ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
ஸூ ஷேம சுந்தர தனு பஹு பிரகார
அஜுவ் ஹாவோ ஸவ்ரி ஈசம்
பரி லிப்சுக்கு முனி சோசன் தஹன லீட
அதி தப்த ஏஹ்யேஹ் ஹி –
ஸூ ஷேம சுந்தர தனு பஹு பிரகார அஜுவ் ஹாவோ ஸவ்ரி ஈசம் கூப்பிட்டார்
பரி லிப்சுக்கு முனி சோசன் தஹன லீட அதி தப்த காட்டுத் தீ கதுவினால் போலே
ஏஹ்யேஹ் ஹி -ஏஹி ஏஹி வா வா என்று
———
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
ஜீவா அபேஷா -பிரதேஷா தீக்ஷிதன் அனுக்ரகம் எதிர்பார்த்து இருப்பான்
பேற்றுக்கு தரிக்க வேண்டுமே -இதுவே இத் திருவாயமொழிக்கு தாத்பர்யம் –
சுப மகுட தயா ஸ்வாம்யதா அபியைசத்வாத்
ஜீவாமோத ஸ்யாமளத்தவாத ஆஸ்ரித ஸூ லபன்
பத்ம ஸூர்ய அங்கத்வாத் பாண்டு ஸூநோ சாரத்வாத்
அவணி பர க்ருதேகே அந்தராத்மத்வ யோகாதி –
1–ஆச்சர்ய சேஷ்டிதங்கள்–மாயக் கூத்தா வாமனா
2–சுப மகுட தயா–நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே
3–ஸ்வாம்யதா–முடி சேர் சென்னி யம்மா நின் மொய் பூந்தாமத் தண் துழாய் கடி சேர் கண்ணிப் பெருமானே
4–அபியைசத்வாத்–தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா
5–ஜீவாமோத ஸ்யாமளத்தவாத–ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுதுண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே
6–ஆஸ்ரித ஸூ லபன்–தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே
7–பத்ம ஸூ ர்ய அங்கத்வாத்-செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே
8–பாண்டு ஸூ நோ சாரத்வாத்–தக்க வைவர் தமக்காயன்று ஈரைம்பதின்மர் தாள் சாய புக்க நல் தேர்ப் தனிப் பாகா
9–அவணி பர க்ருதேகே–இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே
10-அந்தராத்மத்வ யோகாதி –கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா
——–
மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1-
——-
காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி
முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-
——-
முடி சேர் சென்னி யம்மா
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே
என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவளவாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-
———–
தூ நீர் முகில் போல் தோன்றும்
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலை தன்மேல்
வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே-8-5-4-
———-
சொல்ல மாட்டேன் அடியேன்
உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு
இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5-
——–
கொண்டல்வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-
———–
வந்து தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-
———-
ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே-8-5-8-
———
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே-8-5-9-
———-
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெருமாயா
உன்னை எங்கே காண்கேனே-4-5-10-
———-
எங்கே காண்கேன்
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே-8-5-11-
——–
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -75-பாசுரம்–
அவதாரிகை –
இதில் அவனுடைய வடிவு அழகை அனுபவியாமல் அழுத ஸ்ரீ ஆழ்வார்
ஆர்த்தி அதிசய ஸூசக ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
கீழே ப்ரஸ்துதமான அனுபவம் மானச அனுபவ மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே-மிகவும் நோவு பட்டு
காட்டுத் தீ கதுவினால் போலே-பரிதப்த சித்த காத்ரராய்
அவயவ சோபை-ஆபரண சோபை-ஒப்பனை அழகு இவற்றுக்கு ஆஸ்ரயமான விக்ரஹம்
இவற்றின் உடைய வைலஷண்யத்தை பல படியாக வர்ணித்துக் கொண்டு
பெரும் கூப்பீடாக கூப்பிடுகிற மாயக் கூத்தனில் அர்த்தத்தை
மாயன் வடிவு அழகை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
—————————————————–
மாயன் வடிவு அழகைக் காணாத வல் விடா
யாயது அற விஞ்சி அழுதலுற்றும் தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்–75-
—————————————————
வியாக்யானம்–
மாயன் வடிவு அழகைக்-
சௌந்தர்ய-சீலாதிகளால்-ஆச்சர்யமான அவன்-விக்ரஹ சௌந்தர்யாதிகளை –
கர்மாபிதப்தா பர்ஜந்யம் ஹ்லாதயந்த மிவப்ரஜா -என்னும்படி அனுபவிக்க —
காணாத வல் விடாய்-
கனை கழல் காண்பது என்று கொல் கண்களே -என்றும்
மெய்க் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே -என்றும்
இப்படி பாரிப்பை யுடைய கண்களின் விடாய் தீரப் பருகப் பெறாமையாலே –
பிரத்யஷமாகக் காணப் பெறாமையாலே-மிக்க விடாயை யுடையராய் –
யது அற விஞ்சி –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து பசை அற்று –
கீழில் விடாய் -எல்லாம் குளப்படி -என்னும்படி
கடல் போலே அது அபி விருத்தமாய் –
அத்தாலே
அழுதலுற்றும் –
அழுது
அலற்றும் –
பிறந்த விடாய் தீர வந்து கலவாமையாலே
பாலரைப் போலே அழுது-அடைவு கெடக் கூப்பிடும் –
அதாவது –
வாசத் தடம் போல் வருவானை ஒரு நாள் காண வாராய் -என்றும்
கரு மா மாணிக்க நாள் நல் மலை போலே சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே
இரங்கி ஒரு நாள் நீ அந்தோ காண வாராய் -என்றும்
முடி சேர் சென்னி யம்மா -என்று தொடங்கி பெருமானே என்று என்று ஏங்கி அழுதக்கால்-
படி சேர் மகரக் குழைகளும் -என்று தொடங்கி -தூ நீர் முகில் போல் தோன்றாயே-என்றும்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்–தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே -என்றும்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்றும்
நல் தேர் தனிப் பாகா வாராய் இதுவோ பொருத்தம் -என்றும்
இருஞ்சிறைப் புள்ளதுவே கொடியா உயரத்தானே –உன்னை எங்கே காண்கேனே -என்றும்
இப்படி-கதா த்ரஷ்யாமி ராமஸ்ய வதனம் புஷ்கரேஷணம் -என்னும்படி
அழுது அலற்றி -தூய புகழ் உற்ற –
சௌந்தர்யாதிகளை-அனுபவிக்கப் பெறாமையாலே
அழுது-அலற்றும் புகழை யுடையராய் –
இதர விஷய அலாபத்தாலே கிலேசிக்கை அயசஸ்சாய்-பகவத் அலாபத்தால் கிலேசிக்கை
ஸ்லாக்கியமான யசஸாய் இறே இருப்பது –
தூய புகழ் உற்ற –சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் –
இப்படியான யசஸை யுடையரான ஸ்ரீ ஆழ்வாரை
நாம் அநந்ய பிரயோஜனராய் கிட்டி நின்று அனுபவிக்கும் காலம் பகலாய் இருக்கும் –
வகுள பூஷண பாஸ்கரர் -பராங்குச ஆதித்ய சந்நிதி -இறே
அற்ற பொழுதானது எல்லியாம்-
அவருடைய அனுபவ விச்சேத காலமானது சம்சாரம் ஆகிற காள ராத்ரியாம் –
——————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply