***- ஒவ்வோரவயத்தாலும் ஒவ்வோர் அதிமாநுஷ சேஷ்டிதத்தைச் செய்தருளின் பரம போக்யனான வுன்னை நான் என்றைக்குக் கிட்டுவதென்கிறார்
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-
பதவுரை
| பாமரு மூ உலகும் படைத்த பற்பநாபா ஓ |
– |
பலவகைப் பொருள்களும் நிரம்பியுள்ள மூவுலங்களையுமுண்டாக்கின ஓ பத்ம நாபனே! |
| பாமரு மூ உலகும் அளந்த பற்பம் பாதா ஓ |
– |
பரம்பின மூவுலங்களையு மளந்து கொண்ட திருவடித்தாமரைகளை யுடையவனே! |
| தாமரை கண்ணா ஓ |
– |
செந்தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவனே! |
| தனியேன் தனி ஆளா ஓ |
– |
துணையற்றவனான என்னை அஸாதாரணமாக ஆள்பவனே! |
| தாமரை கையா ஓ |
– |
செந்தாமரைக் கையனே! |
| உன்னை சேர்வது என்று கொல் |
– |
உன்னை நான் சேரப் பெறுவது எந்நாளோ? |
திருநாபிக்கமலம் செய்த காரீயத்தை முதலடியில் அருளிச்செய்கிறார்.
உய்யவுலகு படைக்கவேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை என்கிறபடியே மூவுலகங்களையும் படை குமவனான பிரமனை நாபிக்கமலத்தில் உண்டாக்கினது பற்றிக் கொப்பூழ்ச் செந்தாமரையை மூவுலகும் படைத்ததாகச் சொல்லுகிறபடி,
பிரானே! உன்னுடைய பரத்வத்தை நிர்ணயிப்பதற்கு வேறு சில ப்ரமாணங்கள் தேடவேணுமோ! உனது திருநாபிக்கமலந்தானே போதாதோ? என்கிறார்.
முதல்வர்! நிகரிலகு காருருவா நின்னகத்ததன்றே புகரிலகு தாமரையின் பூ என்று இவர்தாமே பெரிய திருவந்தாதியில் அருளிச்செய்தது காண்க.
பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் விபோர் நாபீபத்மோ விதிசிவநிதாநம் பகவத: ததந்யத் ப்ரூபங்கீபரதிதி ஸித்தாந்தயகி ந : என்றருளிச் செய்ததுங் காண்க.
படைத்தவுலங்களைப் பிறார் பறித்துக்கொள்ள, அவற்றை மீட்டுக் கொண்ட திருவடியின் செயலைச்சொல்லுகிறார் இரண்டாமடியில்,
அடிச்சியோந்தலைமிசை நீ யணியாய் ஆழியங்கண்ணா வுன்கோலப்பாதம் என்றும் நின்பாத பங்கயமே தலைக்கணியாய் என்றும் நான் ஆசைப்பட்டிருக்க, ஆசையில்லாதார் தலையிலே திருவடியை வைக்குமவனாயிருக்கின்றாயே! என்று நொந்து சொல்லுகிற படி.
இரண்டடிகளிலும் பாமரு என்பதற்குப் பலவகையாகப் பொருள் கொள்வர்; பா பதார்த்தங்கள்; அவை மருவியிருந்துள்ள மூவுலகம். பா—பாபம்; அது மிக்கிருந்துள்ள மூவுலகம். பா வென்று பரம்புதலாய், அதையுடைத்தான மூவுலகம்.
தாமரைக்கண்ணாவோ! எனவிளித்தவுடனே தனியேன் தனியாளாவோ’ என்றதனால், திருவிருத்தத்தில் “பெருங்கேழலார் தம்பெருங்கண்மலர்ப் புண்டரீகம் நம்னேல் ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம், ஒருவர் நம்போல் வருங்கேழ்பவருளரே” என்று அருளிச்செய்தபடியே முதலிலே தம்மை விஷயீதரித்தவை இத்திருக்கண்களேயென்று காட்டினபடி.
இவ்விருள்தரு மாஞாலத்தில் நான் அதவிதயனன்றோ; உன் திருக்கண்கள் என்னையாண்டது மற்றொருவர்க்கு நிலமோ?
கண்ணழகைக்காட்டி என்னை வலையுளகப்படுத்தி இப்படியோ உபேக்ஷித்து வைப்பது என்கிறார்.
தாமரைக்கையாவோ! அக்ரூரனைக் கையால் தொட்டு அணைத்தாயே. கண்டாகர்ணனைக் கையால் தொட்டு விஷயீகரித்தாயே; அவ்வளவுக்கும் நான் உரியனல்லேனோ? என்கிறார்.
இப்போது எனக்கு அதுவொன்றும் செய்யவேண்டர் இன்னநாள் என்னை நீ சேரப்பெறுவாய் என்று ஒரு நாளிட்டுக் கொடுக்கலாகாதோ வென்கிறார்-உன்னையென்று கொல் சேர்வதுவே யென்று.
————-
***- மீண்டும் அதுவே வாய் வெருவுதலாய்ச் செல்லுகிறார். கீழ்ப்பாட்டில் ‘என்றுகொல்சேர்வது’ என்றாரே;
அதற்கு ஒரு மறுமாற்றம் பெற்றிலர். அத்தோடு அந்தோ என்பதையுங் கூட்டியழுகிறார். நான் மூடிந்ததென்கிறார்.
என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-
பதவுரை
| நிலம் நீர் எரி கால் விண் |
– |
பஞ்ச பூதங்களும் |
| உயிர் |
– |
பிராணிவர்க்கமும் |
| என்ற இவை தாம் முதல் ஆ |
– |
ஆகிய இவை முதலாக |
| முற்றும் |
– |
ஸகல பதார்த்தங்களும் |
| ஆய் நின்ற எந்தாய் ஒ |
– |
தானே யென்னலாம் படி நின்ற ஸ்வாமியே! |
| ஆ நிரை மேய்தது |
– |
பசுக்களின் கூட்டங்களை மேய்த்து |
| குன்று எடுத்து அவை காத்த |
– |
கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து அப்பசுக்களை ரக்ஷித்தருளின |
| எம் கூத்தா ஓ |
– |
குடக்கூத்து முதலிய கூத்துக்களில் வல்லவனான எம்பெருமானே! |
| அரண் நான் முகன் ஏத்தும் |
– |
சிவனும் பிரமனும் துதிக்கும்படியான |
| நின் செய்ய திரு பாதத்தை |
– |
உனது சேவடியை |
| யான் சேர்வது என்று கொல் |
– |
யான் சேரப் பெறுவது எந்நாளோ? |
| அந்தோ |
– |
ஜயோ! |
திருவடிக்கு ‘அரன் நான்முகனேத்தும்’ என்ற அடைமொழி கொடுத்தது அவர்கள் துதிப்பதனால் திருவடிக்கு ஒரு பெருமை என்கைக்காகவன்று;
அழிப்பதும் ஆக்குவதுமே தொழிபாயிருக்கின்ற அவர்களுங்கூட ஆசைப் படுந்திருவடியன்றோ; நான் ஆசைப் படச்சொல்லவேணுமோ வென்றவாறு.
அவர்கள் ஏத்துவது ப்ரயோஜநாந்தரத்துக்காக; நான் ஏத்துவது ஸ்வயம் ப்ரயோஜநமாக என்றுணராய்.
நிலம் நீர் எரி கால் விண் என்று தொடங்கி, சேதநாசேதநாத்மகமான ஸமஸ்த வஸ் துக்களுக்கும் ஆத்மாவாயிருப்பவனே! என்கிறார்.
பிரானே! உலகில் எப்பொருளைக் கண்டாலும் அவற்றை நீயாகவே நினைத்து மகிழ்ச்சி கொள்ளும்படியானவனே நான்;
ஆயினும் அஸாதாரணமான வுன் திருவடிகளைப் பெற்றாலல்லது என் ஆசை தீராதேயென்று காட்டுகிறபடி.
குன்றெடுத்து ஆநிரைமேய்த்து அவை காத்த—ஆநிரை மேய்க்கைக்காகக் குன்றெடுக்க வேண்டிய அவசியமில்லை யாதலால், ‘ஆநிரை மேய்த்து குன்றெடுத்து அவை காத்த’ என்று யோஜித்துக் கொள்வது.
—————
(காத்தவெங்கூத்தாவோ.) “குண்டுறடுத்தாநிரை மேய்த்து அவை காத்த வெங்கூத்தாவோ” என்று கோவர்த்தந உத்தரண வ்ருத்தாந்தத்தைக் கூறிக் கூவின ஆழ்வார் மீண்டுமிப்பாட்டிலும் “காத்தவெங்கூத்தாவோ மலையேந்திக் கன்மாரி தன்னை: என்று அது தன்னையே கூறிக் கூவுவது அந்தாதித்தொடை யமைதிக்காகவன்று; ஈடுபாட்டின் மிகுதியாலாம்.
காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடியாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3-
பதவுரை
| மலை ஏந்தி கல்மாரி தன்னை காத்த எம்கூத்தா ஓ |
– |
கோவர்த்தனமலையைத் தாங்கிநின்று கல் மழையைத் தடுத்தவனும் கூத்தில் வல்லவனுமான என்பெருமானே! |
| பூ தண் துழாய் முடியாய் |
– |
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவனே! |
| புனை கொன்றை அம் செம்சடையாய் |
– |
சிவந்த ஜடையிலே கொன்றைமாலையைப் புனைந்துள்ள சிவனுக்கு அந்தர்யாமியே! |
| வாய்த்த என் நான்முகனே |
– |
பிரமனுக்கு அந்தர் யாமியே! |
| ஏத்த அருகீர்த்தியினாய் |
– |
துதித்துத் தலைக்கட்ட முடியாத புகழையுடையவனை! |
| நீ வந்து என் ஆர் உயிர் ஆனால் |
– |
நீயாகவே பரகதஸ்வீகாரமாக வந்து எனக்குத் தாரகனாக ஆனாயான பின்பு |
| உன்னை எங்கு தலைப்பெய்வன் |
– |
உன்னை எங்கே கிட்டியநுபவிப்பேன்? |
“மலையேந்திக் கல்மாரிதன்னை” என்ற சொல் தொடையை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர் -‘கல்லாலே வர்ஷிக்கையாலே மலையை யெடுத்தப் பரிஹரித்தான்; நீராலே வர்ஷித்தானாகில் கடலையெடுத்து நோக்குங்காணும்” என்று. இதனால், இன்னதைக்கொண்டு இன்ன காரியஞ் செய்வதென்கிற நியதி என்பெருமானுக்கில்லை யென்பதும் ஸர்வசக்தனென்பதும் விளக்கப்பட்டதாம். கல்வாஷத்திலகப்பட்டாரையோ ரக்ஷிக்கலாவது? பஹீதா ஸந்தததுக்க வர்ஷிணி என்கிற ஸம்ஸாரதுக்கவர்ஷத்தில் அகப்பட்டாரை ரக்ஷிக்கலாவது? என்னுடைய ரக்ஷிக்கலாகாதோ? என்னுடைய ரக்ஷ்ணத்துக்காகவும் ஏதேனும் மலையெடுக்க வேணுமோ? மலையெடுத்த தோளைக் காட்டினால் போதுமேயடியேனுக்கு.
“பூத்தண்டுழாய் முடியாய்! புனைகொன்றையஞ் செஞ்சடையாய்! வாய்த்த வென் நான்முகனே!” என்ற விளிகள் மூன்றினாலும் ஸ ப்ரஹமாஸ சிவ: என்ற உபநிஷத்தை அநுவதித்தபடி. “முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்றும் “அரியை அயனை யரனை” என்று மருளிச்செய்பவரன்றே இவ்வாழ்வார் த்ரிமூர்த்திகளின் ஸாம்யவாதமோ ஜக்யவாதமோ ஆழ்வார்க்கு விவக்ஷிதம்போலும் என்று சிலர் நினைப்பது சிறிதும் பொருந்தாது ஏனெனில். இவ்வாழ்வார்தாமே பெரிய திரு வந்தாதியில் முதலாந்திருவுருவம் மூன்றென்பர். ஒன்றே முதலாகும் மூன்றுக்கு மென்பர் முதல்வா! நிகரிலகுகாருருவா! நின்னகத்ததன்றே, புகரிலகு தாமரையின் பூ என்ற பாசுரத்தினால் ஸீவ்யக்தமாகப் பரதத்வ நிர்ணயம் செய்தருளியுள்ளாராதலால். (அப்பாசுரத்தி திவ்யார்த்ததீபிகையுரையில் விரிவு காண்க.) ஸகலகாரணபூதனான பெருமானே! பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கு மென்று மற்றுஞ் சிலர்சொல்லுவர்கள்; உன்னிடத்திலுள்ளதான திருநாபிக்கமலமே உனது பரத்வத்தை வெளியிட வல்லதாயிருக்கும்போது இந்த வாதங்கள் எங்ஙனே பொருந்தும்? என்பது மேற்குறித்த பாசுரத்தின் தாற்பரிய மென்றுணர்க.
வந்து என்னாருயிர் நீ—எனக்கு அபேவீக்ஷ்யின்றியே யிருக்க நீயே வந்து என்னை விஷயீகரித்து உன்னாலல்லது செல்லாதபடி பண்ணி எனக்குத் தாரகனாயிருப்பவனே! என்றபடி. உன்னையெங்குத் தலைப்பெய்வனே!—நீ உயிராய் நான் உடலாயிருக்கும்போது, உடல்தான் உயிரை வந்து கிட்டுவதென்று ஒன்றுண்டோ! நீயே பெறுவித்துக் கொள்ளவேணுமேயல்லது நானாகப் பெறுவதென்பதுண்டோ? என்றாராயிற்று, இங்கே ஈடு;-“நான் ஓர் உபாயாநுஷ்டானம் பண்ணி உன்னை யெங்கே வந்து கிட்டப்புகுகிறேன்? என்னாலே வந்து கிட்டுகையென்று ஒன்றுண்டோ?”
————–
(எங்குத் தலைப்பெய்வன்.) ஸர்வ ஸ்மாத் பரனாய் ஆஸ்ரித பவ்யனாய் போக்யதை
அளவிறந்திருப்பவனான வுன்னை அகிஞ்சநனான நான் எங்கே கிட்டுவதென்கிறார்.
எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-
பதவுரை
| கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைகோவலனே |
– |
மதுவோடு கூடி மலர்ந்த செவ்வித் துழாயையணிந்த மயிர்முடியையுடையனாய் எனக்குப் பரம போக்யனான கோபாலக்ருஷ்ணனே!, |
| எழில் மூ உலகும் நீயே |
– |
விலக்ஷ்ணமான மூவுலகமும் நீயிட்ட வழக்காயிருக்கும், |
| அங்கு உயர் முக்கண் பிரான் |
– |
அந்த லோகத்திலே உயர்ந்தவனான சிவ பிரானும் |
| பிரமன் பெருமான் அவன் |
– |
அப்படிப்பட்ட நான் முகக்கடவுளும் |
| நீ |
– |
நீயிட்ட வழக்காயிருப்பர்கள். |
| வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன முதலா தெய்வம் நீ |
– |
வெவ்விய பிரதாபம் பொருந்திய வஜ்ராயுதத்தைக் கையிலேயுடைய இந்திரன் முதலான தெய்வங்களும் நீயிட்ட வழக்கே; |
|
(ஆனபின்பு) |
||
| நான் எங்கு தலைப்பெய்வன் |
– |
நான் என் முயற்சியினாலேயே உன்னை வந்து கிட்டுவேனோ? |
எழில் மூவுலகும் நீயே-உலகத்தில அவ்வோபதார்த்தங்களுக்குள்ள உயர்த்தியெல்லாம் நீயிட்ட வழக்கு என்றபடி.
இப்படியே மேலடிகளிலும் கொள்க.
முக்கண்ணனுக்குள்ள ஏற்றமும் பிரமனுக்குள்ள எற்றமும் இந்திரனுக்கும் அவனைச் சேர்ந்த மற்றுமுண்டான
தேவர்களுக்குமுள்ள எற்றமுமெல்லாம் நீயிட்ட வழக்கென்றபடி.
பிரமன் சிவனிந்திரன் முதலானார்க்குண்டான ஜச்வரியமெல்லாம் பிரானே! உன்ன தீனமாக வன்றா விருப்பது;
அப்படிப்பட்ட நீ என்னுடைய பிரதிபந்தகங்களையும் போக்கி என்னை யுன்திருவடிகளிலே சேர்த்தருளவேணுமென்று கருத்து.
—————–
***- (என்னுடைக் கோவலனே) லௌகிக விஷயங்களிலே கைகழிந்திருக்கிற என் ஆக்மா உன்னை எங்ஙனே கிட்டக்கடவதென்கிறார்.
ஈடு;- “பலன் உம்மதான பின்பு நீரும் சிறிது யத்நம் பண்ணவேணுங்காணுமென்ன: நீ ஸ்ருஷ்டித்த லோகங்களில் விஷயங்கள் தோறும்
அகப்பட்டுக்கிடக்கிற நான் உன்னைப் பெறுகைக்கு ஒருஸாதனத்தை யநுஷ்டித்துவந்து பெறுகையென்று ஒன்றுண்டோ வென்கிறார்.
என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-
பதவுரை
| என்னுடை கோவலனே! |
– |
என்னுடையவனென்று அபிமானிக்கலாம் படியான கோபாலனே!, |
| என் பொல்லா கரு மாணிக்கமே |
– |
துளையாத மாணிக்கம் போன்று எனக்கு இனியனாவனே! |
| என்னுடை ஆருயிரார் |
– |
என் ஆத்மாவானவர், |
| உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் |
– |
உனது திருநாபியிலே மலர்ந்த மூவுலகங்களிலுமுள்ள விஷயங்களெல்லாவற்றலும் |
| பரந்து |
– |
சாபல்யப்பட்டிருந்து. |
| உன்னுடை சோதி வெள்ளத்து அகம்போல் உன்னை |
– |
உனக்கே யஸாதாரணமாய் விலக்ஷ்ண தேஜோராசி ரூபமாயிருக்கிற ஸ்ரீவைகுண்டலோகத்திலே யிருக்கிறவுன்னை |
| கண்டு கொண்டிட்டு |
– |
காணப்பெறுமாறு |
| எங்ஙனே கொல் வந்து எய்துவர் |
– |
எப்படி வந்து சேருவர்? |
என்னுடையக் கோவலனே!—பாண்டவர்கள் என்னுடையவனென்று உன்னையபிமானிக்கும்படி உன்னையவர்களுக்கு
நீ விதேயனாக்கினதுபோல எனக்கும் விதேயனாக்கியிருக்கின்றா யன்றோ என்றபடி.
எம்பெருமானுடைய சீலகுணத்தை யநுபவித்துச் சொல்லுகிறபடி.
என் பொல்லாக் கருமாணிக்கமே! – இதுவடிவழகிலீடுபட்டுக் சொல்லுகிறபடி. பொல்லா என்பதற்கு இரண்டுபடியாகப் பொருள்கொள்வர். எதிர்மறையிலக்கணையால் நல்ல கருமாணிக்கமே யென்னுதல்; பொல்லல்-துளைத்தல்; பொல்லா—துளைபடாத; அயலார் அநுபவியாத புதிய ரத்னம் போன்றவனேயென்னுதல்.
உன்னுடையுந்திமலருலகமவை மூன்றும் பரந்து த்வந்நாபீகமலோத்பூத ஸகலலோகாந்தர்வர்த்தி ஸர்வவிஷயங்களிலும் ப்ரவணமான என் ஆத்மா” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல்.
உன்னுடைய திருநாபியிலே விஸ்த்ருதமாகாநன்றுள்ள ஸகல லோகங்களிலுமுண்டான சப்தாதி விஷயங்கள் தோறும் ப்ரவணனாயிருப்பது என்னுடைய நிலைமை என்று தம்முடைய படியைப் பேசித் கொள்ளுகிறா ராழ்வார்.
நீயோ எட்டாத நிலத்திலிருக்கிறாய்; உன்னை எங்ஙனே கண்டுகொள்வது—என்கிறார் மூன்றாமடியினால்.
என்னுடை ஆருயிரார்- இது சேஷபித்துச் சொல்லுகிற வார்த்தை. வயிறு அடித்து இங்கு யாரார் புகுவர் ஐயர் இவர் அல்லால் (சிறிய திருமடல்) என்றவிடத்திற்போல. மிகவும் துச்சமான என்னுடைய ஆத்மாவானது என்றபடி.
பிரானே! உனக்கே அஸாதாரமாணமாய் நிரவதிக தேஜோ ரூபமாய் அத்யர்க்காதலதீப்தம் தத ஸ்த்தாநம் என்று சொல்லப்படுமதான ஸ்ரீவைகுண்டத்தை யிருப்பிடமாக வுடையையாயிருக்கிற வுன்னை ப்ரக்ருதங்களிலுண்டான ஸம்பந்தமும் ஊற்றமும் அற்று எங்ஙனே நான் வந்து சேரப்போகிறே னென்றாராயிற்று.
—————
***- (வந்தெய்துமாறு.) உன்னைப் பெறுகைக்கு என்பக்கல் ஒர் உபாயமில்லை; நீயே வந்து விஷயீகரிக்கவேணுமென்கிறார்.
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6-
பதவுரை
| மல்கு நீலம் சுடர் தழைப்ப |
– |
குறைவற்ற நீலமான புகரானது மேன் மேலும் வளர, |
| செம் சுடர் சோதிகள் பூத்த ஒரு மாணிக்கம் சேர்வது போல் |
– |
சிவந்த வொளியை யுடைத்தான சில கிரணங்களைப் பரப்பினவொரு மாணிக்கம், சாய்ந்து கிடக்குமாபோலே, |
| அந்தரம் மேல் |
– |
திருவரை மேல்சாத்தின |
| செம் படடோடு |
– |
பீதாம்பரத்தோடு |
| அடி உந்தி கை மார்பு கணவாய் |
– |
திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருப்பவளமுமாகிய வொளி |
| செம் சுடர் சோதிவிட |
– |
சிவந்தழகிய வொளியைப் பரப்ப |
| உறை என் திருமார் |
– |
எனது திருமாலை |
| வந்து எய்தும் ஆறு அறியேன் |
– |
வந்து கிட்டும் வகையறிகின்றிலேன். |
‘உம்மால் ஒரு உபாயநுஷ்டானம்யோ உன்படியிருப்பதென்கிறார். எம்பெருமான் திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்து கிடக்கும்போது திவ்யரூபத்தின் நீலச்சுடர் மல்லா நின்றது;
பீதகவாடை திருவடிகள் திருநாபிக்கமலம் திருக்கை திருமார்பு திருக்கண் திருப்பவளம் ஆகிய இவற்றினின்று சிவந்த சுடரையுடைத்தான் தேஜஸ்ஸூ ப்ரஸாஜீயாநின்றது
இந்த நிலைமைக்கு ஒரு த்ருஷ்டாந்தமிடுகிறார் “செஞ்சுடர்ச் சோதிகள் பூத்தொருமாணிக்கறுஞ் செய்து சேர்வது போல்” என்று ‘செஞ்சுடர்ச் சோதிகள் பூத்த ஒரு மாணிக்கப்பாறை சாய்நது கிடப்பதுபோலுள்ளது என்று வருணித்தவாறு.
அந்தரம் என்று இடுப்பைச் சொல்லுகிறது “செம்பட்டோடு’ என்றவிடத்து. ஒடு-உம்மைப்பொருளது. செவ்விய பட்டாடையும் என்றபடி.
“கோயிலிலே கண்வளர்ந்தருளாகிற வுன்னை” என்றார் ஆயிரப்படியில் பிள்ளான்.
“திருப்பாற்கடலிலே நீர் உறுத்தாதபடி திருவனந்தாழ்வானைப் படுக்கையாகக்கொண்டு அதிலை நாநாவர்வணமாயிருப்பதொரு மேல்விரியை விரித்தாப்போலே சாய்தருள” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
—————–
என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-
பதவுரை
| என் திரு மார்பன் தன்னை |
– |
திருமாலாயிருக்கிற தன்மையை எனக்கு ப்ரகாசிப்பித்தவனும் |
| என் மலை மகள் கூறன் தன்னை |
– |
பார்வதீபதியை ப்ரகாரமாகவுடையனாயிருக்கிறபடியை யெனக்கு ப்ரகாசிப்பித்தவனும் |
| என்றும் நாமகளை அகம்யால் கொண்ட என் நான் முகனை |
– |
எப்போதும் ஸரஸ்வநியை அந்தரங்க மஹிஷியாகக் கொண்ட நான்முகனை ப்ரகாரமாவுடை யனாயிருக்கிறபடியை எனக்கு ப்ரகாசிப்பித்தவனும். |
| நின்ற சசீ பதியை |
– |
இவர்களோடு எண்ணப்பட்டு நிற்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியானவனும் |
| நிலம் கீண்ட |
– |
(மஹாவராஹமாகி) பூமியை யுத்தரித்தவனும் |
| மூன்று எயில் எரித்த |
– |
த்ரிபுரதஹனம பண்ணினவனும் |
| புலன் வென்று துரந்த |
– |
இந்திரியங்களை ஜயித்து ஓட்டினவனும் |
| விசும்பு ஆளியை |
– |
சுவர்க்கத்தை ஆள்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியுமான எம்பெருமானை |
| காணனோ – |
– |
காணமாட்டேனோ? |
***- (என் திருமார்பன்.) என் என்பது இப்பாட்டில் மூன்றிடங்களில் வருகிறது.
முதலிடத்தில் மாத்திரம் விசேஷணத்தில் அந்வயிப்பதென்றும், மற்ற இரண்டிடங்களி;ல் விசேஷ்யத்தில் அந்வயிப்பதென்றும் நம்பிள்ளை திருவள்ளம் பற்றுகிறார்.
“என் திருமார்பன் தன்னை” என்ற விடத்தில் என் திருவை மார்பிலே யுடையவன் என்று பொருள் கொண்டால், திருமார்பனுக்கு விசேஷணமாகிய திருவிலே என் என்பது அந்வயித்தாயிற்று.
ஆழ்வார், பங்கயத்தாள் திருவருளைக் கொண்டவராதலால், எனக்கு ஸ்வாமிநியான பெரிய பிராட்டிமாரென்கிறார்.
என்னுடைய திருவைத் திருமார்பில் வைத்துக்கொண்டிருக்கிற நீ என் காரியம் செய்யாதொழியலாமோ வென்றபடி.
என் மலைமகள் கூறன் தன்னை = இவ்விடத்தில் என் என்பது விசேஷணமான மலைமகளிடத்தே அந்வயிப்பதன்று. மலைமகள் கூறன்’ என்னுஞ்சொல் விசேஷயபதம். பாலீவதீபதியான பரமசிவனைச் சொல்லுகிறது. அவனும் இங்கு விசேஷணஸ்தாநீயனே யாவன்; இச்சொல் அந்தர்யாமியளவுஞ் சொல்லி நின்று ‘சிவனுக்கு அந்தர்யாமியான எம்பெருமான்’ என்று சொல்லுமதாகையாலே என் என்பது பரம விசேஷ்யபூதனான் எம்பெருமானிடத்தே அந்வயிப்பது. மேலே ‘என் நான் முகனை’ என்றதிலுமிப்படியே.
சிவனை மலைமகளோடே கூட்டிவைத்ததும் எம்பெருமானே; நான்முகனை நாமகளோடே கூட்டிவைத்ததும் எம்பெருமானே. இந்திரனை இந்திராணியோடே கூட்டி வைத்ததும் எம்பெருமானே என்கிற கருத்து இப்பாட்டில் விவக்ஷித மென்று ஆசாரியர்கள் திருவுள்ளம்பற்றுகிறார்கள்.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “ப்ராப்த யௌவனரான புத்ராதிகளை ஸத்ருச விஷயங்களிலே விவாஹம் பண்ணுவிக்கும் பித்ராதிகளைப் போலே இவர்களுடைய மஹிக்ஷுலாபமும் தந்தாமாலல்ல; ஸர்வேச்வரனாலே யென்கை.” என்று.
எயில் மூன்றெரித்து சிவபிரானுடைய செயல். இதை இங்கு எம்பெருமானுடைய காரியம்போலச் சொன்னது (அதாவது, மஹாவராஹமாய் நிலங்கீண்டதன் செயலோடொக்கச் சேர்த்துச்சொன்னது, எம்பெருமானே நிர்வாஹகனாயிரந்து செய்வித்தமைபற்றி யென்க.
விஷணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜஸ: தஸ்மாத்த்தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்சம் ஸ விஷேஹே என்ற ப்ரமாண வசனமும் நோக்கத்தக்கது.
வென்று புலன் துரந்த வென்றது—நான்முகனுடைய செயலைச் சொன்னபடி. ஸ்ருஷ்டிக்கு உறுப்பாக இந்த்ரிய ஜயத்தைப் பண்ணினவாறு கூறிற்றென்க.
விசும்பாளி யென்று ஸ்வர்க்க லோக நாதனான இந்திரனைச் சொல்லி, அவனுக்கு நிர்வாஹகனென்கிற முறையாலே எம்பெருமானளவுஞ் சொல்லுகிறது.
நிலங்கீண்ட என் திருமார்பன் தன்னை, எயில் மூன்றெரித்த என் மலைமகள் கூறன் தன்னை, வென்றுபுலன்துரந்த நான்முகனை, விசும்பாளியான சசீபதியைக் காணேனோ? என்று அந்வயிப்பது.
எயில் மூன்றெரித்த வரலாறு:
முற்காலத்தில் தாரகாஸூரனுடைய புத்திரர்களாகிய வித்யுந்மாலி, தாரகாக்ஷ்ன், கமலாக்ஷ்ன் என்னும்; மூவரும் மிக்க தவம்செய்து பிரமனிடம் பெருவரம் பெற்று வானத்துப் பறந்துசெல்லந் தன்னைவாய்ந்த மூன்று பட்டணங்களையடைந்து மற்றும்பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்கவிடங்களிற் பறந்து சென்று பலவிடங்களின் மேலும் இருந்து அவ்விடங்களைப் பாழாக்கி வருகையில் அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் சிவபெருமான் பூமியைத் தேராவும் சந்த்ரஸூர்யர்களைத் தேர்ச்சக்கரங்களாவும் நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாவும் பிரமனைச் சாரதியாகவும் மஹாமேருவை வில்லாகவும் ஆதிசேஷன் வில்நாணியாகவும், விஷ்ணுவை—வாயுவாகிய சிறகமைந்து அக்நியை முனையாகவுடைய அம்பாகவும் அமைத்துக்கொண்டு யுத்தஸந்நத்தனாய்ச் சென்று போர் தொடங்கும்போது சிரித்து அச்சரிப்பில் நின்று உண்டான நெருப்பினால் அவ்வசுரங்களை அந்நகரங்களுடனே எரித்திட்டனன் என்பது திரிபுர மூன்றெரித்த வரலாறு.
இப்பாட்டில், மூன்றாமடியில் முடிவில் ‘எரிதத’ என்கிற பாடபேதங்கள் காண்கின்றன. ‘எரித்து’ என்ற பாடங்கொள்வது சாலப்பொருந்தும். ‘எரித்த’ என்ற பாடங்கொள்வதானால். கீழே, ‘நிலங்கீண்டெயில்’ என்ற விடத்து ‘நிலங்கீண்ட’ என்று பதம் பிரித்துக்கொள்க. தொகுத்தல் விகாரமென்க.
————–
***- (ஆளியைக் காண் பரியாய்.) மாலி மூதலான ப்ரதிகூலவர்க்கத்தை நிரஸித்தருளின ஸர்வேச்வரானைக் காணப்பெறுவோமோ! என்கிறார்.
ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8-
பதவுரை
| ஆளியை காண்பரி ஆய் |
– |
யாளியைக் கண்ட குதிரை போலவும் |
| அரி காண் நாஜீ ஆய் |
– |
சிங்கத்தைக் கண்ட நாஜீ போலவும் |
| அரக்கர் |
– |
ராக்ஷஸர்கன் |
| அன்று ஊளையிட்டு |
– |
அக்காலத்தில் அச்சத்தினாலே கதறிக்கொண்டு |
| இலங்கை கடந்து |
– |
லங்காபுரியை விட்டு |
| பிலம் புக்கு ஒளிப்ப |
– |
பாதாளத்திலே புகுந்து ஒளிக்கும் படியாக |
| மீளி அம் புள்ளை கடாய் |
– |
பெருமிடுக்கனாய் அழகியவனான கருடனை நடத்தி |
| விறல் மாலியை கொன்று |
– |
பிரபலனான மாலியைக் கொன்று |
| பின்னும் |
– |
அவ்வளவிலும் விடாதே |
| ஆள் |
– |
மிகவும் சூரர்களான ஆண் புலிகளை (க்கொன்று) |
| உயர் குன்றங்கள் செய்து |
– |
பருப்பருந்த மலைகளாகக் குவித்து |
| அடர்த்தானையும் |
– |
அவர்களை யழித்த பெருமானையும் |
| காண்டும் கொல் ஒ |
– |
காணப்பெறுவோமோ? |
ஸீகேசனென்னும் இராக்கதனுக்கு மாலியவான், மாலி, ஸீமாலியென மூன்று பிள்ளைகள் பிறந்ததும், அவர்கள் தவம்புரிந்து பெருமைபெற்று இலங்கையிற் குடிபுகுந்து விவாஹம் செய்துகொண்டு பல மக்களைப் பெற்றதும், தேவர்கள் சிவ பெருமானை அடைக்கலம் புகுந்து அவர் சொன்ன வுபாயத்தினால் ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்தும், அவர் அவர்கட்கு அபயமளித்ததும், அது தெரிந்து ராக்ஷஸர்கள் கோபங்கொண்டு படையெடுத்துத் தேவலோகஞ் சென்றதும், அப்பொழுது எம்பெருமான் கரூடவாஹனத்திலேறி அங்கு வந்து தோன்ற, அவரைச் சூழ்ந்து அரக்கர் அம்பு மாரி பொழியாப்புகுந்ததும், பிறகு அரக்கர்கட்கும் திருமாலுக்கும் பெருத்த யுத்தம் நடந்ததும், அதில் மாலி மரணமடைந்ததும், மற்ற மாலியவான் சுமாலி யென்னுமிருவரும் திருமாலுடன் போர் புரிந்து பராஜயமடைந்து மற்றுமுள்ள இலங்கையரையுங் கூட்டிக் கொண்டு பாதாளலோகம் போய்ச் சேர்ந்ததும் உத்தர ஸ்ரீராமாயணத்தில் (5, 6, 7, 8 ஸர்க்கங்களில்) விரிவாகக் கூறப்பட்டவை. அவ்வரலாறே இப்பாசுரத்தில் அநுஸந்திக்கப்பட்டுள்ளது.
மேற்சொன்ன மூவருள் ஒருவனான சுமாலியின் மகளான கைகயிக்கு இராவணன் முதலியவர்கள் பிறந்தனரென்பதும் அறியத்தக்கது,
இப்படி விரோதிநிஸநம் செய்யுமியல்வினனான பெருமான் எனது விரோதிகளையடங்கலுஞ் செற்று எனக்குக் காட்சி தருவதென்றைக்கோ என்றாராயிற்று.
—————
காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-
பதவுரை
| நெஞ்சமே |
– |
மனமே! |
| கடிய வினையே முயலும் |
– |
மிகக் கொடிய பரஹிம்ஸா ரூபமான தீவினைகளிலேயே முயற்சி செய்பவனாய் |
| ஆண் |
– |
பௌருஷம் மிக்கவனாய் |
| திறல் |
– |
வீர சூர பராக்ரமசாலியாய் |
| மீளி |
– |
சிங்கம் போன்றவனாய் |
| மொய்ம்பின் |
– |
பெருமிடுக்கையுடையனான |
| அரக்கன் |
– |
இராவணனென்னும் ராக்ஷ்ஸனுடைய |
| குலத்தை |
– |
குடும்பத்தை |
| தடிந்து |
– |
தொலைத்திட்டு |
| மீண்டும் |
– |
பின்னையும் |
| அவன் தம் பிக்கே |
– |
அவனுடன் பிறந்தவனான விபீஷணழ்வானுக்கே |
| விங் நீர் இலங்கை அருளி |
– |
கடலிடத்துள்ள லங்காராஜ்யத்தை யருள் செய்து |
| ஆண்டு |
– |
அயோதயையி லெழுந்தருளி நெடுங்காலம் அரசு புரிந்து |
| தன் சோதி புக்க |
– |
தன்னடிச் சோதியான பரமபதத்திலே சென்று சேர்ந்த |
| அமரர் அரி ஏற்றினை |
– |
நித்யஸீரிநாதனான பெருமானை |
| காண்டும் கொல் ஒ |
– |
காணப்பெறுவோமோ |
(காண்டுங் கொலோ.) விபீஷண பக்ஷ்பாதத்தாலே ராவண குலத்தை நிச்சேஷமாக முடித்து அவனுக்கு லங்காராஜ்யத்தையுங் கொடுத்துத் தானும் அபிஷிக்தனாய் ராஜ்யம் பண்ணித் தன்னடிச்சோதியேற் வெடுந்தருளின் ஸ்ரீராமபிரானை, அந்த மேன்மையோடே யிருக்கச் செய்தே நாம் காணவல்லோமோ நெஞ்சமே! என்று தமது திருவுள்ளத்தை நோக்கியருளிச் செய்கிறார்.
—————-
ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-
பதவுரை
| ஈன்று இளபிள்ளை ஒன்று ஆய் |
– |
அப்போது பிறந்து விலக்ஷ்ணமான பச்சைப் பசுங் குழந்தையாய்க்கொண்டு |
| ஆயர் குலத்து புக்கு |
– |
திருவாய்ப்பாடியிலே சென்று சேர்ந்து |
| மாயங்களே இயற்றி |
– |
பல பல அற்புதச்செயல்களையே செய்து |
| கூற்று இயல் கஞ்சனை கொன்று |
– |
யமன் போன்ற கம்ஸனையும்; முடித்து (பிறகு) |
| ஐவர்க்கு ஆய் |
– |
பஞ்ச பாலீண்டவர்களுக்குப் பகூபாதியாயிருந்குஷது |
| கொடு சேனை தடிந்து |
– |
கொடிய ப்ரதிபக்ஷ்ஸேனைகளை யழியச் செய்து |
| ஆற்றல் மிக்கான் |
– |
(இவ்வளவு செய்தும்) மிகுந்த நெஞ்சாறல் கொண்டவனாப |
| பெரிய பரம் சோதி புக்க அரி |
– |
பரமபதஞ் சென்று சேர்ந்த ஹரியான எம்பெருமான் |
| ஏற அருவைகுந்தத்தை |
– |
எப்படிப்பட்டவர்களுக்குங் கிடைக்க வரிதான பரமபதத்தை |
| நமக்கு அருளும் |
– |
நமக்குத் தந்தருள்வன். |
***- ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்குத் தேறுதலாகக் கூறும் பாசுரமிது நெஞ்சை நோக்கின விளி மூலத்தில் இல்லையாகிலும், முதலடியில் ‘நமக்கு’ என்றிருப்பது கொண்டு இங்ஙனே கொள்ளக் குறையில்லே.
“தம் திருவுள்ளத்தை ஆச்வஸிப்பிக்கிறார்” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல்.
“ஏற்றரும் வைகுந்தத்தையருளும் நமக்கு” என்கிறவிது பாசுரத்தின் முடிவிலே அந்வயிக்கக்கடவது.
ஈற்றிளம்பிள்ளையொன்றாய் ஆயர்குலத்துப்புக்கு—‘ஈறு இளம்பிள்ளை என்றாவது ஈன்று இளம் பிள்ளை’ என்றாவது பகுத்துக்கொள்ளலாம், இரண்டுவகையிலும் கருத்து ஒன்றே. மிக இளமை தங்கிய பிள்ளையென்றபடி
இங்கு இது சொல்லுவது எதற்காகவென்னில், அவன் நமக்குப் பரம புருஷார்த்தம் தரவேணுமானால் நம்பக்கலிலே ஏதேனும் கைம்முதல் இருக்கவேணுமே; அஃதில்லாமல் தந்தருளமாட்டானே; அஃதொன்றுமில்லையே என்று தளரவேண்டா நம்முடைய படியைப் பார்க்கவறியாத பேதைக் குழவிகாண்! என்று அவனுடைய மௌக்த்யத்தைச் சொல்லுகிறது.
மாயங்களேயிற்றி—ஆயதசாலையிலே புகுந்து ஆயுதங்களை முறிப்பது. வண்ணானைக்கொன்று பரிவட்டங்களணிந்து கொள்வது, குவலயாபீட மதயானையின் கொம்பை முறிப்பது, மல்லரைத் தகர்ப்பது ஆக இப்படிப்பட்ட ஆச்சரியங்களைச் செய்தமை சொல்லுகிறது.
இச்செயல்களைச் செய்தபின்னர் அடுத்துச் செய்தது கம்ஸவதமாகையாலே “கூற்றியல கஞ்சனேக் கொன்று” என்றது. உடலையுமுயிரையும் பிரிக்கும் ஸ்வபாவமுடைய யமனைப்போன்று ஸ்ரீ வஸூதேவ தேவகிகளுக்கு உயிரான கண்ணனைப் பிரித்ததனால் கூற்றியல் கஞ்சனென்றார்.
பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்த செயல்களிவை; இனிப் பருவம் நிரம்பிய பின் செய்தமை சொல்லுகிறது ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து என்று. இவ்வளவு செய்தும் ஒன்றுஞ் செய்யாதான்போல் அஸந்துஷ்டனானா னென்கிறது—ஆற்றல்மிக்கான் என்று.
—————–
***- (புக்கவரியுருவாய்.) இத்திருவாய்மொழி கற்றார் மதிமுகமடந்தையர் லிரும்பிப் பல்லாண்டு பாடி
ஸத்கரிக்கும்படியான பெருமையைப் பெறுவர்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-
பதவுரை
| அ அரி உரு ஆய புக்கு |
– |
அப்படிப்பட்ட சிங்க வடிவையுடையனாய்த் தோன்றி |
| அவுணன் உடல் கீண்டு உகந்த |
– |
இரணியாசுரனுடைய உடலே இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்த |
| சக்கரம் செல்வன் |
– |
திருவாழியையுடைய திருமாலைக் குறித்து |
| குருகூர் சட கோபன் சொன்ன |
– |
ஆழ்வார் அருளிச் செய்த |
| மிக்க ஓர் ஆயிரத்துள் |
– |
மிகச் சிறந்த ஆயிரத்தினுள்ளே |
| இவை பத்தும் வல்லாரவரை |
– |
இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்களை |
| ஏழையா |
– |
திருநாட்டிலுள்ள திவ்யாப்ஸரஸ்ஸுக்கள் |
| தொக்கு |
– |
திரள் திரளாக விருந்து |
| பல்லாண்டு இசைத்து |
– |
மங்களாசாஸனம் பண்ணி |
| கவரி செய்வர் |
– |
சாமரை வீசுதல் முதலிய கிஞ்சி காரங்களைச் செய்பவர்கள். |
புக்கவரியுருவாய்-அவ்வரியருவாய்ப் புக்கு என்று அந்வயிப்பது அகரச்சுட்டு விலக்ஷ்ணப் பொருளது வாசாமகோசரமாம்படி பரம விலக்ஷ்ணமான ஸிம்ஹ விக்ரஹத்தைப் பரிக்ரஹித்தவனாய்; சத்ரு விஷயத்திலே புகுந்து என்றபடி. அவுணனுடல் கீண்டு உகந்த-இரணியனுடலைப் பிளந்தொழித்து ‘சிறுக்கனுடைய விரோதிதொலையப் பெற்றோம்’ என்று திருவுள்ள முகந்தபடி.
(சக்கரச் செல்வன் தன்னை) இரணியனுடலைக் கீண்டகாலத்தில் ஸ்ரீஸுதர்சநாழ்வானுடைய பணியொன்றுமில்லையே; அப்படியிருக்க இங்கே சக்கரச் செல்வனென்பானேன்? என்னில்; எந்த ஸமயத்திலும் சக்கரத்தாழ்வானுடைய பணி இருந்தே தீரும். அவனது பணியில்லாமல்
ஒரு காரியமும் நடைறொது; ஸுதர்சந சதகத்தில் சக்திர் யஸ்யேஷு தம்ஷ்ட்ராநகபரமுக வ்யாபிநீ த்த்பிபூத்யாம் என்பதனால் இவ்வர்த்தம் வ்யக்தமாகும்.
ராமாவதாரத்தில் அம்புகளிலும், வராஹாவதாரத்தில் தம்ஷ்ட்ரையிலும், நரஸிம் ஹாவதாரத்தில் நகங்களிலும், பரசுராமவதாரத்தில் மழுவிலும் இப்படியே ஒவ்வோரவதாரத்தில் ஒவ்வொரு வஸ்துவில் திருவாழியாழ்வானுடைய சக்தியாவேச முளதென்பர்.
ஏழையர் கவரி செய்வர்-ஏழையரென்று ஸ்த்ரீகளுக்குப் பெயர்; சூழ்விசும் பணி முகில் திருவாய்மொழியில் “மதிமுகமடந்தையரேந்தினர்வந்தே” என்னப்பட்ட திவ்யாப்ஸரஸஸீக்கள் இங்கே விவக்ஷிதர்கள். அவர்கள் திரண்டுகொண்டு இப்பதிகம் வல்லார்களைப் பொலிக வென்று மங்களாசாஸனம் பண்ணிச்சாமரை வீசுதல் முதலான கைங்கரியங்களையும் செய்வர்களென்றதாயிற்று.
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply