https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0452.html
கமழினிய வாங்கிலநற் கலைக ளென்னுங்
கடாம்பொழிந்திட் டஞ்ஞான மரத்தைச்சாடி
யமைதிகொளு மில்லர்தம தரிய வுள்ள
மாங்கனி*று கிரிசரமா யமர்ந்த தேனு
மமிழ்துநிகர் பாஷைகளி னலகில் பாண்பை
யகங்கொணர்ந்து நறும்பொருள்க ளார்ந்து செல்லுந்
தமிழ்மொழியின் வரலாற்றங் கரையின் மாட்டுத்
தனிமகிழ்ந்து விளையாடி யுலவு மன்றே.
பல்லாயிரவாண்டுகட்கு முன்னர் இந்தியா காடடர்ந்து விரிந்ததோர் நிலமாயிருந்தது.
அக்காடுகளில் தீயவிலங்குகள் திரிந்து கொண்டிருந்தன.
ஆசிரியர் நச்சினார்க்கினியரும் அகத்தியனார் தெற்கே வந்தகாலத்துக் காடுகெடுத்து நாடாக்கிப்
பொதியின்க ணிருந்தனரெனத் ‘தொல்காப்பியச் சிறப்புப்பாயிரவுரை’யிற் கூறாநின்றனர்.
தமிழ்ப்பாஷையின் வழிமொழிகளாகித் தனித் தனி இயங்கப் புகுந்தனவற்றுள்
தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் ஆகிய நான்கும் தலை நின்றனவாம்.
இக்கருத்தினையே காலஞ் சென்ற திருவனந்தைச் சுந்தரம் பிள்ளை யவர்கள்
தமது ‘மனோன்மணீய’ நாடக நூலில் தமிழ்தெய்வ வணக்கங்கூறுமிடத்து,
“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருண்முன் னிருந்தபடி யிருப்பதுபோற்
கன்னடமுங் களிதெலுங்குன் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுழகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே”
என்ற இனிய பாஷைகளிற் கூறி வற்புறுத்துதல் காண்க.
தமிழ்நாடென்பது இந்தியா முழுவதும், சுமாத்திரா ஜாவா முதலிய தீவுகளை யுள்ளடக்கிய பெருநிலப் பரப்புமாயிருந்தது.
இதற்குக் ‘குமரிநாடு’ என்பது பெயர்.
முற்காலத்தில் சுவடியை ‘நெடுங்கணக்கு’ என்று கூறுதலும்
எழுத்தறிவிற்கும் ஆசிரியனைக் ‘கணக்காயன்’ என்று கூறுதலுங் காண்க.
“கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற்
பெற்றதாம் பேதையோர் சூத்திர – மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித் தன்
புல்லறிவு காட்டி விடும்.”
என்ற ‘நாலடியா’ரினும் இச்சொல் யாங்கூறிய பொருளில் வழங்குதலுணர்க.
” செந்தமிழ் நாடே,
சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனுஞ்
சௌந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்
சங்கப் புலவருந் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப”
என்ற சூத்திரத்தாற் செந்தமிழ் நாடு இன்னதென்பது அறிக
‘தொல்காப்பிய’ மொன்றுமே முழு முதலிலக்கண நூலாய்க் குறைபாடின்றி யிதுகாறும் இலங்காநின்றது;
இனியும் இலங்கா நிற்கும்.
இவ்வியற்றமி ழிலக்கணநூல் ‘எழுத்து’, ‘சொல்’, ‘பொருள்’ என்ற மூன்றதிகாரங்களாக வகுக்கப்பட்டுளது.
இனி ஐவகை யிலக்கணங்களாவன ‘எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி’ யென்பன
பொருளணியியல் தன்மையணி முதலாக முப்பத்தைந்தணிகள் கூறப்பட்டுள.
இப்பொருளணிகளிற் பல உவமமென்ற ஓரணியினடியாகவே தோன்றின வென்பது பல்லோர் துணிபு.
ஆசிரியர் தொல்காப்பியனாரும் இத்துணிபினர் போலும். இது வடமொழி அப்பைய தீக்ஷிதரவர்களுக்கும் உடன்பாடாதல்,
“உவமை யென்னுந் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய வாங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதய
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே”
என்ற அவரது ‘சித்திரமீமாஞ்சைக்’ கூற்றினான் விளங்கும்.
இனிச் சொல்லணியியலில் மடக்கும் சித்திரமுமாகிய மிறைக்கவிகளின் பாகுபாடுகளும், அவற்றினிலக்கணங்களும் பரக்கக் கூறப்பட்டுள.
வெறுப்புச் சுவையிற் ‘சீ’ யென்றும், வெகுளிச் சுவையிற் ‘போ’ வென்றும், உவகைச் சுவையில் ‘வா’ வென்றும்
கூறப்படுஞ் சொற்களைக் காண்க. ‘ஐ’ யென்பது வியப்பினாலும், ‘ஓ’ வென்பது அவலத்தினாலும்
‘ஐயோ’ வென்பது அச்சத்தினாலும் எழுந்தனவாமா றுணர்க.
இவைகளெல்லாஞ் ‘சுவை வகை’ யானுண்டாகிய சொற்களாம்.
தமிழ்மொழியின் கண்ணே, ‘அடா’ ‘ஏட’ என்ற விரண்டு சொற்களும் பிறரை விளித்தற்கட் பெரிதும் பயன்படுகின்றன.
“ஏட வென்பது தோழன் முன்னிலை” என்று கூறப்பட்டிருத்தலுங் காண்க.
மாம்’ (என்னை) என்பது வடமொழித் தன்மை யொருமை. ‘யாம்’ ‘எம்மை’ யென்பன தமிழ்மொழித் தன்மைப் பன்மை.
தமிழ்மொழியும் வடமொழியுந் தேவபாஷைகளென்றும், இவ்விரண்டும் முறையே
அகத்தியனார்க்கும் பாணிநியார்க்கும் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டனவென்றுங் கூறாநிற்பர்.
“ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய, மாதொருபாகனை வழுத்துதும்” எனவும்,
“தழற்புரை நிழற்குவு டந்தமிழ்” எனவும்,
“வடமொழியைப் பாணிநிக்கு வகுத்தருளியதற் கிணையாத், தொடர்புடைய தென்மொழியைத் தொகுகடல் சூழ்வரைப்பதனிற்,
குடமுனிக்கு வற்புறுத்தார் கொல்லேற்றுப் பாகர்” எனவும்,
” இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்” எனவும் முந்தையோர் கூறியிருத்தலையுங் காண்க.
“பின்பு பொன்னிறைந்ததாயும் அழகுடைத்தாயும் முத்துமணி இவற்றால் அணியப்பட்டதாயும்
நகரத்து அரணோடு இணைக்கப்பட்டதாயுமுள்ள பாண்டியர் வாயிற்கதவை வானரர்காள்! போய்க் காண்பீர்” என
வான்மீகி முனிவர் கூறுகின்றமையானும்
வியாத முனிவரும் ‘மகாபாரதத்’ தின் கண்ணே தமிழ்நாட்டின் சிறப்பையும் பாண்டியர் அரசையும் பற்றிக் கூறுகின்றமையானும்,
பாண்டியர் ஆண்ட நாட்டின் தொன்மையும் அவர் பேசிய தமிழ்மொழியின் தொன்மையும் ஓராற்றாற் றெளியப்படுமாறு காண்க.
அடியார்க்கு நல்லார்
“அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும்
ஆற்றிற்குங் குமரியென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதநாடும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த
ஏழ்தெங்க நாடும் ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலைநாடும் ஏழ் குன்ற நாடும் ஏழ்குண காரை நாடும்,
ஏழ்குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும்,
காடும, நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரிப் பௌவமென்றார்” என்று கூறினார்.
எழுநூற்றுக்காவதம் அகன்றுகிடந்த நாற்பத்தொன்பது தமிழ் நாடுகள் கடல்கொள்ளப்பட்டன வென்பது புலனாம்.
இக்காலத்து அளவின்படி ஒரு காவதமென்பது பத்து மைலாக, எழ்நூறு காவதமும் ஏழாயிரமை லெல்லையனவாம்.
‘இந்துமகா சமுத்திரம்’ இருநூற்றைம்பது லக்ஷம் சதுரமைலுள்ளது.
இதனால் அது சிறிது குறையப் பதினாறுலக்ஷம் மைல் நீளமும் பதினாறு லக்ஷம் மைல் அகலமுடைய தென்பது பெறப்படும்.
பெறவே இப்பதினாறு லக்ஷம் மைல் நீளத்தில் ஏழாயிரம் மைலளவு நிலனாயிருந்து கடல் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும்.
இனி, ‘மோரீசத்தீவு’க்கும் ‘பம்பாய்’ நகரத்துக்கும் இடையிலுள்ள நீர்ப்பரவை இரண்டாயிரத்தைந்நூறு மைல் நீளமுள்ளதாம்.
மோரீசுத்தீவிற்கும் அதற்குத் தெற்கிலுள்ள ‘கெர்கியூலன்’ என்னுந் தீவிற்கும் இடையிலுள்ள நீளமும் அவ்வளவினதேயாம்.
ஆகவே நீளத்தில் இக்காலத்திலுள்ள குமரிமுனை’யிலிருந்து கெர்கியூலன் தீவின் தெற்கு வரையிலும்,
அகலத்தில் மடகாசிகர்தீவு’ முதற் ‘சுமாத்திரா’, ‘ஜாவா’ முதலியவற்றை யுள்ளடக்கிய சந்தாத்தீவுகள்’ அளவும்
விரிந்துகிடந்த குமரிநாடு கடல் கொள்ளப்பட்ட தென்பது போதரும்.
இக்குமரி நாடுதான், கிழக்கே சந்தாத்தீவுகள் வரையினும், மேற்கே மடகாசிகர் தீவு வரையினும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும்
‘இலெமுரியா’ என்ற நிலப்பரப்பாம். இந்நிலப்பரப்பு ஒரு காலத்தெழுந்த பெருவெள்ளத்தில் ஆழ்ந்து போயிற்றென்றும்
அவ்வாறு ஆழந்துபோன பெருநிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற்கிடந்த பெரும்பரப்பாகலான் மக்கள் முதன்முதல்
இந்நிலத்திலிருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து சென்று வேறுபட்டன ரென்றும்,
அங்ஙனம் இதிலிருந்த தொல்லோர் வழாங்கியது தமிழ்ப் பாஷையா மென்றும்,
பலகாரணங்கள் காட்டி விளக்கி நிறுவினார் மேற்புல் விஞ்ஞானிகள்ளொருவர்.
இது கேட்பதற்கு இனிதாகவும் விஞோதமாகவு மிருக்கின்றது.
அதனானே யாம் மேலெடுத்துக் காட்டிய தமிழ்நூற் பகுதிகளிற்கண்ட விஷயங்களெல்லாம் வலியுறுமாறு காண்க.
I). ஆதிகாலம்: கி.பி. 100–க்கு முற்பட்டகாலம்
(II). இடைக்காலம் (1) முற்பகுதி: கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ள காலம்.;
(2) பிற்பகுதி; கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ள காலம்.
(III). பிற்காலம்: கி.பி. 1400 முதல் இற்றை நாள் வரையிலுள்ள காலம்.
இவ்வாதி காலத்து நூல்களுட் கடல்கொண்டழிந்தனவும் இன்னுங் கண்டுபிடிக்கப் படாதனவும் போக,
இப்போழ்தத்துக் கிடைப்பன தலைச் சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘அகத்தியம்’ என்ற நூலின்கட் சில சூத்திரங்களும்,
இடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கணநூலும்
கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘எட்டுத் தொகை’ என்ற நூற்றொகையுளடங்கிய எட்டு நூல்களும்
‘பத்துப்பாட்டும்’ ‘பதினெண் கீழ்க்கணக்கு’மாம். எட்டுத்தொகை நூல்களைப் பின்வரும் பாட்டாலுணர்க:
“நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் சொல்லுங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த வெட்டுத்தொகை”
இதன்மேற் கி.பி. பதினோராம் நூற்றாண்டிலிருந்த குலோத்துங்கச்சோழன வைக்களத்தை யலங்கரிதத்தார்
கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் முதலாயினார்.
முன் சங்கத்தார் காலத்திலே ஓர் ஔவையார் இருந்தன ரென்பதன்றி இக்குலோத்துங்கன் காலத்தும் ஓர் ஔவையார் இருந்தனரென்ப.
இருவர் ஔவையாரெனக் கொள்ளலே யேற்புடைத்தாம்.
கம்பர் வடமொழியினின்றும் இராமகதையைக் கற்றுணர்ந்து தமது சுதந்திர யூகமுங் கற்பனா சக்தியுங்காட்டி
விசேஷக்கருத்து நலம் வாய்ப்ப, பத்தழகும் பாங்குடனமைய ஒன்பான் சுவையு மொருங்கே யொழுகப்
பதினாயிரஞ் செய்யுட்களில் ‘இராமாயணம்’ செய்துமுடித்தனர்.
அஃது அவர் பெயரொடுங் கூட்டிக் ‘கம்ப ராமாயணம்’ என்று இன்றும் வழங்குகின்றது.
அஃது என்றும் வழங்கும் என்பதில் ஐயுறவில்லை.
கம்பர் இராமாயணத்தைத் தவிர்த்துச் சில சிறு நூல்களுஞ் செய்துளர்.
அவை இராமாயணம்போல அத்துணை மதிக்கப்படுவன வல்ல.
ஒட்டக்கூத்தர் இராமாயணத்தின் பிற்பகுதியாகிய ‘உத்தரகாண்ட’த்தை இரண்டாயிரஞ் செய்யுட்களில் யாத்து முடித்துக்
கம்ப ராமாயணத்தைப் பூர்த்தி செய்தனர்.
இனிச் சரித்திர சம்பந்தமாகவும் புராண சம்பந்தமாகவும் தமிழ் மொழியின் சம்பந்தமாகவும் மிகப் பேர்படைத் தொளிரும்
மதுரைமா நகரின் கண்ணே புதிதாகத் ‘தமிழ்ச் சங்கம்’ ஒன்று தாபிக்கப்பட்டு நடந்து வருகின்றது.
அதற்கு அங்கமாகப் ‘பாண்டியன் புத்தகசாலை’யும் ‘சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை’யும் ஏற்படுத்தப் பட்டுன.
முன்னதன்கட்பல அருமையான ஏட்டுப் பிரதிகள் சேமித்து யாவருஞ் சென்றுபார்க்கும்படி வைக்கப்பட்டுன;
அச்சான நூல்களுள்ளும் அநேக மிருக்கின்றன.
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply