ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்/ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி- –3-1–முடிச் சோதி–சாரங்கள்–

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆத்யே த்ருதீய சத கஸ்ய வநாத்ரி பர்த்து
ஆ பாத மௌலி அவயவ ஆபரண ஆபி ரூப்யம்
ப்ரஹ்மாதி வாக விஷயஞ்ச மஹா ப்ரபாவம்
சௌந்த்ர்ய மக்ந ஹிருதயஸ் சடஜிச் ச சம்ச –

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸூ ஸ்லிஷ்டா கல்ப மங்கைர் அநுபம ஸூ ஷமம் வக்தி நிஸ் ஸீம தீப்தம்
ஸ்வாந்த ஸ்வாது ஸ்வ தேகம் ஸூக பஜன பதம் மண்டி தாங்கம் மஹிஷ்யா
ஸ்தோத்ர அதிக்ராந்ய கீர்த்திம் மலினம ரஹித ஔஜ்வல்யம் இஷ்ட உப வாஹ்யம்
வீதாஸ் சர்யத்ரிணேத்ர பிரப்ருதி ஸூர நுதிம் சித்ர சவுந்தர்ய வித்தம் –3-1-

1-ஸூ ஸ்லிஷ்டா கல்ப மங்கைர் –முடிச்சோதி இத்யாதி –தன்னுடைய அவயவ சோபைகளைத் தானே ஆபரணங்களாக உடையனுமாய் –

2-அநுபம ஸூ ஷமம் –சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது–நிர் உபமமான திருமேனி ஒளியை யுடையனுமாய் –

3-நிஸ் ஸீம தீப்தம்–பரஞ்சோதி நீ பரமாய் –பரமமான பரஞ்சோதிஸ்ஸூமுமாய்

4-ஸ்வாந்த ஸ்வாது ஸ்வ தேகம் –மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க

5-ஸூக பஜன பதம் –வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்-ஸூகேந பஜிக்கப் படுமதாய் –
விகஸ்வர கிரண தேஜோ ரூபமாய் -ஸூத்த ஸத்வ மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமாய் –

6-மண்டி தாங்கம் மஹிஷ்யா–பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்-பெரிய பிராட்டியாராலே பரிஷ் க்ருதமான திரு மார்வை யுடையனுமாய் –

7-ஸ்தோத்ர அதிக்ராந்ய கீர்த்திம் -சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே–சமஸ்தருடைய ஸ்தோத்ரங்களையும்
அதி க்ரமித்து இருக்கிற கல்யாண குணங்களை யுடையனுமாய் –

8-மலினம ரஹித ஔஜ்வல்யம்–மாசூணாச் சுடருடம்பாய்-ஹேய ப்ரத்ய நீகமாய் உஜ்ஜவலமுமான திரு மேனியையும் யுடையனுமாய் –

9-இஷ்ட உப வாஹ்யம்–புள்ளூர்ந்து தோன்றினையே-பெரிய திருவடியை இஷ்டமான வாகனமாய் யுடையனுமாய்

10-வீதாஸ் சர்ய த்ரிணேத்ர பிரப்ருதி ஸூர நுதிம் -பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாதல் அறிந்து
ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே-தன்னாலே ஸ்ருஷ்டருமாய் -லப்த ஞானருமுமான த்ரி ணேத்ர சதுர்முக ஸஹஸ்ர நேத்ரர்கள்
தன்னை ஸ்வாமி என்று அறிந்து ஏத்த வீற்று இருந்து விஸ்மய நீயமாகாத படியும் இருக்கும் எம்பெருமானை

சித்ர சவுந்தர்ய வித்தம் –அத்யாச்சர்ய யுக்தனாக -முடிச்சோதி -என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

இதில் கீழ் பத்துக்களோடு மேல் பத்துக்களின் சங்கதி அருளிச் செய்கிறார் –

உபாயத்வைகாந்தம் ப்ரதமமிஹ சேவ்யத்வமுதிதம்
ததாஸ் ச ப்ராப்யத்வ உபயிகமதி போக்யத்வ மவதத்
த்வயம் தத் ஸ்வாசாதாரணா தனு விசிஷ்டஸ்ய கணயன்
த்ருதீய விஸ்வேசம் ஸூபஸ் ஸூபக ரூபம் கதயதி–7–

உபாய உபேய விக்ரஹ ஸ்வரூபம் -அர்ச்சா ரூப ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -மூன்றாம் பத்தின் சாரம்

அந்நிய த்ருஸ ஸுந்தர்யம் –முடிச் சோதி
லோகைக நாதன் -தனுர் விஹித சர்க்கதி சுபகன் -முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் -திருமேனியாலே ஸ்ருஷ்ட்டி
ஸ்வ இச்சா சேயாகரன்-ஒழிவில் காலம் கைங்கர்யம் கொள்ள அர்ச்சா திரு மேனி —
சர்வ சரீரி புகழ் நல் ஒருவன் –
மோஹன தனு -சுப சுபாக ரூபம் -மொய்ம் மாம் பூம் பொழில்
ஸுலப்யன்-செய்ய தாமரை
பயிலும் சுடர் ஒளி-பாகவத சேஷத்வம்
சதா த்ருஸ்யன்-முடியானே
சர்வ பாப நிவர்த்தகன் -சன்மம் பல பல

இப்படி
முதல் பத்தில் எம்பெருமான் ஒருவனே ஸேவ்யத்வாத் உபாயம் என்றும்
இரண்டாம் பத்திலே போக்யத்வாத் உபேயம் என்றும் அருளிச் செய்தார்
இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
அநிதர சாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுக்கே என்று கொண்டு எம்பெருமான்
ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டன் என்று மூன்றாம் பத்திலே அருளிச் செய்கிறார் என்கிறார் —

—————————————

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —

பிரவேசம்
இரண்டாம் பத்தில் களை அறுத்த கைங்கர்யத்தை
திரு மலையிலே செய்யப் பாரிக்கிறார் மூன்றாம் பத்தில் —

——–

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

கீழில் திருவாய் மொழியில் திருமாலிருஞ்சோலை மலையை அனுபவித்த ஆழ்வார்
அதிலே நீலக் குவடு போலே நிற்கிற அழகருடைய அவயவ சோபைக்கும் ஆபரண சோபைக்கும் உண்டான
ஸூ கடிதத்வத்தை அனுபவிக்கிறார் முடிச்சோதியிலே
உன்னுடைய திரு முகத்தில் உண்டான தேஜஸ்ஸானது தகிரு அபிஷேகத்தின் தேஜஸ்ஸாய்க் கொண்டு விகஸிதமாயிற்றோ
திருவடிகளின் தேஜஸ்ஸானது தேவரீர் நின்ற ஆஸன பத்மமாய்க் கொண்டு விகஸிததமாயிற்றோ
திருமேனி அழகு பல்கலனாய்க் கலந்ததுவோ –
ஸ்ரீ யபதியாய் ஸ்வதஸ் ஸர்வஞ்ஞனான நீயும் விசாரித்து இதுக்கு ஒரு போக்கடி
அருளிச் செய்ய வேணும் என்கிறார் -முடிச்சோதி இத்யாதியாலே –

——–

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-

அனுபவித்து போமது ஒழியச் சொல்ல ஒண்ணாது –
சொல்லில் தாமரை ஜாதியாக உன்னுடைய திருக் கண்களுக்கும் திருவடிகளுக்கும் திருக் கைகளுக்கும் ஒப்பாகாது –
காய்ச்சி ஓட வைத்து உரைத்த நன்றான பொன் உன்னுடைய ஸ்வாபாவிகமான திவ்ய விக்ரஹத்தின் ஒளிக்கு ஒப்பாகாது –
உனக்கு ஸத்ருசமாகச் சொன்னார்களாய் -ஞான லௌகிகர் ஸாஸ்த்ர ஏக சமதிகம்யமான உன்னை
உள்ளதும் சொல்லி -இல்லாததும் எல்லாம் இட்டுக் கொண்டு சொன்னார்களாய் இருக்கிறது
எல்லாம் ப்ராயேண விஷயத்தைப் பாராதே பிரதிபன்னத்தைச் சொன்னதாய் புன்மையையே காட்டா நின்றது –
இது என்ன கார்யம் என்கிறார் -கட்டுரைக்கில் –இத்யாதியால் –

————

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-

பரமாய் பரஞ்சோதி நீ உன்னை ஒழிய வேறொரு பரஞ்சோதிஸ்ஸூ இல்லாமையாலே
உபமான ரஹிதனாயக் கொண்டு வர்த்தியா நின்றுள்ள பரஞ்சோதிஸ்ஸூ நீ
உன்னுடைய சங்கல்ப லவ லேசத்திலே கார்யாகாரமாய்க் கொண்டு விஸ்திருதமாகா நின்றுள்ள
லோகங்களை எல்லாம் உண்டாக்கின எம் பரஞ்சோதி கோவிந்தனே
உன்னுடைய பிரகாரம் என்னால் சொல்லப் போகாது
அனுபவித்துப் போம் அத்தனையே -என்கிறார் -பரஞ்சோதி -இத்யாதியாலே –

———

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-

உன்னிடத்திலேயான புஷ்பஹாச ஸூ குமாரமாய் இருந்துள்ள திரு மேனியில் நெஞ்சை வைக்க –
திரு நாபி கமலத்தை அடியாக உடைத்தான இம் மஹா ப்ருத்வியானது மாட்டாதே இருக்கச் செய்தே
உன் திருமேனியில் நெஞ்சை வைக்க மாட்டாதவையாய் பலவாய் இருக்கிற மாதாந்தரங்களிலே
நெஞ்சை வைக்கப் பண்ணினாய்
உன் திரு உள்ளத்தையும் திருத்துழாய் முதலான போக்யத்தில் வைத்தாய் –
இம் மஹா பிருத்வியானது இங்கனே நோவே பட்டே போம் அத்தனை யாகாதே என்கிறார் –மாட்டாதே –இத்யாதியாலே –

———

வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-

ஸ்வா பாவிகமாய் வருவதாய் மிகவும் விகசித கின்றன தேஜோ ரூபமாய் ஸூத்த ஸத்வ மயமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய் -குண ப்ரகாசகமான திரு மேனி யுடையனாய்
ஸ்வதஸ் ஸர்வஞ்ஞனாய் வரம்பில்லா எல்லாவற்றையும் நிர்வஹித்தாய் –
கால த்ரயத்துக்கும் நிர்வாஹகனாய் லோகங்களை ஒருபடிப்பட ரஷித்துக் கொண்டு போருகிற
உன்னுடைய கல்யாண குணங்களை என்னாலே முடியாகி சொல்லித் தலைக்கட்டலாய்
இருந்ததோ என்கிறார் –வருந்தாதே -இத்யாதியாலே –

———-

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-

அத்யேத்ரு பேதத்தால் ஸாகா பேதங்களாய்க் கொண்டு பிரியுண்ட ஸர்வ லோகங்களில் உண்டான வேதங்கள் எல்லாம்
அர்த்த போதகங்களாய் உன்னுடைய கல்யாண குண விஷயமான அத்தனை போக்கி புறம்பே போயிற்று இல்லை
பூவை யுடைத்தாய் தன் நிலத்திலே நின்றாள் போல் செவ்வி பெற்று வாழா நின்றுள்ள திருத்துழாயை
திரு அபிஷேகத்திலே உடையவனே
தாமரைப் பூவை இடமாக யுடைய பெரிய பிராட்டியார் பூவடி கொதித்துப் போந்து வர்த்திக்கும் மார்வை யுடையவன்
இந்த ஒப்பனைக்கும் இந்தச் சேர்த்திக்கும் என்னாலே பாசுரம் இட்டுச் சொல்லாய் இருந்ததோ
என்கிறார் -ஓதுவார் ஒத்து எல்லாம்-இத்யாதியாலே —

——–

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-

வாழ்த்துவர் பலர் உண்டாக்குகைக்காக உன்னுடைய ஸங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசத்திலே சதுர்முகனை
கடல் சூழ்ந்த பூமி எல்லாம் உண்டாக்கு -என்று முதலில் படைத்தாய் –
உஜ்வலமான குணங்களை உடையரான ருத்ரன் தொடக்கமாக ஈஸ்வரனோடே மசக்குப் பரல் இடலாம்படி
கிளர்ந்த தேவதைகள் முசுகு வால் எடுத்தால் போலே கிளர்ந்து ஒருவர் சொன்ன இடம் ஒருவர் சொல்லாதே
ஓ ரோ ப்ரயோஜகங்களிலே மிக்க ஆயஸ்ஸை யுடையராய் இருக்கும் அவர்கள் ஸ்தோத்ரம் பண்ணினால்
உன்னுடைய ஸ்வாபாவிகமான கல்யாண குணங்கள் -இவ்வளவேயோ இதுவும் என்னும் என்னும்
மாலின்யத்தை அடையாதோ என்கிறார் –வாழ்த்துவர் –இத்யாதியால் –

———-

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

ஹேய ப்ரத்ய நீகமாய் -ஸூ த்த ஸத்வம் ஆகையால் -நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹத்தை யுடையையாய்
வ்ருத்தி ஷயங்கள் இன்றிக்கே மாசேறக் கடவதல்லாத ஞானத்தை யுடையையாய்
ஜகச் சரீரனனாய்-எல்லாவற்றையும் நிர்வகித்தவன் ஆனாய்
திரேதாந ஹேது இல்லாத ஞானாதி பூஷணங்களை உடையான் ஒரு அமரர் கோன் உண்டாய் –
அவன் உன்னை ஸ்தோத்ரம் பண்ணினாள்
ஒரு ஸம் சர்க்கத்தாலே மாசூணக் கடவது இன்றிக்கே இருக்கிற உன் திருவடிகளின் தேஜஸ்ஸானது
இவன் ஏத்தும் அளவேயோ இத்திருவடிகள் என்று மழுங்காதோ என்கிறார் –இத்யாதியாலே –

————-

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-

மழுங்கக் கடவதன்றிக்கே கூரிய முனையைஉடைய திருவாழியை நல்ல வலவருகே உடையையாய்
கையும் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டு இருக்கிற ஆனையின் கையில் பூ செவ்வி அழியாமே
திருவடிகளில் இடுவித்துக் கொள்ளுகைக்காகப் பெரிய திருவடியை இடுக்கிக் கொண்டு வந்து தோன்றினாயே
அநேக கார்யங்களிலே ஏவா நின்றாலும் மழுங்கக் கடவதன்றிக்கே புகர் பெற்று வாரா நின்றுள்ள
ஸங்கல்ப ரூப ஞானமே கருவியாக
திரு நாபி கமலத்தை அடியாக உடைத்தான சம்சாரத்தில் தொழும்பானார்க்கு இருந்த இடத்தே இருந்து ரக்ஷித்தாயாகில் –
உன்னுடைய உஜ்வலமான தேஜஸ்ஸூ மறையாது என்கிறார் –இத்யாதியாலே –

———-

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-

பாஹ்யராய் நாஸ்திகராய் இருப்பார்க்குத் தன் படிகளை மறைக்கை யாலும்
ஆஸ்திகராய் இருப்பார்க்குத் தன் அர்த்தத்தை வெளியிட்டுக் காட்டுகையாலும்
மறை -என்றும் -வேதம் -என்றும் சொல்லப்படுகிற அவற்றில் சர்வாதிகனாகவும் -நிரதிசய போக்யனாகவும் பிரகாசிக்கிறவனே
ஸ்வாமித்வ ப்ராப்தியாலே கரண களேபர விதுரமாய் போக மோக்ஷ ஸூன்யமாய் கிடந்த வன்று இவற்றை உண்டாக்கி
பிரளயம் வர திரு வயிற்றிலே வைத்து நோக்கி
பின்னையும் வெளிநாடு காண உமிழ்ந்து
மஹா பாலி போல்வார் பருந்து இறாஞ்சினால் போலே அபஹரிக்க -எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி ஸர்வவித ரக்ஷணங்களையும் பண்ணினவனே
ஜாடையில் கலா மாத்ரமான சந்த்ரனைத் தரித்துக் கொண்ட ருத்ரனும்
தஜ் ஜனகனான சதுர்முகனும் இவர்களோடு எண்ணப்பட்ட இந்திரனும்
நீ ஸ்வாமியான முறை அறிந்து ஏத்த -அத்தாலே உன் வ்யாவ்ருத்தி தோற்ற இருந்தாய் என்றால்
அது உனக்கு விஸ்மயமோ என்கிறார்-மறையாய நால் வேதத்துள் நின்ற இத்யாதியால் –

————-

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-

வேறே சில வியக்தி களிலே கண்டால் விஸ்மய ஹேதுவாய் இருக்கும் அவையடைய தன் பக்கலிலே கண்டால்
ப்ராப்தமாய் இருக்கும் யதா பூத வாதியான வேதத்தாலே ப்ரதிபாதிக்கப் பட்ட உத்கர்ஷத்தை யுடையவனை
ஸம்ஸாரத்தை ஜெயிக்கையால் வந்த புகழை யுடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் பலரும்
ஆழ்வாரை அனுபவித்து வர்த்திக்கைக்கு ஈடான பரப்பை யுடைத்தான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஸம்சய விபர்யய ரஹிதமாக ஸாஷாத் கரித்து அருளிச் செய்த ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இப்பத்தும்
ஒலியை யுடைத்தான முந்நீரை யுடைய பூமியிலே
அசன்னேவ என்னப்படுபவர்களை -சந்தமேனம் -என்னும்படி உஜ்ஜீவிப்பித்து
விரோதிகளை போக்கும் என்று யுக்த அர்த்தத்தை நிகமிக்கிறார் இத்யாதியிலே

————————–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -21-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
திருமலையில் ஏக தேச்தரான அழகர் உடைய அழகை முழுதும்
அனுபவித்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ்
அயன் மலையோடு
புறமலையோடு
திருப்பதியோடு
உத்தேச்யமாக
திருமலை ஆழ்வாரை அனுபவித்துக் கொண்டு வருகிற
மருளில் வண் குருகூர் வண் சடகோபனான ஆழ்வார்
வட மா மலை உச்சி -என்கிற படியே
அம் மலையிலே ஒரு கொடி முடி என்னலாம் படியையும்
அதுக்கு அவயவமாய் இருப்பதொரு கல்பக தரு
பஹூ சாகமாகத் தழைத்து பூத்தாப் போலேயாயுமாய் இருக்கிற
மேலிரும் கற்பகமான அழகர் உடைய திவ்ய அவயவங்களும்
திரு அணிகலன்களுக்கும் உண்டான
ஸூகடிதத்வத்தையும்
வேத வைதிக புருஷர்களாலும் அளவிட ஒண்ணாத பெருமையையும்
அத்தையும் விளாக் கொலை கொள்ளும்படியான
ஆஸ்ரித வாத்சல்யத்தையும்
அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
முடிச் சோதியில் அர்த்தத்தை
முடியார் திருமலையில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன்———-21-

வியாக்யானம்–

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன் –
விராஜதே வ்ருஷாத்ரேச்ச சிகரம் தசதா துபி
பூஷிதோ பூ பதிரேவ க்ரீடே நார்க்க வர்ச்சசா -என்கிறபடியே
விண் முதல் நாயகன் நீண் முடியோடு ஒத்த -என்றும்
மதி தவழ் குடுமி தொடக்கமான கொடு முடிகளாலே மிக்கு இருப்பதாய்
ஆயிரம் பைந்தலை யவநந்தன் -என்னும் படியான
திருமலை ஆழ்வாரிலே மண்டி அனுபவித்த ஆழ்வார் –

அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப் பற்றி –
திருமலையில்
திருத் தாழ் வரையிலே
மாலிரும் சோலை என்னும் மலையை உடைய மலையான அழகர் திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
திவ்ய குணம் முதலாய் உள்ளவை எல்லாம்
குமர் இருக்கும் படி
அவர் திவ்ய விக்ரஹ சௌந்தர்யத்தை
அனுபாவ்ய விஷயமாகப் பற்றி –

அத்தை அனுபவிக்கும் இடத்தில் –
முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான் முன்-
முடிச் சோதியாய் யுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச் சோதி ஆடையோடும் பல்கலனாய் நின் பைம் பொன் கடிச் சோதி
கலந்ததுவோ திரு மாலே கட்டுரையே -என்று
அபரிச் சேத்யமாம் படி அருளிச் செய்ததை அடி ஒத்தின படி –
ரூபம் சம்ஹந நமலம் லஷ்மீம் தத்ரு ஸூர் விஸ்மிதாகாரா-என்னக் கடவது இறே

முடியும் அடியும் –
க்ரீடாதி நூபுராந்தமாக -அனுபவித்த படி –

படி கலனும்
நடுவு உள்ளவையாய்
படியிலே உள்ள
திரு அணிகலன்கள் -என்னுதல்
படிந்து ஸூகம் வடிவதானவை என்னுதல்
முடி கொண்டான் வெள்ளக் கால்களாய் பின்பு பெரு வெள்ளமாய்
நட்டாறாய்ச் சுளித்து
அரையாற்றுக்கு அடியானபடி –
பெரு வெள்ளம்–நாடு ஆறு -அரை யாறு- சௌந்தர்ய சாகரம் – தரங்க -அலையில் தூக்கிப் போட்ட சித்தம்

இப்படி சௌந்தர்ய சாகர தடங்க தாடன தரள சித்த விருத்தியாய்
முற்றும் அனுபவித்தான் முன் –
முழுதும் அனுபவித்தார் முற்காலத்திலே -என்னுதல்
முற்றும் -என்கிறது முடிச் சோதி -என்கிற பாட்டில்
உக்தமானது எல்லாம் -என்னுதல்
மற்றும் -கட்டுரைக்கில் –சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது –என்றும்
பரஞ்சோதி -என்றும்
நின் மாட்டாய மலர் புரையும் திரு வுருவம் -என்றும்
மலர் கதிரின் சுடர் உடம்பாய் -என்றும்
போது வாழ புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் -என்றும்
மாசூணாய்ச் சுடர் உடம்பாய் -என்றும்
உன் சுடர்ச் சோதி -என்றும்
முதல் பாட்டின் விவரணமாக அருளிச் செய்தவை ஆகவுமாம் –

———-—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading