ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 112–(ஸ்ரீ கிருஷ்ணஸ்யோதீசீ கமநம்)-ஸ்ரீ கிருஷ்ணனின் சாரதியாக ஸ்ரீ அர்ஜுனன் |-

குழந்தையைக் காக்க முடியாமல் ஸ்ரீ மத் துவாரகை திரும்பிய ஸ்ரீ அர்ஜுனன்; தீப்புகுவதில் இருந்து ஸ்ரீ அர்ஜுனனைத் தடுத்த ஸ்ரீ கிருஷ்ணன்; ஸ்ரீ அர்ஜுனனை தனக்குத் தேரோட்டியாக நியமித்தது

அர்ஜுந உவாச
முஹூர்தேந வயம் க்³ராமம் தம் ப்ராப்ய ப⁴ரதர்ஷப⁴ |
விஷ்²ராந்தவாஹநா꞉ ஸர்வே நிவாஸாயோபஸம்ஸ்தி²தா꞉ ||2-112-1

ததோ க்³ராமஸ்ய மத்⁴யே(அ)ஹம் நிவிஷ்ட꞉ குருநந்த³ந |
ஸமந்தாத்³வ்ருஷ்ணிஸைந்யேந மஹதா பரிவாரித꞉ ||2-112-2

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஒரு கணத்திற்குள் {ஒரு முஹூர்த்த காலத்திற்குள்} அந்தக் கிராமத்தின் எல்லையை அடைந்த நாங்கள், எங்கள் விலங்குகள் அனைத்தும் களைப்படைந்து இருந்ததால் அங்கேயே {எல்லையிலேயே} தங்கினோம்.(1) சில கணங்களுக்குப் பிறகு நான் விருஷ்ணிகளின் பெரும்படை சூழ நகருக்குள் நுழைந்தேன்.(2)

தத꞉ ஷ²குநயோ தீ³ப்தா ம்ருகா³ஷ்²ச க்ரூரபா⁴ஷிண꞉ |
தீ³ப்தாயாம் தி³ஷி² வாஷ²ந்தோ ப⁴யமாவேத³யந்தி மே ||2-112-3

ஸந்த்⁴யாராகோ³ ஜபாவர்ணோ பா⁴நுமாம்ஷ்²சைவ நிஷ்ப்ரப⁴꞉ |
பபாத மஹதீ சோல்கா ப்ருதி²வீ சாப்யகம்பத ||2-112-4

தாந்ஸமீக்ஷ்ய மஹோத்பாதாந்தா³ருணாம்ˮல்லோமஹர்ஷணான் |
யோக³மாஜ்ஞாபயம்ஸ்தத்ர ஜநஸ்யோத்ஸுகசேதஸ꞉ ||2-112-5

யுயுதா⁴நபுரோகா³ஷ்²ச வ்ருஷ்ண்யந்த⁴கமஹாரதா²꞉ |
ஸர்வே யுக்தரதா²꞉ ஸஜ்ஜா꞉ ஸ்வயம் சாஹம் ததா²ப⁴வம் ||2-112-6

அந்த நேரத்தில் அனைத்தும் எரிந்து கொண்டிருந்தன, எரியும் கழுகுகளும், விலங்குகளும் எங்களை அச்சுறுத்தின.(3) பெரிய கருங்கொள்ளிகள் அங்கே விழுந்தன, சூரியன் தன் பிரகாசத்தை இழந்திருந்தான், பூமி நடுங்கினாள்.(4) பயங்கரம் நிறைந்தவையும், மயிர் கூச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்தத் தீய சகுனங்களைக் கண்ட நான் கவலையில் நிறைந்தவனாக என்னுடைய படை வீரர்களிடம் ஆயத்தமாக இருக்குமாறு ஆணையிட்டேன்.(5) யுயுதானனின் {சாத்யகியின்} தலைமையிலான விருஷ்ணிகள், அந்தகக் குலப் பெருந்தேர் வீரர்கள் அதைக் கேட்டுவிட்டுத் தங்கள் தங்கள் தேர்களை ஆயத்தம் செய்தனர், நானும் ஆயுதம் தரித்தவனானேன்.(6)

க³தே(அ)ர்த⁴ராத்ரஸமயே ப்³ராஹ்மணோ ப⁴யவிக்லவ꞉ |
உபாக³ம்ய ப⁴யாத³ஸ்மாநித³ம் வசநமப்³ரவீத் ||2-112-7

காலோ(அ)யம் ஸமநுப்ராப்தோ ப்³ராஹ்மண்யா꞉ ப்ரஸவஸ்ய மே |
ததா² ப⁴வந்தஸ்திஷ்ட²ந்து ந ப⁴வேத்³வஞ்சநம் யதா² ||2-112-8

நள்ளிரவு கடந்ததும் அச்சத்தால் பீடிக்கப்பட்ட அந்தப் பிராமணர் எங்களை அணுகி, “என் மனைவி பிள்ளை பெறும் தருவாயில் இருக்கிறாள். நான் வஞ்சிக்கப்படாத வகையில் நீங்கள் {கவனமாக} உங்களை நிலைநிறுத்திக் கொள்வீராக” என்றார்.(7,8)

முஹூர்தாதே³வ சாஷ்²ரௌஷம் க்ருபணம் ருதி³தஸ்வநம் |
தஸ்ய விப்ரஸ்ய ப⁴வநே ஹ்ரியதே(அ)ஹ்ரியதேதி ச ||2-112-9

அதா²காஷே² புநர்வாசமஷ்²ரௌஷம் பா³லகஸ்ய வை |
ஊம்ˮஹேதி ஹ்ரியமாணஸ்ய ந ச பஷ்²யாமி ராக்ஷ²ஸம் ||2-112-10

ததோ(அ)ஸ்மாபி⁴ஸ்ததா³ தாத ஷ²ரவர்ஷை꞉ ஸமந்தத꞉ |
விஷ்டம்பி⁴தா தி³ஷ²꞉ ஸர்வா ஹ்ருத ஏவ ஸ பா³லக꞉ ||2-112-11

ஓ! மன்னா, {அவர் சொல்லிச் சென்ற} ஒரு கணத்திற்குள், “அபகரிக்கப்பட்டான், அபகரிக்கப்பட்டான்” என்று கதறியவாறு பரிதாபகரமான அழுகுரல் அந்தப் பிராமணரின் வீட்டில் இருந்து கேட்டது.(9)
குழந்தையின் அழுகுரல் வானத்தில் கேட்டாலும் அந்த ராட்சசனை எங்களால் காண முடியவில்லை.(10) திசைகள் அனைத்தையும் கலங்கடித்தவாறு கணைமாரியை நாங்கள் பொழிந்தாலும் {அவ்வாறு பொழிந்து குழந்தை அபகரிக்கப்படுவதைத் தடுக்க முயன்றாலும்} அந்தப் பிள்ளை அபகரிக்கப்பட்டான்.(11)

ப்³ராஹ்மநோ(ஆ)ர்தஸ்வரம் க்ருத்வா ஹ்ருதே தஸ்மிந்குமாரகே |
வாச꞉ ஸ பருஷாஸ்தீவ்ரா꞉ ஷ்²ராவயாமாஸ மாம் ததா³ ||2-112-12

வ்ருஷ்ணயோ ஹதஸங்கல்பாஸ்ததா²ஹம் நஷ்டசேதந꞉ |
மாமேவம் ஹி விஷே²ஷேண ப்³ராஹ்மண꞉ ப்ரத்யபா⁴ஷத ||2-112-13

ரக்ஷிஷ்யாமீதி சோக்தம் தே ந ச ரக்ஷிதவாநஸி |
ஷ்²ருணு வாக்யமித³ம் ஷே²ஷம் யத்த்வமர்ஹஸி து³ர்மதே ||2-112-14

வ்ருதா² த்வம் ஸ்பர்த⁴ஸே நித்யம் க்ருஷ்ணேநாமிதபு³த்³தி⁴நா |
யதி³ ஸ்யாதி³ஹ கோ³விந்தோ³ நைதத³த்யாஹிதம் ப⁴வேத் ||2-112-15

யதா² சதுர்த²ம் த⁴ர்மஸ்ய ரக்ஷிதா லப⁴தே ப²லம் |
பாபஸ்யாபி ததா² மூட⁴ பா⁴க³ம் ப்ராப்நோத்யரக்ஷிதா ||2-112-16

ரக்ஷிஷ்யாமீதி சோக்தம் தே ந ச ஷ²க்தோ(அ)ஸி ரக்ஷிதும் |
மோக⁴ம் கா³ண்டீ³வமேதத்தே மோக⁴ம் வீர்யம் யஷ²ஷ்²ச தே ||2-112-17

அந்தப் பிள்ளை அபகரிக்கப்பட்டதும் அந்தப் பிராமணர், விருஷ்ணிகளும், நானும் எங்கள் உணர்வுகளை இழக்கும் வகையில் கடுஞ்சொற்களால் எங்களை ஏசினார். அவர் குறிப்பாக என்னிடம்,(12,13) “நீ என்னைப் பாதுகாப்பதாகச் சொன்னாய். ஆனால் உன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. எனவே, ஓ! தீய புத்தியைக் கொண்ட இழிந்தவனே, இந்த நல்ல சொற்களைக் கேட்பாயாக.(14) ஒப்பற்ற புத்திமானான கேசவனிடம் {போட்டி போடுவது போல} எப்போது நீ வீணாகக் கொக்கரிக்கிறாய். கோவிந்தன் இங்கிருந்தால், இக்கொடுமை நேர்ந்திராது.(15) ஓ! மூடா, அறத்தின் நான்கில் ஒரு பகுதிக்கு உரியவனாக ஒரு காவலன் இருப்பதைப் போலவே ஒருவனைப் பாதுகாக்க முடியாதவனும் {அதன் மூலம்} விளையும் பாவத்தில் பங்குடையவனே;(16) என்னைப் பாதுகாப்பதாக நீ சொன்னாலும் உன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. உன்னுடைய காண்டீவமும், ஆற்றலும், புகழும் வீணே[மஹாபாரதம், கர்ண பர்வம் பகுதி 69ல் காண்டீவத்தைப் பழித்ததற்காக யுதிஷ்டிரனைக் கொல்ல விழைகிறான் அர்ஜுனன். ]” என்றார்.(17)

அகிஞ்சிது³க்த்வா தம் விப்ரம் ததோ(அ)ஹம் ப்ரஸ்தி²தஸ்ததா² |
ஸஹ வ்ருஷ்ண்யந்த⁴கஸுதைர்யத்ர க்ருஷ்ணோ மஹாத்³யுதி꞉ ||2-112-18

ததோ த்³வாரவதீம் க³த்வா த்³ருஷ்ட்வா மது⁴நிகா⁴திநம் |
வ்ரீடி³த꞉ ஷோ²கஸந்தப்தோ கோ³விந்தே³நோபலக்ஷித꞉ ||2-112-19

எனினும், நான் அந்தப் பிராமணரிடம் ஏதும் பேசாமல் விருஷ்ணி, அந்தகக் குல இளவரசர்களுடன் சேர்ந்து, பெரும்பிரகாசம் கொண்ட கிருஷ்ணன் இருக்குமிடத்திற்குப் புறப்பட்டேன்.(18) துவாராவதி நகரை அடைந்த நான் மதுசூதனனான கோவிந்தனைக் கண்டேன், வெட்கத்தாலும், கவலையாலும் நிறைந்திருந்த என்னை அவனும் கண்டான்.(19)

ஸ து மாம் வ்ரீடி³தம் த்³ருஷ்ட்வா விநிந்த³ந்க்ருஷ்ணஸந்நிதௌ⁴ |
மௌட்⁴யம் பஷ்²யத மே யோ(அ)ஹம் ஷ்²ரத்³த³தே⁴ க்லீப³கத்த²நம் ||2-112-20

ந ப்ரத்³யும்நோ நாநிருத்³தோ⁴ ந ராமோ ந ச கேஷ²வ꞉ |
யத்ர ஷ²க்தா꞉ பரித்ராதும் கோ(அ)ந்யஸ்தத³வநேஷ்²வர꞉ ||2-112-21

தி⁴க³ர்ஜுநம் வ்ருதா²நாத³ம் தி⁴கா³த்மஷ்²லாகி⁴நோ த⁴நு꞉ |
தை³வோபஸ்ருஷ்டோ யோ மௌர்க்²யாதா³க³ச்ச²தி ச து³ர்மதி꞉ ||2-112-22

வெட்கி நின்ற என்னைக் கண்ட மாதவன், இனிய சொற்களால் என்னையும், அந்தப் பிராமணரையும் தேற்றினான்
{அந்தப் பிராமணர், கிருஷ்ணனின் முன்பு வெட்கி நின்ற என்னை நிந்திக்கும் வகையில், “ஓர் அலியின் சொற்களைக் கேட்ட என் மடமையைப் பார்.(20) பிரத்யும்னனாலோ, அநிருத்தனாலோ, பலனாலோ {பலராமனாலோ}, கேசவனாலோ காக்க முடியாதவனை வேறு எந்தத் தேவனால் காக்க முடியும்?(21) பயனற்ற சொற்களைப் பேசும் இந்த அர்ஜுனனும் பயனற்றவனே. தற்பெருமை பேசும் இவனுடைய வில்லும் பயனற்றதே[இந்தப் பிராமணர் இப்போது இரண்டாவது முறையாகக் காண்டீவத்தைப் பழிக்கிறார். அதுவும் கிருஷ்ணனின் முன்னிலையில் வைத்து.]. மூடத்தனத்தால் தீய புத்தி கொண்டவன், தேவனால் காக்கமுடியாததை இவன் காக்க வருகிறான்” என்றார்.(22)

ஏவம் ஷ²பதி விப்ரர்ஷௌ வித்³யாமாஸ்தா²ய வைஷ்ணவீம் |
யயௌ ஸம்யமநீம் வீரோ யத்ராஸ்தே ப⁴க³வாந்யம꞉ ||2-112-23

விப்ராபத்யமசக்ஷாணஸ்தத ஐந்த்³ரீமகா³த்புரீம் |
ஆக்³நேயீம் நைர்ருதீம் ஸௌம்யாமுதீ³சீம் வாருணீம் ததா² ||2-112-24

ரஸாதலம் நாகப்ருஷ்ட²ம் தி⁴ஷ்ண்யாந்யந்யாந்யுதா³யுத⁴꞉ |
ததோ(அ)லப்³த்⁴வா த்³விஜஸுதமநிஸ்தீர்ணப்ரதிஷ்²ரவ꞉ ||2-112-25

இவ்வாறு அந்தப் பிராமணர் சபித்துக் கொண்டிருந்தபோது நான் வைஷ்ணவி வித்தையைக் கையாண்டு வீரத் தலைவனான யமன் இருக்கும் ஸம்யமணிக்கு {ஸம்யமபுரத்திற்குச்} சென்றேன்.(23) அங்கே அந்தப் பிராமணரின் மகனைக் காணமுடியாமல், இந்திரனின் நகருக்கு {அமராவதிக்குச்} சென்றேன். அதன் பிறகு நெருப்பு தேவனின் {அக்னிதேவனின்} நகரமான நிர்ருதிக்கும், சோமனின் நகரான உதீசீக்கும், வருணனின் நகருக்கும் {வாருணிக்கும்} சென்றேன்.(24) அதன்பிறகு என் ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ரசாதலத்திற்கும், சொர்க்கத்திற்கும் சென்றேன். எங்கேயும் அந்தப் பிராமணரின் மகனை என்னால் காண முடியவில்லை. என்னால் என் சொற்களைக் காக்க முடியவில்லை.(25)

அக்³நிம் விவிக்ஷு꞉ க்ருஷ்ணேந ப்ரத்³யும்நேந நிஷேதி⁴த꞉ |
த³ர்ஷ²யே த்³விஜஸூநும் தே மாவஜ்ஞாத்மாநமாத்மநா ||2-112-26

கீர்திம் ந ஏதே விபுலாம் ஸ்தா²பயிஷ்யந்தி மாநவா꞉ |
இதி ஸம்பா⁴ஷ்²ய மாம் ஸ்நேஹாத்ஸமாஷ்²வாஸ்ய ச மாத⁴வ꞉ ||2-112-27

நான் நெருப்புக்குள் நுழைய இருந்தபோது[இருமுறை காண்டீவத்தை நிந்தித்தாலும் அவ்வாறு செய்தது ஒரு பிராமணர் என்பதைக் கருத்தில் கொண்டும், தன்னால் தன் சொல்லைக் காக்க முடியவில்லை என்ற வேதனையிலும் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் அர்ஜுனன் தீப்புக விழைகிறான். அப்போது அவனைத் தடுத்து கிருஷ்ணன் சொல்லும் வாக்கியம் தற்கொலை செய்யும் எண்ணம் கொண்ட அர்ஜுனனைப் பின்வாங்கச் செய்கிறது. எவரையும் பின்வாங்கச் செய்யும். துரோண பர்வம் பகுதி 145ல் அர்ஜுனனின் சபதத்தை மெய்ப்பிப்பதற்காகவும், அவனது உயிரைக் காப்பதற்காகவும் சூரியனை மறைத்தான் கிருஷ்ணன். ஜெயத்ரதன் விஷயத்தில் அர்ஜுனன் ஏற்ற சபதத்தைப் படிக்கத் துரோண பர்வம் 73ம் பகுதிக்குச் செல்லவும் ], கிருஷ்ணனும், பிரத்யும்னனும் என்னைத் தடுத்தனர். கிருஷ்ணன், “உன் ஆன்மாவை அவமதிக்காதே {உன்னை நீயே அவமதித்துக் கொள்ளாதே}. இந்தப் பிராமணரின் மகனை நீ காண்பாய் {உன் இலக்கை நீ அடைவாய்}.(26) உன்னுடைய பெரும் புகழை மனிதர்கள் எப்போதும் நிலைநிறுத்துவார்கள்” என்றான். மாதவன் இவ்வாறு அன்புடன் பேசி எனக்கு ஆறுதல் கூறினான்.(27)}

ஸாந்த்வயித்வா து தம் விப்ரமித³ம் வசநமப்³ரவீத் |
ஸுக்³ரீவம் சைவ ஷை²ப்³யம் ச மேக⁴புஷ்பப³லாஹகௌ ||2-112-28

யோஜயாஷ்²வாநிதி ததா³ தா³ருகம் ப்ரத்யபா⁴ஷத |
ஆரோப்ய ப்³ராஹ்மணம் க்ருஷ்ணோ ஹ்யவரோப்ய ச தா³ருகம் ||2-112-29

மாமுவாச தத꞉ ஷௌ²ரி꞉ ஸாரத்²யம் க்ரியதாமிதி |
தத꞉ ஸமாஸ்தா²ய ரத²ம் க்ருஷ்ணோ(அ)ஹம் ப்³ராஹ்மந꞉ ஸ ச |
ப்ரயாதா꞉ ஸ்ம தி³ஷ²ம் ஸௌம்யாமுதீ³சீம் கௌரவர்ஷப⁴ ||2-112-30

அவன் {கிருஷ்ணன்}, அந்தப் பிராமணரையும் தேற்றிய பிறகு, {தன் தேரோட்டியான} தாருகனிடம், “என் குதிரைகளான சுக்ரீவம், சைப்யம், மேகபுஷ்பம், பலாஹகம் ஆகியவற்றை ஆயத்தம் செய்வாயாக” என்றான்.(28)
சூரனின் வழித்தோன்றலான கிருஷ்ணன், அந்தப் பிராமணரைத் தேரில் ஏறச் செய்து, தாருகனை கீழே இறக்கி, என்னைத் தேரோட்டும்படி கேட்டுக் கொண்டான். ஓ! குருவின் வழித்தோன்றலே, அதன்பிறகு, கிருஷ்ணனும், அந்தப் பிராமணரும், நானும் அந்தத் தேரில் வடக்கு நோக்கிப் புறப்பட்டோம்” என்றான் {அர்ஜுனன்}.(30)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
வாஸுதே³வமாஹாத்ம்யே க்ருஷ்ணஸ்ய உதீ³சீக³மநே
த்³வாத³ஷா²தி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading