ஐம்படைத் தாலி

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் சிறுபிறை முளைபோல*
நக்கசெந்துவர் வாய்த்திண்ணைமீதே நளிர் வெண்பல் முளையிலக*
அக்குவடமுடுத்து ஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்*
தக்கமா மணிவண்ணன் வாசுதேவன் தளர்நடைநடவானோ.–ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 1 – 7 – 2

செக்கர் வானத்து இடையிலே சாகாரத்திலே தோன்றும்படி உன்நேயமான பால சந்தார்ங்குரம் போலே –
ஸ்மிதம் செய்கையாலே -மிக சிவந்து இருந்துள்ள திரு அதரமாகிற உயர்ந்த நிலத்தின் மேலே
குளிர்ந்து வெளுத்து இருக்கிற திரு முத்தின் அங்குரத்தினுடைய தேஜசானது பிரகாசிக்க –
அக்கு வடம் உடுத்து -சங்கு மணி வடத்தை திருவரையிலே தரித்து
ஆமைத்தாலி பூண்ட -கூர்ம ஆகாரமான ஆபரணத்தை திருக் கழுத்திலே சாத்திக் கொண்டவனாய்
ஆமைத்தாலி –
திருக் கழுத்திலே ஜாதி உசிதமாகச் சாத்தின ஆபரணம்
அனந்த சயனன் -அவதாரத்தின் உடைய மூலத்தை நினைத்து சொல்கிறது –
நாக பர்யங்க முத்சர்ஜ்ப ஹ்யாகத -என்னக் கடவது இறே
தகுதியான நீல ரத்னம் போன்ற திரு நிறத்தை உடையவன் -ஸ்ரீ வாசு தேவர் திருமகன் –
தளர் நடை நடவானோ –

“கீசுகீசென்னும்” (7) என வரும் ஸ்ரீ திருப்பாவைப் பாசுரத்தில்,
‘காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து’ அங்கே காசு, பிறப்பு என்ற இரண்டும் ஒரு சேர வருகின்றன.
காசு என்பதற்கு அச்சுத் தாலி என்றும்,
பிறப்பு என்பதற்கு காசும் பிறப்பும் கல கலப்ப கை பேர்த்து –
திருமந்த்ரமும்-த்வய சரம ஸ்லோகங்களும்-ஒன்றோடு ஓன்று சேர்ந்து த்வனிக்க
ஸ்வரூப
உபாய
புருஷார்த்த
ஞானம் தலையெடுத்து தாலி என்றும் பொருள் எழுதியிருக்கிறார்கள்.
காசும் பிறப்பும் –
அச்சு தாலியும்-முளைத் தாலியும்

காசும் பிறப்பும் கல கலப்ப கை பேர்த்து –
திருமந்த்ரமும்-த்வய சரம ஸ்லோகங்களும்-ஒன்றோடு ஓன்று சேர்ந்து த்வனிக்க
ஸ்வரூப
உபாய
புருஷார்த்த
ஞானம் தலையெடுத்து

தாலி என்பது கழுத்தில் தொங்கவிடும் அணிகலன்.
கழுத்தில் தொங்க அணிவதனால் திருமங்கலி யத்துக்குத் தாலி என்ற பெயர் வந்தது.
தாலிகள் அந்த அந்த வகுப்புக்கு ஏற்றபடி வெவ்வேறு உருவம் உடையனவாக இருக்கும்.
தமிழ் நாட்டில் பெரும்பாலும் இரண்டு வகைத் தாலிகள் வழக்கில் இருக்கின்றன.
ஒன்று புலிப்பல்லைப் போலவும் சீப்புப் போலவும் ஒரு பக்கம் பற்களை உடையதாய்த் தட்டையாய்ச்
சில அடையாளங்களைப் பொறித்ததாய் இருக்கும். அதுதான் அச்சுத் தாலி.
வேறு ஒரு வகைத் தாலி கரண்டி முட்டையைக் கவிழ்த்தாற் போல அரைக்குமிழாக இருக்கும்;
ஆமையின் முதுகு ஒடு போலப் புடைத்திருக்கும்; அதைப் பொட்டு என்றும் சொல்வார்கள். அது ஆமைத் தாலி.
.
ஆகையால், இருவகைத் தாலிகளாகிய இனப் பொருளைக் குறிக்கும் சொற்களாகிய காசு, பிறப்பு என்னும் இரண்டையும்
வெண்பா ஈற்றடியில் வரும் மாச்சீர்களுக்கு வாய்பாடாக வைத்தார்கள். . . –
அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறது.
அவை வாழ்கையின் ஒன்பது தாற்பரியங்களைக் குறிக்கிறது.
அவை-

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு
ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.

இவற்றைக் கட்டிய ஆணும், கட்ட்ப்பெற்ற பெண்ணும் வாழ்வில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில்
மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது.
ஐம்படைத் தாலி, மாமைத் தாலி -ஆமைத் தாலி, புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.

——————-

ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும்.
சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது.
புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால நூல்களிலும், சங்க மருவியகால நூலான மணிமேகலையிலும்,
பெரியபுராணம், கலிங்கத்துப் பரணி, கம்பராமாயணம், திருவிளையாடற் புராணம் போன்ற பிற்கால நூல்களிலும்
ஐம்படைத் தாலி தொடர்பான குறிப்புக்கள் உள்ளன.
பிற்காலத்தில் இது பஞ்சாயுதம் என்றும் அழைக்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை தமிழ் நாட்டில் இத்தகைய அணி சிறுவர்களுக்குக் காவலாக அணிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது

———

ஐம்படை என்பது ஐந்து படைகள். இது ஐந்து ஆயுதங்கள் எனப் பொருள் படும்.
காத்தற் கடவுளாகிய திருமாலின் கையில் உள்ள சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும்
ஐந்து ஆயுதங்களை இச்சொல் குறிக்கும்.
தாலாட்டும் பருவத்தில் குழந்தைக்கு அணிவிப்பது தாலி.
முதலாம் குலோத்துங்கன் பிள்ளைப் பருவத்தில் இதனை அணிந்திருந்தான் என்று கலிங்கத்துப் பரணி குறிப்பிடுகிறது.

தாலி என்பதன் சொற்பிறப்புப் பற்றிய விளக்கம் எதுவும் ஐயத்துக்கு இடமின்றித் தெரிய வரவில்லை.
தாலி என்னும் சொல் பலவகையான அணிகளைக் குறிக்கப் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பயன்பட்டுள்ளது.
ஐம்படைத் தாலி தவிர, புலிப்பல் தாலி, புலிநகத் தாலி, ஆமைத் தாலி போன்ற அணிகள் இவ்விலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.
பொதுவாக இவை அனைத்தும் கழுத்தில் அணியப்படும் அணிகள்.
தற்காலத்தில் திருமணத்தில் மணமகன் மணப்பெண்ணுக்கு அணிவிக்கும் தாலியும் கழுத்தில் அணியப்படுவதே.
தவிர இவை எல்லாமே அழகுக்காகவன்றி ஒருவகையில் காவலுக்காகவே அணியப்பட்டவை.
“தாலம்” என்ற சொல் புல்வகையைச் சார்ந்த பனை போன்ற தாவரங்களைக் குறிப்பது.
ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே
தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.
நோய்வராமல் தடுப்பதற்காக மந்திர ஓலைச் சுருளைக் கை, கால், கழுத்து போன்ற உறுப்புக்களில் அணிந்து கொள்வது
பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.
எனவே “தாலம்” என்ற சொல்லிலிருந்து காப்பணிகளைக் குறிக்கும் “தாலி” என்ற பொதுச் சொல்
தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

————–

பஞ்சாயுதம் பொறிக்கப்பட்ட புலிநகத்தாலி -இன்று அணிகலன்கள் பெரும்பாலும் அழகுக்காகவே அணியப்படுகின்றன.
இதனால், பல்வேறு வகையான பொருட்களைப் பயன்படுத்திக் கலை அம்சங்களுடன் இன்றைய அணிகலன்கள் செய்யப்படுகின்றன.
ஆனால், பேய், பிசாசு, இயற்கைச் சக்திகள் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ளும்
நோக்கத்துக்காகவே அணிகலன்கள் தோற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற கருத்து உண்டு.
நாகரிக வளர்ச்சியினால், அணிகலன்கள் அழகுப் பொருள்களாகவும் பயன்படத் தொடங்கின.
எனினும், காப்புக்காக அணிகலன்களை அணியும் வழக்கமும் தொடர்ந்து இருந்தே வந்துள்ளது.
இன்றும் பல பண்பாடுகளில் வழக்கில் உள்ளது.
ஐம்படைத் தாலி என்பதும் காவலுக்காக அணியப்பட்ட அணிகலன்களில் ஒன்றாகும்.
தமிழ் இலக்கியங்களில், காப்புக்காக அணியப்படும் தாலிகள் தொடர்பான குறிப்புக்கள்
புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால நூல்களிலேயே காணப்பட்டாலும்,
ஐம்படைத் தாலி என்னும் பெயர் மணிமேகலையிலேயே முதன் முதலில் வருகின்றது.

ஐம்படைத் தாலி என்பது காவலாக ஆண் குழந்தைகளின் கழுத்தில் அணியும் ஒருவகை அணி என்றும்,
திருமாலின் கையில் உள்ள ஆயுதங்களின் வடிவில் அமைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
காவலாக அணியப்படும் அணி என்பதும், ஆண் குழந்தைகள் அணிவது என்பதும்
பழந் தமிழ் இலக்கியங்களிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.
ஆனால், திருமாலின் ஆயுதங்களுடனான தொடர்பு குறித்து எவ்வித சான்றுகளும் பழைய தமிழ் இலக்கியங்களில் இல்லை.
ஆண் குழந்தைகள் அணியும் காப்பணியைக் குறிப்பிடும்போது சங்க நூல்களாகிய அகநானூறும், புறநானூறும்
வெறுமனே “தாலி” என்றே குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கது.

ஐம்படைத் தாலி என்னும் பெயர் இலக்கியங்களில் வருவதற்கு முன்பே ஆயுதங்களின் போல்
மங்களை சேர்த்துச் செய்யப்பட்ட அணிகள் பற்றிய குறிப்புக்கள் கலித்தொகை என்னும் நூலில் வருகின்றன.
“படை” என்ற சொல்லையோ, “தாலி” என்ற சொல்லையோ பயன்படுத்தாமல் “அணி” என்ற சொல்லாலேயே
இவற்றை இப்பாடல்கள் குறிக்கின்றன.
கலித்தொகை குறிக்கும் மேற்படி அணிகள் தொடர்பான இன்னொரு வேறுபாடு
இங்கே காணப்படும் ஆயுதங்கள் வாள், மழு என்னும் இரண்டு ஆயுதங்கள் மட்டுமே.
அத்துடன், இவற்றோடு காளைச் சின்னமும் சேர்ந்திருப்பது இவ்வணி சைவச் சார்பு கொண்டதாக
இருக்கலாம் என்னும் கருத்துக்கும் வித்திடுகின்றன.

காப்பணியாகக் குழந்தைகள் அணியும் அணியாகக் புலிப்பல் தாலி பற்றிய குறிப்புக்கள்
அகநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் போன்ற முற்பட்ட நூல்களில் காணப்படுவது,
புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது என்ற கருத்துக் கொள்வதற்கு இடமளிக்கிறது.
இதனால், புலிப்பல் தாலி அணியும் வழக்கத்தின் பிற்கால வளர்ச்சி நிலையிலேயே சமயச் சார்பு கொண்ட
ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் ஏற்பட்டது எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்[6].

ஆண் குழந்தைகளுக்கே பெற்றோர் ஐம்படைத் தாலி அணிவித்தனர் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது.
“கிருகியரத்தினம்” என்னும் வடமொழி நூல் பிறந்த ஐந்தாவது நாளில் குழந்தைகளுக்கு இதை அணிவிக்க வேண்டும்
என்று கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும் இதுகுறித்த தகவல்கள் எதுவும் தமிழ் நூல்களில் இல்லை.

புறநானூற்றுப் பாடல் ஒன்றில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் மிக இளம் வயதிலேயே
போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக, “தாலி களைந்தன்று மிலனே” என்று அவன் தாலியை
இன்னும் களையாத வயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது ஒரு குறித்த வயதில் தாலியைக் கழைந்து விடுவது வழக்கம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் களைந்து விட்டே கால்களில் கழல் அணியும் வழக்கம் இருந்தது என உணர முடியும்.
இதனால், ஆண்களின் வளர்ச்சி நிலைகளைக் குறியீடாகக் காட்டுவதற்கு அணிகள் பயன்பட்டதையும்,
ஐம்படைத் தாலியும் அவ்வாறான ஒரு வளர்ச்சி நிலையின் குறியீடாக விளங்கியமையும் அறிய முடிகின்றது.

தற்காலத்தில் ஐம்படைத் தாலி
பொன் சங்கிலியில் கோத்து அணியப்படும் யாழ்ப்பாணத்துப் பஞ்சாயுதப் பதக்கம் ஒன்று.
கதாயுதத்திற்குப் பதிலாகச் சூலம் இருப்பதைக் கவனிக்கவும்.
தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது.
ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது.
யாழ்ப்பாணத்து நகைக் கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப் பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட
பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும்.
இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு.
சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந் தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக,
சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.
இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது.
பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர்.
குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் துடக்குக் கழிவுச் சடங்கின்போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது. .

கம்பராமாயணம் / பால காண்டம் / நாட்டுப் படலத்தில் [58] கூட :
“தாலி ஐம்படை தழுவு மார்பிடை மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப் பாலின் ஊட்டுவார் செங்கை … ”
என்று கூறுகிறது. அதாவது
ஐம்படைத் தாலி அணி செய்யும் மார்பிலே சொள்ளு நீர் வழியும் [saliva – உமிழ்நீர்; எச்சில்]
தம் குழந்தைகளுக்குத் பாலமுதைப் புகட்டும் தாய்மார்களின் அழகிய கைகள் என்று கூறுகிறது.
அது என்ன ஐம்படைத் தாலி? வேல் [அல்லது சங்கு], சக்கரம், தண்டாயுதம், வாள், வில் ஆகிய
ஐந்து கருவிகளின் உருவங்களால் அமைந்த தாலியை பிறந்து ஐந்தாம் நாள் அணிவித்து மகிழ்கிறார்கள்.
அதன் பின் சிறிது வளர, அவர்களின் விளையாட்டு காலங்களில் சேவற்கோழி, ஆட்டுக்கடா, எருது போன்ற வற்றை
ஒன்றோடு ஒன்று மோத விட்டு பார்த்து மகிழ விடுகிறார்கள்.
இப்படி வீரத்தை ஊட்டியவர்கள் இந்த வீர பெண்கள் / தாய்கள். அதாவது வீரத்தையே பாலாக ஊட்டி வளர்த்த பண்பினை காண்கிறோம்.

குழந்தைக்கு பால் ஊட்டும் தாய்

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங்கை, பங்கயம்
வால்நிலா உறக் குவிவ மானுமே. 58

ஐம்படைத் தாலி – குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் சங்கிலி அல்லது கயிறு.
திருமாலின் ஐந்து படைகளையும் பொன்னால் செய்து, கோத்து, கழுத்தில் அணிவிக்கப்படுவது.
வால் – வெள்ளை. வால்நிலா அல்லது வானிலா என்றால் வெண்ணிலவு. (வானிலா என்பது வால்நிலா என்று பிரியும்.)

திருமாலுடைய சங்கம் (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்சனம்), தண்டம் (கௌமோதகி – கதை), வில் (சார்ங்கம்),
வாள் (நாந்தகம்) ஆகிய ஐந்து ஆயுதங்களையும் பொன்னால் செய்வித்துச் சங்கிலியில் கோத்து அணிவிக்கப்பட்ட
ஐம்படைத் தாலி குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.
அப்படிப்பட்ட குழந்தைகளுக்குப் பால்சோற்றை ஊட்டக் குவிகின்ற இளம் தாய்மார்களின் கைகள்,
வானத்தில் வெண்ணிலா வந்ததும் குவிகின்ற தாமரைப் பூக்களைப் போலக் குவிந்து காணப்படும்.

கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக்
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந்தொடி கழித்த கைச்சாபம் பற்றி,
நெடுந்தேர் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார் கொல்! வாழ்க அவன் கண்ணி! தார் பூண்டு
தாலி களைந் தன்றும் இலனே! பால் விட்டு
அயினியும் இன்று அயின்றனனே! வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே! அவரை
அழுங்கப் பற்றி அகல்விசும்பு ஆர்ப்பு எழக்
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை,
மகிழ்ந்தன்றும் இகழ்ந்தன்றும் அதனினும் இலனே!– இடைக்குன்றூர் கிழார் (77/புறம்400)

சிறுவர்கள் காலில் அணியும் கிண்கிணி சலங்கையை களைந்து வீரக்கழல் அணிந்து,
சிறுவர்கள் போடும் முடிக் குடுமி களைந்து பசுமையான வேப்பந்தளிரை தலையில் சூடி,
கையில் ஏந்தி, மிகப் பெரிய தேரில் பொலிவாக நிற்கும் இவன் யார்?!
அவன் வாழ்க! அவன் புகழ் வாழ்க!
பகைவரை அழிக்கும் நோக்குடன் மாலை சூடி, இளம் பருவத்தினர் அணியும் ஐம்படைத் தாலியை இன்னும் களையாதவனே.
பால் அருந்துவதை விட்டு, இன்று தான் சோறு(உணவு) உண்டவனே. போர் செய்ய வந்த வீரர்களைக் கண்டு, நீ வியப்படையவும் இல்லை,
அவர்களை இழிவாக எண்ணவும் இல்லை. ஆராவாரம் செய்து வந்த அவர்கள் வானுலகம் செல்ல,
நிலத்தில் புதையுமாறு அழித்ததை எண்ணி, நீ மகிழவும் இல்லை, தோற்றதனால் அவர்களை இகழவும் இல்லை.

—————

பண்டைக் காலத்தில் கழுத்தி லணியப்படும் அணிகளெல்லாம் தாலியெனப்பட்டமை,
அச்சுத்தாலி முளைத்தாலி புலிப்பற்றாலி ஐம்படைத்தாலி முதலிய பெயர்களால் அறியப்படும்.
அச்சுத்தாலி என்பது காசுமாலை.
முளைத்தாலி யென்பது சிறுமியர் கழுத்திலணியப் பெறும் சிறுமணிமாலை.
புலிப்பற்றாலி யென்பது குறிஞ்சிநிலச் சிறார் கழுத்திலும் பெண்டிர் கழுத்திலும் அணியப்பெறும் புலிப்பல் மாலை.
ஐம்படைத்தாலி என்பது திருமாலின் ஐம்படையாகிய சங்கு சக்கர வில் வாள் தண்டவடிவிற் செய்யப்பட்டு,
சிறுவர் கழுத்தில் பாதுகாப்பாக அணியப்பெறுவது.
ஐம்படைத்தாலி, 77ஆம் புறப்பாட்டில் தாலியென்றே சொல்லப்பட்டது.

இனி, குதிரையின் கழுத்தில் அணியப்பெற்ற தாலியென்னும் அணியும் உண்டு.

“வலியுடை யுரத்தின் வான்பொற் றாலி” (18:13) என்று பெருங்கதை கூறுதல் காண்க.
சில வெள்ளாட்டின் கழுத்தில் தொங்கும் சதையும், ஒப்புமைபற்றித் தாலியெனப்படும்.

“கயிற்கடை யொழுகிய காமர் தூமணி செயத்தகு கோவை” (6 : 01 – 2)
என்னும் சிலப்பதிகாரத் தொடரில்,
கோவை என்பதற்குப் ‘பின்றாலி’ யென்று அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் உரைத்தி ருப்பதால்,
அக்காலத்து முன்றாலி பின்றாலியென இருவகையணியி ருந்தமையும் பெறப்படும்.
முன்றாலி மார்பில் தொங்குவது; பின்றாலி முதுகில் தொங்குவது.
இவற்றால், தாலி என ஒரு தனியணி முற்காலத்தி ருந்தமையும்,
பின்பு எழுந்த அதன் வேறுபாடுகள் அவற்றிற்கேற்ப வெவ்வேறு அடையடுத்துக் கூறப்பட்டமையும், பெறப்படும்.

தாலி என ஒரு குறிப்பிட்ட மங்கல அணி பிற்காலத்துத் தோன்றிய பின், அது ஒவ்வொரு குலத்திற்கும்
ஒன்றாக வெவ்வேறு வடிவிலும் அளவிலும் செய்யப்பட்டு அததற்கேற்பப் பெயரும் பெற்றது.
ஆமைத் தாலி, பொட்டுத்தாலி, சிறுதாலி, பெருந்தாலி என்பன சில பெயர்கள்.

தாலிபோன்றே தாலிக்கொடியும் மங்கலமாகக் கருதப்பட்டு, மங்கலநாண் எனப்பெற்றது.
அது முதற்கண் மஞ்சள் தோய்த்த நூற் கயிறாயிருந்ததினால், சில குலத்தார் இன்னும் அதன் பழநிலையை மரபாகப் போற்றிக் காப்பர்.
சில குலத்தார் அதைப் பொற்கொடியாகச் செய்துகொள்வர். இனி, மங்கலநாணையே தாலியாகக் கொண்டாரும் உண்டு.

தாலியையும், தனியாக அணிவதும் வேறு சில உருக்களுடன் சேர்த்து அணிவதுமாக, இருவேறு மரபுகள் எழுந்துள்ளன.
கொங்குநாட்டு வேளாளப் பெண்டிர் கனத்த தாலியை அணிவதால்,
சிறப்பு நாள்களில் அதை அணிவதும் பிற நாள்களிற் கழற்றி வைத்திருப்பதும் அவர் வழக்கம்.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading