ஸ்ரீ நம்பெருமாள் -பன்னிரு நாச்சிமார் பரவும் பெருமாள் –

1- ஸ்ரீ வக்ஷஸ்தல மஹா லஷ்மி

வெள்ளிக்கிழமை தோறும் ஏகாந்த பட்டர் திருமஞ்சனம் செய்ய கோயில் ஜீயர் பட்டருக்கு சாமரம் வீசுவார்

2-3- உபய நாச்சிமார்கள் -ஸ்ரீ தேவி பூ தேவி

ஸ்ரீ ரெங்கத்திலே மட்டும் உபய நாச்சியாரும் ஆண்டாளும் பன்னிரண்டு தாயார்களும் அமர்ந்த திருக்கோலம்
நின்று அனுபவிக்க முடியாத எழில் அழகர் அன்றோ நம்பெருமாள்-

4- கருவூல நாச்சியார்

பிரகாரத்தில் கோயில் கருவூலத்தை ஒட்டி இருக்கும் சந்நிதி கருவூலம்
ஆபரணங்கள் பாத்திரங்கள் கணக்கு வழக்குகளை ரக்ஷித்து அருளும் தாயார்
திருக்கார்த்திகை அன்று பக்கத்து வீடு உத்தம நம்பி பெரிய சந்நிதியில் இருந்து விளக்கு எடுத்துப் போய் இங்கும் ஏற்றப்படுகிறது

5-ஸ்ரீ சேர குல வல்லித்தாயார்

அர்ஜுனன் மண்டபத்தில் -பகல் பத்து உத்சவ மண்டபத்தில் துலுக்க நாச்சியாருக்கு வலப்பக்கம் இருக்கும் சந்நிதி
ஸ்ரீ ராம நவமி அன்று திருக்கல்யாண உத்சவம் நடக்கும்

6- ஸ்ரீ துலுக்க நாச்சியார்

பின் சென்ற வல்லி நாட்டிய பெண்ணுடன் இசை நாட்டிய குழுவாக 60 பேர் சுல்தான் இடம் சென்று மீட்டுப் போக
இளவரசி ஸ்ரீ ரெங்கம் சென்று நம்பெருமாளைக் காணாமல்
கோயில் மூடி இருப்பதைக் கண்டு
மயக்கம் அடைந்த இறக்க ஒளி மட்டும் கோயிலுக்கு உள்ளே சென்றதை பார்த்தார்கள்
முகமதியருக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் சித்திரமாக மட்டும் வரைந்து துலுக்க நாச்சியாராக இன்றும் சேவிக்கலாம்

காலையில் லுங்கி போன்ற வஸ்திரமும் அணிவித்து வெள்ளம் கலந்த இனிப்பான ரொட்டி வெண்ணெய் அமுது செய்து அருளுகிறார்
திருமஞ்சனம் வெந்நீரிலே நம்பெருமாள் கண்டு அருள்கிறான்
இடையில் 4 அல்லாது 5 தடவை கைலி மாற்றமும் உண்டு

பகல் பத்து உத்ஸவ படி ஏற்ற சேவை இந்த துலுக்க நாச்சியார் சந்நிதி முன்பே நடக்கும் –
இந்த படி ஏற்ற சேவையைக் காண கண் கோடி வேண்டும்

7- ஸ்ரீ செங்கமல வல்லித் தாயார் -ஸ்ரீ தான்ய லஷ்மி –
தான்யம் கோயில் மாடு

8- ஸ்ரீ பெரிய பிராட்டியார்
பங்குனி உத்தர சேர்த்தி உத்சவம்

9- ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி
பெரியாழ்வார் நாச்சியாரை கூட்டிக் கொண்டு வந்து தங்கிய இடம்
காவேரிக் கரையாகவே அப்போது இருந்தது
வெளி ஆண்டாள் சந்நிதி
திருட்டு பயம் காரணமாக உத்சவர் மட்டும் உள்ளே இருக்கும் ராமர் சந்நிதிக்கு மாற்ற அதுவே உள் ஆண்டாள் சந்நிதி

10- ஸ்ரீ உறையூர் கமலவல்லி நாச்சியார்

வாசவல்லித் தாயார் -செங்கமல வல்லித்தாயார் -நந்த சோழன் திருமகள் –
பங்குனி உத்சவம் ஆறாம் நாள் சேர்த்தி உத்சவம் பிரசித்தம்
தீ வட்டிகள் தலை கீழாக வைத்து தொலைத்த ஒன்றை தேடுவதாக நடக்கும்
திரும்பும் பொழுது மாலை மாற்றல் வெளி ஆண்டாள் சந்நிதியில் நடக்கும்

11- ஸ்ரீ திருக் கவேரித் தாயார்
ஆடிப்பெருக்கு உத்சவம்
அம்மா மண்டபத்துக்கு எழுந்து அருளி சேவை

12- ஸ்ரீ பராங்குச நாயகித் தாயார்
மார்கழி ஏழாம் நாள் கங்குலும் பகலும்
கைத்தல சேவை ப்ரஸித்தம்

————

ஸ்ரீ ரெங்கத்தில் துலுக்க நாச்சியார்
இது இராமானுஜர் காலத்தில் நடந்ததல்ல
திருநராயணபுரம் செல்லப்பிள்ளை கதை இதுவல்ல
இது சுமார் 200 வருடங்கள் கழித்து நடந்த ஒரு சம்பவம்.
ரங்கநாதரின் உற்சவர் விக்ரகத்தை தில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த சுல்தானிடம் அந்த விக்ரகம் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
அந்த விக்ரகத்தைப் பார்த்த சுல்தானின் மகள், அதை ஒரு விளையாட்டுப் பதுமையாகக் கருதி, தன் அறையிலேயே வைத்துக் கொண்டாள்.
அதுமட்டுமல்ல, அந்த அரங்கனை அவள் உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள்.
இவ்வாறு அரங்கன், ஆக்கிரமிப்பாளர்களுடன் செல்வதைப் பார்த்த ஒரு பெண்மணி, திருக் கரம்பனூரைச் சேர்ந்தவள்.
தானும் அவர்களைப் பின் தொடர்ந்தாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது.
இவ்வாறு, அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை ‘பின் சென்ற வல்லி’ என்று போற்றி, வைணவம் பாராட்டுகிறது.
அதை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள்.
தன் மகளிடம் இருப்பவர் தான் அழகிய மணவாளன் என்பதை அறிந்த மன்னர் அனுமதி தருகிறார்.
அவர்களுடைய மத உணர்வுக்கு மதிப்பளித்து அந்த விக்ரகத்தைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு தன் மகளிடம் சொன்னான்.
ஆனால் இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமா யில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை, பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து, அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள்.
இளவரசி கண்விழித்து, தன் அறையில் அரங்கனைக் காணாமல், தொலைந்ததறிந்து, பதறி நோய்வாய்ப் படுகிறாள்.
மன்னன் கவலையுற்று தன் படையை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார்.
அரங்கனின் வடிவழகில் மனம் பறிகொடுத்தி ருந்த அந்தப் பெண்ணோ மிகுந்த மன வருத்தத்துடன் அந்த அழகனைத் தான் நேரில் காணும் பொருட்டு நேரே திருவரங்கத்திற்கே வந்துவிட்டாள்.
ஆனால், தலைமை பட்டரோடு சிலர், தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்து விட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர்
ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல், கோவில் மூடியிருப்பதைக் கண்டு, தன் கற்பனையில் அவள் உருவாக்கி வைத்திருந்த உருவம் அங்கே காணக்கிடைக்காததால் மனம் வெதும்பி அங்கேயே மயக்கமடைந்து இறந்து அரங்கன் திருவடி சேர்ந்தாள்.
அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள்.
அதன்பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.
முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென் பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் வழிபாடு நடக்கின்றது.
அரங்கமாநகரின் இதயமாம் பெரியபெருமாள் பள்ளிகொண்டிருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள அர்ச்சுன மண்டபத்தில் அவள் ஓவியமாய் இன்றைக்கும் மிளிர்கிறாள்
மதம் கடந்த அந்தக் காதலின் அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து, அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள்.
இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும்.
மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெண்ணை.
திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம்.
மற்ற கோயில்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும்.
இடையில் 4, 5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள்.
சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். ஈரவாடைத் தீர்த்தம் என்று பெயர்.
வெற்றிலைக்கு எப்பொழுதுமே இஸ்லாமியர்கள் போல் வெற்றிலையின் மேல்ப்பக்கம் சுண்ணாம்பு தடவுவார்கள்.
மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாட்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார்.
அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.
அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது.
‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு.
எல்லாவற்றிலும் துலுக்க நாச்சியார் படியேற்றம் விசேஷமானது.
‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.
————–
உத்ஸவம்

1-உத் ஸூதே ஹர்ஷம் இதி ச தஸ்மாத் ஏவ மஹா உத்ஸவ மஹா ப்ரீதிர் யேந உத்ஸவேந பவிஷ்யதி
2- உத்க்ருஷ்ட நாள்கள் -உத்க்ருஷ்டோ அயம் யதஸ் தஸ்மாத் உத்ஸவஸ்த்விதி கீர்த்யதே
3- உலகோர் கஷ்டங்களைப் போக்கடிக்கும் -ஸவ இத்யுச்யதே து கம் வித்வத்பு சமுதாரஹ்ருதம்
உதகத ஸஸவோ யஸ்மாத் தஸ்மாத் உத்ஸவ உச்யத
4- பாகுபாடுகள் அகற்றப்படுகின்றன -தஸ்மாத் அஸ் ப்ருஸ்யஸ் பர்சம் ந தோஷாய பவேத்

————-

18 படிகள்
முமுஷு –
1-ஸம்ஸார வித்து நசிக்க வேண்டும்
2-ஸம்ஸார வித்து நசிந்தால் அஹங்கார மமகாரங்கள் விலகும்
3-அவை விலக தேஹ அபிமானம் விலகும்
4-அது நீங்கினால் ஆத்ம ஞானம் பிறக்கும்
5-ஆத்ம ஞானம் பிறக்க ஐஸ்வர்ய போகங்களில் வெறுப்பு உண்டாகும்
6-அதனால் எம்பெருமான் பக்கல் ப்ரேமம் உண்டாகும்
7-அது உண்டானால் விஷயாந்தர ருசி நீங்கும்
8-அத்தால் பாரதந்தர்ய ஞானம் உண்டாகும்
9-அதனால் அர்த்த காம ராக த்வேஷங்கள் பிறக்கும்
10-அவை நீங்கவே ஸ்ரீ வைஷ்ணவத்வம் ஸித்திக்கும்
11-அத்தாலே சாது சங்கம் கிடைக்கும்
12-அத்தாலே பாகவத ஸம்பந்தம் கிட்டும்
13-அத்தாலே பகவத் சம்பந்தம் உண்டாகும்
14-அத்தாலே ப்ரயோஜனாந்தரங்களில் வெறுப்பு உண்டாகும்
15-அத்தாலே பகவத் அநந்யார்ஹத்வம் பிறக்கும்
16-அத்தாலே எம்பெருமானையே ஒரே புகலாகக் கொள்வான்
17-அத்தாலே திரு மந்த்ரார்த்தம் கேட்க யோக்யதை பிறக்கும்
18-அத்தாலேயே திருமந்த்ரார்த்தம் கை கூடும் –

—————–

1-மாட மாளிகைகள் சூழ் திரு வீதியும்
2-மன்னு சீர் திரு விக்ரமன் வீதியும்
3-குல விராச மகேந்திரன் வீதியும்
4-ஆலி நாடன் அமர்ந்து உறை வீதியும்
5-கூடல் வாழ் குலசேகரன் வீதியும்
6-தேடரிய தர்ம வர்மாவின் வீதியும்
தென்னரங்கன் திரு ஆரணமே

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி  யாநி  ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||–ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 17 –

இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், -அவனுடைய ஸர்வேஸ்வரத்வத்துக்கு
உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச்செய்கிறார்.
1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக் கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப் போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள்
5) மூல ப்ரக்ருதி
6) இவ் வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம்
8) (தேவதைகளை விட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களை விட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

———–

முதல் திருவாய் மொழி -உயர்வற – ப்ரஹ்ம ஸ்வரூபம்
இரண்டாம் திருவாய் மொழி அவனே நாராயணன் -வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
மூன்றாம் திருவாய் மொழி -ஸ்ரீயப்பதி -ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
என் அமுதம் சுவையன் திரு மணாளன்
மலராள் மைந்தன்
திரு மகளார் தனிக்கேள்வன்
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே
மலராள் மணவாளன்

—————–

ஸ்ரீ மத் பாகவதம் -11-ஸ்கந்தம் -அத்தியாயங்கள் 27-28-29- அர்ச்சாவதார ஏற்றம் சொல்லும்

தப்தஜாம்பூ³னத³ப்ரக்²யம்ʼ ஶங்க²சக்ரக³தா³ம்பு³ஜை꞉ .
லஸச்சதுர்பு⁴ஜம்ʼ ஶாந்தம்ʼ பத்³மகிஞ்ஜல்கவாஸஸம் .. -27-38..

ஸ்பு²ரத்கிரீடகடககடிஸூத்ரவராங்க³த³ம் .
ஶ்ரீவத்ஸவக்ஷஸம்ʼ ப்⁴ராஜத்கௌஸ்துப⁴ம்ʼ வனமாலினம் .. 27-39..

அப்⁴யர்ச்யாத² நமஸ்க்ருʼத்ய பார்ஷதே³ப்⁴யோ ப³லிம்ʼ ஹரேத் .
மூலமந்த்ரம்ʼ ஜபேத்³ப்³ரஹ்ம ஸ்மரன் நாராயணாத்மகம் .. 27-42..

த³த்த்வாசமனமுச்சே²ஷம்ʼ விஷ்வக்ஸேனாய கல்பயேத் .
முக²வாஸம்ʼ ஸுரபி⁴மத்தாம்பூ³லாத்³யமதா²ர்ஹயேத் .. 27-43..

அர்சாதி³ஷு யதா³ யத்ர ஶ்ரத்³தா⁴ மாம்ʼ தத்ர சார்சயேத் .
ஸர்வபூ⁴தேஷ்வாத்மனி ச ஸர்வாத்மாஹமவஸ்தி²த꞉ .. 27-48..

ஏவம்ʼ க்ரியாயோக³பதை²꞉ புமான் வைதி³கதாந்த்ரிகை꞉ .
அர்சன்னுப⁴யத꞉ ஸித்³தி⁴ம்ʼ மத்தோ விந்த³த்யபீ⁴ப்ஸிதாம் .. 27-49..

மத³ர்சாம்ʼ ஸம்ப்ரதிஷ்டா²ப்ய மந்தி³ரம்ʼ காரயேத்³த்³ருʼட⁴ம் .
புஷ்போத்³யானானி ரம்யாணி பூஜாயாத்ரோத்ஸவாஶ்ரிதான் .. 27-50..

பூஜாதீ³னாம்ʼ ப்ரவாஹார்த²ம்ʼ மஹாபர்வஸ்வதா²ன்வஹம் .
க்ஷேத்ராபணபுரக்³ராமான் த³த்த்வா மத்ஸார்ஷ்டிதாமியாத் .. 27-51..

ப்ரதிஷ்ட²யா ஸார்வபௌ⁴மம்ʼ ஸத்³மனா பு⁴வனத்ரயம் .
பூஜாதி³னா ப்³ரஹ்மலோகம்ʼ த்ரிபி⁴ர்மத்ஸாம்யதாமியாத் .. 27-52..

அயம்ʼ ஹி ஸர்வகல்பானாம்ʼ ஸத்⁴ரீசீனோ மதோ மம .
மத்³பா⁴வ꞉ ஸர்வபூ⁴தேஷு மனோவாக்காயவ்ருʼத்திபி⁴꞉ ..29- 19..

ய ஏததா³னந்த³ஸமுத்³ரஸம்ப்⁴ருʼதம்ʼ
ஜ்ஞானாம்ருʼதம்ʼ பா⁴க³வதாய பா⁴ஷிதம் .
க்ருʼஷ்ணேன யோகே³ஶ்வரஸேவிதாங்க்⁴ரிணா
ஸச்ச்²ரத்³த⁴யாஸேவ்ய ஜக³த்³விமுச்யதே .. 29-48..

ப⁴வப⁴யமபஹந்தும்ʼ ஜ்ஞானவிஜ்ஞானஸாரம்ʼ
நிக³மக்ருʼது³பஜஹ்ரே ப்⁴ருʼங்க³வத்³வேத³ஸாரம் .
அம்ருʼதமுத³தி⁴தஶ்சாபாயயத்³ப்⁴ருʼத்யவர்கா³ன்
புருஷம்ருʼஷப⁴மாத்³யம்ʼ க்ருʼஷ்ணஸஞ்ஜ்ஞம்ʼ நதோ(அ)ஸ்மி ..29- 49..

ஸர்வாத்ம பூதனாய் வாஸூ தேவனே நம் ஹ்ருதய தாமரையில் அமர்ந்து நம்மை வழி நடத்தி அருள்கிறான்
என்று அறிவதே அர்ச்சையில் பகவத் ஆராதனத்தின் பரம பிரயோஜனம்

ஸ்வயம் வ்யக்த ஸ்தலங்கள்
திருவரங்கம்
திருவேங்கடம்
தோத்தாத்ரி
சாளக்கிராமம்
பத்ரிகாஸ்ரமம்
நைமிசம்
ஸ்ரீ முஷ்ணம்

ஸ்தல மஹாத்ம்யம் -நைமிசம் -பத்ரிகாஸ்ரமம்

புஷ்கரம் –தீர்த்த மஹாத்ம்யம்

—————

திருக்கோயில்களின் பிரகாராதிகள் எல்லாமே தத்துவங்களை விளக்குவதற்காகவே யோகீந்த்ரர்கள் சொல்வார்கள் –
மூல ஸ்தானம் -சிரப் பத்ம ஸ்தானம்
அடுத்த அந்தராளம் – முகம்
அடுத்த ஸ்தானம் சுக நாஸி -இது கண்ட ஸ்தானம்
அடுத்த அர்த்த மண்டபம் -மார்பும் தோள்களும் கூடிய ஸ்தானம்
இவை சூழ்ந்த பிரகாரம் -துடைகளும் முழம் தாள்களும்
கோபுரம் -பாதம்

பஞ்ச-ஆவரண – பிரகார ஆலயங்கள் –
தாமஸ பூத பஞ்சீகரணத்தால் ஆக்கப்பட்ட ஸ்தூல சரீரம் அன்னமய கோசம்-முதலாவது பிரகாரம் -ஆவரணம் –
பிராணன் பிராண வ்ருத்திகள் -கர்ம இந்திரியங்கள் -இவை கூடியது ப்ராண மய கோசம் -இது இரண்டாவது ஆவரணம்
அந்தக்கரண வ்ருத்திகளாகிற -மனம் புத்தி சித்தம் அஹங்காரம் -ஞான இந்திரியங்கள் இவை சேர்ந்தது மநோ மாயம் -இது மூன்றாவது ஆவரணம்
அந்தக்கரண ப்ரதிபிம்ப ஜீவனும் அதன் வ்ருத்திகளும் ஞான இந்திரியங்களும் கூடியது -விஞ்ஞான மய கோசம் -இது நான்காவது ஆவரணம்
பிராண வாயுவும் ஸூஷுப்தியும் கூடி நிற்பது ஆனந்த மய கோசம் -இது ஐந்தாவது ஆவரணம்

த்வஜ ஸ்தம்பம் -தேகத்தில் வீணா தண்டம் போல் மூலாதாரம் முதல் ப்ரஹ்மரந்தரம் வரை மேல் நோக்கிச் செல்லும் ப்ரஹ்ம நாடி
இந்திரியங்களை அடக்கி -பிரபஞ்ச விஸ்ம்ருதியும் ஆத்ம சாஷாத்காரமும் -அதற்கு மேல் ப்ரஹ்ம ஆனந்தமும் தோன்றும்

மடப்பள்ளி ஜடர அக்னி ஸ்தானம்

பஞ்ச பேரங்கள்
த்ருவ பேரம்
உத்ஸவ பேரம்
ஸ்நபன பேரம்
கௌதுக பேரம்
பலி பேரம்

இவை கமல ஆலய ஆகாரத்தை உணர்த்துவது போல்
தாமரைத் தடாகம் புஷ்பம் -இலை -கொடி -கிழங்கு போல்
மூல ஸ்தானம் தடாகம்
உத்ஸவ பேரம் புஷ்பம்
த்ருவ பேரம் -கிழங்கு
மற்றவை -இலை -கொடி

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading