ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 104–(ஸ்ரீ பிரத்யும்ந ஹரணம்)-ஸ்ரீ பிரத்யும்னன் கடத்தப்பட்டான் | —

பிரத்யும்னனின் முற்பிறவி வரலாறு; சம்பரனால் கடத்தப்பட்ட பிரத்யும்னன்; ரதிதேவியான மாயாவதியின் காதல்-

ஜநமேஜய உவச
ய ஏஷ ப⁴வதா பூர்வம் ஷ²ம்ப³ரக்⁴நேத்யுதா³ஹ்ருத꞉ |
ப்ரத்³யும்ந꞉ ஸ கத²ம் ஜக்⁴நே ஷ²ம்ப³ரம் தத்³ப்³ரவீஹி மே ||2-104-1

வைஷ²ம்பாயந உவாச
ருக்மிண்யாம் வாஸுதே³வஸ்ய லக்ஷ்ம்யாம் காமோ த்⁴ருதவ்ரத꞉ |
ஷ²ம்ப³ராந்தகரோ ஜஜ்ஞே ப்ரத்³யும்ந꞉ காமத³ர்ஷ²ந꞉ |
ஸநத்குமார இதி ய꞉ புராணே பரிகீ³யதே ||2-104-2

தம் ஸப்தராத்ரே ஸம்பூர்ணே நிஷீ²தே² ஸூதிகாக்³ருஹாத் |
ஜஹார க்ருஷ்ணஸ்ய ஸுதம் ஷி²ஷு²ம் வை காலஷ²ம்ப³ர꞉ ||2-104-3

விதி³தம் தஸ்ய க்ருSணஸ்ய தே³வமாயாநுவர்திந꞉ |
ததோ ந நிக்³ருஹீத꞉ ஸ தா³நவோ யுத்³த⁴து³ர்மத³꞉ ||2-104-4

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பிரத்யும்னன் சம்பரனைக் கொன்றான் என்று முன்பு நீர் சொன்னீர். பிரத்யும்னன் அவனை எவ்வாறு கொன்றான் என்பதை இப்போது எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “உறுதிமிக்க நோன்புகளைக் கொண்ட காமன் (மன்மதன்), சம்பரனைக் கொல்வதற்காக வாசுதேவனின் அழகிய மகன் பிரத்யும்னனாக லக்ஷ்மியின் அம்சமான ருக்மிணிக்குப் பிறந்தான்.(2) குழந்தையாக இருந்த கிருஷ்ணனின் மகன் பிறந்த ஏழாம் நாள் நள்ளிரவில் பேற்றறையில் {பிரசவ அறையில்} இருந்து காலசம்பரன் அவனை அபகரித்துச் சென்றான்.(3) தெய்வீக மாயையைப் பின்பற்றும் கிருஷ்ணன் அனைத்தையும் அறிந்தாலும்[இதே அத்யாயத்தின் 28,29ம் ஸ்லோகங்களில் உள்ள செய்தி இதற்கு முரணாக இருக்கிறது. இங்கே சொல்வது வைசம்பாயனர், அங்கே சொல்வது மாயாவதி என்பதால் இந்த வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்.], போரில் வெல்லப்பட முடியாத அந்தத் தானவனை அந்நேரத்தில் கொல்லாமல் இருந்தான்.(4)

ஸ ம்ருத்யுநா பரீதாயுர்மாயயா ஸஞ்ஜஹார தம் |
தோ³ர்ப்⁴யாமுத்க்ஷிப்ய நக³ரம் ஸ்வம் நிநாய மஹாஸுர꞉ ||2-104-5

அநபத்யா து தஸ்யாஸீத்³பா⁴ர்யா ரூபகு³ணாந்விதா |
நாம்நா மாயாவதீ நாம மாயேவ ஷு²ப⁴த³ர்ஷ²நா ||2-104-6

த³தௌ³ தம் வாஸுதே³வஸ்ய புத்ரம் புத்ரமிவாத்மஜம் |
தஸ்யா மஹிஷ்யா மாயிந்யா தா³நவ꞉ காலசோதி³த꞉ ||2-104-7

மாயாவதீ து தம் த்³ருஷ்ட்வா ஸம்ப்ரஹ்ருஷ்டதநூருஹா |
ஹர்ஷேண மஹதா யுக்தா புந꞉ புநருதை³க்ஷத ||2-104-8

அத² தஸ்ய நிரீக்ஷந்த்யா꞉ ஸ்ம்ருதி꞉ ப்ராது³ர்ப³பூ⁴வ ஹ |
அயம் ஸ மம காந்தோ(அ)பூ⁴த்ஸ்ம்ருத்வைவம் சாந்வசிந்தயத் ||2-104-9

அயம் ஸ நாதோ² ப⁴ர்தா மே யஸ்யார்தே²(அ)ஹம் தி³வாநிஷ²ம் |
சிந்தாஷோ²கார்ணவே மக்³நா ந விந்தா³மி ரதிம் க்வசித் ||2-104-10

அயம் ப⁴க³வதா பூர்வம் தே³வதே³வேந ஷூ²லிநா |
கே²தி³தேந க்ருதோ(அ)நங்கோ³ த்³ருஷ்டோ ஜாத்யந்தரே மயா ||2-104-11

கத²மஸ்ய ஸ்தநம் தா³ஸ்யே மாத்ருபா⁴வேந ஜாநதீ |
ப⁴ர்துர்பா⁴ர்யா த்வஹம் பூ⁴த்வ வக்ஷ்யே வா புத்ர இத்யுத ||2-104-12

அந்தப் பேரசுரன் {காலசம்பரன்}, காலனால் தூண்டப்பட்டவனைப் போலக் கிருஷ்ணனின் மகனை அபகரித்துச் சென்றான். அவனைத் தன் தோள்களில் போட்டுக் கொண்டு தன் நகருக்குச் சென்றான்.(5) அழகியும், குணவதியும், மாயையின் அம்சமாகத் திகழ்ந்தவளுமான அவனது மனைவி மாயாவதி {ரதிதேவி} பிள்ளையற்றவளாக இருந்ததால், காலனால் தூண்டப்பட்ட அந்தத் தானவன், வாசுதேவனின் மகனைத் தன் மகன் போல் அவளிடம் கொடுத்தான்.(6,7) அவனைக் கண்டதும் அவள் இன்பத்தில் நிறைந்தாள், அவளுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது; அவள் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியாக அவனைக் கண்டாள்.(8) இவ்வாறே அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவள், அவன் தன் அன்புக்குரிய கணவனாக இருந்ததை நினைவுகூர்ந்தாள். அதை எண்ணிப் பார்த்த அவள் மீண்டும்,(9) “எவரால் எந்த இடத்திலும் மனமகிழ்ச்சியை அடைய முடியாமல் இருந்தேனோ, எவருக்காகத் துன்பக்கடலில் மூழ்கியிருந்தேனோ அந்தத் தலைவரே இவன்.(10) முற்காலத்தில் சதியால் {சதிதேவியால்} கவலையில் பீடிக்கப்பட்டிருந்தவனும், தெய்வீகனுமான தேவன் திரிசூலபாணியால் அவர் {மன்மதன்} சாம்பலாக்கப்பட்டார்.(11) அவருடைய மனைவியான நான் அந்தக் கணவர் இவனே என்று அறிந்த பின்பும் எவ்வாறு முலை கொடுத்து மகனென்று அழைப்பேன்?” என்று நினைத்தாள்.(12)

ஏவம் ஸஞ்சிந்த்ய மநஸா தா⁴த்ர்யாஸ்தம் ஸா ஸமர்பயத் |
ரஸாயநப்ரயோகை³ஷ்²ச ஷீ²க்⁴ரமேவ வ்யவர்த⁴யத் ||2-104-13

த⁴த்ர்யா꞉ ஸகாஷா²த்ஸ ச தாம் ஷ்²ருண்வந்ருக்மிணிநந்த³ந꞉ |
மாயாவதீமவிஜ்ஞாநாந்மேநே ஸ்வாமேவ மாதரம் ||2-104-14

ஸா ச தம் வர்த⁴யாமாஸ கார்ஷ்ணிம் கமலலோசநம் |
மாயாஷ்²சாஸ்மை த³தௌ³ ஸர்வா தா³நவீ꞉ காமமோஹிதா ||2-104-15

ஸ யதா³ யௌவந்ஸ்த²ஸ்து ப்ரத்³யும்ந꞉ காமத³ர்ஷ²ந꞉ |
சிகீர்ஷிதஜ்ஞோ நாரீணாம் ஸர்வாஸ்த்ரவிதி⁴பாரக³꞉ ||2-104-16

இவ்வாறு நினைத்த மாயாவதி அந்தக் குழந்தையைச் செவிலித் தாயிடம் கொடுத்து ஊட்டமிக்க மருந்துகளின் மூலம் விரைவாகவே வளர்த்தாள்.(13) ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, செவிலியால் சொல்லப்பட்டும், அறியாமையினாலும் மாயாவதியைத் தன் அன்னையாக அறிந்தான்.(14) காமத்தால் பீடிக்கப்பட்ட மாயாவதியும், தாமரைக் கண்களைக் கொண்ட கமலத்தலைவனின் மகனை {பிரத்யும்னனை} வளர்த்து, அனைத்து வகை மாயைகளையும் அவனுக்குக் கற்பித்தாள்.(15) மெல்ல மெல்ல இளமையின் வரம்பைத் தொட்ட பிரத்யும்னன் பேரழகனாகத் தெரிந்தான், அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும், பெண்களின் அசைவுகளைப் புரிந்து கொள்வதிலும் திறன்மிக்கவனானான்.(16)

தம் ஸா மாயாவதீ காந்தம் காமயாமாஸ காமிநீ |
இங்கி³தைஷ்²சாபி வீக்ஷந்தீ ப்ரலோப⁴யத ஸஸ்மிதா |
ப்ரஸஜ்ஜந்தீம் து தாம் தே³வீம் ப³பா⁴ஷே சாருஹாஸிநீம் || 2-104-17

ப்ரத்³யும்ந உவாச
மாத்ருபா⁴வம் வ்யதிக்ரம்ய கிமேவம் வர்தஸே(அ)ந்யதா² |
அஹோ து³ஷ்டஸ்வபா⁴வாஸி ஸ்த்ரீத்வே சபலமாநஸா ||2-104-18

யா புத்ரபா⁴வமுத்ஸ்ருஜ்ய மயி லோபா⁴த்ப்ரவர்தஸே |
ந து தே(அ)ஹம் ஸுத꞉ ஸௌம்யே கோ(அ)யம் ஷீ²லவிபர்யய꞉ ||2-104-19

தத்த்வமிச்சா²ம்யஹம் தே³வி கதி²தம் கோ(அ)ந்வயம் விதி⁴꞉ |
வித்³யுத்ஸம்பாதசபல꞉ ஸ்வபா⁴வ꞉ க²லு யோஷிதாம் ||2-104-20

யா நரேஷு ப்ரஸஜ்ஜந்தே நகா³க்³ரேஷு க⁴நா இவ |
யதி³ தே(அ)ஹம் ஸுத꞉ ஸௌம்யே யதி³ வா நாத்மஜ꞉ ஷு²பே⁴ ||2-104-21

கதி²தம் தத்த்வமிச்சா²மி கிமித³ம் தே சிகீர்ஷிதம் |
ஏவமுக்தா து Sஅ பீ⁴ரு꞉ காமேந வ்யதி²தேந்த்³ரியா ||2-104-22

அப்போது மாயாவதி, அழகிய பெண்ணின் தோற்றத்தை ஏற்றுக் கொண்டு, தன் அன்புக்குரிய கணவனின் துணையை நாடி, தன் உடலசைவுகளால் {முக அபிநயங்களால்} அவனை மயக்க முற்பட்டாள். பிரத்யும்னன், தன்னிடம் பற்றுடன் இருப்பவளும், இனிய புன்னகையுடன் கூடியவளுமான அந்தப் பெண்ணிடம்,(17) “இஃது என்ன? தாய்மையுணர்வுக்குப் பிறழ்முரணாக ஏன் நடந்து கொள்கிறாய்? ஐயோ, பெண்கள் எவ்வளவு தீமையானவர்களாக இருக்கிறார்கள்? அவர்களது மனம் ஏன் இவ்வாறு நிலையற்றிருக்கிறது?(18) காமத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நீ என்னை உன் மகனாகக் கருதாமல் பிறழொழுகி முரணாக நடந்து கொள்கிறாய். ஓ! மென்மையான பெண்ணே, இத்தகைய பிறழியல்பின் காரணம் யாது? நான் உன் மகன் இல்லையா?(19) ஓ!தேவி, நீ ஏன் என்னிடம் இவ்வாறு நடந்து கொள்கிறாய்? இந்த உண்மையை நான் உன்னிடம் இருந்தே அறிய விரும்புகிறேன். பெண்களின் இயல்பு மின்னலைப் போன்று நிலையற்றது {சஞ்சலத்துடன் கூடியது}.(20) மலைச் சிகரங்களுடன் இணைந்திருக்கும் மேகங்களைப் போலவே அவர்கள் ஆண்களுடன் இணைந்திருக்கிறார்கள்.(21) ஓ! மென்மையான பெண்ணே, நான் உன் மகனா, இல்லையா என்பது முக்கியமானதல்ல. உன் உடல் அசைவுகளின் நோக்கத்தை {உண்மையை} உன் வாயின் மூலமே நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.(22)

ப்ரியம் ப்ரோவாச வசநம் விவிக்தே கேஷ²வாத்மஜம் |
ந த்வம் மம ஸுத꞉ காந்த நாபி தே ஷ²ம்ப³ர꞉ பிதா ||2-104-23

ரூபவாநஸி விக்ராந்தஸ்த்வம் ஜாத்யா வ்ருஷ்ணிநந்த³ந |
புத்ரஸ்த்வம் வாஸுதே³வஸ்ய ருக்மிண்யாநந்த³வர்த⁴ந꞉ ||2-104-24

தி³வஸே ஸப்தமே பா³லோ ஜாதமாத்ரோபவாஹித꞉ |
ஸூதிகாகா³ரமத்⁴யாத்த்வம் ஷி²ஷு²ருத்தாநஷா²யித꞉ ||2-104-25

மம ப⁴ர்த்ரா ஹ்ருதோ(அ)ஸி த்வம் ப³லவீர்யப்ரவர்திநா |
பிதுஸ்தே வாஸுதே³வஸ்ய த⁴ர்ஷயித்வா க்³ருஹம் மஹத் ||2-104-26

பாகஷா²ஸநகல்பஸ்ய ஹ்ருதஸ்த்வம் ஷ²ம்ப³ரேண ஹ |
ஸா ச தே கருணம் மாதா த்வாம் பா³லமநுஷோ²சதீ ||2-104-27

அத்யர்த²ம் தப்யதே வீர விவத்ஸா ஸௌரபீ⁴ யதா² |
ஸோ(அ)பி ஷ²க்ராத³பி மஹாந்பிதா தே க³ருட³த்⁴வஜ꞉ ||2-104-28

இஹ த்வாம் நாபி⁴ஜாநாதி பா³லமேவோபவாஹிதம் |
காந்த வ்ரூஷ்ணிகுமாரஸ்த்வம் ந ஹி த்வம் ஷ²ம்ப³ராத்மஜ꞉ ||2-104-29

வீர நைவம் விதா⁴ந்புத்ராந்தா³நவா ஜநயந்தி ஹி |
அதோ(அ)ஹம் காமயாமி த்வாம் ந ஹி த்வம் ஜநிதோ மயா ||2-104-30

ரூபம் தே ஸௌம்ய பஷ்²யந்தீ ஸீதா³மி ஹ்ருதி³ து³ர்ப³லா |
யந்மே வ்யவஸிதம் காந்த யத்து மே ஹ்ருதி³ வர்ததே ||2-104-31

தந்மே மநஸி வார்ஷ்ணேய ப்ரதிஸந்தா⁴துமர்ஹஸி |
ஏஷ தே கதி²த꞉ ஸர்வ꞉ ஸத்³பா⁴வஸ்த்வயி யோ மம ||2-104-32

காமத்தால் பீடிக்கப்பட்ட இதயத்தைக் கொண்டவளும், {மான் போன்று} மருண்டவளுமான அந்தக் காரிகைத் தனிமையான ஓரிடத்தில் கேசவனின் மகனான தன் காதலனிடம் {பிரத்யும்னனிடம்}, “நீ என் மகனில்லை, சம்பரன் உன் தந்தையுமில்லை.(23) பலம்வாய்ந்தவனும், அழகனுமான நீ விருஷ்ணியின் வழித்தோன்றலாவாய்; நீ வாசுதேவன், ருக்மிணியின் இனிமை மிகுந்த மகனாவாய்.(24) நீ பிறந்த ஏழாம் நாளில் இங்கே கொண்டு வரப்பட்டாய். ஆதரவற்ற மழலையாக நீ பேற்றறையில் கிடந்த போது பலம்வாய்ந்தவனான என் கணவன் {சம்பரன்} உன்னை அபகரித்து வந்தான்.(25) அந்தச் சம்பரன், பாகசாசனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவரும், உன் தந்தையுமான வாசுதேவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உன்னை அபகரித்து வந்தான்.(26) மகனின் நிமித்தமான கவலையில் பீடிக்கப்பட்டிருக்கும் உன் அன்னை {ருக்மிணி} கன்றைப் பிரிந்த பசுவைப் போல அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள்.(27) கொடியில் கருடனைச் சின்னமாகக் கொண்டவரும், சக்ரனைவிடப் பலம்வாய்ந்தவருமான உன் தந்தை {கிருஷ்ணன்}, நீ குழந்தையாக இருக்கும்போதே இங்கே கொண்டவரப்பட்டதால் அதை அறியாமல் இருக்கிறார். ஓ! தலைவா, நீ விருஷ்ணி இளவரசனேயன்றி சம்பரனின் மகனல்ல.(28,29) மேலும் தானவர்களால் உன்னைப் போன்ற ஒரு மகனைப் பெற முடியாது. ஓ! மென்மையானவனே, நான் உன்னை ஈன்றெடுக்காததால் என் காதலனாக உன்னை நாடுகிறேன்.(30) உன் அழகைக் கண்டு என் பலவீனமான இதயம் தளர்கிறது. மேலும், ஓ! விருஷ்ணி வீரா, என் இதயத்தில் இருக்கும் விருப்பத்தை நீயே தேடுவாயாக.(31) நீ என் மகனுமில்லை, சம்பரனின் மகனுமில்லை என்பதையும், நான் உன்னை வளர்த்ததையும் இவ்வாறே நான் சொன்னேன்” என்றாள் {மாயாவதி}.(32)

யதா² ந மம புத்ரஸ்த்வம் ந புத்ர꞉ ஷ²ம்ப³ரஸ்ய ச |
ஷ்²ருத்வைவமகி²லம் ஸர்வம் மாயாவத்யா ப்ரபா⁴ஷிதம் ||2-104-33

சக்ராயுதா⁴த்மஜ꞉ க்ருத்³த⁴꞉ ஷ²ம்ப³ரம் ஸ ஸமாஹ்வயத் |
ஸர்வமாயஸ்வபி⁴ஜ்ஞோ(அ)ஸௌ நாம விஷ்²ராவ்ய சாத்மந꞉ ||2-104-34

அஹோ தா³நவது³ஷ்டாத்மா கேஷ²வஸ்யாத்மஜம் ஷி²ஷு²ம் |
ஹரதே நிர்ப⁴யஷ்²சைவ ப⁴யமத்³ய கரோம்யஹம் ||2-104-35

கத²ம் வை க்ரோத⁴மாக³ச்சே²த்³வத்⁴யதே வா கத²ம் மயா |
ப்ரத²மம் கிம் கரிஷ்யாமி யேந குப்யதி மந்த³தீ⁴꞉ ||2-104-36

அஸ்தி சாSய த்⁴வஜம் சித்ரம் ஸிம்ஹகேதுவிபூ⁴ஷிதம் |
தோரணம் க்³ருஹமாஸாத்³ய உச்ச்²ரிதம் மேருஷ்²ரு~க³வத் ||2-104-37

ஏதது³ந்மத்²ய பாதிஷ்யே ப⁴ல்லேந நிஷி²தேந வை |
த்⁴வஜச்சே²த³ம் விதி³த்வாத² ஷ²ம்ப³ரோ நிஷ்க்ரமிஷ்யதி ||2-104-38

சக்கரபாணியின் மகனான பிரத்யும்னன், அனைத்து வகை மாயைகளிலும் தேர்ச்சி அடைந்திருந்தான். எனவே மாயாவதியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கோபத்தால் தூண்டப்பட்டவனாகத் தன் பெயரை உரக்க அறிவித்தபடியே சம்பரனை அறைகூவியழைத்தான். அவன்,(33,34) “ஐயோ, குழந்தையாக இருந்த கேசவனின் மகனை அபகரித்தவனும், தீய ஆன்மா கொண்டவனுமான தானவனுக்கு அஞ்சி நான் இங்கே இருப்பேனோ?(35) இழிந்தவனான அந்தப் பாவியைக் கோபமடையச் செய்வது எவ்வாறு? நான் அவனைக் கொல்வது எவ்வாறு? அவனது கோபத்தைத் தூண்டும் செயலையே நான் செய்ய வேண்டும்.(36) அவனது வாயிலில் சுமேரு மலையைப் போல நிற்பதும், சிங்கச் சின்னம் பொறித்த முக்கோணக் கொடி பறந்து கொண்டிருப்பதும், அற்புதமானதுமான அவனது கொடிக்கம்பத்தை(37) என் கூரிய பல்லத்தால் நான் வீழ்த்தப் போகிறேன். கொடிமரம் அவமதிக்கப்பட்டதை அறிந்தால் சம்பரன் நிச்சயம் வெளியே வருவான்.(38)

ததோ யுத்³தே⁴ந ஹத்வா(ஆ)ஜௌ க³ந்தாஸ்மி த்³வாரகாம் ப்ரதி |
இத்யுக்த்வா ஸஜ்யமாசக்ரே ஸஷ²ரம் சாபமோஜஸா ||2-104-39

சிச்சே²த³ த்⁴வஜரத்நம் து ஷ²ம்ப³ரஸ்ய மஹாபு⁴ஜ꞉ |
தச்சு²த்வா து த்⁴வஜச்சே²த³ம் ப்ரத்³யும்நேந மஹாத்மநா ||2-104-40

க்ருத்³த⁴ஸ்த்வாஜ்ஞாபயாமாஸ புத்ராந்வை காலஷ²ம்ப³ர꞉ |
ஜிகா⁴ம்ஸத்⁴வம் மஹாவீரா ரௌக்மிணேயம் த்வராந்விதா꞉ ||2-104-41

நைவம் வை த்³ரஷ்டுமிச்சா²மி மம விப்ரியகாரகம் |
ஷ்²ருத்வா து ஷ²ம்ப³ராத்³வாக்யம் ஸுதாஸ்தே ஷ²ம்ப³ரஸ்ய ஹ ||2-104-42

ஸம்நத்³தா⁴ நிர்யயுர்ஹ்ருஷ்டா꞉ ப்ரத்³யும்நவத⁴காங்க்ஷயா |
சித்ரஸேநோ(அ)திஸேநஷ்²ச விஷ்வஸேநோ க³த³ஸ்ததா² ||2-104-43

ஷ்²ருதஸேந꞉ ஸுஷேணஸ்து ஸோமஸேநோ மநஸ்ததா² |
ஸேநாநீ ஸைந்யஹந்தா ச ஸேநாஹா ஸைநிகஸ்ததா² ||2-104-44

ஸேநஸ்கந்தோ⁴(அ)திஸேநஷ்²ச ஸேநகோ ஜநக꞉ ஸுத꞉ |
ஸகாலோ விகல꞉ ஷா²ந்த꞉ ஸ ஷா²தாந்தகரோ விபு⁴꞉ || 2-104-45

கும்ப⁴கேது꞉ ஸுத³ம்ஷ்ட்ரஷ்²ச கேஷி²ரித்யேவமாத³ய꞉ |
சக்ரதோமரஷூ²லாநி பட்டிஷா²நி பரஷ்²வதா⁴ன் ||2-104-46

க்³ருஹீத்வா நிர்யயுர்ஹ்ருஷ்டா மந்யுநா பரமாப்லுதா꞉ |
ஆஹ்வயந்தமமித்ரம் வை தஸ்து²꞉ ஸங்க்³ராமமூர்த⁴நி ||2-104-47

அப்போது நான் அவனுடன் போரிட்டு, அவனைக் கொன்றுவிட்டுத் துவாரகை திரும்புவேன்” என்று சொன்னான்.
நீண்ட கரங்களைக் கொண்ட பிரத்யும்னன், தன் வில்லின் நாணேற்றி,(39) கணைகளை ஏவி கொடிமரங்களின் ரத்தினமான சம்பரனின் கொடிமரத்தை வெட்டி வீழ்த்தினான்.(40) உயரான்ம பிரத்யும்னனால் தன் கொடிமரம் அழிக்கப்பட்டதைக் கேட்ட சம்பரன், கோபத்தால் நிறைந்தவனாகத் தன் மகன்களிடம்,(41) “ஓ! பெரும் வீரர்களே, ருக்மிணியின் மகனை உடனே கொல்வீராக. எனக்கு இந்தத் தீங்கைச் செய்த அவனை நான் காண விரும்பவில்லை” என்று ஆணையிட்டான்.(42) சம்பரனின் சொற்களைக் கேட்ட அவனது மகன்களான சித்ரஸேனன், அதிஸேனன், விஷ்வக்ஸேனன், கதன்,(43) ஸ்ருதனேபன், ஸுஷேணன், ஸோமஸேனன், மநன், ஸேனாநீ, ஸைன்யஹந்தன், ஸேனாஹன், ஸைனிகன்,(44) ஸேனஸ்கந்தன், அதிஸேனன், ஸேனகன், ஜனகன், ஸுதன், ஸகாலன், விகலன், சாந்தன், சாந்தந்தகரன், விபு {அஸுசி},(45) கும்பகேது, ஸுதமஷ்ட்ரன், கேசி ஆகியோர் நன்கு ஆயுதம் தரித்தவர்களாக மகிழ்ச்சியுடன் பிரத்யும்னனைக் கொல்வதற்காக வெளியே வந்தனர். கோபத்தால் தூண்டப்பட்டவர்களான அவர்கள், சக்கரங்கள், தோமரங்கள், சூலங்கள், பட்டிசங்கள், வாள்கள், பராஸ்வதங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பிரத்யும்னனை அறைகூவியழைத்தபடியே போர்க்களத்திற்குச் சென்றனர்.(46,47)

ப்ரத்³யும்நஸ்து மஹாபா³ஹூ ரத²மாருஹ்ய ஸத்வரம் |
நிர்யயௌ சாபமாதா³ய ஸங்க்³ராமாபி⁴முக²ஸ்ததா³ ||2-104-48

தத꞉ ப்ரவ்ருத்தம் யுத்³த⁴ம் து துமுலம் லோமஹர்ஷணம் |
ஷ²ம்ப³ரஸ்ய து புத்ராணாம் கேஷ²வஸ்ய ச ஸூநுநா ||2-104-49

ததோ தே³வா꞉ ஸக³ந்த⁴ர்வா꞉ ஸமஹோரக³சாரணா꞉ |
தே³வராஜம் புரஸ்க்ருத்ய விமாநாக்³ரேஷு தி⁴ஷ்டி²தா꞉ ||2-104-50

நாரத³ஸ்தும்பு³ருஷ்²சைவ ஹாஹாஹூஹூஷ்²ச கா³யநா꞉ |
அப்ஸரோபி⁴꞉ பரிவ்ருதா꞉ ஸர்வே தத்ராவதஸ்தி²ரே ||2-104-51

தே³வராஜப்ரதீஹாரோ க³ந்த⁴ர்வஷ்²சித்ரமத்³பு⁴தம் |
ஷ²ஷ²ம்ஸ தே³வராஜாய வஜ்ரிணே தத்³விசேஷ்டிதம் ||2-104-52

ஷ²ம்ப³ரஸ்ய ஷ²தம் புத்ரா ஏக꞉ க்ருஷ்ணஸ்ய சாத்மஜ꞉ |
ப³ஹூநாம் யுத்³த்⁴யதாமேஷ கத²ம் விஜயமாப்நுயாத் ||2-104-53

பெருங்கரங்களைக் கொண்ட பிரத்யும்னன் தன் வில்லை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் தேரில் ஏறி போர்க்களத்தை நோக்கி அதைச் செலுத்தினான்.(48) அப்போது கேசவனின் மகனுக்கும், சம்பரனின் மகன்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதும், பயங்கரம் நிறைந்ததுமான ஒரு போர் நடந்தது.(49) அந்தப் போரைக் காண்பதற்காகக் கந்தர்வர்கள், உரகர்கள், சாரணர்கள், தேவர்கள் ஆகியோர் தங்கள் மன்னனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து வானத்தில் நின்றிருந்தனர்.(50) நாரதர், தும்புரு, ஹாஹா, ஹுஹு, பிற பாடகர்கள் ஆகியோர் அப்சரஸ்கள் சூழ அங்கே நின்றிருந்தனர்.(51) அப்போது தேவர்களின் மன்னனுடைய அவையைச் சேர்ந்த அத்புதநாமன் என்ற கந்தர்வன், வஜ்ரதாரியான வாசவனிடம்,(52) “சம்பரனின் மகன்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனர், கிருஷ்ணனின் மகனோ தனி ஒருவனாக இருக்கிறான். பலருடன் போரிட்டு எவ்வாறு அவனால் வெற்றியை அடைய இயலும்?” என்று கேட்டான்.(53)

தச்ச்²ருத்வா பா⁴ஷிதம் தஸ்ய ப்ரஹஸ்ய ப³லஸூத³ந꞉ |
உவாச வசநம் சேத³ம் ஷ்²ருணு யோ(அ)ஸ்ய பராக்ரம꞉ ||2-104-54

காமோ(அ)யம் பூர்வதே³ஹே து ஹரக்ரோதா⁴க்³நிநா ஹத꞉ |
ரத்யா ப்ரஸாதி³தோ தே³வ꞉ காமபத்ந்யா த்ரிலோசந꞉ |
பரிதுஷ்டேந தே³வேந வரமஸ்யா꞉ ப்ரதீ³யதே ||2-104-55

பலனைக் கொன்றவனான வாசவன் {இந்திரன்}, அவனது சொற்களைக் கேட்டுப் புன்னகைத்தவாறே, “அவனுடைய ஆற்றலைக் குறித்துக் கேட்பாயாக.(54) முற்பிறவியில் காமனாக {மன்மதனாக} இருந்த அவன் {பிரத்யும்னன்}, ஹரனின் கோப நெருப்பால் எரிக்கப்பட்டான். அதன் பிறகு, அவனது மனைவி {ரதிதேவி} முக்கண் தேவனைத் தணிவடையச் செய்தாள்.(55)

விஷ்ணுர்மாநுஷதே³ஹஸ்து த்³வாரகாயாம் ப⁴விஷ்யதி |
தஸ்ய புத்ரத்வமஸ்யைவ ப⁴விஷ்யதி ந ஸம்ஷ²ய꞉ ||2-104-56

அநங்க³ இதி விக்²யாதஸ்த்ரைலோக்யே து மஹாயஷா²꞉ |
தத்ரோத்பந்நோ மஹாதேஜா꞉ ஷ²ம்ப³ரம் கா⁴தயிஷ்யதி ||2-104-57

ஸப்தாஹே ஜாதமாத்ரே து ருக்மிண்யா꞉ க்ரோட³ஸம்ஸ்தி²தம் |
ஆஸ்தா²ய ஷ²ம்ப³ரோ மாயாம் ப்ரத்³யும்நமபநேஷ்யதி ||2-104-58

தத்³க³ச்ச² ஷ²ம்ப³ரக்³ருஹம் பா⁴ர்யா மாயாவதீ ப⁴வ |
மாயாரூபப்ரதிச்ச²ந்நா ஷ²ம்ப³ரம் மோஹயிஷ்யஸி ||2-104-59

தத்ர த்வமாத்மந꞉ காந்தம் பா³லரூபம் விவர்த⁴ய |
ப்ராப்தயௌவநதே³ஹஸ்து ஷ²ம்ப³ரம் நிஹநிஷ்யதி ||2-104-60

ததஸ்த்வயா ஸஹாநங்கோ³ த்³வாரகாம் வை க³மிஷ்யதி |
ரமிஷ்²யதி த்வயா ஸார்த⁴ம் ஷை²லபுத்ர்யா யதா² ஹ்யஹம் ||2-104-61

அவனும் {சிவனும்} அவளுக்கு {ரதிதேவிக்கு} ஒரு வரம் கொடுக்கும் வகையில், “விஷ்ணு மனித வடிவை ஏற்று, துவாராகா நகரில் வாழும்போது, இவன் அவனது மகனாகப் பிறந்து, அதன்பிறகு உன் கணவனாவான்.(56) பெருஞ்சக்திமிக்கவனும், ஆற்றல் வாய்ந்தவனுமான உன் கணவன், அங்கங்களற்றவனாக {அனங்கன் என்று} மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டாலும் அங்கே {துவாரகையில்} தன் பிறவியை அடைவான். பிரத்யும்னனாகப் பிறந்து, ஏழாம் நாளில் ருக்மிணியின் மடியில் இருந்து மாய சக்திகளின் மூலம் அபகரிக்கப்படும் காரணத்தால் சம்பரனைக் கொல்வான்.(57,58) எனவே நீ சம்பரனின் வீட்டுக்குச் செல்வாயாக; உன் மாய உடலில் அவனுடைய {சம்பரனின்} மனைவியான மாயாவதியாக இருந்து அவனுக்கு மகிழ்ச்சியளிப்பாயாக.(59) அங்கே குழந்தையாக வரும் உன் கணவனை ஊட்டி வளர்ப்பாயாக. இளமையை அடைந்ததும் அவனே சம்பரனைக் கொல்வான்.(60) அதன் பிறகு அனங்கன் {மன்மதனான பிரத்யும்னன், ரதியான} உன்னுடன் சேர்ந்து துவாரகைக்குச் சென்று, கிரிஜையுடன் {சைலப்புத்ரியிடம் / மலைமகளிடம்} நான் இருப்பது போல் உன்னுடன் இன்புற்றிருப்பான்” என்றான் {சிவன்}.(61)

ஏவமாதி³ஷ்²ய தே³வேஷோ² ஜகா³ம புருஷோத்தம꞉ |
கைலாஸம் மேருஸங்காஷ²ம் ஸித்³த⁴சாரணஸேவிதம் ||2-104-62

காமபத்நீ ப்ரணம்யாத² தே³வதே³வமுமாபதிம் |
ஜகா³ம ஷ²ம்ப³ரக்³ருஹம் காலஸ்யாந்தம் ப்ரதீக்ஷதீ ||2-104-63

ஏவமேவ மஹாபா³ஹு꞉ ஷ²ம்ப³ரம் நிஹநிஷ்யதி |
ஸஹ புத்ரேண ப்ரத்³யும்நோ ஹந்தா தஸ்ய து³ராத்மந꞉ ||2-104-64

தேவர்களின் மன்னனான ஹரன் இவ்வாறு சொல்லிவிட்டு, சித்தர்களும், சாரணர்களும் விரும்பிச் செல்வதும், சுமேருவுக்கு ஒப்பானதுமான கைலாச மலைக்குச் சென்றான்.(62) காமனின் மனைவியும் {ரதி தேவியும்}, உமையின் தலைவனை {சிவனை} வணங்கிவிட்டு, குறித்த நேரம் நிறைவடைவதற்காகச் சம்பரனின் வசிப்பிடத்தில் காத்திருந்தாள்.(63) ஓ! பிரதிகரா {ஓ! கந்தர்வன் அத்புதநாமா}, நீண்ட கரங்களைக் கொண்ட பிரத்யும்னன் நிச்சயம் சம்பரனைக் கொல்வான். அந்தத் தீய தானவனையும், அவனது மகன்களையும் அழிப்பவனாக அவனே விதிக்கப்பட்டிருக்கிறான்” என்றான் {இந்திரன்}.(64)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷ²ம்ப³ரவதே⁴ சதுரதி⁴கஷ²ததமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading