8 – ஆனி திருமூலம் –ஸ்ரீ ரம்யஜாமாத்ருவும் (ஸ்ரீரங்கநாதன்) ஸ்ரீ ரம்யஜாமாத்ரு முனியும் (மாமுனிகள்)
ஸ்ரீ மலைக்குனிய நின்ற பெருமாள் என்னும் திருநாமத்தையுடையராய் இப்போது தர்ஶநத்துக்குக் கர்த்தாவாய்க்
ஸ்ரீ கோயிலிலே நித்யவாஸமாக எழுந்தருளியிருக்கிற ஸ்ரீ பட்டருடைய திருத் தகப்பனார் நம்முடைய
ஸ்ரீ ஜீயருக்குத் திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரமும் நன்றாக பாடமுமாய்,
மற்றுமுள்ள வ்யாக்யாநங்களெல்லாம் பாட ப்ராயமுமாயிருக்கையாலே ‘முப்பத்தாறாயிர பெருக்கர்! இங்கே வாரும்’ என்று
நம்முடைய ஜீயரைத் தம்முடைய அருகே அணைத்துக்கொண்டு மிகவும் ப்ரியப்பட்டு உபலாலிப்பர்.
அவ்வளவன்றிக்கே
“நல்லதோர் பரீதாபி வருடந்தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளிக்கிழமை வளர்பக்கம் நாலாம்நாளில்
செல்வமிகு திருமண்டபத்தில் செழுந்திருவாய்மொழிப் பொருளைச் செப்புமென்று
வல்லியுடை மணவாளரரங்கர் நங்கள் மணவாளமுனிக்கு வழங்கினாரே” என்கிறபடியே
பரீதாபி வருஷத்தில் ஆவணி மாஸத்தில் பெருமாள் திருப்பவித்திரத் திருநாள் எழுந்தருளி ஸ்ரீ அணியரங்கன் திருமுற்றத்திலே
பெரியோர்களெல்லோரும் கூடிப் பெரிய திருவோலக்கமாகத் தம்மை ஸேவித்து மங்களாஶாஸநம் பண்ணிக்கொண்டு
நிற்கிற வளவிலே ஸ்ரீ பெருமாள் தாமே நம்முடைய ஸ்ரீ ஜீயரைத் தனித்து அருளப்பாடிட்டருளி,
ஶ்ரீ ஶடகோபனையும் தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதித்தருளி,
‘நம்முடைய பெரிய திருமண்டபத்திலே நாளை தொடங்கித் திருவாய்மொழி ஈடுமுப்பத்தாறாயிரமும் நீர் ஓருரு நிர்வஹியும்’ என்று
திருவாய் மலர்ந்தருளி, பெருமாள் தாமும் நாச்சிமார்களும் ஸேநைமுதலியாரும் ஆழ்வார் எதிராசனுடனே
பெரியதிருமண்டபத்திலே பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருந்து
நம்முடைய பெரிய ஜீயரைத் திருவாய்மொழி நிர்வஹிக்கும்படி பெருமாள் திருவுள்ளம் பற்றியருளினார்.
ஆகையாலே ஒரு ஸம்வத்ஸரம் ஒரு விக்நமற அவ்விடத்திலே திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரம் முதலாக
ஐந்து வ்யாக்யாநத்துடனே நடந்து, மீளவும் ஆ(னி)வணி மாஸத்திலே திருவாய்மொழி சாற்றுகிறபோது
முன்பு போலே அனைத்துப் பரிகரத்துடனே கூடப் பெரிய திருமண்டபத்திலே பெருமாள் ஏறியருளி
திருவாய்மொழி சாற்றுகிற கட்டளையும் திருச்செவி சாற்றியருளி, பெருமாள் மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
ஜீயரையும் நன்றாகப் பரிபாலித்தருளினார் என்னுமதுவும் ஜகத்ப்ரஸித்தம்.
ஆகையாலே
“நாமார் பெரிய திருமண்டபமார் நம்பெருமாள்
தாமாக நம்மைத் தனித்தழைத்து நீ
மாறன் செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை
நாளுமிங்கே வந்துரை என்றேவுவதே வாய்ந்து” என்று நம்முடைய ஜீயர் தாமும் தமக்குப் பெருமாள்
செய்தருளின க்ருபாதிஶயத்துக்கும் தம்மை விநியோகம் கொண்டருளின வ்யாவ்ருத்திக்கும் உபகாரஸ்ம்ருதி பண்ணியருளினார்.
‘வலம்புரி யாயிரம் சூழ்தர வாழி மருங்கொளுரு
செலம் செல நின்று முழங்குக போல் தனது தொண்டர்
குலம் பலசூழ் மணவாளமாமுனி கோயிலில் வாழ
நலங்கடல் வண்ணன் முன்னேதமிழ் வேதம் நவிற்றனனே. –என்றும் –
தாராரரங்கரிதற்கு முன்னாள் தந்தாமளித்தார்
சீரார் பெரிய திருமண்டபத்துச் சிறந்தாய் என்
ஆராவமுதனையான் மணவாள மா முனியை யழைத்து
ஏரார் தமிழ்மறை இங்கேயிருந்து சொல் என்றனனே” என்று இத்யாதிகளாலே நம்முடைய முதலிகளும்
ஜீயருடைய ஶிஷ்ய ஸம்ருத்தியையும் பெருமாள் ஆர்க்கும் செய்யாத ஆதரம்
ஜீயருக்குச் செய்தருளினார் என்னுமத்தையும் அநுஸந்தித்தார்கள்.
இப்போது ஸ்வாசார்யவைபவமும் சொல்லுவானென் என்னில்,
“குரும் ப்ரகாஶயேந்நித்யம்”,
“எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோபனருளையே”,
“வக்தவ்யம் ஆசார்ய வைபவம்” என்னக்கடவதிறே.
ஒருநாள் நம்பிள்ளை பகவத் விஷயம் அருளிச்செய்த கோஷ்டி கலைந்தவளவிலே
பின்பழகிய பெருமாள் சீயர் தண்டனிட்டு
‘இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபோபாய- புருஷார்த்தங்கள் இவை என்று அருளிச்செய்யவேணும்’ என்று
விண்ணப்பம் செய்ய, பிள்ளையும்
‘எம்பெருமா(னாரு)னுடைய இச்சை ஸ்வரூபம், இரக்கம் உபாயம், இனிமை உபேயம்’ என்று அருளிச்செய்ய,
‘அப்படியன்று அடியேன் நினைத்திருப்பது’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்ய,
பிள்ளை ‘ஆனால் உமக்கென்ன சில பிள்ளைக் கிணறுகளுண்டோ? அத்தைச் சொல்லிக்காணீர்’ என்ன,
‘தேவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமையாய் இருக்கை ஸ்வரூபம்,
அவர்களபிமாநமே அடியேனுக்கு உபாயம், அவர்களுடைய முகமலர்ச்சியே அடியேனுக்கு உபேயம் என்றிருப்பேன்’
என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ஜீயரை உகந்தருளினார்.
————
9 – நம்பிள்ளை வைபவம் 2
நம்பிள்ளை காலத்திலே முதலியாண்டானுடைய திருப்பேரனார் கந்தாடை தோழப்பர் நம்பிள்ளையுடைய
வைபவத்தைக் கண்டால் அஸூயையாலே பொறுக்க மாட்டாமல் இருப்பதாய்,
தோழப்பர் ஒருநாள் கோயிலுக்குள்ளே பெருமாளை ஸேவித்துக் கொண்டெழுந்தருள,
நம்பிள்ளையும் முதலிகளும் பெருமாளை ஸேவிப்பதாகப் பெருந்திரளோடு கோயிலுக்குள்ளே எழுந்தருள,
தோழப்பர் அந்த ஸம்ருத்தியைக் கண்டு பொறுக்கமாட்டாமல் சீறிப் பெருமாள் ஸந்நிதியிலே
நம்பிள்ளையை அநேகமாகப் பரிபவிக்க, நம்பிள்ளையும் அத்தைக் கேட்டு நடுங்கிக் கொண்டு
பெருமாளை ஸேவித்துப் புறப்பட்டெழுந்தருள, அந்தச் செய்தியை ஜ்ஞாநாதிகையாயிருக்கிற தோழப்பர் தேவிகள்
கேட்டுப் பெருக்க வ்யாகுலப்பட்டுத் திருமாளிகைக்குள்ளே செய்கிற கைங்கர்யங்களையும் விட்டு, வெறுத்தருளியிருக்க,
அவ்வளவிலே தோழப்பரும் பெருமாளை ஸேவித்து மீண்டு திருமாளிகைக்கெழுந்தருள,
தேவிகள் முன்பு போலே எதிரே புறப்பட்டு ப்ரியத்துடனே தமக்கொரு கைங்கர்யங்களும் பண்ணாமையாலே
தோழப்பர் தம்முடைய தேவிகளைப் பார்த்து
‘உன்னை நாம் அங்கீகரித்தவன்று தொடங்கி இன்றளவாக ஆசார்ய ப்ரதிபத்தி பண்ணிக்கொண்டு போந்தாய்,
இன்று உதாஸீநரைப்போலே இராநின்றாய். இதுக்கடி ஏது?’ என்று கேட்க,
தேவிகள் தோழப்பரைப் பார்த்து, ‘வாரீர்! ஆழ்வார் தம்முடைய அவதாரம்போலே ஒரு அவதார விஶேஷமாய்,
பெருமாளுக்கு ப்ராணபூதராயிருந்துள்ள நம்பிள்ளையைப் பெருமாள் ஸந்நிதியிலே கூசாமல்
அநேகமாகப் பரிபவித்து இப்படிச் செய்தோம் என்கிற பயாநுதாபங்களுமற்று, உஜ்ஜீவிக்க வந்திருக்கிற
உம்மோடு எனக்கென்ன ஸம்பந்தமுண்டு? நீர் என்னை வெறுத்தாராகில் என்னுடைய மாதாபிதாக்கள்
உம்முடைய கையில் காட்டித்தந்த என்னுடைய ஶரீரத்தை உமக்கு வேண்டினத்தைச் செய்துகொள்ளும்.
என்னுடைய ஆத்மாவை எங்களாசார்யர் அடியிலே அங்கீகரித்தருளினவன்றே நான் உஜ்ஜீவித்தேன்,
ஆகையாலே ‘பத்மகோடிஶதேநாபி நக்ஷமாமி கதாசந’ என்று பாகவத நிந்தை பண்ணினவர்களை
ஒருகாலும் க்ஷமிப்பதில்லை என்று பெருமாள் தாமே அருளிச்செய்த திருமுகப் பாசுரத்தை அறிந்தும்,
அறியாதவராயிருக்கிற உம்மோடு எனக்கு ஸஹவாஸம் கூடாது; ஆகையாலே நான் என் இஷ்டத்திலே
இருந்து ஈடேறிப்போகிறேன்” என்ன,
தோழப்பரும் தேவிகள் சொல்லுகிற வார்த்தைகளைப் கேட்டும் சற்று போதிக்கும் திகைத்து எழுந்தருளியிருந்து,
பெரிய வித்வானாகையாலும், குலப்ரபாவத்தாலும் அஸூயையால் வந்த திருவுள்ளத்தில் வந்த கலக்கம் போய்,
தெளிந்து தேவைகளைப் பார்த்து ‘நீ சொன்னதெல்லாம் ஒக்கும்; நாம் தப்பும் செய்தோம்.
இனிமேல் செய்ய அடுக்குமது ஏது?’ என்ன,
தேவிகளும் ‘ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடாதே கொள்ளீர். கெடுத்தவிடத்தில் தேடீர்’ என்ன,
தோழப்பரும் ‘அதுக்குப் பொருள் ஏது?’ என்ன,
தேவிகள் ‘பரமக்ருபையாளரான நம்பிள்ளை திருவடிகளிலே சென்று ஸேவித்து, அவரை க்ஷாமணம்
பண்ணுவித்துக் கொண்டு அவர் க்ருபை பண்ணியருள ஈடேறுவீர்’ என்ன,
தோழப்பரும் ‘நான் இப்போது அவரை மஹத்தான பெருமாள் திருவோலக்கத்திலே பரிபவித்து இப்போது
அவர் ஸந்நிதியிலே போய் நிற்கவென்றால் எனக்கு லஜ்ஜாபயங்கள் வர்த்தியா நின்றது;
நீ கூட வந்து க்ஷமிப்பிக்க வேணும்’ என்ன,
தேவிகள், தோழப்பர் அருளிச்செய்கிறத்தைக் கேட்டு ‘அப்படியே செய்கிறேன்’ என்று கடுக எழுந்திருந்து
அவரையும் கூட்டிக்கொண்டு நம்பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகப் புறப்படுகிறவளவிலே
நம்பிள்ளை செய்தபடி – கோயிலுக்கு [கோயிலிலிருந்து] எழுந்தருளினபின்பு முதலிகளெல்லாரையும்
‘உங்களிடங்களிலே போங்கோள்’ என்றருளிச் செய்து, பகலெல்லாம் அமுதுசெய்தருளாமல்
தம்முடைய திருமாளிகையளவிலே எழுந்தருளியிருந்து, போது அஸ்த்தமித்தவாறே ஒத்த {ஒற்றைத்} திருப்பரிவட்டத்துடனே
முட்டாக்கிட்டுக்கொண்டு தாம் ஒருவருமே எழுந்தருளி, கந்தாடை தோழப்பர் திருமாளிகை வாசலிலே
கைப்புடையிலே வந்து கண்வளர்தருள,
தோழப்பரும் தேவிகளும் திருவிளக்கையும் ஏற்றிக்கொண்டு பிள்ளை திருமாளிகைக்கு எழுந்தருளுவதாகத்
திருமாளிகை வாசலிலே புறப்பட்டவளவிலே திருவிளக்கொளியிலே ஒரு வெள்ளை கைப்புடையிலே கிடக்கிற
அத்தைக் கண்டு தோழப்பர் ‘இங்கு ஆர் கிடக்கிறார்?’ என்று கேட்க,
பிள்ளை ‘அடியேன் திருக்கலிக்கன்றிதாஸன்’ என்ன,
அவ்வளவில் தோழப்பர் ‘இதுவென்? நீரிருந்தபடியென்?’ என்று திகைத்து,
பிள்ளையைப் பார்த்து, ‘மஹாதேஜஸ்வியான நம்மைப் பெருமாள் திருவோலக்கத்திலே பரிபவிக்கலாவதே
என்கிற கோபாதிஶயத்தாலே நம்முடைய வாசலிலே மூர்க்கம் செய்வதாக வந்து கிடக்கிறீரோ?’ என்ன,
பிள்ளை தோழப்பரைப் பார்த்து ‘அடியேன் அப்படிச் செய்யவில்லை’ என்ன,
‘ஆகில் இங்கு வந்தது கிடப்பானென்?’ என்ன,
பிள்ளை அருளிச்செய்தபடி – ‘பெரியபெருமாள் ஸந்நிதியிலே முதலியாண்டானுடைய திருப்பேரனாரான தேவரீர்
திருவுள்ளம் கலங்க வர்த்தித்த மஹாபாபியான அடியேனுக்கு தேவர் திருவாசலல்லது புகுவாசல் மாண்டு வந்து கிடக்கிறேன்’ என்ன,
இவரை அநுவர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற தோழப்பரும் பிள்ளை கண்வளர்ந்தருளுகிற தைந்யத்தையும் கண்டு,
அவருடைய நைச்யமான வார்த்தைகளையும் கேட்டு ‘இதோர் அதிகரமிருந்தபடி என்!’ என்று போரவித்தராய்,
பிள்ளையை வாரி எடுத்தணைத்துக் கட்டிக் கொண்டு ‘இத்தனை நாளும் நீர் சிறிது பேருக்கு ஆசார்யர் என்றிருந்தேன்;
இப்போது லோகத்துக்கெல்லாம் நீரே ஆசார்யராகைக்கு ப்ராப்தர் என்றறிந்தேன் என்று –
‘லோகாசார்யர்’ என்று தோழப்பர் உகந்து பிள்ளைக்கு திருநாமம் சாற்றி, தம்முடைய திருமாளிகைக்குள்ளே
கொண்டு புக்கு, தாமும் தேவிகளுமாகப் பிள்ளையை அநேகமாக அநுவர்த்தித்து அவர் திருவுள்ளத்தையும்
நன்றாக உகப்பித்துத் தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் பிள்ளை திருவடிகளிலே கேட்டுக் கொண்டு
தோழப்பரும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று இவ்வ்ருத்தாந்தம்
“துன்னு புகழ்கந்தாடை தோழப்பர் தம்முகப்பால்
என்ன உலகாரியனோ என்றுரைக்கப்
பின்னை உலகாரியனென்னும் பேர் நம்
பிள்ளைக்கோங்கி விலகாமல் நின்றதென்றும் மேல்” என்று உபதேசரத்தினமாலையிலே நம்முடைய ஜீயர்
அருளிச் செய்தருளினார்.
‘நெஞ்சத்திருந்து நிரந்தரமாக நிரயத் துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை யறுத்தேன் மாய வாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் சீ மாதவனடிக் கன்பு செய்யும்
தஞ்சத்தொருவன் சரணாம் புயமென் தலைக்கணிந்தே” ,
“நமாமி தௌ மாதவ ஶிஷ்யபாதௌ யத்ஸந்நிதிம் ஸுக்திமயீம் ப்ரவிஷ்டா: |
தத்ரைவ நித்யம் ஸ்திதிமாத்ரியந்தே வைகுண்ட ஸம்ஸார விரக்தசித்தா: ||
ஶ்ருத்வாபி வார்த்தாஞ்ச யதீயகோஷ்ட்யாம் கோஷ்ட்யந்தராணாம் ப்ரதமாபவந்தி|
ஶ்ரீமத் கலி த்வம்ஸந்தாஸநாம்நே தஸ்மை நமஸ் ஸூக்தி மஹார்ணவாய” என்றிறே நம்பிள்ளையுடைய வைபவம் இருப்பது.
இப்படி லோகாசார்யர் என்று திருநாமத்தையுடையரான நம்பிள்ளைக்கந்தரங்க ஶிஷ்யரான
வடக்குத்திருவீதிப்பிள்ளை தாமும் தேவிகளும் விரக்தராய்க் கொண்டு எழுந்தருளியிருந்து
நம்பிள்ளைக்கு ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக்கொண்டு
எழுந்தருளியிருக்கிற காலத்திலே ஒரு நாள் நம்பிள்ளை வடக்குத்திருவீதிப்பிள்ளை திருமாளிகைக்கெழுந்தருள,
அங்குள்ளாரெல்லாரும் பிள்ளை திருவடிகளிலே வந்து தண்டனிட, அப்போது வடக்குத்திருவீதிப்பிள்ளை தேவிகள்
ஈரப்புடவையுடனே தண்டனிட்டு நிற்க, நம்பிள்ளை அருகு நிற்கிற ஸ்த்ரீஜனங்களைப் பார்த்து
‘இந்தப் பெண் ஈரப்புடவையுடன் நிற்பானென்?’ என்ன, அவர்கள் சொன்னபடி –
‘நாலுநாளும் தூரஸ்தையாயிருந்து இப்போது தீர்த்தமாடிவந்து தேவர் திருவடிகளிலே ஸேவிக்கிறாள்’ என்ன,
அவ்வளவில் நம்பிள்ளை மிகவும் திருவுள்ளம் உகந்து அவளை ‘பெண்ணே! இங்கே வாரும்’ என்றழைத்துத்
தம்முடைய திருக்கையாலே அவளுடைய திருவுதரத்தை ஸ்பர்ஶித்து
‘என்னைப்போலே ஒரு பிள்ளையைப் பெறுவாயாக’ என்று திருவுள்ளம் பற்றியருளினார்.
ஆகையாலே அத்தைக் கண்டு அதுக்குப் பின்பு வடக்குத் திருவீதிப் பிள்ளை தமக்குக் குமாரர் உண்டானால்
ஆசார்யன் திருவுள்ளத்துக்கு உகப்பாம் என்றறிந்து ததுநுகுணமாக வர்த்திக்க,
தத் ஸம்வத்ஸரத்திலே அவருடைய தேவிகள் திருவயிறு வாய்த்து குமாரர் திருவவதரிக்க,
அந்தக் குமாரரை லோகாசார்யர் என்று ஆசார்யரான நம்பிள்ளையுடைய திருநாமம் சாற்றியருளினார்.
இப்படி நம்பிள்ளையுடைய அருளாலே திருவவதரித்து வடக்குத்திருவீதிப்பிள்ளை குமாரரான
பிள்ளை லோகாசார்யரும் தம்முடைய பரமக்ருபையாலே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்கவேணும்
என்று திருவுள்ளம் பற்றியருள, தத்வத்ரய, ரஹஸ்யத்ரய, ஶ்ரீவசநபூஷணம் முதலாக அநேக ப்ரபந்தங்கள் இட்டருளினார்.
வடக்குத்திருவீதிப்பிள்ளைக்கு பின்னையும் ஒரு குமாரர் திருவவதரிக்க, அவரை
அழகியமணவாளப்பெருமாள் நாயனார் என்று திருநாமம் சாற்றியருளினார்.
அவர் ஆசார்யஹ்ருதயம் இட்டருளினார்.
ஆக இப்படி அவதார விஶேஷமாயிருந்துள்ள
லோகாசார்யருடைய திருவடிகளிலே தம்முடைய திருத்தகப்பனார்
திகழக்கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாதரண்ணரையும் அஞ்சு திருநக்ஷத்ரத்திலே ஆஶ்ரயிப்பித்தார்கள்
அண்ணருடைய பெரியோர்கள் என்று அஸ்மதாசார்யோக்தம்.
————–
10 – ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர்களின் நிஷ்டை
உடையவர் எழுந்தருளியிருக்கிற காலத்திலே அருளாளப்பெருமாள் எம்பெருமானார் ஒருக்கால் திருமேனி
பாங்கின்றிக்கே கண்வளருகிறபோது கூரத்தாழ்வான் அவரை அப்போதைக்கப்போது எழுந்தருளி ஆராயாமல்,
நாலு நாள் விளம்பித்து எழுந்தருளி, ‘தேவர் திருமேனியில் பாங்கில்லாமை செய்தபடி எப்படி’ என்று கேட்டருள,
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஆழ்வானைப் பார்த்து, ‘தேவரும் அடியேனும் இத்தனை நாளும் இருந்த
ஸ்நேஹத்துக்கு அடியேன் ஒரு நாள் தலை நொந்திருந்தேன் என்று கேட்டால் அப்போதே எழுந்தருளி
க்ருபை பண்ணியருளாமல், ஆழ்வான்! தேவரீர் இவ்வாத்மாவை உபேக்ஷித்திருந்த நெஞ்சாறல்,
அடியேன் போய் ஆளவந்தார் திருவடிகளிலே ஸேவித்தவன்று தீரும்’ என்றருளிச் செய்தார்.
இந்த ப்ரஸங்கம் *பொன்னுலகாளீரோ என்கிற திருவாய்மொழி ஈட்டில் ஸுஸ்பஷ்டம்.
வடுகநம்பி உடையவருக்குப்பின்பு சிறிது நாள் எழுந்தருளியிருந்து பின்பு திருநாட்டுக்குகெழுந்தருளினவாறே,
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டருடனே ‘வடுக நம்பி திருநாட்டுக்கெழுந்தருளினார்’ என்று விண்ணப்பம் செய்ய,
அவரும் ‘வடுக நம்பியை அப்படிச் சொல்லலாகாது காணும்’ என்ன,
‘ஏன், வடுக நம்பியை திருநாட்டுக்கெழுந்தருளினார் என்று சொல்லலாகாதோ?’ என்ன,
‘ஆகாது காணும், சரகுதின்னிகளான உபாஸகரோடு ப்ரபந்நரோடு உபாசியரோடு {?} வாசியற,
எல்லார்க்கும் போகிற பொதுவான தேஶங்களன்று காணும் அவர் எழுந்தருளுவது’ என்ன,
‘ஆனால் திருநாடொழிய அவருக்கு ப்ராப்யபூமி வேறே உண்டோ?’ என்ன,
‘உண்டுகாணும், வடுகநம்பி எம்பெருமானார் திருவடிக்கெழுந்தருளினார் என்று சொல்லீர்’ என்று
அருளிச் செய்தார் பட்டர் என்று அஸ்மதாசார்யோக்தம்.
‘அத்ர பரத்ரசாபி நித்யம் யதீயசரணௌ ஶரணம் மதீயம்” என்று ஆளவந்தார் ஸ்தோத்தரத்திலே அருளிச்செய்தார்.
‘விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலைத்துதித்து மறைநாலும் வளர்த்தனனே” என்று
நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனார் அருளிச் செய்தார்.
ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும், கூரத்தாழ்வான் குமாரரான பட்டரும்,
பரமாசார்யரான ஆளவந்தாரும், உடையவரும் கூரத்தாழ்வான் முதலான இவர்களுடைய திவ்ய வைபவத்தை
எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்கும்படி உபசரித்த ஸர்வஜ்ஞராயிருக்கும் பிள்ளை அமுதனாரும் இப்படி ஏக கண்டமாக
அருளிச் செய்கையாலே சரமாதிகாரிகளுக்கு நித்யவிபூதியிலே போனாலும்
“பொதுநின்ற பொன்னங்கழ”லாய்,
“தேவாநாம் தாநவாநாஞ்ச பர்வதமாயிருந்துள்ள ஈஶ்வரனைக்காட்டிலும், ஆத்மாவுக்கு அஸாதரண ஶேஷியாய்,
லீலா விபூதியிலே தொடங்கி, ‘சரணாகதி தந்த தன்னிறைவன்’ என்கிறபடியே அ ஸாதரண ஶேஷியாய்,
சரம பர்வமாயிருந்துள்ள ஆசார்யன் திருவடிகளே பரம ப்ராப்யமாயிருக்குமென்னும் இவ்வர்த்தம் உபபந்நம்.
ஆகையாலேயிறே ‘எதிராசா என்றுன்னடி சேர்வன் யான்’,
‘எதிராசா எந்நாளும் உன் தனக்கே ஆட்கொ ள்உகந்து’ என்று நம்முடைய ஜீயர் இப்படி அருளிச் செய்தருளிற்று.
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அமுது செய்தருளாநிற்க, கிடாம்பியாச்சான் அவருக்குத் தண்ணீரமுது திருப்பவளத்திலே
பரிமாறுகிறவர் செவ்வையிலே நின்று பறிமாறாமையாலே அந்த ஶ்ரீவைஷ்ணவருடைய திருக்கழுத்து சற்று சாய,
அத்தை உடையவர் கண்டருளி, ஆச்சானைத் தம்முடைய திருக்கையாலே அறைந்து,
‘ஶ்ரீவைஷ்ணவருக்குப் பாங்காகப் பரிமாறிற்றில்லையே!’ என்று கோபிக்க,
ஆச்சானும் உடையவர் திருவடிகளிலே தண்டனிட்டு,
“பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட மணிமாய”னன்றோ தேவரீர் – என்று
விண்ணப்பம் செய்து ஆச்சானும் மிகவும் க்ருதார்த்தரானார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
ஒருநாள் கூரத்தாழ்வான் விஷயமாக உடையவர் சீறி யருள, நடுவு நின்றவர்கள் ஆழ்வானைப் பார்த்து
‘உம்மை உடையவர் நிக்ரஹித்தாரே, இப்போது நீர் என்ன நினைக்கிறீர்?” என்ன,
ஆழ்வான் அருளிச்செய்தபடி – “இவ்வாத்மா பாஷ்யகாரர்க்கே ஶேஷமான பின்பு அவருடைய விநியோக
ப்ரகாரங்கொண்டு அடியேனுக்குக் கார்யமென்?’ என்றார் என்னும் இவ் வ்ருத்தாந்தம்
மாணிக்யமாலையிலே ஆச்சான் பிள்ளை அருளிச்செய்தார்.
பிள்ளை யுறங்காவில்லி தாஸர் முதலியாண்டான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஶிஷ்யலக்ஷணம் இருக்கும்படி என்?’ என்று விண்ணப்பம் செய்ய, ஆண்டான் அருளிச் செய்தபடி –
ஆசார்ய விஷயத்தில் ஶிஷ்யன் பார்யாஸமனுமாய், ஶரீரஸமனுமாய், தர்மஸமனுமாய் இருக்கக் கடவன்.
அதாவது சொன்னத்தைச் செய்கையும், நினைத்ததைச் செய்கையும், நினைவாயிருக்கையும் என்றருளிச்செய்தார்.
அநந்தரம் பிள்ளை கூரத்தாழ்வான் ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு ‘ஆசார்ய லக்ஷணம் எங்ஙனே இருக்கும்?’
என்று விண்ணப்பம் செய்ய, ஆழ்வான் அருளிச்செய்தபடி –
ஶிஷ்யன் விஷயத்தில் ஆசார்யன் பர்த்ருஸமனுமாய், ஶரீரிஸமனுமாய், தர்மிஸமனுமாய் இருக்கக்கடவன்.
அதாவது ஏவிக் கொள்ளுகையும், எடுத்து இடுவிக்கையும்; அதாவது அசேதநத்தை நினைத்தபடியே
விநியோகங்கொள்ளுமாப் போலே விநியோகங்கொள்ளுகையும், எடுத்துக்கொள்ளுகையும் என்றருளிச்செய்தார்.
இவ்வ்ருத்தாந்தம் ஶ்ரீவார்த்தாமாலையிலே உண்டு.
ஒருநாள் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் கூடி எழுந்தருளியிருந்து சில அர்த்த விஶேஷங்களை அநுஸந்தியாநிற்க,
‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ? க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?” என்று
இங்ஙனே ப்ரஸங்கமாக, முதலியாண்டான் ‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
கூரத்தாழ்வான் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷம்’ என்ன,
ஆண்டான் “குற்றமின்றிக்குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்” என்று பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வாநுவர்த்தி ப்ரஸந்நாசார்யநாலே ஆகவேணும் என்ன,
ஆழ்வான் ‘அங்ஙனன்று; “பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர்நம்பி” என்று ஶ்ரீமதுரகவியாழ்வார் நமக்கெல்லார்க்கும்
ஸ்வாநுவர்த்தி கூடாமையாலே க்ருபாமாத்ரத்தாலே மோக்ஷமாகவேணும்’ என்றருளிச்செய்தார்.
ஆண்டானும் ‘அப்படியேயாம்’ என்று மிகவும் ப்ரீதரானார் என்று அஸ்மாதாசார்யோக்தம்.
க்ருமிகண்டன் வ்யாஜத்தாலே உடையவர் வெள்ளை சாற்றி மேல்நாட்டுக்கெழுந்தருளின போது
பெருமாள் பரிகரத்தார் தங்களை நெருக்கிக்கொண்டு போருகையாலே விஷமத்துக்காக
‘உடையவராலேயன்றோ இத்தேஶத்துக்குக் கலக்கங்கள் விளைந்தது, ஆகையாலே உடையவர் திருவடிகளில்
ஸம்பந்தமுள்ளவர்கள் ஒருவரும் கோயிலுக்குள் புகுந்து பெருமாளை ஸேவிக்கவொண்ணாது’ என்று
திவ்யாஜ்ஞை இட்டுவைத்தார்கள்.
கூரத்தாழ்வான் தர்ஶநத்தை நிர்வஹிக்கைக்காக க்ருமிகண்டனிடத்திலே புக்கு அவனாலே திருநயநங்களுக்கு
உபத்ரவம் வந்தது மீண்டு கோயிலுக்கெழுந்தருளி அங்குத்தைச் செய்தியை அறியாமல் பெருமாளை
ஸேவிக்க எழுந்தருளினவளவிலே, திருவாசல் காக்கிறவர்களிலே ஒருவன் ஆழ்வானை ‘உள்ளே புகுராதே’ என்று தகைய,
ஒருவன் அவரைத் தகையாதே ‘கோயிலுக்குள்ளே புகுரும்’ என்ன,
அவ்வளவில் ஆழ்வான் திகைத்து நின்று ‘இங்குற்றை விசேஷம் ஏது?’ என்று திருவாசல் காக்குமவர்களைக் கேட்க,
அவர்களும் ‘எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுள்ளவர்களொருவரையும் பெருமாளை ஸேவிக்க விடவேண்டாம்
என்று திவ்யாஜ்ஞையிட்டுத் தகைந்துகிடக்கிறது’ என்ன,
‘ஆனால் நீங்கள் என்னைப் புகுரச் சொல்லுவானென்?’ என்ன,
அவர்கள் ‘ஆழ்வானே! நீர் எல்லாரையும் போலன்றிக்கே நல்ல குணங்களை உடையவராகுயாலே புகுரச் சொன்னோம்’ என்ன,
ஆழ்வான் அத்தைக் கேட்டு ஜலசந்திரனைப்போலே நடுங்கி, சிவிட்கென்று நாலடி மீண்டு,
‘ஐயோ! ஆத்ம குணங்கள் உண்டானால் எல்லார்க்கும் ஆசார்ய ஸம்பந்தத்துக்கு ஹேதுவாம் என்று ஶாஸ்த்ரம் சொல்லிற்று;
எனக்குண்டான ஆத்ம குணங்கள் எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தத்தை அறுத்து கொள்ளுகைக்கு ஹேதுவாய்விட்டதோ’
என்று வ்யாகுலப்பட்டுத் தம்மை மிகவும் நொந்துகொண்டு
‘எனக்குப் பேற்றுக்கு எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமே அமையும்;
தத் ஸம்பந்தத்தை யொழியப் பெருமாளை ஸேவிக்க வேண்டுவதில்லை’ என்று மீண்டு
ஆழ்வான் திருமாளிகைக்கு எழுந்தருளினார் என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தது அவதரித்தருளினான் என்று ஆளவந்தார் அருளிச் செய்தருளுவர்
என்னுமது திருவிருத்த வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.
அத்ரி ஜமதக்நி பங்க்திரத வஸுநந்த ஸுநுவானவனுடைய யுக வர்ண க்ரமாவதாரமோ என்று
இவ்வாழ்வாரை பகவதவதாரமாக ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்தார்.
—————-
11- ஸ்ரீஎம்பார் மற்றும் கொங்கில் பெரியபிராட்டியார் நிஷ்டை
வட்டமணி குலத்தில் எம்பார் மஹாவித்வானாய், மஹாவிரக்தராய், மிகவும் ஆசாரயுக்தராய் இருக்கச் செய்தே
ஶைவாகமத்திலே புகுந்து ஶிவபக்தியிலே மண்டிவிழுந்து, அலந்தகொட்டையும் பூண்டு காளஹஸ்தியில்
ஒரு ருத்ராலயத்துக்கு சடங்கியாய், ஸர்வத்துக்கும் கர்த்தாவாய், குச்சியும் தாளும் எப்போதும் கையிலே
பிடித்துக் கொண்டு இரண்டாம் முத்தமிழ் விரகனான ஸம்பந்தன் என்னும்படியே பேயன் பாட்டுப் பாடி,
காளஹஸ்தியிலே வர்த்திக்கிற காலத்திலே
திருமலையில் நின்றும் பெரியதிருமலை நம்பி ஒருகார்யத்திலே எழுந்தருளி, காளஹஸ்தி ஆஸந்நமாக,
ஒரு தோப்பிலே விட்டு எழுந்தருளியிருக்க, அவ்வளவிலே எம்பாரும் ருத்ரனுக்குப் பூப்பறிப்பதாகப்
பெரியதொரு பூக்கொடலையும் கழுத்திலே கட்டிக்கொண்டு ருத்ர ப்ரபாவமான பாட்டுக்களையும் கதறிக்கொண்டு,
திருமலைநம்பி எழுந்தருளியிருக்கிற தோப்பிலே நிறைய பூத்து நிற்பதொரு பாதிரியிலேயேறிப் பூப்பறியாநிற்க,
திருமலைநம்பி எம்பாருடைய ஶிவபக்தியில் பூத்த{ஊ}த்தைக்கண்டு
‘ஐயோ! இவ்வாத்மா அதிக்ஷுத்ரமான அப்ராப்தவிஷயத்தில் ப்ராவண்யங்களை ஸவாஸநமாக விட்டு
ஆத்மாவுக்கு வகுத்த ஶேஷியான ஶ்ரிய:பதியைப் பற்றினானகில் பெரிய வித்வானாகையாலும்,
அதிவிரக்தனாகையாலும் லோகத்துக்கு மிகவும் உபகாரகனாம்’ என்று திருவுள்ளம் பற்றித் தாமும் முதலிகளும்
எம்பார் பூப்பறிக்கிற பாதிரிக்கு ஆஸந்நமாக எழுந்தருளியிருந்து ஶ்ரிய:பதி நாராயணனே பரதத்வம் என்று
சொல்லுகிற வேதாந்த வாக்யங்களை முதலிகளும் தாமும் ஒருவர்க்கொருவர் அநுபாஷிக்க,
எம்பார் ஆலயத்திலுண்டான கார்யங்களையும் பூப்பறிக்கிறத்தையும் மறந்து இவர்கள் அருளிச் செய்கிற
திவ்யஸுக்திகளைச் செவிமடுத்துக்கேட்டு ‘இதொன்று இருந்தபடி என்!’ என்று போரவித்தராய்,
நெடும்போது கேட்டுக்கொண்டு திகைத்துநிற்க,
நம்பியும் எம்பாருடைய ஆபிமுக்யத்தைக்கண்டு ‘இன்னமும் ஆழ்வாருடைய திவ்யஸூக்தியிலே
ஒன்றைச் சொல்லித் திருத்தக்கடவோம்’ என்று திருவுள்ளம்பற்றி,
“தேவரும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவனெம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே” என்று பெருக்க நொந்து அருளிச்செய்ய,
எம்பாரும் தமிழுக்கு மஹாநிபுணராகையாலே இத்தையும் கேட்டு, அப்போதே தத்த்வஸ்திதியையும் நன்றாக அறிந்து
‘தகாது, தகாது’ என்று பாதிரியின்மேலே நின்று பூக்கொடலையும் சுழற்றி எறிந்து அரைகுலைய தலைகுலைய இறங்கி
‘இத்தனை காலமும் பெருங்கையாற் குடமெடுத்துப் பேய்ச்சுரைக்கு நீர் சொரிந்து கெட்டேன் கெட்டேன்’ என்று
கூப்பிட்டு நம்பி திருவடிகளிலே விழ,
நம்பியும் தான் நினைத்த காரியம் அப்போதே கைகூடுகையாலே மிகவும் திருவுள்ளமுகந்து எம்பாரையும்
‘தீர்த்தமாடிவாரும்’ என்ன, அவரும் எலந்தைக் கொட்டை வடங்களையும் அறுத்தெறிந்து பாஷண்ட வேஷத்தையும் கழித்து,
தீர்த்தமாடி ஈரப்புடவையோடே தம்முடைய ஆர்த்தியெல்லாம் தோன்ற வந்து நிற்க,
நம்பியும் எம்பாரளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து அப்போதே அவர்க்கு பஞ்ச ஸம்ஸ்காரமும் பண்ணி,
த்யாஜ்யோபாதேயங்களையும் தெளிய அறிவித்து, ‘புறம்புண்டான பற்றுக்களையெல்லாத்தையும் ஸவாஸநமாக விட்டு,
ஶ்ரிய:பதியைப்பற்றி நம்முடைய தர்ஶநத்திலே ஊற்றமுண்டாய் வாழும்’ என்று அருளிச்செய்ய,
அப்படியே எம்பாரும் க்ருதார்த்தராய், நம்பியை ஸேவித்துக்கொண்டு திருமலைக்கெழுந்தருளத்தேட,
அவ்வளவில் காளஹஸ்த்தியில் பாஷண்டிகளெல்லாரும் கூடிவந்து
‘எங்களுக்கு ஸர்வத்துக்கும் கர்த்தாவான நீர் போகவொண்ணாது’ என்று எம்பாரைத்தகைய,
அவரும் ‘உங்கள் குச்சியும் தாளும் இதோ பிடியுங்கோள்’ என்று தூரத்திலே நின்று அவர்கள் மேலே எறிந்து
‘காளஹஸ்த்தியாகிற சுடுகாட்டை நாமினிப் புரிந்து பாரோம்’ என்று அருளிச்செய்து,
பிராட்டி இலங்கை நின்றும் புறப்பட்டாப்போலே அங்குள்ள பற்றுக்களை அடைய ஸவாஸநமாகவிட்டுப்
பெரிய ப்ரீதியோடே முக்தர் பரமபதத்தைக் குறித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஹார்த்தன் வழி நடத்தப் போமாப்போலே
திருமலை நம்பியை ஸேவித்துக்கொண்டு கலியுக வைகுண்டமான திருமலைக்கெழுந்தருளி,
நம்பிக்கு மிகவும் அந்தரங்கராய் ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக்கொண்டு வாழுகிற காலத்திலே,
உடையவர் திருமலைக்கெழுந்தருளி திருமலைநம்பி ஶ்ரீபாதத்திலே ஶ்ரீராமாயணத்துக்கு ஸம்ப்ரதாயார்த்தம் கேட்டு
மீண்டும் கோயிலுக்கு எழுந்தருளுகிறபோது நம்பியும் உடையவர் அவதார விஶேஷமென்றறிந்து மிகவும் ஆதரித்து
ஆளவந்தாரைப் போலே கண்டு தம்முடைய புத்ராதிகளையும் உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்து
‘தேவரீருக்கு ஏதேனுமொன்று ஸமர்ப்பிக்கவேணும்’ என்ன,
உடையவரும் எம்பாருடைய ஆசார்ய ப்ரேமத்தைக் கண்டு திருவுள்ளமுகந்து ‘எம்பாரைத் தந்தருள வேணும்’ என்ன,
நம்பியும் எம்பாரை உடையவருக்கு உதகதாரா பூர்வமாகக் கொடுத்தார்.
அதுக்குப்பின்பு எம்பார் உடையவரை ஸேவித்துக்கொண்டு திருவரங்கத்துக்கு நாலஞ்சு பயணம் எழுந்தருள,
நம்பியைப் பிரிந்தது எம்பார்க்குத் திருமேனி ஶோஷிக்க, உடையவர் எம்பாரைப் பார்த்து ‘உமக்கிப்படி ஆவானென்’ என்ன,
‘அங்குத்தையேறப்போம்’ என்ன, எம்பாரும் முன்பு நாலஞ்சு பயணமும் ஒரு பயணமாக மீண்டு திருமலைக்கு எழுந்தருளி
நம்பி திருவடிகளிலே தண்டனிட்டுநிற்க, நம்பியும் எம்பாரைப் பார்த்து
‘உதகபூர்வமாக உம்மை உடையவருக்குக் கொடுத்துவிட்டோமே; அவரை விட்டு நீர் இங்கு வருவானென்?’ என்ன,
எம்பாரும் தம்முடைய திருமேனி ஸ்வபாவத்தை விண்ணப்பம் செய்ய,
நம்பியும் ‘விற்றபசுவுக்குப் புல்லிடுவாருண்டோ? நீர் உடையவர்க்குத்தானே அடிமை செய்து கொண்டிரும்’ என்று
ஒருபோதும் ப்ரஸாதமிடாமல் தள்ளிவிட்டார். எம்பாரும் அங்கு ஆசையற்று நமக்கினி உடையவர் திருவடிகளே தஞ்சம்’ என்று
அறுதியிட்டுக் கோயிலுக்கெழுந்தருளி, உடையவரை ஸேவித்துக்கொண்டு மிகவும் ப்ரீதராய் வாழுகிற காலத்திலே,
ஒருநாள் உடையவரும், முதலிகளும் பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்க, முதலிகளெல்லாரும்
எம்பாருடைய ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைச் சொல்லித் தலைத்தூக்கிக் கொண்டாட,
எம்பார் தாமும் ‘அது ஒக்கும், ஒக்கும்’ என்று அவர்களைக் காட்டில் மிகவும் தம்மை ஶ்லாகித்துக் கொள்ள,
உடையவரும் அத்தைக்கேட்டு எம்பாரைப் பார்த்து, ‘எல்லாரும் உம்மை ஶ்லாகித்தால் நீர் நைச்யாநுஸந்தாநம்
பண்ண வேண்டியிராநிற்க, அது செய்யாதே நீர்தாமே உம்மை ஶ்லாகித்துக் கொள்ளாநின்றீர்;
இப்படி இருப்பது ஒன்றுண்டோ?’ என்ன,
எம்பாரும் உடையவரைப் பார்த்து, ‘ஐயா! முதலிகள் அடியேனைக் கொண்டாடில் காளஹஸ்த்தியிலே
கையும் குடமும் கழுத்தும் கப்படமுமாய்க் கொண்டு எளிவரவுபட்டுநின்ற அந்நிலையைக் கொண்டாடுமத்தனையன்றோ
அடியேனுக்குள்ளது; இப்படியானபின்பு “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து” என்கிறபடியே
தேவரீர் இவ்வாத்மாவை எடுக்கைக்காக ஒரு திருவவதாரம் பண்ணி செய்தருளின க்ருஷிபரம்பரைகளை
அநுஸந்தித்து நித்யஸம்ஸாரிகளிலும் கடைகெட்டுக்கிடந்த அடியேனை காலதத்வமுள்ளதனையும்
‘எனக்கினி யார் நிகர் நீணிலத்தே”,
“நெஞ்சமே நல்லை நல்லை” என்கிறபடியே அடியேனை ஶ்லாகித்துக்கொள்ள ப்ராப்தியுண்டு;
ஆகையாலே அடியோங்களெல்லாரும் தேவரீராலே இவ்வாத்மாவுக்குண்டான நன்மைகளை ஶ்லாகித்தது
தேவரீரைக் கொண்டாடித்தாமித்தனையன்றோ?’ என்று விண்ணப்பம் செய்ய,
உடையவரும் ‘ஶ்ரீகோவிந்தப்பெருமாளே! நல்லீர்! நல்லீர்!’ என்று எம்பாரை மிகவும் உகந்தருளினார் என்று
பெரியோர்கள் அருளிச் செய்தருளுவார்கள்.
ஒரு ஆசார்யர் தம்முடைய ஶிஷ்யனுக்கு த்யாஜ்யோபாதேயங்களைத் தெளிய உபதேஶிக்க,
அவனும் அதுக்கு அநுரூபமாக நடக்க அறியாமையாலே அந்த ஆசார்யரும் “ஸ்காலித்யே ஶாஸிதாரம்”
என்கிறபடியே அவனை நியமித்துக் கொண்டு போர, அந்த ஶிஷ்யன் ஸ்வாசார்ய நியமநம் தனக்கு ஹிதம் என்று
அறியாமல் வெருவி இருந்த ஜ்ஞாநாதிகருடனே ‘ஐயோ! ஶிஷ்யன் என்ன, நியமியா நின்றார்கள்’ என்று வெறுக்க,
அந்த ஜ்ஞாநாதிகரும் ‘ஐயோ! ஶாஸநீயனான ஶிஷ்யனை யன்றோ நியமிப்பது? உம்மை நியமித்தாரோ’ என்று
வெறுத்தார் என்று அஸ்மதாசார்யோக்தம்.
இத்தால் விதேயனான ஶிஷ்யனையே ஆசார்யன் நியமிக்கவேணும் என்னுமதும்,
ஸதாசார்ய நியமநம் ஸச்சிஷ்யனுக்கு ப்ராப்யாந்தர்கதமாயிருக்கும் என்னுமதும் சொல்லிற்று.
நஞ்சீயர் திருவடிகளிலே ஆஶ்ரயித்து தேஶாந்தரத்திலே இருப்பானொரு ஶ்ரீவைஷ்ணவன் வந்து ஜீயரை ஸேவித்து
மீள எழுந்தருளிகிறபோது, ஜீயருக்கு அந்தரங்கராய்த் திருவடிகளிலே நித்யஸேவை பண்ணிக்கொண்டிருப்பாரொரு
ஶ்ரீவைஷ்ணவர் ஊருக்கு எழுந்தருளுகிற ஶ்ரீவைஷ்ணவரைப்பார்த்து
‘ஜயோ! உமக்கு ஜீயர் திருவடிகளைவிட்டுப் பிரிந்து எழுந்தருள வேண்டுகிறதே! என்று க்லேஶிக்க,
அவரும் ‘அடியேன் எங்கே இருந்தாலும் ஜீயர் அபிமாநமுண்டே’ என்று தேறி வார்த்தை சொல்ல,
இந்த ப்ரஸங்கங்களை ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கையாயிருப்பாளொரு அம்மையார் கேட்டு,
ஆசார்யனைப்பிரிந்து அதிலே நெஞ்சு இழியாமல் போகிறவரைப் பார்த்து
‘என் சொன்னாய் பிள்ளாய்! – ஏனத்துருவாய் உலகிடந்த ஊழியான்பாதம் – நாடோறும் –
மருவாதார்க்கு உண்டாமோ வான்’ என்று அருளிச்செய்தார் என்று அஸ்மதாரசார்யோக்தம்.
இத்தால் ஸதாசார்யன் கண்வட்டத்தை விட்டால் இவனுக்கு த்யாஜ்யோபாதேயங்கள் தெரியாது.
ஆகையால் அஜ்ஞாநமே மேலிட்டு “நண்ணாரவர்கள் திருநாடு” என்கிறபடியே திருநாடு ஸித்திக்கை அரிது என்று கருத்து.
கொங்குநாடு க்ஷாமமானவாறே ஒரு ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானும் கோயிலிலே வந்து இருந்தான்.
அக்காலத்திலே எம்பெருமானார் ஏழு க்ருஹம் மாதுகரம் பண்ணி அமுதுசெய்தருளுவர்.
திருவீதியிலே எழுந்தருளும்போது அகளங்கநாட்டாழ்வானடைய வட்டத்தில் முதலிகளெல்லாரும் தண்டனிடுவர்கள்.
அந்த ப்ராஹ்மணன் ஸ்த்ரீயும் தானுமாக ஒரு மச்சிலே இருக்கையாயிருக்கும்.
ஒரு நாள் உடையவர் மாதுகரத்துக்கு அந்த க்ருஹத்துக்கு எழுந்தருளினவாறே அந்தப் பெண் மச்சுநின்றும்
இழிந்து இடைகழியிலே நின்று ‘ராஜாக்கள் உம்மை தண்டனிடாநின்றார்கள்; நீர் மாதுகரம் பண்ணா நின்றீர்;
இதுக்குக் காரணமேது?’ என்று உடையவரைக் கேட்க,
‘நாம் அவர்களுக்கு நல்வார்த்தை சொன்னோம்; ஆகையாலே தண்டனிடுகிறார்கள்’ என்று அருளிச்செய்ய,
‘அந்நல்வார்த்தை எனக்கு அருளிச்செய்ய வேணும்’ என்று தண்டனிட்டாள்.
உடையவரும் அவளுக்கு ஹிதத்தை ப்ரஸாதித்தருளினார். பின்பு அவர்களுடைய தேஶம் ஸுபிக்ஷமாய்
அவர்கள் அங்கேறப்போகவிருக்கிறவளவிலே உடையவரை ஸேவித்துப்போகப்பெற்றிலேன் என்று
அந்தப் பெண் வ்யாகுலப்பட்டுக் கொண்டு இருக்கிறவளவிலே, மாதுகரத்துக்கு அங்கே எழுந்தருளினார்.
அந்தப் பெண் ‘மீளவும் எங்கள் நாடேறப்போகா நின்றோம்; முன்பு அருளிச்செய்த நல்வார்த்தை அடியேன்
நெஞ்சிலே படும்படி அருளிச்செய்து எழுந்தருளவேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க,
உடையவரும் அவ்வாத்மாவை மிகவும் க்ருபை பண்ணியருளி, ஹிதத்தை நெஞ்சிலே படும்படி ப்ரஸாதித்தருளி
எழுந்தருளப்புக்கவாறே, ‘இன்னமும் அடியேனுக்கு ஆத்மரக்ஷகமாக ஏதேனுமொன்று ப்ராஸாதித்தருள வேணும்’
என்று அவள் விண்ணப்பம் செய்ய, உடையவர் அப்போது சாற்றி எழுந்தருளியிருக்கிற திருவடி நிலைகளைப்
பெரியபிராட்டியார் என்கிற அந்தப் பெண்ணுக்கு ப்ராஸாதித்து எழுந்தருளினார்.
அவளும் அன்று தொடங்கி உடையவர் திருவடி நிலைகளைத் திருவாராதநம் பண்ணிக்கொண்டு போந்நாள் என்னும்,
இவ்வ்ருத்தாந்தம் வார்த்தா மாலையிலே ப்ரஸித்தம்.
இத்தால் சொல்லிற்று ஏதென்னில், எம்பெருமானையுங்கூட உபேக்ஷிக்கிற ஸம்ஸாரத்திலே
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமானது ஏதேனுமொன்று தஞ்சம் என்று விஶ்வஸித்திருக்கை அரிது.
ஆசார்ய விஶ்வாஸமுண்டானவர்கள் கொங்கில் பெரிய பிராட்டியாரைப்போலே இருக்கவேணும் என்று சொல்லிற்று.
இவ்விடத்திலே பொன்னாச்சியார், தும்பியூர்க் கொண்டி, ஏகலவ்யன், விக்ரமாதித்யன் வ்ருத்தாந்தங்களை ஸ்மரிப்பது.
———–
12 – ஆசார்யன் பகவத் அவதாரம்
ஸாக்ஷாத்காரமென்றும், விபூதிஸாக்ஷாத்காரமென்றும், உபயவிபூதிஸாக்ஷாத்காரமென்றும்,
ப்ரத்யக்ஷஸாக்ஷாத்காரமென்றும் நாலுபடியாயிருக்கும்.
ஸாக்ஷாத்காரமாவது – ஒரு ஜ்ஞாநவிஶேஷம்.
விபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் விரோதியை அறிகை.
உபயவிபூதி ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் ப்ராப்யத்தை அறிகை.
ப்ரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாவது – இந்த ஜ்ஞாநம் உபேயமான வஸ்துதானே உபாயம் என்றறிகை,
இவ்விஷயத்தில் பண்ணும் கைங்கர்யமுமே புருஷார்த்தமென்றறிகை, அப்புருஷார்த்தமே உபாயம் என்றறிகை.
கீழ்ச்சொன்ன மூன்றுக்கும் புருஷார்த்தம் உண்டாய்த்ததேயாகிலும் ப்ரத்ய க்ஷஸாக்ஷாத்காரம் இல்லாதபோது
அவை உண்டானாலும் ப்ரயோஜநமில்லை. அவைதான் ப்ரத்யக்ஷத்தாலல்லது ஸித்திக்கமாட்டாது.
அவையாவன – பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம், ஆசார்யத்வம் என்று ஆறுபடியாயிருக்கும்.
பரத்வம் நித்யமுக்தர்க்கும், வ்யூஹம் ஸநகாதிகளுக்கும், விபவம் தத்காலவர்த்திகளுக்கும்,
அந்தர்யாமித்வம் உபாஸகர்க்கும், அர்ச்சாவதாரம் எல்லார்க்கும், ஆசார்யத்வம் கதிஶூந்யர்க்கும்.
இவனுக்கு முதல் சொன்ன நாலும் தேஶ-கால-கரண-விப்ரக்ருஷ்டதையாலே கிட்டவொண்ணாது.
இனி இவையிரண்டிலும் அர்ச்சாவதாரம் வாய்திறந்து ஒரு வார்த்தை அருளிச்செய்யாமையாலே
இதுவும் அல்லாத அவதாரங்களோபாதி.
ஆகையாலே பத்தசேதநன் முக்தனாம்போது, ஸகலஶாஸ்த்ரங்களாலும் அறுதியிட்டுப்பார்த்தவிடத்தில்,
ஆசார்யாவதாரத்தாலல்லது ஜ்ஞாநப்ரதாநம் பண்ணவொண்ணாமையாலே ஜ்ஞாநப்ரதாநம் பண்ணின வஸ்துதானே
உபேயமாகவேணும்; உபேயமான வஸ்துதானே உபாயமாகவேணும்; இவ்விஷயத்தில் கைங்கர்யமே ப்ராப்யமாக வேணும்.
மயர்வற மதிநலமருளப்பெற்று இவ்வர்த்தத்தையும் அறுதியிட்ட பரமாசார்யரும், மயர்வற மதிநலமருளினவன் தானே
இவனுக்கு அவையெல்லாம் என்கையாலே இனி இவனுக்கு இதுவே உபாயம்; அல்லாதது உபாயாந்தரங்களோபாதி.
இப் பரத்யக்ஷ ஸாக்ஷாத்காரத்தாலல்லது மோக்ஷப்ரதத்வம் இல்லாமையாலே – என்று திருமுடிக்குறை ரஹஸ்யத்திலே
வேதாந்திகளான நஞ்சீயர் நம்பிள்ளைக்கு அருளிச்செய்தார்.
“ஆசார்யாபிமாநமாவது இவையொன்றுக்கும் ஶக்தனன்றிக்கே இருப்பானொருவனைக் குறித்து
இவனுடைய இழவையும், இவனைப்பெற்றால் ஈஶ்வரனுக்கு உண்டான ப்ரீதியையும் அநுஸந்தித்து,
ஸ்தநந்தய ப்ரஜைக்கு வ்யாதி உண்டானால் தன் குறையாக நினைத்துத் தான் ஔஷத ஸேவை பண்ணி ரக்ஷிக்கும்
மாதாவைப்போலே இவனுக்குத் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணி ரக்ஷிக்கவல்ல பரமதயாளுவான
மஹாபாகவதாபிமாநத்திலே ஒதுங்கி, “வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று
அர்த்த பஞ்சகத்திலே பிள்ளைலோகாசார்யரும் இவ்வர்த்தத்தை ஸுஸ்பஷ்டமாக அருளிச்செய்தார்.
லோகாசார்யரும் தாம் பேரருளாளப்பெருமாளுடைய திருவவதாரமென்று மணற்பாக்கத்துநம்பியாருக்கு ப்ரத்யக்ஷம்.
இவ்வ்ருத்தாந்தம் ஶ்ரீவசநபூஷண வ்யாக்யாநத்திலே நம்முடைய ஜீயர் தெளிய அருளிச்செய்தருளினார்.
இன்னமும் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணமான நல்வார்த்தைகள் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தவை பலவுமுண்டு;
அவையெல்லாம் க்ரந்த விஸ்தரபயத்தாலே சொல்லுகிறிலோம்.
ஆக, இப்படி ஸகல வேதங்களும், ததநுஸாரிகளான ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்களும்,
அவற்றினுடைய தாத்பர்யங்களை யதாதர்ஶநம் பண்ணியிருக்கும் முனிவரான
பராஶர – பாராஶர்ய – போதாயந – ஸுகாதிகளும், உபயவிபூதியையும் கரதலாமலகமாக ஸாக்ஷாத்கரித்து
ஸகல வேதாந்த ஸாரார்த்தங்களையும் த்ராவிட ப்ரஹ்ம வித்யையாலே ஸர்வாதிகாரமாம்படி பண்ணியருளின
ப்ரபந்நஜனகூடஸ்தரான பராங்குஶ – பரகால – பட்டநாதிகளான நம் ஆழ்வார்களும்,
ஸர்வஜ்ஞராய், அவர்களுடைய அடிப்பாடு தப்பாமல் நடக்கும் ப்ராமாணிகரான நாத – யாமுன – யதிவராதிகள்
தொடக்கமான இவ்வருகுண்டான நம் ஆசார்யர்களெல்லாரும் ஏககண்டமாக ஶ்ரிய:பதி நாராயணன் தானே
ஆசார்யனாய் வந்தவதரித்தான் என்று அறுதியிட்டுப் பலவிடங்களிலும் கோஷிக்கையாலே,
அநாதிகாலமே தொடங்கி “ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஶ்வரனையும் மறந்து, ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து,
இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட”
பரத்வாதி பஞ்சப்ரகாரனான ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே அவர்களைத் திருமந்த்ரமுகேந
“கடுங்கதிரோன் மண்டலத்தூடேற்றிவைத்து” என்கிறபடியே அர்ச்சிராதி மார்கத்தாலே கொண்டுபோய்,
“ததஸ்து விரஜாதீரப்ரதேஶம்” என்கிற அக்கரையேற்றி, அமாநவ கரஸ்பர்ஶத்தாலே அப்ராக்ருத ஶரீரத்தையும் கொடுத்து
நித்யவிபூதியிலே நித்யகைங்கர்யம் கொண்டருளக்கடவோம் என்று திருவுள்ளம்பற்றி,
ஶ்ரீபதரிகாஶ்ரமத்திலே நரநாராயண ரூபேண வந்து முன்பு அவதரித்தாப்போலே
இப்போதும் நம்மை ஸம்ஸார ஸாகரத்திலே நின்றும் எடுக்கைக்காக
‘ஸாக்ஷாந்நாராயணோ தேவ:க்ருத்வா மர்த்யமயீம் தநும்|
மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணிநா” என்கிறபடியே ப்ரதம பர்வமான ஸர்வேஶ்வரன் தானே
சரம பர்வமான ஆசார்யனாய் வந்து அவதரித்தான் என்று கொள்ளவேணும்.
இப்படி அவதார விசேஷமாயிருந்துள்ள ஸதாசார்யனை ஸச்சிஷ்யன் தேவதா ப்ரதிபத்தி பண்ணவேணுமென்று
கீழே பல ப்ரமாணங்களும் சொல்லிற்று; மநுஷ்யபுத்தி பண்ணலாகாதென்று மேலே ப்ரமாணங்களும் சொல்லுகிறது.
ஆகையாலே மநுஷ்யபுத்தி பண்ணினவன் நரகத்திலே விழுமென்றும்,
தேவதா ப்ரதிபத்தி பண்ணினவன் ஈடேறுமென்றும் கீழ் மேல் சொல்லுகிற உபய ப்ரமாணங்களாலும் பலித்தது.
“எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு” என்கிறபடியே குருவிஷயத்தில் நரக ஹேதுவான மநுஷ்யபுத்தியை
ஸவாஸநமாக விட்டு, “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து” என்கிறபடியே
பகவதவதாரமென்று கொள்ளவேணுமென்னும் இவ்வர்த்தம் பரமாஸ்திகராய், ப்ரமாணபரதந்த்ரராய் இருக்கும்
சில பாக்யாதிகர்க்கு நெஞ்சிலே ஊற்று மாறாமல் எப்போதும் நிலைநிற்கும்.
ஆக இப்படி “யத்ஸாரபூதம் ததுபாஸிதவ்யம்” என்றும்,
“பஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸகலஶாஸ்த்ர தாத்பர்யார்த்தமாய்,
ஶ்ரீமதுரகவி, நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாசார்யகளாலே உபதேஶ பரம்பரா ஸித்தமாய்,
ஆத்மாவுக்கு நேரே வகுத்த விஷயமாய், ஒருக்காலும் ஸ்வாதந்த்ர்யாதிகள் கலசாத க்ருபாமூர்த்தியாய்,
அதிஸுலபனாய், மோக்ஷைகஹேதுவாயிருந்துள்ள ஸதாசார்யனே
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்”,
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே உபாயோபேயமாகப் பற்றவேண்டியிருக்க,
அத்தைச் செய்யாதே ‘சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் துயஸ்ஸ்மரேத்”,
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ” என்றும்,
“ஸுலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே”, என்றும்,
‘விதிஶிவஸநகாத்யைர் த்யாதுமத்யந்ததூரம்” என்றும்,
‘பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான் எண்ணிலாவூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப” என்றும்
சொல்லுகிறபடியே அதிதுர்லபனாய், பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய், ஶரணாகதனான ஶ்ரீபரதாழ்வானையும்
“ஜலாந்மத்ஸ்யாவிவோத்ருதௌ” என்னும் ஸ்வபாவத்தை யுடையளான பிராட்டி போல்வாரையும் மறுத்து
காட்டிலும் தள்ளிவிடும் நிர்க்ருணனாய், அர்ஜுநாதிகளுக்கு முதலடியிலே ப்ரபத்தியை உபதேஶித்து
அவர்களை அத்யாபி லீலை கொண்டாடும் ஸ்வபாவத்தை உடையவனாய்,
“வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க” வல்லனாய்,
“க்ஷிபாமி”, “ந க்ஷமாமி” என்னும் நிரங்குஶஸ்வதந்த்ரனான உபாயோபேயமாகப் பற்றி,
“உத்தாரயதி ஸம்ஸாராத் ததுபாயப்லவேந து|
குருமூர்த்திஸ்திதஸ் ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்கிறபடியே உத்தாரகனாய்,
அவதார விஶேஷமாயிருந்துள்ள ஸ்வாசார்யனையே “ஸர்வம் யதேவ நியமேந” என்கிறபடியே
ஶேஷித்வ – ஶரண்யத்வ – ப்ராப்யத்வாதிகளில் ஸகலபுருஷார்த்தமுமாகப் பற்ற வேண்டியிருக்க,
அங்ஙனம் அன்றிக்கே, தத் விஷயத்தில் ஸர்வஸாமாந்யமான கேவல-உபாகாரத்வமே கொண்டு
“முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கூட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே
தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவரவாற்றதென்பர் மூர்க்கராவார்” என்கிறபடியே
நம் ஆசார்யர்களுடைய திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்து,
அதுக்குத் தகுதியாயிருந்துள்ள உக்த்யநுஷ்டாநங்களை ஆசரியாமல் தங்கள் மநஸ்ஸுக்குத் தோற்றினதே சொல்லி
‘இதுதானே ஸத்ஸம்ப்ரதாய பரம்பராஸித்தமாய் வருகிற அர்த்தம்’ என்றது –
ஸ்வதந்த்ர ப்ரக்ருதிகளாய், ஸ்வாசார்யவிஷயத்தில் ஊற்றமற்றிருக்கும் கர்ப்ப நிர்ப்பாக்யரான
ஶுஷ்கஹ்ருதயர்க்கு நம் தர்ஶநத்தில் தாத்பர்யார்த்தமும் ததுநுகுணமான அநுஷ்டானமும் தெரியாதாகையாலே
மேலெழுந்தவாரியான இடுசிவப்புப்போலே இவ்வர்த்தம் நெஞ்சில் நிலையில்லாது.
“ஆசார்யாயாஹரேதர்த்தாந் ஆத்மாநஞ்ச நிவேதயேத்|
தததீநஶ்சவர்த்தேத ஸாக்ஷாந்நாரயணே ஹி ஸ:”,
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாந்தீபப்ரதே குரௌ, ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாச்சரரூபீ ந ஸம்ஶய:”,
‘குருரேவ பரம்ப்ரஹ்ம”,
“குருமூர்த்திஸ்திதஸ்ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம:” என்று இத்யாதி ப்ரமாணங்களை விஶ்வஸித்து,
ஆசார்யநிஷ்டனாய் உஜ்ஜீவிக்க வேணும்; அல்லாதபோது ஈடேற வழியில்லை என்று அஸ்மதாசார்யோக்தம்.
“ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொண்ட இவனுக்கு
ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச்செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்” என்று
ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளைலோகாசார்யரும் அருளிச் செய்தார்.
இவ்வர்த்தம் ஸத்ஸம்ப்ரதாய பரம்பரா ஸித்தமாகையாலே தந்தாமுடைய ஸதாசார்யனை ஶ்ரிய:பதியான நாராயணனாகவும்,
அவன் திருவடிகளே உபாயோபேயங்களாகவும், அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தமாகவும்,
அவனுடைய முகோல்லாஸமே பலமாகவும், ப்ராப்யபூமியும் அவன் எழுந்தருளியிருக்கிற இடமாகவும்,
அவனுடைய விக்ரஹாநுபவாதிகள் *உண்ணுஞ் சோற்றுப்படியே தாரகாதிகளாகவும்,
“உத்தாரயதி ஸம்ஸாராத்” என்றும்,
“எதிராசா என்னையினிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே” என்றும்,
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்றும்,
“என்பெருவினையைக் கிட்டிக் கிழங்கொடு தன்னருளென்னும் ஒள்வாளுருவி வெட்டிக்களைந்த இராமாநுசன்” என்றும்,
“கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டை வல்வினை பாற்றியருளினான்” என்றும் சொல்லுகிறபடியே
அவனே இஷ்டப்ராப்தி – அநிஷ்டநிவாரணம் பண்ணித்தரும் உத்தாரகனாகவும் ப்ரதிபத்தி பண்ணி
விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு
“குருணாயோபிமந்யேத குரும் வா யோபி மந்யதே தாவுபௌபரமாம் ஸித்திம் நியமாது பகச்சத:” என்று
ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத-பரகத-ஸ்வீகாரங்களிரண்டிலும் பேறு தப்பாதென்று சொல்லிற்றேயாகிலும்
ஆசார்யனையும் தான் பற்றும் பற்றும் அஹங்கார கர்ப்பமாகையாலே
‘காலன் கொண்டு மோதிரமிடுமோபாதி’ என்கிறபடியே ஸ்வகதஸ்வீகாரம் அவத்யமாகையாலே
ஸ்வரூபத்துக்குச் சேராதென்று அத்தைவிட்டு
“ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என்கிறபடியே அவனுடைய நிர்ஹேதுக க்ருபையான பரகத ஸ்வீகாரமே உத்தாரகம்
என்று அறுதியிட்டு “ஸம்ஸாராவர்த்தவேக ப்ரஶமந ஶுபத்ருக் தேஶிகப்ரேக்ஷி – தோஹம்” என்றும்,
“நிர்பயோ நிர்பரோஸ்மி” என்றும்,
“ஆசார்யஸ்ய ப்ரஸாதேந மம ஸர்வம்பீப்ஸிதம்|
ப்ராப்நுயாமீதி விஶ்வாஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத்” என்றும்,
‘தனத்தாலுமேதுங்குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று” என்றும்,
சொல்லுகிறபடியே த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் ஒருகரை சொல்லித்து.
“இருந்தேனிருவினைப் பாசங்கழற்றி” என்கிறபடியே புண்ய பாபங்களிலும் ஒட்டற்று,
“இவ்வாறு கேட்டிருப்பார்க்காளென்று கண்டிருப்பர் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்”,
“தத்தமிறையின் வடிவென்று தாளினையை வைத்தவரை”,
“நீதியால் வந்திருப்பார்க்குண்டியிழியாவான்” என்றும்,
“இருள்தரு மாஞாலத்தே இன்புற்று வாழும் தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து” என்றும் சொல்லுகிறபடியே
நித்யவிபூதியோடு லீலாவிபூதியோடு வாசியற காலதத்தவமுள்ளதனையும் ஆநந்த மக்நராய்க்கொண்டு வாழத் தட்டில்லை.
ஆகையாலிறே இஹலோகபரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை என்று
மாணிக்கமாலையிலே நிஶ்சயமாக ஆச்சான்பிள்ளை அருளிச்செய்தது.
ஆனால் இப்படி இருக்கும் அதிகாரிகளுக்கு லீலாவிபூதியே நித்யவிபூதியாமோ? என்னில்,
நம்பி திருவழுதி வளநாடு தாஸர் ஓருருவைக் கண்ணிநுண்சிறுத்தாம்பை அநுஸந்தித்து
“மதுரகவி சொன்ன சொல் நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக்கட்டினவாறே
ஶ்ரீபாதத்திலே ஸேவித்திருந்த ஶ்ரீவைஷ்ணவகள்
“லீலா விபூதியிலே ஒருவன் இத்தை விஶ்வஸித்து அநுஸந்திக்க, அவ்விடம் நித்யவிபூதியாம்படி எங்ஙனே?’ என்று கேட்க,
திருவழுதி வளநாடு தாஸர் ‘அதானபடி சொல்லக்கேளீர், கூரத்தாழ்வான் திருமகனார் அவதரித்தபின்பு
இடைச்சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒன்றாய்த்துக் காணும்’ என்று பணித்தார்
என்னும் இவ்வார்த்தை கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநத்திலே ஸுஸ்பஷ்டம்.
—————
13 – ஆசார்ய அபசார விளக்கம்
அர்த்த பஞ்சக தத்த்வஜ்ஞா: பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதா: |
ஆகார த்ரய ஸம்பந்நா: மஹாபாகவதாஸ்ஸ்ம்ருதா: ||
மஹாபாகவதா யத்ராவஸந்தி விமலாஶ்ஶுபா: தத்தேஶம் மங்களம் ப்ரோக்தம் தத்தீர்த்தம் தத்து பாவநம் ||
யதா விஷ்ணுபதம் ஶுபம்” என்னுமிவ்வர்த்தத்தை பராஶர ப்ரஹ்மர்ஷியும் அநுக்ரஹித்தார்.
“பாட்டுக் கேட்குமிடமும், கூப்பீடு கேட்குமிடமும், குதித்தவிடமும், வளைத்தவிடமும், ஊட்டுமிடமும்
எல்லாம் வகுத்த விடமே என்றிருக்கக் கடவன்” என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளை லோகாசார்யரும்
இவ்வர்த்தத்தை ஸுவ்யக்தமாக அருளிச்செய்தார்.
ஆகையால் இவர்கள் தங்களுடைய ஆசார்யனை உபயவிபூதிநாதனென்றும்,
உபயவிபூத்யைஶ்வர்யமும் இவனே என்று ப்ரதிபத்தி பண்ணி இருக்கவேணும்,
“இராமானுசன் என்தன் மாநிதியே”,
“ இராமானுசன் என்தன் சேமவைப்பே” ,
“எனக்குற்ற செல்வமிராமாநுசன்” என்றிறே தந்நிஷ்டர் இருக்கும்படி.
“ஸாக்ஷாந்நாராயணோ தேவ: க்ருத்வா மத்யமயீம் தநும்” என்று இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே
தங்களை ஸம்ஸாரத்தில் நின்றும் எடுக்கைக்காக ஸர்வேஶ்வரன் மநுஷ்யரூபம் கொண்டு வந்திருக்கிறானென்று அறியாதே
அவன் அமுது செய்தருளுகை, கண்வளர்ந்தருளுகை முதலான மேலெழுந்த ஆகாரத்தைப் பார்த்து ஸ்வஜாதீயபுத்தியாலே
“மாநிடவனென்றும் குருவை”,
“ஜ்ஞாநதீபப்ரதே குரௌ | மர்த்யபுத்திஶ்ருதம் தஸ்ய”,
“யோகுரௌ மாநுஷம்பாவம்”,
“குருஷுநரமதி:” என்றும் சொல்லுகிறபடியே ஆசார்யனை மநுஷ்யன் என்று ஒருக்காலாகிலும்
ப்ரதிபத்தி பண்ணியிருக்கும் நீசர்க்கு வரும் அநர்த்தத்தைச் சொல்லுகிறது மேல்.
“விஷ்ணோரர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதிய: |
யோகுரௌமாநுஷம் பாவம் உபௌநரகபாதிநௌ”,
“நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ: ப்ரச்யுதஸ்யதுர்புத்தே: |
ஜலாதபேதம் கமலம் ஶோஷயதி ரவிர்ந போஷயதி”,
“ஏகாக்ஷரப்ரதாதாரம் ஆசார்யம் யோவமந்யதே|
ஶ்வாநயோநிஶதம் ப்ராப்ய சண்டாலேஷ்வபி ஜாயதே|”,
“குருத்யாகீ பவேந்ம்ருத்யு: மந்த்ரத்யாகீ தரித்ரதா|
குருமந்த்ரபரித்யாகீரௌரவம் நரகம் வ்ரஜேத்”,
“மாடும் மனையும்” என்று தொடங்கி “பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகை கண்டீர் விதி”,
“ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷரப்ரத: |
இத்யேவம் யே ந மந்யந்தேத்யக்தவ்யாஸ்தே மநீஷிபி:”,
“மாநிடவனென்றும் குருவை” என்று தொடங்கி, “எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு”,
“ஏகக்ராமநிவாஸஸ்ஸந் யஶ்ஶிஷ்யோ நார்ச்சயேத்குரும்|
தத்ப்ரஸாதம் விநாகுர்யாத் ஸ வை விட்ஸூகரோ பவேத்”,
“எட்டவிருந்த குருவை இறையன்றென்று விட்டு” என்று தொடங்கி, “அம்புதத்தைப் பார்த்திருப்பானற்று”,
“பற்று குருவைப் பரனன்றென இகழ்ந்து” என்று தொடங்கி, “அப்பொருள் தேடித்திரிவானற்று” ,
“என்றுமனைத்துயிருக்குமீரஞ்செய் நாரணனும்” என்று தொடங்கி, “பொங்குசுடர் வெயிலின் அனலுமிழ்ந்து தானுலர்த்தியற்று”,
“தத்தமிறையின் வடிவென்று தாளிணையை வைத்தவவரை வணங்கியிராப்பித்தராய்,
நிந்திப்பார்க்குண்டேறா நீணிரயம் நீதியால் வந்திப்பார்க்குண்டிழியாவான்”,
“தன்குருவின் தாளிணைகள்தன்னிலன்பொன்றில்லாதார்” என்று தொடங்கி, “ஆதலால் நண்ணாரவர்கள் ததிருநாடு”,
“ப்ரதிஹந்தா குரோரபஸ்மாரி வாக்யேந வாக்யஸ்ய ப்ரதிகாதம் ஆசார்யஸ்ய வர்ஜயேத்”,
“அர்ச்சாவிஷ்ணௌஶிலாதீர்குருஷூநரமதி:” என்று தொடங்கி, “ஸர்வேஶ்வரேஶே ததிதரஸமதீர்யஸ்யவாநாரகீ ஸ:”
குருபரிபவமாவது – கேட்ட அர்த்தத்தின்படியே அநுஷ்டியாதொழிகையும்,
அநதிகாரிகளுக்கு உபதேஶிக்கையும்,
“தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே,
ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணும் ஈஶ்வரன்தானே ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப்பண்ணும்”,
“குரோரபஹ்நுதாத் த்யாகாத்ஸாம்யாத் அஸ்மரணாதபி|
லோபமோஹாதிபிஶ்சாந்யைரபசாரைர்விநஶ்யதி”,
“குரோரந்ருதாபிஶம்ஸநம் பாதகஸமாநம் கலு, குர்வர்த்தே ஸப்தபுருஷாந் இதஶ்ச பரதஶ்ச ஹந்தி|
மநஸாபி குரோர்நாந்ருதம் வதேத்| அல்பேஷ்வப்யர்த்தேஷு”,
“பொய்யுரைத்தல், மாறுரைத்தல், பொருளல்லாதன உரைத்தல், பொருளருளச் சிதகுரைத்தல்,
போற்றுதற்கு நெகிழுதல், நையுரைத்தல், வலியுரைத்தல், விதிமறுத்தல், கிடத்தல், மேலிருத்தல்,
கால் நீட்டல், விலங்குமுகமவைத்தல், கையெடுத்துத் தொழ நாணுதல், களை ஒதுக்காதிருத்தல்,
கருத்தறியாப் பொருளுரைத்தல், காயிலே வாய்க்கிடுதல், மெய் விதிர்த்தல், நிழல் மிதித்தல்,
தன்னிழல் மேலிடுதல் – வியன்குருவின் சன்னதியில் விடுங்கருமமிவையே”.
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீப்ப்ரதே குரௌ|
மர்த்யபுத்தி ஶ்ருதம் தஸ்ய ஸர்வம் குஞ்ஜரஶௌசவத்”,
“ஸுலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே|
லப்தம் த்யக்த்வாதநம் மூடோகுப்தமந்வேஷதிக் ஷிதௌ”,
“சக்ஷுர்கம்யம் குரும் த்யக்த்வா ஶாஸ்த்ரகம்யம் து யஸ்ஸ்மரேத்|
ஹஸ்தஸ்தமுதகம் த்யக்த்வாகநஸ்தமபி வாஞ்சதி”,
“குரும்த்வங்க்ருத்ய ஹுங்க்ருத்ய விப்ரம் நிர்ஜித்ய வாதத: |
அரண்யே நிர்ஜலே தேஶே பவந்தி ப்ரஹ்மராக்ஷஸா:”- இது ஆசார்யாபசாரம்.
————
14 -பாகவத அபசார விளக்கம்
இனி தத்பக்தாபசாரமாவது – இவை ஒன்றுக்கொன்று க்ரூரங்களுமாய், உபாய விரோதிகளுமாய்,
உபேய விரோதிகளுமாயிருக்கும்,
கூரத்தாழ்வானுடைய ஶிஷ்யன் வீரஸுந்தரப்ரஹ்மராயன் என்பானொருவன் ஆழ்வான் குமாரரான பட்டருடனே விரோதித்து
அவரைக் கோயிலிலே குடியிருக்கவொண்ணாதபடி கடலைக் கலக்கினாப்போலே பட்டர் திருவுள்ளத்தைக் கலக்கி
மிகவும் உபத்ரவிக்கையாலே பட்டரும் கோயில்நின்றும் புறப்பட்டுத் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த ப்ரகாரம்
“பூகி கண்டத் வயஸஸரஸ ஸ்நிக்தநீரோபகண்டாம் ஆவிர்மோத ஸ்திமிதஶகுநாநூதிதப்ரஹ்மகோஷாம் |
மார்க்கே மார்க்கே பதி கநிவஹைருஞ்ச்யமாநாபவர்க்காம் பஶ்யேயம் தாம் புநரபி புரீம் ஶ்ரீமதீம் ரங்கதாம்ந:” என்று
பெருமாளையும் கோயிலையும் விட்டுப் பிரிந்து மிகவும் க்லேஶப்பட்டுக்கொண்டு எழுந்தருளியிருக்கிற காலத்திலே,
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் பட்டரை ஸேவித்து “அடியேனுக்குத் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு ப்ராஸாதித்தருளவேணும்”
என்று மிகவும் அநுவர்த்திக்க, பட்டரும் தம்முடைய ஶிஷ்யரான நஞ்சீயரைப் பார்த்து
‘ஜீயரே, எனக்குக் கோயிலையும் , பெருமாளையும் பிரிந்த விஶ்லேஷாதிஶயத்தாலே செவிகள் சீப்பாயாநின்றது;
ஆகையாலே எனக்கு வாய்திறந்தொரு வார்த்தை சொல்லப்போகிறதில்லை.
நீர் திருவிருத்தத்திற்கு அர்த்தம் ஓருரு இந்த ஶ்ரீவைஷ்ணவருக்குச் சொல்லும்’ என்று அவரை
ஜீயர் ஶ்ரீபாதத்திலே காட்டிக்கோடுத்து இங்ஙனே நடந்து செல்லுகிற நாளிலே
பட்டரளவிலே விரோதித்த வீரஸுந்தரப்ரஹ்மராயனுக்கு ஶரீரவிஶ்லேஷமாக,
அவ்வளவில் கோயிலிலே பட்டர் திருத்தாயாரான ஆண்டாளை ஸேவித்துக்கொண்டு எழுந்தருளியிருந்த
ஶ்ரீவைஷ்ணவர்கள் பட்டருடைய விரோதி போகையாலே திருப்பரிவட்டங்களை முடிந்து ஆகாஶத்திலே ஏறிட்டு,
நின்றார் நின்ற திக்கிலே ஸந்தோஷித்துக் கூத்தாட, அவ்வளவில் ஆண்டாள் செய்தபடி
திருமாளிகைக்குள்ளே புகுந்து திருக்காப்பைச்சேர்த்து தாளையிட்டுக் கொண்டு வயிற்றைப்பிடித்து வாய்விட்டழுதாள்;
அவ்வளவில் ஸந்தோஷித்துக் கூத்தாடுகிற முதலிகள் ஆண்டாளைப் பார்த்து
‘என்! பட்டருடைய விரோதி போகவும், பட்டரும் முதலிகளும் இங்கே எழுந்தருளவும், நாமெல்லாரும் கண்டு
வாழவும் உமக்கு மிகவும் அஸஹ்யமாயிருந்ததோ?’ என்ன,
அவ்வளவில் ஶ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து ஆண்டாள் அருளிச்செய்தபடி:-
பிள்ளைகாள்! நீங்கள் ஒன்றும் அறிகிறிகோளில்லை; வீரஸுந்தரப்ரஹ்மராயன் என்கிறவன்
நேரே ஆழ்வானுடைய ஶிஷ்யனாயிருந்து, ஆசார்ய புத்ரரான பட்டரைப் திண்டாட்டங்கண்டு அவர்திறத்தில்
மஹாபராதத்தை தீரக்கழியப் பண்ணி, ‘அறியாமல் செய்தேனித்தனை, பொறுத்தருளவேணும்’ என்று
பட்டர் திருவடிகளிலே தலைசாய்ப்பதும் செய்யாதே ‘இப்படி செய்தோம்’ என்கிற அநுதாபமற்றுச் செத்துப்போனான்.
ஆகையாலே அவன் ஶரீரம் விட்ட போதே யமபடர்கையிலே அகப்பட்டுக்கலங்கி அடியுண்டு மலங்க விழிக்கிறான்
என்றத்தை நினைத்து என் வயிறெரிகிறபடி உங்கள் ஒருவருக்கும் தெரிகிறதில்லை – என்று ஆண்டாள் அருளிச்செய்தார்.
ஆகையால் அபராதாதத்தினுடைய கொடுமை இப்படியிருக்குமென்று அஸ்மதாசார்யோக்தம்.
அந்த பட்டர் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சோழமண்டலத்திலே எழுந்தருளியிருக்கும்
கடக்கத்துப்பிள்ளை உடையவரைப் பழுக்க ஸேவித்து, சோமாசியாண்டான் தாமும் மேல்நாட்டிலே எழுந்தருளியிருந்து
ஶ்ரீபாஷ்யம் நிர்வஹிக்கிறார் என்கிற விசேஷம் கேட்டு அங்கே எழுந்தருள,
சோமாசியாண்டானும் ‘கடக்கத்துப் பிள்ளை எழுந்தருளப்பெற்றதே’ என்று மிகவும் ஆதரித்துத்
தம்முடைய திருமாளிகையிலே கொண்டிருக்க, அப்பிள்ளையும் ஆண்டான் அருளிச்செய்கிற ஶ்ரீபாஷ்யம்
முதலான பகவத் விஷயங்களைக் கேட்டுக் கொண்டு ஆண்டானை ஸேவித்துக் கொண்டு ஒரு ஸம்வத்ஸரம்
எழுந்தருளியிருந்து ஶ்ரீபாஷ்யம் சாற்றினவாறே மீளவும் சோழமண்டலத்துக்கு எழுந்தருளுவதாக
அப்பிள்ளை புறப்பட்டவளவிலே ஆண்டானும் எல்லையறுதி எழுந்தருளி அப்பிள்ளையை வழிவிட்டு
மீண்டு எழுந்தருளுகிறபோது ‘தேவரீர் இங்கே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்தவாறே அடியேனுக்கு
மிகவும் ஸந்தோஷமாயிருந்தது; இப்போது விஶ்லேஷத்தாலே பெருக்க வ்யாகுலமாயிராநின்றது.
அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை ப்ரஸாதித்தருளவேணும்’ என்று அப்பிள்ளையை மிகவும் அநுவர்த்திக்க,
அப்பிள்ளை அருளிச்செய்தபடி:- ‘சோமாசியாண்டான்! தேவரீர் ஜ்ஞாந வ்ருத்தருமாய், ஶ்ரீபாஷ்யம், திருவாய்மொழி
இரண்டுக்கும் நிர்வாஹகருமாய், எல்லாத்தாலும் பெரியவராயிருந்தீரேயாகிலும் சாற்றியிருக்கிற
திருப்பரிவட்டத்தலையிலே பாகவதாபசாரநிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும்’ என்று
அருளிச்செய்தாரென்று அஸ்மதாசார்யோக்தம்.
‘ப்ராதுர்பாவைஸ்ஸுரநரஸமோ தேவதேவஸ்ததீயா: ஜாத்யா வ்ருத்தைரபி ச குணத: தாத்ருஶோநாத்ரகர்ஹா|
கிந்து ஶ்ரீமத் புவநபவநத்ராணதோந்யேஷு வித்யாவ்ருத்தப்ராயோ பவதி விதவாகல்பகல்ப: ப்ரகர்ஷ:”,
“அர்ச்சாவதாரோபாதாநம் வைஷ்ணவோத்பத்திசிந்தநம்|
மாத்ருயோநி பரீக்ஷாயாஸ்துல்யமாஹுர்மநீஷிண:”,
“அர்ச்சாயாமேவ மாம் பஶ்யந்மத்பக்தேஷுசமாம் த்ருஹந்|
விஷதக்தைரக்நிதக்தைராயுதைர்ஷந்தி மாமஸௌ”,
“யா ப்ரீதிர்மயி ஸம்வ்ருத்தா மத் பக்தேஷு ஸதாஸ்துதே|
அவமாநக்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத்”,
மத்பக்தம் ஶ்வபசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா: |
பத்மகோடிஶதேநாபி ந க்ஷமாமி கதாசந” என்றுமுண்டு.
“சண்டாலமபி மத்பக்தம் நாவமந்யேத புத்திமாந்|
அவமாநாத் பதத்யேவ ரௌரவே நரகே நர:”,
“அஶ்வமேத ஸஹஸ்ராணி வாஜபேயஶதாநி ச|
நிஷ்க்ருதிர்நாஸ்தி நாஸ்த்யேவ வைஷ்ணவம் வேஷிணாம் ந்ருணாம்”,
“ஶூத்ரம்வா பகவத் பக்தம் நிஷாதம் ஶ்வபசம் ததா|
ஈக்ஷதே ஜாதிஸாமாந்யாத் ஸ யாதி நரகம் த்ருவம்”,
“அநாசாராந் துராசாராந் அஜ்ஞாத்ரூந் ஹீநஜந்மந:|
மத்பக்தாந் ஶ்ரோத்ரியோ நிந்தந் ஸத்யஶ்சண்டாலதாம் வ்ரஜேத்”,
“அபிசேத்ஸுதுராசாரோ பஜதே மாதநந்யபாக்|
ஸாது ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸ்தோ ஹி ஸ:”,
“ஸர்வைஶ்ச லக்ஷணைர்யுக்தோ நியுதஶ்ச ஸவகர்மஸு|
யஸ்து பாகவதாந் த்வேஷ்டி ஸுதூரம் ப்ரச்யுதோ ஹி ஸ:”
“அமரவோரங்கமாறும்” என்று தொடங்கி, “நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர் போலும்”,
“ஈஶ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச்செய்வர்”,
“அவமாநக்ரியா”,
“பாகவதாபசாரந்தான் அநேகவிதம்; அதிலேயொன்று அவர்கள் பக்கல் ஜந்மநிரூபணம்.
இது தான் அர்ச்சாவதாரத்தில் உபாதந ஸ்ம்ருதியிலுங்காட்டில் க்ரூரம். அத்தை மாத்ருயோநி பரீக்ஷையோடொக்கும்
என்று ஶாஸ்த்ரம் சொல்லும்”,
“த்ரிஶங்குவைப்போலே கர்மசண்டாலனாய் மார்விலட்ட யஜ்ஞோபவீதந்தானே வாராய்விடும்”,
“ஜாதிசண்டாலனுக்குக் காலாந்தரத்திலே பாகவதனாயிருக்க யோக்யதையுண்டு;
அதுவுமில்லை இவனுக்கு ஆரூடபதிதனாகையாலே”.
“திருவுடைமன்னர், செழுமாமணிகள், நிலத்தேவர், பெருமக்கள், தெள்ளியார், பெருந்தவத்தர்,
உருவுடையார், இளையார், வல்லார், ஒத்துவல்லார், தக்கார், மிக்கார், வேதவிமலர், சிறுமாமனிசர்,
எம்பிரான்தன சின்னங்கள்” என்று நங்குலநாதரான ஆழ்வார்கள் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு
இப்படித் திருநாமம் சாற்றுகையாலே கேவலம் தன்னோடக்க ஒரு மநுஷ்யன் என்று
வைஷ்ணவனை நினைத்திருக்கையே பாகவதாபசாரம்.
“தஸ்யப்ரஹ்மவிதாகஸ:”,
“நாஹம் விஶங்கே ஸுரராஜவஜ்ராநந த்ர்யக்ஷஶுலாந் ந யமஸ்ய தண்டாத்|
நாக்ந்யர்க்கஸோமா நாலவித்தஹஸ்தாத் ஶங்கே ப்ருஶம் பாகவதாபசாராத்”.
ப்ரஹ்மவிதோபமாநாத் “
ஆயுஶ்ஶ்ரியம் யஶோ தர்மம் லோகாநாஶிஷ ஏவ ச|
ஹந்தி ஶ்ரேயாம்ஸி ஸர்வாணி பும்ஸோ மஹததிக்ரம:”,
“நிந்தந்தியே பகவதஶ்சரணாரவிந்த சிந்தாவதூத ஸகலாகிலகல்மஷௌகாந்|
தேஷாம் யஶோதநஸுகாயுரபத்யபந்து மித்ராணி சஸ்திரதராண்யபி யாந்தி நாஶம்”,
“அப்யர்ச்சயித்வா கோவிந்தம் ததீயாந் நார்ச்சயந்தி யே|
ந தே விஷ்ணோ: ப்ரஸாதஸ்ய பாஜநம் டாம்பி கா ஜநா:”,
‘இழவுக்கவர்கள்பக்கல் அபசாரமே போரும்”,
“வைஷ்ணவாநாம் பரீவாதம் யோ மஹாந் ஶ்ருணுதே நர:|
ஶங்குபி ஸ்தஸ்ய நாராசை: குர்யாத் கர்ணஸ்ய பூரணம்”,
“இவ்விடத்திலே வைநதேயவ்ருத்தாந்தத்தையும்,
பிள்ளைப்பிள்ளையாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது”.
இப்படி ஆசார்யாபசாரமும், தத்பக்தாபசாரமும் அதிக்ரூரமென்று வேதஶாஸ்த்ரபுராணாதிகளும்,
அவற்றினுடைய அர்த்த தாத்பர்யங்களையும் யதாதர்ஶநம் பண்ணி ஸர்வஜ்ஞராயிருக்கும் நம் ஆழ்வார்களும்,
ஆசார்யர்களும் ஒருக்கால் சொன்னாப்போலே ஒன்பதின்கால் சொல்லிக் கையெடுத்து ஒருமிடறாகக் கூப்பிடுகையாலே
ஆஸ்திகனாய், உஜ்ஜீவநபரனாய் இருக்குமவன் மறந்து ஒருகாலத்திலும், ஒரு தேஶத்திலும் ,
ஸ்வப்நாவஸ்தையிலும் தனக்கு வகுத்த ஶேஷிகளாய், ஸர்வப்ரகாரத்தாலும் ரக்ஷகராயிருந்துள்ள
இவ்விஷயங்களை கிஞ்சித்மாத்ரமும் நெகிழநினைக்கக் கடவனல்லன்.
நெகிழ நினைத்தானாகில் நிலம் பிளந்தால் இழையிடவொண்ணாதாப்போலவும்,
கடலுடைந்தால் அடைக்கவொண்ணாதாப் போலவும், மலைவிழுந்தால் தாங்கவொண்ணாதாப் போலவும்
இது அப்ரதிக்ரியமாயிருப்பதொரு அநர்த்தம் என்று நம்முடைய ஜீயர் பலகாலும் அருளிச் செய்தருளுவர்.
ஆகையாலே ஸதாசார்ய – தத்துல்ய- விஷயங்களை கிஞ்சிந்மாத்ரமும் நெகிழ நினைக்கலாகாதென்கிற
அவஶ்யாநுஷ்டேயங்களை ப்ரதிபாதிக்கிறது மேல்.
————
15 – ஆசார்ய/பாகவத ப்ரஸாதத்தின் பெருமை மற்றும் ஸ்ரீபாத தீர்த்தம்
“யோஸௌ மந்த்ரவரம் ப்ராதாத் ஸம்ஸாரோச்சேதஸாதநம்|
யதிசேத் குருவர்யஸ்ய தஸ்யோச்சிஷ்டம் ஸுபாவநம்”, என்றும்,
“குரோர்யஸ்ய யதோச்சிஷ்டம் போஜ்யம் தத்புத்ரஶிஷ்யயோ:” என்றும்.
“குரோருச்சிஷ்டம் புஞ்ஜீத” என்றும் சொல்லுகிறபடியே கீழே பல ப்ரமாணங்களாலும் ஸர்வேஶ்வரனுடைய
அவதாரமாக ப்ரதிபாதிக்கப்பட்ட தந்தாமுடைய ஸதாசார்யனே தைவமென்றும் விஶ்வஸித்திருக்கும் சரமாதிகாரிகளுக்கு
ஆசார்யன் அமுதுசெய்து திருக்கை மாற்றியருளின திருத்தளிகையில் ப்ரஸாதமும்,
“ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணிபத்யோபயுஜ்ய ச|
நித்யம் விதிவதர்க்யாத்யைராவ்ருதோப்யர்ச்சயேத் குரும்” என்கிறபடியே
அவனுடைய திருவடிகளில் தீர்த்தமும் பரமபாவநமுமாய், பெற்ற தாயினுடைய முலைப்பால் போலே
தாரகமுமாய், போஷகமுமாயிருக்கையாலே ஶரீராவஸாநத்தளவும் போக்யமுமாயிருக்கும்.
அவ்வளவன்றிக்கே
“கங்கா ஸேது ஸரஸ்வத்யா: ப்ரயாகாந்நைமிஶாதபி|
பாவநம் விஷ்ணுபக்தாநாம் பாதப்ரக்ஷாலநோதகம்”,
“யத் தத் ஸமஸ்த பாபாநாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி:|
நிர்ணீதம் பகவத்பக்தபாதோதக நிஷேவணம்”,
“திஸ்ர: கோட்யர்த்த கோடீ ச தீர்த்தாநி புவநத்ரயே|
வைஷ்ணவாங்க்ரி ஜலாத்புண்யாத்கோடிபாகேந நோ ஸம:”,
“ப்ராயஶ்சித்தமிதம் குஹ்யம் மஹாபாதகிநாமபி|
வைஷ்ணவாங்க்ரிஜலம் ஶுப்ரம் பக்த்யா ஸம்ப்ராப்யதே யதி”,
“நாரதஸ்யாதிதே: பாதௌ ஸர்வாஸாம் மந்த்ரே ஸ்வயம்|
க்ருஷ்ண: ப்ரக்ஷால்ய பாணிப்யாம் பபௌ பாதோதகம் முநே:||,
“தொண்டர் சேவடிச் செழுஞ்சேறென் சென்னிக்கணிவனே”,
“தொண்டரடிப்பொடியாட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே”,
“தத்பாதாமப்வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸுபாவநம்|
ததுக்திமாத்ரம் மந்த்ராக்ர்யம் தத்ஸ்ப்ருஷ்டமகிலம் ஶுசி”,
“கோடி ஜந்மார்ஜிதம் பாபம் ஜ்ஞாநதோஜ்ஞாநத: க்ருத: |
ஸத்ய: ப்ரதஹ்யதே ந்ரூணாம் வைஷ்ணவோச்சிஷ்ட போஜநாத்”,
“போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஜ்ஞாநமும், விரக்தியும், ஶாந்தியும் உடையவராயிருக்கும் பரமஸாத்த்விகராய், ஆசார்யதுல்யராயிருக்கும்
மஹா பாகவதர்கள் அமுதுசெய்தருளின திருத்தளிகையில் ப்ரஸாதமும், அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும்
வைதமாக ஸ்வீகரிக்கையன்றிக்கே ஆத்மாவினுடைய ஶேஷத்வத்தின் எல்லை நிலமாகையாலே
ஸத்தாதாரகம் என்று அவஶ்யம் ஸ்வீகரிக்கவேணும்.
அது எங்ஙனே என்னில்,
“ஶரீரமேவ மாதாபிதரௌஜநயத:” என்கிற ஸாமாந்ய விஷயத்தில்,
“பிது: ஜ்யேஷ்டஸ்ய ப்ராதுருச்சிஷ்டம் போக்தவ்யம்” என்று அவர்களுடைய ஶிஷ்யபுத்ரர்களுக்கு
ஸ்வீகார்யமென்று விதித்த ஆபஸ்தம்ப மஹர்ஷிதானே “ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி; தச்ச்ரேஷ்டம் ஜந்ம” என்று
ப்ரஹ்ம வித்யாப்ரதனாகையாலே விஶேஷபிதாவான ஸதாசார்யன் ஶரீரோத்பாதகனைப் பற்றவும்
இப்படி உத்க்ருஷ்டன் என்று ப்ரதிபாதிக்கையாலே ஶிஷ்யனுக்கு ஸதாசார்ய – தத்துல்யர்கள் அமுது செய்தருளின
தளிகையில் ப்ரஸாதமும், அவர்களுடைய ஶ்ரீபாத தீர்த்தமும் அவஶ்யம் ஸ்வீகார்யமென்னுமிடம் கிம்புநர் ந்யாயஸித்தமிறே.
இவ் விடத்தில் ஸதாசார்ய தத்துல்யரென்றது ஆரை என்னில் –
‘ஆசார்யவத்தைவவந் மாத்ருவத் பித்ருவத்’ இத்யாதிகளான ஶாஸ்த்ரங்கள் ஶ்ரீவைஷ்ணவர்களை
ஆசார்யதுல்யரென்று சொல்லுகையாலும்,
“அநுகூலராகிறார் ஜ்ஞாநபக்திவைராக்யங்கள் இட்டுமாறினாப்போலே வடிவிலே
தொடை கொள்ளலாம்படியிருக்கும் பரமார்த்தர்” என்றும்,
“அதாவது ஆசார்யதுல்யரென்றும் ஸம்ஸாரிகளிலும், தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்று நினைக்கை” என்றும்,
“அநுகூலர் ஆசார்யபரதந்த்ரர்” என்றும் ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளைலோகாசார்யரும் அருளிச் செய்த
திவ்யஸூக்திப்படியே பரம பாகவதர்களாய்,
“இராமாநுசனைத் தொழும் பெரியோர் பாதமல்லால் என்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையே”,
“இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடமே” என்கிறபடியே
அர்த்த காமங்களில் நசையற்று ஆசார்ய பரதந்த்ரர்க்கு ஶேஷமாய், தங்களுக்கு ஸதாநுபவ யோக்யராயிருக்கும் பெரியோர்களை.
இன்னமும் இவ்வர்த்தத்தை ஸர்வஜ்ஞராயிருக்கும் ஆசார்யர்கள் ஸம்ஶய விபர்யயமற ஸப்ரமாணமாக
ஸ்வ ஸ்வ ப்ரபந்தங்களிலே தெளிய அருளிச்செய்தார்கள். மற்றுள்ளாரும் சொல்லுவார்கள். அதெங்ஙனே என்னில்,
“நல்லார் பரவுமிராமாநுசன் திருநாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர்,
அவர்க்கே எல்லாவிடத்திலும் என்றுமெப்போதிலுமெத்தொழும்பும் சொல்லால்
மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே”,
“இன்புற்ற சீலத்திராமாநுச, என்றுமெவ்விடத்துமென்புற்ற நோயுடல்தோறும் பிறந்திறந்து,
எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற்றிருக்கும்படி, என்னையாக்கி அங்காட்படுத்தே” என்று நூற்றந்தாதியிலே பிள்ளை அமுதனாரும் அருளிச் செய்தார்.
கூரத்தாழ்வான் குமாரரான ஶ்ரீபராசரபட்டர் பகவத் விஷயம் அருளிச்செய்த கொண்டு தாமும் முதலிகளும் கூடிப்
பெரிய திருவோலக்கமாக எழுந்தருளியிருக்கச் செய்தே கூரத்தாழ்வான் தேவிகள் ஆண்டாள் திருவோலக்கத்தின் நடுவே
எழுந்தருளி தம்முடைய குமாரரான பட்டரை தண்டனிட்டுத் தீர்த்தம் கொள்ள,
ஒரு ஶ்ரீவைஷ்ணவர் அத்தைக் கண்டு ‘பெற்ற தாயார் தம்முடைய புத்ரனைத் தண்டனிட்டுத் தீர்த்தங்கொள்ளலாமோ’ என்ன,
அப்போது ஆண்டாள் அருளிச்செய்தபடி – திருவோலக்கத்திலே எழுந்தருளியிருக்கிற முதலிகளைப் பார்த்து
‘பிள்ளைகாள்! அந்யர்க்குண்டான எம்பெருமானுடைய தீர்த்த ப்ரஸாதங்களை ப்ரஸாதப்படவேணும்,
தான் ஏறி யருளப்பண்ணிக் கொண்ட எம்பெருமானுடய ப்ரஸாதங்கள் க்ரஹிக்கலாகாதென்று சொல்லுமவர்கள்
ஶுஷ்கஹ்ருதயராய், யதாஜ்ஞாநம் பிறவாத ப்ராந்தரன்றோ?’ என்று அருளிச்செய்தார்.
என்னும் இப்ப்ரஸங்கம் திருப்பாவை வ்யாக்யாநத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.
ஆண்டாள்தாம் அப்படி செய்தது என்கொண்டு? என்ன,
‘ ந பரீக்ஷ்ய வயோ வந்த்யா: நாராயணபராயணா:” என்றும்,
“வண்ணச்செஞ்சிறு கைவிரலனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடுவினையேன்” என்றுமுண்டாகையாலே செய்தாள்.
—————-
16- பாகவதர்களின் பெருமை (எந்த ஜன்மத்தில் பிறந்திருந்தாலும்)
ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகளநுவர்த்திக்க அறிவுகொடுத்துக் குலதெய்வத்தோடொக்க பூஜைகொண்டு
பாவந தீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும், விஶ்வாமித்ர – விஷ்ணுசித்த- துளஸீப்ருத்யரோடே உள் கலந்து
தொழுகுலமானவன் நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்விக்குறை முடித்தமையும்,
கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய், தம்பிக்கு முற்பிறந்து வேலும் வில்லுங்கொண்டு பின் பிறந்தாரை ஶோதித்து.
தமையனுக்கு இளையோன் ஸத்பாவம் சொல்லும்படி ஏககுலமானமையும், தூதுமொழிந்து நடந்து வந்தவர்களுடைய
ஸம்யக்ஸகுணஸஹபோஜநமும், ஒருபிறவியிலே இருபிறவியானாரிருவர்க்கு தர்மஸுநுஸ்வாமிகள் அக்ரபூஜைகொடுத்தமையும்,
ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஶமாகச்செய்த புத்ரக்ருத்யமும்,
புஷ்பத்யாக போக மண்டபங்களில் பணிப்பூவும் ஆலவட்டமும் வீணையுங்கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும்,
வைதிகோத்தமரும், மஹாமுநியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாகாநுயாகோத்தர வீதிகளில் காயாந்நஸ்தலஶுத்தி
பண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷங்கள் தெரிவது.
அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யாவ்ருத்தங்களை கர்த்தபஜந்மம், ஶ்வபசாதமம், ஶில்பநைபுணம்,
பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழிப்பர்கள் – என்று ஆசார்ய ஹ்ருதயத்தில்
பிள்ளை லோகாசார்யர் திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.
உத்க்ருஷ்டமாக ப்ரமித்த ஜந்மம் ப்ரம்ஶஸம்பாவனையாலே “ஶரீரே ச” என்கிறபடியே பயஜநகம்.
அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேணும்.
அபக்ருஷ்டமாக ப்ரமித்த உத்க்ருஷ்ட ஜந்மத்துக்கு இரண்டு தோஷமுமில்லை. நைச்யம் ஜந்மஸித்தம்.
ஆகையாலே உத்க்ருஷ்ட ஜந்மமே ஶ்ரேஷ்டம். “ஶ்வபசோபி மஹீபால”. நிக்ருஷ்டஜந்மத்தால் வந்த தோஷம்
ஶமிப்பது விலக்ஷண ஸம்பந்தத்தாலே. ஸம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது ஜந்மக் கொத்தை போக வேணும்.
ஜந்மத்துக்கு கொத்தையும், அதுக்குப் பரிஹாரமும் “பழுதிலாவொழுகல்” என்கிற பாட்டிலே அருளிச் செய்தார்.
வேதகப் பொன் போலே இவர்களோட்டை ஸம்பந்தம். இவர்கள் பக்கல் ஸாம்யபுத்தியும், ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும்.
அதாவது ஆசார்யதுல்யரென்றும், ஸம்ஸாரிகளிலும், தன்னிலும், ஈஶ்வரனிலும் அதிகரென்றும் நினைக்கை.
ஆசார்யஸாம்யத்துக்கடி ஆசார்யவசநம். இப்படி நினையாதொழிகையும் அபசாரம்.
இவ்வர்த்தம் இதிஹாஸ புராணங்களிலும், பயிலுஞ்சுடரொளி நெடுமாற்கடிமையிலும்,
கண்சோர வெங்குருதியிலும், நண்ணாத வாளவுணரிலும், தேட்டருந்திறல்தேனிலும்,
மேம்பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் விஶதமாகக் காணலாம்.
க்ஷத்ரியனான விஶ்வாமித்ரன் ப்ரஹ்மர்ஷியானான். விபீஷணனை ராவணன் குலபாம்ஸநனென்றான்.
பெருமாள் இக்ஷவாகு வம்ஶ்யனாக நினைத்து வார்த்தை அருளிச்செய்தார்.
பெரிய உடையாருக்குப் பெருமாள் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் பண்ணியருளினார்.
தர்மபுத்ரர் அஶரீரி வாக்யத்தையும், ஜ்ஞாநாதிக்யத்தையுங்கொண்டு ஶ்ரீவிதுரரை ப்ரஹ்மமேதத்தாலே ஸம்ஸ்கரித்தார்.
ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம ஸந்தேஹங்களை ஶமிப்பித்துக் கொண்டார்கள்.
க்ருஷ்ணன் பீஷ்மத்ரோணாதி க்ருஹங்களைவிட்டு ஶ்ரீவிதுரர் திருமாளிகையிலே அமுது செய்தான்.
பெருமாள் ஶ்ரீஶபரிகையாலே அமுது செய்தருளினார். மாறனேரி நம்பி விஷயமாகப் பெரியநம்பி உடையவருக்கு
அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது – என்று ஶ்ரீவசநபூஷணத்திலே பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்தார்.
“பவத்தயயா யதீந்த்ர த்வத் தாஸதாஸ கணநாசரமாவதௌய:
தத்தாஸதைகரஸதா விரதா மமாஸ்து” என்று நம்முடைய ஜீயரும் யதிராஜ விம்ஶதியிலே அருளிச் செய்தருளினார்.
திருவயிந்திரபுரத்திலே ஶ்ரீவில்லிபுத்தூர்ப் பகவரென்று உத்தமாஶ்ரமியாயிருப்பாரொருவர் எல்லாரும்
ஒரு துறையிலே அநுஷ்டாநம்பண்ண, தாம் ஒரு துறையிலே அநுஷ்டாநம் பண்ணுவராய்த்து.
அவரொரு நாள் அநுஷ்டாநம்பண்ணி மீண்டு வாராநிற்கச்செய்தே இருந்த ப்ராஹ்மணர்
‘உமக்கு ஒரு துறையிலே நீராடுவதேது?’ என்று கேட்க,
‘விஷ்ணுதாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ணதர்மிண:|
அஸ்மாகம் தாஸவ்ருத்தீநாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி:” என்று,
‘நீங்கள் ப்ராஹ்மணவர்ணதர்மிகள், நாங்கள் தாஸவ்ருத்திகள். கைங்கர்யபரர். ஆகையாலே
உங்களோடு எங்களுக்கு அந்வயமில்லை’ என்று துறைவேறிட்டுப் போந்தாரென்று இவ் வ்ருத்தாந்தம்
ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யாநத்திலே திருநாராயணபுரத்தில ஆய் அருளிச்செய்தார்.
“பூதங்களைந்தும் பொருந்துமுடலினாற் பிறந்த சாதங்கள் நான்கினொடும் சங்கதமாம்,
பேதங்கொண்டென்ன பயன் பெறுவீர்” என்றும்,
“குடியுங்குலமுமெல்லாம் கோகனகை கேள்வனடியார்க்கு அவனடியேயாகும்” என்றும்,
கேவல வர்ணாஶ்ரமங்களையே பற்றி நிற்க வில்லை ஒரு ப்ரயோஜநமில்லை; ஸர்வர்க்கும் ஸர்வ ப்ரயோஜநமும்
ஶ்ரிய:பதி நாராயணன் திருவடித் தாமரைகளே காணும் என்று
ஞானசாரத்திலே அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்தார்.
“தேஹாத்ம ஜ்ஞாந கார்யேண வர்ணபேதேந கிம்பலம்|
கதிஸ்ஸர்வாத்மநாம் ஶ்ரீமந்நாராயண பதத்வயம்”
“ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ … தஸ்ய ஸர்வம் ஏவ ஹி” என்னக்கடவதிறே.
“அத்யப்ரப்ருதி ஹே லோகா: யூயம் யூயம் வயம் வயம்|
அர்த்தகாமபரா யூயம் நாராயணபரா வயம்” என்று ஶ்ரீஶுகப்ரஹ்மர்ஷிதாம் வேதவ்யாஸ புத்ரராயிருக்க
ஶுகதாதர் என்று தம்மையிட்டுப் பிதாவை நிரூபிக்க வேண்டும்படியான ஜ்ஞாநாதிக்யத்தை உடையவராகையலே
லௌகிகரைப் பார்த்து ஒட்டற வார்த்தை சொல்லி அவ்வளவன்றிக்கே,
“நாஸ்தி ஸங்கதிரஸ்மாகம் யுஷ்மாகஞ்ச பரஸ்பரம்|
வயம் து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்ரியகிங்கரா:” என்று தமக்குண்டான விஶேஷ ஜ்ஞாநத்தையும்
அவர்களுக்குண்டான இந்த்ரிய பாரவஶ்யதையையும் சொல்லி, தத்ஸம்பந்தத்தையும் அறுத்து,
அவ்வளவுமன்றிக்கே,
“நாஹம் விப்ரோ ந ச நரபதிர்நாபி வைஶ்யோ ந ஶூத்ரோ நோ வா வர்ணீ நசக்ருஹபதிர் நோ வநஸ்தோ யதிர்வா|
கிந்து ஶ்ரீமத்புவந பவநஸ்தித்யபாயைக ஹேதோர் லக்ஷமீபர்த்துர் நரஹரிதநோர் தாஸதாஸஸ்ய தாஸ:” –
என்னுடைய ஸ்வரூபம் வர்ணாஶ்ரமங்களைவிட்டு நிரூபிக்கப்பட்டது;
ஜ்ஞாநாநந்தங்களும், பகவச்சேஷத்வமும் புறவிதழ் என்னும்படி ததீயஶேஷத்வத்தையிட்டே நிரூபிக்கும்படியிருக்கும்.
இப்படியான பின்பு பாகவதர்களென்றும், அபாகவதர்களென்றும் இரண்டு ஜாதியாகச் சொல்லுமேதொழிய
வேறொருபடி சொல்லத்தக்க பந்தமில்லை உங்களுக்கும் எங்களுக்கும் – என்று ஶ்ரீஶுகப்ரஹ்மர்ஷி
லௌகிகரோடுண்டான ஸம்பந்தத்தை அறுத்துக்கொண்டு ஶ்ரீநரஸிம்ஹரூபியான நாராயணனுக்கு
ஶேஷபூதராயிருக்குமவர்களுக்கு ஶேஷமாயிருக்கும் பாகவதர்களுடனே கூடிப் போனார்களென்னுமது ஜகத்ப்ரஸித்தமிறே.
“பஞ்சாஸ்த்ராங்கா: பஞ்சஸம்ஸ்காரயுக்தா: பஞ்சார்த்தஜ்ஞா: பஞ்சமோபாயநிஷ்டா: |
தேவர்ணாநாம் பஞ்சமாஶ்சாஶ்ரமாணாம் விஷ்ணோர்பக்தா: பஞ்சகால ப்ரபந்நா:”,
“தேவர்ஷிபூதாப்தந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜந்|
ஸர்வாத்மநாயஶ்ஶரணம் அஶரண்யம் நாராயணம் லோககுரும்ப்ரபந்ந:” என்றிறே ஸ்வரூபமிருப்பது.
ஆகையாலே ஜ்ஞாநவான்கள், அஜ்ஞர்ப்ரமிக்கிற வர்ணாஶ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தபஜந்மம், ஶ்வபசாதமம்,
ஶில்பநைபுணம், பஸ்மாஹுதி, ஶவவிதவாலங்காரமென்று கழித்துத் தந்தாமுக்குத் தஞ்சமாகப் பற்றுமிடத்தில்
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும் ஈஶ்வரனைப் பற்றுவாரும்,
மோக்ஷத்துக்கே ஹேதுவான ஆசார்யனைப் பற்றுவாரும்,
உபேக்ஷணீயரான ஈஶ்வர பரதந்த்ரரைப் பற்றுவாரும்,
அநுகூலரான ஆசார்ய பரதந்த்ரரைப் பற்றுவாருமாய், அதிகாராநுகுணமாயிருக்கும்.
ஆகையாலேயிறே
“நசேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ|
காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஶ:” என்று கூரத்தாழ்வான்
‘நாராயண’ ‘ராமாநுஜ” என்கிற திருமந்த்ரங்களிரண்டுக்கும் வாசி பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயும்,
மோக்ஷைக ஹேதுவாயுமிருக்குமென்னுமிடம் தோற்ற ‘சதுரா சதுரக்ஷரீ’ என்று அருளிச்செய்தார்.
————
17- பாகவதர்களின் நிர்ஹேதுக க்ருபை
“லோகே கேசந மத் பக்தாஸ்ஸத்தர்மாம்ருதவர்ஷிண:|
ஶமயந்த்யகமத்யுக்ரம் மேகா இவ தவாநலம்”,
“ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” ,
”ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:”,
“மம ப்ராணா ஹி பாண்டவா:”
“நிரபேக்ஷம் முநிம் ஶாந்தம் நிர்வைரம் ஸமதர்ஶநம்|
அநுவ்ரஜாம்யஹம் நித்யம் பூயேயேத்யங்க்ரிரேணுபி:”,
“மம மத் பக்தபக்தேஷு ப்ரீதிரப்யதிகாந்ருப|
தஸ்மாந்மத்பக்தபக்தாஶ்ச பூஜநீயா விஶேஷத:” ,
“அந்நாத்யம் புரதோ ந்யஸ்தம் தர்ஶநாத்க்ருஹ்யதே மயா|
ரஸாந் தாஸஸ்ய ஜிஹ்வாயாமஶ்நாமி கமலோத்பவ”,
“மத் பக்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாஞ்சாநுமோதநம்|
ஸ்வயம்ப் யர்ச்சநஞ்சைவ மதர்த்தே டம்பவர்ஜநம்||
மத்கதாஶ்ரவணே பக்திஸ்ஸ்வரநேத்ராங்கவிக்ரியா|
மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி||
பக்திரஷ்டவிதாஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே|
ஸ்விப்ரேந்த்ரோ முநிஶ்ஶ்ரீமாந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:||
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்” என்று ஸர்வேஶ்வரன் தானும்
தன்னுடைய அடியாரை லோக பாவநராகவும், தனக்கு ஆத்மாவாகவும், ப்ராணனாகவும்,
‘நாள்தோறும் நான் அவர்களுடைய பாதரேணுக்களை ஆசைப்பட்டுப் பின்செல்லாநின்றேன்’ என்றும்,
‘அவர்களுடைய ஸத்காரம் எனக்கு மிகவும் ப்ரியம்’ என்றும்,
‘அந்நாதிகளிலுண்டான ரஸங்களெல்லாம் அவர்கள்முகேந ஜீவிப்பேன்’ என்றும்,
ம்லேச்ச ஜாதியிலே பிறந்தார்களேயாகிலும் தன்னைப்போலே அவர்களும் பூஜ்யர் என்றும் அருளிச் செய்தான்.
“அக்ஷ்ணோ: பலம் தாத்ருஶதர்ஶநம் ஹி தந்வா: பலம் தாத்ருஶகாத்ரஸங்கம்|
ஜிஹ்வாபலம் தாத்ருஶகீர்த்தநஞ்ச ஸுதுர்லபாபாகவதா ஹி லோகே”,
“நாஹம் ஸமர்த்தோ பகவத்ப்ரியாணாம் வக்தும் குணாந் பத்மபுவோப்யகண்யாந்|
பவத்ப்ரபாவம் பகவாந் ஹி வேத்தி ததாபவந்தோ பகவத்ப்ரபாவம்” என்று – மஹாபாகவதர்களுடைய
தர்ஶந – ஸ்பர்ஶந – ஸம்பாஷணங்களே தனக்கு ஸர்வப்ரயோஜநமென்று அவர்களுடைய திவ்ய குணங்களைச்
சொல்லுகைக்கு நான் ஸமர்த்தையன்று என்றும்,
அவர்களுடைய ப்ரபாவத்தை என்னால் சொல்லித் தலைக்கட்டப் போகாது என்றும்
ஶ்ரீபூமிப்பிராட்டியும் அருளிச்செய்தாள்.
எம்பெருமானார் திருவதாரத்தாலே அனைவருக்கும் உஜ்ஜீவனம்
“திறம்பேன்மின் கண்டீர்” என்று தொடங்கி ,
“இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்களென்றான் நமனுந்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு” என்றும்,
“அவன்தமர் எவ்வினையராகிலும் எங்கோனவன்தமரே என்றொழிவதல்லால்
நமன்தமராலாராயப் பட்டறியார் கண்டீர் அரவணைமேல் பேராயற்காட்பட்டார் பேர்” என்றும்,
“பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை” என்றும்,
“வெள்ள நீர் வெள்ளத்தணைந்த அரவணைமேல்
துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே உன்தமர்க்கென்றும் நமன்தமர் கள்ளர்” என்று பகவத் ப்ரபந்நர் எப்படி இருந்தார்களே யாகிலும்
அவர்களை யமாதிகள் ஏறிட்டுப் பார்க்கவொண்ணாத மாத்ரமுமன்றிக்கே யம்படர் கள்ளர் பட்டது படுவார்கள்
என்று பாகவத ப்ரபாவத்தை ஆழ்வார்களும் அருளிச் செய்தார்கள்.
“நாவலிட்டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள்மீதே” என்னும் மதிப்பரிறே ஆழ்வார்கள்.
“நகலுபாகவதா யமவிஷயம் கச்சந்தி” என்றும் பாகவத வைபவத்தைச் சொல்லுகிறது.
இந்த ப்ரஸங்கத்திலே யமாதிகள் பாகவத விஷயத்தில் வர்த்திக்கிறபடி சொல்லுகிறது.
“ஸ்வபுருஷமபி வீக்ஷ்ய பாஶஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ணமூலே|
பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுரஹமந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்||
கமலநயந வாஸுதேவ விஷ்ணோ தரணிதராச்யுத ஶங்க சக்ரபாணே|
பவஶரணமிதீரயந்தி யேவை த்யஜபட தூரதரேணதாநபாபாந்” என்றும் இத்யாதிகளாலே –
நான் பகவத் ப்ரபந்நரை நியமிக்கக் கர்த்தாவன்று; என்னுடைய ப்ருத்யரான நீங்களும் அவர்களைக் கண்டால்
தடஸ்தராய் உங்களைப் பேணிக்கொண்டு தூரத்திலே விலகிப் போங்கோள் – என்று அவர்களுக்கு
புத்தி சொல்லி எல்லாரையும் கர்மாநுகுணமாக உசித தண்டம் பண்ணுகிற யமன் தன்னாலும்
ஶ்ரீவிஷ்ணுபுராணாதிகளிலே பாகவத வைபவம் சொல்லப்பட்டதிறே.
அபாகவத ஸம்ஶ்லேஷம் பாகவத விஶ்லேஷத்தையும், பகவத் விஶ்லேஷத்தையும் பிறப்பிக்கும்;
பாகவத ஸம்ஶ்லேஷம் பகவத ஸம்ஶ்லேஷத்தையும், அபாகவத விஶ்லேஷத்தையும் பிறப்பித்து,
இவனையும் கரைமரம் சேர்த்துவிடும். இவ்வெல்லைமயக்கு ஸதாசார்யன் கண்வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது.
அவன் கண்வட்டம் விட்டால் நித்ய ஸம்ஸாரியாய்ப் போமித்தனை என்று ஆச்சான் பிள்ளையும் மாணிக்க மாலையிலே அருளிச்செய்தார்.
ஆகையாலே ஸகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஆசார்யாதீநமாயிருக்க வேணும்;
அப்படியிராமல் கலங்கி தத்ஸம்பந்தத்தையும் மறந்து, ஸ்வாதந்த்ர்யம் தலையெடுத்து,
அக்ருத்யகரணம், பகவதபசாரம், பாகவதாபசாரம், அஸஹ்யாபசாரம் தொடக்கமான அநர்த்தங்களிலே
ஏதேனுமொன்றை விளைத்துக்கொண்டு, யாவதாத்மபாவி ரௌரவாதி கோர நரகங்களிலே விழுந்து
நஶித்துப் போகத் தக்கதான ஆத்மாக்களையும், முற்படத் தங்கள் திருவடிகளிலே ஒரு ஸம்பந்தமுண்டாகையாலும்
அவ்வாத்மாக்கள் மேல் படப்போகிற து:க பரம்பரைகளை அறிந்தருளுகையாலும் அவர்கள் விஷயத்தில்
‘ஐயோ’ என்கிற க்ருபாதிஶயத்திலே விடமாட்டாதே
“பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப்பணி கொள்”ளுகையிறே ஸதாசார்ய லக்ஷணம்.
ஆகையாலே தம்முடைய ஶிஷ்யனான நாலூரானும் க்ருமிகண்டனோடே கூடித் தம்முடைய விஷயத்திலே
மஹாபராதத்தைப் பண்ண, பெருமாள் அவனை ‘நஷமாமி’ என்று முனிந்தருள,
அவரோடே மறுதலைத்து ‘நாம்பெற்ற லோகம் நாலூரானும் பெறவேணும்’ என்று கூரத்தாழ்வானும்;
தம்முடைய ஶிஷ்யராயிருப்பாரொருவர் ஸஹவாஸ தோஷத்தாலே கலங்கி, விஷயப்ராவண்யம் தலையெடுத்து,
‘பட்டரே! உமக்கும் நமக்கும் பணியில்லை’ என்று அவருடைய திருவடிகளை விட்டகன்று போகத்தேட,
‘வாராய் பிள்ளாய்! அது உன்னுடைய அபிப்ராயத்தாலேயன்றே, நீ விட்டாலும் நான் விடேன்’ என்று
பட்டரும் தம்முடைய திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தும்;
அந்தரங்கராய், மஹாவிரக்தராய் இருப்பாரொரு ஸாது ஶ்ரீவைஷ்ணவர் அந்ந தோஷத்தாலே
அஹங்கராதிகள் தலையெடுத்து, பூர்வ தஶையில் பொகட்டுவந்த சவளத்தை (= ஈட்டியை) மீளவும்
எடுத்துக்கொண்டு ராஜ ஸேவை பண்ணித் திரிய, இப்படிக் கைகழிந்து போனவரையும் பின்தொடர்ந்து
யத்நேந பிடித்துக் கொண்டு வந்து, ஒரு அறையிலே தாமும் அவருமாக அடைத்துக் கொள்ள,
ஶ்ரீபாதத்துக்கு பரிவரான முதலிகள் எல்லாருங்கூடி ‘ஐயோ! ப்ரமாதம் பிறக்கிறது; சவளமும் உடைத்துக் கையுமான
அவனை விட்டு அறையினின்றும் புறப்படவேணும்’ என்று அதி க்லேஶத்தோடே கூப்பிட,
“இவனை ரக்ஷித்தாலல்லது நான் புறப்படேன்; இவன் உஜ்ஜீவியாதிருக்கில் இந்த சவளக்காரனோடே
அடைத்துக் கொண்டு சாவேன்’ என்ற வேதாந்திகளான நஞ்சீயரும்;
தந்தாம் விஷயங்களிலே குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும், க்ருபையும், சிரிப்பும், உகப்பும், உபகார ஸ்ம்ருதியும்
நடக்கவேணுமென்று அருளிச்செய்த மாத்ரமன்றிக்கே அநுஷ்டாநத்துக்கு ஸீமாபூமியாயிருக்கும் பிள்ளை லோகாசார்யரும்,
“ஸ்வீகரோதி ஸதாசார்யஸ்ஸர்வாநப்யவிஶேஷத: |
யத்புநஸ்தேஷு வைஷம்யம் தேஷாம் சிஜ்ஜ்ஞாநவ்ருத்தயோ:||
தேஷாமேவ ஹி தோஷோயம், ந சாஸ்யேதி விநிஶ்சிதம்|
அபக்வ பத்மகோசாநாம் அவிகாஸோ ரவேர்யதா” என்கிறபடியே தங்கள் திருவடிகளிலே ஆஶ்ரயித்திருக்கச் செய்தேயும்
அவர்களுடைய ஜ்ஞாந தௌர்பல்யத்தாலே மீளவும் விபரீத ப்ரவ்ருத்தராய், ஆத்மநாஶம் பிறந்து
போகத் தேடினவர்களையும் விட க்ஷமரன்றிக்கே “ஸ்காலித்யே ஶாஸிதாரம்” என்றும்,
“தேஶிகோ மே தயாலு:” என்றும் சொல்லுகிறபடியே தங்களுடைய நியமத்தலும் க்ருபாதிஶயத்தாலும் இப்படி ரக்ஷித்துப் போந்தார்கள்.
மிகச் சிறந்த க்ருபாளுக்களான ஸீதாப் பிராட்டியும் மாமுனிகளும்
“வாஸுதேவம் ப்ரபந்நாநாம் யாந்யேவ சரிதாநி வை|
தாந்யேவ தர்மஶாஸ்த்ராணீத்யேவம் வேத விதோ விது:” இப்படி பூர்வசார்யர்கள் விசேஷத்தை நம்முடைய
ஆசார்யர் திருநகரியிலே ஓலமேச்சான் மடத்திலே தாம் கண் வளர்ந்தருளாநிற்க, எம்பெருமானாருக்கு விஷமிட்ட
சண்டாளரைப் போலே மனக்குற்ற மாந்தரான அஸூயாபரரானவர்கள் கர்மகாலத்திலே மத்ய ராத்ரியிலே
அந்த மடத்திலே அக்நி ப்ரக்ஷேபத்தைப் பண்ண, அந்தக் கள்ளளரை அத் தேஶத்துக்குக் கர்த்தரான ராஜாக்கள்
கண்டு பிடித்துக் கொண்டு சித்ரவதம் பண்ணத்தேட “கேட்பார் செவிசுடு” என்கிறபடியே ஆருக்கும் ஶ்ரவண கடோரமான
இம் மஹாபாபத்தைத் தம்முடைய விஷயத்திலே கூசாமல் தீரக்கழியப் பண்ணின நிஷ்டுரரையுமுட்பட {அகப்பட}
“பாபாநாம் வா ஶுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம|
கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந்நாபராத் யதி” என்றும்,
“பவேயம் ஶரணம் ஹி வ:” என்றும்,
“க: குப்யேத் வாநரோத்தம” என்றும் சொல்லுகிறபடியே அந்த ராஜாக்களோடே மறுதலைத்து
அந்தக் கள்ளரைக் கொல்லாதபடி விடுவித்து ரக்ஷித்தருளின பரமக்ருபையாளர் என்னுமது லோகத்திலே எல்லாருமறிய ப்ரஸித்தமிறே.
இன்னமும் அஸ்மதாசார்யருடைய க்ருபாதிஶயமும், அவதாரவிசேஷமும் கீரி, கிளி, வ்ருக்ஷ வ்ருத்தாந்தங்களிலும்,
ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களிலும் அறிவார்க்கிறே தெரிவது.
————-
18 – முடிவுரை – ஆசார்ய நிஷ்டையின் பெருமைகள்
இப்படி “ஸ்தாவராண்யபி முச்யந்தே” என்றும்,
“பஶுர்மநுஷ்ய: பஷீ வா” என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க
வேணுமென்ற திருவுள்ளத்தையுமுடையராய், பரம தயாவான்களாயிருந்துள்ள நம் ஆசார்யர்களுடைய
அபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஒதுங்கித் தாங்கள், ஸர்வஜ்ஞராகையாலே ஸாராஸாரவிவேகரில் தலைவராய்,
செய்த வேள்வியர் என்கிறபடியே க்ருதக்ருத்யராய், எப்போதும் மங்களாஶாஸநபரராய்,
“நானும் பிறந்தமை பொய்யன்றே” ,
“தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அதுகாண்டும்” என்று சொல்லுகிறபடியே
பழுதாகாத வழியை அறிந்து வேறாக ஏத்தியிருக்குமவனைப் பற்றித் தெளிவுற்று வீவின்றி, எல்லாம் வகுத்தவிடமென்று
விஶ்வஸித்து மார்பிலே கை வைத்துக் கோடையிலே குளிர் காற்றடிக்க மிகவும் ஸுகோத்தரராய்,
“சிற்றவேண்டா” என்கிறபடியே ஒரு பரபரப்பற்று (குருபரம்பரையைப் பற்றுகை)
“தேவுமற்றறியேன்” என்றிருக்கும் ஶ்ரீமாந்களான அதிகாரிகள்:
ஆழ்வார் திருமகளாராண்டாள்,
நம்மாழ்வார் திருவடிகளிலே ஶ்ரீமதுரகவியாழ்வார்,
நாதமுனி திருவடிகளிலே குருகைக்காவலப்பன்,
ஆளவந்தார் திருவடிகளிலே தெய்வவாரியாண்டான்,
எம்பெருமானார் திருவடிகளிலே வடுகநம்பி,
நம்பிள்ளை திருவடிகளிலே பின்பழகிய பெருமாள் ஜீயர், வடக்குத் திருவீதிப் பிள்ளை,
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே கூரகுலோத்தமதாஸ நாயன், மணல்பாக்கத்து நம்பியார்,
திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஜீயர்.
இப்படியிருக்கும் உத்தமாதிகாரிகள் இவ்வாசார்யர்களிடத்திலே இன்னமும் உண்டாயிருக்கும் கண்டு கொள்வது.
நம்முடைய ஜீயர் திருவடிகளிலே இந்நிஷ்டைக்கு அதிகாரிகளாயிருக்கும் முதலிகள் பலருமுண்டு.
மற்றும் இக்காலத்தில் ஸச்சிஷ்ய – ஸதாசார்ய – லக்ஷணம் உண்டாயிருக்கும் ஜ்ஞாநாதிகரிடத்திலும் காணலாம்.
இனிமேலும் ராமாநுஜ ஸித்தாந்தம் நடக்கும் காலத்தளவும் “கலியுங்கெடும் கண்டு கொண்மின்” என்கிறபடியே
ஏவம்பூதரான அதிகாரிகளும் ஸுசிதர்.
“வேதஶாஸ்த்ரரதாரூடா: ஜ்ஞாநகட்கதராத்விஜா:|
க்ரீடார்த்தம பியத்ப்ரூயுஸ்ஸதர்ம: பரமோ மத:” என்றும்,
“அதிகந்தவ்யாஸ்ஸந்தோயத்யபி குர்வந்தி நைகமுபதேஶம்|
யாஸ்தேஷாம் ஸ்வைரகதாஸ்தா ஏவ பவந்தி ஶாஸ்த்ரார்த்தா:” என்றும்,
‘அல்லிமலர்ப்பாவைக்கன்பரடிக்கன்பர் சொல்லுமவிடு சுருதியாம்” என்றும்,
“ததுக்திமாத்ரம் மந்த்ராக்ர்யம்” என்றும் சொல்லுகிறபடியே ஜ்ஞாநாதிகரானவர்கள்
“நாவகாரியம் சொல்லிலாதவ”ர்களாகையாலே விநோதமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ததும்
நல் வார்த்தையாயிருக்குமதொழிய மறந்தும் அபார்த்தமாக ஒரு வார்த்தையும் அருளிச் செய்யார்களாகையாலே
அவர்களுடைய திவ்ய ஸுக்திகளெல்லாம் ஸகலவேதாந்த ஸாரமான திருமந்த்ரமாயிருக்கும்.
‘ருசோயஜும்ஷி ஸாமாநி ததைவாதர்வணாநி ச|
ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்தம் யச்சாந்யதபி வாங்மயம்” என்கிறபடியே ஸகல ப்ரமாண ப்ரமேயங்களும் ததந்தர்பூதமாயிருக்கும்.
ஆகையாலே நம்முடைய பெரியோர்களெல்லாரும் திருமந்த்ரத்தில் மூன்று பதத்திலும் சொல்லப்படுகிற
ஶேஷத்வ – பாரதந்த்ர்ய – கைங்கர்யங்கள் ப்ரதம பர்வமான ஈஶ்வர விஷயத்திலே அரைவயிறாய்,
சரம பர்வமான ஆசார்ய விஷயத்திலே பரிபூர்ணமாக ஸித்திக்கும் என்னும் இவ்வர்த்தம் இம்மந்த்ரத்தில்
தாத்பர்யார்த்தமாகையாலே அத்தை உட்கொண்டு ஸம்ஸ்க்ருதமாகவும், த்ராவிடமாகவும், மணிப்ரவாளவாகமவும்,
ஏககண்டமாக அருளிச்செய்த ப்ரமாணபலத்தாலே ஆசார்யாபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஸுப்ரதிஷ்டிதராய்,
“தென்குருகூர்நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே”,
“நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றும்,
“எந்நாவிருந்தெம்மையனிராமாநுசனென்றழைக்கும்”,
“இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“உன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே அல்லும்பகலும் அமரும்படி நல்கு அறுசமயவெல்லும் பரம இராமாநுச” என்றும்,
“குரோர்வார்த்தாஶ்ச கதயேத் – குரோர்நாம ஸதா ஜபேத்” என்றும் சொல்லுகிறபடியே
ஶேஷியாய், ஶரண்யனாய், ப்ராப்யனாய்,
“மாதா பிதா யுவதய:”,
“அன்னையாயத்தனாய்”,
“தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம் என்றனக்கு நீயே எதிராசா” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸர்வவித பந்துவுமாயிருந்துள்ள ஸதாசார்யனைக் குறித்துப் பண்ணும் ப்ரபத்தியான
ப்ரதம நமஸ்ஸை ஸதாநுஸந்தேயமான மந்த்ரமென்றும்,
“குருரேவ பரம் ப்ரஹ்ம”,
“தேனார்கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகி”,
“யஸ்ய ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீபப்ரதே குரௌ”,
“பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவனே பரதேவதை என்றும்,
“யேநைவ குருணாயஸ்ய ந்யாஸவித்யா ப்ரதீயதே|
தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவ ஸ:”,
“வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற்குன்று முதல்
சொல்லார் பொழில் சூழ் திருப்பதிகள்
எல்லாம் மருளாம் இருளோட மத்தகத்துத்
தன் தாள் அருளாலே வைத்த அவர்”,
“நம்புவார்பதி வைகுந்தம்” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அவன் எழுந்தருளியிருக்கிறவிடமே ப்ராப்ய பூமியான பரமபதம் என்றும்,
“ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே”,
“பேறொன்றுமற்றில்லை நின் சரணன்றி, அப்பேறளித்தற்கு ஆறொன்றும் இல்லை மற்றச்சரணன்றி”,
“உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்” என்றும் இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே அவன் திருவடிகளே உபாயோபேயங்களென்றும்,
“ராமாநுஜார்யவஶக: பரிவர்த்திஷீய”,
“நித்யம் யதீந்த்ர தவ திவ்யவபுஸ்ஸ்ம்ருதௌ மே ஸக்தம் மநோ பவது வாக் குணகீர்த்தநேஸௌ|
க்ருத்யஞ்ச தாஸ்யகரணந்து கரத்வயஸ்ய வ்ருத்த்யந்தரேஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச”,
‘ஶக்திக்கிலக்கு ஆசார்யகைங்கர்யம்” என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே த்ரிவிதகரணத்தாலும்
அவன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தமென்றும்,
‘ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும் பலஸாதந ஶுஶ்ரூஷையும்” என்கிறவிடத்தில்
சொல்லுகிறபடியே இவன் பண்ணும் கைங்கர்யம் கண்டு உகக்குமவனுடைய முகோல்லாஸமே மஹாபலம் என்றும்
அத்யவஸித்திருக்கும் அதிகாரிகளுக்கு ஸாம்ஸாரிகமான ஸகல துர்வ்யாபாரங்களையும் ஸவாஸநமாக விட்டு
அவனுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை ஸதாபஶ்யந்திப்படியே அநுபவித்து,
“அத்ர, பரத்ரசாபி”ப்படியே அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்து அம்ருத ஸாகராந்தர நிமக்ந
ஸர்வாவயவராய்க் கொண்டு காலதத்த்வமுள்ளதனையும் மங்களாஶாஸநம் பண்ணி வாழலாம்.
“கையிற்கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும்” என்கிற பாட்டும்,
“நாவினால் நவிற்று” என்கிற பாட்டும்
“நல்லவென்தோழி” என்கிற பாட்டும்,
“மாறாய தானவனை” என்கிற பாட்டும், பரமாசார்யரான ஆளவந்தாரருளிச் செய்த
“மாதா பிதா யுவதய:” என்கிற ஶ்லோகமும்,
“பஶுர்மநுஷ்ய:” என்கிற ஶ்லோகமும்,
“பாலமூகஜடாந்தாஶ்ச” என்கிற ஶ்லோகமும்,
“ஆசார்யஸ்ய ப்ராஸாதே ந மம ஸர்வமபீப்ஸிதம்” என்கிற வசநமும்,
“இஹலோக பரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை” என்று
மாணிக்கமாலையிலே பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த திவ்யஸூக்தியும்,
“மந்த்ரமும், தேவதையும், பலமும், பலாநுபந்திகளும், பலஸாதநமும், ஐஹிகபோகமுமெல்லாம் ஆசார்யனே
என்று நினைக்கக் கடவன்” என்று ஶ்ரீவசந பூஷணத்திலே பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்தருளின திவ்யஸுக்தியும்
இதுக்கு ப்ரமாணமாக அநுஸந்தேயங்கள்.
————
ஶ்ரீஸௌம்ய ஜாமாத்ரு முநே: ப்ரஸாத ப்ரபாவ ஸாக்ஷாத் க்ருத ஸர்வ தத்த்வம்|
அஜ்ஞாநதாமிஸ்ர ஸஹஸ்ர பாநும் ஶ்ரீ பட்டநாதம் முநிமாஶ்ரயாமி||
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply