****-எம்பெருமானுடைய எந்த சீல குணத்தில் தாம் ஆழங்காற்பட்டுக் களைத்தாரோ அக்குணத்தில் பிறரும் ஆழ்ந்து வருந்தாமைக்காக எச்சரிக்கை செய்கிறார் முதலடியால்;
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-
பதவுரை
| செம் சொல் கவி காள் |
– |
செவ்விய சொற்களை யுடைய கவிகளே! |
| என்னெஞ்சுள்ளும் உயிருள்ளும் கலந்து |
– |
என்னெஞ்சுக்குள்ளேயும் ஆத்மாவுக்குள்ளேயும் ஒரு நீராகக் கலந்து |
| உயிர் காத்து ஆள் செய்மின் |
– |
உங்களை ஜாக்ரத்தையுடன் நோக்கிக் கொண்டு கவி பாடுங்கள் |
| நின்றார் அறியா வண்ணம் |
– |
அருகே நின்ற பிராட்டியர் முதலானாருமறியாதபடி |
|
(ஏனிப்படி சொல்லுகிறேனென்னில்) |
||
| திருமாலிருஞ் சோலை |
– |
திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்கின்ற |
| அவை என் நெஞ்சும் உயிரும் உண்டு |
– |
அந்த என்னெஞ்சையுமுயிரையும் பஜித்து |
| வஞ்சம் கள்வன் மா மாயன் |
– |
வஞ்சனையும் களவும் மாயமுமே வடிவெடுத்த பெருமான் |
| தானே ஆகி (என்னைக் காண இடமின்றிக்கே) |
– |
தானேயாகி |
| மாயம் கவி ஆய் வந்து |
– |
“ஆழ்வாரே! ளும்மைக் கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளப் பாரா நின்றேன்” என்றொரு மாயம் செய்து வந்து |
| நிறைந்தான் |
– |
அவாப்த ஸமஸ்த காமனாயினான் (ஆதலால் செஞ்சொற்கவிகாஉயிர் காத்தாட் செய்மின் என்ன வேண்டிற்று) |
கவிகள், “சிறப்புடன் பூனை இறப்பிலிருந்தால், புறப்பட மாட்டாதெலி” என்னுமாபோலே கவிபாடுமவர்கள் கவிகள்.
சொற்கள்மிடைந்து ‘என்னைக்கொள் என்னைக்கொள்’ என்ன, அர்த்தபுஷ்டியுடன் கவிபாடுமவர்கள் சொற்கவிகள்.
ப்ரயோஜனத்தைக் கணிசியாமல் பகவத் விஷயத்திலே கவிபாடுமவர்கள் செஞ்சொற்கவிகள்.
“இன்கவி பாடும் பரமகவிகள்” “செந்தமிழ் பாடுவார்” “பதியே பரவித்தொழுந் தொண்டர்” “ஆடிப்பாடியரங்கவோ வென்றழைக்குந் தொண்டர்” என்றிப்படி கொண்டாடப்பட்ட முதலாழ்வார்கள் போல்வாரையே செஞ்சொற்கவிகாள்! என்று விளிக்கிறார்.
உயிர்காத்து ஆட்செய்மின் – நீங்கள் கவிபாட வேணுமானால் முன்னம் நீங்கள் இருந்தாக வேணுமே; இத்தலையுடானாலன்றோ அத்தலைக்கு மங்களா சாஸனம் பண்ண முடியும். ஆகவே முன்னம் உங்களை நோக்கிக்கோண்டு கவிபாடப் பாருங்கோள் என்கிறார்.
செஞ்சொற்கவிகள்! என்ற விளிக்குச்சேர “உயிர்காத்துக் கவிபாடுமின்* என்ன வேண்டியிருக்க ஆட்செய்மின் என்கிறது – கவிபாடுகையும் வாசிகமான ஆட்செய்கையாகையாலே “ஆட்கொள்வானொத்து என்னுயிருண்ட மாயன்” என்று பண்டே சொல்லி வைத்திருக்கிறாராழ்வார்.
எம்பெருமான் வாசிக கைங்காரியமாகிற அடிமையைக் கொள்வான் போலப் புகுந்து பின்பு நீர்மைக் குணத்தினால் உயிரைக் கொள்ளை கொள்ளுமவனாதலால் அந்த நீர்மையில் உள்குழையாதே வலிய நெஞ்சராயிருங்கோ ளென்கிறாராயிற்று.
சிற்றாள் கொண்டான் என்கிற ஸ்வாமி பணிப்பராம் – “ஆழங்காலிலே யிழிந்து அமிழ்ந்துவார் அவ்விடத்தே கொண்டைக்கோல் நாட்டுமாபோலே ஆழ்வாரும் கொண்டைக்கோல் நாட்டுகிறார்” என்று.
ஆழ்வார் இப்படியருளிச்செய்வதன் பரமதாற்பாரியமென்ன வென்றால், எம்பெருமானுடைய மற்றைக் குணங்களெல்லாவற்றிலுங் காட்டில் சீல குண மொன்று மிகவும் ஆற்றவொண்ணாதது, இதற்குத் தப்பிப்பிழைப்பது அர்து – என்பதேயாம்.
அக்குணத்தின் சீர்மையையெடுத்துக் காட்டுகிற ளுக்திசாதுரியம் “உயிர்காத்தாட்செய்மின்” என்பது. இன்னாருயிரைக் காத்து ஆட்செய்யும்படி வ்யக்தமாகச் சொல்லாமையாலே, எம்பெருமானுயிரைக் காத்து ஆட்செய்மின் என்பதாகவுங் கொள்ளலாமென்று உடையவர் அருளிச் செய்வராம்.
அதன் கருத்து யாதெனில், அவன் மேல்விழவிழத் தாங்கள் இறாய்த்தால் அவனை யிழக்க நேருமே; அப்படி யாகாமே அவருயிரைக் காவுங்கோள் என்பதாம்.
இப்பொருளிளல் சுவை யொன்று மில்லையேயென்று சிலர்மயங்குவர். கேண்மின்;
என்னுடம்பில் அவன் சாபலம்காட்ட, அதை நான் தடுக்க, பின்னையும் அவன்மேல்விழ, பிரானே! உனக்குப் பாரதந்திரியம் ஜீவிக்கவேணுமேயென்று நான் விலங்கிட்டாற்போல் வார்த்தை சொல்ல் அதன்மேல் அவன் கைகூப்பி நிற்க, அந்த சீல குணத்திலே உருகும்படியான நிலைமை எனக்கு ஏற்பட்டது;
நீங்களும் என்னைப்போல் அவனை விலக்கத் தொடங்கினீர்களாகில் அவனை யிழக்கவே நேரும்; பின்னை யாரைக் குறித்துக் கவிபாடுவது? ஆகவே அவருயிரைக் காத்து ஆட்செய்மின்கள்; அவன் விரும்பிய போகத்தை நான்தான் குலைத்தொழிந்தேனாகிலும் நீங்களாவது குலைக்காதபடி அவன் வழியே யொழுகி அநுபவிக்கப்பாருங்கள் – என்பதான சுவைக்கருத்து உணர்க.
இவ்விஷயத்திலே தாமிழந்து அனர்த்தப்பட்ட படியை யருளிச்செய்கிறார் மேல் திருமாலிருஞ் சோலை வஞ்சக்கள்வனென்று தொடங்கி,
தான் சேஷியாகவும் நான் சேஷபூதனாகவுமிருக்கிற இம்முறையை நிலைநாட்டுவதற்காக வருவான்போல வந்து, தன்னுடைய கள்ளச் செயல்வல்லமையினால் அத்தலையித்தலையாம்படி பண்ணி என்னைத் தன் தலைமேல் தூக்கிக்கொண்டு உலாவுவானாயிருந்தான்.
இப்படிப் பட்ட வஞ்சகக் கள்வனவன் என்பதை நான் பண்டே யறிந்துவதை;துங்கூட வலையில் சிக்கவேண்டியதாயிற்று; அவன் மாமாயனாகையாலே, மாயப்பொடி தூவி மயக்கிவிடுகிறானே! என் செய்வேனென்கிறார்போலும்.
‘பெய்யுமா முகில்போல் வண்ணா! உன்றன் பேச்சும் செய்கையும் எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாய மந்திரந்தான் கொலே!” என்றார்களே இவனுடைய வஞ்சக்கள்வ மாயங்களில் பழகின கோபிகளும், அறிந்தும் தப்பவொண்ணாமை கூறினபடி மாமாய னென்று.
தம்மை அவன் அகப்படுத்தினவழியை யருளிச்செய்கிறார் மாயக்கவியாய் வந்து என்று. “ஆழ்வீர்உலகத்தில் நடையாடாத கவிகளை ளும்மைக்கொண்டு பாடுவித்துக் கொள்வதாக விருக்கிறோம்;; இணங்குவீரே?” என்றான்
‘நாமாக ப்ரார்த்திக்கவேண்டுவதை அவானகப் பார்க்கின்றானே, இணங்குவோமே என்று இணங்கினேன்; விரல் நுழைக்கக் கிடைத்தவிடத்திலே தலை நுழைக்கவல்லானொருவனாகையாலே பிறகு தான் செய்ய நினைத்ததையெல்லாம் செய்து தலைக்கட்டினான் என்கிறார்.
இங்கே ஆறாயிரப்படி யருளிச்செயல் காண்மின் :- “என்னை யுபகரணமாகக் கொண்டு கவி சொல்லுகையென்னும் வ்யாஜத்தினாலே என்னுள்ளே வந்து புகுந்து கலந்து இன்னபடி செய்தருளினானென்று அயர்வறுமமரர்க்கு மறிய நிலமல்லாத தொருபடி என்னெஞ்சையு முயிரையும் தன்னுள்ளே யடக்கித் தானே யாம்படி மாள புஜித்துப் பாரிபூர்ணனானா னென்கிறார்” என்று.
நம் ஆசாரியர்கள் ஆழ்வாரருளிச்செயல்களின் ஆழ்பொருள்களைத் தாங்கள் அறிகிறபுடையும் அப்பொருள்களை வெளியிடுவதற்கு அவர்கள் பங்க்திகளமைக்கிற அழகும் அநுபவிக்கவநுபவிக்க நீராயுருகுமென்னாவி.
அந்த திவ்ய மதுர பங்க்தி களின் சுவையை யநுபவிப்பார்ல்லையே யென்னுமழுகையோடே இப்பாட்டிஎரையைத் தலைக்கட்டி மேலே சொல்லாநின்றேன்.
இது மூன்றாவதான வதரி யாத்திரையில் கண்டமென்எங்கடி நகரிலெழுதினது.
————-
****-ஆழ்வார் தம்மோடு கலந்தபின் எம்பெருமாளுக்கு உண்டான பௌஷ்கல்யத்தைக்கண்டு இனியராகிறார் இப்பாட்டில்.
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-
பதவுரை
| என் உயிரை முற்றும் உண்டு |
– |
என்னை ஸர்வப்ரபாரத்தாலும் புஜித்து |
| தன்னை தானே துதித்து |
– |
தன்னை (நான் துதித்ததாக வைத்துத்) தானே துதி செய்து |
| தானே ஆகி நிறைந்து |
– |
தானோருவனே நிறைவு பெற்றவனாய் |
| எல்லா உலகும் உயிரும் தானே ஆய் |
– |
ஸமஸ்த லோகங்களும் அவற்றிலுள்ள பிராணி வர்க்கங்களும் தானே யென்னலாம்படி அவற்றுக்கு அந்தராத்மாவாய் |
| எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே |
– |
எனக்குத் தேனும் பாலும் கன்னலு மமுதுமான ஸகலவித போக்யமும் |
| யான் என்பான் தானே ஆகி |
– |
நானென்கிற வஸ்துவும் தானேயாய் |
| திருமாலிருஞ் சோலை கோனே ஆகி நின்றொழிந்தான் |
– |
திருமாலிருஞ் சோலை யெம் பெருமான் தானேயாய் விட்டான் |
பாட்டின் முடிவிலேயிருக்கிற “என்னை முற்றுமுயிருண்டு” என்பதைப் பாட்டினடியிலே கொண்டு கூட்டிக்கொள்வது.
என்னைமுற்றுமுயிருண்டு தானேயாகிநிறைந்து – என்னை ஸர்வப்ராகாரத்தாலும் பாரிபூர்ணமாக புஸ்ரீரித்துத் தானே பாரிபூர்ணனானான்;
இருதலை ஒன்று சேர்ந்து பாரிமாறப் புகுந்து ஒரு தலையை ஒன்றுமில்லையாக்கி ஒரு தலையை பூர்ணமாக்கிக் கொள்வது நியாயமோ?
எல்லாவுலகு முயிரும் தானேயாய் – அவன்தான் ஸர்வேச்வரனானதும் என்னை முற்றுமுயிருண்டபிறகே. உண்மையில் எம்பெருமான் ஆழ்வார்திருவாக்கில் புகுந்து புறப்படவில்லையாகில் அவன் ஸர்வேச்வரனென்று பேர்பெற முடியாதே. குதர்க்கிகளான துர்வாதிகள் தாம் தாம் கொண்ட தெய்வங்களைப் பரதெய்வமாகப் பேசி நிறுத்த, ஸ்ரீமந்நாராயணன் நான் தெய்வமல்லேன்’ என்று பிற்காலிட்டே கிடந்தான்;
ஆழ்வார் திருவவதாரித்து *திண்ணன் வீடு* ஒன்றுந் தேவு முதலான திருவாய்மொழிகளில் எம்பெருமானே பரதத்துவ மென்பதைக் கல்வெட்டாக ஸ்தாபித்தருளினபடியாலே, இதற்குப் பிறகே எம்பெருமான் தன்னை ஸர்வேச்வரனாகச் சொல்லிக்கொண்டு வெளியேறியுலாவ முகம்பெற்றான்.
ஆகவே “தானே யாகி நிறைந்து எல்லாவுலகுமுயிருந்தானேயாய்” என்றது பொருந்தும்.
யானென்பான் தானேயாகி – நானென்று நாமமாத்திரமான நான் அவன்தானென்னலாம் படியானேன். அதாவது, பரதந்திரரான தம்மை அவன் ஸ்வாந்திரராக்கி, இவாரிடத்திலே தான் பாரதந்திரியம் வஹிக்கலானான் என்கை.
இங்கே ஈடு :- “தம்மைத் தடவிப்பார்த்த விடத்தில் காண்கிறிலர்; அவன் தலையாலே சுமக்கக் காண்கிறவித்தனை” என்று.
தன்னைத்தானே துதித்து – எம்பெருமான் துதிக்கு விஷயபூதன் மாத்திரமல்லன்; ஸ்துதிக்குக் கர்த்தாவும் அவனேயாயிற்று.
*குருகூர்ச்சடகோபன் சொல்* என்று நான் சொன்னதாகச் சொல்லிவைத்ததும் அவனேயாயிற்று.
அவன் யாவனென்னில்; தன்னுடைய அநுபவம் எனக்குப் பரமபோக்யமாவதற்காக எனக்குத் தேனாகவும் பாலாகவும் கன்னலாகவும் அமுதமாகவும் நின்ற திருமாலிருஞ் கோலைக்கோன். இப்படி நான் ரஸித்துப் பருகவேண்டிய அமுதம் என்னை முற்றுமுண்டதே!….
—————
****- எம்பெருமாளுக்கு மேன்மேலும் தம்பக்கலுண்டான அபிநிவேசம் எல்லையற்றிருக்கும்படியை யருளிச் செய்கிறார்.
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-
பதவுரை
| என் உயிரை முற்றும் உண்டு |
– |
என்னைப் பாரிபூர்ணாநுபவம் பண்ணி |
| தென்னன் திருமாலிருஞ்சோலை |
– |
தென்னரசன் கொண்டாடும் திருமாலிருஞ்சோலை மலை நிற்கிற |
|
(அவ்வளவோடும் நில்லாதே) |
||
| திசை |
– |
திக்கை நோக்கி |
| என் மாயம் |
– |
ஆக்கை இதனுள் புக்கு என்னுடைய ப்ராக்ருத சாரிரத்தினுள்ளும் புகுந்து |
| கைகூப்பி சேர்ந்த யான் |
– |
அஞ்சலி பண்ணி அடிமைப் பட்ட நான் |
| என்னை முற்றும் தானே ஆய் நின்ற |
– |
என்னுடைய தேஹாதியநு பந்திகளெல்லாம் தானே யென்னலாம்படி நின்ற |
| இன்னம் போவேனே கொலோ |
– |
இனி இதுக்கவ்வருகு ஓர்டத்தேடிப் போக நினைப்பேனோ? |
| மாயம் அம்மான் சேர் |
– |
மாயப்பிரான் பொருந்தி வாழ்கிற |
| அம்மான் திரு அருள் என் கொல் |
– |
எம்பெருமானுடைய பாரிப்பு என்னாயிருந்தது! |
கீழ்ப்பாட்டில் “என்னை முற்று முயிருண்டே” என்று சொல்லியிருக்கவும் மீண்டும் “என்னை முற்றுமுயிருண்டு” என்றருளிச் செய்கிறார்; இஃது அந்தாதித் தொடைக்காக அருளிச்செய்வதன்று. உண்டு என்றொரு சொல்லையிட்டுத் தொடங்கினாலும் அந்தாதித் தொடைக்கு அமையுமே.
மறுபடியும் “என்னை முற்றுமுயிருண்டு” என்கையாலே, ஆழ்வாரை யநுபவிக்கை எம்பெருமாளுக்குப் பெறாப்பேறு பெற்றதாயிருக்கையாலே, அதையறிந்துகொண்டு தெகுடாடிச் சொல்லுகிறபடி.
இங்கு நம்பிள்ளை யருளிச் செய்கிறார் – “*யஸ்ய ஸா ஜநகாத்மஜா – அப்ரமேயம் ஹி தத் தேஜ:* என்கிற ஏற்றத்தோபாதியும் போருமாய்த்து இவருயிரை எங்கும் புக்கு அநுபவிக்கப் பெறுகையால் வந்த ஏற்றம்” என்று.
இதன் கருத்தாவது – எம்பெருமாளுக்கு லஷ்மீ ஸம்பந்தத்தினால் எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு ஏற்றம் ஆழ்வாரை யநுபவிப்பதனால் உண்டு என்பதாம்.
என் மாயவாக்கை – என்னுடைய ஆத்ம வஸ்துவை யநுபவித்து அவ்வளவோடே பரியாப்தி பெறுபவனாயிருந்தானோ?
*அழுக்குடம்பு என்றும் *பொல்லா வாக்கை யென்றும் சொல்லுகிறபடியே ஹெயமென்று இவர்தாம் அருவருத்து இகழா நிற்கச் செய்தே அவன் இதில் பரமபோக்யதாபுத்திபண்ணி மேல்விழா நின்றான்.
என்னை முற்றும் தானேயாய் – இப்படி ஆத்மவஸ்துவிலும் அசித்தான தேஹத்திலும் புக்கு வியாபிக்கையாலே தானே யென்னத் தட்டில்லை. நான் என்னும்படியான ஆத்மவஸ்துவும், என்னது என்னும்படியான தேஹமும் தனிப்படக் காணமுடியாததாகி அவனேயென்ன நின்றதாயிற்று.
ஆக இப்படியாயிரா நின்றமாயவம்மான் விரும்பி வர்த்திக்குமிடமான திருமாலிருஞ்சோலை மலையுள்ளதிக்கை நோக்கிக் கைகூப்பப் பெற்றேன்;
அதாவது, அவனை யுகந்து, அவ்வழியாலே அவன் விருமபினதேசத்தை யுகந்து, அத்தோடு ஸம்பந்தமுடைய திக்கை யுகந்து இப்படி ஸம்பந்தி ஸம்பந்திகள் வரையிலும் உகப்பு பெருகிச் செல்லும்படி அவகாஹித்தேன்.
இப்படிப்பட்ட நான், இன்னம் போவேனே கொலோ!-இத்திருமாலிருஞ் சோலையுள்;ள திசைக்கு அப்பால் வேறொரு போக்கிடமுடையேனோ?
(என்கொல் அம்மான் திருவருளே!) என்னோடு எவ்வளவு கலந்து பாரிமாறலாமோ அவ்வளவும் கலந்து பாரிமாறியான பின்பும் இன்னமும் பாரியா நின்றாள்! அந்தோ! ஈதென்ன திருவருள்! என்று அலமருகின்றாராயிற்று.
———–
எம்பெருமாளுக்குத் தம்மிடத்திலுண்டான வியாமோஹாதிசயத்தைச் சொல்லி;க்கொண்டுவந்த ஆழ்வார் இப்பாட்டில் அப்பெருமாளுக்குத் திருமாலிருஞ் சோலைமலையிலுண்டானவொரு வியாமோஹத்தைப் பேசுகிறார்.
இங்கு ஆறாயிரப்படியரளிச்செயல் காண்மின்;- ”இப்படி என்னோடு ஸம்ச்லேஷம் பெறுகைக் கீடான தேசம ஏதோவென்று தேடிக்கொண்டு திருமரையிலே வந்து புகுந்து தான் கருதினபடியே அங்கே ஸம்ச்லேஷித்து ப்ரீதனாய் ‘இந்த ஸம்ருத்தியெல்லாம் விளைவித்தது திருமலையிறே’ என்று கொண்டு திருமலையையும் என்னுயிருமுடலும்போலே தனக்கு போக்யமானகக் கொண்டு கைவிடுகிறிலன்; என்னுயிரையும உடலையும் திருமரையையும் அநுபவித்து ப்ரீதனனானான். ப்ரதிகூலர்இந்த ஸம்ருத்திகண்டு பொறுக்குமாட்டாதே தரைப்படும்படி ப்ரீதனானனா னென்கிறார்.” என்று.
என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-
பதவுரை
| உலகும் உயிரும் தானே ஆய் |
– |
ஸகலலோகங்களும ஸகலப்ராணிகளும் தானேயென்னலாம்படி அந்தரியாமியாய் |
|
(அவ்வளவோடும் நில்லாதே) |
||
| நண்ணா அசுரர்நலிய |
– |
விமுகர்களான ஆஸூரப்ரக்ருதிகள நசிக்கும்படியாக |
| ஞாலத்தூடே நடந்து உழக்கி |
– |
பூமியெங்கும் நடையாயடியுலாவி |
| தென்கொள்திசைக்கு நிலதம்ஆய் நின்ற திருமாலிருஞ்சோலை |
– |
தெற்குத் திக்குக்குத் திலகமாயிராநின்ற திருமாலிருஞ்டசோலையாகிற |
| நாங்கள் குன்றம் கைவிடான் |
– |
நமது திருமலையைக் கைவிடாதவனா யிருக்கிறான்; |
| என் உடலம் நன்கு கைவிடான் |
– |
என்னுடம்பிலே மிகவும் விருப்பம் பண்ணா நின்றான்; |
| அம்மான் திரு அருள் என்கொல் |
– |
எம்பெருமானுடைய வியாமோஹத்தின்படி என்னே! |
என்கொலம்மாள் திருவருள்கள்! -மிகப் பெரியார்களுக்கு ஏதேனும் அந்யதாஜ்ஞாந விபாரிதஜ்ஞான முண்டானால் சிறியர்கள் அவர்களை நோக்கி ‘தேவாரிர் இப்படி ப்ரமிக்கலாமா? என்று கேட்கலாகாது; அவ்விதமாகவே இங்கு என்ன க்ருபை!’ என்று உபசார வழக்காவே சொல்லவேணும்;
அவ்விதமாகவே இங்கு ‘என்கொலம்மான் திருவருள்கள்.’ என்கிறது. இப்படியும் அஸ்தாநே ப்ரமிக்கலாமோ? என்பது இங்குக் கருத்தாகும்.
எம்பெருமான் அவாப்த ஸம்ஸ்தகாமனா யிருந்துவைத்து ஒன்றும் பெறாதாரைப்போலே இப்படி கிடந்து படுகிறனே! இது என்ன மருள்!ஒன்றும் என்று சொல்லவேண்டுமிடத்து என்கொலம்மான் திருவருள்களென்கிறாராயிற்று.
ஸர்வேச்வரனுக்கு நிரதிஷ்டநப்ரமமுண்டாமாகாதே” என்பது ஈட்டு ஸ்ரீஸக்தி.
உலகில் ஒருவன் கயிற்றைப் பார்த்து ஸரிப்பமென்று ப்ரமிக்கிறான்; முத்;துச் சிப்பியைப் பார்த்து வெள்ளியென்று ப்ரமிக்கிறான்; ஏதோவொரு ஆலம் பனனிருந்து ப்ரமமுண்டாகிறதேயன்றி ஒரு ஆலமபனமு மின்றிககேப்தமமுண்டாகும் போலும் என்கிறாராம் ஆழ்வார்.
“நன்கென்எடரலும் கைவிடான” என்பதை நோக்கி இது அருளிச்செய்தபடி. பெருக்கனாயிருக்கும் ராஜபுத்திரன் ஒரு நீசமான என்னுடம்பிலே வியாமோஹம் பண்ணித் திரிகிறனே! இது என்ன ப்ரமம்! என்றவாறு.
ஞாலத்தூடே நடந்துழக்கி – பூமியெங்கும் உலாவித் திரிந்து என்பது சப்தார்த்தம். திரிவிக்கிரமனாகி உலகளக்கிறதென்னும் வியாஜத்தாலே எங்கும் வியாபித்து ஆழ்வாரை யநுபவிக்கைக்கு ஏகாந்த ஸ்தலமேதோவென்று ஆராய்ந்து தெற்குத் திருமலை வாய்ப்பான இடமாகக் கண்டபடியாலே அங்கே நின்றருளினானாயிற்று.
(நங்கள் குன்றம் கவிடான்-நன்கென்எடலம் கைவிடான்) “அங்குத்தைக் வாஸம் ஸாதனம், இங்குத்தை வாஸம்ஸாத்யம்” எ;று ஸ்ரீவசனபூக்ஷணத்திற் பணித்தபடியே திருமலையில் வாஸத்தை உபாயமாகக் கொண்டும் ஆழ்வார் திருமேனியிலுறைகையை உபேயமாகக்கொண்டுமிரா நின்றான்.
(நண்ணாவசுரா நலியவே) இப்படி யிருக்கிற விருப்பிலே விரோதிவர்க்கும் தன்னடையே தொலைந்தாயதயிற்று. இதன் கருத்து யாதெனில், எம்பெருமாளுக்கு திவ்யமங்கள் விக்ரஹமில்லை, திருக்கல்யாணகுணமில்லை யென்றிப்படி பிதற்றும் ஆஸூரவர்க்கலெம்மாம் திருமாலிருஞ் சோலைமலையில் எம்பெருமான் நின்ற நிலைகண்டவாறே தொரைந்ததாமே;
அப்படியே, அப்பெருமான் ஆழ்வார் திருமேனியிற் பண்ணும் வியாமோஹம் இப்படிப்பட்டதென்றறிந்தாவறே ஆழ்வார்டத்தில் குறைகளை யெண்ணுகிற ஆஸூரவர்களெல்லாம் தொரைந்தாதாமே என்றவாறு.
—————
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-
பதவுரை
| நண்ணா அசுரர்; நலிவு எய்த |
– |
பிரதி கூலர்களான ஆஸூரப்ரக்தி;கள் அழியவும் |
| நல்ல அமரர்பொலிவு எய்த |
– |
அநுகூலர்களான தேவப்ரத்ருதிகள் மகிழவும் |
| எண்ணாதனகள் எண்ணும் நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப |
– |
எம்பெருமாளுக்கு இன்னமும் சில குண விபூதிகள் உண்டாகவேணுமென்று என்ணுமவர்களான முனிவர்கள் கேட்டு மிகவுமுகக்கும்படியாகவும் |
| பண் ஆர் பாடல் இன் கவிகள் |
– |
பண்ணிறைந்த பாடல்களான இனியகவிகளையிட்டு |
| யானாகி;த்தன்னைத் தானே பாடி |
– |
தானே யானாகி;த்தன்னைத் தானே பாடி |
| தென்னா என்னும் என் அம்மான் |
– |
தென்னா தெனாவென்று ஆளத்திவைத்து ரஸியாநிற்கு மெம்பெருமான் (எங்குள்ளா னென்னில) |
| திருமாலிருஞ் சோலையான் |
– |
திருமாலிருஞ்சோலை மலையிலுள்ளான். |
எம்பெருமான் தம்மோடே கலந்து தம்வாயாலே திருவாய்மொழி கேட்டருளிந ப்ரீதி உள்ளடங்காமே ஆனந்தத்ததிற்குப் போக்கு வீடாகத் தென்னாதென்னாவென்று ஆளத்திவைத்துப் பாடிக் களியாநின்றான்! இஃது என்னபடியை மூன்றடிகளினால் அற்புதமாகப் பேசுகிறார்.
எப்பெருமானுடைய அவதாரம் போலேயாயிற்று திருவாய்மொழியினுடைய அவதாரமும். சாதுசனத்தை நலியுங்கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதியஞ்சோதியுருவை அங்குவைத்திங்குப்பிறந்த என்றும்,
பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ரதாம், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே என்றுஞ் சொல்லுகிறபடியே ஸாதுக்களை ரகூஷிப்பக்ற்காவும் துஷ்டாகளைத் தொலைப்பதற்காகவும் எம்பெருமான் அவதரிப்தாக அறிகிறோம்;
திருவாய்மொழியும் அப்படியே இந்த ப்ரயோஜனங்கள் நிறைவேறுதற்காகவே அவதரித்தாயிற்று.
நண்ணாவசுரர்கள் யார்? நல்லவமரர்கள் யார்? நல்லமவர்கள் யார்? என்று முன்னம் தெரிந்துகொள்ளவேண்டும்.
“விஷ்ணு பக்தி பரோதேவ: விபாரிதஸ் ததாஸூர:” என்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே பகவத் பக்தர்களெல்லாரும் நல்லவமரர்களாகவும், விர்தர்களான பகவத் த்ரோஹிகளெல்லாரும் நண்ணாவசுரர்களாகவும் கொள்ளப்படுவர்கள்.
திருவாய்மொழியினால் விஷ்ணுபக்தர்கள் யாவரும் வாழவும் ஆஸூரப்ரக்ருதிகள் யாவரும் பங்கடைந்து போகவும் தட்டில்லாமை காண்க.
“நண்ணாவசுரர்நலிவெய்த” என்றவிடத்து ஈட்டில் அருளிச்செய்வது பாரீர்- “அவ்யபதேச்யனுக்கு அனந்தரத்திலவன், தமப்பன் செய்ததைக்கேட்டு இவனென் செய்தானானான்! என்று கர்ஹித்தான்; ஒரு மதிளை வாங்குங் காட்டில் அத்தர்சநம் குலைந்ததோ? என்று கர்ஹித்தான்; ஒரு மதிளை வாங்குங் காட்டில் அத்தர்சநம குலைந்ததோ? திருவாய்மொழி யென்னும் ஸ்ரீராமாயணமென்றும் வலிநன இரண்டு ப்ரந்தங்களுண்டாயிருக்கக்-என்றானாயிற்று. இப்படி உகவாதார் நெஞ்சுளுக்கும் படியான ப்ரபந்தமாய்த்து -என்று.
இதனைச் சிறிது விவரிப்போம். இங்கு அவ்யபதேச்யனென்றது க்ர்மிகண்ட சோழனை. அவருடைய பெயரை வாயாலே யெடுத்துரைக்கக் கூசி அவ்யபதேச்யனென்றது. அவருக்கு அனந்தரத்திலவன் -அவருடைய மகன். அவன் தகப்பன் ஸ்ரீ வைஷ்ணவ தர்சனத்திற்கு விரோத மாகச் செய்த அதர்க்கணச் செயல்களகை; கேள்விப்பட்டானாம்;
பெருமாள் கோவிலே இடித்துப்போட்டானென்று கேள்விப்பட்டு ஐயோ! ஒரு கோவிலை இடித்துப்பபோட்டகனால் என்னாகும்! இதனால் தர்சனம் குலைந்ததாமோ? திருவாய்மொழியும் ஸ்ரீராமாயணமுமாகிய இரண்டு பிரபந்தங்களன்றோ ஸ்ரீ வைஷ்வணவ தாரிசனத்திற்குக் கல்மதில்களாயிருப்பவை; அவற்றை யசைக்க முடியுமோ ஒருவர்க்கு? என்றானாம் கிர்மிகண்ட சோழனது மகன்.
இதனால், திருவாய்மொழியானது ஆஸூரப்ரக்ருதிகள் மண்ணுண்ணும்படியாகவும் தேவப்ரக்ருதிகள வாழ்ந்து போம்படியாகவும் அவதரித்தது என்னுமிடம் ஒரு சிறுவன் வாயினாலும் வெளிவந்ததென்று காட்டினபடி.
எண்ணாதனக ளெண்ணும் நன்முனிவாரின்பம் தலைசிறப்ப-எண்ண முடியாத வற்றை யெண்ணுகின்றவர்களான ந் முனிவர்கள் மஹானந்தம் பெறுமதபடியாகத் திருவாய்மொழி அவதாரித்ததாம். எண்ணாதவற்றை யெண்ணகைவாயது என்னென்னில்;
திருவாய்மொழி அவதரிப்பதிற்கு முன்பு பல மஹானகள சபைகூட்டி ‘எம்பெருமானுடைய ஸ்வரூபகுண விக்ரஹ விபூதிகளை யெல்லாம பாரிபூப்த்தியாகப் பேசவல்ல பிரபந்தம் ஒன்றுகூட இல்லை; அப்படிப்பட்ட பிரபந்தமொன்று அவதாரிக்க வேணுமென்று மாமெல்லருங்கூடி எம்பெருமானை வேண்டிக்கொள்ள வேணும்’ என்று பேசி யெழுந்துபோனார்கள்.
அவர்களே திருவாய்மொழி அவதரித்த பின்பு மறுபடியும் ஒரு மஹாஸபை கூட்டி ‘எம்பெருமாளுக்கு இன்னமும் குணவிக்ரஹ விபூதிகள் உண்டாகவேணும்’ என்றார்களாம். உள்ள குணவிக்ரஹ விபூதிகள் யெல்லாம திருவாய்மொழியிற் பேசிமுடித்து விட்டாராழிவார்- என்பது இதன் கருத்து.
இது தான் எண்ணாதனகளெண்ணுகையாம. இன்பந்தலைச்சிறப்ப என்றவிடத்து ஈட்டில் -திருவாய் மொழியவதாரித்தபின்பு ‘அவருக்கு குணவிபூதிகள போராது’ என்றிருந்த விழவுதீற்ந்து அத்;தால் நிரதிசயாநந்திக்ளாக.” என்று ஸ்ரீஸூக்தி அச்சிடப்பட்டுள்ளது. எம்பெருமாளுக்கு குணவிபூதிகள் போராது என்றிருந்த இழவு திருவாய்மொழி யவதாரித்தபின்பு தீர்ந்தாகச் சொல்லுவது பொருந்துகிறநதா? என்று பார்க்கவேணும்.
திருவாய்மொழி அவதரிப்பதற்கு மிலர்; எம்பெருமாளுக்குள்ள குணவிபூதிகளுக்குத் தக்க பிரபந்தமொன்று அவதரிக்கவிலலையே! என்றுதான் இழவுப்டிருந்தார்கள் யாருமிலர். எம்பெருமாளுக்குள்ள கணவிபூதிகளுக்குத் தக்க பிரபந்தமொன்று அவதாரிக்கவில்லையே! என்று தான் இழவுப்படடிருந்தார்கள்.
திருவாய்மொழி அவதரித்தபின்பு அந்த இழவு தீற்ந்து, எம்பெருமானு;ககு குணவிக்ரஹ விபூதிகள் போராது என்று இழவுற்றாராயினர். இதுவே நம்பிள்ளை தீருவுள்ளம். இத்திருவள்ளத்தைக் காட்டியே மேலே குறித்த ஸ்ரீஸூக்தியை யருளிச்செய்தார்.
அதை வைத்தர்கள். ஸ்ரீ ஸூக்தியில பிழையில்லை. அதை ஸேவிக்கவெண்டிய ர்தி எங்ஙனே யென்னில்; “திருவாய்மொழி யவதாரித்த பின்பு அவருக்கு கணவிபூதிகள் போராது என்று, அருநடதா விழவு தீற்ந்து அத்தால் நி;ரதிசயானந்திகாளாக” என்று ஸேவிக்கவேணும்.
திருவாய்மொழி யவதரித்தபின்பு எம்பெருமாளுக்கு குணவிபூதிகள் போதாதென்று நினைத்து, முன்னிருந்த இழவுதீரப் பெற்றகென்பதாகக் கொள்க.
ஆக, நண்ணாவசுரர்நலிவெய்தவும் நல்லவமலரர்பொலிடிவெய்தவும் எண்ணாதனகளெண்ணும் நன்முனிவர் இன்பந்தலைச் சிறப்பவும் எம்பெருமானானவன் பண்ணார் பாடலின் கவிகளை யானாய்த் தன்னைத் தானே பாடிவிட்டு அத்திருவாய் மொழியின் போக்யதையைக் கண்டு திருமாலிருஞ்சோலையிலுள்ள வண்டுகளைப் போலே தானுமொரு வண்டாய்த் தென்னா தென்னாவென்று தெகடாடுகிறான் என்றாராயிற்று.
—————
திருமாலிருஞ: சோலைமலையப்பனுடைய வியாமோஹாதிசயத்தை யருளிச்செய்கிறார்.
திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-
பதவுரை
| சிவனும் பிரமஎம் காணாது |
– |
சிவனுக்கும் பிரமனுக்கு மெட்டாதேயிருந்து |
| அரும் மால் எய்தி அடி பரவ |
– |
(அவர்கள்) அருமையான பக்தியைச் செலுத்தித் திருவடிகளைத் துதிக்க |
| அருளை ஈந்த அம்மான் |
– |
அவாகளுக்குத் தன் திருவருளைத் தந்தருளின பெருமானாய், |
| செழு மூ உலகும் |
– |
விலகூஷணமான மூவுலங்களையும் |
| தன் ஒருமா வயிற்றின் உள்ளே வைத்து |
– |
ஒப்பற்ற பெரிய தன் திருவயிற்றினுள்ளே வைத்து |
| ஊழி ஊழி தலை அளிக்கும் |
– |
கற்பந்தோறும் நன்றாகக் காப்பாற்றுமாவனான |
| திருமால் |
– |
திருமகள் கொழுநன் |
| திருமாலிருஞ் சோலையானே ஆகி என்னை ஆளும் மால் |
– |
திருமாலிருஞ் சோலையிலே நின்று கொண்டே என்னை யாட்கொள்வதில் பெரும்பித்தனாயிராநின்றான். |
“திருமால் திருமாலிருஞ் சோலையானேயாகி என்னையாஉமால்” கொண்டு நிற்கிறவன்-என்னை யடிமைகொள்கைக்காக என் பக்கல் பியாமோஹம் வயிற்றினுள்ளே வைத்து ஊழியழி தலையளிக்குந் திருமால்-மூவுலங்களையும் தன் சிறிய திருவயிற்றினுள்ளே வைத்துச் சிறந்த ரகூஷணம் செய்தருளுமவன்;
இப்படிப்பட்டவன் என்னையாளும் மால்- ப்ரளயாபத்தில் ஜகத்துக்கு தன்னை யொழியச் செல்லாயிருக்குமவன்.
சிவனும் பிரமஎம் காணாது அருமாலெய்தி அடி பரவ அருளை யிந்தவம்மான் -சிவன் பரமன் முதலானார் காணப்பபெறாதவர்களாய்க் காணவேணுமென்று ஆசை கொண்டு பக்தியுக்தர்களாய்த திருவடிகளை ஸ்தோத்ரம்பண்ண அவர்களுக்கு முகம் தோற்றமே கடக்க நன்று அருள்செய்யும் ஸர்வேச்வரன், என்னை யாளும்மால் எனக்குக் கண்ணுக்கிலக்காம்;படி திருமலையிலே வந்து நின்று என்று என்னை அடிமை கொள்கையிலே பெரும்பித்தனானான்.
ஆக இப்பாட்டு மூன்று வாக்கியார்த்தமாக அந்வயித்ததாயிற்று.
(1) திருமாலிருஞ்சோலையானேயாகி என்னையாளும்மால்
(2) செழுமூவுலகும் தன்னொருமாவயிற்றினுள்ளேவைத்து ஊழியூதிதலையளிக்குந் திருமால் என்னையாளம்மால்
(3) சிவனும் பிரனுங்காணாது அருமாலெய்தியடி பரவ அருளையீந்;தவம்மான் என்னையாளும்மால்.
—————-
இப்போது தம்முடைய ஸம்த்திக்கு அடி திருமலையாகையாலே இத்திருமலை தானே நமக்கு ப்ராப்யமென்று திருமலையைக் கொண்டாடுகிறார்.
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-
பதவுரை
| என் அம்மானே அருளை ஈ என்னும் |
– |
எம்பெருமானே! உன்னருளைத் தந்தருள்வேணும் என்று வேண்டுகிற |
| முக்கண் அம்மானும் |
– |
எம் சிவபிரானும் |
| தெருள் கொள் பிரமன் அம்மானும் |
– |
நல்லறிவு வாய்ந்த நான் முகக் கடவுளும் |
| தேவர் கோஎம் தேவரும் |
– |
தேவேந்திரனும் முப்பத்து மூவரமரர்களும் |
| இருள்கள் கடியும் முனிவரும் |
– |
அஜ்ஞானங்களைப் போக்கவல்ல முனிவர்களும் |
| ஏத்தும் |
– |
துதிக்கும் படியான |
| அம்மான் |
– |
எம்பெருமா னெழுந்தருளி யிருக்குமி;டமான |
| திருமலை |
– |
திருமலை எதுவென்றால்; |
| மருள் கள் கடியும் மணிமலை |
– |
மருள்களை யெல்லாம் தவிக்கும் அழகியமலையான |
| திருமாலிருஞ் சோலைமலையே |
– |
தெற்குத் திருலையேயாகும். |
திருமால்ருஞ்சோலைமலை எப்படிப்பட்ட தென்னில்; மருள்கள் கடியும் மணிமலைப்ராப்தி விரோதிகளான அவித்யை முதலிய ஸகல அஜ்ஞானங்களையும் அனைவர்க்கும் போக்க்கடவதாய் விலகூஷணமான திருமலை.
பின்னையும் எப்படிப்பட்ட தென்னில்; தேவரும் முனிவருமேத்துமம்மான திருமலை-தேவர்களும் மஹாரிஷிகளும் ஏத்த நின்ற ஸர்வேச்வரன் தான விருன்பி வந்து லே;விழுந்து படுகாடு கிடக்கம தேசம்.
அந்த தேவர்கள் யாவரென்னில்; ப்ராப்தனான் நீயே அருள்செய்தாக வேண்டும்? என்ற சைகூப்பிப் பல்வாசைகளைக் காட்டிப் பிரார்திதிக்கின்ற ஈச்வராபி மாநியான ருத்ரனும்; அவருக்குங்கூட ஞானமளிப்பவனாய்த் தந்தைகயான பிரமஎம், தேவஜாதிக்கெல்லாம தலைவனென்று இறுமாந்திருக்கின்ற தேவேந்திரனுமாவர். இத்தேவர்களோடு கூட, அஜ்ஞானவிருளை வேரறப்போக்கியிருக்கும் ஸமர்தாக்களான மஹாரிஷிகளுமாக இப்பெரியார்களெல்லாரும் ஒருமிடறு செய்து ஏத்தநின்ற ஸர்வேச்வரன் வர்த்திக்கும் திருமலை திருமாலிருஞ்சோலைமலையென்று துதித்தாராயிற்று.
———-
திருமாலிருஞ் சோலைமலை, திருப்பாற்கடல், திருநாடு, திருவேங்கடமலை முதலாகத் தானெழுந்துருளியிருக்கும் திவ்விய தேசங்களெல்லவறாறலும் தனக்குப் பிறக்கும் ப்ரீதியை என்னுடைய அவயங்களிலே ஸம்ச்லேஷத்தாலே பெற்றவனாய் ஒரு கூஷணமும் என்னைவிட்டுப் பிரிந்து தாரிக்கமாடடாதவனாயிரா நின்றான்; இவனுடைய அபிநிவேசமிருக்கும்படி என்னே! யென்று வியக்கிறாற்ப்பாட்டில்.
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-
பதவுரை
| திருமாலிருஞ் சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே |
– |
செற்குத் திருமலையேடும் திருப்பாற்கடலோடு மொக்க என் தலையையும் |
| திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே |
– |
ஸ்ரீவைகுண்டத்தோடும் திருமலையோடு மொக்க என்னுடலையும், |
| அருமா மாயத்து எனது உயிரே |
– |
கடக்கவாரிதான ப்ரக்ருதியோடே கலசியிருக்கிற என்னாத்மாவையும் |
| மனமே வாக்கே கருமமே |
– |
மனஸ்ஸையும் வாக்கையும் க்ர்யையும், |
| என் ஊழி முதல்வன் ஒருவன் |
– |
ஸகலகாரண பூதனான ஸர்வேச்வரன் ஒருவன் |
| ஒரு மா நொடியும் பிரியான் |
– |
ஒரு கூக்ஷணத்தில் ஏகதேசமும் பிரிகிறலன். |
இதில் முதலடியில்-திருமாலிருஞ்சோலைமலையையும் திருப்பாற்கடலை சொல்லப்படுகிறது.
இரண்டாமடியில்-ஸ்ரீ வைகுண்டத்தையும வடக்குத் திருமலையையும் ஆழ்வாருடைய திருமேனியையும் ஏகாரிதியாக விரும்புகிறபடி சொல்லப்படுகிறது.
ஆக, இரண்டு திருமலைகளிலும் பரவ்யூஹங்களிலும பண்ணும் விருப்பத்தையெல்லாம் தம் திருமேனி யொன்றிலே பண்ணாநின்றான் என்றாராயிற்று.
மூன்றாமடியில்; வேறோர்டம் சலசாதே தம்முடைய ஆத்மவஸ்துவிலும் மநோவாக்காயங்களிலும் ஏகாரிதியாக விருப்பம் செய்திருக்கிறபடியைப் பேசுகிறார்.
இப்பாட்டில் ளும்மைகள் பியோக்கிக்வேண்டு மிடங்களில் ஏகாரம் பிரயோகிக்கப் பட்டிருப்பது குறிக்கொள்ளப் படவேண்டும். திருமாலிருஞ்சோலைமலையும் திருப்பாற்கடலும என்தலையும் ………………….என்றாப் போலேயென்றோ சொல்ல வேண்டும்; ளும்மையை விட்டு ஏகாரமிட்டதன் கருத்தை நம்பிள்ளை விளக்கியருளுகிறார்-
“ஸெளாரியைப் போலே அனேகம் வடிவுகொண்டு நில்லா நன்றானாய்த்து” என்று.
ஸௌபாரி யென்பவன் மாந்தாதாவின் ஐன்பது பெண்களை மணம் புணர்ந்து தனித்தனி ஐம்பது வடிவுகளெடுத்து அத்தேவியமாருடனே தனித்தனியே ‘என் கணவன் என்னொருத்தியை விட்டு வேறொருததிபால ஒரு நொடிப் பொழுதும் செல்கின்றிலன்’ என்றே நினைத்திருந்தாளாம். அப்படியே எம்பெருமானும் இப்பாட்டிற் சொல்லப்படுகிற இடங்களில ஒன்றிலிருக்கும்போது மற்றென்றில் இல்லை யென்று நினைக்கலாம்படி யிருந்தமை தோற்றவே ளும்மையை தவிர்த்து ஏகாரம் பிரயோகிக்கப் பட்டதென்று கொள்க.
ஒருமா நொடியும் பிரியான் – ஒரு கூக்ஷணத்தில் ஏகதேசமுங் பிரிகின்றலனென்ற படி. ஒன்றைவிட்டு மற்றென்றில் கால்வாங்கிப் போகாமல் அஸ்தமிதாந்பாவனானயிருந்து அநுபவிக்கினறானென்கை
இப்படி யநுபவிப்பவன் யாவனென்ன; (என்னுழி முதல்வ னொருவனே.) காரியவாஸ்தையிலும் காரணாவஸ்தையிமுள்ள சேதநா சேதநங்கனுடைய ஸத்தை தன் அதீன மாம்படி யிருக்குமவன் தன்எடை ஸத்தை என் அதீனமாம்படி என்பது கருத்து.
—————–
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-
பதவுரை
| ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் |
– |
ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ஒருவனே காரணபூத னென்று சொல்லப்பட்ட அத்விதீயானய் |
| உலகு எல்லாம் |
– |
ஸகல லோகங்களையும் |
| ஊழி தோறும் |
– |
படைக்கவேண்டிய காலந்தோறும் |
| தன் உள்ளே |
– |
தன் ஸங்கல்பத்தின் ஏக தேசத்துக்குள்ளே |
| படைத்து காத்து கெடுத்து உழலும் |
– |
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்து போரு மவனாய் |
| ஆழி வண்ணன் என் அம்மான |
– |
கன்பீரஸ்வபாவனாயிருக்கின்ற எம்பெருமானுடைய |
| அம் தண் திருமாலிருஞ்சோலை |
– |
அழகிய குளிர்ந்த திருமலையை |
| மனமே |
– |
நெஞ்சே! |
| கைவிடேல் |
– |
கைவிடாதே |
| வாழி |
– |
இது கொண்டு வாழ்வாயாக, எம்பெருமானே! |
| உடலும் உயிரும் மங்க ஒட்டு |
– |
எனது சாரிரமும் பிராணனும் உனது வெறுப்புக்கு இலக்காம்படி இசையவேணும். |
இப்பாட்டில் பெரும்பாகம் ஆழ்வார் தம் திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுவதாகவும் சிறுபாகம் எம்பெருமானை நோக்கிச் செல்லுவதாகவும் பன்னீராயிரப்பn தவிர்ந்த மற்ற வியாக்கியானங்களிலெல்லா முள்ளது.
பன்னிராயிரப்படியில் மாத்திரம் பாட்டு முழுவதும் திருவுள்ளத்தையே நோக்கிச் சொல்லுவதாகவுள்ளது.
ஆறாயிரப்படி யருளிச்செயல்-‘நமக்க இந்த ஸம்ருத்தியெல்லாம் திருமலையாலே வந்து ஸம்ரத்திகிடாய், நெஞ்சே! இனித் திருமலையைக் கைவிடாதே கிடாய் என்று நெஞ்சைக் குறித்துச் சொல்ல; இ;;வாத்மாவினுடைய நிகர்ஷம் பாராதே இத்தோடே கலந்தருளினாயேயாகிலும் என்னுடையஹேயனான இந்த ப்ரக்ருகியில் அபிநிவேசத்தை விட்டருளவேணுமென்று எம்பெருமானை ப்ரார்த்திக்கிறார்.” என்று.
ஈற்றடியில் மனமே! என்று விளியிருப்பது போல எம்பெருமானே! என்று மற்றொரு விளியில்லாமையால் பாட்டு முழுதும் நெஞ்சை நோக்கியே சொல்லுவதாகக் கொள்ளலாமென்று கருதினர் பன்னீராயிரவுரைகாரர்.
நெஞ்சே! நமக் த்யாஜ்யமான தேஹப்ராணாதிகள் மங்கும்படியாகச் செறிந்து ஆச்ரயிக்கப்பாராய்; நம் காரியம் செய்து முடிக்குந்தனையும் திருமாலிருஞ்சோலை மலையைக் கைவிடாதே கொள்; இ;த்தாலே நீ வாழிவாய்-என்று ஏகவாக்யமாவே உரைத்திட்டார்.
இது சுவையுடைத்தன்று ஆழ்வார் தம் திருவுள்ளததை நோக்கி “வாழி மனமே கைவிடல்” என்று அருளிச் செய்தவுடனே எம்பெருமானும் தன் திருவுள்ளத்தைக் குறித்து ‘ஆழ்வாரைத் தந்தது அவருடைய திருமேனியாகையாலே நீயும் அத்திருமேனியை ஒருகாலும் விடாதே கிடாய்” என்று கூறினானாக.
அது கேட்ட ஆழ்வார், பிரானே! இது யுக்தமன்று இதைத் தவிரவேணும் என்று கால்கட்டுகிறார்.
உடலு முயிரும் மங்க வொட்டு – சாரிரமும் பிராணனும் மங்கும்படி இசையவேணும். (வெறுப்புக்கு இலக்காக வேணுமேயல்லது – என்று ஸர்வஜ்ஞனான ஸர்வேச்வரனுக்கும் உணர்த்தினாராயிற்று.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“மங்கவொட்டென்கையாலே இதுக்கு முன்புத்தை ஆழ்வாருடைய இருப்பு ப்ராப்த சேஷத்தால்ல; பகவதபிப்ராயத் தாலே யென்னுமிடம் தோற்றுகிறது ஈச்வரன் பற்றி விடேனென்றிருக்கையாலே இருந்தாரென்கிறது” என்று.
—————
கீழ்ப்பாட்டில் “உடலுமுயிரும் மங்கவொட்டே” என்று பிரார்த்திக்கச் செய்தேயும் இவருடைய திருமேனியிலுள்ள விருப்பத்தினாலே எம்பெருமான் பின்னையும் மேல் விழுந்து ஆதாரிக்க, ஐயோ! ஸர்வஜ்ஞனான இவனுக்கு இவ்வுடலின் ஹேயத்வம் தெரியவில்;லையே! ஹேயங்களா இருப்பத்துநான்கு த்ததுவங்களினால் புணர்க்கப்பட்டது இது என்று உண்மையை யெடுத்துக்காட்டினால் இந்த நப்பாசை தவிரக்கூடம் என்று நினைத்து அரை யெடுத்துரைக்கிறாரிப்பட்டில்.
மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-
பதவுரை
| திருமாலிருஞ் சோலை மேய |
– |
தெற்குத் திருமலையில் வாழ்கின்ற |
| நங்கள் கோனே |
– |
எம்பெருமானே! |
| யானே நீ ஆகிஎன்னை அளித்தானே |
– |
நமக்குள் ஐக்கியமாம்படி என்னை ரகூஷித்தவனே! |
| பொங்கு ஐம்புலஎம் |
– |
கிளர்ந்து வருகின்ற சப்தாதி விஷயங்கள் ஐந்தும் |
| பொறி ஐந்தும் |
– |
ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும் |
| கருமேந்திரிமம் |
– |
கருமேந்திரியங்கள் ஐந்தும் |
| ஐம்பூதம் |
– |
பஞ்ச பூதங்களும் |
| இங்கு |
– |
ஸம்ஸார நிலைமையில் |
| இவ் உயிர் ஏய் பிரகிருதி |
– |
ஜீவனோடே கலசின மூலப்ரக்ருதியும் |
| மான ஆங்காரம் மனங்கள் |
– |
மஹாஎம் அஹங்காரமும் மனஸ்ஸூமாகிற |
| உன் மா மாயை மங்க ஒட்டு |
– |
உனது பெரிய மாயையைக் கழித்துத்தர ஸம்மதித்தருள வேணும். |
பிரானே! உடலுமுயிரும் மங்கவொட்டென்று வேண்டச் செய்தேயும இப்படிப் மேல் விழுகிறாயே, இது தகுமா? எ;னறு ஆழ்வார் கேட்க, அதற்கு எம்பெருமான் ‘சாந்து பூசுவார் பரண்யை;யுடைத்தோ பூசுவது? சாந்துக்கு ஆச்ரயமான பரணியும் உபாதேயமன்றோ’ என்று சொல்ல; விர்வான ளுக்திகளாலே ஆழ்வார் அவனைத் தெளிவிக்கிறாராயிற்று.
(உன் மாமாயை மங்கவொட்டு) தைவீஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யா என்று கீதையில் நீ தானே சொல்லிவைத்தாயே; ஒருவராலும் தப்பவொண்ணாதபடி குருவிபிணைத்த பிணையாக நீ பிணைத்த பிணையிலே ஆதரம் தவிரப்பாராய்.
(திருமாலிருஞ்சோலை மேய நங்கள் கோனே!) பரமபதத்தை விட்டு நீ திருமாலிருஞ்சோலை மலையிலே வந்து நிற்கிறது அடியார்கள் சொன்ன படியே நடந்து ஆச்ர்ற்தபாரதந்திரியத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவன்றோ? இன்னமும் என் சொற்கேளாதே நீ ஸ்வாந்திரனாயே நின்று நினைத்தபடி செய்வ கொள்ள வேண்டாவே.
(யானே நீ யாகி யென்னை யளித்தானே!) என்னிடத்தில் எனக்கு எவ்வளவு பாரிவு உண்டோ அவ்வளவு பாரிவு உனக்கும் இல்லையோ? யானே நீ யென்னலாம்படி யிருந்துவைத்து இ;ப்போது எனக்கு அநபிமதமானதைச் செய்யத்தகுமோ? என்று இங்ஙனே ஆழ்வார் சொல்லச்செய்தேயும்
எம்பெருமான் இணங்காதிருப்பதுகண்டு, தேஹத்தின் ஹேயமான தன்மையைப் பின்னடிகளால் (8.8) என்கிற திருவாய் மொழியிலே ஜீவாத்மாவின் சீர்மையை; எம்பெருமான் ஆழ்வார்க்கு உணர்த்தினான்; இப்போது ஆழ்வார் எம்பெருமாளுக்கு அசேநந்தின் தன்மையை உணர்த்துகிறார்; சிஷ்யாசர்ய க்ரமம் மாறினதாயிற்று.
பொங்கு ஐம்புலஎம் – சப்தாதி விஷயங்கள் ஐந்தும், அவற்றிலே அகப்படுத்து கைக்கு உறுப்பான செவிகண் முதலிய ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும் அவ்விஷயங்களில் ப்ரவர்த்திக்கைக்கு ஹேதுவான கைகால் முதலான கருமேந்திரியங்களில் ஐந்தும், சாரிரத்திற்கு ஆரம்பங்களான நிலம்நீற் முதலான பூதங்கள் ஐந்தும் ஆகஇவை இருபது;
ஸம்ஸாரதசையில் ஜீவனோடீட மிகப்பொருந்தியிருக்கிற மூலப்ரக்ருதி, வ்யவஸாய ஹேதுவான மஹான், அபிமாந ஹேதுவான அஹங்காரம், ஸங்கல்பஹேதுவான மநஸ்ஸூ ஆக இவை நான்கு; இவ்விருபத்து நான்கு தத்துவங்களின் கூட்டரவாக நீ கட்டிவைத்திருக்கிற மாயையிலே இப்போது நீ வீணாகப் பண்ணுகிற ஆதரத்தை விட்டுத் தொலைக்கப்;பாராய் – என்றாராயிற்று.
திருமாலிருஞ் சோலைமேய நங்கள் கோனே! யானே நீயாகி யென்னை யளித்தானே!, பொங்கைம்புலஎம் பொறியைந்தும் கருமேந்திரியமைம்பூதம் இங்கிவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களாகிற உன்மாமையை மங்கவொட்டு என்று அந்வயிப்பது.
இங்து ஐம்புலன்களுக்கு பொங்கு என்று அடைமொழி கொடுக்கப்பட்டது; பரமபோக்யமென்று பிரமிக்கச் செய்யுந் தன்மைவாய்ந்த என்றபடி.
—————
மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-
பதவுரை
| மான் ஆங்காரம் மனம் கெட |
– |
மஹான் அஹங்காரம் மனம் என்னுமிவை கெடும்படியாகவும் |
| வன்கையர்; ஐவர் மங்க |
– |
கொடிய இந்திரியங்களைந்தும் தொலையும்படியாகவும் |
| தான் ஆங்காரம் |
– |
தானே அபிமானியாய்ப் புகுந்து |
| தானே தானே ஆனானே |
– |
ஆத்மாத்மீயர்கள் தானேயாயிருக்கிற பெருமானை, |
| தேன் ஆங்காரம் பொழில் |
– |
வண்டுகனுடைய செருக்கையுடைத்தான சோலை சூழ்ந்த |
| குருகூர் |
– |
திருநகாரிக்குத் தலைவரான |
| சடகோபன் சொல் |
– |
ஆழ்வாரருளிச் செய்த |
| ஆயிரத்துள் |
– |
ஆயிரத்தில் |
| மான் ஆங்காரத்து இவை பத்;தும் |
– |
மஹதஹங்காரதி ரூபமான ப்ரக்ருதி தொலைவதற்காகச் சொன்ன இப்பதிகம். |
| திருமாலிருஞ் சோலை மலைக்கே |
– |
திருமாலிருஞ்சோலை விஷயமாயி;ற்று. |
இத்திருவாய் மொழியானது திருமாலிருஞ் சோலைமலையைப் பற்றின தென்கிறாரிப்பாட்டில்.
இது இவர் சொல்லித் தெரியவேண்டுவதன்றே; பாட்டுத் தோறும் திருமாலிஞ் சோலையென வருவதுகொண்டே தெரிந்து கொள்ளக்கூடிய தன்றோ;
“இவை பத்தும திருமாலிருஞ் சோலைமலைக்கே” என்று விசேஷித்துச் சொல்லுவதன் கருத்து யாதென்னில்; கேண்மின்;
கீழே (2-10.) கிளரொளியிளமைப் பதிகத்தில் “மயல்மிகு பொழில் சூழ்மாலிருஞ்சோலைக் என்கிறார்; அஜ்ஞானத்தை மிகுவிக்கும் தேசம் என்பது கருத்து;
ஸம்சயமும் அஜ்ஞானத்தில் ஒரு வகுப்பாகையாலே, மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார் தமக்கும் அஜ்ஞானமுண்டாகி “முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலந்ததுவோ? அடிச்சோதி நீநின்ற தாமரை யாயலர்ந்துவோ?” என்று ஸம்சயிக்க நோந்தது;
இவ்வளவே யன்றிக்கே ஸர்வஜ்ஞனான ஸர்வேச்வரனுங்கூட தம்முடைய ஹேயமான தேஹத்திலே ஆதரம் பண்ணும்படி நேர்ந்ததானது மயல்மிகு பொழில் சூழ்மாலிரஞ் சோலையில் வாஸத்தின் பலனே யென்று காட்டுகை ஒரு கருத்து;
அப்படி அவன் தம்முடைய தேஹத்திலே பண்ணின ஆதரத்தைத் தவிர்த்துக்கொண்டதும் திருமாலிருஞ் சோலை வாஸத்தினால்தான்; அடியார்களுக்கு விதேயனாகைக்காகவே அர்ச்சாவதார பாரிக்ரஹமாகையாலே இதை ஆழ்வார் உணர்த்தவே ஆழ்வாருடைய கட்டளையை மீறலாகாதென்று கொண்டு தவிர்ந்தானாயிற்று;
இதுவும் திருமாலிரஞ் சோலை வாஸத்தின் பலனே யென்று காட்டுகை மற்றொரு கருத்து.
இப்பாட்டின் முன்னடிகளில் சொல்லப்பட்டிருக்கிற விஷயமே இப்பதிகத்திற்குப் பலன் என்று கொள்ளக்கடவது.
மான் ஆங்காரம் மனம் கெட-மஹான் அஹங்காரம் மநஸ்ஸென்று மூன்றைச் சொன்னது ப்ரகிருதிக்கும் உபலகூஷணம். சாரிரஸம்பந்தம் நசிக்கும்படியாக என்றபடி,
ஐவர் வன்கையர் மங்க-வன்கையரான ஐவர் மங்க; பெருமிடுக்குடைய பஞ்சேந்திரியங்களும் மங்கும்படியாகவும் என்றபடி.
கீழ்ப்பாட்டில் ஐந்தைந்தாகச் சொன்னவை யெல்லாவற்றுக்கும் உபலகூஷணமிது.
ப்ரக்ருதி ப்ராக்ருதாத் மகமான தம்முடைய திருமேனியிலே நசைகெட்;டு என்றதாயி;ற்று.
தான் ஆங்கார மாய்ப்புக்கு-என்னை யநுபவிக்கப் பெரிய செருக்கோடே வந்து புகுந்து என்றபடி. தானே தானே யானானே – நான் இரக்க வேண்டாதே தானே இரப்பாளனாகி யென்றவாறு. இப்படிப்பட்ட எம்பெருமானைக் குறித்து ஆழ்வராருளிச்செய்த ஆயிரத்துள்;
மானாங்காரத்து இவை பத்தும் – இதற்கு இரண்டுபடியாகப் பொருளளிருளிச் செய்வர்; –
மஹான் அஹங்காரம் முதலியவற்றின் கூட்டரவான தேஹத்தை விட்டுத் தொலைப்பதற்காகச் சொன்ன இப்பதிகம் -என்றும்,
பெரிய செருக்கோடே சொன்ன இப்பதிகம் என்றும். ஆழ்வார் தம்முடைய உத்தேச்யம் தலைக்கட்டுகை அணித்து என்னுமத்தாலே பெரிய செருக்கு உண்டாகக் குறையில்லையே.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 16, 2022 at 12:19 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply