ஓம் பார்தா²ய ப்ரதிபோ³தி⁴தாம் ப⁴க³வதா நாராயணேந ஸ்வயம்|
வ்யாஸேந க்³ரதி²தாம் புராண முநிநா மத்⁴யே மஹா பா⁴ரதம்||
அத்³வைதாம்ருத வர்ஷிணீம் ப⁴க³வதீமஷ்டாத³ஸா² த்⁴யாயிநீமம்ப³|
த்வாமநுஸந்த³தா⁴மி ப⁴க³வத்³ கீ³தே ப⁴வத்³வேஷிணீம்||
பார்தா²ய = பார்த்தனுக்காக
ப⁴க³வதா நாராயணேந = பகவான் நாராயணனால்
ஸ்வயம் ப்ரதிபோ³தி⁴தாம் = தானே உபதேசித்தது
புராண முநிநா வ்யாஸேந = பழமையான முனிவர் வியாசரால்
மஹாபா⁴ரதம் மத்⁴யே க்³ரதி²தாம் = மகாபாரதத்தின் நடுவே தொகுக்கப் பட்டது
அம்ப³! ப⁴க³வத்³ கீ³தே! = தாயே! பகவத் கீதே!
அஷ்டாத³ஸ² அத்⁴யாயிநீம் = பதினெட்டு அத்தியாயம் கொண்டவளே!
அத்³வைத அம்ருத வர்ஷிணீம் = அத்வைத அம்ருதத்தை மழையாகப் பொழிபவளே!
ப⁴க³வதீம் = இறைவியே!
ப⁴வத்³வேஷிணீம் = பிறப்பை நீக்குபவளே!
த்வாம் அநுஸந்த³தா⁴மி = உன்னை தியானிக்கிறேன்
—————
நமோऽஸ்துதே வ்யாஸ விஸா²ல பு³த்³தே⁴ பு²ல்லாரவிந்தா³யத பத்ர நேத்ர|
யேந த்வயா பா⁴ரத தைல பூர்ண: ப்ர ஜ்வாலிதோ ஜ்ஞா²ந மய: ப்ரதீ³ப:||
வ்யாஸ = வியாச பகவானே!
விஸா²லபு³த்³தே⁴ = விசாலமான ஞானம்/புத்தி கொண்டவரே!
பு²ல்ல அரவிந்த³ அயத பத்ர நேத்ர = பூத்த தாமரை இதழ்கள் போன்ற கண்கள் கொண்டவரே!
த்வயா = உங்களால்
யேந பா⁴ரத = இந்த மகா பாரதம்
தைல பூர்ண: = எண்ணை ஊற்றப் பட்டு நிறைந்து உள்ள
ஞா²நமய: ப்ரதீ³ப: = ஞானமயமான ஒளி பரப்பும் விளக்கென
ப்ரஜ்வாலித: = ஒளிர்கிறது
தே நம: அஸ்து = உங்களுக்கு வணக்கங்கள்
—————–
ப்ரபந்ந பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே|
ஜ்ஞாந முத்³ராய க்ருஷ்ணாய கீ³தாம்ருதது³ஹே நம:||
ப்ரபந்ந பாரிஜாதாய = அண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பாரிஜாத கற்பக விருட்சமான
தோத்ர வேத்ர ஏக பாணயே = ஒரு கையில் தேரோட்டும் சாரதியாக சாட்டை கம்புடனும்
ஜ்ஞாநமுத்³ராய = (இன்னொரு கையில்) ஞானத்தின் சின்னத்தை முத்திரையாக பிடித்து கொண்டிருக்கும்
கீ³த அம்ருத து³ஹே = கீதை என்னும் அமுதத்தை கறந்து தருகின்ற
க்ருஷ்ணாய நம: = ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வணக்கங்கள்
—————
வஸுதே³வ ஸுதம் தே³வம் கம்ஸ சாணூர மர்த³நம்|
தே³வகீ பரமாநந்த³ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரூம்||
வஸுதே³வஸுதம் = வசுதேவரின் பிள்ளையான
தே³வம் = தேவனான
கம்ஸசாணூரமர்த³நம் = கம்சன் சாணுரன் ஆகியோரை அழித்தவனான
தே³வகீபரமாநந்த³ம் = தேவகியின் பரம ஆனந்தமான
க்ருஷ்ணம் = க்ருஷ்ணனனை
ஜக³த்³ கு³ரூம் வந்தே³ = உலகாசிரியனை வணங்குகிறேன்
—————
பீ⁴ஷ்ம த்³ரோண தடா ஜயத்³ரத² ஜலா கா³ந்தா⁴ர நீலோத் பலா|
ஸ²ல்ய க்³ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலா||
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா து³ர்யோத⁴நா வர்திநீ|
ஸோத்தீர்ணா க²லு பாண்ட³வை ரணநதீ³ கைவர்தக: கேஸ²வ:||
பீ⁴ஷ்ம த்³ரோண தடா = பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகவும்
ஜயத்³ரத²ஜலா = ஜயத்ரதன் அதன் நீராகவும்
கா³ந்தா⁴ர நீலோத்பலா = காந்தாரன் அதில் பூத்த அல்லி மலராகவும்
ஸ²ல்யக்³ராஹவதீ = சல்யன் சுறா மீனாகவும்
க்ருபேண வஹநீ = கிருபன் அதன் வேகமாகவும்
கர்ணேந வேலாகுலா = கர்ணன் அதில் எழும்பும் அலையாகவும்
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா: = அஸ்வத்தாமன் விகர்ணன் ஆகியோர் கோரமான திமிங்கலம் போன்ற மீன்களாகவும்
து³ர்யோத⁴ந ஆவர்திநீ = துர்யோதனன் அதன் சுழல்களாகவும்
ஸா ரணநதீ³ = இருக்கும் அந்த போர் நதி
பாண்ட³வை: = பாண்டவர்களால்
உத்தீர்ணா = கடக்கப் பட்டது
கேஸ²வ: கைவர்தக: க²லு = (ஏனெனில்) கேசவன் படகோட்டி அல்லவோ !
———————-
பாராஸ²ர்ய வச: ஸரோஜமமலம் கீ³தார்த²க³ந்தோ⁴த்கடம்|
நாநாக்²யாநககேஸரம் ஹரிகதா²ஸம்போ³த⁴நாபோ³தி⁴தம்||
லோகே ஸஜ்ஜநஷட்பதை³ரஹரஹ: பேபீயமாநம் முதா³|
பூ⁴யாத்³பா⁴ரதபங்கஜம் கலிமலப்ரத்⁴வம்ஸிந: ஸ்²ரேயஸே||
பாராஸ²ர்ய வச: ஸரோஜம் = பராசரரின் மகன் (வியாசன்) வார்த்தைகளில் நீரில் பூத்த தாமரையாகவும்
கீ³த அர்த² க³ந்த⁴: உத்கடம் = கீதையின் உபதேசங்கள் அதன் நறுமணமாகவும்
நாநாக்²யாநக கேஸரம் = பல்வேறு கதைகள் பின்னிப் பிணைந்த தாமரைத் தண்டுகளாகவும்
ஹரிகதா² ஸம்போ³த⁴நா போ³தி⁴தம்= ஹரியின் கதைகளே அத்தாமரையின் விரிந்து அகன்ற இதழ்களாகவும்
லோகே = இவ்வுலகில்
அஹரஹ: = ஒவ்வொரு நாளும்
ஸஜ்ஜந ஷட்பதை³ = நல்ல மனிதர்களான தேனீக்களால்
முதா³ = மகிழ்ச்சியாக
பேபீயமாநம் = அருந்தப் படுவதும்
கலிமலப்ரத்⁴வம்ஸிந: = கலி என்னும் மலம் (தீங்கைத்) தொலைப்பதாகவும்
அமலம் = குற்றமில்லாததும்
பா⁴ரத பங்கஜம் = ஆகிய பாரதம் என்னும் தாமரையால்
ஸ்²ரேயஸே பூ⁴யாத் = நன்மை விளையட்டும்
——————–
மூகம் கரோதி வாசாலம் பங்கு³ம் லங்க⁴யதே கி³ரிம்|
யத் க்ருபா தமஹம் வந்தே³ பரமாநந்த³மாத⁴வம்||
யத் க்ருபா = எவருடைய கருணையால்
மூகம் = ஊமையும்
வாசாலம் = பேசும் திறன்
கரோதி = அடைகிறானோ
பங்கு³ம் = ஊனமுற்றவனும்
கி³ரிம் லங்க⁴யதே = மலை ஏறும் திறனுடையவனாகிறானோ
தம் பரமாநந்த³மாத⁴வம் = அந்த பரமானந்தம் தரும் மாதவனை
அஹம் வந்தே³ = நான் வணங்குகிறேன்
—————
கீ³தா ஸா²ஸ்த்ரமித³ம் புண்யம் ய: படே²த் ப்ரயத: புமாந்|
விஷ்ணோ: பத³மவாப்நோதி ப⁴ய ஸோ²காதி³வர்ஜித: ||
இத³ம் புண்யம் = இந்த புண்ணியமான
கீ³தா ஸா²ஸ்த்ரம் = கீதா சாத்திரத்தை
ய: புமாந் = எந்த மனிதர்
ப்ரயத: படே²த் = முயற்சி செய்து படிக்கிறாரோ (அவர்)
ப⁴யஸோ²காதி³ = பயம், சோகம் ஆகியவை
வர்ஜித: = நீங்கி
விஷ்ணோ: பத³ம் = விஷ்ணுவின் பதத்தை
அவாப்நோதி = அடைகிறார்.
————–
கீ³தாத்⁴யயந ஸீ²லஸ்ய ப்ராணாயாம பரஸ்ய ச|
நைவ ஸந்தி ஹி பாபாநி பூர்வ ஜந்ம க்ருதாநி ச||
கீ³தா அத்⁴யயந ஸீ²லஸ்ய = (எவர்) எப்போதும் கீதையை ஓதிக்கொண்டும்
ப்ராணாயாம பரஸ்ய ச = மூச்சை அடக்கி யோகத்திலும் திளைக்கிறாரோ அவரிடம்
பாபாநி = பாவங்கள்
பூர்வ ஜந்ம க்ருதாநி ச ஏவ = கடந்த ஜன்ம செயல்களின் விளைவுகளும்
ந ஸந்தி = இருப்பதில்லை
—————–
மல நிர்மோசநம் பும்ஸாம் ஜல ஸ்நாநம் தி³நே தி³நே|
ஸக்ருத்³ கீ³தாம்ப⁴ஸி ஸ்நாநம் ஸம்ஸார மல நாஸ²நம்||
பும்ஸாம் = மனிதர்கள்
தி³நே தி³நே = தினந்தோறும்
ஜல ஸ்நாநம் = நீரில் குளிப்பதால்
மல நிர்மோசநம் = உடல் அழுக்கு அகற்றப் படுகிறது
ஸக்ருத் = ஒரு தடவை
கீ³தா அம்ப⁴ஸி ஸ்நாநம் = கீதை என்னும் நீரில் குளிப்பதால்
ஸம்ஸார மல நாஸ²நம் = சம்சாரம் என்னும் மாசு நீங்குகிறது.
—————–
கீ³தா ஸுகீ³தா கர்தவ்யா கிமந்யை: ஸா²ஸ்த்ர விஸ்தரை:|
யா ஸ்வயம் பத்³மநாப⁴ஸ்ய முக²பத்³மாத்³விநி:ஸ்ருதா||
பத்³மநாப⁴ஸ்ய = பத்மநாபனின்
ஸ்வயம் முக²பத்³மாத் = தன்னுடைய முகத் தாமரையிலிருந்து
யா விநி:ஸ்ருதா = எது வெளி வந்ததோ
ஸுகீ³தா = கேட்க இனிமையானதோ
கீ³தா = அந்த கீதை
கர்தவ்யா = படிக்கப் பட வேண்டும்
அந்யை: = வேறு
ஸா²ஸ்த்ர விஸ்தரை: கிம் = சாத்திரங்களை விரிவாக (படிக்க வேண்டும்) எதற்கு?
————–
பா⁴ரதாம்ருத ஸர்வஸ்வம் விஷ்ணோர் வக்த்ராத்³விநி:ஸ்ருதம்|
கீ³தாக³ங்கோ³த³கம் பீத்வா புநர் ஜந்ம ந வித்³யதே||
விஷ்ணோ: வக்த்ராத் = விஷ்ணுவினுடைய திருமுகத்தில் இருந்து
பா⁴ரத அம்ருத ஸர்வஸ்வம் = பாரதம் என்னும் அமுத களஞ்சியம்
விநி:ஸ்ருதம் = உதித்தது
கீ³தாக³ங்கோ³த³கம் = கீதை என்னும் கங்கை நீரை
பீத்வா = குடித்த பின்
புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபடி ஒரு ஜன்மம் ஏற்படுவது இல்லை
—————–
ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந:|
பார்தோ² வத்ஸ: ஸுதீ⁴ர் போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||
ஸர்வ உபநிஷத³: கா³வ: = எல்லா உபநிடதங்களும் பசுக்களாம்
தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந: = கண்ணனே பால் கறப்பவனாம்
பார்த²: வத்ஸ: = பார்த்தனே கன்றாம்
ஸுதீ⁴ போ⁴க்தா = தெளிந்த அறிவுடையோரே பால் அருந்துவோர்
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத் = அமுதமான கீதையே பால்
—————–
ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீ புத்ரகீ³தமேகோ தே³வோ தே³வகீ புத்ர ஏவ|
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமாநி யாநி கர்மாப்யேகம் தஸ்ய தே³வஸ்ய ஸேவா||
ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ர கீ³தம் = ஒரே சாத்திரம் தேவகி மைந்தனின் வார்த்தைகள்
ஏக: தே³வ: தே³வகீ புத்ர ஏவ = தேவகியின் மைந்தனே ஒரே தெய்வம்
தஸ்ய யாநி நாமாநி ஏக: மந்த்ர: = அவரது பெயர்களே ஒரே மந்திரம்
ஏகம் கர்மா: அபி = ஒரே கடமையும் (தொழிலும்)
தஸ்ய தே³வஸ்ய = அந்த தேவனுடைய
ஸேவா = சேவை செய்தலே
————-
ஸா²ந்தாகாரம் பு⁴ஜக³ஸ²யநம் பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
விஸ்²வாதா⁴ரம் க³க³ந ஸத்³ருஸ²ம் மேக⁴வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி³பி⁴ர் த்⁴யாந க³ம்யம்
வந்தே³ விஷ்ணும் ப⁴வ ப⁴ய ஹரம் ஸர்வ லோகைக நாத²ம்||
ஸா²ந்தாகாரம் = அமைதி வடிவானவர்
பு⁴ஜக³ஸ²யநம் = பாம்பின் மீது துயிலுபவர்
பத்³மநாப⁴ம் = தாமரை போன்ற நாபி கொண்டவர்
ஸுரேஸ²ம் = தேவர்களின் தலைவர்
விஸ்²வாதா⁴ரம் = உலகைத் தாங்குபவர்
க³க³நஸத்³ருஸ²ம் = ஆகாயம் போன்றவர்
மேக⁴வர்ணம் = மேகத்தின் நிறத்தை ஒத்தவர்
ஸு²பா⁴ங்க³ம் = சுபமான உடலைக் கொண்டவர்
லக்ஷ்மீகாந்தம் = திருமகளின் கணவர்
கமலநயநம் = தாமரைக் கண்கள் உடையவர்
யோகி³பி⁴: = யோகிகளால்
த்⁴யாந க³ம்யம் = தியானித்து அடையப் படுபவர்
ப⁴வப⁴ய ஹரம் = பிறவி என்னும் பயத்தை போக்குபவர்
ஸர்வ லோகைக நாத²ம் = எல்லா உலகிற்கும் தலைவர்
விஷ்ணும் = விஷ்ணுவை
வந்தே³ = வணங்குகிறேன்
———————
யம் ப்³ரஹ்மா வருணேந்த்³ரருத்³ர மருத: ஸ்துந்வந்தி தி³வ்யை: ஸ்தவை:।
வேதை³: ஸாங்க³ பத³ க்ரமோபநிஷதை³ர் கா³யந்தி யம் ஸாமகா³:।।
த்⁴யாநா வஸ்தி²ததத்³ க³தேந மநஸா பஸ்²யந்தி யம் யோகி³நோ।
யஸ்யாந்தம் ந விது³: ஸுராஸுரக³ணா தே³வாய தஸ்மை நம:।।
யம் = எவரை
ப்³ரஹ்மா வருண: இந்த்³ர ருத்³ர மருத: = பிரம்மா வருணன் இந்திரன் உருத்திரன் மருத்துகள் எல்லாரும்
தி³வ்யை: ஸ்தவை: = திவ்விய துதிகளால்
ஸ்துந்வந்தி = துதிக்கிறார்களோ
யம் = எவரை
ஸாமகா³: = சாம வேதம் ஓதுபவர்கள்
ஸாங்க³ பத³ க்ரம = பத க்ரம முறைகளுடன்
உபநிஷதை³: = உபநிடதங்களாலும்
வேதை³: = வேதங்களாலும்
கா³யந்தி = இசைக்கிறார்களோ
த்⁴யாநா வஸ்தி²த: யோகி³ந: = தியானத்தில் நிலைபெற்ற யோகிகள்
தத்³ க³தேந மநஸா = பரவச மனதுடன்
யம் பஸ்²யந்தி = எவரைப் பார்க்கிறார்களோ
யஸ்ய அந்தம் = எவரை முழுவதுமாக
ஸுர அஸுரக³ணா: = தேவர்களும் அசுரர்களும்
ந விது³: = அறியவில்லையோ
தே³வாய தஸ்மை நம: = அந்த தேவனுக்கு வணக்கங்கள்
————
ஸ்ரீ மஹாபாரதத்தில்,-ஸர்வ ஸாஸ்த்ரமயீ கீதா (பிஷ்ம. 43/2) என்று கூறப்படுகிறது–
ஸ்ரீ பகவான் வேத வ்யாஸரே கூறுகிறார் :
கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா – (மஹா. பீஷ்ம. 43/1)
ஸ்ரீ கீதையை நல்ல முறையில் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும்,
மனனம் செய்ய வேண்டும், மனதில் தரிக்க வேண்டும்.
கீதை பகவான் பத்மநாபனின் முகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாஸ்த்ர நூல்கள் எதற்கு?
————-
ஸ்ரீ கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கங்கையில் நீராடுவதற்குப் பயன் முக்தி என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரைக் கரையேற்ற முடியாது.
ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தியைப் பெறுவதில்லை.
பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான். கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது.
ஆனால் கீதை ஸாக்ஷõத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
கங்கைக்குச் சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தியை அளிக்கிறது.
கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது.
ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.
ஸ்ரீ கீதை காயத்ரியை விடச் சிறந்தது. காயத்ரி ஜபம் செய்தால் மனிதன் முக்தி பெறுவான். அது சரிதான்.
காயத்ரியை ஜபம் செய்பவன் ஒருவன் மட்டுமே முக்தி பெற முடியும்.
கீதா பாராயணம் செய்பவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவானே!
முக்தியை அளிக்கும் பகவானே அவனைச் சார்ந்து விடுகிறான் என்றால்
அப்புறம் முக்தியைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
முக்தி அவனுடைய திருவடித் தூசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அவன் முக்தியெனும் சத்திரத்தைத் திறந்து விடுகிறான்.
ஸ்ரீ கீதை பகவானைவிடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது.
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.
கீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்
கீதா ஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம் – (வராஹபுராணம்)
(கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதை தான் என்னுடைய சிறந்த வீடு.
கீதையின் ஞானத்தைக் கைக் கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்)
——————–
உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம்
என்னும் பெயர் பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள்
பகவத் கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது.
பீஷ்ம பர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம்.
ஆக, இதன் கண் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன.
இவைகளில் அமைந்துள்ள ஸ்லோகங்களின் தொகை எழுநூறு.
பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து
நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம்.
அந்த நான்கும் முறையே கர்ம யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்று பெயர் பெறுகின்றன.
இந்த நான்கினுள் ஆரம்ப தசையில் இருப்பது கர்ம யோகமென்றும்,
பிறகு அது ராஜ யோகமாகப் பரிணமிக்கிறதென்றும்,
அதினின்று பக்தி யோகம் ஓங்கிறதென்றும்,
இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதிகமாக வந்துள்ளது.
கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே அதற்குத் தக்க சான்றாகிறது.
நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர்.
அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று
அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன.
அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற
ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. இது முதல் ஷ்டகம்.
ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம்.
மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம்
பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு
மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள
பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது.
தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை.
அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும்
வேறு ஒரு நூல் செய்யக் கிடையாது.
ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும்.
————
தாரோ உவாச:
1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ
நிலமகள்-சொன்னது:
பகவானே, பரமேசா, பிராரப்த கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் மாற்று அறியாத பக்தியைப் பெறுவது எங்ஙனம்?
ஸ்ரீ விஷ்ணுர் உவாச:
2. ப்ராரப்தம் பூஜ்ய மானோ ஹி கீதா அப்யாசரதா சதா
ச முக்தா ச ஸுகீ லோகே கர்மணா நோபலிப்யதே
ஸ்ரீ விஷ்ணு சொன்னது:
கீதா அப்பியாசத்தில் ஒருவன் சதா மகிழ்வடைந்திருப்பானாகில், பிராரப்த கர்மத்தில் கட்டுண்டு கிடக்கினும்,
அவனே முக்தன், இவ்வுலகிலேயே சுகத்தை அனுபவிப்பவனும் அவனே. புதிய கர்மத்தில் அவன் தேய்வுறான்.
3. மகா பாபாதி பாபானி கீதா தியானம் கரோதி சேத்
க்வச்சித் ஸ்பர்ஷம் ந குர்வந்தி நளினி தளம் அம்புவத்
கீதா தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மஹா பாபமும் தீண்டுவது கிடையாது.
தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாதிருப்பது போன்று அவன் இருக்கிறான்.
4. கீதாயஹ் புஸ்தகம் யத்ர யத்ர பாட: ப்ரவர்த்ததே
தத்ர சர்வாணி தீர்தாணி பிரயாகாதீணி தத்ர வை
கீதா புஸ்தகம் எங்கு இருக்கிறதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ அங்குப் புண்ணிய
தீர்த்தங்களனைத்தும், பிரயாகைகளும் மற்றும் உள்ளவைகளும் வந்து கூடுகின்றன.
5. சர்வே தேவாச்ச ரிஷயோ யோகின: பன்னகாஷ்ச்ச யே
கோபாலா கோபிகா வாபி நாரத் உத்தவ பார்சதை:
தேவர்கள் அனைவரும், ரிஷிகளும், யோகிகளும், பன்னகர்களும், கோபாலர்களும், கோபிகளும்,
நாரதரும், உத்தவரும், அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்கு உளர்.
6. சஹாயோ ஜாயதே ஷீக்ரம் யத்ர கீதா ப்ரவர்த்ததே
யத்ர கீதா விசாரஷ்ச்ச பதனம் பாதனம் ஸ்ருதம்
தத்ராஹம் நிஷ்சிதம் ப்ரித்வி நிவாசாமி சதைவ ஹி
எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரம் சஹாயம் வருகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ,
ஓதப்படுகிறதோ, புகட்டவும் கேட்கவும் செய்யப்படுகிறதோ, ஆங்கு நிலமகளே கேள், நான் நிச்சயமாக ஸதா வாசம் செய்கிறேன்.
7. கீதாஸ்ரையேஹம் திஷ்தாமி கீதா மே சோட்டமம் க்ரிஹம்
கீதா ஞானம் உபாஸ்ரித்ய த்ரீன் லோகான் பாலயாம் யஹம்
கீதை என்னும் புகலிடத்தில் நான் வீற்றிருக்கிறேன். எனக்கு உத்தமமான இருப்பிடம் கீதை.
கீதாஞானத்தில் நின்றுகொண்டு மூவுலகங்களையும் நான் பரிபாலிக்கிறேன்.
8. கீதா மே பரமா வித்யா ப்ரஹ்ம ரூபா ந சம்ஷய:
அர்த்த மாத்ர அக்ஷரா நித்யா ச்வாநிர் வாச்ய பதாத்மிகா
எனது பரம வித்தையாயிருப்பது கீதை; அது ப்ரஹ்ம ரூபம் என்பதில் சம்சயமில்லை. அர்த்த மாத்திரையாய்,
அக்ஷரமாய், நித்தியமாய், எனது சொரூபத்தைச் சொல்லால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உளது.
9. சிதானந்தேன கிருஷ்னேன ப்ரோக்தா ஸ்வாமுகதோர்ஜுன
வேத த்ரயீ பர ஆனந்தா தத்வார்த்த ஞான சம்யுதா
மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாயுள்ள
இந்த ஞானம் சிதானந்த கிருஷ்ணனால் அர்ஜுனனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது.
10. யோ அஷ்டதசா ஜபேன் நித்யம் நரோ நிஷ்ச்சல மானசா:
ஞான சித்திம் ச லபதே ததோ யாதி பரம் பதம்
உறுதியான உள்ளத்துடன் எம்மனிதன் நாள்தோறும் பதினெட்டு அத்தியாயங்களையும் ஓதுகின்றானோ,
அவன் ஞான சித்தியடைந்து பிறகு பரமபதத்தைச் சேருகிறான்.
11. பாடே அசமர்த்த சம்பூர்ணம் தடோர்தம் பாடம் ஆசரேத்
ததா கோதா நஜம் புண்யம் லபதே நாட்ற சம்ஷயா
முழுதும் படனம் செய்ய இயலாவிட்டால் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்கின்றவன்
கோதானத்தினின்று விளையும் புண்ணியத்தைப் பெறுகிறான். அதில் சந்தேகமில்லை.
12. த்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத்
ஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத்
மூன்றில் ஒரு பகுதி படிக்கிறவன் கங்கா ஸ்நான பலனை அடைகிறான்.
ஆறில் ஒரு பங்கு படிப்பவன் சோமயாகப் பலனைப் பெறுகிறான்.
13. ஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத:
ருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம்
பக்தியுடன் ஓர் அத்தியாயமாவது நித்தியம் படிப்பவன் ருத்திர லோகத்தையடைந்து
அவனுடைய கணங்களில் ஒருவனாக அங்கு நெடிது வாழ்கிறான்.
14. அத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர:
ஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே
வசுந்தரே, ஒரு அத்தியாயத்தின் அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கு நாள்தோறும் படிப்பவன்
ஒரு மன்வந்தரம் முடியும் வரையில் மானுடப்பிறப்பு எடுக்கிறான்.
15-16. கீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம்
த்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர:
சந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம்
கீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத்
கீதையினுடைய பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ, பாதியோ ஸ்லோகத்தைப் படனம்
பண்ணுபவன் சந்திரலோகத்தில் பதினாயிரம் வருஷங்கள் வசிக்கிறான்.
கீதையைப் படித்துக் கொண்டிருக்கும் போது உயிர் துறப்பவன் மனுஷ்ய லோகத்தை அடைகிறான்.
17. கீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம்
கீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத்
கீதா அப்பியாசம் செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடைகிறான்.
மரணமடையும் போது கீதை என்று உச்சரிக்கும் மனிதன் வீடுபெறுவான்.
18. கீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா
வைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே
மஹாபாவம் செய்தவனும் கீதையின் அர்த்தத்தைக் கேட்பதில் விருப்பமுடையவனா யிருப்பானாகில்
அவன் வைகுண்டம் ஏகி விஷ்ணுவுடன் பேரானந்தம் திளைப்பான்.
19. கீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ:
ஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம்.
ஓயாது கர்மம் செய்துகொண்டிருப்பதற்கு இடையில் யார் கீதையின் அர்த்தத்தை இடையறாது எண்ணிக்
கொண்டிருக்கிறானோ அவனை ஜீவன் முக்தன் என்று கருதவேண்டும். உடல் அழியும்போது அவன் பரமபதத்தை அடைகிறான்.
20. கீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா
நிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம்
இந்த கீதையைத் துணையாய்க்கொண்டு ஜனகன் போன்ற பூபாலர்கள் பலர் இவ்வுலகில் குறைகள்
நீங்கப்பெற்றவராயினர். பின்பு பரமபதத்தையும் பெற்றனர் என்று பாடப்பட்டிருக்கிறது.
21. கீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத்
வ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா:
கீதையை வாசித்தான பிறகு, இங்கு இயம்பியபடி அதன் மஹாத்மியத்தை வாசிக்காதவனுக்கு
வாசிப்பு வீண் போனதாகும்; முயற்சியும் வீண்போனதேயாம்.
22. ஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ்
ஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத்
இந்த மாஹாத்மியத்தோடு கூடிய கீதா அப்பியாசத்தை யார் செய்கின்றானோ அவன் ஈண்டு இயம்பியுள்ள
பலனைப் பெறுகின்றான். கிடைப்பதற்கு அரிய உயர்கதியும் அவனுக்குக் கிடைக்கிறது.
ஸூத உவாச:
23. மஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம்
கீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத்
ஸூதர் சொன்னது:
கீதையை வாசித்தான பிறகு என்னால் இயம்பப்பட்ட இந்த கீதா மாஹாத்மியத்தை யார் வாசிக்கிறானோ
அவன் இதில் விளக்கியுள்ள பலனைப் பெறுவான்.
இதி ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்
வராஹ புராணத்தில் கீதாமாஹாத்மியம் ஸம்பூரணம்.
————–
கீதையும் 18 அத்தியாயங்களும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில்
நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால் தான்
இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1-காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2-குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3-லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
4-மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா?
அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5-மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6-டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7-அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8-சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9-ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10-தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
11-ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12-மனம்: நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
13-அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
14-கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15-காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16-மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17-நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
18-மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும்.
கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
————
1. விஷாத யோகம்.
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும்
என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
2. சாங்கிய யோகம்.
பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
3. கர்மயோகம்.
உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
4.ஞான கர்ம சன்னியாச யோகம்.
பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
5. சன்னியாச யோகம்.
நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
6.தியான யோகம்.
கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில்
இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
7. ஞானம்.
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
8. அட்சர பிரம்ம யோகம்.
எந் நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம்.
கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்பது தான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம்.
அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
11. விஸ்வரூப தரிசன யோகம்.
ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
12. பக்தி யோகம்.
இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து
எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம்.
எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
14. குணத்ர விபாக யோகம்.
பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
15. தெய்வாசுர விபாக யோகம்.
தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
16. சம்பத் விபாக யோகம்.
இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
17. சிரித்தாத்ரய விபாக யோகம்.
சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
18.மோட்ச சன்யாச யோகம்.
யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று
இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.
சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால்,
நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே
பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
——————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply