***- மிகவும் நீசனாயிருக்கிறவென்னை ஞானம் சக்தி முதலியன வுடையேனாம்படி பண்ணி என்னையிட்டுத்
திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட வுபகாரத்தை நினைக்க நினைக்கத் தரித்திருக்ககில்லேனே! என்கிறார்.
என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-
பதவுரை
| என்னை |
– |
நெடுநாளாக என்பெருமானுடையவிஷயீகாரம் பெறாதிருந்த வடியேனை |
| என்றைக்கும் |
– |
முதலிலேயே சாச்வதமாக அங்கீகரித்து (அவ்வளவேயன்றிக்கே) |
| போகிய அன்றைக்கு அன்று |
– |
நிகழ்கின்ற நாள்தோறும் |
| உய்யக் கொண்டு |
– |
விசேஷ கடாஹஷம் பண்ணி |
| என்னை தன் ஆக்கி |
– |
இப்படி விஷயீகரிக்கப் பட்டனென்னைத் தன்னைடொத்தஜ்ஞான சக்திகளுடையேனும்படியாக்கி |
| என்னால் |
– |
என்னை உபகரணமாகக் கொண்டு |
| தன்னை |
– |
வேதங்களுக்கு மெட்டாத பெருமை பொலிந்த தன் விஷயமாக |
| இன் தமிழ் பாடிய |
– |
இனியதமிழ்ப் பிரந்தத்தைப் பாடுவித்துக் கொள்கின்ற |
| ஈசனே |
– |
ஸ்வாமியாய |
| ஆதி ஆய் நின்றஎன் சோதியை |
– |
இத்திருவாய்மொழிக்கு மூலகாரணமாயிருந்து எனக்கு வடிவழகைக் காட்டிக்கொடுத்த பெருமானைக் குறித்து |
| என் சொல்லி நிற்பன் |
– |
எத்தைச் சொல்லித் தரிப்பேன்! |
என்றைக்கும், போகிய அன்றைக்கன்று என்னை உய்யக்கொண்டு என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இனதமிழ் பாடியவீசனை ஆதியாய நின்ற வென்சோதியை என் சொல்லி நிற்பன்! என்று அந்வயம்.
என்திறத்தில் ஒருநாள் பண்ணின விஷயீகாரமே காலமுள்ளதனையும் உஜ்ஜீவிக்கப்போரும் என்னும்படியாகவன்றோ விஷயீகரித்தது.
முதல்தன்னில் விஷயீகரிக்கும்போதே தம்மை ஆத்மாந்த கிங்கரனாக விஷயீகரித்த படியை என்றைக்கும் என்றதனால் அருளிச் செய்தபடி.
ஒருகால் பண்ணிவிட்ட விஷயீகாரமேயன்றிக்கே. கழிகிற நாள்தோறும் இப்படியேயன்றோ விஷயீகரித்தது! என்று வியக்கிறார் இரண்டாமடியில்.
என்னைத் தன்னாக்கி யென்பதற்கு இரண்டு படியாக நிர்வஹிப்பர்கள்;
தம்மையே நாளும் வணங்கித்தொழுவார்க்குத் தர்மையேயொக்க அருள்செய்வர் என்கிற கணக்கிலே ஜ்ஞான சக்திகளால் தன்னைடொக்கும்படி பண்ணி யென்னுதல்.
தனக்கேயாம்படி விஷயீகரித்து என்னுதல்.
என்னால் தன்னை இன்தமிழ்பாடிய—ஐயொ? என்னிலைமையென்ன? தன்னிலைமையென்ன? ச்ருதிஸ்ம்ருதீதிஹாஸ புராணாதிகளுக்கும் எட்டாத தன்னை அல்பகக்திதனான என்னைக் கொண்டு இனிய தமிழ் நூலைக் கலிபாடுவித்துக் கொள்ளுகையாகறவிது என்னே! என்று ஈடுபடுகிறார்:
இன் தமிழ் பாடிய வீசனை-இனிமையான தமிழ்ப்பாஷையென்று பொதுவாகத் தமிழின் இனிமை சொல்லுகிறதன்று இங்கு; தமிழ் என்றது தமிழினாலாகிய இத்திருவாய்மொழிப் பிரபந்தத்தைச் சொன்னபடியாய, இன் என்கிற அடைமொழி அதிலே அந்வயிக்கும்.
இளையபுன்கவிதை என்றாற்போலே இழித்துச் சொல்லவேண்டியிருக்கப் புகழ்ந்து கூறலாமோவென்று சங்கிக்கவேண்டா:
இது எம்பெருமானுடைய திருவாக்கேயன்றி என் வாக்கன்று என்று ஒரு தடவைக்குப் பத்து தடைவ சொல்லுகிறாராதலால் தம் வாக்கைப் புகழ்தலாகிற குற்றம் தோன்ற இடமில்லையென்க.
பாடிய – என்பதற்கு பாடுவித்துக் கொண்ட என்கிற அர்த்தம் தவிர மற்றொரு இன்சுவைப் பொருளும் நம்பிள்ளை யருளிச்செய்கிறார். ஏதத்ஸாமகாயந்நாஸ்தே என்று முக்தன் ஸாமகானம் பண்ணுமாபோலே அவனும் இவரோட்டை யநுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டு தென்னாவென்று பாடுமாயிற்று.” என்பது ஈட்டு ஸ்ரீஸீக்தி.
திருவாய்மொழியை அவதரிப்பித்து அதன் போக்யகையிலே என்பெருமான் தானே யீடுபட்டு ஆனந்தத்திற்குப் போக்கு வீடாக ஆலாபனையிட்டுப் பாடும்படியைச் சொன்னவாறு.
ஆதியாய் நின்ற என்பதற்கு – ஜகத் காரணபூதனாய் நின்ற வென்கிற பொருள் சிலர்க்குத் தோன்றும்; அதுவன்று பொருள்; தமக்கு உள்ளீடாக நின்று பாடுகையாலே திருவாய்மொழிக்கு மூலபூதனென்றபடி.
என் சோதியை—தம்முடைய கவிக்கு அவனுடைய வடிவழகே ஊற்றுவாய் என்கிறது.
இங்கே ஈட்டு ஸ்ரீஸீக்தி—பிடாத்தை விழவிட்டுத் தன் வடிவழகைக் காட்டினான்; திருத்திரையெடுத்தால் கூப்பிட்டேன், அது கவியாய்த் தலைக்கட்டிற்று. வடிவழகைக் காட்டியாயிற்று கவிக்கு உள்ளுறை கொடுத்தது.” என்று (பிடாத்தை விழவிட்டு—தன் போர்வையை நீக்கி என்றபடி.)
என் சொல்லி நிற்பனோ?—பெற்ற வுபகாரத்திற்குப் பெருநன்றி பாராட்டுதலாகச் சில வார்த்தைகள் சொல்லுவதென்பது உலகவியற்கை:
தாம் பெற்ற மஹோபகாரத்திற்கு ஈடுமெடுப்பு மில்லாமையாலே என்ன பேச்சுப் பேசி நன்றி பாராட்டுவ தென்று தடுமாறுகிறார்.
————-
***- தானே தன்னைக் கவி பாடிவைத்து நான் தன்னைக் கவி பாடினதாக உலகில் ப்ரஸித்தமாக்குவதே! இது என்கொல்! என்று தலைசீய்க்கிறார்.
என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-
பதவுரை
| என் இன் உயிர் |
– |
என்னுடைய ஹேயமான ஆத்ம வஸ்துவானது |
| இன்று ஒன்று ஆய் |
– |
இன்று தனக்கொரு வஸ்துவாத, |
| என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து |
– |
என்னுடைய சொல்லாலே நான் கர்த்தாவாகச் சொன்ன இனிய பிரபந்த மென்று பிரபந்த மென்று நாட்டிலே பிரஸித்தமாக்கி |
| தன் சொல்லால் |
– |
தன்னுடைய உக்திகளாலே |
| தான் தன்னை கீர்த்தித்த |
– |
தானே தன்னைக் கவிபாடிக் கொண்டவனாய் |
| என் முன் சொல்லும் மாயன் |
– |
எனக்குள்ளேயிருந்து முன்னுருச் சொல்கின்ற ஆச்சர்யபூதனாய் |
| மூ உரு ஆம் முதல்வன் |
– |
த்ரிமூர்த்தியாயிருப்பவனான காரணபூதனைக் குறித்துக் |
| என் சொல்லி நிற்பன் |
– |
எதைச் சொல்லித் தரிப்பேன்? |
பாசுரம் தொடங்கும்போதே என் சொல்லி நிற்பன்! என்கிறார்.
நெடுங்காரமாக விமுகனாய்ப் போந்தவென்னை நிர்ஹேகுகமாக விஷயீகரித்தபடியை நினைத்தால் நான் எத்தைச் சொல்லித் தரையில் கால்பாவுவதென்கிறார்.
பெருளல்லாத வென்னையுமொரு பொருளாகக் கொண்டு என் சொல்லால் யான் சொன்ன் பாசுரமென்று உலகத்தார் நம்பும்படியாக்கி, எனமனைக் கருவியாகக் கொண்டு தன் சொற்களையிட்டே திருவாய்மொழி பாடியருளின் இந்த மஹாகுணத்திற்கு என்ன பாசுரமிட்டுச் சொல்வது!
என் முன் சொல்லும் – அவன், முன்னே சந்தையிட, பின்னே; சொன்னேன். உபாத்யாயர்கள் சீடர்களுக்கு வேதமோகுவிக்க, அவர்கள் ஒதுகிறாப்போலே நடந்த தாயிற்றிது.
மூவுருமாம் முதல்வனே – தான் அயனுக்கும் அரனுக்கும் அந்தர்யாமியாயிருந்து சில காரியங்களைச் செய்ய, அக்காரியங்கள் அவர்கள் தாமே செய்ததாக ப்ரஸித்தமானாப்போலே இத்திருவாய்மொழியிலும் எனக்கு தர்த்ருத்வப்ரஸித்தி யுண்டாயிற்று என்கை -இந்த வாக்கியத்தின் பரம தாற்பரியம்.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:-“ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து அவனை அத்யயநம் பண்ணுவித்து தேவர்களுக்கு வெளிச் சிறப்பைப் பண்ணுவித்து ‘அதுதன்னை ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்து அவனை அத்யயநம் பண்ணுவித்து தேவர்களுக்கு வெளிச் சிறப்பைப் பண்ணுவித்து தேவர்களுக்கு வெளிச் சிறப்பைப் பண்ணுவித்து ‘அதுதன்னை ப்ரஹ்மாசெய்தான்’ என்று அவன்தலையிலே யேறிட்டும், ருத்ரனுக்கு அந்தராத்மாவாய்ப்புக்கு நின்று த்ரிபுரதஹத்தைப் பண்ணுவித்து ருத்ரன் செய்தானென்று அவன் தலையிலே யேறிட்டும் விருது பிடிக்கப் பண்ணினாப்போலே தானே ப்ரபந்தத்தைப் பண்ணி நான் பண்ணினேனென்று என்தலையிலே யேறிட்டு எனக்கொரு ப்ரஸித்தியைத் தந்தான், தானே கார்யஞ் செய்து பிறார் தலையிலே யேறிடுகை அவனுக்குப் பண்டே ஸ்வபாவங்கீடீர்.”
—————-
***- அன்பர்களுக்காக என்னைக்கொண்டு தான் தன்னைக் கவிபாடின மஹோபகாரனை ஒரு நாளாவது மறக்கப்போமோ வென்கிறார்.
ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-
பதவுரை
| இவன் முதல்வன் ஆம் என்று |
– |
குருகூர்ச்சடகோபனாகிய இவன் ப்ரபந்த ஜநகூடஸ்தானகக் கடவன்’ என்று திருவுள்ளம் பற்றி |
| தன் தேற்றி |
– |
தன் விஷயமான தெளிவை எனக்குப் பிறப்பித்து |
| என் நா முதல் வந்து புகுந்து |
– |
என்னுடைய நாவிலே தானே வந்து புகுந்து |
| நல் இன் கவி |
– |
பரம போக்யமான சொல் தொடைகளை |
| தூ முதல் பத்தர்க்கு |
– |
முமுக்ஷூக்களுக்கு அநுபவிக்கலாம்படி |
| தான் தன்னை சொன்ன |
– |
தானே தன்னைப் பாடின |
| என் வாய் முதல் அப்பனே |
– |
என் வாக்குக்கு முதல்வானான மஹோபகாரகனை |
| என்று மறப்பனோ |
– |
என்றைக்காவது மறப்பேனா? (ஒரு நாளும் மறக்கமாட்டேன்.) |
ஆம் முதல்வனிவனென்று – இதற்கு இரண்டு வகையாக நிர்வாஹம்:
முதல்வன் என்கிறவிது எம்பெருமானிடத்திலே அந்வயிப்தாக ஒரு நிர்வாஹம்.
அது ஆழ்வாரிடத்திலே அந்விப்பதாக மற்றொரு நிர்வாஹம்.
அந்த எம்பெருமானே ஜகத்காரணபூதனென்று தன் பக்கலிலெ யெனக்குத் தெளிவு பிறக்கும்ப்டியாகப் பண்ணி என்பது முதல் நிர்வாஹத்தின் பொருள்.
குருகூர்ச்சடகோபனாகிற இவன் ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணி கொள்ளும் விஷயத்திலே முதவ்வனானகக் கடவன்- தலைவனாகக்கடவன் என்று திருவுள்ளம்பற்றி என் பக்கலிலே தன் ஸ்வரூபாதிகளைத் தெளியப்பண்ணி என்பது இரண்டாம் நிர்வாஹத்தின் பொருள்.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள்; “காரண வாக்யங்களில் உபாஸ்யனாகச் சொல்லப்படுகிறான் தானேயென்று தன்பக்கலிலே கெளியும்படி பண்ணி யென்னுதல்; அன்றிக்கே, பரமபதத்தோபதி ஸம்ஸாரத்தையும் திருத்த நினைத்தோம்; அதுக்கு இவன் முதலாம்-அடியா மிவனென்று என்பக்கலிலே தன் ஸ்வரூபாதிகளைத் தெளியப் பண்ணி யென்னுதல். இங்கே யருளிச்செய்யும் வார்த்தை- திருப்புற்றுக்குக் கிழக்காக் எழுந்தருளி நிற்பதைக் கண்டு ஆமுதல்வனிவன் என்றருளிச் செய்தாராம் என்று.”
ஸ்ரீகாஞ்சீ ஹஸ்திகிரியின் திருமடைப்பள்ளி ப்ரதக்ஷிண வீதியிலே ஆளவந்தார் யாதவ ப்ரகாசனோடே யிருந்த எம்பெரமானாரைத் திருச்கச்சிநம்பிகள் மூலமாகத் தெரிந்து கொண்டு ‘ஆம்முதல்வனிவன்’என்று குஸரக் கடாக்ஷித்தருளின ஐதிஹ்யத்தையருளிச் செய்தபடி. இதனால் இரண்டாவது நிர்வாஹம ஆளவந்தார் திருவுள்ளத்திற்கு மிதவுமிணங்கினதென்று காட்டினபடி
ஸ்ரீமத்ப்யாம் ஸ்யாதஸாவிதி என்கிற அதிகரண ஸாராவளி ச்லோதத்தில் (ஸ்யாரஸௌ) என்றதும் இப்பொருளதே.
என் நாமுதல் வந்து புகுந்து-ஸ்ரீ; ராமாயணத்திற் காட்டில் திருவாய் மொழிக்குண்டான ஏற்றஞ் சொல்லுகிறது இதனால். எம்பெருமான் நான்முகனுக்கு நியமிக்க, அவன் தன்மஹிஷியான ஸரஸ்வதியை ப்ரோஜீக்க, அவள் வால்மீகி பகவானுடைய நாவிலே ஆவேசித்து அவதரித்ததாயிற்று ஸ்ரீராமாயணம். அங்ஙனம் ஒர் இடையீடின்றிக்கே என்னுடைய நாவிலே தானே முற்பாடனாய் வந்து புகுந்து தானே பேசினானென்கிறார்.
தூமுதல் பத்தர்க்கு – நித்யஸூரிகளுக்கும் போக்யமாக. அல்லது முமுக்ஷூக்களுக்கென்றபடியுமாம்.
இப்படிப்பட்ட மஹாபகாரகனை என்றேனும் மறக்க விரகுண்டோ?
————-
தானே தன்னைக் கவி பாடிக்கொண்டானாகில் ஒர் ஆச்சர்யமில்லை பாடுகைக்குப் பாங்கின்றியே யிருக்கிற
வென்னைக் கொண்டு தப்புதலில்லாமல் கவிபாடின இந்த மஹோபகாரத்தை நான் எங்ஙனே மறக்கமுடியுமென்கிறார்.
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-
பதவுரை
| என் ஆகியே |
– |
எனனைக் கொண்டே |
| தப்புதல் இன்றி |
– |
ஒருவகையான அவத்யமும் தட்டாதபடி |
| தனை தான் கவி சொல்லி |
– |
ஒப்பற்ற பாபியான என்னை |
| உய்ய கொண்டு |
– |
உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம்பற்றி |
| செப்பமே செய்து திரிகின்ற |
– |
எனக்கு ரக்ஷ்ணமே பண்ணிக்கொண்டு போருகிற |
| சீர்கண்டு |
– |
சீலத்தைக் கண்டு வைத்து |
| அப்பனை என்று மறப்பன் |
– |
அப்பெருமானை என்றைக்காவது மறக்க முடியுமோ? |
“அப்பனை யென்று மறப்பன்” என்றவிடத்து ஈட்டில் -“உபகாரகனானவனை நான் என்று மறப்பன்? இனி அவன் உபகாரம்; பண்ணினால்தான் மறக்கப்போமோ?’ என்று (பழைய தெலுங்கு பதிப்பில்) பாடம் காண்கிறது, “இனி அவன் அபகாரம் பண்ணினால்தான்” என்று திருத்தவேணும். இருபத்தினாலாயிரப்படியில் – “இவ்வுபகாரம் பண்ணினவனை, இனி அபகாரம் பண்ணினால் தான் மறப்பேனோ?” என்கிற ஸ்ரீஸூக்தி காண்க.
அப்பன் என்பதற்கு உபகாரகனென்று பொருள்.
“என்னாகியே தப்புதலின்றித்தனைக்கவி தான் சொல்லி” என்றவிடத்திற்கு எம்பார் அருளிச்செய்வராம்-
“தான் பாடினானாகில் ஒரு தப்புமில்லாமல் தலைக்கட்டும்; நான் பாடினேனாகிலும் வருந்தி ஒருவிதமாகத் தலைக்கட்டலாகும்;
இவ்விரண்டுமல்லாமல் என்னை உபகாரணமாகக்கொண்டு கவிபாடாநிற்கச் செய்தேயும் என் ஸம்பந்தத்தால் வந்த தோஷம் தடடாதபடி கவிபாடித் தலைக்கட்டினான்.” என்று.
ஒப்பிலாத் தீவனையேனை -ஸர்வஜ்ஞ்த்வம் ஸர்வசக்தத்வம் முதலானவற்றில் தான் ஒப்பிலாதவனாயிருக்குமாபோலே தீவினையில் நான் ஒப்பிலாதவனாயிருந்தேன். அப்படிப்பட்ட வென்னை, அடியோடு தீவினையின் நாற்றமே யறியாதவர்கள் பெறும் பேறு பெறுவித்தருளினானே! இஃதென்ன ஔதார்யமென்று ஈடுபடுகிறார்.
————–
***- தன்னைக் கவிபாடுகைக்குத் தக்க ஆற்றலும் ஆசையுமில்லாதிருந்த வென்னைக்கொண்டு, உலகமெல்லாங்
கொண்டாடும்படியான பாசுரங்களைப் பாடுவித்துக் கொண்டானே! என்ன ஸர்வேச்வரனோ வென்கிறார்.
சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-
பதவுரை
| சீர் கண்டு கொண்டு |
– |
பகவத்குணங்களை அவகாஹித்து |
| திருந்து நல்இன் கவி |
– |
திருத்தமுற்று விலக்ஷ்ணமாய் மதுரமான பாசுரங்களை |
| யான் நேர்படசொல்லும் நீர்மை இலாமையில் |
– |
நேர்த்தியாகப் பாடுகைக்குரிய சக்தி எனக்கில்லாமையாலே |
| ஏர்வு இலா என்னை தன்னாக்கி |
– |
தகுதியற்ற வென்னைத் தன்னோடொக்கக் கடாக்ஷித்து |
| என்னால் |
– |
அப்படி கடாக்ஷிக்கப் பெற்ற அடியேனைக் கொண்டு |
| தன்னை |
– |
தன் விஷயமாக |
| பார் பரவு இன் கவிபாடும் பமர் |
– |
நிலவுலகம் முழுதும் கொண்டாடும்படி யான இனிய பாசுரங்களைப்பாடும்; பரமபுருஷராயிரா நின்றார்! |
எம்பெருமான் விஷயமாகக் கவிபாடவேணுமானால் முந்துற முன்னம் அவனுடைய திருக்கல்யாண குணங்களைக் கண்டுகொள்ள வேணுமே;
கடல் போன்ற அக்குணங்களில் ஒரு திவலையும் கண்டறிந்கவனல்லனே நான் என்கிறார்.
குணஜ்ஞானமில்லையாகிலும், கட்டளைப்பட்டு லக்ஷணோபேதமான கவியை யியற்றும் பெற்றியாவது இருக்கக் வேணுமே; அதுவுமில்லை யெனக்கு. இவை யில்லாமையாலே கவி பாடுகைக்குத் தகுதியற்றவன் நான்.
இப்படிப்பட்ட வென்னை தன்னைப்போலே ஹேயப்ரத்யநீகத்வ ஸர்வஜ்ஞத்வாதி குணவிசிஷ்டனாக்கி என்னைக்கொண்டு இப்பாசுரங்களினாலேயே தன்னைப் பராத்பரனாக அபிமானிக்கின்றானே! என்று உள் குழைகின்றார்.
இரண்டாமடியின் முடிவில் ‘நீர்மையிலாமையில்” என்பதற்கு ‘யோக்யதையில்லாமலிருக்கச் செய்தேயும்’ என்று பொருள்.
அன்றிக்கே இதனை ஏழாம் வேற்றுமையாகக் கொண்டு, நீர்மையிலாமையில் ஏர்விலாவென்னை—யோக்யதையின் அபாவத்தில் ஒப்பற்றிருக்கிறவென்னை என்று பொருள் கொள்ளவுமாம்.
ஒப்பற்ற அயோக்யனை யென்றபடி. இது ஆறாயிரப்படி நிர்வாஹம்.
————-
***- தனக்குச் சில பாசுரங்கள் வேணுமானால் அவற்றைப் பாடவல்ல மஹாகவிகள் பலருமுண்டே;
வ்யாஸபராசரவால்மீகிப்ரப்ருதிகளான மஹர்ஷிகளும் முதலாழ்வார்களுமுண்டாயிருக்க,
அவர்களைக்கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளாதே என்னைக் கருவியாகக்கொண்டு கவி பாடுவதே யென்று தலைசீய்க்கிறார்.
இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-
பதவுரை
| என் வைகுந்த நாதன் |
– |
பரமபதநாதனை எம்பெருமான் |
| இன் கவி பாடும் பரம கவிகளால் |
– |
மதுரமான கவிகளைப்பாடவல்ல முதலாழ்வார்களைக் கொண்டு |
| தன் கவி தான் தன்னை பாடுவியாது |
– |
தனக்குத் தகுதியான பாசுரங்களைத்தான் பாடுவித்துக்கொள்ளாமல் |
| இன்று நன்கு வந்து என் உடன் ஆக்கி |
– |
இப்போது எனக்கருள் செய்யவேணுமென்று வந்து என்னைக் கருவியாகக்கொண்டு |
| என்னுல் |
– |
என் வாயிலாக |
| தன்னை வன் கவிபாடும் |
– |
தன் விஷயமான சிறந்த பாசுரங்களைப் பாடிக்கொள்கிறன்!. |
இன் கவிபாடும் பரமகவிகளென்பதற்கு ஸம்ஸ்க்ருத கவிகளையும் அர்த்தமாகக் கொள்வர்.
வ்யாஸபராசரவால்மீகிப்ரப்ருதிகளான வடசொற் கவிவரர்களும், முதலாழ்வார்கள் திருமழிசைப்பிரான் போல்வாரான செந்தமிழ்க் கவிவரர்களுமுண்டாயிருக்க, அவர்களைக்கொண்டு தனக்கு வேண்டிய பிரபந்தங்களை எவ்வளவும் பாடுவித்துக் கொள்ளலாமே;
அது செய்யாதே என்னைக்கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளுமதுவே ப்ரயோஜநமாக வந்து தான் ஸ்ரீவைகுண்டநாதனை பெருமையை எனக்குத் தோற்றுவித்து, வைகுந்தநாதனென்று என் வாயினற் சொன்னலொழியத் தன்னை வைகுண்டநாதனக நினையாதவனய், என் பாட்டினலேயே தனக்கு வைகுண்டநாதத்வம் ஸித்தித்ததாக நினைக்குமவனய் இப்படி பாடுவித்துக் கெதண்டானே, இது என்ன நீர்மை! என்று உருகுகிறார்.
மூன்றாமடியில், நன்கு வந்து, என்றும், நன்கு உவந்து என்றும் பிரிப்பர்.
——————-
***- என்னைக்கொண்டு பரமபோகயமான கவியைப் பாடுவித்துக்கொண்ட பரமோபகாரத்திற்கு இவனைக்
காலமுள்ள தனையும் அநுபவித்தாலும் த்ருப்தி பெறமாட்டேனென்கிறார்.
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-
பதவுரை
| வைகுந்தநாதன் |
– |
பரமபதநாதனை எம்பெருமான் |
| என் வல்வினை மாய்ந்து அற |
– |
என்னுடைய பிரபல பாபங்கள் தொலையும்படி செய்பவனாய் |
|
(அதனால்) |
||
| குந்தன் |
– |
பரிசுத்தி பெற்றவனாய் |
| தன்னை என் ஆன்கி |
– |
என்னேடு ஒரு நீராகக்கலந்து |
| என்னுல் தன்னை வைகுந்தன் ஆக புகழ |
– |
என்னைக்கொண்டு தன்னை வைகுண்ட பதியாகப் புகமும்படி |
| வண் தீம் கவி |
– |
உதாரமதுரங்களான பாசுரங்களை |
| செய் குந்தன் தன்னை |
– |
செய்யும்படியான உபசாரஸ்வபாவமுடைய தன்னை |
| சிந்தித்து எந்நாள் ஆர்வன் |
– |
அநுஸந்தித்து எப்போது த்ருப்தி பிறப்பது? |
அயர்வறு மமரர்க ளதிபதியாயிருந்துவைத்து நித்யஸம் ஸாரியான என் பக்கலிலே வந்து மேல்விழா நின்றனே!,
என்னுடைய வல்வினைகளையெல்லாம் போக்கி அதனுல் குந்தனென்னும் திருநாமத்தையுடையவனயினனே!,
என்னைத் தன்னைப்போலே தூயனக்கி என்னைக்கொண்டு தனனை வைகுண்டநாதனகப் புகழச்செய்து அதனல் தான் ஸந்துஷ்டனகிறனே!
இந்த நீர்மையை நான் எத்தனை நாள் சிந்தித்தாலும் த்ருப்திபெறக் கூடியதாக இல்லையே; என்செய்வேன்! என்றராயிற்று.
இப்பாட்டில் குந்தன் என்பதற்குப் பலபடியாகப் பொருள் கொள்ளுவர்கள்.
“குமுத: குந்த:” என்று ஸஹஸ்ரநாமமாதலால் குந்தனென்று திருநாமஞ் சொன்னபடியாகலாம்.
அத்திருநாமத்திற்கு சங்கராசார்யர் உரைத்த பொருள்-
(1) குந்தமலர்போல் அழகான அங்கமுடையவர்; ஸ்படிகம் போலத் தெளிவாயிருப்பவரென்கை.
(2) பரசுராமாவதாரத்தில் பூமியைக் கச்யபருக்கு யாகதக்ஷணையாகக்கொடுத்தவர்.
(3) பூமியை க்ஷத்ரியர்களில்லாமற் கண்டித்தவர் = என்று.
இதற்கு பட்டர் அருளிச்செய்த அர்த்தமாவது-ஞானம் வைராக்யம் முதலிய முற்படிகள் ஏறினவர்களுக்குப் பரபக்திபரஜ்ஞானபரமபக்திகளாகிய மேற்படிகளைக் கொடுப்பவர் என்று.
வடமொழியில் குந்தமென்று ஆயுதவிசேஷத்திற்குப் பெயராதலால், வல்வினை மாய்ந்தறச் செய்குந்தன்-விரோதிநிரஸநம் செய்யவல்ல ஆயுத விசேஷத்தையுடையவன் என்றுமாம்.
வண்டீங்கவி என்றவிடத்து, வண் தீம் கவி என்று பதவியாகம். தீம் என்று இனிமை.
————-
***- என்னைக்கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட இந்த மஹா குணத்திற்கு உபயவிபூதியிலுமுள்ளாருடைய
சக்தியையும் வாக்கு முதலிய உபகரணங்களையும் நானொருவனே பெற்று அநுபவித்தாலும் த்ருப்திபெறமாட்டேனென்கிறார்.
ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-
பதவுரை
| ஏர்வு இலா என்னை தன் ஆக்கி என்னுல் |
– |
தகுதியற்ற வென்னைத் தன்னேடொக்கவருள் செய்து |
| தன்னை சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கு |
– |
என்னையிட்டுத் தன் விஷயத்தில் சிறப்புண்டாம்படி இனிய பாசுரங்களைச் சொன்னபடிக்கு |
| ஆழி அம் கை எம்பிரான் புகழ் |
– |
சக்ரபாணியான அந்த எம்பெருமானுடைய திருப்புகழை |
| பார்விண் நீர் முற்றும் கலந்து பருகினும் ஆர்வனே |
– |
மண்ணிலுள்ளாரும் கூறிராப்தியிலுள்ளாரும் ஒன்று சேர்ந்து புகழ நேர்ந்தாலும் நான் திருப்தியடைவேனே? |
பார்விண்ணீர் முற்றுங் கலந்து பருகிலும் என்பதற்கு இரண்டுவகையாகத் தாற்பரியம் கொள்வர்;
(1) எங்குமுள்ள சேதநர்களெல்லாரோடுங்கூடி (எல்லாருமாகச் சேர்ந்து) அநுபவித்தாலும் ஆர்வனோ!
(2) எங்குமுள்ள எல்லாருடையவும் சக்தியையும் உவகரணங்களையும் கொண்டு அநுபவித்தால்தான் ஆர்வனோ!
—————
***- கீழ்ப்பாட்டிற் சொன்னதுதன்னையே இன்னமும் சிறிது சித்திரித்துப் பேசுகிறார்.
திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-
பதவுரை
| மறப்பு இலா என்னை |
– |
மறப்புக்கு விஷயமில்லாதபடி ஸ்மரணமேயில்லாதிருந்த வென்னை |
| தன் ஆக்கி |
– |
தன்னோடொக்க வீஷயீகரித்து |
| என்னால் தன்னை உறபல இன்க சொன்ன உதவிக்கு |
– |
என்னைக்கொண்டு தனக்குப் பொருத்தமாகப் பல இனிய பாசுரங்களைப் பாடுவித்த மஹோபகாரத்திற்கு, |
| திறத்துக்கு ஏய் துப்பரவு ஆம் திருமாலின் சீர் |
– |
எந்த விஷயத்திலும் பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை |
| இறப்பு எதிர் காலம் |
– |
இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு |
| பருகிலும் |
– |
அநுபவித்தாலும் |
| ஆர்வனோ |
– |
பர்யாப்தி பெறுவேனோ? |
நிகழ்காலத்தில் மாத்திரமன்று; இறந்தகாலத்தில் எத்தனை சேதநர்கள் கழிந்தார்களோ.
இனி, எதிர்காலத்தில் எத்தனை சேதநர்கள் தோன்றுவர்களோ
அவர்களெல்லாருடையவும் சக்தியையும் உபகாணங்களையுங் கொண்டு அநுவித்தாலும ஆரமாட்டேன்;
அவர்களோடு கூடியநுபவித்தாலும் ஆரமாட்டேன் என்றாராயிற்று.
————–
***- அவனுடைய பேருதவிக்கு ஒருபடியாலும் கைம்மாறு இல்லையென்கிறார்.
உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10-
பதவுரை
| உதவி கைம்மாறு |
– |
திருவாய்மொழி பாடுவித்துக் கொண்டவுதவிக்குப் பிரதியுபகாரம் |
| என்உயிர் என்னவுற்று எண்ணில் |
– |
என்னுடைய ஆத்மா என்று சொல்ல நினைத்தால் |
| அதுவும் அவன் தன்னது |
– |
அவ்வாக்மவஸ்துவும் அவனுடைய பொருளாகவே யிரா நின்றது; |
|
(ஆனபின்பு) |
||
| என்னால் தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு |
– |
என்னையிட்டுத் தனைனை மதுரமாகப பாடுவித்துக் கொண்ட எம்பிரானுக்கு |
| இங்கும் அங்கும் |
– |
உபயவிபூதியிலும் |
| செய்வது |
– |
செய்யக்கூடிய கைம்மாறு |
| எதுவும் ஒன்றும் இல்லை |
– |
மிக அற்பமானதுமில்லை. |
ஆழ்வீர்! உபகாரஸ்ம்ருதிக்குக் காலம் போருகிறதில்லை யென்று நீர் புண்பட்டு இதை மீண்டுமீண்டும் பேசுவானேன்?
உம்மதாயிருப்பதொரு பொருளை அவனுக்குக்கைம்மாறக கொடுப்பது?
என் ஆத்மாவை அவனுக்குக் கொடுக்கலாமெனறு பார்த்தாலோ, அதுவும் பண்டே அவனுக்கு அடிமையாதலால்
இங்குமங்கும் இதுக்கொரு கைம்மாறு செய்யலாவாதில்லையே, என்று தடுமாறுகின்றார்.
—————
இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11-
பதவுரை
| இங்கும் அங்கும் |
– |
இவ்விபூதியிலுண்டான ஆச்ரயண வேளையிலும் அவ்விபூதியிலுண்டான கைங்கர்ய தசையிலும் |
| திருமால் அன்றி இன்மை கண்டு |
– |
லக்ஷ்மீபதியல்லது வேறெருவர் உர்தேச்யால்லாமையை யறுதியிட்டு |
| அங்ஙனெ வண் குரு கூர் சட கோபன் |
– |
அவ்வண்ணமாகவே யிருப்பவரான ஆழ்வார் |
| இங்ஙனே சொன்ன |
– |
இப்படியருளிச் செய்த |
| ஒர் ஆயிரத்து இப்பத்தும் |
– |
ஆயிரத்துள் இப்பதிகம் |
| எங்ஙனே சொல்லிலும் |
– |
எப்படிச் சொன்னாலும் |
| இன்பம் பயக்கும் |
– |
ஆனந்தாவஹமாகும். |
***- இஹலோக பரலோகங்களிரண்டிலும் திருமாலல்லது தஞ்சமில்லை யென்னுமிடத்தை யநுஸந்தித்து.
(அதாவது) ஸாதநாநுஷ்டாநவேளையோடு பலாநுபவழிவுளையோடு வாசியற இவ்வாத்மதாவுக்கு திவ்யதம்பிகளே
தஞ்சமென்று அத்யவஸாயங்கொண்டு வாசியற
அந்த ப்ரதிபத்தியே வடிவெடுத்திருப்பவரான ஆழ்வார் தம்மைத் திருவாய்மொழி பாடுவித்தருளின அம்மஹோபகாரத்தைப் பற்றிப் பேசின இத்திருவாய்மொழி அஹ்ருதயமாகவோ ஸஹ்ருதயமாகலோ எப்படி யநுஸத்தித்தாலும்
இன்பம் பயக்ரூமென்று இதனையே பலனகச் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply