ruddhaam tu nagariim dR^iShTvaa raavaNo raakShasa iishvaraH || 6-57-4
uvaaca amarShitah kaale prahastam yuddha kovidam |
4. dR^iSTvaa = seeing; nagariim = the City; ruddhaam = besieged; raavaNaH = Ravana; raakSaseshvaraH = the Lord of Demons; uvaacha = spoke; (as follows); prahastam = to Prahasta; yuddha kovidam = who was skilled in war-fare; aatmahitam = and who wished well of him; kaale = even at a critical time.
Seeing Lanka besieged, Ravana the Lord of Demons spoke as follows to Prahasta who was skilled in war-fare and who wished well of him even at a critical time.
aham vaa kumbha karNo vaa tvam vaa senaa patir mama || 6-57-6
indrajid vaa nikumbho vaa vaheyur bhaaram iidR^isham |
6. aham vaa = either I; kumbhakarNovaa = or Kumbhakarna; tvam vaa = or you; mama = my; senaapatiH = army-chief; indrajit vaa = or Indrajit;nikumbho vaa = or Nikumbha; vaheyuH = can bear; iidR^isham = such; bhaaram = a burden.
“Either myself or Kumbhakarna or yourself my army-chief or Indrajit or Nikumbha and none else could undertake such a task!”
aapat sa.nshayitaa shreyo na atra nihsa.nshayii kR^itaa || 6-57-11
pratiloma anulomam vaa yad vaa no manyase hitam |
11. samshayitaa = A skeptical; aapat = misfortune; shreyaH = is preferable; na = and not; niH samshayiikR^itaa = that which is certain; atra = here; tu = but; pratilomaanu lomam vaa = whether it is unpleasing to hear or no; (say what); manyase = you consider; yat = that which; hitam = is advantageous; naH = for us.
“A skeptical misfortune is preferable to one that is certain! Whether it is unpleasing to hear or not, say what you consider as an advantage to us.”
pradaanena tu siitaayaah shreyo vyavasitam mayaa || 6-57-14
apradaane punar yuddham dR^iShTam etat tathaiva naH |
14. pradaanena = to return; siitaayaaH = Seetha; vyavasitam = was resolved; mayaa = by me; shreyaH = as preferable; apradaane punaH = not to return Seetha; yuddham = (meant) war; tathaiva = dR^iSTameva = we foresaw this.
“To return Seetha was what I considered preferable. Not to do so meant war; we foresaw this.”
na hi me jiivitam rakShyam putra daara dhanaani vaa || 6-57-16
tvam pashya maam juhuuShantam tvad arthe jiivitam yudhi |
16. me = to me; jiivitam = life; na hi = is indeed not; rakSyam = to be spared; putra daara dhanaanicha = (nor) sons; wives or riches; tvam = you;pashya = see; maam = me; juhuuSantam = who wish to sacrifice; jiivitam = my life; tvadarthe = for your sake; yudhi = in the battle.
“Neither wives nor sons nor riches are going to be spared by me. See you me, intending to sacrifice my life for your sake in the battle.”
saa babhuuva muhuurtena tigma naanaa vidha aayudhaiH |
lankaa raakShasa viirais tair gajair iva samaakulaa || 6-57-21
21. muhuurtena = within a short while; saa laN^kaa = that City of Lanka; babhuuva = became; samaakulaa = filled; tai = with those; bhiimaiH = terrific; raakSasa viiraiH = demon-warriors; gajairiva = resembling elephants; naanaa vidhaayudhaiH = wielding various types of weaponry.
Within a short while, that City of Lanka was filled with those terrific demon-warriors, resembling elephants and wielding various types of weaponry.
tato du.ndubhi nirghoShah parjanya ninada upamaH || 6-57-29
shushruve shankha shabdash ca prayaate vaahinii patau |
29. vaahiniipatau = (While) Prahasta the General; prayaate = sallied forth; tataH = then; dundubhi nirghoSaH = the sound of a kettle-drum;ninadaH cha = the sound; vaaditraaNaam = of musical instruments; shN^kha shabdashcha = and the sound of couches; shushruve = were heard;puurayanniva = as though filling; mediniim = the earth; parjanya; ninadopamaH = resembling the roar of a cloud.
While Prahasta the general sallied forth, the sound of a kettle-drum, the resonance of musical instruments and the sound of conches were heard, as though filling the earth like the roar of a cloud.
saagara pratima oghena vR^itas tena balena saH || 6-57-33
prahasto niryayau tuurNam kruddhah kaala antaka upamaH |
33. vR^itaH = In the centre; tena = of that; balena = army; saagara prati maughena = vast as the sea; saH prahastaH = that Prahasta; kruddhaH = in his fury; niryayau = came forth; kaalaantakayamopamaH = appearing like Death at the end of the world.
In the centre of that army, vast as the sea, that Prahasta in his fury, came forth appearing like Death at the end of the world.
tataH prahastaH kapi raaja vaahiniim |
abhi pratasthe vijayaaya durmatiH |
vivR^iddha vegaam ca vivesha taam camuum |
yathaa mumuurShuh shalabho vibhaavasum || 6-57-46
46. tataH = thereafter; durmatiH = the evil-minded; prahastaH = Prahasta; pratasthe = sallied forth; vijayaaya = for victor; kapiraaja vaahiniim = towards the army of Sugreeva; mumurSuH = whom in his folly imagined he would destroy vivR^iddha vegaH cha = with an accelerated speed;shalabhaH iva = as a grasshopper; vibhaavasum = falls into a flame.
Thereafter, the evil-minded Prahasta sallied forth for victory towards the army of Sugreeva, whom in his folly, imagined he would destroy, with an accelerated speed as a grass-hopper rushes towards a flame.
——————————————————
அத்தியாயம் 57 (464) ப்ரஹஸ்த யுத்தம் (ப்ரஹஸ்தனுடன் யுத்தம் செய்தல்)
ராக்ஷஸேஸ்வரன் அகம்பனனின் வதத்தைக் கேட்டு மிகவும் கோபம் கொண்டான். வருத்தமும் தோன்ற முகம் வாடியது.
மந்திரிகளைக் கலந்தாலோசித்தான். சற்று நேரம் யோசித்து, அவர்கள் எண்ணத்தையும் அறிந்து கொண்டு,
காலையில் தன் படைகளின் நிலைமையை அறிந்து கொள்ளத் தானே சென்றான்.
லங்கா நகர பாதுகாவல் சரிவர இயங்குவதைக் கண்டான்.
த்வஜங்கள், பதாகங்கள் அலங்காரமாக பறந்து கொண்டிருந்தன.
பல ராக்ஷஸ சேனைகள் ஆங்காங்கு முகாமிட்டு இருப்பதைக் கண்டான்.
வெளியே பகைவர்கள் முற்றுகையிட்டிருந்ததால், கோட்டைக்குள் உற்சாகம் குன்றி
மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை என்பதைக் கவனித்தான்.
பொங்கி வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு, ப்ரஹஸ்தன் என்ற மந்திரியை,
யுத்த கலையில் வல்லவனை அழைத்து ஆலோசனை செய்தான்.
ஊர் முற்றுகையிடப் பட்டிருப்பதால் நாம் யுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
திடுமென இந்த தாக்குதல் ஆரம்பித்து விட்டதால், வேறு உபாயம் யோசிக்கக் கூட நேரம் இல்லை.
நானோ, கும்பகர்ணனோ, தாங்களோ, இந்திரஜித், நிகும்பனோ இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
தாங்கள் தான் என் சேனாபதி. அதனால் சேனாபதியே, உடனே தங்கள் சேனையை தயார் செய்யுங்கள்.
வெற்றியுடன் திரும்பி வர உடனே புறப்படுங்கள். இந்த வானர கூட்டம் உள்ள இடம் சென்று போர் புரியுங்கள்.
நீங்கள் வந்துள்ளதை அறிந்தாலே வானரங்கள் பயந்து, உங்கள் ராக்ஷஸ படை வீரர்களின் ஜய கோஷத்தையும்
கேட்டாலே நடுங்கி ஓடி விடுவார்கள். இந்த வானரங்கள் சபலம் மிகுந்தவை.
மரியாதை யறியாதவைகள். அலை பாயும் மனம் உடையவைகள்.
யானைகள் சிங்க நாதத்தைக் கேட்டு மருளுவதைப் போல மருண்டு ஓடி விடுவார்கள்.
அவன் படை வீரர்கள் அனைவரும் சிதறி ஓடி விட்ட நிலையில், ராமனும், லக்ஷ்மணன் ஒருவனே அருகில் இருக்க,
தன் வசம் இழந்து எவ்வித பாதுகாப்பும் இன்றி தனித்து விடப்பட்டவனாக, ப்ரஹஸ்தா, தங்களிடம் பிடி படுவான்.
எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஆபத்து இல்லை என்றும் இல்லை.
பிரதிலோமமோ, அனுலோமமோ, ப்ரஹஸ்தா, தாங்கள் உசிதமாக நினைப்பது போல முடிவு எடுத்து செயல் படுங்கள்.
இதைக் கேட்டு படைத் தலைவனான ப்ரஹஸ்தன், ப்ருஹஸ்பதி ஒரு முறை அசுரேந்திரனிடம் சொன்னது போல,
ராக்ஷஸேந்திரனிடம் பதில் சொன்னான்.
ராஜன், இந்த விஷயங்கள் நாம் ஏற்கனவே மந்திரி சபையில் விவாதித்தது தானே. ஒருவரை ஒருவர் பார்த்து நாம் விவாதித்தோம்.
நான் அப்பொழுதும் சொன்னேன். சீதையைத் திருப்பித் தருவதில் தான் நமக்கு நன்மை என்றேன்.
திருப்பித் தரா விட்டால் யுத்தம் வரும் என்றும் நாம் அறிந்ததே. அப்படிப்பட்ட நான்,
எப்பொழுதும் உன்னால் கௌரவிக்கப் பட்டு வந்தவன், உன் கையால் பொருளும் மற்றவையும் தானமாக நிறையப் பெற்றவன்,
சமாதானமாக நிறைய சொல்லி விட்டேன். உனக்குப் பிரியமானால் என்னதான் செய்ய மாட்டேன்.
என் புத்ர, தா3ர, த4னங்களோ, என் உயிரோ எதுவுமே பெரிதில்லை. உனக்காக யுத்தம் செய்து
நான் வீர மரணம் அடைவதையும் காணத் தான் போகிறாய்.
இவ்வாறு தன் எஜமானனான ராவணனிடம் சொல்லி விட்டு சேனாபதியான ப்ரஹஸ்தன்,
படைகளை ஒன்று திரட்டி ஏற்பாடுகளைச் செய்ய விரைந்தான்.
ராக்ஷஸர்களே, பெரும் அளவில் படை வீரர்களாக திரண்டு வாருங்கள். என் கை பாணங்களால்,
அசனி (இந்திரனின் ஆயுதம்) போல மேலே வந்து விழும் கூரிய பாணங்களால்
உயிர் இழக்கப் போகும் எதிரிகளின் உடல்களைத் தின்ன கழுகுகள் வட்டமிடப் போகின்றன.
இதைக் கேட்டு ப்ரஹஸ்தனின் படைத் தலைவர்கள், விரைந்து சென்று தங்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட வீரர்களைக் கொண்டு
வந்து அரச மாளிகை வாசலில் கூட்டமாக நிறுத்தினர்.
முஹுர்த்த நேரத்தில் அந்த மாளிகை வாசலில், ஆயுதங்களின் ஓசையும், ஜனங்களின் நடமாட்டமுமாக,
யானைக் கூட்டம் கல கலவென்று சஞ்சரிப்பது போல ஆயிற்று. காலை நேரத்தில் அக்னி உபாசனம் செய்யும் ப்ராம்மணர்கள்,
அக்னியில் ஹோமம் செய்த நெய் வாசனையும் காற்றில் மிதந்து வந்தது.
யுத்தம் செய்ய புறப்பட்ட வீரர்களுக்கு (மந்தரித்து) வாழ்த்தி, வித விதமாக மாலைகள் அணிவிக்கப் பட்டன.
ராக்ஷஸர்களும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு உற்சாகத்துடன் கிளம்பினர்.
வில்லை ஏந்தி, கவசம் அணிந்து வேகமாக வந்த ராக்ஷஸ வீரர்கள், ப்ரஹஸ்தனுடன் அரசன் ராவணனும் நிற்பதைக் கண்டு,
மரியாதையுடன் சூழ்ந்து நின்றனர். பேரியை முழக்கி, அரசனிடம் விடை பெற்றுக் கொண்டு,
தயாராக இருந்த ரதத்தில் ப்ரஹஸ்தன் ஏறினார். உயர் ஜாதி குதிரைகள், பூட்டப் பெற்றன.
திறமையான குதிரை ஓட்டுபவனும் தன் திறமையால் சிறந்த முறையில் பாதுகாப்பாக குதிரைகளை பழக்கி இருந்தான்.
சாக்ஷாத் சந்திரனும், சூரியனும் இறங்கி வந்தது போல ஒளி வீசும், பெரிய மேகம் இடி இடிப்பது போல கோஷம் எழுப்பும்,
உரக சின்னம் கொண்ட த்வஜம் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் பறக்க, லக்ஷ்மீகரமாக சிரிப்பது போல
சுவர்ண ஜாலங்கள் நிறைந்ததும், தன் வசத்தில் உள்ள ரதத்தை ஓட்டும் கயிறுகளுமாக இருந்த ரதத்தில் ஏறினார்.
ரதத்தில் ஏறியவுடன் ப்ரஹஸ்தன், ராவணனுக்கு, அவனுடைய கட்டளைக்கு தன்னை முழுவதும் அர்ப்பித்துக் கொண்டவராக
லங்கையிலிருந்து புறப்பட்டார். உடன் ஒரு பெரும் ராக்ஷஸ சேனையும் கிளம்பியது.
துந்துபியின் கோஷமும், மழைக்கால இடியோசை போல முழங்கியது. வாத்தியங்களின் ஓசையும்,
சமுத்திரத்தை நிரப்புவது போல ஒலித்தன. இவற்றையெல்லாம் மீறி சங்க நாதமும் படை கிளம்பியவுடன், எழுந்தது.
விசித்ரமாக ஒலி எழுப்பிக் கொண்டு, காதுக்கு நாராசமான ஸ்வரக் கோர்வையாக ஒலி எழுப்பிக் கொண்டு ராக்ஷஸர்கள் முன் சென்றனர்.
ப்ரஹஸ்தனுக்கு முன்னால் சென்ற வீரர்கள் பெருத்த உடலும், பயங்கரமான ரூபமும் உடையவர்களாக இருந்தனர்.
நராந்தகன், கும்பஹனு, மகா நாதன், சமுன்னதன் என்ற இவர்கள் ப்ரஹஸ்த மந்திரிகள். இவர்கள் சூழ்ந்து நின்றனர்.
இந்த அணி வகுப்புக்களுடன் கிழக்கு வாசலையடைந்தனர். யானைக் கூட்டம் போன்ற பலம் மிகுந்த பெரிய சேனையுடன்,
சமுத்திரம் போல அளவில்லாத வீரர்கள் சூழ, ப்ரஹஸ்தன் காலாந்தகன் போலவும், யமனைப் போலவும், போர்களத்தில் பிரவேசித்தார்.
இவர்கள் புறப்பட்டுச் செல்லும் ஓசையும், ராக்ஷஸர்கள் நடு நடுவில் செய்த ஜய கோஷமும், லங்கையின் பிரஜைகளையும்,
மற்ற ஜீவ ராசிகளையும் கவர்ந்தன. அவர்களும் தாங்கள் இருந்த இடத்திலேயே வினோதமான சப்தங்களைச் செய்தனர்.
மாமிசம், ரத்தம் இவற்றை உணவாகக் கொண்ட பக்ஷிகள் ஆகாயத்தில் தோன்றி, ரதத்தின் மேலாக அப்ரதிக்ஷணமாக சுற்றி வந்தன.
வாயில் இருந்து நெருப்பை உமிழும், குள்ள நரிகள் ஊளையிட்டன. அந்தரிக்ஷத்திலிருந்து மின் மினிப் பூச்சிகள் விழுந்தன.
காற்று கடுமையாக வீசியது. கிரகங்களும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு, பிரகாசமாக வெளியில் தெரியவில்லை.
மேக நாதமும் இனிமையாக இல்லை. ராக்ஷஸர்கள் ரதத்திலிருந்து செய்த ஜய கோஷமும் இணைந்து இல்லாமல் நாராசமாக இருந்தது.
கேதுவின் (த்வஜஸ்தம்பம்) தலையில் கழுகு, தென் புறமாக சாய்ந்து நின்றது. இரு பக்கமும் தன் அலகால் கொத்தியபடி,
அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்த ரதத்தின் சோபையைக் கெடுத்தது. சாரதியின் கையிலிருந்து குதிரைகளை இழுத்து
பிடிக்கும் லகான் அடிக்கடி நழுவி விழுந்தது.
புகழ் வாய்ந்த பலம், பௌருஷம் உடைய ப்ரஹஸ்தன், சேனையுடன் போர் முனைக்கு வந்து கொண்டிருக்கிறார்
என்ற செய்தி வானர வீரர்களின் செவிக்கு எட்டியது. வானர வீரர்களும் பெருமளவில் கூச்சலிட்டு ராக்ஷஸ சேனயின்
ஜய கோஷத்துக்கு இணையாக ஒலியெழுப்பினர். பெரிய மலைகளை பெயர்த்து தயார் செய்து வைத்துக் கொள்ளவும்,
மலையில் ஏறி பாறாங்கற்களை சேகரிக்கவும் முயன்றன. இரு பக்கமும் கூச்சலும் குழப்பமும் ஏறத்தாழ ஒரே அளவில் இருந்தன.
ஒருவரையொருவர் வதம் செய்யும் நோக்கத்தில் இருவரும் ஒரே அளவு உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் சத்தமும் கேட்டது. ப்ரஹஸ்தனும் வானர ராஜனின் சேனையை முற்றுகையிட்டான்.
தாங்களே தங்களை மாய்த்துக் கொள்ளும் விதமாக, தானாக நெருப்பில் வந்து விழும் விட்டில் பூச்சிகளைப் போல
ராக்ஷஸ சேனை தானே எதிர் கொண்டு வந்து நின்றது.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply