ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–56– மைத்ராவருணித்வ ப்ராப்தி (மைத்ரா வருணன் என்ற நிலையை அடைதல்)–

அத்தியாயம் 56 (593) மைத்ராவருணித்வ ப்ராப்தி (மைத்ரா வருணன் என்ற நிலையை அடைதல்)

லக்ஷ்மணன் இதைக் கேட்டு தன் சந்தேகத்தை வெளிப் படுத்தினான்.
அசேதனர்கள் ஆனார்கள் என்றால், சரீரத்தை விட்டு எங்கே சென்றார்கள்?
அதன் பின் சரீரம் எப்பொழுது கிடைத்தது.?

ராமர் சொன்னார். இருவரும் தார்மிகர்களே. பரஸ்பரம் சாபம் கொடுத்து சரீரத்தை விட்டவர்கள். வாயு ரூபமாக ஆனார்கள்.
இருவரும் தவ வலிமை மிக்கவர்கள். சரீரத்தை இழந்த வசிஷ்டர், தன் தந்தையான ப்ரும்மாவிடம் சென்றார்.

தேவதேவனான ப்ரும்மாவை வணங்கி, பகவன், நிமி என்னை சபித்து விட்டான். அதனால் தேகம் இன்றி இருக்கிறேன்.
பத்மத்தில் தோன்றிய தேவா, மகா தேவா, நான் வாயுபூதனாக நிற்கிறேன்.
தேகம் இல்லாமல் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறேன்.

யாரானாலும், சரீரம் இல்லையென்றால் துன்பம் தானே.
என் காரியங்கள் எல்லாம் சரீரம் இல்லாததால் தடை பட்டுக் கிடக்கின்றன. என்னிடம் கருணை காட்டுங்கள்.

பிதாமகரும், இதைக் கேட்டு, மித்ராவருண ரூபத்தை எடுத்துக் கொள்.
அயோனிஜனாக (சரீரத்திலிருந்து பிறக்காமல் தானாக உண்டாவது). என்றும் இருப்பாய்.
உன் தர்ம காரியங்களைச் செய்து வா. பிறகு என்னிடம் வருவாய் என்றார்.

வசிஷ்டரும், ப்ரும்மாவை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்று, வருணாலயம் சென்றார்.
அதே சமயம், மித்ரனும், காலனுக்கு வருணத்வம் அளித்தான்.

க்ஷிராப்தி-பாற்கடலில் உடன் தோன்றியவன் என்பதால். அதே பாற்கடலில் உதித்த ஊர்வசி என்ற
அப்ஸர ஸ்திரீயும் தன் சகிகளுடன் அந்த இடம் வந்து சேர்ந்தாள்.
அழகிய வடிவம் கொண்ட அவளைக் கண்டு வருணன் மோகம் கொண்டான். தன்னுடன் வரும்படி அழைத்தான்.

அவளோ, கை கூப்பி அஞ்சலி செய்தவளாக, வினயத்துடன், சுரேஸ்வரா,
உனக்கு முன் மித்ரன் என்னை வரித்து விட்டான்.

காமன் வசத்தில் இருந்த வருணனோ, வற்புறுத்தி அவளை பணிய வைத்தான்.
இதன் பின் ஊர்வசி மித்ரனிடம் சென்றாள்.

நான் முன்னால் அழைத்திருக்கும் பொழுது, நீ இன்னொருவனிடம் கூடி குலாவி விட்டு வருகிறாய்,
துஷ்ட சாரிணீ, என் கோபத்துக்கு ஆளானாய். பூலோகம் சென்று பிறப்பாய் என்றான்.

இதனிடையில், புதனுடைய மகன், காசிராஜன், ராஜரிஷியாக இருந்தவன், தன் தேஜஸை ஒரு கும்பத்தில் சேர்த்து வைத்தான்.
அவன் உனக்கு கணவனாக ஆவான்.இதன் பின் அவள் சாபத்தின் காரணமாக புரூரவஸின் மனைவியாக ஆனாள்.
அவனிடம் நகுஷனைப் பெற்றாள். இந்திரனை வஜ்ரத்தால் வதைத்து விட்டு, நூறு வருஷங்கள்,
மறைந்து வாழ்ந்த பொழுது இந்த நகுஷன், இந்திர பதவியை வகித்தான்.

ஊர்வசியும் தன் சாப காலம் முடியும் வரை பூலோகத்தில் வசித்து விட்டு இந்திர லோகம் சென்றாள்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading