ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.130–ஸ்ரீ ப4ரத சமாக3ம: (ஸ்ரீ பரதனை சந்தித்தல்)–

samIkuruta nimnAni viShamANi samAni cha || 6-127-6
sthAnAni cha nirasyantAM nandigrAmAditaH param |

6. nimnaani = let the cavities (on the path); itaH nandigraamaat = from this Nandigrama; param = to the other end (Ayodhya); samiikuruta = be levelled; viShamaaNi samaanicha = Let the rough and the even; sthaanaani = places; nirasyantaam = be made flat.

“Let the cavities on the path from Nandigrama to Ayodhya be levelled. Let the rough and the even places be made flat.”

tatastachchhaasanaM shrutvaa shatrughnasya mudaanvitaaH || 6-127-10
dhR^iShTirjayanto vijayaH siddhaarthashchaarthasaadhakaH |
ashoko mantrapaalashcha sumantrashchaapi niryayuH || 6-127-11

10-11. tataH = thereupon; shrutvaa = on hearing; tat shaasanam = that command; shatrughnasya = of Shatrughna; dhR^iShTii = Dhrushti;jayantaH = Jayanta; vijayah = Vijaya; siddhaarthashcha = Siddhartha; arthasaadhakaH = Arthasadhaka; ashokaH = Ashoka; mantrapaalashcha = Mantrapala; sumantrashchaapi = and Sumantra; niryayuH = proceeded; mudaa anvitaaH = with joy.

On hearing that command of Shatrughna, Dhrushti, Jayanta, Vijaya, Siddhartha, Arthasadhaka, Ashoka, Mantrapala and Sumantra proceeded with joy.

tato yAnAnyupArUDhAH sarvA dasharathastriyaH |
kausalyAM pramukhe kR^itvA sumitrAM chApi niryayuH || 6-127-15
kaikeyyaa sahitaaH sarvaa nandigraamamupaagaman |

15. tataH = then; sarvaaH = all; dasharathastriyaH = the wives of the deceased Dasaratha; kausalyaam sumitraamchaapi pramukhe kR^itvaa = keeping Kausalya and Sumitra in front of them; upaaruuDhaaH = mounting; yaanaami = their vehicles; niryayuH = issued forth; sarvaaH = all of them;kaikeyyaa sahitaaH = including Kaikeyi; upaayayuH = reached; nandigraamam = Nandigrama.

Then, all the wives of the deceased Dasaratha, placing Kausalya and Sumitra in front of them, mounting their vehicles, issued forth. All of them, including Kaikeyi, reached Nandigrama.

kachchinna khalu kApeyI sevyate chalachittatA |
na hi pashyAmi kAkutsthaM rAmamAryaM parantapam || 6-127-23

23. na sevyate khalu kachchit = Indeed; I hope you have not indeed resorted to; chalachittataa = the fickle-mindedness; kaapeyii = peculiar to the monkeys?; na pashyaami hi = for; I do not indeed see; raamam = Rama; aaryam = my brother; kaakuttsa = who was born in Kakutthsa dynasty;paramtapam = and destroyer of adversaries.

“Indeed, I hope the fickle-mindedness which constitutes the peculiarity of monkeys, has not been resorted to by you. For I do not indeed see Rama, a worthy scion of Kakutthsa and the destroyer of adversaries.”

etasminbhrAtarau vIrau vaidehyA saha rAghavau || 6-127-31
sugrIvashcha mahAtejA rAkShasendro vibhIShaNaH |

31. etasmin = in this aerial car are; viirau = the valiant; raaghavau = Rama and Lakshmana; bhraatarau = the brothers; vaidehyaa saha = along with Seetha; mahaatejaaH = the immensely brilliant; sugriivashcha = Sugreeva and; vibhiiShaNashcha = Vibhishana; raakShasaH = the demon.

“In the same aerial car are the valiant Rama and Lakshmana, the brothers, along with Seetha, the immensely brilliant Sugreeva and Vibhishana the demon.”

manasA brahmaNA sR^iShTe vimAne lakShmaNAgrajaH || 6-127-35
rarAja pR^ithudIrghAkSho vajrapANirivAparaH |

35. bharataagrajaH = Rama; pR^ithudiirghaakShaH = with his long and large eyes; vimaane = seated in the aerial car; sR^iShTe = created;brahmaNaa = by viswakarma the divine architect; manasaa = with his intelligence; raraaja = shone; aparaH vajrapaaNiriva = like another Indra who carries the thunderbolt in his hand.

Rama, with his long and large eyes, seated in the aerial car, created by Viswakarma the divine architect with his intelligence, shone like another Indra who carries the thunderbolt in his hand.

taM samutthApya kAkutsthashchirasyAkShipathaM gatam || 6-127-39
a~Nke bharatamAropya muditaH pariShaShvaje |

39. samutthaapya tat = fully rising from his seat; aaropya tam bharatam = and placing that Bharata; akShipatham gatam chiraaya = who was seen after a long time; aN^kam = on his lap; kaakutthsaH = Rama; muditaH = delightfully; pariShvaje = embraced him.

Fully rising from his seat and placing that Bharata, who was seen after a long time, on his lap, Rama delightfully embraced him.

sugrIvaM kaikayI putro jAmbavantaM tathA~Ngadam || 6-127-41
maindaM cha dvividaM nIlamR^iShabhaM chaiva sasvaje |

41. atha = then; kaikeyii putraH = Bharata; pariShasvaje = embraced; sugriivam = Sugreeva; jaambavantam = Jambavan; aN^gadam = Angada;maindam = Mainda; dvividam chaiva = Divivida; niilam = Neela; R^iShabham = and Rishabha.

Then, Bharata embraced Sugreeva, Jambavan, Angada, Mainda, Dvivida, Neela and Rishabha.

tvamasmaakaM chaturNaaM vaibhraataa sugriiva paJNchamaH || 6-127-45
sauhaardaajjaayate mitramapakaaro.arilakShaNam |

45. sugriiva = O Sugreeva!; tvam = you; paN^chamaH = are a fifth; bhraataa = brother; asmaakam chaturNaam = for all the four of us; mitram = a friend; jaayate = is born; sauhaardaat = of affection; apakaaraH = malifience; arilakShaNam = is the attribute of an adversary.

“You are a fifth brother, for all the four of us, O Sugreeva! A friend is born of affection, while malifience is the attribute of an adversary.”

shatrughnashcha tadA rAmamabhivAdya salakShmaNam || 6-127-47
sItAyAshcharaNau pashchAdvavande vinayAnvitaH |

47. tadaa = then; viiraH = the valiant; shatrughnashcha = Shatrughna; abhivaadya = offered his salutation; raamam = to Rama; sa lakShmaNam = along with Lakshmana; abhyavaadayat = and offered his reverential salutation; siitaayaaH charaNau = to Seetha’s feet; vinayaat = by bowing in humility.

Then, the valiant Shatrughna offered his salutation to Rama, along with Lakshmana and offered his reverential salutation to Seetha’s feet, by bowing in humility.

pAduke te tu rAmasya gR^ihItvA bharataH svayam || 6-127-52
charaNAbhyAM narendrasya yojayAmAsa dharmavit |

52. gR^ihiitvaa = taking; te = those; paaduke = wooden sandals; raamasya = of Rama; bharataH = Bharata; dharmavit = the knower of virtue;svayam = personally; yojayaamaasa charaNaabhyaam = placed them below the feet; narendrasya = of Rama; the lord of men.

Taking those wooden sandals of Rama, Bharata, the knower of virtue, personally placed them below the feet of Rama, the lord of men.

avekShatAM bhavAnkoshaM koShThAgAraM puraM balam || 6-127-55
bhavatastejasA sarvaM kR^itaM dashaguNaM mayA |

55. bhavaan = you; avekShataam = review; kosham = your treasury; koShThaagaaram = granary; gR^iham = palace; balam = and army; bhavataH tejasaa = by virtue of the power of your spirit; sarvam = everything; kR^itam dashaguNam = has been enhanced tenfold; mayaa = by me.

“You review your treasury, granary, palace of your spirit, everything has been enhanced tenfold by me.”

tataH praharShAdbharatama~NkamAropya rAghavaH || 6-127-57
yayau tena vimAnena sasainyo bharatAshramam |

57. aaropya = placing; bharatam = Bharata; aN^kam = on his lap; raaghavaH = Rama; praharShaat = with delight; tataH = thereupon; yayau = went; tena vimaanena = in that aerial car; bharataashramam = to the hermitage of Bharata; sasainyaH = along with the army.

Placing Bharata on his lap with delight, Rama thereupon flew with his army (of monkeys and bears) in that aerial car to the hermitage of Bharata.

purohitasyAtmasamasya rAghavo |
bR^ihaspateH shakra ivAmarAdhIapH |
nipIDya pAdau pR^ithagAsane shubhe |
sahaiva tenopavivesha vIryavAn || 6-127-62

62. nipiiDya = affectionately pressing paadau = the feet; aatmasamasya purohitasya = of his family-priest (Vasishta the sage); who was his well-wisher; shakraH iva = even as Indra; amaraadhipaH = the lord of celestials; (would press the feet); bR^ihaspataH = of Brihaspati (the preceptor of gods); viiryavaan raaghavaH = the valiant Rama; upavivesha = sat; tena sahsha = by his side; shubhe pR^ithagaasane = on a separate seat.

Affectionately pressing the feet of Vasishta, his well-wisher and family-priest, even as Indra the lord of celestials would press the feet of Brihaspati (the preceptor of gods), the valiant Rama sat by his side, on a separate seat.

———————————————————————————————

அத்தியாயம் 130 (537) ஸ்ரீ ப4ரத சமாக3ம: (ஸ்ரீ பரதனை சந்தித்தல்)

நடந்த விவரங்களைக் கேட்டு பரமானந்தம் அடைந்த பரதன், சத்ருக்னனுக்கு கட்டளையிட்டான்.
தேவாலயங்களும், நாற்கால் மண்டபங்களும், ஊரில் உள்ள எல்லா மாளிகைகளும்,
வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரிக்கப் படட்டும், ஊர் முழுவதும் சுத்தம் செய்து, ஜனங்களும் ஸ்நானம் செய்து
சுத்தமாக இருக்கச் செய். பாடகர்களும், துதி பாடும் மாகதர்களும், வைதானிகர்கள், வாத்யம் வாசிப்பதில் தேர்ந்தவர்கள்,
கணிகா ஸ்த்ரீகள் கூட்டமாக ராமனை எதிர் கொண்டழைக்கச் செல்லட்டும்.

சந்திரன் போன்ற அவன் முகத்தைக் கண்டு வாழ்த்தி வரவேற்கட்டும். பரதன் கட்டளையை ஏற்று சத்ருக்னன்,
ஆயிரக் கணக்கான சேவகர்களை இந்த வேலைகளைச் செய்ய நியமித்தான்.
நந்தி கிராமத்திலிருந்து அயோத்தி வரையிலான பாதை பள்ளங்களை நிரப்பி, சமமாக்குங்கள்.
வளைந்து செல்லும் பாதையை நேராக ஆக்குங்கள். பாதையை ஸ்திரமாகச் செய்யுங்கள்.
குளிர்ந்த ஜலம் தெளித்து வழி முழுவதும்f, சீதளமாக இருக்கச் செய்யுங்கள்.
மற்றும் சிலர், பொரி, புஷ்பங்கள், இவைகளை சேகரித்து வழியில் மங்களகரமாக இரைத்து வையுங்கள்.

பதாகங்கள் தூக்கி உயரே கட்டப் படட்டும். நகரின் வழிகளில் ஆங்காங்கு கொடிகள் உயரே பறக்கட்டும்.
சூரியோதய சமயம் வீடுகள் பிரகாசமாக அலங்கரிக்கப் பட்டு இருக்கச் செய்யுங்கள். பூ மாலைகள், உதிரி புஷ்பங்கள்,
ஐந்து வர்ணங்கள் கொண்டு வாசனை மிகுந்த மலர்களை வழி முழுவதும், ராஜ மார்கம் நிறைய ஜனங்கள் வீசியபடி செல்லட்டும்.

ராஜ தாரா: – அரசனின் ராணிகள், மந்திரிகள், சைன்யம், சேனையைச் சேர்ந்த பெண்கள், ப்ராம்மணர்கள்,
அக்கம் பக்க அரச குடும்பத்தினர், சேனையில் முக்கிய பதவி வகிப்பவர்கள், எல்லோரும் வரவேற்க கூடுங்கள்.
இதைக் கேட்டு த்ருஷ்டி, ஜயந்தன், விஜயன், சித்தார்த்தன், அர்த்த சாதகன், அசோகன், மந்த்ர பாலன், சுமந்திரன்
யாவரும் வெளி வந்தனர். மதம் கொண்ட ஆயிரம் யானைகள் தயாராயின.

இவைகளுக்கு பொன்னாலான முகப் படம் போட்டு அலங்கரித்தனர். மற்றும் சிலர் தங்க சாலையில் இருந்து
குட்டிகளுடன் பெண் யானைகளை அழைத்து வந்தனர். சிலர் குதிரைகளில் ஏறி வேகமாக வந்தனர்.
மற்றும் சிலர் ரதங்களை தயார் செய்து கொண்டு வந்தனர். சக்தி, இஷ்டி, ப்ராஸ எனும் ஆயுதங்களை ஏந்திய வீரர்கள்
குதிரைகளின் மேல் பவனி வந்தனர். உயரத் தூக்கி பிடித்த கொடிகளுடன் ஆயிரக் கணக்கான பிரமுகர்கள் இதில் ஏறி வந்தனர்.

கால் நடையாகவும் பலர் வந்தனர். தசரதனின் மனைவிகள் தகுந்த வாகனங்களில் ஏறி நந்தி கிராமம் வந்து சேர்ந்தனர்.
கௌசல்யாவை முன்னால் நிறுத்தி, சுமித்ரையையும் சூழ்ந்து வந்தனர். கைகேயியையும் உடன் அழைத்துக் கொண்டு
எல்லோருமாக நந்தி கிராமத்தை வந்தடைந்தனர். ஊர் கொள்ளாமல் நந்தி கிராம நகரம் கல கலப்பாகியது.
ரதத்தின் ஓடும் சப்தமும், குதிரைகளின் கணைக்கும் சத்தமும், சங்க, துந்துபி கோஷங்களும் மேதினியே ஆட்டம்
கண்டது போல கோலாகலமாக விளங்கியது. ப்ராம்மணர்களில் முக்கியமானவர்களும், வேத கோஷம் செய்யும்
வேத விற்பன்னர்களும், மாலை, மோதகம் இவைகளை கையில் ஏந்திய மந்திரிகளும் பரதனை சூழ்ந்து நின்றனர்.

வந்திகள் எனும் துதி பாடகர்கள் வாழ்த்த, சங்க, பேரி, இவை வாசிக்கப் பெற்று வரவேற்க,
ஆர்ய பாதௌ- ராமனின் பாதுகையை எடுத்துக் கொண்டு தலையில் வைத்தபடி, வெண் சாமரம், வெண்ணிற மாலை,
இவைகளையும், வெண்மையான கொற்றக் கொடி, வால வ்யஜனம் எனும் சாமரங்கள், அரசனுக்குரியதாக,
பொன்னால் வேலைப் பாடு செய்யப் பெற்றதாக, இவைகளுடன் உபவாசத்தால் இளைத்து துரும்பாகி இருந்தாலும்,
மரவுரியும், மான் தோலையும் தரித்து சகோதரன் வருகையை எதிர்பார்த்து
அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி முகத்தில் தெரிய, பரதன் முன்னால் நின்றான். மந்திரிகள் தொடர்ந்தனர்.

பவனாத்மஜனைப் பார்த்து பரதன், வானர இயல்பான குறும்பு எதுவும் செய்யவில்லையே. ராமனை இன்னமும் கானவில்லையே.
வானரங்கள் இஷ்டம் போல உருவம் எடுக்க வல்லவர்கள் என்று சொன்னாயே, யாரையும் காணோமே என்று கவலையுடன் கேட்டான்.
ஹனுமான் இதைக் கேட்டு சமாதானம் செய்யும் விதமாக பொருள் பொதிந்த வார்த்தைகளைச் சொன்னான்.
பரத்வாஜ ஆசிரமத்தில், பழம் நிறைந்த மரங்கள், தேன் சொரியும் புஷ்பங்களுடன் உள்ள மரங்களும் நிறைய இருந்திருக்கும்.

பரத்வாஜரின் அனுமதியுடன் இங்கு குதித்து கும்மளமிட்டுக் கொண்டு வானரங்கள் தாமதம் செய்கின்றன போலும்.
இந்திரனும் வரம் கொடுத்திருக்கிறான். சைன்யத்துடன் பரத்வாஜர் முன்பு ஆதித்யம்-விருந்தோம்பலை செய்தவர் தானே.
இதோ கேளுங்கள். மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் வானரங்களின் கூச்சல் கேட்கிறது.
வானர சேனை கோமதி நதியைக் கடக்கிறது என்று நினைக்கிறேன். வாலகினி நதியை நோக்கி
புழுதி படலமாக எழுந்து நிற்பதைப் பாருங்கள். இதோ சால வனம். ரம்யமாக இருந்தது.

வானரங்கள் அந்த வனத்தில் அட்டகாசம் செய்கின்றன போலும். இதோ, தூரத்தில் சந்திரன் உதித்தது போல,
புஷ்பக விமானம் தெரிகிறது. ப்ரும்மா தன் மனதில் கற்பனையில் நிர்மாணித்தது.
ராவணனை பந்துக்களோடு அழித்து மகாத்மாவான விபீஷணன் கைக்கு வந்துள்ளது.
இளம் சூரியன் போன்ற வாகனம். ராம வாகனம் தான். குபேரனுடைய கருணையால், மனோ வேகத்தில் செல்லும்
இந்த திவ்யமான விமானம் கிடைத்தது. இதில் தான் ராகவர்கள், ராம லக்ஷ்மணர்கள் சீதையுடன் வருகிறார்கள்.

மகா தேஜஸ்வியான சுக்ரீவனும், ராக்ஷஸ ராஜா விபீஷணனும் வருகிறார்கள். உடனே பெரும் ஆரவாரம் எழுந்தது.
வானளாவ எழுந்த பெரும் சப்தம், இதோ ராமன் என்று சொன்னதும், வரவேற்கும் விதமாக எழுந்தது.
ரதங்களிலும், யானைகளிலும், குதிரைகளிலும் இருந்தவர்கள் இறங்கி பூமியில் நின்றனர்.
ஆகாயத்தில் சந்திரனைக் காண்பது போல விமானத்தில் இருந்த ராமரைக் கண்டனர்.
பரதன் கை கூப்பிய வாறு ராமரை எதிர் கொண்டு சென்றான். ஸ்வாகதம் கூறி வரவேற்றான்.
ப்ரும்மா தன் மனதால் ஸ்ருஷ்டி செய்த விமானத்தில் பரதன் முன் பிறந்தோன், நீண்ட கண்களுடன் மற்றொரு இந்திரன் போல விளங்கினார்.

விமானத்தின் முன் சென்ற பரதன், சகோதரனை வணங்கினான். மேருவில் நின்ற பாஸ்கரனை வணங்குவது போல வணங்கினான்.
ராமனின் அனுமதியுடன் விமானம் பூமியில் இறங்கி நின்றது. விமானத்தில் பரதனை ஏற்றினார்கள்.
ராமன் அருகில் சென்று மகிழ்ச்சியுடன் திரும்பவும் அபிவாதனம் செய்தான்.
வெகு நாட்களுக்குப் பின் கண்களில் தென்பட்ட பரதனை மடியில் இருத்திக் கொண்டு ராமர் இறுக அணைத்துக் கொண்டார்.
பின் லக்ஷ்மணன் அருகில் சென்று அவனையும், வைதேஹியையும் பரதன் வணங்கினான்.

தன் பெயர் சொல்லி சுக்ரீவனையும், ஜாம்பவானையும் வணங்கினான்.
பின் அங்கதனையும் மைந்தன், த்விவிதன், நீலன், ரிஷபன் இவர்களையும் அணைத்து வரவேற்றான்.
சுஷேணனையும், நளன்., க3வாக்ஷன் இவர்களையும் அப்படியே வரவேற்றான்.
இவர்களும் மனித உருவம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் குசலம் விசாரித்தனர்.
இதன் பின் அரச குமாரன் சுக்ரீவனிடம், நாங்கள் நால்வர் சகோதரர்களாக இருந்தோம்.
உன்னுடன் ஐவரானோம். என்றான். சினேகம் அன்பினால் வளருகிறது.
துரோகம் செய்வது எதிரிகளின் லக்ஷணம் என்றான். விபீஷணனையும் பார்த்து, அதிர்ஷ்ட வசமாக தங்கள் உதவியும் கிடைத்தது.

அதனால் தான் இந்த அரிய செயலை எளிதாக செய்ய முடிந்தது என்றான். சத்ருக்னனும் அதே போல
ராமரை வணங்கி லக்ஷ்மணனையும் வணங்கி, சீதையின் சரணங்களைப் பற்றி, வினயத்தோடு வணங்கினான்.
ராமரும், வெகு காலமாக பிரிந்திருந்த தாயை சென்று வணங்கினார். தாய் உள்ளம் உவகையால் பூரிக்க,
சுமித்ரையையும். கேகய ராஜ குமாரியான கைகேயியையும் வணங்கினார். தாய் மார்களை விட்டு புரோகிதரை அணுகியதும்,
அவர்கள் ஸ்வாகதம் சொன்னார்கள். கௌசல்யானந்த வர்தனா, உனக்கு நல் வரவு என்று வரவேற்றனர்.
நகரத்து ஜனங்களும் அவ்வாறே கை கூப்பியவர்களாக ஸ்வாகதம் சொன்னார்கள்.

ஆயிரக் கணக்கான நகர ஜனங்களின் கூப்பிய கைகள், பல ஆயிரம் தாமரை மொட்டுகளாக ராமன் கண்களுக்குத் தெரிந்தன.
ராம பாதுகையை பரதன் தானே கொண்டு வந்து நரேந்திரனான ராமனின் கால்களில் அணிவித்தான்.
ராமனைப் பார்த்து ராஜன்| இதோ இந்த பாதுகைகளை காப்பாற்றி ராஜ்யத்தோடு திருப்பிக் கொடுத்து விட்டேன்.
இன்று என் ஜன்மம் க்ருதார்த்தமாயிற்று. என் கஷ்டங்கள் தீர்ந்தன என்றான். என் மனோரதம் பூர்த்தியாயிற்று என்றான்.

திரும்பி வந்து நீ அயோத்யாவின் அரசனாக பதவி ஏற்று, காண்போமா என்று இருந்தது.
இப்பொழுது இதோ பொக்கிஷம், செல்வம், ஊர், படை உங்கள் ஆசிர்வாதத்தால் பத்து மடங்காக உயர்த்தி வைத்திருக்கிறேன்.
இவைகளை பார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள். சகோதர பாசத்தின் எடுத்துக் காட்டாக பரதன் சொன்னதைக் கேட்டு,
வானரங்கள் ஆனந்த பாஷ்பம் சொரிந்தன. இதன் பின், பரதனை அருகில் இருத்தி அணைத்துக் கொண்டு
அந்த விமானத்திலேயே பரதாஸ்ரமம் சென்றனர். பரதாஸ்ரமம் அடைந்து சேனைகளோடு விமானத்திலிருந்து இறங்கி பூமியில் நின்றார்.
விமானத்தைப் பார்த்து நீ போய் வைஸ்ரவனை ஏற்றிச் செல்பவனாக திரும்பி போ. நான் அனுமதி தருகிறேன், என்று அனுப்பி விட்டார்.

ராமர் அனுமதி அளித்ததும், அந்த விமானம் வடக்கு நோக்கிச் சென்று, தனதன் எனும் குபேரனுடைய இருப்பிடத்தைச் சென்றடைந்தது.
புரோஹிதர் பாதங்களை வணங்கி, தனக்கு சமமாக இருந்தவரை, அமராதிபனான இந்திரன் ப்ருஹஸ்பதியை வணங்குவது
போல வணங்கி, அவரை மற்றொரு ஆசனத்தில் அமர்த்தி, பாதங்களை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு, தன் சுபமான ஆசனத்தில் அமர்ந்தார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading