்லாதாரென்றது எல்லார் எம் மேம்பட்டவர்களென்றபடி.
————-
மருத் கணங்களும் வஸீகணங்களும் தங்களுடைய எல்லைக்கு அப்பாலும் தொடர்ந்துவந்து தோத்திரம் செய்யும்படி சொல்லுகிறது. வாளொண்கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே என்று கீழ்ப்பாட்டில் சொன்னது தன்னையே மீண்டும் “மடந்தையர் வாழ்த்தலும்” என்று அநுபாஷிப்பதானது அந்த வாழ்த்துதலிலுண்டான ஆதாரதிசயத்தினாலென்க.
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-
பதவுரை
| தொடுகடல் கிடந்த |
– |
அகாதமான கடலிலே திருக்கண் வளர்ந்தருளின் |
| எம் கேசவன் |
– |
எம்பெருமானாய் |
| கிளர் ஒளி மணி முடி |
– |
கிளர்ந்தவொளியையுடைய ரத்னகிர்டத்தையணிந்த வனாய்க்கொண்டு |
| குடந்தை |
– |
திருக்குடத்தையிலே கண் வளர்ந்தருளுகிற |
| எம் கோவலன் |
– |
எமது கோபாலனுக்கு |
| குடி அடியார்க்கு |
– |
குலங்குலமாக அடிமைப்பட்டவர்கள் விஷயத்திலே |
| மடந்தையர்
வாழ்த்தலும் |
– |
அப்ஸலஸ்ஸீக்கள் பல்லாண்டு பாடினவளவிலே |
| மருதரும் வசுக்களும் |
– |
மருந்துக்களும் அஷ்டவசுக்களும் |
| எங்கும் தொடர்ந்து |
– |
போமிடமெங்கும் தொடர்ந்துவந்து |
| தோத்திரம் சொல்லினர் |
– |
பல்லாண்டு பாடினார்கள் |
திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் வாழ்த்தின வளவிலே, (மருதரும் வசுக்களும் எங்குந்தொடர்ந்து தோத்திரம் சொல்லினர்). மருத் கணங்களும் வஸீ கணங்களும் தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாமிடமெங்குஞ் சென்று புகழ்ந்தார்கள்.
இங்கே ஈடு!-“ஒரு நிமேஷ மாத்திரத்திலே ஒரு லோகத்தில் நின்றும் லோகாந்தரத்தேறப் போமவர்களாகையாலே, தங்கள் எல்லைக்குள்ளில் புகழ்ந்தவளவால் பரியாப்தி பிறவாமையாலே தொடர்ந்து புகழ்ந்தார்கள்.
அவர்கள் தாங்கள் சடக்கெனப்போகிற விதுக்கு அடி என்னென்னில்;
தாங்கள் கண்ணன் விண்ணுற்ர் தொழவே சாரிகின்றது சங்கம் என்றும்
காண்பதெஞ்ஞான்று கொலோ என்றும்
மாகவைகுந்தம் காண்பதற்கென மனமேகமெண்ணும் என்றும்
உடன் கூடுவதென்று கொலோ என்று மிருக்கையாலும்
ந ஜீவேயம் கூஷணமபி என்றிருக்குமவன் கருத்தறியுமவர்களாகையாலும்” என்று.
வழியில் ஆதாரிப்பவர்களெல்லாரும் என்னவென்று சொல்லி ஆதாரிக்கிறார்களெனன்னில்; (குடந்தை யெங்கோவலன் குடியடியார்க்கே) இவர்கள் திருக்குடந்தை யெம்பெருமானிடத்திலே குடிகுடியாக அடிமைப்பட்டவர்களென்று சொல்லிக் கொண்டு ஆதாரிக்கிறார்களாம்.
இதனால், நம்மாழ்வார்க்குத் திருநாட்டிலுங்கூட மறக்கமுடியாதபடி திருக்குடந்தைப்பதியின் அநுபவம் செல்லாநின்றதென்று தெரியவரும்.
திவ்யப்பிரபந்தங்களெல்லாம் லோபமடைந்திருந்தவொரு கால விசேஷத்தில் ஸ்ரீமந் நாதமுன்கிள் அவற்றைப் புநருத்தாரஞ் செய்வதற்குத் திருக்குடந்தைப்பதி விஷயமான ஆராவமுதே யென்கிற திருவாய்மொழியே மூலகாரணமாயிற்றென்று ஜதியுமுளது.
த்ர்காலஜ்ஞரான ஆழ்வார் திருவுள்ளத்தில் இது முன்னமே படிந்திருந்தனால் இதையிட்டும் இங்குத் திருக்குடந்தைப் புகழ்ச்சி ப்ராப்தமாயிற்றென்னலாம்.
திருமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய திருவுள்ளத்தையே பின்பற்றிப் பேசுகிறவராதலால்,
நம்மாழ்வார்க்குத் திருக்குடந்தையில் அளவுகடந்த அபிநிவேச முண்டென்பதை யறிந்தே தாம்
திருமொழிபாடத் தொடங்கும்போதே தூவி சேரன்னம் துணையோடும் புணரும் சூழ் புனற்குடந்தையே தொழுது என்றும்,
சொற்பொருளாளீர்சொல்லுகேன் வம்மின் சூழ்புனற் குடந்தையே தொழுவின் என்றும் அருளிச்செய்து,
சரமப் பிரபந்தமாகிய திருநெடுந் தாண்டகத்தின் முடிவிலும் தண்குடத்தைக் கிடந்தமாலை நெடியானையடிநாயேன் நினைந்திட்டேனே என்று திருக்குடத்தையையே பேசித் தலைக்கட்டினார்.
அன்றியும் திருக்குடந்தைக் கென்றே தனிப் பிரபந்தமொன்று (திருவெழு கூற்றிருக்i) திருவாய்மலர்ந்தருளினார்.
—————
ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்திற்குப் புறம்பாக நீத்ய ஸூரிகள் இவர்களை எதிரிகொள்ளும்படி சொல்லுகிறது இப்பாட்டில்,
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-
பதவுரை
| இவர் கோவிந்தன் தனக்கு குடி அடியார் என்று |
– |
இவர்கள் பகவார்க்குக் குலங்குலமாக அடியவர்கள் என்று சொல்லி |
| முடி உடை வானவர் |
– |
சேஷத்வத்துக்குச் சூடின முடியையுடைய நித்ய ஸூரிகள் |
| முறை முறை |
– |
சிரமம் தப்பாமல் |
| எதிரிகொள்ள |
– |
‘ஸ்வாகதம்’ என்று சொல்லி யெதிரிகொண்டழைக்க |
| வடிவு உடை மாதவன் வைகுந்தம் புக |
– |
அழகிய வடிவு படைத்த எம்பெருமானுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே பிரவேசிக்கைக்குறுப்பான |
| கொடி அணி நெடுமதிள் |
– |
அலங்ற்ரமாக வெடுத்துக் கட்டின கொடிகளையுடைய உயர்ந்த மதிளை யுடைத்தான |
| கோபுரம்குறுகினர் |
– |
தலைவாசலில் புகுந்தார்கள். |
நித்யர்களும் முக்தர்களும் முறை முறையே எதிரிகொள்ளுகிறார்களாம்; என்ன பாசுரம் சொல்லிக்கொண்டு எதிரிகொள்ளுகிறர்களென்னில்; (இவர் கோவிந்தன் தனக்குக்குடியடியார் என்று) நித்ய ஸூரிநாதனாயிருக்கிற எம்பெருமான் அந்த நித்யஸூரி நாதத்வத்தைக் குறையாக நினைத்து மண்ணுலகிலே இடைக்குலத்திலே வந்து பிறந்து பசுமேய்க்கையாகிற இழிதொழில் செய்து இதையே தனக்குப் பெருமேன்மையாக நினைக்கின்றவனென்று இந்த ஸௌலப்ய குணத்திலே தோற்று அடிமைப் பட்டவர்களிவர்கள்-என்று சொல்லிக்கொண்டு எதிரிகொள்ளுகிறார்களாம்
கீழ்ப்பாட்டில் அர்ச்சாவதாரப்ராவண்யத்தைச் சொல்லி ஸத்தாரம் பண்ணினார்களென்றது;
இப்பாட்டில் விபவாவதார ப்ராவண்யத்தைக் சொல்லி ஸத்சாரம் பண்ணினர்களென்கிறது.
முடியுடைவானவர்-எம்பெருமாளுக்குத்தானே திருவபிஷேகமுள்ளது; நித்யஸூரிகளுக்கும் அது உண்டோவென்கிற சங்கைக்கு நம்பிள்ளை பாரிஹாரமுணர்த்துகிறார்-“அவன் ரகூஷகத்வத்துக்கு முடிசூடியிருக்கும்; இவர்கள் அடிமை செய்கைக்கு முடிசூடியிருப்பர்கள்” என்று.
கொடியணிநெடுமதின்கோபுரம்குறுகினர்-இவர்கள் வருகிறார்களென்று கொடிகளாலே அலங்காரிக்கப்பட்டிருந்த திருமதிள்கள் சூழ்ந்த திருக்கோபுரத்தைச் சென்று கிட்டினார்கள்.
(வடிவுடைமாதவன் வைகுந்தம்புகவே) ஏற்கெனவே எம்பெருமான் வடிவில்லாதவனல்லன்; அப்படியிருந்தும் இப்போது ‘வடிவுடைமாதவன்’ என்று சொல்லுவதன் சுருத்தை நம்பிள்ளை யெடுத்துக் காட்டியருளுகிறார் காண்மின்; “யுவேவ வஸீதேவோபூத் என்று,
கம்ஸவதத்துக்குப் பின்பு பிள்ளையைக் கண்ட ஸ்ரீ வஸீதேவரையும் தேவகியாரையும் போலவும், பெருமாளைக்கண்ட சக்ரவர்த்தி புநா; யுவேவ என்று சொல்லிப்பட்டாப்போலவும் தங்கள் வரலாலுண்டான ஹா;ஷத்தாலே புதுக்கணித்தது வடிவு” இங்ஙனே வடிவு புதுக்கணித்ததானது பெருமாளுக்கு மாத்திரமன்று, பிராட்டிக்குங்கூட என்று காட்டுதற்காக மாதவன் என்றது.
————-
அங்குள்ள நித்யஸூரிகள் இவர்களைக் கண்டு ‘இப்படி பரமபதத்திலே வருவதே இதென்ன பாக்யம்! இதென்ன பாக்யம்!!’ என்று வியந்து மகிழ்ந்தனரென்கிறதிப்பாட்டில்.
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-
பதவுரை
| வைகுந்தம் புகுதலும் |
– |
ஸ்ரீ வைகுண்டத்திலே சென்று புகுந்தவளவிலே |
| வாசலில் வானவர் |
– |
திருவாசல்காக்கும் முதலிகளானவர்கள் |
| வைகுந்தன் தமர் எமர் |
– |
“ஸ்ரீவைகுண்ட நாதனுடையார்கள் எங்களுடைய ஸ்வாமிகள் (ஆகையாலே) |
| எமது இடம் புகுது என்று வியத்தனர் |
– |
எங்களதிகாரத்திலே புக வேணும்” என்றுசொல்லி உகந்தார்கள்; |
| வைகுந்தத்து |
– |
அவ்விடத்திலே |
| அமரரும் முனிவரும் |
– |
கைங்கரிய நிஷ்டராயும் குணாநுபவ நிஷ்டராயுமுள்ளவர்கள் |
| மண்ணவர் வைகுந்தம புகுவது விதியே (என்று) வியந்தனர் |
– |
“லீலாவிபூதியி லிருந்தவர்கள் நித்ய விபூதியேற வருவது மஹா பாக்யமே!” என்று சொல்லி உகந்தார்கள். |
வாசலில் வானவர்-திருவாசல் காக்கும் முதலிகள் என்ன சொன்னார்களென்னில்; (வைகுந்தன் தமர் எமர்) வைகுந்தநாதனுக்கு அடியவர்களாக வருகின்ற இவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றார்கள்.
இன்னமும் என்ன சொன்னார்கள்? (எமதிடம்புகுதென்று) எங்களுடைய பதவியை நீங்கள் வஹித்து நிர்வஹிக்கவேணுமென்று சொல்லிக் கையிலே பிரம்பையும் கொடுப்பர்களாம். வியந்தனர்-ஆச்சாரியப்பட்டார்கள்; மண்ணவர் விண்ணவராயினரே என்று வியப்படைந்தனர்.
அப்படி வியந்தவர்கள் யாவரென்னில்; (வைகுந்தத்து அமரரும் முனிவரும்) “ஸ்ரீ பரதாழ்வானையும் இளையபெருமாளையும் போலே குணநிஷ்டரூம் கைங்காரிய நிஷ்டரும்” என்பது ஈடு,
வைகுண்டே து பரே லோகே ச்ரியா ஸாரித்தம் ஜகத்பத்:, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்iதர் பாகவதைஸ் ஸஹ என்று பகவச் சாஸ்த்ரத்திலும் பக்தை பாகவதை: என்கிற இரண்டு சொற்களையிட்டுச் சொல்லிற்று.
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் என்கிறாள் ஆண்டாளும்.
குணாநுபவமே போதுபோக்கா யிருப்பவர்களும் கைங்காரியமே காலNகூஷபமாயிருப்பவர்களுமான இருவகுப்பினருமுளரே!
“வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்ற ஈற்றடியை “மன்னவர் வைகுந்தம் புகுவது விதியே” என்று அந்வயித்துக்கொள்வது பாங்கு.
ஸம்ஸாரிகள் பரமபதத்தே வந்து சேரும்படியாக நாம் பாக்யம் பண்ணினோமே! என்று சொல்லி வியந்தனராயிற்று.
தைவம் தீஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸத்ர் நியதிரி வீதி: என்ற அமரகோசத்தின்படி விதியென்னுஞ் சொல் பாக்யத்தைச் சொல்லக்கடவது.
இதன் பரமதாற்பாரியம் யாதெனில்; திருமங்கையாழ்வார் ஏரார்துமுயல்விட்டுக் காக்கைப்பின் பேரவதே என்று சொல்லி லீலாவிபூதியில் அநுபவந்தான் உண்மையில் சிறக்குமாகையாலே அப்படிச் சிறந்ததான தேச விசேஷத்திலே சென்று நாங்கள்; அநுபவிக்கப் பார்த் திருக்கையில் நீங்கள் அங்கிருந்து இங்கே வந்தீர்களே! இது எங்களுடைய பரம பாக்கியமன்றோ வென்று கொண்டாடினார்களென்கை.
————–
மண்ணவர் விண்ணவராகப் பெற்றது நம்முடைய பரமபாக்கியமன்றோவென்று மீண்டும் சிலர்சொல்லத் தொடங்கினர்.
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
பதவுரை
| விதி வகை புகுந்னர் என்று |
– |
“நம்முடையபாக்யாநுகுணமாக இவர்கள் இவ்விடம் வந்து சேர்ந்தார்கள்” என்று சொல்லி |
| நல்வேதியர் |
– |
நல்ல வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்ட நித்ய ஸூரிகள் |
| பதியினில் |
– |
தம்தம்திவ்யஸ்தானங்களிலே |
| பாங்கினில் |
– |
உபசாரங்களுடனே |
| பாதங்கள் கழுவினர் |
– |
வந்தவர்களது திருவடிகளை விளக்கினார்கள் |
| நிதியும் |
– |
ஸ்ரீவைஷ்ணவர்க்குநிதியான திருவடி நிலைகளையும் |
| நல் சுண்ணமும் |
– |
ஸ்ரீசூர்ணத்தையும் |
| நிநைகுடம் |
– |
பூரண கும்பங்களையும் |
| விளக்கமும் |
– |
மங்கள தீபங்களையும் |
| மதி முகம் மடந்தையர் |
– |
சந்திரன்போன்ற முகத்தை யுடையவர்களான பாரிசார்கைகள் |
| வந்து ஏந்தினர் |
– |
ஏந்திக்கொண்டு எதிரே வந்தார்கள். |
விஷயங்கள் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே இருந்து வைத்து அநந்ய ப்ரயோஜநராய் பகவத் குணங்களை யநுபவிக்கப் பெற்ற மஹா புருஷா;களாய் விண்ணுளார்லும் சீரியர் என்று கொண்டாடப் பட்டவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது நம்முடைய பரம பாக்ய மென்று ஒரு தடைவ சொன்னால் போதுமோ? என்கிறார்கள். நல் வேதியர் என்றது நல்ல வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்டவர்களென்றபடி.
யத்ரர்ஷய ப்ரதமஜா யேபுராணா என்றும்,
யத்ர பூர்வே ஸாத்யாஸ் ஸந்தி தேவா: என்றும், தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே என்றும்
வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்டவர்களன்றோ.
இப்படி கொண்டாடினவளவோடு நில்லாமல் அனந்த வைநதேயாதிகளான அவர்கள் தங்கள் திருமாளிகைகளிலே கொண்டுசென்று ஸ்ரீ பாத தீர்த்தமும் சேர்த்துக் கொண்டமை சொல்லுகிறது இரண்டாமடியில்.
பதியினில்-பதியென்று இருப்பிடம்; தம்; தம் திருமாளிகைகளிலே கொண்டு புக்கு என்றபடி.
இங்கே ஈடு;-“இவனொரு ஸம்ஸாரி சேதநன், நாம் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தர் என்று வாசிவையாதே இவனை ஸிம்ஙாஸனத்திலே உ பர வைத்து அவர்களுக்குப் பாங்காகத் தாங்களிருந்து திருவடி விளக்குவர்கள்.”
நிதியும் நற்சுண்ணமும்-அவ்வளவிலே பகவத்பாரிசார்கைகள் வந்து எதிரேற்பர்கள்; ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நிதியான திருவடி நிலைகளையும் திருச்சுண்ண ப்ரணாதத்தையும் நிறை குடங்களையும் (பூர்ண கும்பங்களையும்) மங்கள தீபங்களையும் ஏந்திக் கொண்டு வந்தனர்.
இங்கு மதிமுக மடந்தையர் என்றதன் உட்கருத்தை நம்பிள்ளை விவாரிக்கிறார் காண்மின்;-“தேசாந்தரம் போன ப்ரஜை வந்தால் தாய்முகம் குளிர்ந்திருக்குமாபோலே ஹா;ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலேயிருக்கிற முகங்களை யுடைவர்கள் வந்து எதிரிகொண்டார்கள்.”
————
இப்பதிகம் வல்லார், நித்ய விபூதியிலே பகவத் குணாநுபவம் பண்ணி அதிலே யீடுபட்டு அதுக்கவ்வாருகு கால்வாங்க மாட்டாதே யிருப்பாரோ டொப்பர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறாராயிற்று.
கீழ்ப் பாசுரங்களில் சொல்லிற்றை யெல்லாம் ஸங்க்ரஹமாக அநுபாஷிக்கிறாராயிற்று.
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
பதவுரை
| அவர் வந்து எதிரி கொள்ள |
– |
அந்த பெருமாளும் பிராட்டியும் வந்து எதிரிகொள்ள |
| மாமணி மண்ட பத்து |
– |
திருமாமணி மண்டபத்திலே |
| அந்தம் இல் பேர் இன்பத்து |
– |
முடிவில்லாத மஹானந் தத்தை யுடைய |
| அடியரோடு |
– |
பரம்பாகவதர்களோடே கூடி |
| கொத்து அலர்பொழில் குரு கூர் சடகோபன் |
– |
பூங்கொத்து அலருகிற சோர்லைகளை யுடைத்தான திருநகாரிக்குத் தலைவரான ஆழ்வார் |
| சொல் |
– |
அருளிச்செய்த |
| சந்தங்;கள் ஆயிரத்து |
– |
வேதரூபமான ஆயிரம் பாசுரங்களில் |
| இவை |
– |
இப்பத்துப் பாசுரங்களை |
| வல்லார் |
– |
ஒதவல்லவர்கள் |
| முனிவா |
– |
பகவத்குணங்களை மனனம் பண்ணும் முனிவராவர் |
வந்தவ ரெதிரி கொள்ள என்று. “பிராட்டியோடே கூட எம்பெருமான் தான் வந்து எதிரிகொள்ள” என்;;கிற பொருளையருளிச் செய்வர் நம்பிள்ளை. அயர்வறுமமரர்களும் அவர்களது அதிபதியுமாக எல்லாரும் வந்து எதிரி கொள்ளத் தட்டில்லையே.
இப்படி எதிரி கொண்டவர்கள் அனைவரும் புடை சூழ ஆனந்த மயமான திருமாமணி மண்டபத்திலே ப்ரஹ்மானந்த சாலிகளான அடியார்களின் அழகோலக்கத்தின் நடுவே இருந்தபடியையாயிற்று இப்பதிகத்திலருளிச் செய்தது,
அந்தமில் போரின்பத்து என்ற விடத்து ஈடு;- “ஸம்ஸாரத்தில் ஸீகமென்று ப்ரமிக்கு மித்தனை; துக்கமேயுள்ளது பாண்டு ஒருவன்மேலே அம்பைவிட ஸம்ஸாரத்தில் ஆயிரங் கூற்றில் ஒரு கூஷணமாயிற்று ஸீகமுள்ளது; அத்தனையும் புஜிக்க வொட்டிற்றில்லையே என்றானிறே.” என்பதாம்.
(அடியரோடிருந்தமை) ஆழ்வார் திருநாட்டிலே எம்பெருமானை யநுபவிக்கப் பெற வேணுமென்று ஆசைப்பட்டாரல்லர்; ‘அடியார்கள் குழாங்கனை உடன் கூடுவதென்று கொலோ!” என்று அடியாரோடிருக்கவே ஆசைப்பட்டார்; ஆசைப்பட்டபடியே பெற்ற பேற்றைத் தெரிவித்தாராயிற்று இங்கு.
(கொந்தலர்பொழில் குருகூர்) ஆழ்வார் தமக்குப் பேறு அணித்தாயிற்றென்று களிக்கவே அவருறையு மூர்லுள்ள சோலையும் புதுக்கணித்தாயிற்று.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 16, 2022 at 3:01 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply