ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி- –3-2–முந்நீர் ஞாலம் படைத்த–சாரங்கள்–

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸங்கோசித ஸ்வ கரணஸ் ஸ ஹரிம் யதேஷ்டம்
புஞ்ஜே ந சாஹமிதி பின்ன மதிஸ் சடாரி –
ஆஸ்வாஸி தஸ்ய ஹரிணா ஸுவ மஹத்த யைவ –
போகேஷ்வ ஸக்திரிதி தத் கதிதம் த்விதீயே –

ஹரிம் யதேஷ்டம் புஞ்ஜே ந சாஹம் –இஷ்டப்படி அனுபவிக்க முடியவில்லையே
பின்ன மதிஸ் சடாரி-கிலேசப்பட்ட ஆழ்வார்
ஆஸ்வாஸி தஸ்ய ஹரிணா ஸுவ மஹத்த யைவ –என் பெருமையால் அனுபவிக்க முடியவில்லை என்பதை காட்டி
ஆஸ்வாசிப்பித்து அருள

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்ரஷ்டா கிராந்தா ச லோகன் ஹ்ருத தரணி பர அநந்ய போக்ய அங்க்ரி யுக்மம்
சிந்தோத் யந் நீல ரூபோ நிரவதிக ரசத ஸ்வ அங்க்ரி ரத் யஷ மூர்த்தி
நித்ய உபாஸ்ய ஸ்வ பாதோ நிகில வஸூமதி கோபந ஸ்வ அங்கரி வ்ருத்தி
முஷ்ணன் மூர்த்தி ப்ரதீத்யா யம பரவசதாம் ப்ரேஷி லோகைக நாத–3-2-

1-2-ஸ்ரஷ்டா கிராந்தா ச லோகன் –முந்நீர் ஞாலம் படைத்த–வன் மா வையம் அளந்த எம் வாமனா—
லோகங்களை எல்லாம் ஸ்ருஷ்டித்தவனுமாய் -அளந்தவனுமாய்

3-ஹ்ருத தரணி பர —-பாரதப் போர் யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்பாரத யுத்தத்திலே
எல்லா சேனையையும் நஸிப்பித்து பூமியினுடைய பாரத்தை ஹரித்தவனுமாய்

4-அநந்ய போக்ய அங்க்ரி யுக்மம்—-தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி
யான் சேரும் வகையருளாய்–அநன்யமான பேர்களுக்கு போக்யமான திருவடிகளை யுடையனுமாய் –

5-சிந்தோத் யந் நீல ரூபோ —-கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த எந்தாய்–தழைத்து இருந்துள்ள
காயாவினுடைய கொழுவிய மலர் போலே இருக்கிற திரு நிறத்தை ஹ்ருதயத்தில் தோற்றும்படி பிரகாசிப்பிக்குமவனாய் —

6-நிரவதிக ரசத ஸ்வ அங்க்ரி —நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே—ஸ்ப்ருஹணீயமான
தன் திருவடிகளைப் பெறுவது -கதா கதா என்னும் நிரவதிக பிரமத்தை யுண்டாக்குமவனாய் –

7-அத் யஷ மூர்த்தி–எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை–எல்லாக் காலத்திலும்
எல்லா வஸ்துக்களிலும் குறைவற வியாபித்து நின்று நிர்வஹிக்குமவனாய் –

8-நித்ய உபாஸ்ய ஸ்வ பாதோ –ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்—ஸர்வ காலமும் ஸேவ்யமான திருவடிகளை யுடையவனுமாய்

9-நிகில வஸூமதி கோபந ஸ்வ அங்கரி வ்ருத்தி –உலகம் எல்லாம் தாவிய வம்மானை–பூமிப்பரப்பு அடங்க திருவடிகளாலே அளந்து ரஷித்து அருளுமவனாய்

10-முஷ்ணன் மூர்த்தி ப்ரதீத்யா யம பரவசதாம் –தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்–இத்யாதி –ஸ்வ ஆதார விஷய
ஞானத்தாலே யம பாரவஸ்யத்தைப் போக்குமவனாய் இருக்கும் எம்பெருமான்

ப்ரேஷி லோகைக நாத–முந்நீர்-தசகத்திலே ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதி வியாபாரங்களை பண்ணினவனாக
ஆழ்வாரால் அறுதியிடப்பட்டான் என்கிறார் –

——

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —

பிரவேசம்
கீழில் திருவாய் மொழியில் இவர் அனுபவித்த விஷயம் அபரிச்சின்னம் ஆகையால் பரிச்சேதித்து அனுபவிக்கப் போகாமையாலே
கரண சங்கோசத்தை சங்கித்து சோகிக்கிற இவரை கரண சங்கோசம் இல்லாத நித்ய ஸூரிகளுக்கும்
இவ்விஷயம் இப்படியே காணும் இருப்பது என்று ஈஸ்வரன் சமாதானம் பண்ண ஸமாஹிதர் ஆகிறார் -முந்நீர் ஞாலத்திலே –

————-

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

பூர்வம் ஜல ஸ்ருஷ்டியைப் பண்ணி பின்பு ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணின -ஸர்வ விஷயமாக உபகரிக்கும்
மேகம் போன்ற ஸ்வ பாவத்தை யுடைய இவனே
கரண களேபர விதுரமாய் -தமோ பூதமாய் தய நீய தசையை ப்ராப்தமாய்க் கிடந்த அந்நாள்
இழவு பேறு உன்னதாய் இருக்கும் நீ திருவடிகளிலே தலை சாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாகப்
பண்ணித் தந்த சரீரத்தின் வழி போய் இத்தை இதர விஷய ப்ராவண்யத்துக்கு உடலாக்கி அநர்த்தத்தை விளைத்துக் கொண்டேன் –
குரூரமான பிறவி நோயானது நசிக்கும் படி என்னுடைய பிராப்தி பிரதிபந்தகங்களை ஸ வாசனமாகப் போக்கி
எக்காலத்திலே -நிறைந்த உபகாரத்தைக் கெடுத்துக் கொண்ட நான் உபகாரகனான உன்னை
கைம்முதலை அழித்துக் கொண்ட பின்பும் வந்து கிட்ட விரகு சொல்ல வேணும்
என்கிறார் -முந்நீர் ஞாலம் படைத்த-இத்யாதியால் –

——-

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–

வன்மையை யுடைத்தான மஹா பிருத்வியை அளந்து கொண்ட என் வாமனனே
குண பேதத்தால் பலவகைப்பட்ட துரதயயமாய் இருக்கிற மூல ப்ரக்ருதியிலே பலவகைப்பட்ட ஜென்மங்களில்
தரை காணாதே அவகாஹிக்கிற நான்
இச் சேதனன் உள்ளவன்றே யுண்டாய் அனுபவித்தாலும் நசியாததாய் –
ஈஸ்வரன் போக்கும் அன்று ஒரு நிலை நின்று போக்க வேண்டும் படி பரபலமாய்
ஒன்றோடு ஓன்று அநு பந்தித்துக் குவாலாய் இருக்கிற பாபத்தை வாசனையோடு போக்கி
பரம ப்ராப்யமாய் நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளைக் கிட்டி நிலை நிற்பது
என் நாளாக வற்றோ -என்கிறார் –வன் மா –இத்யாதியில் –

——–

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

கொலைக்குப் பரிகரம் இன்றிக்கே குதிரையை நடத்துகிற கோலைக் கொண்டு வந்து முடித்துப் பொகட்டு
பாரத ஸமரத்திலே எல்லாச் சேனையும் இரு நிலத்திலே காட்டுத் தீயை அவித்தால் போலே அவித்த என் ஸ்வாமி
அநுகூலம் போலே இருந்து பாதகமாய் இருக்கிற என் சரீரத்தின் யுடைய ஸ்திதி ஹேதுவாய்
ஒன்றோடு ஓன்று புணர்ந்து இருக்கிற பாபங்களானவை ராவணன் தலை போலே முளைக்கையாலே அறுக்கப் போகிறது இல்லை –
இத்தைக் கழித்து நான் உன்னைக் கிட்டுமதொரு விரகு அருளிச் செய்ய வேணும் என்கிறார்-கொல்லா மாக்கோல்—இத்யாதியால் –

————

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-

சேதனரைத் தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளுகையாலே சூழ்ச்சி என்று சொல்லப் படுவதாய்
எங்கும் ஓக்க வியாபித்து இருப்பதாய் விசத தமமாய் இருக்கிற ஞான பிரபையை யுடையையாய்
எல்லாக் காலத்திலும் கர்மம் அடியாக ஆத்மாவுக்கு வரக் கடவதான சங்கோச விகாசங்கள் இன்றிக்கே
எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிற என் ஸ்வாமி –
உன்னை ஒழிந்த மற்றுள்ள இடத்தில் வரக் கடவதான தாழ்ச்சியையும் தவிர்ந்து வகுத்ததாய்
நிரதிசய போக்யமாய் இருக்கிற உன் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்தை இதுக்கு முன்பு அறியாத நான்
கிட்டுவது ஒரு பிரகாரம் அருளிச் செய்ய வேணும் –
அது தானும் வந்து அருளிச் செய்ய வேணும் என்கிறார் –சூழ்ச்சி –இத்யாதியால் –

———–

வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-

வந்து சில நாள் –இருக்க வேண்டிய -அவை போலன்றிக்கே
வந்தாய் போலே வந்து உன்னை ஒழிய தரியாத படியான என் மனஸை அறிந்து தரிப்பிக்கும் நீ
இது த்ரவீ பூதமாய் மங்கிப் போகாதபடி செய்கிறிலை
உன்னை ஒழிய மங்கிப் போகையும் இதுக்கு ஸ்வ பாவமாய்
இது மங்கக் கொடுத்துப் பார்த்து இருக்குமது உனக்கு ஸ்வ பாவமாய் விட்டதாகில் –
தழைத்து இருந்துள்ள காயாவினுடைய கொழுவி மலர் போலே குளிர்ந்து இருந்துள்ள திரு நிறத்தைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவனே
உன்னைக் கிட்டுகைக்கு ஒரு முதல் இல்லாத நான் பிரியில் தரியாத வடிவு படைத்து இருக்கிற உன்னை
என்ன சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே வந்து கிட்டக் கடவேன் என்கிறார் –வந்தாய் போலே –இத்யாதியாலே —

———-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

ஆழ்வீர் பகவத் விஷயத்தில் இச்சையே அதிகாரமாய் பலம் மோஷமாய் இருக்கும் –
அதுக்காக ஒன்றைச் செய்ய வல்லீரே என்றால் -ஓம் அப்படியே செய்கிறேன் என்றிலன்
இதர விஷய ப்ராவண்யம் ஆகிறது ஆயாஸம் கனத்து பேற்றில் ஓன்று இன்றிக்கே இருப்பது ஓன்று –
அத்தைத் தவிர வல்லீரே என்றால் ஓம் தவிருகிறேன் என்றிலன்
காலம் எல்லாம் இதுவே அன்றோ எனக்கு யாத்திரை –
அல்ப சாரங்களாய் பலவாய் இருக்கிற விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து
ஸர்வ சக்தியான தேவரைக் கை கழியப் போனேன்
எண்ணிறந்த பதார்த்தங்களை உண்டாக்கின சர்வாதிகனே -உன்னுடைய நன்றாய் ஸ்ப்ருஹ ணீயமாய்
நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளை நான் என்று வந்து
கிட்டக் கடவேன் என்கிறார்–கிற்பன் கில்லேன்– இத்யாதியாலே –

————-

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-

காலம் எல்லாம் நாம் இருந்து சிழுகி அழுதால் என்ன பிரயோஜனம் உண்டு -நெஞ்சே உன்னை நீ அறியாயோ
மெய்ஞ்ஞானம் இல்லை கண்டாயே -அது இல்லாத அளவேயோ
பாபங்களில் கொண்டு போய் மூட்டக் கடவதான ஜென்மங்களில் அழுந்திப் போரும் படி யாய் அன்றோ நம் நிலை இருக்கிறது –
எல்லாக் காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் ஒன்றும் பிரிகதிர்ப்படாமே குறைவற வியாபித்து நின்ற
மெய்ஞ்ஞான ஜோதியுடைய கிருஷ்ணனை ஸூலபன் என்னா நம்மால் கிட்டப் போமோ என்கிறார் –இத்யாதியாலே —

————

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-

தில தைலவத் தாரு வஹ்னி வத் இவ்வாத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி இருப்பதாய்
துக்கத்தை விளைப்பதாய் இருக்கிற பாபங்களை விஹித கர்ம அனுஷ்டானத்தாலே போக்கிற்று இலன்
அனவரத பாவனை பண்ணி உன்னை ஸாஷாத் கரிக்க விரகு பார்த்திலேன்-
உகவாதார் கோஷ்டியிலும் ப்ரஸித்தமான ஸ்வ பாவிகமான கல்யாண குணங்களை யுடைய கிருஷ்ணனே
ஸர்வ பிரகாரத்தாலும் உண்டான உத் கர்ஷத்தை எனக்கு அறிவித்தவனே
சாதன அனுஷ்டானம் பண்ணி பலங்கள் கை புகுராதார் கூப்பிடுமா போலே காண வேணும் என்று கூப்பிடா நின்றேன்
ஒரு கொசுகு கூப்பிட்டது என்று ப்ரஹ்மாவின் ஓலக்கத்திலே கேட்கப் புகுகிறதோ
என்கிறார் –மேவு துன்ப வினைகளை-இத்யாதியாலே —

——–

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-

ஸ்வரூப ஞானத்தாலே ஆறி இருக்க மாட்டாதே கொடிய வினையாகிற தூறு மண்டி இருக்கிற
சம்சாரத்தில் இருந்து கூப்பிட்டுக் கூப்பிட்டு
ஒரு நல்ல துணை இல்லாத பாவியேன் காலம் எல்லாம் அறிவு கெட்டுத் தடுமாறுகிற நான்
நோவு பட்டவன்று ஒரு பசுவின் மேலே ஒரு இடையன் மேலே ஒரு துளி விழாதபடி தோற்றிற்று
ஒரு மலையை எடுத்துப் பெறாப் பேறு பெற்றானாகப் பரிஹரித்தவனை
சகல பதார்த்தங்களிலும் ஒன்றும் பிரிகதிர் படாத படி எல்லார் தலையிலும் ஓக்கத் திருவடிகளை வைத்து –
தான் ஸ்வாமி –என்னும் இடத்தை அறிவித்தவனை
எங்கே கிட்டப் போகிறேன் என்கிறார் –கூவிக் கூவி -இத்யாதியால் –

————

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-

யம படர் வந்து கிட்டும் காலம் அவர்கள் தங்கள் கையில் பாசத்தை வீசினால் இவனுக்கு இவ்வருகே
நசை கிடைக்கையாலே அது இங்கே இசிக்க -அவர்கள் அங்கே இசிக்க இவன் நடுவில் இருந்து படும்
கிலேசங்கள் எல்லாம் காணக் காண வீட்டுக் கடக்க நிற்க
பல கலைகளாலும் அறியப்பட்ட உத் கர்ஷத்தை உடையனாய் இருந்து வைத்து
நெடும் கை நீட்டாக ப்ரமாணங்களிலே கேட்டுப் போகாதபடி கண்ணுக்கு விஷயமாக கிருஷ்ணனாய் வந்து
அவதரித்தவனைக் கண்டு கொண்டு என் நெஞ்சமானது நிலை பெற்றது
உயிர் நீடு பெற்றது என்கிறார் -தலைப்பெய் காலம்-இத்யாதியிலே –

———

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-

இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லா உலகமும் எல்லா உயிரும் உடையவன் ஆயிற்று
இப்படிப்பட்ட பிரகாரியானவன் தரித்து பிரகார பூதரான ஐவரும் தரித்து இவர் தம் அளவில் அன்றிக்கே
திரு நகரியும் தரித்தது -அங்குண்டான சோலைகளும் தரித்தது –
திர்யக்குகளுடைய ஹர்ஷ ஸூசக த்வனியும் கேட்க்கும்படி யாயிற்று
இப்படியான திருக் குருகூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த குற்றம் அற்ற
இயலையும் இசையையும் யுடைத்தான மாலை ஆயிரத்துள் இப்பத்தும் செய்வது என் -என்னில் –
ராஜ புத்ரனையும் வேடனையும் பிணைத்தால் போலே நித்யமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய்
ஈஸ்வர சேஷமாய் இருக்கிற வஸ்துவையும் -பரிணாமி த்ரவ்யமான அசித்தையும் தன்னிலே பந்தித்துக் கிடக்கிற
அவித்யாதிகளை வாஸனையோடே போக்கி வைக்கும் என்று
யுக்த அர்த்தத்தை நிகமிக்கிறார் -உயிர்கள் –இத்யாதியாலே —

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -22-பாசுரம்–

அவதாரிகை —

இதில்
சௌந்தர்யாதிகள் முகந்து கொண்டு அனுபவிக்க ஒண்ணாமைக்கு
ஹேது -கரண சங்கோசம் -என்று கலங்க –
அந்த கலக்கத்தை அவன் தீர்த்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
கீழ்
அழகர் உடைய அழகு முதலானவற்றை அனுபவிக்கப் புக்க இடத்தில்
விளாக் கொலை கொண்டு அனுபவிக்க ஒண்ணாது ஒழிய
அதுக்கு அடி விஷய பௌஷ்கல்யம்-என்று அறிய மாட்டாமல் கரண சங்கோசம் -என்று அனுசந்தித்து
இஸ் சங்கோசம் அற்று தன்னை அனுபவித்து
வாழுகைக்கு உடலாக
அவன் பண்ணின சிருஷ்டி அவதாராதிகள் தப்பி
அனர்த்தப் பட்ட நான்
இனி கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ
என்று சோக பரவசராய்க் கூப்பிட்ட முந்நீர் ஞாலத்தின் அர்த்தத்தை
முன்னம் அழகர் எழில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-

வியாக்யானம்–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் -குருகையர் கோன்
முந்துற முன்னம்
ஸ்வரூப குணாதிகளில் அகப்படாதே
அழகர் உடைய அழகிலே யாயிற்று அகப்பட்டது –

மூழ்குகை யாவது –
சௌந்தர்ய சாகரத்தில் ஆழம் கால் பட்டு அழுந்துகை –

இப்படி சௌந்தர்ய சாகரத்திலே மக்னாரான ஆழ்வார் –

இன்ன வளவென்ன –
இவ்வளவு என்று
பரிச்சேதிக்க-

எனக்கு அரிதாய்த் -தென்ன –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற
எனக்கு அரிதாயிற்று
என்று அருளிச் செய்ய
திரு மாலே கட்டுரையே -என்று
அவளோட்டைச் சேர்த்தியாலே
எல்லையில் ஞானத்தனாய்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனைக் கேட்கையாலே
தமக்குப் பரிச்சேதிக்க அரிது என்னும் இடம் தோற்றுகிறது-

கரணக் குறையின் கலக்கத்தை —
அவன் அனுபவ பரிகரமாகக் கொடுத்த
கரண சங்கோசத்தால் வந்த காலுஷ்யத்தை –
அஜஞதையை-
அதாவது –
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் –என்றும்
வினைகளை வேர் அறப்பாய்ந்து எந்நாள் நான் உன்னை இனி வந்து கூடுவன் -என்றும்
பன்மாயப் பல் பிறவியில் படுகின்ற யான் தொல் மா வல் வினைத் தொடர்களை
முதலரிந்து நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ-என்றும்
பொல்லா வாக்கையின் புனர் வினை அறுக்கல் ஆறு சொல்லாய்-என்றும்
உன்னை சார்வதோர் சூழ்ச்சியே -என்று
இத்யாதிகளில் அருளிச் செய்தவை –
லங்கா முன் மூலிதாம் க்ருத்வா கதாத்ரஷ்ய தி மாம்பதி -இறே
இப்படி கரண சங்கோசம் அடியாக வந்த கண் கலக்கத்தை

கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து –
மாசுசா -என்று ஆஸ்ரிதர் உடைய சோக நிவர்தகனான கிருஷ்ணன்
அந்த கரண சங்கோச நிபந்தனமாக வந்த துக்கத்தைப் போக்கிக் கொடுத்து
அக் கரணங்களைக் கொண்டு அனுபவிக்கும்படி
திரு உள்ளத்தை ஒரு தலைக்கும் படி பண்ணினான் –
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப் பெற்று
என் நெஞ்சம் பெற்றது நீடுயிர் -என்றத்தை நினைத்து அருளிச் செய்தபடி –
கரண சங்கோசம் அடைய திர்யக்குகளும் பரிசர்யை பண்ணும்படி யான
பெரிய திருமலையில் நிலையைக் காட்டி சமாதானம் பண்ணினான் ஆயிற்று-

———-—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading