ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்-ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –17-18-19-20–

பிராட்டியின் கடாஷத்தினால் தாமே பெருகி வரும் நன்மைகளை யடுக்குகிறார் –

ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதா ஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூ லதா
ததோ முகம் மதி இந்திரே பஹு முகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:–ஸ்லோகம் –17 –

ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி ஸத்தி ச்ரிய-
ப்ரீதியும் அறிவும் கல்வியும் தைரியமும் செழிப்பும் கார்ய சித்தியும் செல்வமும் –

ஸூதா சகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூ  லதா-
அமிழ்தின் துணைவியான இலக்குமியே-அமுதில் வரும் பெண்ணமுது ஸூதா ஸஹி — நினது கொடி போன்ற புருவம் யாரை நோக்கி அசைய விரும்புமோ-

ததோ முக மதேந்திரே பஹூமுகீ மஹம் பூர்விகாம் –
அவரை நோக்கி -பலவாறு நான் முன்பு நான் முன்பு என்ற எண்ணத்தை-

விகாஹ்ய ச வசம்வதா பரிவஹந்தி கூலங்கஷா —
அடைந்து அடங்குவனவும் கரை புரள்வனவுமாய் முழுதும் வெள்ளம் இடுகின்றன –
பர்வஹந்தி -நாற்புறங்களிலும் வெள்ளம் இடுகின்றன-சம்பந்த சம்பந்திகளுக்கும் நன்மைகள் வந்து சேரும்-

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது புருவங்கள் கொடி போன்றும்,
வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது. அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ,
அந்த மனிதனின் நிலை என்ன? அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச் செழிப்பு,
நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம் ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன.
அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை – ஒவ்வொன்றும்,
“நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து சேர்கின்றன.
இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,*  நல்ல- 
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும்*  செறுகலியால்- 
வருந்திய ஞாலத்தை*  வண்மையினால்  வந்தெடுத்தளித்த- 
அருந்தவன்*  எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.  
குலம் தரும் செல்வம் தந்திடும்*  அடியார் படு துயர் ஆயின எல்லாம்* 
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*  அருளொடு பெரு நிலம் அளிக்கும்* 
வலம் தரும் மற்றும் தந்திடும்*  பெற்ற தாயினும் ஆயின செய்யும்* 
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம்.

நின் புருவங்களார் மேல் நெளிந்திட விரும்பும் ஆங்கே
அன்பறி வாக்கம் தீரம் அருங்கலை செழிப்பு சித்தி
என்பன பலவாறு எங்கும் இரு கரை மோதும் செல்வி
இன்ப அமுதனையாய் முந்தி முந்தி என்று ஏற்குமாறே-17-

அனைத்தும் இவளது திருப்புருவ வட்ட அதீனமே –
ச ஸ்லாக்யஸ் ச குணீ தந்ய ச குலீநஸ் ச புத்திமான் ச ஸூரஸ் ச விக்ராந்தோ யாம் த்வம்
தேவீ நிரீக்ஷசே
 -பிரசித்த பிரமாணம் அடியான ஸ்லோகம்
ஸூதாசகி-அம்ருதம் போலே போக்யமானவள் -நால் தோள் அமுத ஸஹி அன்றோ –
அமுதினில் தோற்றிய பெண் அமுதம் என்றுமாம் –
சீதக் கடலுள் அமுது -அன்றோ
இந்திரே–தவ-யதோ முகம் சிசலிஷேத் -தேவரீருடைய திருப் புருவக் கொடி எவனை நோக்கிப் படர நினைக்குமோ –
உடனே அந்தப் புருஷன் பக்கமாக
தவ சிசலிஷேத் -என்று –சலேத் என்னாமல் அருளிச் செய்தது -கடாக்ஷம் பிரசரிப்பதுக்கு முன்னமே
நினது கொடி போன்ற புருவம் யாரை நோக்கி அசைய விரும்புமோ-இவை அனைத்தும் வெள்ளம் இடத் தொடங்கும்
ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி சித்தி ச்ரிய-ப்ரீதி -ஞானம் -வாக்கு -தைர்யம் -பரிபூர்த்தி -சித்தி -சம்பத்து -ஆகிய இவை எல்லாம்-இங்கே காட்டி அருளிய ஏழு நன்மைகளுக்குள் ஸமஸ்த நன்மைகளும் அடங்கும் அன்றோ-
ரதியாவது -பகவத் பாகவதர்களைக் கண்டால் நிலா தென்றல் புஷ்பம் சந்தனம் போன்றவற்றை கண்டால் போன்ற ப்ரீதி
மதி சரஸ்வதி -வகுத்த விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ணும் ஞானம்
தந்மே சமர்ப்ய மதீஞ்ச சரஸ்வதீஞ்ச த்வாமஞ்ச சா ஸ்துதி பதைர் யதஹம்
திநோமி 
-ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்தில் பிரார்த்தனை படி –
த்ருதி -தைர்யம் -ஸ்தைர்யம் -மன உறுதி
ஸம்ருத்தி -பூர்த்தி -சித்தி -அபேக்ஷிதம் எல்லாம் பெறப் பெறுகை
ஸ்ரீ -ப்ரீதி காரித கைங்கர்யம் பர்யந்தம் அனைத்தும்
ஐஸ்வர்யம் யதசேஷ பும்சி யதிதம்–ஸ்ரீஸ்தவ ஸ்லோகம்
பஹூமுகீம் அஹம் பூர்விகாம் விகாஹ்ய -பஹு பிரகாரமான அஹம் அஹமியைச் செய்து கொண்டு –
நான் முன்னே நான் முன்னே -என்று முற்கோலிப் புறப்படுகை
வசம் வதாஸ் சந்ய-வசப்பட்டவைகளாய்க் கொண்டு
கூலங்கஷா பரிவஹந்தி -அளவு கடந்து -சந்தானங்களிலும் வெள்ளம் கோத்துப் பெருகுகின்ற –
புத்ர பவுத்ர சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை அளவும் வெள்ளம் கோத்த படி –

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
உனது புருவங்கள் கொடி போன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது.
அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன?
அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம்
ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை –
ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று
போட்டி போட்டுக் கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் யார் மீது விழுகின்றதோ, அந்த மனிதனிடம் அனைத்தும் குவிகின்றன என்றார்.

இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.

————

உலகின் கண் உள்ள எல்லாப் பொருள்களின் உடைய ஏற்றத் தாழ்வுகள் யாவும்
பிராட்டியின் கடாஷத்தைப் பெறுதலையும் பெறாததையும் பொறுத்தன -என்கிறார் –

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்–ஸ்லோகம் –18 –

சஹ ஸ்திர பரித்ரச வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை –ஸ்திர-ஸ்தாவர ரித்ரச-ஜங்கமங்களின் வ்ரஜ-சமூஹம் என்ன-பிரமன் என்ன-பிரமனுக்கு எதிர் தட்டாக அகிஞ்சனன்-(ஐஸ்வர்யம் உள்ளவனும் இல்லாதவனும் )
சஹ -சகித்துக் கொள்ளும் பொருள்
ஸ்திர -நிலை நிற்கும் பொருள்
பரித்ரச -பயப்படும் பொருள் -சஹ பொருளுக்கு எதிர்மறை
வ்ரஜ -அழியும் பொருள் -ஸ்திர பொருளுக்கு எதிர்மறை என்றுமாம் –

அநோகஹ ப்ருஹஸ்பதி பிரபல விக்ல பப்ரக்ரியம் –
மரம் என்ன –லோகே வனஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம் -கூரத் ஆழ்வான்(கீழ் அசைவது அசையாதது -இங்கு ஞானம் இல்லாத மனிதன்- ஞானம் உள்ள மனிதன் )
குரு என்ன -அறிவின் உயர்வு எல்லை ப்ருஹஸ்பதி சப்தம்
பலிஷ்டன் என்ன-துர்பலன் என்ன -இவர்களின் பிரகாரத்தை யுடையதான –

இதம் சதசதாத்மநா நிகிலமேவ நிம் நோந்தனம்
இவ் வுலகம் முழுதுமே-நல்லது கெட்டது என்ற வடிவத்தாலே-மேடு பள்ளமாய் இருப்பதொரு யாதொன்று உண்டோ –
நிகிலமேவ -இதில் அடங்காதது ஒன்றுமே இல்லை என்றவாறு

கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத் தாண்டவம் —
அது உன்னுடைய நோக்கினுடைய அதின்மையினுடையவும் நாட்டியமும் அன்றோ –
ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் லீலா கார்யம் -தாண்டவம்-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?
இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பெயர்வன பெயர்கிலாத பிரமனே செல்வ மில்லான்
உயர் குரு மரனே மற்றும் உறு பல முற்றோர் அற்றோர்
உயர்வான தாழ்வான யாவும் நல்ல தீயனவா யுன் கண்
அயர்வினின் அருளின் நோக்கத் தாடு தாண்டவம் அணங்கே –18-

ஸ்திர பரித்ரச வ்ரஜ விரிஞ்ச நா கிஞ்சனைஸ் சஹ-ஸ்திரம்-ஸ்தாவரம் / பரித்ரசம்-ஜங்கமம் /
வ்ரஜம்-சமூகம் -மரம் மலை மண்டபம் இவை ஸ்தாவரங்கள் /அலைந்து கொண்டும் அசைந்து கொண்டும் இருப்பவை ஜங்கமங்கள்
விரிஞ்ச நா கிஞ்சனைஸ் -விரிஞ்சனனும் அகிஞ்சனமும் -இவ்வளவும் அன்றி –
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவை அல்ல நல்ல மரங்கள் -சவை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவனே மரம் -மரம் என்னலாம்படியான அறிவிலிகள் –
பூலோக ப்ருஹஸ்பதி என்னும்படி வித்வன் மணிகள் -இவ்வாறான பேதம் -இவ்வளவும் அன்றிக்கே –
பிரபல விக்ல பப்ரக்ரியம்-வீர சூரர் -எலி எலும்பர்
இப்படிப்பட்ட பிரகாரங்களை யுடைத்ததாய்
இதம் நிகிலமேவ –இந்த பிரபஞ்சம் முழுவதும்
சத அசத ஆத்மநா நிம் நோந்தனம்–நல்லதாயும் கெட்டதாயுமான ஆகாரத்தாலே -அதமமாயும் உத்தமமாயும் -இரா நின்றது
கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத்தாண்டவம் –தேவரீருடைய கடாக்ஷத்தாலும் இல்லாமையாலுமான கூத்து தானே
இந்த ஏற்றத் தாழ்வுகள் எல்லாம்
அனுக்ரஹ பிரவாகம் பெருகின இடம் உத்துங்க ஸ்திதியிலும் பெருகாத இடம் அதம ஸ்திதியிலும் -என்றதாயிற்று –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?

இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்ய த்ரயம் வெளிப்பட்டது?

———-

இங்கனம் ஜகத் சமஸ்தம் யத பாங்க சம்ச்ரயம்-என்றபடி உலகம் பிராட்டியின் கடாஷத்தைப் பற்றி
நிற்பதாகக் கூறுவது பொருந்துமோ –
இறைவன் இட்ட வழக்கன்றோ உலகம் எனின்
உலகம் இவளது விளையாட்டிற்காகவே இறைவனால் படைக்கப் பட்டது ஆதலின்
இவள் கடாஷத்தைப் பற்றியே யது நிற்கும் என்னும் கருத்தினராய்
பிராட்டியின் விளையாட்டிற்காகவே இறைவன் இவ்வுலகைப் படைத்தான் என்கிறார் –

காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ:
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்ச கரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை:
அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:–ஸ்லோகம் –19 –

காலே -படைத்ததற்கு முந்திய காலம்
சம்சதி யோக்யதாம் -தகுதியை அறிவிக்கும் சமயத்தில் -பருவ காலம் வந்தவாறே –
சிதசிதோ ரன்யோன்ய மாலிங்கதோ-ஜீவ பிரகிருதி தத்வங்கள் ஒன்றுக்கு ஓன்று கலந்து இருக்கும் பொழுது
சங்கல்பமாந ப்ரிய-நின் அன்பன் படைப்பதாக சங்கல்பம் செய்து கொண்டு-
பஹூஸ்யாம்-மனசைவ – ஜகத் ஸ்ருஷ்டிம் -நினைத்த
எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை -என்னக் கடவது இறே

ஸ்ரீ ரங்கேஸ்வர தேவி-தே விஹ்ருதயே -பெரிய பிராட்டியாரே – உனது விளையாட்டிற்காக
பூதா ஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை-
ஐம் பூதங்கள் என்ன
அஹங்கார தத்வம் என்ன
புத்தி -மஹத் தத்வம் என்ன-புத்தி –துணிபு -உறுதி -மஹான்வை புத்தி லஷண –மனசை விட வலிமை புத்தி-புத்தியை விட வலிமை ஆத்மா உபநிஷத் –
பஞ்சீ கரணீ-ஐந்து ஞான இந்த்ரியங்கள் என்ன
ஸ்வாந்த -மனம் என்ன
ப்ரவ்ருத் தீந்த்ரியை–கர்ம இந்த்ரியங்கள் என்ன
ஐம் புலன்களை இங்கு கூறாது விட்டது அடுத்த ஸ்லோகத்தில் விசேஷித்துக் கூறுதற்கு என்க-

(தன் மாத்திரைகள் இங்கு இல்லை -உப லக்ஷணத்தால் கொள்ள வேண்டும்
பொங்கு ஐம் புலனும் பாசுரத்தில் இவை இல்லை -தன் மாத்திரை சேர்க்காமல் குணங்கள் அங்கு உண்டு
பூநிலா ஐந்துமாய் -அங்கும் தன் மாத்திரைகள் இல்லை
பொறி -குணம் தான்–தன் மாத்திரைகள் த்ரவ்யம் தானே)

அண்டா நாவரணைஸ் சஹஸ்ர மகரோத் தான் பூர்புவஸ்ஸ்வரவத
ஏழு ஆவரணங்களுடன்-தான் -பிரசித்தங்களான-பூ புவர் ஸ்வர்க்க லோகங்கள் இவற்றை யுடைய –
சஹஸ்ரம் அண்டான் -பக அண்டங்களை
அகரோத் -படைத்தான் –
அண்டா நாந்து சஹாஸ்ராணாம் சஹாஸ்ராண் யயுதா நிச ஈத்ருசா நான் தத்ர கோடி கோடி சதா நிச –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற படியைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை
அடைந்துவிடக் கூடாது என்று நம்பெருமாள் எண்ணினான்.
ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது.
உடனே உனது ப்ரியமானவனான அழகிய மணவாளன், அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு?
உன்னை மகிழ்விக்க அன்றோ? அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து,
மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான். மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.

வேர் முதல் வித்தாய் -ஒன்றும் சிதையாமே ஸங்கல்பத்தால் படைப்பது தேவரீருடைய ஆனந்தத்துக்காகவே

கலந்த வுயிர் சடப் பொருளை யாக்கக் காலம் கருதும் கால் ஐம் பூத மாநாங்காரம்
புலன் உள்ளம் கன்மேந்த்ரியங்களாலே பூர்ப் புவச் சுவர் லோகமுடைய வண்டம்
பல வாயிரங்கள் மதிள் ஏழி னோடும் படைத்தனனாற் சங்கல்ப்பித்து உனது கேள்வன்
இலங்ரு திருவரங்க நகர்க்கு இறைவன் தேவி இன்புற்று நீ விளையாட்டயர்வதற்கே–19-

ஜகத் ஸ்ருஷ்ட்டியை நிர்வஹித்து அருளுவதும் உமது விஹாரார்த்தமாகவே –
ஹே ஸ்ரீ ரங்கேஸ் வர  தேவி
சித் அசிதோர் அன்யோன்யம் ஆலிங்கதோ சதோ -ஒன்றோடு ஓன்று பிசறிக் கிடைக்கும் அளவில் –
அசித விசேஷிதான் பிரளய சீமனி சம்சரத-என்றும்
அசித விஷ்டான் பிரளய ஐந்தூன் -என்றும்
சொல்லும்படியான நிலைமையில் இருந்த அளவிலே
காலே யோக்யதாம் சம்சதி சாதி -கரண களேபரங்கள் தரும் – ஸ்ருஷ்டிக்கு உரிய பருவம் -யோக்யதை -வந்தவாறே
தே விஹ்ருதயே -உம்முடைய திரு விளையாடலுக்கு உறுப்பாக –
சங்கல்பமாந ப்ரிய —-உம் வல்லபன் பஹு பவன சங்கல்பம் கொண்டவனாய்
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை–பஞ்ச பூதங்கள் -அஹங்காரம் -புத்தி யாவது மஹத் தத்வம் –
பஞ்ச கரணீ -பஞ்சா நாம் கரணா நாம் சமா காரா – கரணங்கள்-அதாவது ஞான இந்திரியங்கள் இங்கே – –
மேலே ப்ரக்ருதி இந்திரிய சப்தத்தால் கர்ம இந்திரியங்கள் / சுவாந்தம் -மனஸ்ஸூ
ஆவரணைஸ் -சப்த ஆவாரணங்களோடு கூடவும்
பூர் புவஸ் ஸ்வர் வத-பூ புவ சுவ லோகங்கள்
தான் சஹஸ்ரம் அண்டான்-பிரசித்தமான ஆயிரக் கணக்கான அண்டங்கள்
அகரோத் -ஸ்ருஷ்டித்து அருளினான்

உம்முடைய முக உல்லாஸத்தையே தனது பேறாக வுடைய உன் ப்ரிய வல்லபன்
உம்முடைய விஹார அர்த்தமாகவே –
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் மர்ம இந்த்ரியம் ஐம் பூதம் இங்கிவ் வுயிரேய் ப்ரக்ருதி மானங்கார மனங்களே -என்னப்பட்ட தத்வங்களோடும்
ஸப்த ஆவாரணங்களோடும்
பூர் புவஸ் ஸ்வர் லோகங்களோடும் கூடின -ஸ்ரீ விஷ்ணு புராணாதி சித்தங்களான பல்லாயிர மண்டபங்களை படைத்து அருளினான் என்றாராயிற்று-லீலா விபூதி இருவருக்கும் லீலார்த்தமாக இருந்தாலும்
பிராட்டியுடைய லீலையைக் கணிசித்தே என்றது பரம ரசிகத்வத்தை சொன்னவாறு –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகிய மணவாளன்,
அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ?
அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து
ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான்.
மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.

ப்ரளயம் முடிந்து சேதனங்களும் அசேதனங்களும் ஒரே குவியலாக, இறகு ஒடிந்த பறவைகளாகக் கிடந்தன.
இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் –
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற – என்று அருளிச் செய்தார்.
இவ்விதம் இவர்கள் கிடப்பதைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை அடைந்து விடக் கூடாது என்று
நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.

தன் அருகில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் மீது மலர்க் குவியல்கள் உள்ளதை அழகிய மணவாளன் கண்டான்.
அப்போது அவன் திருவுள்ளத்தில், “இந்தக் குவியல் போன்று அல்லவா ஜீவன்கள் அங்கு குவியலாகக் கிடக்கின்றன”, என்று எண்ணினான்.
இந்த மலர்கள் பயன்படுவது போன்று, அந்தக் குவியலும் பயன்பட வேண்டும் என்று எண்ணியவனாக ஸ்ருஷ்டியைத் தொடங்கினான்.

————-

இந்த பிரக்ருதியினாலேயே சேதனர்களை கலக்கி இறைவன் பிராட்டிக்குப்
பரிஹாச ரசம் விளைவிக்கிறார் என்கிறார்-

சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ஸய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம்
வைஷ்ணவ்யா குண மாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந்
ஸ்ரீரங்கேஸ்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–ஸ்லோகம் -20-

சப்தாதீன் விஷயான் பிரதர்ஸய விபவம் விஸ்மார்யா தாஸ்யாத்மகம்
ஒலி முதலிய நுகரும் பொருள்களை காட்டி -அடிமை வடிவான-கைங்கர்ய தநம் –
அடிமைச் செல்வத்தை மறக்கச் செய்து –பல நீ காட்டிப் படுப்பயோ
நுகர்வித்து என்னாமல் காட்டி -பிரதர்ஸய என்று கொடுமையைக் காட்டியபடி –
இழக்கும்படி செய்து என்னாமல் மறக்கும்படி செய்து -விஸ்மார்ய-என்றது ஆத்மாவுக்கு உரிய செல்வம் தாஸ்யம்

இழந்து இல்லாமல் மறந்து -ஸ்வரூபம் தாஸ்யம் தானே -இழக்க முடியாதே -மறந்து இருப்பதை ஆச்சார்யர் காட்டக் கண்டு உணர்கிறோம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் –

பூர்வ புமான் -ஆதி புருஷனான ஸ்ரீ ரங்க நாதன் –
வைஷணவ்யா குண மாயயா யாத்ம நிவ ஹான் விப்லாவ்ய –
விஷ்ணுவான தன்னைச் சேர்ந்த முக் குணங்கள் வாய்ந்த பிரக்ருதியினாலே ஆத்மா வர்க்கங்களை கலக்கி –கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டே இங்கே
குணமாயா சமாவ்ருத -ஜிதந்தே -குணமய மம மாயா -ஸ்ரீ கீதை –

பும்ஸா பண்யவதூ விடம்பிவபுஷா தூரத்தா நிவா யாசயன்
பண்யவதூ -விலை மாதரை
விடம்பி -ஒத்த
வபுஷா -வேஷம் அணிந்த
பும்ஸா -புருஷனாலே
தூர்த்தான் இவ -காமுக புருஷரைப் போலே
ஆயாசயன் -வருத்தமுறச் செய்து கொண்டு –

வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் –1-6-1-

பெரிய திருமொழி -1-6-1-வ்யாக்யானத்தில்
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன் –
தங்கள் பருவத்தாலே இதினுடைய தண்மை நெஞ்சில் படாதபடியாக
மறைத்து கொடு போருகிறவர்கள் உடைய கலவி
இடையாட்டத்தை இப்போது லஜ்ஜித்தேன் – ஆண் பிள்ளைச் சோறாள்வியை-ஸ்திரீ வேஷம் கொண்ட புருஷனை -ஸ்திரீ என்று பின் தொடருமா போலே

இருப்பதொன்று இறே சப்தாதி விஷயங்களில் போக்யதா புத்தி பண்ணி பின் தொடருகை யாகிற இது–  வெளிச் செறிப்பு பிறந்த அநந்தரம் லஜ்ஜித்து கை வாங்க வேண்டுமத்தை இறே நெடுநாள் ஆதரித்துப் போந்தது –-பெரியவாச்சான் பிள்ளை –

கொடுத்த சைதன்யம் தான் பொதுவாய் ருசி பேதத்தாலே வழி விலகிப் போய் அனர்த்தத்தை விளைவித்துக் கொண்டு
இருக்கிற படியைக் கண்டு –நாம் ஒன்றை நினைத்துச் செய்ய இவை ஒன்றைச் சூழ்த்துக் கொண்டபடி கண்டாயே –
என்று பிராட்டி திரு முகத்தைப் பார்த்து ஸ்மிதம் பண்ண
அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாய்த் தலைக்கட்டும் -என்ற-3-10- ஈட்டின் ஸ்ரீ ஸூக்திகள்-

ஸ்ரீரங்கேஸ்வரி கலப்பதே தவ பரீஹாசாத் மநே கேளயே–
நினது பரிஹாச ரூபமான விளையாட்டிற்கு வல்லவன் ஆகிறான் –

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?
இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான்.
அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான்.
இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

தூர்த்தர் என்னும் பதம் காண்க.
இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின் பின்னே செல்பவன் என்பதாகும்.
இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.

மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே.’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.

பொல்லாத புலன் ஐந்தும் நன்கு காட்டிப் பொன்னடிமைத் திறத்தினையே மறக்கச் செய்து
தொல்லாதி புருடனுயிர்களை மயக்கி விண்டு குண மாயையினால் பொது வென் சொல்லார்
நல்லார் போல் நய வடிவம் பூண்ட ஆணால் நயக்கின்ற காமுகரைப் போல் வருத்தி
வல்லானாய் நினது நகைச் சுவை யாட்டத்தில் வளரரங்க நாயகியே விளங்குகின்றான் -20-

விசித்ரா தேக ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும்-பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா
என்கிறபடியே -பகவத் விஷயத்தில் விநியோகிக்க கொடுத்தவை கொண்டு விஷயாந்தரங்களில் போவதே –
ஹே ஸ்ரீரங்கேஸ்வரி
பூர்வ புமான்-புராண புருஷராகிய உம் கேள்வன்
சப்தாதீன் விஷயான் பிரதர்ஸய -சப்தாதி விஷயாந்தரங்களைக் காட்டி
தாஸ்யாத்மகம் விபவம் விஸ்மார்ய-பகவத் சேஷத்வம் ஆகிற ஐஸ்வர்யத்தை மறக்கச் செய்து
பண்யவதூ விடம் பும்ஸா-விலை மாதின் வேஷம் கொண்ட புருஷனாலே –புருஷ ஸ்தானத்தில் தைவீ மாயா –
தூரத்தாந் இவ-தூர்த்தர்களை வஞ்சிப்பது போலே
வைஷணவ்யா குண மாயயா–தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா-என்றபடி
விஷ்ணுவான தன்னால் நிரூமிக்கப் பட்டதாய் குண த்ரயாத்மகமான மாயையினால்
ஆத்ம நிவஹான் விப்லாவ்ய -ஜீவ ராசிகளை வஞ்சித்து
ஆயாசயன்-பரிசிரமப்படுத்தா நின்றவராய்க் கொண்டு
தவ பரீஹாசாத் மநே  கேளயே கல்ப்பதே-தேவரின் விளையாட்டின் பொருட்டு சமர்த்தர் ஆகிறார்

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?
இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான்.
அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

இங்கு நாம் தடுமாறும் பல நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறார்.
முதலில் நாம் பகவானுக்கு அடிமைப் பட்டவர்கள் என்பதை மறக்கடிக்கிறான்.
இதுவே ஸம்ஸார கலக்கத்திற்கு முதல் படியாகும்.
அடுத்து, நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்துகிறான்.
இதன் மூலம் நம்மை ஸம்ஸாரக் கடலில் அழுத்துகிறான்.
மூன்றாவதாக சிற்றின்ப விஷயங்களில் தள்ளுகிறான்.

அவித்யா கர்மா வாசனை -இவையே விஷயாந்தரங்கள் ப்ராவண்யம் வரக் காரணம்
மறந்தேன் உன்னை முன்னம் -அஞ்ஞானம் -பொய் நின்ற ஞானம் -அது அடியாகப் பொல்லா ஒழுக்கம் -அதுக்கு அடியாக அழுக்கு உடம்பு அன்றோ-

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
லீலா விபூதியை விட மும் மடங்கு
விராஜா நதி
பரம பதம்
அதில் ஸ்ரீ வைகுண்டம் –
விழுந்து விழுந்து சேவித்து
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் விவரிக்கும் –
முன்னுரை -20 -லீலா விபூதி இவளுக்காக பார்த்தோம்
மேல் மூன்று ஸ்லோகங்கள் நித்ய விபூதி விவரணம்
மா மணி மண்டபம் அடைந்து

———-———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading