ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-4–சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்—சாரங்கள்—

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஹரவ் பூர்வாம் உபதிஷ்ட உஜ்ஜீவனாயா
ஜெகதாம் பலயுதாம் அநு கம்பையா
பக்திம் நிஜகாதா ஸூ பலாமகஸ்ய
சுவார்த்தாத் பரார்த்த ஆஸக்தி –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்ரீ மத் தாமோதரத்வாத் அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா
சக்ராதீஸ்யாத் வாத வட தள சயநாத் நாக ராஜா சயநாத்
வக்ஷஸ் பரிஷத் முகத்வா பரம புருஷதாய மாதவத்வாத் யோகாதி
துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –

1–ஸ்ரீ மத் தாமோதரத்வாத்–சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-

2–அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா–பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற் கருமையனே-

3–சக்ராதீஸ்யாத் வாத–ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம் மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்

4–வட தள சயநாத்–தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க

5–நாக ராஜா சயநாத்–மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே

6–வக்ஷஸ் பரிஷத் முகத்வா–நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை

7–பரம புருஷதாய -பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்-

8/9-மாதவத்வாத் யோகாதி–ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்–என்றும்
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–என்றும்

10-துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற

——–

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

———

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-

———-

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

———-

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

————

நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-

———-

நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே-10-4-6-

———-

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-

———–

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

————

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

———-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-

———

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -94-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
அடியில் உபதேசித்த பக்தி-ஸ்வசாத்தியமான பலத்தோடே தலைக் கட்டினபடியை அருளிச் செய்த
திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ்-ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாக-
ஸ்ரீ தாள தாமரையிலே பற்றி போக்கிலே ஒருப்பட்டவர் ஆகையாலே-
ஸ்ரீ உயர்வற உயர் நலத்தில்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாக அறுதி இட்ட ஸ்ரீ பரத்வமே பரம பிராப்யமாகையாகவே
அந்த பிராப்ய வேஷத்தையும்-
பிராப்ய பலமான கைங்கர்யத்தையும்- ஸ்ரீ கெடும் இடரிலே அனுசந்தித்து-
அந்த பிராப்ய வேஷத்தை பெறுகைக்கு உபாயமாக-
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும்—ஸ்ரீ பத்துடை அடியவரிலும் தொடங்கின-பக்தியானது ஸ்வ சாத்தியத்தோடே பொருந்தின படியை சொல்லி
தமக்கு உபாயமாக
முதல் ஸ்ரீ திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியையும்-சொல்லித் தலைக் கட்டுகிற
ஸ்ரீ சார்வே தவ நெறியில் அர்த்தத்தை–சார்வாகவே அடியில் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை –

————————————————-

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-

—————————————————–

வியாக்யானம்–

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான் –
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும் ஸ்ரீ பத்துடை அடியவரிலும் பரோபதேச ரூபேண எல்லாருக்கும் அபாஸ்ரயமாக அருளிச் செய்த
பிரபத்தி யோடு விகல்பிக்கலாம் படியான பக்தி யானது தான்
சரண்ய -என்றத்தை- சர்வ லோக சரண்யாய -என்றும்-
பாதயோஸ் சரணான் வேஷீ நிபபாத -என்றும்
சாஷாத் பலத்தோடே தலைக் கட்டினால் போலே –

இவரும் –
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்மினே -என்றும்
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்றும்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்றும்
அம்பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்றும்
நன்றென நலம் செய்வது -என்றும்
இப்படி அருளிச் செய்த பக்தி மார்க்கம் ஆனது-சாத்தியமான பலத்தோடே பொருந்தின படியையும்

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும்
அருளினான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் -என்றும்
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்றும்
அடியே தொடங்கி அருளிச் செய்து போருகிற-பிரபத்தி-ஸ்வ சாத்தியத்தோடு-பொருந்தினப டியையும் –

பண்டே பரமன் பனித்த பணி வகையே-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாய வெல்லாம் -என்றும்-அருளிச் செய்து
மற்றும்
பக்தி-பிரபக்திக்கு-உக்தமான வற்றையும்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன் -என்றும்
திரு மெய் யுறைகின்ற செங்கண் மால் -என்றும்
மடப்பின்னை தன கேள்வன் தாள் கண்டு கொண்டு -என்றும்
தலை மேல் புனைந்தேனே -என்றும்
நச்சப்படும் நமக்கு -என்றும்
வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -என்றும்-அருளிச் செய்தார் இறே-

ஏவம் விதமான வர்த்தங்களை –
சோராமல் கண்டுரைத்த மாறன் –
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

கழல் இணையே நாடோறும் –
இப்படி-சூஷ்ம அர்த்த தர்சியான ஸ்ரீ ஆழ்வார்-சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே –

கண்டு உகக்கும் –
சேவித்து-ஹ்ருஷ்டமாம் –

என்னுடைய கண் –
மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –

ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading