yam pR^iShThato anugacchanti shatasho atha sahasrashaH |
vR^ikShaanudyamya sahasaa laN^kaa rohaNatatparaaH || 6-27-4
yuuthapaa hariraajasya kimkaraaH samupasthitaaH |
4. shatashaH = hundreds; atha = and; sahasrashaH = thousands; yuuthapaaH = of troop-leaders; samupasthitaaH = who are resoled; kimkaraaH = to be the servants; hariraajasya = of Sugreeva; pR^iSThateH = behind; yam = whom; anugachchhanti = they are following; udyamya = carrying;vR^ikSaan = trees; laN^kaarohaNatatparaaH = with an intention to mount the city of Lanka; sahasaa = soon.
“Hundreds and thousands of troop-leaders who are resolved to be the servants of Sugreeva rally behind him, carrying trees with them and with an intention to attack Lanka soon.”
etena saahyam sumahat kR^itam shakrasya dhiimataa |
deva asure jaambavataa labdhaaH ca bahavo varaaH || 6-27-12
12. etena = by this; jaambavataa = Jambavan; dhiimataa = the intelligent; mahat = a great; saahyam = help; kR^itam = was done; shakrasya = to Indra (Lord of celestials); devaasure in a battle between celestials and demons; bhavaH = and many; varaashcha = boons also; labdhaaH = were obtained.
By the intelligent Jambavan, a great help was rendered to Indra (the lord of celestials) in a battle between celestials and demons and many boons were obtained.”
yasya vikramamaaNasya shakrasya iva paraakramaH |
eSha gandharva kanyaayaam utpannaH kR^iShNa vartmanaa || 6-27-20
tatra devaasure yuddhe saahyaartham tridivaukasaam |
20. yasya = whose; vikramaaNasya = striding; paraakramaaH = prowess; shakrasyeva = is like that of Indra the Lord of celestials; eSaH = this Samnada; utpannaH = was born; gandharva kanyaayaam = of a youthful Gandharva maiden; kR^iSNavartmanaa = and Krishnavartmana; tadaa = then;devaasurayuddhe = in a combat between celestials and demons; saahyaartham = for the purpose of helping; trividvaukasaam = the celestials.
“This Samnada, whose striding prowess is equal to that of Indra the Lord of Celestials was born of a youthful Gandharva maiden and krishnavartman for the purpose of helping the celestials in a combat between celestials and demoneous.”
vR^itaH koTi sahasreNa hariiNaam samavasthitaH |
eShaivaasha.nsate laN^kaam svenaaniikena marditum || 6-27-24
24. eSaiva = he indeed; sthitaH = is standing; vR^itaH = surrounded; koTisahasreNa = by a thousand crores; hariiNaam = of monkeys; aashamsae= and hopes; marditum = to crush; laN^kaam = Lanka; svena = by his; aniikena = army.
“He indeed is standing, surrounded by a thousand crores of monkeys. He hopes to crush Lanka with the help of his army.”
vikraanto balavaan shuuraH pauruShe sve vyavasthitaH || 6-27-45
raamapriyaartham praaNaanaam dayaam na kurute hariH |
45. hariH = this monkey; vikraantaH = is courageous; balavaan = stron; shuuraH = valiant; vyavasthitaH = established; sve = in his; paurSe = manliness; na kurute = and does not make; dayaam = pity for; praaNaanaam = his lives; raamapriyaartham = for the sake of Rama.
“This Shatabali the monkey is courageous, strong, valiant and is established in his manliness. He does not care for his life, in the cause of Rama.”
gajo gava akSho gavayo nalo niilaH ca vaanaraH |
eka eka eva yuuthaanaam koTibhir dashabhir vR^itaH || 6-27-46
46. ekaikameva = every single one; gajaH = Gaja; gavakshaH = Gavaksha; gavayaH = Gavaya; nalaH = Nala; niilaH vaanarashcha = and a monkey called Nila; (each) vR^itaH = is surrounded; dasha koTibhiH = by ten crores; yodhaanaam = of warriors.
“Each and every single one, like Gaja, Gavaya, Nala and a monkey called Nila is surrounded by crores of warriors.”
sarve mahaaraaja mahaaprabhaavaaH |
sarve mahaashaila nikaasha kaayaaH |
sarve samarthaaH pR^ithiviim kShaNena |
kartum pravidhvasta vikiirNa shailaam || 6-27-48
48. mahaaraaja = O; monarch! Sarve = all of them; mahaa prabhavaaH = are highly prominent; sarve = all of them; mahaashailanikaashakaayaaH= are having their stature; equal to great mountains; sarve = all of them; samarthaaH = are capable; kshaNena = in a moment; kartum = to level;pR^ithiviim = the earth; pravidhvasta vikiirNa shailaam = by uprooting and razing to its mountains to the ground.
“O, monarch! All of them are highly prominent, their stature equal to high hills and all of them are capable in a moment to level the earth by uprooting and razing its mountains earth by uprooting and razing its mountains to the ground.”
—————————————————————
அத்தியாயம் 27 (434) ஹராதி வானர பராக்ரமாக்யானம்(ஹரன் முதலிய வானரங்களின் பராக்ரமம் பற்றி வர்ணனை)
ராஜன் மற்றவர்களையும் பற்றிச் சொல்கிறேன், கேளுங்கள் என்று சாரணன்,
வானர படைத்தலைவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ராவணனிடம் தொடர்ந்தான்.
இவர்கள் உயிரைத் த்ருணமாக மதித்து போரிட வந்துள்ளார்கள்.
ராகவனுக்காக உயிரையும் கொடுக்க சித்தமாக வந்திருக்கிறார்கள்.
தாம்ர வர்ணமோ, பொன் நிறமோ, நீண்ட வால் தான் இவர்களுக்கு அடையாளம்.
கபில (நாவல்), சிவந்த வர்ணத்தினரும் உண்டு. பயங்கரமான செயல் பாடுடையவர்கள்.
சேர்ந்து இருக்கும் பொழுது சூரியனுடைய கிரணங்கள் போல விளங்குவார்கள்.
பூமியில் ஹரனென்ற இந்த படைத்தலைவனோடு, நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான வீரர்கள்.
மரத்துக்கு மரம் தாவி சீக்கிரமே லங்கையை அடைந்து விடத் துடிக்கிறார்கள்.
இன்னும் பலரையும் வரவழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டுத் தான் வருகிறான்.
இவனே ராவணனான உங்களை ஜயிக்க கனவு காண்கிறான். இவர்கள் ஹரிராஜனான சுக்ரீவனின் கிங்கரர்கள்.
நீலனைப் போன்ற பலரும் எதிரில் நிற்கிறார்கள். கடல் கடந்து வந்துள்ள ஏராளமான போர் வீரர்கள், உற்சாகத்துடன்,
போரில் மடியவும் தயாராக, வந்து நிற்கிறார்கள். கருத்த மேகம் போன்று உருவமும், சத்ய பராக்ரமமும் உடையவர்கள்.
இதுவரை மலைகளிலும், நதிகளின் கரையிலும் இருந்து லங்கையை நோக்கி வரும் இந்த கரடி கூட்டம் மிகவும் பயங்கரமானது.
வேகமாக முன்னேறி வரும் இந்த படையும் தூ4ம்ரன் என்ற படைத் தலைவனின் தலைமையில் வருகிறது.
தூம்ரன் என்பவன் பயங்கரமான கண்களும், கொடூரமான தோற்றமும் உடையவனாக இருக்கிறான்.
நர்மதை நீரைக் குடித்து வளர்ந்தவர்கள், தாங்களே நீருண்ட மேகம் போல காட்சி தருகிறார்கள்.
ருக்ஷவந்தம் என்ற சிறந்த மலையில் வாசம் செய்தவர்கள். இந்த தூம்ரனுடைய இளைய சகோதரன்,
மலை போல பெருத்த சரீரத்துடன் சகோதரனுக்கு சமமான சரீரமும், அதை விட அதிகமான பராக்ரமமும் உடையவன்.
இதோ ஜாம்பவான். அமைதியாக இருப்பது போலத் தெரிகிறது. குரு சேவை செய்து நிறைய கற்றவர்.
கோபத்துடன் அடித்தால் தாங்க முடியாது. இந்திரனுக்கு நிறைய உதவிகள் செய்தவர்.
தேவாசுர யுத்தங்களில் நிறைய உதவி செய்து, பல வரங்களையும் பெற்றவர். இந்த வீரர்கள் மலை உச்சி வரை சுலபமாக ஏறி,
பெரிய பெரிய மேகம் போன்ற கற்களை அனாயாசமாகத் தூக்கி வீசுவார்கள். இவர்களுக்கு மரண பயம் சிறிதும் இல்லை.
கவலையும் இல்லை. ராக்ஷஸர்களுக்கு சமமானவர்கள். பிசாசங்கள் போல தந்திரம் மிக்கவர்கள்.
இவர்களுடைய சைன்யமும் நிறைய நடமாடுகின்றன. அக்னி போன்ற தேஜஸ் உடையவர்கள்.
இப்பொழுதே தாண்டி குதிக்க தயாரான நிலையில் நிற்பது போலத் தெரிகிறது.
வானர வீரர்கள் நெருங்கி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்களே, அவன் தான் த3ம்பன் என்ற சேனாபதி.
இவன் ஒரு சமயம் பலாத்காரமாக இந்திரனை இழுத்துக் கொண்டு வந்தவன். நின்றால், மலையில் பாதி இருக்கிறான்,
க்ரதன்- அகத்தனன் என்று பெயர் பெற்றவன். ஒரே எட்டில் மலையுச்சியை அடைந்து விடுவான்.
நாலு கால் பிராணிகளிடம் இவனைப் போல உருவம் வேறு யாருக்கும் இல்லை.
இவன் சன்னாதனன் என்ற வானரங்களின் பிதாமகர். தோல்வியே அறியாதவன். இவனுடைய பலமும், போரில் இந்திரனுக்கு சமமானதே.
கந்தர்வ கன்னியிடம் பிறந்தவன். க்ருஷ்ண வர்த்மா என்பவரின் மகன். தேவாசுர யுத்தத்தில், தேவர்கள் சகாயத்திற்காக சென்றவன்.
ஜம்பூ த்வீபத்தில், உங்கள் சகோதரன் வைஸ்ரவனன் வந்தால் தங்கும் இடம்.
பர்வதங்களின் அரசன் என்று புகழ் பெற்ற மலை, கின்னரர்கள் வசிக்கும் இடம், நடந்து போக, விளையாட சுகமான இடம்,
அந்த மலை இவனுடைய இருப்பிடம். (திரு வேங்கட மலை) இவனும், கோடி, ஸஹஸ்ரம் என்று படை வீரர்களோடு வந்து நிற்கிறான்.
லங்கையை வீழ்த்துவது தன் படை வீரர்களாக இருக்க வேண்டும் என்பது இவனது விருப்பம்.
இதோ இருப்பவன், ப்ரமாதீ என்ற வானரப் படைத் தலைவன். கங்கை கரையில் யானைக் கூட்டத்தையே கலங்க அடிக்க கூடியவன்.
முன்பு ஒரு சமயம், யானைகளுக்கும், வானரங்களுக்கும் இடையில் தோன்றிய விரோதத்தை இவன் மறக்கவே இல்லை.
குகைகளில் வசித்துக் கொண்டு இவன் தலைமையில் வானரர்கள் யானைகளையும் அவை வசிக்கும் மலைகளையும்,
மரங்களையும் தாக்கி சண்டை இடுவர். ஹைமவதீ என்ற நதிகளில் முக்கியமாகச் சொல்லப் படுவதுண்டு.
வானர சேனைத் தலவர்களுள் இவனும் ஒரு முக்கியமான ஸ்தானம் வகிப்பவன்.
உசீர பீஜம் என்ற பெரிய மலை. மந்தர மலை போன்று இருக்கும். அதில் வசிக்கிறான்.
உலகில் தேவலோகத்து இந்திரன் வந்தது போல பெருமை வாய்ந்த அரசனாக விளங்குகிறான்.
இவனையும் நூறாயிரம், ஆயிரம் வீரர்கள் பின் பற்றுகிறார்கள். எல்லோருமே வீர்யமும், விக்ரமும் அதனால் உண்டாகும் கர்வமும் மிகுந்தவர்கள்.
இவனையும் வெல்வது கடினமே. புழுதி மண்டலம் மேகம் போல மறைக்க கூட்டமாக வரும் கோ3லாங்கூலம் என்ற இனத்தினர்.
வெளுத்த முகமும், நல்ல வேகமும் உடைய இவர்கள் தலைவன் க3வாக்ஷன்.
இவர்களும் லங்கையை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு முன்னேறி வருகிறார்கள்.
லங்கையை தங்கள் பலத்தால் ஜயிக்க வேண்டும் என்று வேகமாக வருகிறார்கள்.
அதனால் தான் புழுதி மண்டலம் வானளாவ எழுகிறது. இவர்கள் வசிக்கும் இடத்திலும், எப்பொழுதும், மரங்கள் பழங்களும்,
பூக்களும் நிறைந்து வண்டுகள் மொய்க்க காணப்படும். சூரியனுக்கு இணையான வர்ணமுடைய அனுபர்யா என்ற மலை.
இந்த மலையின் விசேஷம் அங்குள்ள மிருகங்களும், பக்ஷிகளும் கூட பள பளவென்ற வண்ணத்துடன் காட்சி தருவார்கள்.
முனிவர்கள், ரிஷிகள் இந்த இடத்தை விடவே மாட்டார்கள். எல்லா விதமான பழ மரங்களும் இருப்பதால், மாற்றி-மாற்றி
ஏதோ ஒரு வித பழம் கிடைத்துக் கொண்டேயிருக்கும். இங்கு கிடைக்கும் தேனும் மிகவும் உயர்ந்தது.
இங்கு வசிக்கும் வானரப் படைத் தலவன் தான் கேஸரி என்று புகழ் பெற்ற வீரன்.
ஆயிரக் கணக்கான மலைகளில் ஆறு காஞ்சன பர்வதம் எனப்படும். அவைகளுக்கு இடையில்,
ராக்ஷஸர்களுக்கிடையில் நீ உயர்ந்து நிற்பது போல, மலைகளுள் இந்த மலையும் விசேஷ ஸ்தானம் பெற்றது.
இங்குள்ளவர், கபில வர்ணத்தினர், வெண்மையானவர், தாம்ர வர்ணத்தினர், தேன் போன்று இளம் பசுமை நிறத்தினர்,
என்று வானரங்கள் வசிக்கிறார்கள். இவர்கள் நீண்ட நகமும், உறுதியான பற்களும் உடையவர்கள்.
புலிகள் போல எதிர் கொள்ள முடியாத பலசாலிகள். எல்லோருமே அக்னி போன்று ஜ்வலிக்கக் கூடியவர்கள்.
போர் முனையில், ஆல கால விஷம் போன்றவர்கள். அடர்ந்த வால் இவர்களுடைய தனித் தன்மை.
மதம் பிடித்த யானை போல நடமாடுபவர்கள். பெரிய பெரிய மலை கல் பெயர்ந்து நடப்பது போல நடப்பார்கள்.
குரலும் இடி முழக்கம் போல இருக்கும். உருண்ட, பழுப்பும் சிவப்பும் கலந்த வர்ண கண்களுடையவர்கள்.
பயங்கரமான நடையும், குரலும், கொண்டவர்கள். லங்கையை மிதித்து நாசமாக்குவது போல பூமி அதிர நடந்து வருகின்றனர்.
இதோ நிற்பவன், எப்பொழுதும் ஆதித்யனை உபாசிப்பவன். வெற்றியை விரும்பும் ஜயார்தீ. சதபலி என்று உலகில் பெயர் பெற்றவன்.
இவனுக்கும் அதே எண்ணம் தான். தன் படைகள் தான் லங்கையை முன்னின்று தாக்கி வெற்றி பெற வேண்டும் என்பதே.
தங்கள் பலத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். ராமனுக்கு பிரியமானதைச் செய்யத் துடிக்கிறார்கள்.
ராம விரோதியிடம் தயை காட்ட மாட்டார்கள். கஜன், கவாக்ஷன், கவயன், அனலன், நீலன் இவர்கள் ஒவ்வொருவரும்,
தங்கள் பின்னால் கோடிக் கணக்கான போர் வீரர்களுடன் வந்திருக்கிறார்கள்.
விந்த்ய மலையிலும், மற்ற இடத்திலும் இன்னும் கணக்கில்லாத வானரங்கள் நம் எண்ணிக்கைக்கு அடங்காத பலர் இருக்கிறார்கள்.
மகாராஜா, எல்லோருமே மிக உயர்ந்த ப்ரபாவம் உடையவர்கள். மகா சைலம் போன்ற சரீரமும், சாமர்த்யமும் உடையவர்கள்.
நீண்டு பரவி இருக்கும் இந்த பூமியை க்ஷண நேரத்தில் நாசமாக்கும் சக்தி படைத்தவர்கள்.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply