ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–10-3–வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ—சாரங்கள்—

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸூ உபேஷகம் ஸ தேனை விஸ்ரம்பித
கோபீ வ்யூக்தம் அபி கோ சபலம் அசிரமேவ
வ்யூக்த தாஸ்யம் ஹரிம் அபி நிஜேஷ்டம்
உபேக்ஷகம் தம் விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-

கோ சபலம் -த்வத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
அசிரமேவ சடக்கென
வ்யூக்த தாஸ்யம் -விடுபட்ட -நித்ய ஸூரிகளை விட்டு
ஹரிம் அபி நிஜேஷ்டம் -தனக்கு இஷ்டம்
உபேக்ஷகம் -தம் -விரும்பாமல்
விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-அடங்கா காதலால் –

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

அம்போஜ அஷதய கீர்த்யா யது குல ஜதயா ஆத்மன ஸ்யாமளத்தவாத
கோவிந்தத்வாத் பிரிய உத்யத் வசன தயா சக்ர தாராயுதத்வாத்
ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத் அதி சுபாக தயா கோப நிர்வாகத்வாத்
அஸ்தான ஸ்நேகா சங்காத பத காரிஜன் உதித ஸ்ரீ பதி

1–அம்போஜ அஷதய கீர்த்யா–தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–

2–யது குல ஜதயா–வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–

3–ஆத்மன ஸ்யாமளத்தவாத–யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்

4–கோவிந்தத்வாத்–கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி

5–பிரிய உத்யத் வசன தயா–பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா

6–சக்ர தாராயுதத்வாத்–அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்

7–ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத்–ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே

8–அதி சுபாக தயா–உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–

9–கோப நிர்வாகத்வாத்–எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்

10-அஸ்தான ஸ்நேகா சங்காத பத–அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ

காரிஜன்-உதித ஸ்ரீ பதி–திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-

——–

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

——–

தகவிலை தகவிலை யே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-

———-

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-

——–

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-

————–

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-

———-

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-

———

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-

———–

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-

————

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-

———-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-

——-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -93-பாசுரம்–

அவதாரிகை –

இதில் – யதா மநோ ரதம் பெறாமல் சம்சாரத்திலேயே ஸ்ரீ சர்வேஸ்வரன் வைக்க எண்ணினான் என்று சங்கிக்க
அவன் தெளிவித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தம் மநோ ரத அனுகுணமாக அப்போதே அத்தேசத்திலே புக்கு அடிமை செய்யப் பெறாமையாலே-கலங்கி
பழைய படி நமக்கு சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ -என்று
பிரகிருதி சம்பந்த்தத்தின் கொடுமை ஸ்ரீ ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம்
முதலான ஹேதுக்களால் தமக்கு பிறந்த அதிசங்கையை ஒரு படுக்கையிலே கூட இருக்கச் செய்தே
பண்டு பசு மயக்கப் போகிற ப்ரபாத காலம் வந்து
அக் காலத்துக்கு அடைத்த குயில் மயில் முதலானவற்றின் பாடல் ஆடல் முதலான
அடையாளங்களையும் காண்கையாலே
அவற்றையே கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் பசு மேய்க்கப் போனான் -என்று அதி சங்கை பண்ணி
நோவு படுகிற இடைப் பெண்கள் பேச்சாலே அருளிச் செய்கிற-வேய் மரு தோளிணை யில் அர்த்தத்தை
வேய் மரு தோள் இந்த்ரிரை கோன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————-

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

———————————————-

வியாக்யானம்–

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை –
வேய் போலும் எழில் தோளி பொருட்டா -பெருமாள் திருமொழி –என்னும்படி
அணைக்கைக்கு பணை போல் இருக்கிற தோளை யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்று ஸ்ரீ அனந்த சாயியாய்-
திரு மாற்கு அரவு -என்கிறபடி இருவருமாய்ச் சேர்த்தியாய் இருக்கிற தேசத்தை –
மாதவா என்ன -என்றார் இறே-

தான் மருவாத் தன்மையினால் –
நாமும் போய் நணுக வேணும் -என்னும் அபி நிவேசத்தை யுடைய தாம்
போய் புகப் பெறாத படியாலே –

தன்னை யின்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்று
தம்மை ஸ்வா தந்த்ர்யாதிகளாலே சம்சாரத்திலே இட்டு வைக்குமோ என்று சங்கித்துப் போர –

அதாவது –
இவர் உடைய ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு சௌஹார்த்த யுக்தன் ஆனவனும்
என் கை கழியேல் -என்னும்படி -பொருந்தி
பிரத்யஷ சாமானாகாரம் போலே இவர் கையிலே இருக்க-அத்தசையிலே
ஸ்வ ரஷணத்திலே கை வாங்கி இருக்குமவர்கள்-விஷயத்திலே ரஷணத்திலே அவன் மண்டி
அங்கே விச்லேஷிக்கும் காலத்தையும்
அவன் கை கழிந்தால்-சப்தாதிகள் பாதகமாகிற படியையும்
கால தைர்க்க்யா சஹதையையும்
ஆஸ்ரித ரஷணத்தில் அந்ய பரதையாலே அந்த ராயங்கள் புகும் படியையும்
அவனுக்கு அறிகிற பிரகாரத்தை-
வேய் மரு தோளிணை -என்று தொடங்கி -ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு-ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்றும்
தகவிலை தகவிலை இனி யுன்னை நீ பிரிவை யாமால் வீவ-நின் பசு நிரை மேய்க்கை போக்கு -என்றும்
வீவ நின் பசு நிரை மேய்க்கை போக்கு-சாவது இவ்வாய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த வித் தொழுத்தையோம் தனிமை தானே -என்றும்
நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து-எம்மை விட்டவை மேய்க்கப் போதி -என்றும்
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தின்றாலோ -என்றும்
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு -என்றும்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள்-தலைப்பெய்யில் யவம் கொல் ஆங்கே -என்றும்
அசுரர்கள் தலைப் பெய்யில்அவம் கொல் ஆங்கு என்று ஆழும்-என் ஆர் உயிர் பிரான் பின் போகல் நீ உகக்கும் நல்லவரோடு உழி தராயே -என்றும்
உகக்கும் நல்லவரோடு -என்று தொடங்கி-அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- என்றும்
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- திவத்திலும்-பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும்
இப்படி பஹூ முகமாக சங்கிக்க-

மால் தெளிவிக்கத் தெளிந்த –
அதாவது –
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் ஆனவனும் –என்றும்
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும்படி
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதே -என்றும்
அவனோடு பிரிவதற்கு இரங்கும்படியான இவர்கள் பிரேம ஸ்வ பாவத்தைக் கண்டு
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு -என்னும்படி சவிலாத ஸ்மிதம் பண்ணி
அணி மிகு தாமரைக் கையாலே அஞ்சேல் என்று ஆச்வசிபபித்து
உம்முடைய அபேஷித்ததின் படியே செய்கிறோம் என்று அதி சங்கையைத் தீர்த்தான் ஆயிற்று
அதாவது
பசு நிரை மேய்ப்பு ஒழிகை -அத்தைப் பற்ற -தாமோதரன் -என்றார்–

மால் தெளிவிக்க தெளிந்த –
ஸ்ரீ கிருஷ்ணன் தெளிவிக்கத் தெளிந்த-கலங்கினவனை தேற்றுமவன் இறே

தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –
சங்கா ஹேது இன்றிக்கே-கூட இருக்கச் செய்தே சங்கிக்க சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சமாதானம் பண்ண
சமாஹிதராய்
அத்தாலே தமக்கு சத்ருசரான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அநந்ய கதிகளான எங்களுக்கு அபாஸ்ரயம்-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading