ஸ்ரீ ஹரிவம்ச பர்வம்–அத்யாயம் -20-பித்ரு கல்பம் – 4 | பூஜனீயோபாக்யானம் – சடகாக்யானம்)-பிரம்மதத்தனும் வினோதப் பறவையும்-

பகுதியின் சுருக்கம் : பிருஹத்க்ஷத்ரனின் குலத்தில் தோன்றிய நீபனின் நூறு மகன்கள்; நீபனின் குலத்தில் தோன்றிய அணுஹனின் மகன் பிரம்மதத்தன்; பிரம்மதத்தனின் குலத்தில் தோன்றிய மற்றொரு நீபனால் அந்த நீப குலத்துக்கு நேர்ந்த பேரழிவு; அஜமீடனின் குலத்தில் தோன்றிய கிருதன்; கிருதனின் மகன் உக்ராயுதன்; உக்ராயுதனால் அழிந்த நீபர்கள்; சத்யவதியைத் தனக்கு மனைவியாகக் கொடுக்குமாறு பீஷ்மரை மிரட்டிய உக்ராயுதன்; உக்ராயுதனிடம் இருந்த சக்கராயுதம்; உக்ராயுதனைக் கொன்ற பீஷ்மர்; பிரம்மதத்தன் மற்றும் பூஜனி என்ற பறவையின் கதை–

மார்கண்டே³ய உவாச
தஸ்மின்னந்தர்ஹிதே தே³வே வசனாத்தஸ்ய வை ப்ரபோ⁴꞉ |
சக்ஷுர்தி³வ்யம் ஸவிஜ்ஞானம் ப்ராது³ராஸீத்ததா³ மம | 1-20-1

மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, “அந்தத் தேவன் {சனத்குமாரர்} மறைந்ததும், அந்தத் தலைவனின் சொற்களுக்கிணங்க நான் தெய்வீகப் பார்வையுடன் கூடிய பகுத்தறிவு ஞானத்தை {பவ்யவிஜ்ஞானத்தை} அடைந்தேன்

ததோ(அ)ஹம் தானபஸ்²யம் வை ப்³ராஹ்மணான் கௌஸி²காத்மஜான் |
ஆபகே³ய குருக்ஷேத்ரே யானுவாச விபு⁴ர்மம || 1-20-2

ஓ! கங்கையின் மைந்தா, அந்தத் தலைவர் (சனத்குமாரர்) என்னிடம் சொன்னவர்களும், கௌசிக வழித்தோன்றல்களுமான அந்தப் பிராமணர்கள் அனைவரையும் நான் குருக்ஷேத்திரத்தில் கண்டேன்.

ப்³ரஹ்மத³த்தோ(அ)ப⁴வத்³ராஜா யஸ்தேஷாம் ஸப்தமோ த்³விஜ꞉ |
பித்ருவர்தீதி விக்²யாதோ நாம்னா ஸீ²லேன கர்மணா || 1-20-3

அவர்களில் ஏழாவது பிராமணரே, மன்னன் பிரம்மதத்தனானான். அவனது பெயர், குணம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் அவன் பித்ருதத்தன் {பித்ருவர்தி} என்ற பெயரில் கொண்டாடப்படலானான்.

ஸு²கஸ்ய கன்யா க்ருத்வீ தம் ஜனயாமாஸ பார்தி²வம் |
அணுஹாத்பார்தி²வஸ்²ரேஷ்டா²த்காம்பில்யே நக³ரோத்தமே || 1-20-4

மன்னர்களில் முதன்மையானவனான அணுஹன் {அணுஹு}, காம்பில்யம் என்ற பெயரைக் கொண்ட ஒரு சிறந்த நகரத்தில், சுகரின் மகளான கிருத்வியிடம் {கீர்த்திமதியிடம்} அந்த ஏகாதிபதியை {பிரம்மதத்தனைப்} பெற்றான்” என்றார்”.

பீ⁴ஷ்ம உவாச
யதோ²வாச மஹாபா⁴கோ³ மார்கண்டே³யோ மஹாதபா꞉ |
தஸ்ய வம்ஸ²மஹம் ராஜன்கீர்தயிஷ்யாமி தச்ச்²ரூணு || 1-20-5

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்தவரும், மறுபிறப்பாளரும், பெரும் முனிவருமான மார்க்கண்டேயர் சொன்னது போலவே அந்த மன்னனின் குடும்பத்தை {குலத்தை} விளக்கிச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக” என்றார்

யுதி⁴ஷ்டி²ர உவாச
அணுஹ꞉ கஸ்ய வை புத்ர꞉ கஸ்மின்காலே ப³பூ⁴வ ஹ |
ராஜா த⁴ர்மப்⁴ருதாம் ஸ்²ரேஷ்டோ² யஸ்ய புத்ரோ மஹாயஸா²꞉ || 1-20-6

ப்³ரஹ்மத³த்தோ நரபதி꞉ கிம்வீர்ய꞉ ஸ ப³பூ⁴வ ஹ |
கத²ம் ச ஸப்தமஸ்தேஷாம் ஸ ப³பூ⁴வ நராதி⁴ப꞉ || 1-20-7

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பக்திமான்களில் முதன்மையான அணுஹன் யாருடைய மகன்? அவன் எந்த யுகத்தில் பிறந்தான்? அவன் எவ்வளவு பலமிக்கவன்? பெருஞ்சிறப்புமிக்க மன்னன் பிரம்மதத்தன் யாருடைய மகன்? ஏழாவது பிராமணர் எவ்வாறு ஒரு மன்னனானார்?(6,7)

ந ஹ்யல்பவீர்யாய ஸு²கோ ப⁴க³வாம்ˮல்லோகபூஜித꞉ |
கன்யாம் ப்ராதா³த்³யத்³யோகா³த்மா க்ருத்வீம் கீர்திமதீம் ப்ரபு⁴꞉ || 1-20-8

தற்கட்டுப்பாடு கொண்டவரும், எல்லாம் வல்லவரும், உலகங்கள் அனைத்தாலும் மதிக்கப்படுபவருமான சுக முனிவர், தன் சிறப்புமிக்க மகளான கிருத்வியை (நிச்சயம்) ஆண்மையற்ற எந்த மனிதனுக்கும் கொடுக்கவில்லை {அல்லவா?}

ஏததி³ச்சா²ம்யஹம் ஸ்²ரோதும் விஸ்தரேண மஹாத்³யுதே |
ப்³ரஹ்மத³த்தஸ்ய சரிதம் தத்³ப⁴வான்வக்க்துமர்ஹதி || 1-20-9

ஓ! பெரும்பிரகாசம் கொண்டவரே, பிரம்மதத்தனின் கதையை முழுமையாக நான் கேட்க விரும்புகிறேன்; அதை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.

யதா² ச வர்தமானாஸ்தே ஸம்ஸாரே ச த்³விஜாதய꞉ |
மார்கண்டே³யேன கதி²தாஸ்தத்³ப⁴வான்ப்ரப்³ரவீது மே || 1-20-10

மார்க்கண்டேயரால் குறிப்பிடப்பட்ட பிராமணர்கள் இவ்வுலகில் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.

பீ⁴ஷ்ம உவாச
ப்ரதீபஸ்ய து ராஜர்ஷேஸ்துல்யகாலோ நராதி⁴ப |
பிதாமஹஸ்ய மே ராஜன்ப³பூ⁴வேதி மயா ஸ்²ருதம் || 1-20-11

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இந்த மன்னன் (பிரம்மதத்தன்) என் பாட்டனான அரசமுனி பிரதீபரின் காலத்தைச் சேர்ந்தவன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

ப்³ரஹ்மத³த்தோ மஹாபா⁴கோ³ யோகீ³ ராஜர்ஷிஸத்தம꞉ |
ருதஜ்ஞ꞉ ஸர்வபூ⁴தானாம் ஸர்வபூ⁴தஹிதே ரத꞉ || 1-20-12

ஸகா²(ஆ)ஸ கா³லவோ யஸ்ய யோகா³சார்யோ மஹாயஸா²꞉ |
ஸி²க்ஷாமுத்பாத்³ய தபஸா க்ரமோ யேன ப்ரவர்தித꞉|
கண்ட³ரீகஸ்²ச யோகா³த்மா தஸ்யைவ ஸசிவோ மஹான் || 1-20-13

அவன் தன் தவ வழிமுறைகளின் மூலம் சிக்ஷை[க்ஷை அல்லது உச்சரிப்பு மற்றும் ஒலி தெளிவைக் குறித்த அறிவியல்; கல்பம் அல்லது அறச்சடங்குகளின் விளக்கங்கள்; வியாகரணம் அல்லது இலக்கணம்; சந்தஸ்<4] அல்லது யாப்பு {பேச்சு}; ஜோதிஷம் அல்லது வானவியல்; நிருக்தம் அல்லது, வேதங்களில் தென்படும் கடின சொற்கள் மற்றும் வாக்கியங்களுக்கான விளக்கம்] என்றழைக்கப்படுவதை (என்ற வேத பிரிவை) அமைத்து, அதைப் படிப்பதற்கான ஓர் ஒழுங்கை ஏற்படுத்தினான். பெருஞ்சிறப்புமிக்க யோகாசானான காலவர், அவனுடைய நண்பராக இருந்தார், தவசியான கண்டரீகர் அவனுடைய அமைச்சராக இருந்தார்.

ஜாத்யந்தரேஷு ஸர்வேஷு ஸகா²ய꞉ ஸர்வ ஏவ தே |
ஸப்தஜாதிஷு ஸப்தைஅவ ப³பூ⁴வுரமிதௌஜஸ꞉ |
யதோ²வாச மஹாபா⁴கோ³ மார்கண்டே³யோ மஹாதபா꞉ || 1-20-14

மற்றொரு பிறவியில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். உன்னதரும், பெருந்தவசியுமான மார்க்கண்டேயர் உரைப்பதைப் போலவே அவர்கள், தங்கள் ஏழாம் பிறவியில் அளவற்ற சக்தியைக் கொடையாகக் கொண்டிருந்தனர்.

தஸ்ய வம்ஸ²மஹம் ராஜன்கீர்தயிஷ்யாமி தச்ச்²ருணு |
ப்³ரஹ்மத³த்தஸ்ய பௌராணாம் பௌரவஸ்ய மஹாத்மன꞉ || 1-20-15

ஓ! மன்னா, புரு குலத்தில் பிறந்த உயரான்ம மன்னன் பிரம்மதத்தனின் புராதனக் குடும்பத்தைக் குறித்துச் சொல்கிறேன், கேட்பாயாக

ப்³ருஹத்க்ஷத்ரஸ்ய தா³யாத³꞉ ஸுஹோத்ரோ நாம தா⁴ர்மிக꞉ |
ஸுஹோத்ரஸ்யாபி தா³யாதோ³ ஹஸ்தீ நாம ப³பூ⁴வ ஹ || 1-20-16

பக்திமானானான பிருஹத்க்ஷத்ரனின் மகன் ஸுஹோத்ரன் என்ற பெயரில் கொண்டாடப்பட்டான். ஸுஹோத்ரனின் மகன் ஹஸ்தி என்ற பெயரில் அறியப்பட்டான்

தேனேத³ம் நிர்மிதம் பூர்வம் ஹஸ்தினாபுரமுத்தமம் |
ஹஸ்தினஸ்²சாபி தா³யாதா³ஸ்த்ரய꞉ பரமதா⁴ர்மிகா꞉ || 1-20-17

மிகச் சிறந்த நகரமான ஹஸ்தினாபுரம் பழங்காலத்தில் இவனாலேயே அமைக்கப்பட்டது. ஹஸ்திக்குப் பெரும்பக்திமான்களான மூன்று மகன்கள் இருந்தனர்

அஜமீடோ⁴ த்³விமீட⁴ஸ்²ச புருமீட⁴ஸ்ததை²வ ச |
அஜமீட⁴ஸ்ய தூ⁴மின்யாம் ஜஜ்ஞே ப்³ருஹதி³ஷுர்ன்ருப |
ப்³ருஹத்³த⁴னுர்ப்³ருஹதி³ஷோ꞉ புத்ரஸ்தஸ்ய மஹாயஸா²꞉ || 1-20-18

அவர்களில் மூத்தவன் அஜமீடன், இரண்டாமவன், திவிமீடன், இளையவன் புருமீடன் ஆகியோராவர். அஜமீடன் தூமினியிடம் மன்னன் பிருஹத்திஷுவைப் பெற்றான். அவனுடைய {பிருஹத்திஷுவின்} மகன் பெருஞ்சிறப்புமிக்கப் பிருஹத்தனு ஆவான்.

ப்³ருஹத்³த⁴ர்மேதி விக்²யாதோ ராஜா பரமதா⁴ர்மிக꞉ |
ஸத்யஜித்தனயஸ்தஸ்ய விஸ்²வஜித்தஸ்ய சாத்மஜ꞉ || 1-20-19

அவனுடைய {பிருஹத்தனுவின்} மகன் பெரும்பக்தியுடைய மன்னனான பிருஹத்தர்மன் என்று அறியப்பட்டான். அவனுடைய {பிருஹத்தர்மனின்} மகன் சத்யஜித் ஆவான், அவனுடைய {சத்யஜித்தின்} மகன் விஷ்வஜித் ஆவான்

புத்ரோ விஸ்²வஜிதஸ்²சாபி ஸேனஜித்ப்ருதி²வீபதி꞉ |
புத்ரா꞉ ஸேனஜிதஸ்²சாஸம்ஸ்²சத்வாரோ லோகவிஸ்²ருதா꞉ || 1-20-20

அவனுடைய மகன் மன்னன் ஸேனஜித் ஆவான். அவனுக்கு இவ்வுலகில் கொண்டாடப்பட்ட நான்கு மகன்கள் இருந்தனர்.

ருசிர꞉ ஸ்²வேதகேதுஸ்²ச மஹிம்னாரஸ்ததை²வ ச |
வத்ஸஸ்²சாவந்தகோ ராஜா யஸ்யைதே பரிவத்ஸகா꞉ || 1-20-21

ருசிரன், ஸ்வேதகேது, மஹிந்நாரன், அவந்தியின் மன்னனான வத்ஸன் {வத்ஸலன்} ஆகியோரே அந்த நான்கு மகன்களாவர்

ருசிரஸ்ய து தா³யாத³꞉ ப்ருது²ஸேனோ மஹாயஸா²꞉ |
ப்ருது²ஸேனஸ்ய பாரஸ்து பாரான்னீபஸ்து ஜஜ்ஞிவான் || 1-20-22

ருசிரனின் மகன் பெருஞ்சிறப்புமிக்கப் பிருதுசேனனாவான். அவனுடைய மகன் பாரன் ஆவான். அவனிடம் இருந்து நீபன் பிறந்தான்.

நீபஸ்யைகஸ²தம் தாத புத்ராணாமமிதௌஜஸாம் |
மஹாரதா²னாம் ராஜேந்த்³ர ஸூ²ராணாம் பா³ஹுஸா²லினாம் |
நீபா இதி ஸமாக்²யாதா ராஜான꞉ ஸர்வ ஏவ தே || 1-20-23

நீபனுக்கு அளவற்ற சக்தியைக் கொண்டவர்களாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும், பெரும் வீரர்களாகவும், பெரும்பலம் மிக்கவர்களாகவும் நூறு மகன்கள் இருந்தனர்

தேஷாம் வம்ஸ²கரோ ராஜா நீபானாம் கிர்திவர்த⁴ன꞉ |
காம்பில்யே ஸமரோ நாம ஸசேஷ்டஸமரோ(அ)ப⁴வத் || 1-20-24

அந்த நீபர்களில் சிறப்புமிக்க வழித்தோன்றலானவன் காம்பில்ய மாகாணத்தில் ஸமரன் என்ற பெயரில் அறியப்பட்டான். அவன் போரை மிகவும் விரும்புபவனாக இருந்தான்

ஸமரஸ்ய பர꞉ பார꞉ ஸத³ஸ்²வ இதி தே த்ரய꞉ |
புத்ரா꞉ பரமத⁴ர்மஜ்ஞா꞉ பரபுத்ர꞉ ப்ருது²ர்ப³பௌ⁴ || 1-20-25

ஸமரனுக்கு, பெரும் பக்திமான்களான பரன், பாரன் மற்றும் ஸதஸ்வன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். பரனின் மகன் பிருதுவாவான்.

ப்ருதோ²ஸ்து ஸுக்ருதோ நாம ஸுக்ருதேனேஹ கர்மணா |
ஜஜ்ஞே ஸர்வகு³ணோபேதோ விப்⁴ராஜஸ்தஸ்ய சாத்மஜ꞉ || 1-20-26

பிருதுவின் மகன், நற்செயல்களின் மூலம் அனைத்து சாதனைகளையும் செய்தவனான ஸுக்ருதன் ஆவான். அவனுடைய {ஸுக்ருதனின்} மகன் விப்ராஜன் ஆவான்

விப்⁴ராஜஸ்ய து புத்ரோ(அ)பூ⁴த³ணுஹோ நாம பார்தி²வ꞉ |
ப³பௌ⁴ ஸு²கஸ்ய ஜாமாதா க்ருத்வீப⁴ர்தா மஹாயஸா²꞉ || 1-20-27

அவனுடைய {விப்ராஜனின்} மகன் அணுஹன் {அணுஹு} ஆவான். அவன் {அணுஹன்} சுகரின் சிறப்புமிக்க மருமகனாகவும், கிருத்வியின் கணவனாகவும் இருந்தான்.

புத்ரோ(அ)ணுஹஸ்ய ராஜர்ஷிர்ப்³ரஹ்மத³த்தோ(அ)ப⁴வத்ப்ரபு⁴꞉ |
யோகா³த்மா தஸ்ய தனயோ விஷ்வக்ஸேன꞉ பரந்தப꞉ || 1-20-28

அணுஹனின் மகன் அரசமுனியான பிரம்மதத்தன் ஆவான். அவனுடைய {பிரம்மதத்தனின்} மகன் எதிரிகளை அடக்குபவனான விஷ்வக்ஸேனன் ஆவான்

விப்⁴ராஜ꞉ புனராயாத꞉ ஸ்வக்ருதேனேஹ கர்மணா |
ப்³ரஹ்மத³த்தஸ்ய புத்ரோ(அ)ன்ய꞉ ஸர்வஸேன இதி ஸ்²ருத꞉ || 1-20-29

{பிரம்மதத்தனின் பாட்டனான} விப்ராஜன் தன் வினையின் விளைவால் மீண்டும் (பிரம்மதத்தனின் மகனாக) {விஷ்வக்ஸேனனாகப்} பிறந்தான். அவனுக்கு {பிரம்மதத்தனுக்கு} ஸர்வஸேனன் என்ற பெயரில் மற்றொரு மகனும் இருந்தான்.

சக்ஷுஷீ த்யஸ்ய நிர்பி⁴ன்னே பக்ஷிண்யா பூஜனீயயா |
ஸுசிரோஷிதயா ராஜன்ப்³ரஹ்மத³த்தஸ்ய வேஸ்²மனி || 1-20-30

ஓ! மன்னா, பிரம்மதத்தனின் வீட்டில் நெடுங்காலம் வாழ்ந்திருந்திருந்ததும், பூஜனி என்ற பெயரில் அறியப்பட்டதுமான (வழிபடத்தகுந்ததுமான) ஒரு குருவியால் அவனது {ஸர்வஸேனனின்} கண்கள் குத்திக் கிழிக்கப்பட்டன

ஆதா²ஸ்ய புத்ரஸ்த்வபரோ ப்³ரஹ்மத³த்தஸ்ய ஜஜ்ஞிவான் |
விஷ்வக்ஸேன இதி க்²யாதோ மஹாப³லபராக்ரம꞉ || 1-20-31

பிரம்மதத்தனுக்கு விஷ்வக்ஸேனன் என்ற பெயரில் பெரும்பலமிக்க மற்றொரு மகன் இருந்தான்

விஷ்வக்ஸேனஸ்ய புத்ரோ(அ)பூ⁴த்³த³ண்ட³ஸேனோ மஹீபதி꞉ |
ப⁴ல்லாடோ(அ)ஸ்ய குமாரோ(அ)பூ⁴த்³ராதே⁴யேன ஹத꞉ புரா || 1-20-32

அவனுடைய {விஷ்வக்ஸேனனின்} மகன் மன்னன் தண்டஸேனனாவான். அவனுடைய மகனான பல்லாடன் முன்பு {ராதேயனால்} கர்ணனால் கொல்லப்பட்டான்.(

த³ண்ட³ஸேனாத்மஜ꞉ ஸூ²ரோ மஹாத்மா குலவர்த⁴ன꞉ |
ப⁴ல்லாடபுத்ரோ து³ர்பு³த்³தி⁴ரப⁴வச்ச யுதி⁴ஷ்டி²ர || 1-20-33

தண்டஸேனனின் மகனான இவன் {பல்லாடன்}, வீரனாகவும், தன் குலத்தைத் தழைக்கச் செய்பவனாகவும் இருந்தான். ஓ! யுதிஷ்டிரா, பல்லாடனின் மகன் தீய மனம் கொண்டவனாக இருந்தான்.

ஸ தேஷாமப⁴வத்³ராஜா நீபானாமந்தக்ருன்ன்ருப |
உக்³ராயுதே⁴ன யஸ்யார்தே² ஸர்வே நீபா வினாஸி²தா꞉ || 1-20-34

ஓ! மன்னா, அவனே நீபர்களின் குலத்திற்கு வீழ்ச்சியைக் கொண்டு வந்தான். அவனுக்காகவே நீபர்கள் அனைவரும் உக்ராயுதனால் அழிக்கப்பட்டனர்.(

உக்³ராயுதோ⁴ மதோ³த்ஸிக்தோ மயா வினிஹதோ யுதி⁴ |
த³ர்பான்விதோ த³ர்பருசி꞉ ஸததம் சானயே ரத꞉ || 1-20-35

உக்ராயுதன் செருக்கமிக்கவனாக இருந்ததன் காரணமாக நான் ஒரு போரில் அவனைக் கொன்றேன். அவன் செருக்குமிக்கவனாகவும், அகந்தை மற்றும் பாபகரமான வழிகளில் இன்பம் கொள்பவனாகவும் இருந்தான்” என்றார் {பீஷ்மர்}.

யுதி⁴ஷ்டி²ர உவாச
ஊக்³ராயுத⁴꞉ கஸ்ய ஸுத꞉ கஸ்மின்வம்ஸே²(அ)த² ஜஜ்ஞிவான் |
கிமர்த²ம் சைவ ப⁴வதா நிஹதஸ்தத்³ப்³ரவீஹி மே || 1-20-36

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “உக்ராயுதன் யாருடைய மகன்? அவன் எந்தக் குலத்தில் பிறந்தான்? நீர் எதற்காக அவனைக் கொன்றீர்? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்

பீ⁴ஷ்ம உவாச
அஜமீட⁴ஸ்ய தா³யாதோ³ வித்³வான்ராஜா யவினர꞉ |
த்⁴ருதிமாம்ஸ்தஸ்ய புத்ரஸ்து தஸ்ய ஸத்யத்⁴ருதி꞉ ஸுத꞉ || 1-20-37

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கல்விமானான மன்னன் யவிநரன், அஜமீடனின் மகனாவான். அவனுடைய {யவிநரனின்} மகன் திருதிமான், அவனுடைய {திருதிமானின்} மகன் ஸத்யத்ருதி ஆவர்

ஜஜ்ஞே ஸத்யத்⁴ருதே꞉ புத்ரோ த்⁴ருட⁴னேமி꞉ ப்ரதாபவான் |
த்⁴ருட⁴னேமிஸுதஸ்²சாபி ஸுத⁴ர்மா நாம பார்தி²வ꞉ || 1-20-38

அவனுடைய {ஸத்யத்ருதியின்} மகன் பலமிக்கத் திருடநேமி, அவனுடைய {திருதநேமியின்} மகன் மன்னன் ஸுதர்மன் ஆவர்

ஆஸீத்ஸுத⁴ர்மண꞉ புத்ர꞉ ஸார்வபௌ⁴ம꞉ ப்ரஜேஸ்²வர꞉ |
ஸார்வபௌ⁴ம இதி க்²யாத꞉ ப்ருதி²வ்யாமேகராட்³விபு⁴꞉ || 1-20-39

அவனுடைய {ஸுதர்மனின்} மகன் ஸார்வபௌமன் ஆவான். அவனே உலகின் ஒரே மிகச் சிறந்த தலைவனாக இருந்ததனால் ஸார்வபௌமன் என்றழைக்கப்பட்டான்

தஸ்யான்வவாயே மஹதி மஹான்பௌரவனந்த³ன |
மஹதஸ்²சாபி புத்ரஸ்து ராஜா ருக்மரத²꞉ ஸ்ம்ருத꞉ || 1-20-40

அவனது குடும்பத்தில், புருவின் வழித்தோன்றலான மஹான் என்பவன் பிறந்தான். மஹானின் மகன் மன்னன் ருக்மரதன் என்று அறியப்பட்டான்.

புத்ரோ ருக்மரத²ஸ்யாபி ஸுபார்ஸ்²வோ நாம பார்தி²வ꞉ |
ஸுபார்ஸ்²வதனயஸ்²சாபி ஸுமதிர்னாம தா⁴ர்மிக꞉ || 1-20-41

அவனுடைய {ருக்மரதனின்} மகன் மன்னன் ஸுபார்ஷ்வன், அவனுடைய {ஸுபார்ஷ்வனின்} மகன் பக்திமானான ஸுமதி ஆவர்.

ஸுமதேரபி த⁴ர்மாத்மா ஸன்னதிர்னாம வீர்யவான் |
தஸ்ய வை ஸன்னதே꞉ புத்ர꞉ க்ருதோ நாம மஹாப³ல꞉ || 1-20-42

அவனுடைய {ஸுமதியின்} மகன் அறம் சார்ந்த ஆன்மா கொண்டவனும், பலமிக்கவனுமான ஸன்னதி ஆவான். அவனுடைய {ஸன்னதியின்} மகன் வீர மன்னனான கிருதன் ஆவான்.

ஸி²ஷ்யோ ஹிரண்யனாப⁴ஸ்ய கௌஸ²லஸ்ய மஹாத்மன꞉ |
சதுர்விம்ஸ²திதா⁴ தேன ஸப்ராச்யா꞉ ஸாமஸம்ஹிதா꞉ || 1-20-43

அவன் {கிருதன்} உயரான்ம ஹிரண்யகர்ப்பனின் சீடனாவான். சாமவேத ஸம்ஹிதைகள் {ப்ராச்யஸாமங்கள்} இருபத்துநான்கு வழிகளில் பாடப்படுகின்றன.

ஸ்ம்ருதாஸ்தே ப்ராச்யஸாமான꞉ கார்தயோ நாம ஸாமகா³꞉ |
கார்திருக்³ராயுத⁴꞉ ஸோ(அ)த² வீர꞉ பௌரவனந்த³ன꞉ || 1-20-44

இதன் காரணமாக மேற்கத்திய சாமங்களும், அதன் கோஷங்களும் கார்த்தியின் பெயரில் அறியப்படுகின்றன. புருவின் குலத்தில் பிறந்த வீர உக்ராயுதன், கிருதனின் மகனாவான்

ப³பூ⁴வ யேன விக்ரம்ய ப்ருஷதஸ்ய பிதாமஹ꞉ |
நீபோ நாம மஹதேஜா꞉ பாஞ்சாலாதி⁴பதிர்ஹத꞉ || 1-20-45

அவன் தன் ஆற்றலை வெளிப்படுத்தி, பெருஞ்சக்தி கொண்டவனும், பிருஷதனின் பாட்டனும், நீபன் என்ற பெயரைக் கொண்டவனுமான பெருஞ்சக்திமிக்கப் பாஞ்சால மன்னனை {நீபனைக்} கொன்றான்.

உக்³ராயுத⁴ஸ்ய தா³யாத³꞉ க்ஷேம்யோ நாம மஹாயஸா²꞉ |
க்ஷேம்யாத்ஸுவீரோ ந்ருபதி꞉ ஸுவீராத்து ந்ருபஞ்ஜய꞉ || 1-20-46

உக்ராயுதனின் மகன் பெருஞ்சிறப்புமிக்க மன்னன் க்ஷேம்யன், அவனுடைய {க்ஷேம்யனின்} மகன் ஸுவீரன், அவனுடைய {ஸுவீரனின்} மகன் நிருபஞ்ஜயன் {ஸ்ருஞ்ஜயன்} ஆவர்

ந்ருபஞ்ஜயாத்³ப³ஹுரத² இத்யேதே பௌரவா꞉ ஸ்ம்ருதா꞉ |
ஸ சாப்யுக்³ராயுத⁴ஸ்தாத து³ர்பு³த்³தி⁴ரப⁴வத்ததா³ || 1-20-47

நிருபஞ்ஜயனிடம் இருந்து பஹுரதன் பிறந்தான். இந்த மன்னர்கள் அனைவரும் பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, உக்ராயுதன் மிகத் தீயவனாக வளர்ந்தான்

ப்ரவ்ருத்³த⁴சக்ரோ ப³லவான்னீபாந்தகரணோ மஹான் |
ஸ த³ர்பபூர்ணோ ஹத்வா(ஆ)ஜௌ நீபானந்யாம்ஸ்²ச பார்தி²வான் || 1-20-48

அவன், நீபர்கள் அனைவரையும் எரித்து, அவர்களை அழிவடையச் செய்தான் {நிர்மூலமாக்கினான்}. நீபர்களையும், பிற மன்னர்கள் அனைவரையும் கொன்ற அவன் செருக்கால் நிறைந்திருந்தான்.

பிதர்யுபரதே மஹ்யம் ஸ்²ராவயாமாஸ கில்பி³ஷம் |
மாமமாத்யை꞉ பரிவ்ருதம் ஸ²யானம் த⁴ரணீதலே || 1-20-49

உக்³ராயுத⁴ஸ்ய ராஜேந்த்³ர தூ³தோ(அ)ப்⁴யேத்ய வசோ(அ)ப்³ரவீத் |
அத்³ய த்வம் ஜனநீம் பீ⁴ஷ்ம க³ந்த⁴காலீம் யஸ²ஸ்வினீம் |
ஸ்த்ரீரத்னம் மம பா⁴ர்யார்தே² ப்ரயச்ச² குருபுங்க³வ || 1-20-50

என் தந்தை {சந்தனு} இறந்த பிறகு, அவன் பாவம் நிறைந்த (பல) சொற்களை என்னிடம் சொன்னான். ஓ! மன்னா, என் அரசவையினர் சூழ நான் பூமியில் கிடந்தபோது {நான் பித்ருமேதம் செய்து கொண்டிருந்தபோது}, உக்ராயுதனிடம் இருந்து ஒரு தூதன் என்னிடம் வந்து, “ஓ! குருக்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, சிறப்புமிக்கவளும், பெண்குல ரத்தினமுமான உன் அன்னை கந்தகாளியை {சத்யவதியை} என் மனைவியாகக் கொடுப்பாயாக.

ஏவம் ராஜ்யம் ச தே ஸ்பீ²தம் த⁴னானி ச ந ஸம்ஸ²ய꞉ |
ப்ரதா³ஸ்யாமி யதா²காமமஹம் வை ரத்னபா⁴க்³பு⁴வி || 1-20 -51

நான் உனக்குச் செழிப்பான நாட்டையும், செல்வத்தையும் நிச்சயம் வழங்குவேன். நான் என் விருப்பத்தின்படியே பூமியில் உள்ள ரத்தினங்களை அடைந்திருக்கிறேன்.

மம ப்ரஜ்வலிதம் சக்ரம் நிஸ²ம்யேத³ம் ஸுது³ர்ஜயம் |
ஸ²த்ரவோ வித்³ரவந்த்யாஜௌ த³ர்ஸ²னாதே³வ பா⁴ரத || 1-20-52

ஓ! பரதனின் வழித்தோன்றலே, பிரகாசமானதும், தடுக்கப்பட முடியாததுமான என்னுடைய இந்தச் சக்கரத்தை {சக்கராயுதத்தை} வெறுமனே கேட்டதனாலேயே, அல்லது பார்த்ததனாலேயே பகைவர்கள் அனைவரும் போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடுகின்றனர்

ராஷ்ட்ரஸ்யேச்ச²ஸி சேத்ஸ்வஸ்தி ப்ராணானாம் வா குலஸ்ய வா |
ஸா²ஸனே மம திஷ்ட²ஸ்வ ந ஹி தே ஸா²ந்திரன்யதா² || 1-20-53

நீ உன் நாட்டையும், உயிரையும், உன் குடும்பத்தின் நன்மையையும் நாடினால் {விரும்பினால்} என் ஆணைக்குக் கீழ்ப்படிவாயாக, இல்லையெனில் உனக்கு அமைதி ஏற்படாது” என்று {உக்ராயுதனின் சொற்களை எனக்குச்} சொன்னான்.

அத⁴꞉ ப்ரஸ்தாரஸ²யனே ஸ²யானஸ்தேன சோதி³த꞉ |
தூ³தாந்தர்ஹிதமேதத்³வை வாக்யமக்³னிஸி²கோ²பமம் || 1-20-54

நான் பூமியில் குசப்புல் {தர்ப்பைப்} படுக்கையில் கிடந்த போது, அவனால் {உக்ராயுதனால்} அனுப்பப்பட்ட தூதனிடமிருந்து நெருப்பின் தழல்களுக்கு ஒப்பான இந்தச் சொற்களைக் கேட்டேன்

ததோ(அ)ஹம் தஸ்ய து³ர்பு³த்³தே⁴ர்விஜ்ஞாய மதமச்யுத |
ஆஜ்ஞாபயம் வை ஸங்க்³ராமே ஸேனாத்⁴யக்ஷாம்ஸ்²ச ஸர்வஸ²꞉ || 1-20-55

ஓ! சிதைவற்றவனே, தீய மனம் கொண்ட அவனது விருப்பத்தை அறிந்த நான், போர் தொடுக்குமாறு என் படைத்தளபதிக்கு ஆணையிட்டேன்.

விcஇத்ரவீர்யம் பா³லம் ச மது³பாஸ்²ரயமேவ ச |
த்³ருஷ்ட்வா க்ரோத⁴பரீதாத்மா யுத்³தா⁴யைவ மனோ த³தே⁴ || 1-20-56

விசித்திரவீரியன் சிறுவனாகவும் என் பாதுகாப்பின் கீழும் இருந்தான். சினத்தில் நிறைந்திருந்த நான், போரில் ஈடுபட என் மனத்தை ஆயத்தம் செய்தேன்

நிக்³ருஹீதஸ்ததா³ஹம் தை꞉ ஸசிவைர்மந்த்ரகோவிதை³꞉ |
ருத்வித்³பி⁴ர்வேத³கல்பைஸ்²ச ஸுஹ்ருத்³பி⁴ஸ்²சார்த²த³ர்ஸி²பி⁴꞉ || 1-20-57

ஸ்னிக்³தை⁴ஸ்²ச ஸா²ஸ்த்ரவித்³பி⁴ஸ்²ச ஸம்யுக³ஸ்ய நிவர்தனே |
காரணம் ஸ்²ராவிதஸ்²சாஸ்மி யுக்தரூபம் ததா³னக⁴ || 1-20-58

ஆனால், ஓ! பாவமற்றவனே, ஆலோசனைகளை நன்கறிந்த என் அமைச்சர்கள் அனைவரும், தேவர்களைப் போன்ற ரித்விக்குகளும், நலம் விரும்பும் நண்பர்களும், சாத்திரங்களை நன்கு அறிந்த தோழர்கள் அனைவரும் அதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டு, அதற்கான முக்கியக் காரணங்களையும் சுட்டிக்காட்டினார்கள்

மந்த்ரிண ஊசு꞉
ப்ரவ்ருத்தசக்ர꞉ பாபோ(அ)ஸௌ த்வம் சாஸௌ²சக³த꞉ ப்ரபோ⁴ |
ந சைஷ ப்ரத²ம꞉ கல்போ யுத்³த⁴ம் நாம கதா³சன || 1-20-59

அமைச்சர்கள் {பீஷ்மரிடம்}, “ஓ! தலைவா, தீய ஆன்மா கொண்ட அவன் (உக்ராயுதன்) பேரழிவுக்கான பணியைச் செய்து கொண்டிருக்கிறான், நீரும் தூய்மையற்றவராக இருக்கிறீர்[“உமது தந்தையின் மரணத்தின் காரணமான துக்கத்தில் நீர் இருப்பதால்” {தூய்மையற்றிருக்கிறீர்} என்பது இங்கே பொருள்]. எனவே, நீர் உமது முதல் பணியாகப் போரிடக் கூடாது

தே வயம் ஸாமபூர்வம் வை தா³னம் பே⁴த³ம் ததை²வ ச |
ப்ரயோக்ஷ்யாமஸ்தத꞉ ஸு²த்³தோ⁴ தை³வதான்யபி⁴வாத்³ய ச || 1-20-60

க்ருதஸ்வஸ்த்யயனோ விப்ரைர்ஹுத்வாக்³னீனர்ச்ய ச த்³விஜான் |
ப்³ராஹ்மணைரப்⁴யனுஜ்ஞாத꞉ ப்ரயாஸ்யஸி ஜயாய வை || 1-20-61

நாம் முதலில் சமரசம் {சாமம்}, கொடை {தானம்}, மற்றும் வேற்றுமை விதைத்தல் {பேதம்} ஆகிய தகுமுறைகளை முதலில் நாடுவோம். நீர் தூய்மையடைந்து[“உமது தந்தையின் சிராத்தம் முடிந்த பின்னர்” {தூய்மையடைந்துவிடுவீர்} என்பது இங்கே பொருள் ], தேவர்களை வணங்கி, பிராமணர்களிடம் சொல்லி அருட்சடங்குகளைச் செய்து, அவர்களை வணங்கி, அவர்களது அனுமதியைப் பெற்றுக் கொண்ட பிறகே வெற்றியை நாடி நீர் புறப்பட வேண்டும்.

அஸ்த்ராணி ச ப்ரயோஜ்யானி ந ப்ரவேஸ்²யஸ்²ச ஸங்க³ர꞉ |
ஆஸௌ²சே வர்தமானே து வ்ருத்³தா⁴னாமிதி ஸா²ஸனம் || 1-20-62

துக்கத்தில் இருப்பவன் ஆயுதத்தை எடுக்கவோ, ஓர் ஒப்பந்தத்திற்குள் நுழையவோ கூடாது எனப் பெரியோரான தவசிகளால் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஸாமதா³னாதி³பி⁴꞉ பூர்ணமபி பே⁴தே³ன வா தத꞉ |
தாம் ஹனிஷ்யஸி விக்ரம்ய ஸ²ம்ப³ரம் மக⁴வானிவ || 1-20-63

முதலில் சமரசம் அதன் பிறகு கொடை அதன் பிறகு வேற்றுமை விதைத்தல் ஆகியவற்றை நீர் முயற்சிக்க வேண்டும். அதன்பிறகே, (அசுரன்) சம்பரனைக் கொன்ற இந்திரனைப் போல உமது ஆற்றலை வெளிப்படுத்தி அவனை {உக்ராயுதனை} நீர் கொல்ல வேண்டும்

ப்ராஜ்ஞானாம் வசனம் காலே வ்ருத்³தா⁴னாம் ச விஸே²ஷத꞉ |
ஸ்²ரோதவ்யமிதி தச்ச்²ருத்வா நிவ்ருத்தோ(அ)ஸ்மி நராதி⁴ப || 1-20-64

ஓ! மன்னா, உரிய நேரங்களில் பெரியோரான தவசிகளின் சொற்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்” என்றனர். இதைக் கேட்டு நான் போரிடுவதைத் தவிர்த்தேன்.(

ததஸ்தை꞉ ஸங்க்ரம꞉ ஸர்வ꞉ ப்ரயுக்த꞉ ஸா²ஸ்த்ரகோவிதை³꞉ |
தஸ்மின்காலே குருஸ்²ரேஷ்ட² கர்ம சாரப்³த⁴முத்தமம் || 1-20-65

அதன் பிறகு, ஆலோசனைகளை நன்கறிந்த அந்த அமைச்சர்கள் அனைத்து வழிமுறைகளையும் முயற்சி செய்து பார்த்தனர். ஓ! குருக்களில் முதன்மையானவனே, அந்நேரத்தில் மிகச் சிறந்த பணி தொடங்கியது

ஸ ஸாமாதி³பி⁴ரேவாதா³வுபாயை꞉ ப்ராஜ்ஞசிந்திதை꞉
அனுனீயமானோ து³ர்பு³த்³தி⁴ரனுனேதும் ந ஸ²க்யதே || 1-20-66

தவசிகள் தீர்மானித்திருக்கும் சமரசம் முதலிய வழிமுறைகளால் வேண்டப்பட்டாலும் அந்தத் தீய மனம் கொண்டவனை வெல்ல இயலவில்லை.

ப்ரவ்ருத்தம் தஸ்ய தச்சக்ரமத⁴ர்மனிரதஸ்ய வை |
பரதா³ராபி⁴லாஷேண ஸத்³யஸ்தாத நிவர்திதம் || 1-20-67

அந்தப் பாவியின் சக்கரம் {சக்கராயுதம்} செலுத்தப்பட்டாலும், அவன் பிறன் மனைவியை நாடியதன் காரணமாக அஃது உடனே நின்று போனது

ந த்வஹம் தஸ்ய ஜானே தன்னிவ்ருத்தம் சக்ரமுத்தமம் |
ஹதம் ஸ்வகர்மணா தம் து பூர்வம் ஸத்³பி⁴ஸ்²ச நிந்தி³தம்|| 1-20-68
அவனது மிகச் சிறந்த சக்கரம் {சக்ராயுதம்} நின்றுவிட்டது என்பதை அப்போது நான் உணரவில்லை. பக்திமான்களால் தவறாகப் பேசப்பட்ட அது தன் செயலின் விளைவாலேயே பயனற்றுப் போனது[ஆனால் நான், ‘இந்தத் தீய மனம் கொண்ட உக்ராயுதனிடம் என் அமைச்சர்களின் அரசியல் சூழ்ச்சிகள் பலனளிக்காது. அவன் தன் சக்கரத்தை முறையாகப் பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். பிறன் மனைவியை அபகரிக்கும் திட்டத்துடன் இருப்பவனுக்கு அந்தத் தெய்வீக சக்கரம் எப்படிப் பயனளிக்கும்? அந்தச் சக்கராயுதத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அது நம் மீது பயன்படுத்தப்பட்டால், அதை எப்படிக் கலங்கடிப்பது?’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, நல்லெண்ணம் கொண்டோரும், “இந்த உக்ராயுதன் தனக்காகக் குழியைத் தானே தோண்டிக் கொள்கிறான்” என்று சபித்தார்கள்” என்று அறிந்தேன் ]

க்ருதஸௌ²ச꞉ ஸ²ரீ சாபீ ரதீ² நிஷ்க்ரம்ய வை புராத் |
க்ருதஸ்வஸ்த்யயனோ விப்ரை꞉ ப்ராயோத⁴யமஹம் ரிபும் || 1-20-69

அதன் பிறகு தூய்மையடைந்து, பிராமணர்களின் மூலம் அருட்சடங்குகளைச் செய்து கொண்ட நான், என் வில்லுடனும், கணைகளுடனும் ஒரு தேரில் ஏறி நகரத்தைவிட்டுப் புறப்பட்டு என் பகைவனுடன் போரில் ஈடுபட்டேன்.

தத꞉ ஸம்ஸர்க³மாக³ம்ய ப³லேனாஸ்த்ரப³லேன ச |
த்ர்யஹமுன்மத்தவத்³யுத்³த⁴ம் தே³வாஸுரமிவாப⁴வத் || 1-20-70

ஆயுதங்களால் பலமூட்டப்பட்ட படையுடன் ஏற்பட்ட மோதலில், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரைப் போன்ற அந்த மிகப் பயங்கரமான போர் மூன்று நாட்கள் நீடித்தது

ஸ மயாஸ்த்ரப்ரதாபேன நிர்த³க்³தோ⁴ ரணமூர்த⁴னி |
பபாடாபி⁴முக²꞉ ஸூ²ரஸ்த்யக்த்வா ப்ராணானரிந்த³ம || 1-20-71

அந்தப் போர் உச்சக் கட்டத்தை எட்டிய போது என் ஆயுதங்களின் வலிமையால் முழுமையாக எரிக்கப்பட்ட அந்த வீரன் {உக்ராயுதன்}, தன் ஆவியைக் கொடுத்து தலை கவிழ்ந்தவாறு கீழே விழுந்தான்.

ஏதஸ்மின்னந்தரே தாத காம்பில்யே ப்ருஷதோ(அ)ப்⁴யயாத் |
ஹதே நீபேஸ்²வரே சைவ ஹதே சோக்³ராயுதே⁴ ந்ருபே || 1-29-72

ஆஹிச்ச²த்ரம் ஸ்வகம் ராஜயம் பித்ர்யம் ப்ராப மஹாத்³யுதி꞉ |
த்³ருபத³ஸ்ய பிதா ராஜன்மமைவானுமதே ததா³ || 1-20-73

அதேவேளையில், ஓ! மகனே {யுதிஷ்டிரா}, பிருஷதன் காம்பில்ய மாகாணத்தை நோக்கிப் புறப்பட்டான். மன்னன் நீபனும், உக்ராயுதனும் கொல்லப்பட்டதால் பெரும்பிரகாசமுடைய அவன் தன் மூதாதையருக்குச் சொந்தமான அஹிச்சத்திரத்தின் அரசை அடைந்தான். ஓ! மன்னா, அவன் {பிருஷதன்}, மன்னன் துருபதனின் தந்தையும், என் கூட்டணியைச் சேர்ந்தவனும் ஆவான்

ததோ(அ)ர்ஜுனேன தரஸா நிர்ஜித்ய த்³ருபத³ம் ரணே |
ஆஹிச்ச²த்ரம் ஸகாம்பில்யம் த்³ரோணாயாதா²பவர்ஜிதம் || 1-20-74

அதன்பிறகு, போர்க்களத்தில் துருபதனை வென்ற அர்ஜுனன், அஹிச்சந்திரத்துடன் சேர்ந்து காம்பில்ய மாகாணத்தையும் துரோணருக்கு அளித்தான்

ப்ரதிக்³ருஹ்ய ததோ த்³ரோண உப⁴யம் ஜயதாம் வர꞉ |
காம்பில்யம் த்³ருபதா³யைவ ப்ராயச்ச²த்³விதி³தம் தவ || 1-20-75

வெற்றியாளர்களில் முதன்மையான துரோணர், இரண்டு அரசுகளையும் ஏற்றுக் கொண்ட பிறகு, காம்பில்யத்தைத் துருபதனிடம் திருப்பிக் கொடுத்தார். இதை நீ அறிவாய்.

ஏஷ தே த்³ருபத³ஸ்யாதௌ³ ப்³ரஹ்மத³த்தஸ்ய சைவ ஹ |
வம்ஸ²꞉ கார்த்ஸ்யேன வை ப்ரோக்தோ நீபஸ்யோக்³ராயுத⁴ஸ்ய ச || 1-20-76

நான் இவ்வாறே துருபதனின் மூதாதையரான பிரம்மதத்தனின் குலத்தையும், வீரனான உக்ராயுதனின் குலத்தையும் உனக்கு விரிவாகச் சொன்னேன்” என்றார் {பீஷ்மர்}

யுதி⁴ஷ்டி²ர உவாச
கிமர்த²ம் ப்³ரஹ்மத³த்தஸ்ய பூஜனீயா ஸ²குந்திகா |
அந்த⁴ம் சகார கா³ங்கே³ய ஜ்யேஷ்ட²ம் புத்ரம் புரா விபோ⁴ || 1-20-77

யுதிஷ்டிரன், “ஓ! கங்கையின் மைந்தரே, பூஜனி என்ற பறவையானவள் ஏன் பிரம்மதத்தனின் மூத்த மகனுடைய கண்களைப் பிடுங்கினாள்?

சிரோஷிதா க்³ருஹே சாபி கிமர்த²ம் சைவ யஸ்ய ஸா |
சகார விப்ரியமித³ம் தஸ்ய ராஜ்ஞோ மஹாத்மன꞉ || 1-20-78

அவள் அவனுடைய வீட்டில் நீண்ட காலம் வாழ்ந்தாள். (பிறகு) ஏன் அவள் அந்த உயரான்ம மன்னனுக்கு இத்தகைய தீங்கை இழைத்தாள்?

பூஜனீயா சகாராஸௌ கிம் ஸக்²யம் தேன சைவ ஹ |
ஏதன்மே ஸம்ஸ²யம் சி²ந்தி⁴ ஸர்வமுக்த்வா யதா²தத²ம் || 1-20-79

பூஜனி ஏன் அவனுடன் நட்பு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டாள்? என்னுடைய இந்த ஐயங்கள் அனைத்தையும் முறையாக நீர் நிறைவடையச் செய்வீராக” என்று கேட்டான்.

பீ⁴ஷ்ம உவாச
ஸ்²ருணு ஸர்வம் மஹாராஜ யதா²வ்ருத்தமபூ⁴த்புரா |
ப்³ரஹ்மத³த்தஸ்ய ப⁴வனே தன்னிபோ³த⁴ யுதி⁴ஷ்டி²ர || 1-20-80

பீஷ்மர், “ஓ! பேரரசனே, ஓ! யுதிஷ்டிரா, பிரம்மதத்தனின் வீட்டில் முன்பு நடந்தவற்றை முறையாகக் கேட்பாயாக

காசிச்ச²குந்திகா ராஜன்ப்³ரஹ்மத³த்தஸ்ய வை ஸகீ² |
ஸி²திபக்ஷா ஸோ²ணஸி²ரா꞉ ஸி²திப்ருஷ்டா² ஸி²தோத³ரீ || 1-20-81

ஓ! மன்னா, ஒரு குறிப்பிட்ட பெண் பறவை பிரம்மதத்தனிடம் தோழமையுடன் இருந்தாள். அவளுடைய இரண்டு சிறகுகள் வெண்ணிறத்திலும், தலை சிவப்பு மற்றும் கருப்பாகவும், வயிறு கருப்பாகவும் இருந்தன.

ஸகீ² ஸா ப்³ரஹ்மத³த்தஸ்ய ஸுத்³ருட⁴ம் ப³த்³த⁴ஸௌஹ்ருதா³ |
தஸ்யா꞉ குலாயமப⁴வத்³கே³ஹே தஸ்ய நரோத்தம || 1-20-82

பிரம்மதத்தன் அந்தப் பெண் துணையிடம் பெரும்பற்றுக் கொண்டிருந்தான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அவள் அவனுடைய வீட்டில் ஒரு கூட்டை அமைத்துக் கொண்டு அங்கே வாழ்ந்து வந்தாள்.

ஸா ஸதா³ஹனி நிர்க³த்ய தஸ்ய ராஜ்ஞோ க்³ருஹோத்தமாத் |
சசாராம்போ⁴தி⁴தீரேஷு பல்வலேஷு ஸரஸ்ஸு ச || 1-20-83

அவள் ஒவ்வொரு நாளும் அந்த அரண்மனையைவிட்டு வெளியே சென்று, கடற்கரைகளிலும், தடாகங்களிலும், குளங்களிலும் உலவித் திரிந்து வந்தாள்

நதீ³பர்வதகுஞ்ஜேஷு வனேஷூபவனேஷு ச |
ப்ரபு²ல்லேஷு தடா³கே³ஷு கல்ஹாரேஷு ஸுக³ந்தி⁴ஷு || 1-20-84

குமுதோ³த்பலகிஞ்ஜல்கஸுரபீ⁴க்ருதவாயுஷு |
ஹம்ஸஸாரஸஃக்³ஹுஷ்டேஷு காரண்ட³வருதேஷு ச || 1-20-85

சரித்வா தேஷு ஸா ராஜன்னிஸி² காம்பில்யமாக³மத் |
ந்ருபதேர்ப⁴வனம் ப்ராப்ய ப்³ரஹ்மத³த்தஸ்ய தீ⁴மத꞉ || 1-20-86

ஆறுகள், மலைகள், காடுகள், நந்தவனங்கள், வெண்ணிற நீராம்பல் மலர்களின் மணங்கமழும் தடாகங்கள், அல்லி மற்றும் தாமரை மலர்களின் மணம் நிறைந்த காற்றுடன் கூடியவையும், அன்னங்கள், சாரஸங்கள் {கொக்குகள்}, காரண்டவங்கள் {நீர்க்காக்கைகள்} நிறைந்தவையுமான இடங்களிலும் திரிந்துவிட்டு, இரவு நேரத்தில் காம்பில்ய நகரம் திரும்பி, நுண்ணறிவுமிக்க மன்னன் பிரம்மதத்தனின் வீட்டில் அவள் {பூஜனி என்ற பறவையானவள்} வாழ்ந்து வந்தாள்.(84-86)

ராஜ்ஞா தேன ஸதா³ ராஜன் கதா²யோக³ம் சகார ஸா |
ஆஸ்²சர்யாணி ச த்³ருஷ்டானி யானி வ்ருத்தானி கானிசித் || 1-20-87

சரித்வா விவிதா⁴ந்தே³ஸா²ன்கத²யாமாஸ ஸா நிஸி² |
கதா³சித்தஸ்ய ந்ருபதேர்ப்³ரஹ்மத³த்தஸ்ய கௌரவ || 1-20-88

புத்ரோ(அ)பூ⁴த்³ராஜஸா²ர்தூ³ல ஸர்வஸேனேதி விஸ்²ருத꞉ |
பூஜனீயா(அ)த² ஸா தஸ்மின்ப்ராஸூதாண்ட³மதா²பி ச || 1-20-89

அவள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயணித்தபோது கண்ட வினோத காரியங்களைக் குறித்து இரவில் தன் உரையாடலில் மன்னனிடம் விளக்கிச் சொல்வாள். ஓ! குருவின் வழித்தோன்றலே, ஒரு காலத்தில் மன்னர்களில் முதன்மையானவனான பிரம்மதத்தனுக்கு ஸர்வஸேனன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட ஒரு மகன் பிறந்தான். பூஜனியும், அங்கே ஒரு முட்டையை இட்டாள்

தஸ்மின்னீடே³ புரா ஹ்யேகம் தத்கில ப்ராஸ்பு²டத்ததா³ |
ஸ்பு²டிதோ மாம்ஸபிண்ட³ஸ்து பா³ஹுபாதா³ஸ்யஸம்யுத꞉ || 1-20-90

உரிய நேரத்தில் முட்டை பொரிந்து, அதிலிருந்து கால்கள், கைகள் மற்றும் முகத்துடன் கூடிய ஒரு சதைப்பிண்டம் வெளியே வந்தது

ப³ப்⁴ருவக்த்ரஸ்²சக்Sஉர்ஹீனோ ப³பூ⁴வ ப்ருதி²வீபதே |
சக்ஷுஷ்மானப்யபூ⁴த்பஸ்²சாதீ³ஷத்பக்ஷோத்தி²தஸ்²ச ஹ || 1-20-91

ஓ! மன்னா, அதன் முகம் பழுப்பு நிறத்தில் இருந்தது, அதற்குக் கண்களேதும் இல்லை {கண்கள் திறக்கவில்லை}. படிப்படியாக அந்தக் குஞ்சானது, கண்களைப் பெற்றது, அதன் சிறகுகளும் சிறிது வளர்ந்தன.

அத² ஸா பூஜனீயா வை ராஜபுத்ரஸ்வபுத்ரயோ꞉ |
துல்யஸ்னேஹாத்ப்ரீதிமதீ தி³வஸே தி³வஸே(அ)ப⁴வத் || 1-20-92

பூஜனி தன் குஞ்சிடமும், அந்த இளவரசனிடமும் நிகராகவே அன்பு செலுத்தி, படிப்படியாக அவர்களை விரும்பத் தொடங்கினாள்.

ஆஜஹார ஸதா³ ஸாயம் சஞ்ச்வாம்ருதப²லத்³வயம் |
அம்ருதாஸ்வாத³ஸத்³ருஸ²ம் ஸர்வஸேனதனூஜயோ꞉ || 1-20-93

ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் அவள், (இளவரசன்) ஸர்வஸேனனுக்கும், தன் குஞ்சுக்குமென அமுதம்போன்ற இரு கனிகளைத் தன் அலகுகளில் கொண்டு வருவாள்

ஸ பா³லோ ப்³ரஹ்மத³த்தஸ்ய பூஜனீயாஸுதஸ்²ச ஹ |
தே ப²லே ப⁴க்ஷயித்வா ச ப்ருது²கௌ ப்ரீதமானஸௌ || 1-20-94

பிரம்மதத்தனின் மகனும், அந்தக் குஞ்சும் அந்த இரு கனிகளை உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்

அபூ⁴தாம் நித்யமேவேஹ கா²தே³தாம் தௌ ச தே ப²லே |
தஸ்யாம் க³தாயாமத² ச பூஜன்யாம் வை ஸதா³ஹனி || 1-20-95

ஸி²ஸு²னா சடகேனாத² தா⁴த்ரீ தம் து ஸி²ஸு²ம் ந்ருப |
தேன ப்ரக்ரீட³யாமாஸ ப்³ரஹ்மத³த்தாத்மஜம் ஸதா³ || 1-20-96

நாள்தோறும் அந்தக் கனிகளை உண்டு அவர்கள் வளரத் தொடங்கினர். பகலில் பூஜனி வெளியே சென்றதும், செவிலி அந்தப் பறவைக் குஞ்சை எடுத்து பிரம்மதத்தனுக்கு விளையாடக் கொடுப்பாள்.(95,96)

நீடா³த்தமாக்ருஷ்ய ததா³ பூஜனீயா க்ருதா தத꞉ |
க்ரீட³தா ராஜபுத்ரேண கதா³சிச்சடக꞉ ஸ து || 1-20-97

பூஜனி கூட்டை விட்டு வெளியே சென்றதும், அந்த இளவரசன் விளையாடுவதற்காக அந்த இளங்குருவியை எடுத்துக் கொள்வான்

நிக்³ருஹீத꞉ கந்த⁴ராயாம் ஸி²ஸு²னா த்³ருட⁴முஷ்டினா |
து³ர்ப⁴ங்க³முஷ்டினா ராஜன்னஸூன்ஸத்³யஸ்த்வஜீஜஹத் || 1-20-98

ஒரு காலத்தில் அந்த இளவரசன் அந்த இளம்பறவையின் கழுத்தை அழுத்தமாகப் பிடித்ததன் விளைவால் அஃது உடனே இறந்தது.

தம் து பஞ்சத்வமாபன்னம் வ்யாத்தாஸ்யம் பா³லகா⁴திதம் |
கத²ஞ்சின்மோசிதம் த்³ருஷ்த்வா ந்ருபதிர்து³꞉கி²தோ(அ)ப⁴வத் 1-20-99

தா⁴த்ரீம் தஸ்ய ஜக³ர்ஹே தாம் ததா³(அ)ஸ்²ருபரமோ ந்ருப꞉ |
தஸ்தௌ² ஸோ²கான்விதோ ராஜஞ்சோ²சம்ஸ்தம் சடகம் ததா³ || 1-20-100

சிறுவனால் கொல்லப்பட்டு வாயை அகலத் திறந்து கிடந்த அந்த இளம்பறவையைக் கண்ட மன்னன், அதை அவனது பிடியில் இருந்து விடுவித்துப் பெரிதும் வருந்தி, செவிலியிடம் கண்டனம் தெரிவித்தான். அந்த இளங்குருவிக்காக அவன் பெருந்துயரில் நிறைந்தான்.(99-100)

பூஜனீயாபி தத்காலே க்³ருஹீத்வா து ப²லத்³வயம் |
ப்³ரஹ்மத³த்தஸ்ய ப⁴வனமாஜகா³ம வனேசரீ || 1-20-101

காட்டில் உலவித் திரியும் பூஜனியும் அந்நேரத்தில் பிரம்மதத்தனின் அரண்மனைக்கு இரு கனிகளுடன் வந்தாள்.

அதா²பஸ்²யத்தமாக³ம்ய க்³ருஹே தஸ்மின்னராதி⁴ப |
பஞ்சபூ⁴தபரித்யக்தம் ஸோ²ச்யம் தம் ஸ்வதனூத்³ப⁴வம் || 1-20-102

தன்னுடலில் இருந்து வெளிவந்த அந்தப் பிள்ளை இறந்ததை அங்கு வந்து கண்டாள்

முமோஹ த்³ருஷ்ட்வா தம் புத்ரம் புன்꞉ ஸஞ்ஜ்ஞாஅமதா²லப⁴த் |
லப்³த⁴ஸஞ்ஜ்ஞா ச Sஆ ராஜன்விலலாப தபஸ்வினீ || 1-20-103

தன் குஞ்சு இறந்ததைக் கண்டதும் முதலில் அவள் நினைவிழந்தாலும் பிறகு படிப்படியாக மீண்டாள். நினைவுமீண்ட அந்தப் பாவப்பட்ட பறவையானவள் புலம்பத் தொடங்கினாள்.

பூஜனீயோவாச |
ந து த்வமாக³தாம் புத்ர வாஸ²ந்தீம் பரிஸர்பஸி |
குர்வம்ஸ்²சாடுஸஹஸ்ராணி அவ்யக்தகலயா கி³ரா || 1-20-104

பூஜனி, “ஓ! என் குழந்தாய், என் கூக்குரலை வெளியிட்டு நான் கூட்டுக்குத் திரும்பி வரும்போதெல்லாம், நீ தெளிவற்ற உன் ஆயிரம் மொழிகளுடன் என்னிடம் வருவாயே

வ்யாதி³தாஸ்ய꞉ க்ஷுதா⁴ர்தஸ்²ச பீதேனாஸ்யேன புத்ரக |
ஸோ²ணேன தாலுனா புத்ர கத²மத்³ய ந ஸர்பஸி || 1-20-105

மஞ்சள் முகம் மற்றும் கருப்புத் தொண்டையுடன் வாயைத் திறந்து கொண்டு நீ ஏன் இன்று வரவில்லை?

பக்ஷாப்⁴யாம் த்வாம் பரிஷ்வஜ்ய நனு வாஸா²மி சாப்யஹம் |
சிசீகூசீதி வாஸ²ந்தம் த்வாமத்³ய ந ஸ்²ருணோமி கிம் || 1-20-106

நான் எப்போதும் என் சிறகுகளை உன்னைத் தழுவிக் கொண்டு கூக்குரலிடுவேன். நான் ஏன் இன்று உன் தெளிவற்ற ஒலியைக் கேட்கவில்லை?

மனோரதோ² யஸ்து மம பஸ்²யேயம் புத்ரகம் கதா³ |
வ்யாத்தாஸ்யம் வாரி யாசந்தம் ஸ்பு²ரத்பக்ஷம் மமாக்³ரத꞉ || 1-20-107

என்றாவது ஒரு நாள் என் குஞ்சான நீ உன் வாயைத் திறந்து கொண்டும், சிறகுகளை அசைத்துக் கொண்டும் நீர் கேட்பதை நான் காண விரும்பினேன்.

ஸ மே மனோரதோ² ப⁴க்³னஸ்த்வயி பஞ்சத்வமாக³தே |
விலப்யைவம் ப³ஹுவித⁴ம் ராஜானமத² ஸாப்³ரவீத் || 1-20-108

என்னுடைய அந்த ஆசை உன் மரணத்தால் தவிடுபொடியானது” என்றாள்.
இவ்வாறு பல்வேறு வகைகளில் புலம்பிய அவள் {பூஜனி}, அந்த மன்னனிடம்

நனு மூர்தா⁴பி⁴ஷிக்தஸ்த்வம் த⁴ர்மம் வேத்ஸி ஸனாதனம் |
அத்³ய கஸ்மான்மம ஸுதம் தா⁴த்ர்யா கா⁴திதவானஸி || 1-20-109

“ஓ! மன்னா, நீ ஒரு க்ஷத்திரியனாவாய்[இங்கே மூலத்தில் இருப்பது மூர்த்தாபிஷிக்தம் என்ற சொல்லாகும். தலையில் நீர் தெளிக்கப்பட்டவன் என்பது இதன் பொருளாகும். பட்டமேற்கும்போது க்ஷத்திரியர்கள் இந்தச் சடங்கைச் செய்து கொள்வார்கள்”]. அறத்தின் நித்திய வழிமுறைகளை நீ அறிவாய். அப்படியிருந்தும் நீ ஏன் உன் செவிலியைக் கொண்டு என் குஞ்சைக் கொன்றாய்?

தவ புத்ரேண சாக்ருஷ்ய க்ஷத்ரியாத⁴ம ஸ²ம்ஸ மே |
ந ச நூனம் ஸ்²ருதா தே(அ)பூ⁴தி³யதி³யமாங்கீ³ரஸீ ஸ்²ருதி꞉ || 1-20-110

ஓ! க்ஷத்திரியரில் இழிந்தவனே, உன் மகன் ஏன் என் குஞ்சை எடுத்துக் கொன்றான்? அங்கிரஸின் ஸ்ருதியை நீ கேட்டதில்லையென நான் நினைக்கிறேன்

ஸ²ரணாக³த꞉ க்ஷுதா⁴ர்தஸ்²ச ஸ²த்ருபி⁴ஸ்²சாப்⁴யுபத்³ருத꞉
சிரோஷிதஸ்²ச ஸ்வக்³ருஹே பாதவ்ய꞉ ஸர்வதா³ ப⁴வேத் || 1-20-111**

உறைவிடம் நாடுபவன், பசித்தவன், பகைவர்களால் தாக்கப்பட்டவன், எப்போதும் தன் வீட்டில் வாழ்பவன் ஆகியோர் ஒரு மனிதனால் பாதுகாக்கப்பட வேண்டும்

அபாலயன்னரோ யாதி கும்பீ⁴பாகமஸம்ஸ²யம் |
கத²மஸ்ய ஹவிர்தே³வா க்³ருஹ்ணந்தி பிதர꞉ ஸ்வதா⁴ம் || 1-20-112

இந்தக் கடமையைப் புறக்கணிக்கும் ஒருவன் நிச்சயம் கும்பீபாகம் என்ற நரகிற்குச் செல்வான். ஸ்வதா மந்திரங்களுடன் அவனால் அளிக்கப்படும் ஹவிஸையும், உணவையும் தேவர்களும், பித்ருக்களும் எவ்வாறு ஏற்பார்கள்?” என்று கேட்டாள்.

ஏவமுக்த்வா மஹாராஜ த³ஸ²த⁴ர்மக³தா ஸதீ |
ஸோ²கார்தா தஸ்ய பா³லஸ்ய சக்ஷுஷீ நிர்பி³பே⁴த³ ஸா || 1-20113

இவ்வாறு அந்தப் பெரும் மன்னனிடம் சொல்லிவிட்டு, துயராலும், பத்து வகைக் குணங்களால்[“குடிகாரன், பைத்தியக்காரன், களைத்தவன், பசித்தவன், கோபம் கொண்டவன், அவசரம் கொண்டவன், அச்சம் கொண்டவன், கலக்கமடைந்தவன், உணர்ச்சிமிக்கவன் ஆகியோரின் குணங்களே இவையாகும்”] பீடிக்கப்பட்ட அவள் (அந்தப் பறவையானவள்) {தன் அலகால்} அந்தச் சிறுவனின் கண்களைக் குத்திக் கிழித்தாள்.

கராப்⁴யாம் ராஜபுத்ரஸ்ய ததஸ்தச்சக்ஷுரஸ்பு²டத் |
க்ருத்வா சாந்த⁴ம் ந்ருபஸுதமுத்பபாத ததோ(அ)ம்ப³ரம் || 1-20-114

இதனால் அந்த இளவரசனின் கண்கள் பறிக்கப்பட்டன. இவ்வாறு அவனைக் குருடாக்கிவிட்டு பூஜனி என்ற அந்தப் பறவை வானத்தில் பறந்து சென்றாள்.(

அத² ராஜா ஸுதம் த்³ரூஷ்ட்வா பூஜனீயாமுவாச ஹ |
விஸோ²கா ப⁴வ கல்யாணி க்ருதம் தே பீ⁴ரு ஸோ²ப⁴னம் || 1-20-115

தன் மகனைக் கண்ட மன்னன், அந்தப் பறவையிடம், “ஓ! மங்கலமானவளே, உன் துயரைக் கைவிடுவாயாக. ஓ! அச்சம் கொண்ட பறவையே, நீ சரியாகவே செய்திருக்கிறாய்.

க³தஸோ²கா நிவர்தஸ்வ அஜர்யம் ஸக்²யமஸ்து தே |
புரேவ வஸ ப⁴த்³ரம் தே நிவர்தஸ்வ ரமஸ்வ ச || 1-20-116

உன் கவலையை விட்டுத் திரும்பி வருவாயாக; உன் நட்பு நிலைத்திருக்கட்டும். என் நகரத்தில் வாழ்ந்து இன்புற்றிருப்பாயாக. உனக்கு நன்மை நேரட்டும்.

புத்ரபீடோ³த்³ப⁴வஸ்²சாபி ந கோப꞉ பரமஸ்த்வயி |
மமாஸ்தி ஸகி² ப⁴த்³ரம் தே கர்தவ்யம் ச க்ருதம் த்வயா || 1-20-117

என் மகனின் தீப்பேற்றினால் விளைந்ததற்கு உன்னிடம் நான் கிஞ்சிற்றும் கோபம் கொள்ளவில்லை. என் நண்பராய் இருப்பாயாக. நீ பிரிந்து செல்லாதே. உன் கடமையையே நீ செய்திருக்கிறாய்” என்றான்

பூஜனீயோவாச
ஆத்மௌபம்யேன ஜானாமி புத்ரஸ்னேஹம் தவாப்யஹம் |
ந சாஹம் வஸ்துமிச்சா²மி தவ புத்ரமசக்ஷுஷம் |
க்ருத்வா வை ராஜஸா²ர்தூ³ல த்வத்³க்³ருஹே க்ருதகில்பி³ஷா || 1-20-118

பூஜனி, “என்னைப் போலவே நீயும் உன் மகனிடம் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாய் என்பதை நான் அறிவேன். உன் மகனைக் குருடாக்கிவிட்டு நான் இங்கே வாழ விரும்பவில்லை

கா³தா²ஸ்²சாப்யுஸ²னோ கீ³தா இமா꞉ ஸ்²ருணு மயேரிதா꞉ |
குமித்ரம் ச குதே³ஸ²ம் ச குராஜானம் குஸௌஹ்ருத³ம் |
குபுத்ரம் ச குபா⁴ர்யாம் ச தூ³ரத꞉ பரிவர்ஜயேத் || 1-20-119

குமித்ரே ஸௌஹ்ருத³ம் நாஸ்தி குபா⁴ர்யாயாம் குதோ ரதி꞉ |
குத꞉ பிண்ட³꞉ குபுத்ரே வை நாஸ்தி ஸத்யம் குராஜனி || 1-20-120

ஆசானான சுக்கிரரால் சொல்லப்பட்ட கருப்பொருட்களை நான் திரும்பச் சொல்கிறேன் கேட்பாயாக. {சுக்கிராச்சாரியார் சொன்னதாகப் பூஜனி சொன்னது}, “தீய நண்பன், தீய நாடு, தீய மகன், தீய மனைவி ஆகியோரை எப்போதும் ஒருவன் தொலைவிலேயே விட்டுவிட வேண்டும். ஒரு தீய நண்பனிடம் நட்போ, ஒரு தீய மனைவியிடம் பற்றோ ஒருபோதும் ஏற்படாது. ஒருவன் ஒரு தீய மகனிடம் இருந்து பிண்டத்தை எதிர்பார்க்க முடியாது, ஒருவன் ஒரு தீய மன்னனை நம்ப முடியாது.(119,120)

குஸௌஹ்ருதே³ க்வ விஸ்²வாஸ꞉ குதே³ஸே² ந து ஜீவ்யதே |
குராஜனி ப⁴யம் நித்யம் குபுத்ரே ஸர்வதோ(அ)ஸுக²ம் || 1-20-121

ஒரு தீய நண்பனை எவனால் நம்பமுடியும்? ஒரு தீய நாட்டில் ஒருவனால் வாழ முடியாது. தீய மன்னனைக் கண்டு மக்கள் எப்போதும் அஞ்சுவார்கள், ஒரு தீய மகன் எப்போதும் பேரிடரையே கொண்டுவருவான்

அபகாரிணி விஸ்ரம்ப⁴ம் ய꞉ கரோதி நராத⁴ம꞉ |
அனாதோ² து³ர்ப³லோ யத்³வன்ன சிரம் ஸ து ஜீவதி || 1-20-122

பலவீனனும், தன்னைப் பாதுகாக்க எவரும் இல்லாதவனுமான இழிந்த மனிதன் ஒருவன் தனக்குத் தீங்கிழைக்கக் கூடிய மனிதனை நம்பினால் நீண்ட நாள் வாழ மாட்டான்.

ந விஸ்²வஸேத³விஸ்²வஸ்தே விஸ்²வஸ்தே நாதிவிஸ்²வஸேத் |
விஸ்²வாஸாத்³ப⁴யமுத்பன்னம் மூலான்யபி நிக்ருந்ததி || 1-20-123

நம்பிக்கையற்ற மனிதனை ஒருபோதும் நம்பக்கூடாது, நம்பிக்கையுள்ள மனிதனிடமும் அதிக நம்பிக்கை வைக்கக்கூடாது. நம்பிக்கையினால் விளையும் அச்சம் வேர்கள் அனைத்தையும் அழித்துவிடும்

ராஜஸேவிSஉ விஸ்²வாஸம் க³ர்ப⁴ஸங்கரிதேஷு ச |
ய꞉ கரோதி நரோ மூடோ⁴ ந சிரம் ஸ து ஜீவதி || 1-20-124

இழிந்த சாதியில் நம்பிக்கை வைத்து ஒரு மனிதனுக்குத் தொண்டாற்றும் மூடன், நீண்டகாலம் உயிர்வாழ மாட்டான்

அப்யுன்னதிம் ப்ராப்ய ந்ரூபாத்ப்ராவார꞉ கீடகோ யதா² |
ஸ வினஸ்²யத்யஸந்தே³ஹமாஹைவமுஸ²னா ந்ருப || 1-20-125

பிறந்தவுடனேயே பறவைகளால் விழுங்கப்படும் மண்புழுக்களைப் போல மனிதர்களும், ஒரு மன்னனிடம் இருந்து முன்னேற்றத்தை அடைந்தால் நிச்சயம் விரைவில் அழிவை அடைவார்கள்

அபி மார்த³வபா⁴வேன கா³த்ரம் ஸம்லீய பு³த்³தி⁴மான் |
அரிம் நாஸ²யதே நித்யம் யதா² வல்லிர்மஹாத்³ருமம் || 1-20-126

ஒரு பெருமரத்தை அழிக்கும் கொடியைப் போலவே, மெல்லியல்புடன் தன் உடலை அழித்துக் கொள்ளும் ஒரு கல்விமானும், நாள்தோறும் தன் பகைவர்களுக்கு அழிவைக் கொண்டுவருவான்.(

ம்ருது³ரார்த்³ர꞉ க்ருஸோ² பூ⁴த்வா ஸ²னை꞉ ஸம்லீயதே ரிபு꞉ |
வல்மீக இவ வ்ருக்ஷஸ்ய பஸ்²சான்மூலானி க்ருந்ததி || 1-20-127

முதலில் மென்மையாகவும், கனிவாகவும், மெலிவாகவும் மாறும் ஒரு பகைவன், ஒரு மண்புழு ஒரு மரத்தை மெல்லமெல்ல ஒழிப்பதைப் போலவே படிப்படியாகத் தன் உடலை மெலியச் செய்து, அதன்பிறகு நம்மைக் கொல்வான்.

அத்³ரோஹஸமயம் க்ருத்வா முனீனாமக்³ரதோ ஹரி꞉ |
ஜகா⁴ன நமுசிம் பஸ்²சாத³பாம் பே²னேன பார்தி²வ || 1-20-128

“நான் எவனையும் அழிக்கமாட்டேன்” என்று தவசிகளின் முன்னிலையில் உறுதிமொழியளித்த ஹரி, ஓ! மன்னா, அதன் பிறகு நுரையைக் கொண்டு நமுசியைக் கொன்றான்

ஸுப்தம் மத்தம் ப்ரமத்தம் வ கா⁴தயந்தி ரிபும் நரா꞉ |
விஷேண வ்ஹ்னினா வா(அ)பி ஸ²ஸ்த்ரேணாப்யத² மாயயா || 1-20-129

ஒரு மனிதனானவன், தன் பகைவன், உறங்கிக் கொண்டிருந்தாலும், குடித்திருந்தாலும், கவனமில்லாமல் இருந்தாலும், நஞ்சு, நெருப்பு அல்லது நீரைக் கொண்டு அவனை அழிப்பான்

ந ச ஸே²ஷம் ப்ரகுர்வந்தி புனர்வைரப⁴யான்னரா꞉ |
கா⁴தயந்தி ஸமூலம் ஹி ஸ்²ருத்வேமாமுபமாம் ந்ருப || 1-20-130

எதிர்காலப் பகைமைக்கு அஞ்சும் மனிதர்கள், பகைவர்களில் எஞ்சியவர்களை ஒருபோதும் விடமாட்டார்கள். ஓ! மன்னா, இந்த எடுத்துக்காட்டை நினைவில் கொள்ளும் அவர்கள், தங்கள் பகைவர்களுக்கு முற்றான அழிவைக் கொண்டு வருகிறார்கள்.

ஸ²த்ருஸே²ஷம்ருணாச்சே²ஷம் ஸே²ஷமக்³னேஸ்²ச பூ⁴மிப |
புனர்வர்தே⁴த ஸம்பூ⁴ய தஸ்மாச்சே²ஷம் ந ஸே²ஷயேத் || 1-20-131

ஓ! மன்னா, பகைவர், கடன் மற்றும் நெருப்பில் எஞ்சியிருப்பது மீண்டும் ஒன்றிணைந்து விகிதமேற்கும். எனவே, இவை மூன்றிலும் எதையும் ஒருபோதும் மிச்சம் வைக்கக்கூடாது

ஹஸதே ஜல்பதே வைரீ ஏகபாத்ரே பு⁴னக்தி ச |
ஏகாஸனம் சாரோஹதி ஸ்மரதே தச்ச கில்பி³ஷம் || 1-20-132

ஒரு பகைவன் சிரிப்பான், பேசுவான், ஒரு தட்டில் உணவருந்துவான், ஒரே இருக்கையில் அமரவும் செய்வான், ஆனால் அவன் அந்தப் பாபத்தை எப்போதும் மனத்தில் வைத்திருப்பான்.

க்ருத்வா ஸம்ப³ந்த⁴கம் சாபி விஸ்²வஸேச்ச²த்ருணா ந ஹி |
புலோமானம் ஜகா⁴னாஜௌ ஜாமாதா ஸஞ்ஸ²தக்ரது꞉ || 1-20-133

ஒரு பகைவனிடம் ஒருவன் உறவு பூண்டாலும் அவனை ஒருபோதும் அவன் நம்பக்கூடாது. தேவர்களின் மன்னன் {இந்திரன்}, புலோமனுக்கு மருமகனாகவே இருந்தாலும், அவனே அவனைக் கொன்றான்

நிதா⁴ய மனஸா வைரம் ப்ரியம் வக்தீஹ யோ நர꞉ |
உபஸர்பேன்ன தம் ப்ராஜ்ஞ꞉ குரங்க³ இவ லுப்³த⁴கம் || 1-20-134

ஒரு மான் ஒரு வேடனை அணுகாதத்தைப் போலவே, ஞானம் கொண்ட ஒரு மனிதனும், இதயத்தில் பகையை வைத்துக் கொண்டு இனிய சொற்களில் பேசுபவனின் அருகில் செல்லக்கூடாது

ந சாஸன்னே நிவஸ்தவ்யம் ஸவைரே வர்தி⁴தே ரிபௌ |
பாதயேத்தம் ஸமூலம் ஹி நதீ³ரய இவ த்³ருமம் || 1-20-135

செழிப்படைந்த பகைவனின் அருகில் வாழ்வது முறையாகாது. ஓராறு ஒரு மரத்தை அழிப்பதைப் போலவே அவன் நம்மை அழித்துவிடுவான்

அமித்ராது³ன்னதிம் ப்ராப்ய நோன்னதோ(அ)ஸ்மீதி விஸ்²வஸேத் |
தஸ்மாத்ப்ராப்யோன்னதிம் நஸ்²யேத்ப்ராவார இவ கீடக꞉ || 1-20-136

ஓர் எதிரியிடம் இருந்து முன்னேற்றத்தை அடைந்தாலும் அவன் ஒருபோதும் அவனை நம்பக்கூடாது. அவனிடம் இருந்து செழிப்பை அடையும் ஒருவன், ஒரு மண்புழுவைப் போல அழிவை அடைவான்” {என்றார் சுக்ராச்சாரியார்}.

இத்யேதா ஹ்யுஸ²னோகீ³தா கா³தா² தா⁴ர்யா விபஸ்²சிதா |
குர்வதா சாத்மரக்ஷாம் வை நரேண ப்ருதி²வீபதே || 1-20-137

ஓ! மன்னா, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் கல்விமான்கள், ஆசான் சுக்கிரரால் சொல்லப்பட்ட இந்த வரிகளை {ஸ்லோகங்களை} எப்போதும் தன் மனத்தில் கொள்ள வேண்டும்.

மயா ஸகில்பி³ஷம் துப்⁴யம் ப்ரயுக்தமதிதா³ருணம் |
புத்ரமந்த⁴ம் ப்ரகுர்வந்த்யா தஸ்மான்னோ விஸ்²வஸே த்வயி || 1-20-138

உன் மகனைக் குருடாக்கியதன் மூலம் நான் உனக்குப் பெருங்கொடுமையை இழைத்திருக்கிறேன். எனவே, நான் உன்னிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்க முடியாது” என்றது {பூஜனி என்ற அந்தப் பறவை}[ மஹாபாரதம், சாந்தி பர்வம் {ஆபத்தர்மாநுசாஸன உப பர்வம்} பகுதி 139ல் பூஜனி மற்றும் பிரம்மதத்தனின் கதை சொல்லப்பட்டிருக்கிறது.].

ஏவமுக்த்வா ப்ரது³த்³ராவ ததா³(ஆ)காஸ²ம் பதங்கி³னீ |
இத்யேதத்தே மயாக்²யாதம் புராபூ⁴தமித³ம் ந்ருப || 1-20-139

ப்³ரஹ்மத³த்தஸ்ய ராஜேந்த்³ர யத்³வ்ருத்தம் பூஜனீயயா |
ஸ்²ராத்³த⁴ம் ச ப்ருச்ச²ஸே யன்மாம் யுதி⁴ஷ்டி²ர மஹாமதே || 1-20-140

அதஸ்தே வர்தயிஷ்யே(அ)ஹமிதிஹாஸம் புராதனம் |
கீ³தம் ஸனத்குமாரேண மார்கண்டே³யாய ப்ருச்ச²தே || 1-20-141

அந்தப் பறவையானவள் {பூஜனி}, இவையனைத்தையும் சொன்ன உடனே வானத்தில் பறந்து சென்றாள். ஓ! மன்னா, முன்பொருசமயம் பூஜனிக்கும், மன்னன் பிரம்மதத்தனுக்கும் இடையில் நடந்தவற்றை நான் உனக்கு விளக்கிச் சொன்னேன். ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவனே, ஓ! யுதிஷ்டிரா, மார்க்கண்டேயர் கேட்ட கேள்விக்கு மறுமொழியாக ஸனத்குமாரர் சொன்ன சிராத்தத்தின் பழங்கால வரலாற்றை நீ கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் சொல்லப் போகிறேன்.

ஸ்²ராத்³த⁴ஸ்ய ப²லமுத்³தி³ஸ்²ய நியதம் ஸுக்ருதஸ்ய ச |
தன்னிபோ³த⁴ மஹாராஜ ஸப்தஜாதிஷு பா⁴ரத || 1-20-142

ஸகா³லவஸ்ய சரிதம் கண்ட³ரீகஸ்ய சைவ ஹி |
ப்³ரஹ்மத³த்தத்ருதீயானாம் யோகி³னாம் ப்³ரஹ்மசாரிணாம் || 1-20-143

ஓ! மன்னா, பழங்காலத்தில் சிராத்தம் மற்றம் நல்வினையின் பலனைப் பெற விரும்பியவர்களும், மூன்று பிரம்மசாரிகளும், காலவர், கண்டரீகர் மற்றும் பிரம்மதத்தன் ஆகியோருக்கு அவர்களின் ஏழாம் பிறவியில் என்ன நடந்தது என்பதைக் கேட்பாயாக” என்றார் {பீஷ்மர்}.

இதி ஸ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஸே² ஹரிவம்ஸ²பர்வணி
பூஜனீயோபாக்²யானே சடகாக்²யம் நாம விம்ஸோ²(அ)த்⁴யாய꞉

————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading