ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 107–(ஷம்பரவதம்)–

ஸ்ரீ பார்வதியைத் துதித்த ஸ்ரீ பிரத்யும்னன்; சம்பரனின் முத்கரத்தைத் தாமரை மாலையாகப் பெற்ற வரம்; ஸ்ரீ பிரத்யும்னன் ஏவிய ஸ்ரீ வைஷ்ணவாஸ்த்திரம்; சம்பரன் வதம்

வைஷ²ம்பாயந உவாச
ஷ²ம்ப³ரஸ்து தத꞉ க்ருத்³தோ⁴ முத்³க³ரம் தம் ஸமாத³தே³ |
முத்³க³ரே க்³ருஹ்யமாணே து த்³வாத³ஷா²ர்கா꞉ ஸமுத்தி²தா꞉ ||2-107-1

பர்வதாஷ்²சலிதா꞉ ஸர்வே ததை²வ வஸுதா⁴தலம் |
உந்மார்கா³꞉ ஸாக³ரா யாதா꞉ ஸங்க்ஷுப்³தா⁴ஷ்²சபி தே³வதா꞉ ||2-107-2

க்³ருத்⁴ரசக்ராகுலம் வ்யோம உல்காபாதோ ப³பூ⁴வ ஹ |
வவர்ஷ ருதி⁴ரம் தே³வ꞉ பருஷம் பவநோ வவௌ ||2-107-3

ஏவம் த்³ருஷ்ட்வா மஹோத்பாதாந்ப்ரத்³யும்ந꞉ ஸ த்வராந்வித꞉ |
அவதீர்ய ரதா²த்³வீர꞉ க்ருதாஞ்ஜலிபுட꞉ ஸ்தி²த꞉ ||2-107-4

தே³வீம் ஸஸ்மார மநஸா பார்வதீம் ஷ²ங்கரப்ரியாம் |
ப்ரணம்ய ஷி²ரஸா தே³வீம் ஸ்தோதும் ஸமுபசக்ரமே ||2-107-5

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “கோபத்தில் நிறைந்த சம்பரன் தன் முத்கரத்தை எடுத்தான். ஓ! பரதனின் வழித்தோன்றலே, சம்பரன் தன் முத்கரத்தை எடுத்தபோது பனிரெண்டு சூரியர்களும் அங்கே உதித்தனர் {அந்த ஆயுதம் பனிரெண்டு சூரியன்களுக்கு ஒப்பான ஒளியுடன் இருந்தது},(1) மலைகள் அசைந்தன, பூமி நடுங்கினாள். பெருங்கடலின் நீர் கரையைக் கடந்தது, தேவர்கள் கலக்கமடைந்தனர்,(2) வானம் கழுகுகளால் நிறைந்திருந்தது, எரிகொள்ளிகள் விழுந்தன, கடுங்காற்று வீசியது, இந்திரன் குருதி மழையைப் பொழிந்தான்.(3) இந்தத் தீய சகுனங்கள் அனைத்தையும் கண்ட வீரன் பிரத்யும்னன், உடனே தன் தேரில் இருந்து இறங்கினான். பிறகு தன் கரங்களைக் குவித்தபடி,(4) சங்கரனின் அன்புக்குரிய மனைவியான பார்வதியை நினைவுகூர்ந்து, தலைவணங்கியபடியே அவளது மகிமைகளைத் துதிக்கத் தொடங்கினான்.(5)

ப்ரத்³யும்ந உவாச
ௐ நம꞉ காத்யாயந்யை கி³ரீஷா²யை நமோ நம꞉ |
நமஸ்த்ரைலோக்யமாயாயை காத்யாயந்யை நமோ நம்꞉ ||2-107-6

நம꞉ ஷ²த்ருவிநாஷி²ந்யை நமோ கௌ³ர்யை ஷி²வப்ரியே |
நமஸ்யே ஷு²ம்ப⁴மத²நீம் நிஷு²ம்ப⁴மத²நீமபி ||2-107-7

காலராத்ரி நமஸ்துப்⁴யம் கௌமார்யை ச நமோ நம꞉ |
காந்தாரவாஸிநீம் தே³வீம் நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி꞉ ||2-107-8

விந்த்⁴யவாஸிநீம் து³ர்க³க்⁴நாம் ரணது³ர்கா³ம் ரணப்ரியாம் |
நமஸ்யாமி மஹாதே³வீம் ஜயாம் ச விஜயாம் ததா² ||2-107-9

அபராஜிதாம் நமஸ்யே(அ)ஹமஜிதாம் ஷ²த்ருநாஷி²நீம் |
க⁴ண்டாஹஸ்தாம் நமஸ்யாமி க⁴ண்டாமாலாகுலாம் ததா² || 2-107-10

பிரத்யும்னன், “கார்த்திகேயனின் அன்னையான {மலைகளின் தேவியான} காத்யாயனியை வணங்குகிறேன். மூவுலகங்களின் அன்னையான {மூவுலகங்களிலும் மாயைகளை உண்டாக்கும்} காத்யாயனியை மீண்டும் வணங்குகிறேன்.(6) எங்கள் பகைவரை அழித்த தேவியை வணங்குகிறேன். கிரீசனின் மனைவியான கௌரியை வணங்குகிறேன். நிசும்பனின் இதயத்தைத் துளைத்து, சும்பனையும் கொன்ற தேவியை வணங்குகிறேன்.(7) காளராத்ரியையும் {பிரளய கால இரவாக இருப்பவளும்}, கௌமாரியையும் வணங்குகிறேன். மலைகள் சார்ந்த காட்டில் வாழும் தேவியைக் கரங்கூப்பித் தலைவணங்குகிறேன்.(8) விந்திய மலையில் வாழ்பவளும், கோட்டைகளை அழிப்பவளும், துர்க்கையாக {ரணதுர்க்கையாக} இருப்பவளும், போரில் விருப்பம் கொண்டவளும், ஜயை, விஜயையாக இருப்பவளுமான அந்தப் பெருந்தேவிக்குத் தலைவணங்குகிறேன்.(9) வெல்லப்படமுடியாதவளும், பகைவரைப் பீடிப்பவளும், கையில் மணியைக் கொண்டவளும், மணிகளின் மாலையால் அலங்கரிக்கப்பட்டவளுமான தேவிக்குத் தலைவணங்குகிறேன்.(10)

த்ரிஷூ²லிநீம் நமஸ்யாமி மஹிஷாஸுரகா⁴திநீம் |
ஸிம்ஹாநநாம் நமஸ்யாமி ஸிம்ஹப்ரவரகேதநாம் ||2-107-11

ஏகாநம்ஷா²ம் நமஸ்யாமி கா³யத்ரீம் யஜ்ஞஸத்க்ருதாம் |
ஸாவித்ரீம் சாபி விப்ராணாம் நமஸ்யே(அ)ஹம் க்ருதாஞ்ஜலி꞉ ||2-107-12

ரக்ஷ மாம் தே³வி ஸததம் ஸங்க்³ராமே விஜயம் குரு |
இதி காமவசஸ்துஷ்டா து³ர்கா³ ஸம்ப்ரீதமாநஸா ||2-107-13

உவாச வசநம் தே³வீ ஸுப்ரீதேநாந்தராத்மநா |
பஷ்²ய பஷ்²ய மஹாபா³ஹோ ருக்மிண்யாநந்த³வர்த⁴ந ||2-107-14

கொடியில் சிங்கத்தைச் சின்னமாகக் கொண்டவளும், திரிசூலபாணியும், எருமை முக அசுரனை {மஹிஷாசுரனைக்} கொன்றவளும், சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளுமான தேவிக்குத் தலைவணங்குகிறேன்.(11) அங்கங்கள் இல்லாத ஒரே அம்சம் கொண்டவளும் {ஏகாநம்ஸையும்}, வேள்வியில் உரைக்கப்படும் புனித காயத்ரியும், பிராமணர்களின் சாவித்ரியுமான தேவியைக் கரங்கூப்பித் தலைவணங்குகிறேன்.(12) ஓ! தேவி, போரில் எப்போதும் என்னை நீ காத்து, எனக்கு வெற்றி மகுடம் சூட்டுவாயாக” என்று வேண்டினான்.
அந்தத் தேவியும் இதயத்தில் நிறைவடைந்தவளாக,(13) “ஓ! பெருங்கரங்களைக் கொண்டவனே, ஓ! ருக்மிணியின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, என்னைப் பார். ஓ! மகனே, என்னைக் காண்பது கனியில்லாமல் போகாது {என் தரிசனம் வீண்போகாது}. எனவே, ஒரு வரத்தை வேண்டுவாயாக” என்றாள்.(14)

வரம் வரய வத்ஸ த்வமமோக⁴ம் த³ர்ஷ²நம் மம |
தே³வ்யாஸு வசநம் ஷ்²ருத்வா ரோமாஞ்சோத்³க³தமாநஸ꞉ ||2-107-15

ப்ரணம்ய ஷி²ரஸா தே³வீம் விஜ்ஞப்துமுபசக்ரமே |
யதி³ த்வம் தே³வி துஷ்டாஸி தீ³யதாம் மே யதீ³ப்ஸிதம் ||2-107-16

வரம் ச வரதே³ யாசே ஸர்வாமித்ரேஷு மே ஜய꞉ |
யஸ்த்வயா முத்³க³ரோ த³த்த꞉ ஷ²ம்ப³ரஸ்யாத்மஸம்ப⁴வ꞉ ||2-107-17

தேவியின் சொற்களைக் கேட்டதும் அவனுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது, அவனது மனம் இன்பத்தால் நிறைந்தது. அவன் அந்தத் தேவியை வணங்கிவிட்டு தன்னுடைய நோக்கத்தை அவளிடம் தெரிவித்தான்,(15) “ஓ! தேவி, என்னிடம் நிறைவடைந்திருக்கும் நீ, நான் விரும்பியதைக் கொடுப்பாயாக. ஓ! கௌரவத்தை அளிப்பவளே, நான் என் பகைவர் அனைவரையும் வெல்வேனாக.(16) ஓ! தேவி, உன் மேனியில் இருந்து உண்டானதும், சம்பரனுக்கு உன்னால் கொடுக்கப்பட்டதுமான அந்த முத்கரம் என் மேனியைத் தீண்டிய உடன் தாமரை மாலையாகட்டும்” என்றான்.(17)

ஏஷ மே கா³த்ரமாஸாத்³ய மாலா பத்³மவதீ ப⁴வேத் |
ததா²ஸ்த்விதி ச ஸாப்யுக்த்வா தத்ரைவாந்தரதீ⁴யத ||2-107-18

ப்ரத்³யும்நஸ்து மஹாதேஜாஸ்துஷ்டோ ரத²மதா²ருஹத் |
முத்³க³ரம் தம் க்³ருஹீத்வா ச ஷ²ம்ப³ர꞉ க்ரோத⁴மூர்ச்சி²த꞉ ||2-107-19

ப்⁴ராமயித்வா ஸ சிக்ஷேப ப்ரத்³யும்நோரஸி வீர்யவான் |
ஸ க³த்வா மத³நாப்⁴யாஷ²ம் மாலா பூ⁴த்வா து பௌஷ்கரீ ||2-107-20

ப்ரத்³யும்நஸ்ய ச கண்டே² து ஸமாஸக்தா வ்யராஜத |
நக்ஷத்ராணாம் து மாலாயாம் யதா² பரிவ்ருதோ விது⁴꞉ ||2-107-21

ததோ தே³வா꞉ ஸக³ந்த⁴ர்வா꞉ ஸித்³தா⁴ஷ்²ச பரமர்ஷய꞉ |
ஸாது⁴ ஸாத்⁴விதி வாசோசு꞉ பூஜயந்கேஷ²வாத்மஜம் ||2-107-22

அதைக் கேட்ட அந்தத் தேவி, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனாள்.(18) பெருஞ்சக்திவாய்ந்த பிரத்யும்னனும், பெரும் மகிழ்ச்சியுடன் தேரில் ஏறினான். அப்போது பெருஞ்சக்திவாய்ந்த சம்பரன் தன் முத்கரத்தை எடுத்துச் சுழற்றியபடியே அதைப் பிரத்யும்னனின் மார்பின் மீது வீசினான்.(19,20) பிரத்யும்னன் மீது பட்டவுடனேயே அது தாமரை மாலையாகி அவனது கழுத்தை அலங்கரித்தது. அவன் விண்மீன்களால் சூழப்பட்ட நிலவைப் போலத் தெரிந்தான்.(21) முத்கரம், தாமரை மாலையானதைக் கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் ஆகியோரும், பெரும் முனிவர்களும் பிரத்யும்னனை அவனது முன்னிலையிலேயே உயர்வாகப் பேசினர் {வாழ்த்தினர்}.(22)

முத்³க³ரம் புஷ்பபூ⁴தம் து த்³ருஷ்ட்வா ப்ரத்³யும்நஸம்நிதௌ⁴ |
வைஷ்ணவம் பரமாஸ்த்ரம் து நாரதே³ந யதா²ஹ்ருதம் ||2-107-23

ஸந்த³தே⁴ சாபமாநம்ய இத³ம் வசநமப்³ரவீத் |
யத்³யஹம் ருக்மிணீபுத்ர꞉ கேஷ²வஸ்யாத்மஜோ ஹ்யஹம் ||2-107-24

அப்போது அந்தக் கேசவன் மகன் {பிரத்யும்னன்}, தன் வில்லை வளைத்து, நாரதர் கொண்டு வந்த வைஷ்ணவக் கணையை அதில் பொருத்திவிட்டு,(23) “ஓ! கணையே, நான் கேசவனால் பெறப்பட்ட ருக்மிணியின் மகனாக இருந்தால், அந்த உண்மையின் வலிமையைக் கொண்டு போர்க்களத்தில் சம்பரனைக் கொல்வாயாக” என்றான்.(24)

தேந ஸத்யேந பா³ணேந ஜஹி த்வம் ஷ²ம்ப³ரம் ரணே |
இத்யுக்த்வா சாபமாக்ருஷ்ய ஸந்தா⁴ய ச மஹாமநா꞉ ||2-107-25

சிக்ஷேப ஷ²ம்ப³ரஸ்யாத² த³ஹம்ˮல்லோகத்ரயம் யதா² |
ஸ க்ஷிப்தோ வ்ருஷ்ணிஸிம்ஹேந ஷ²ர꞉ க்ரவ்யாத³மோஹந꞉ ||2-107-26

ஹ்ருத்³யம் ஷ²ம்ப³ரஸ்யாத² பி⁴த்த்வா த⁴ரணிமாக³த꞉ |
ந சாஸ்ய மாம்ஸம் ந ஸ்நாயுர்நாஸ்தி² ந த்வங்ந ஷோ²ணிதம் ||2-107-27

உன்னத மனம் கொண்ட பிரத்யும்னன், இதைச் சொல்லிவிட்டு, மூவுலகங்களையும் எரித்துவிடுபவனைப்போலத் தன் வில்லை வளைத்து அந்தக் கணையைச் சம்பரன் மீது ஏவினான்.(25) விருஷ்ணி தலைவனால் ஏவப்பட்ட அந்தக் கணையும் சம்பரனின் மார்பைத் துளைத்து பூமிக்குள் நுழைந்தது.(26) அந்த வைஷ்ணவக் கணையின் சக்தியால் அவனது சதை, எலும்புகள், நரம்புகள், மண்டையோடு, குருதி ஆகியவை அனைத்தும் சாம்பலாகின.(27)

ஸர்வம் தத்³ப⁴ஸ்மஸாத்³பூ⁴தம் வைஷ்ணவாஸ்த்ரஸ்ய தேஜஸா |
ஹதே தை³த்யே மஹாகாயே தா³நவே ஷ²ம்ப³ரே(அ)த⁴மே ||2-107-28

ஜஹ்ருஷுர்தே³வக³ந்த⁴ர்வா நந்ருதுஷ்²சாப்ஸரோக³ணா꞉ |
உர்வஷீ² மேநகா ரம்பா⁴ விப்ரசித்திஸ்திலோத்தமா ||2-107-29

ந ந்ருதுர்ஹ்ருஷ்டமநஸோ ஜக³த்ஸ்தா²வரஜங்க³மம் |
தே³வராஜஸ்து ஸுப்ரீத꞉ ஸர்வதே³வக³ணை꞉ ஸஹ |
ப்ரத்³யும்நம் புஷ்பவர்ஷேண தமப்⁴யர்ச்ய ப்ரஹ்ருஷ்டவத் || 2-107-30

அத² ஸமரஹதே து தை³த்யராஜே
மது⁴மத²நஸ்ய ஸுதேந வைஷ்ணவாஸ்த்ரை꞉ |
விக³தரிபுப⁴யா꞉ ஸுராஷ்²ச ஜக்³மு-
ர்மகரவிபூ⁴ஷணகேதநம் ஸ்துவந்த꞉ ||2-107-31

ஸ ச ஸமரபரிஷ்²ரமம் வஹந்வை
நக³ரமுக²ம் ப்ரவிவேஷ² ரௌக்மிணேய꞉ |
ப்ரியதம இவ காந்தயா ப்ரஹ்ருஷ்ட-
ஸ்த்வரிதபத³ம் ரதித³ர்ஷ²நம் சகார ||2-107-32

பேருடல் படைத்தவனும், பாவியுமான அந்தத் தானவன் சம்பரன் இவ்வாறு கொல்லப்பட்டதும் தேவர்களும், கந்தர்வர்களும் மகிழ்ச்சியில் நிறைந்தனர்.(28) ஊர்வசி, மேனகை, ரம்பை, விப்ரசித்தி, திலோத்தமை ஆகியோரும், பிற அப்சரஸ்களும் நடனமாடினர், உயிருள்ள, உயிரற்ற மொத்த படைப்புகளும் அவ்வாறே ஆடின.(29) தேவர்களுடன் கூடிய தேவ மன்னன் மகிழ்ச்சியடைந்தான், அவர்கள் பிரத்யும்னனைப் புகழ்ந்தவாறே அவன் மீது மலர் மாரியைப் பொழிந்தனர்.(30) மதுசூதனனின் மகனான மதனனால் {காமனான பிரத்யும்னனால்} தைத்தியர்களின் மன்னன் போரில் கொல்லப்பட்டதும், தேவர்கள் தங்கள் பகைவன் மீது கொண்ட அச்சத்தில் இருந்து விடுபட்டு, பிரத்யும்னனைத் துதித்துவிட்டுத் தேவலோகத்திற்குச் சென்றனர்.(31) போரில் களைத்திருந்த ருக்மிணியின் மகன், ஒரு காதலன் தன் காதலியிடம் செல்வதைப் போல விரைவான எட்டுகளை எடுத்து வைத்து நகரத்திற்குச் சென்று தன் மனைவியைச் சந்தித்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(32)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷ²ம்ப³ரவதே⁴ ஸப்தாதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading