ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள் / மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்
எல்லாவித காரிய சித்திகளும் பெறவும், மங்களம் உண்டாகவும் இந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகம்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவ தனுசா க்ருஹீத சீதா ஹஸ்த கரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

—————

ஒரே சுலோகத்தில் ஸ்ரீ சுந்தரகாண்டம்

யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே

க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ர புஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே

——————

ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
பால காண்டம் –77-சர்க்கங்கள் –2266-ஸ்லோகங்கள்
அயோத்யா காண்டம் –119-சர்க்கங்கள் –4185-ஸ்லோகங்கள்
ஆரண்ய காண்டம் –75-சர்க்கங்கள் –2441-ஸ்லோகங்கள்
கிஷ்கிந்தா காண்டம் –67-சர்க்கங்கள் –2453-ஸ்லோகங்கள்
ஸூ ந்தர காண்டம் –68-சர்க்கங்கள் –2807-ஸ்லோகங்கள்
யுத்த காண்டம் –128-சர்க்கங்கள் –5675-ஸ்லோகங்கள்
உத்தர காண்டம் -111 சர்க்கங்கள் -3373-ஸ்லோகங்கள்
மொத்தம் -645 சர்க்கங்கள் –23200 ஸ்லோகங்கள்

—————-

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் த்யானம்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோபசாந்தயே.

தோபிர் யுக்தா சதுர்பி: ஸ்படிகமணிமயீம் அக்ஷ மாலாம் ததானா
ஹஸ்தேனைகேன பத்மம் சிதமபி சுகம் புஸ்தகம் சாபரேன,
பாஸா குந்தேந்து சங்கஸ் ஸ்படிக மணி நிபா பாசமானாஸ மானா
ஸா மே வாக் தேவதேயம், நிவஸது வதனே சர்வதா சுப்ரசன்னா.

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

வால்மீகேர் முனி சிம்ஹச்ய கவிதா வன சாரிண:
ஸ்ருன்வன் ராம கதா நாதம் கோ ந யாதி பாராம் கதிம்.

ய: பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம்
அத்ருப்த்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸமகல்மஷம்.

கோஷ்பதீக்ருத வாராசிம், மசகீ க்ருத சாகரம்
ராமாயண மஹா மாலா ரத்னம் வந்தே அனிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீ சோக நாசனம்
கபீசம் அக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்ய சிந்தோ: சலிலம் சலீலம் ய: சோக வஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராராஞ்ஜலிர் ஆஞ்ஜனேயம்

ஆஞ்சனேயம் அதி பாடலானனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தரு மூல வாசினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகு நாத கீர்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலிம்,
பாஷ்பவாரி பரிபூரண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானர யூத முக்யம் ராம தூதம் சிரஸா நமாமி

ய: கர்ணாஞ்சலி சம்புடைர் அஹரஹ: சம்யக் பிபத்யாதராத்
வால்மீகேர் வதனாரவிந்த கலிதம் ராமாயணாக்யம் மது

ஜன்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை: அத்யந்த: சோபத்ரவம்
சம்சாரம் ஸ் விஹாய கச்சதி புமான் விஷ்னோ: பதம் சாஸ்வதம்

ததுபகத சமாஸ சந்தி யோகம் சம மதுரோபனதார்த வாக்ய பத்தம்
ரகுவர சரிதம் முனிப்ரணீதம் தஸ சிரஸஸ்ய வதம் நிசாமயத்வம்

வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ராசேதஸாதாஸீத் சாத் ராமாயணாத்மனா

வால்மீகிர் கிரி சம்பூதா ராம சாகர காமினி
புனாதி புவனம் புண்யா ராமாயண மஹா நதி.

வைதேஹீ ஸஹிதம் சுரத்ரும தலே ஹைமே மஹா மண்டபே,
மத்யே புஷ்பகமாஸனே மணி மயே வீராஸனே சுஸ்திதம்,

அக்ரே வாசயதி ப்ரபஞ்சன சுதே தத்வம் முனிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபிர் பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம

வாமே பூமி சுத புரச்ச ஹனுமான் பச்சாத் சுமித்ரா சுத:
சத்ருக்னச்ச பரதச்ச பார்ச்வ தலயோ:வாய்வாதி கோனேஷH ச,

சுக்ரீவச்ச விபீஷணச்ச யுவராட் தாரா சுதோ ஜம்பவான்,
மத்யே நீல சரோஜ கோமல ருசிம், ராமம் பஜே ச்யாமளம்

நமோஸ்து ராமாய ஸலமணாய, தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை,
நமோஸ்து ருத்ரேந்திர யமானிலேப்ய: நமோஸ்து சந்த்ரார்க மருத் கணேப்ய:

யோ தண்டகாரண்ய நிசாசரேந்த்ரான் கோதண்ட லீலா விஷயே சகார,
வேதண்ட சுண்டாயத பாஹH தண்ட: கோதண்ட பாணிர் குல தைவதம் ந:

குல தைவதம் அஸ்மாகம் கோதண்ட சர மண்டிதம்,
இஷ்ட தைவதம் அஸ்மாகம் இக்ஷ்வாகு குல நந்தனம்

க்யாத: ராம தூத: பவன தனு பவ: பிங்கலக்ஷ: சிகா வான்,
சீதா சோகாபஹாரி தசமுக விஜயீ, லக்ஷ்மனண: ப்ராண தாதா,

ஆனேதா பேஷஜாத்ரே: லவண ஜலனிதே: லங்கனே தீக்ஷிதோ ய:
வீர ஸ்ரீமான் ஹனூமான் மம மனசி வஸன் கார்ய சித்திம் தனோது.

புத்திர்பலம் யஸோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா,
அஜாட்யம் வாக் படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே, திண்மையும் தீமையும் சிதைந்து தேயுமே,
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே, இம்மையே இராம எனும் இரண்டெழுத்தினால்.

——–

ஸ்ரீ ராமாயணத்தை இயற்றிய ஸ்ரீ வால்மீகி முனிவரின் அவதார தினம் வட இந்தியாவில் இந்த தினத்தை ‘பர்கத் திவாஸ்’
எனும் பெயரில் சிறப்புடன் கொண்டாடுவார்கள். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ வால்மீகியின் இயற்பெயர் ஸ்ரீ ரத்னாகர்.

ஸ்ரீ திருநீர்மலை திவ்வியதேசத்தை தரிசிக்க வந்த ஸ்ரீ வால்மீகி முனிவர், தனது காவிய நாயகனாம் ஸ்ரீராமனுக்கு
இந்தக் கோயிலில் சந்நிதி இல்லாதது கண்டு, தாமே ஸ்ரீராம லட்சுமண சீதாபிராட்டியுடன் சந்நிதி நிர்மாணித்து,
ஸ்ரீகல்யாண ராமர் என்று திருப்பெயரும் சூட்டினாராம்.

———–

ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்:-

தத ஸ ப்ரயதோ வ்ருத்தோ வஷிஷ்டோ பராஹ்மனை ஸஹ
ராமம் ரத்னமயே பீடே ஷஹஸீதம் ந்யவேசயத்
வஷிஷ்டம் வாம தேவ ச ஜாபாலிரத காயப
காத்யாயன ஸுயஜஞ்ச கௌதமோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்ரம் ப்ரசந்த்னேன ஸ்கந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராஷம் வஸவோ வாஸவம் யதா
ரித்விக்பி ப்ராஹ்மனை பூர்வம் கன்யாபிர் மந்த்ரிபிஸ்ததா
யோதை சைவாப்யஷிஞ்சம்ஸ்தே ,ஸம்ப்ரஹ்ருஷ்டா ஸனைகமை

———-

ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டப்பகுதியில் அத்தியாயம் 22-ல் சேது பந்தனம் என்னும் பிரிவில்
ஸ்ரீ ராமபிரானின் வானர சேனைகள் கூடி இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாலத்தைக் கட்டிய
தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
வானர சேனைகளின் உதவியுடன் 34 கி. மீ. தூரமுள்ள பாலத்தை, 103 சிறிய குன்றுகளை
இணைத்து 5 நாள்களில் கட்டிமுடித்தார் ராமபிரான் என்று கூறப்படுகிறது

——————-

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

——————

இராமாயணத்தை ஸ்ரீ ராமாயணம் என்றும் ஸ்ரீமத் ராமாயணம் என்றும் அழைப்பாருளர்.
இவ்விரண்டுக்கும் என்ன வித்யாசம்? இவற்றில் எதை ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் ஆதரித்தார்கள் என்று ஒரு சிறு ஆராய்ச்சி.
ஸ்ரீ என்பது ஸ்ரீதேவியின் திருநாமம்.
முமூக்ஷுப்படியில் பிள்ளை உலகாரியன் “ஸ்ரீ என்று பெரிய பிராட்டியார்க்குத் திருநாமம்” என்கிறார்.
தம்முடைய சதுஶ்லோகியில் ஆளவந்தாரும் “ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதீ” என்கிறார்.
ஸ்ரீ என்ற வடமொழி சொல்லுக்கு மூலம் “ஸ்ரீந் சேவயாம்” என்ற சொற்றொடர்.
இதற்கு ஆறு பொருள்களை நம்முடைய பூர்வர்கள் விவரிக்கின்றனர்.
1. ஸ்ரீயதே
2. ஶ்ரயதே
3. ஶ்ருணோதி
4. ஶ்ராவயதி
5. ஶ்ருணாதி
6. ஶ்ரீணாதி

எல்லாராலும் அடையப்படுபவள் என்பதால் ஸ்ரீயதே.
எம்பெருமானை தான் அடைவதால் ஶ்ரயதே.
தன்னை அடைந்தவர்களின் குறைகளை அன்புடன் கேட்பதால் ஶ்ருணோதி.
அவைகளை எம்பெருமானை கேட்பிக்கச் செய்வதால் ஶ்ராவயதி.
அடியவர்கள் குற்றங்களை மறப்பிக்கச் செய்வதால் ஶ்ருணாதி.
தன் கல்யாண குணங்களால் அனைவரையும் மகிழ்விக்கச் செய்வதால் ஶ்ரீணாதி.

“மத்” என்ற சப்தம் அவளும் அவனும் என்றும் உடன் இருப்பதைக் காட்டுகிறது.
பிள்ளை லோகாசார்யர் வார்த்தை: “மதுப்பாலே இருவர் சேர்த்தியும் நித்யம் என்கிறது”.
அடியவர்கள் வரும் பொழுது அவர்களுக்காக பரிந்துரை செய்யும் கார்யமான
புருஷகாரத்திற்காக அகலகில்லேன் இறையும் என்று அவள் அவனை விட்டுப் பிரியாத நிலயைக் காட்டுவது இச்சப்தம்.

இதைக் கொண்டு பார்க்கும் போது ஸ்ரீமத் ராமாயணம் என்பதை நாம் தாயார் விட்டுப் பிரியாத
இராமனின் கதை என்று கொள்ளல் தகுதியே.
தொடக்கத்திலிருந்து இறுதி வரை தாயாரான சீதா பிராட்டியின் உளதாம் தன்மையை நாம் இராமாயணத்தில் காண்கிறோம்.
இருப்பினும் நம் பூர்வர்கள் ஸ்ரீ ராமாயாணம் என்றே கொண்டார்கள்.
ஏனெனில் – ராமாயணம் என்பது அவர்களுக்கு பிராட்டியின் கதையாகவே அமைந்திருந்தது.

ஸ்ரீவசனபூஷணத்திலே பிள்ளை உலகாரியன்
“இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது” என்றாரிறே.
வால்மீகி மஹரிஷியும் ராமாயணத்தை சீதையின் மஹத்தான காவ்யம் என்றான்.

காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் சீதாயா: சரிதம் மஹத் |
என்பது கவியின் பால காண்ட வாக்யம்.

அப்படி என்றால் இதற்கு ராமாயணம் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது,
சீதாயணம் என்றில்லையே என்பர் ரசம் அறியாதோர்.

ராமாயணம் என்பதில் ராமா என்ற சப்தம் எம்பெருமானையே காட்டுகிறது என்று நினைக்கலாகாது.

வடமொழியில் ரமா என்ற சொல் அழகிய பெண்ணைக் குறிக்கும்.
மங்கையர்கள் திலகமென வந்த செல்வியான பிராட்டிக்கே உரித்தான திருநாமம் ரமா என்பது.

மேலும் ராம என்கிற சொல் இனிமை என்ற அர்த்தத்தைத் தரும்.
அவ்வகையில் எம்பெருமானுக்குப் பத்னியாய் இனியளாயும்
அடியவர்களுக்குத் தாயாய் இனியளாயும் இருக்கும் பிராட்டியைக் குறிக்கும் என்பது சாலப் பொருந்தும்.

அதைக் கொண்டு பார்க்கும் போது ராமாயணம் என்ற சொற்றொடர் இராமனின் கதை என்கிறது
என்று நினைக்காமல் அது பிராட்டியின் கதை என்று நாம் தெளிவாகக் கொள்ளலாம்.

ஸ்ரீகுணரத்னகோஶத்தில் பட்டர் “ஸ்ரீமத்ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச்சரித்ரே” என்றவிடத்தில்,
ஸ்ரீ ராமனின் கதை என்று உலகில் பரவி இருக்கும் இவ்விதிஹாஸமானது
தேவரீருடைய சரித்ரத்தைச் சொல்லுவதினாலேயே உயிர் தரித்திருக்கின்றது என்றார்.
இப்படி எம்பெருமான் விஷயமாம் நிலையைக் காட்டும் இடத்தில் ஸ்ரீமத் சப்தம் ப்ரயோகிக்கப்பட்டும்,
மற்றைய நிலைகளில் ஸ்ரீ ராமாயணம் என்றே வழங்கி வருவதையும் காண்கிறோம்.

ஆகையால் சீதா பிராட்டி விட்டுப் பிரியாமல் இருக்கும் இராமனின் கதை என்று கொள்ளாமல்,
ஸ்ரீ என்னும் தாயாரான அழகிய பிராட்டியின் கதை என்று சொல்லும்
ஸ்ரீ ராமாயணம் என்பதையே கொண்டார்கள் நம் பெரியோர்கள்.

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீமத் வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

One Response to “ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள் / மங்கள ஸ்லோகங்கள் —”

  1. Devi Says:

    சீதை ராமரை எப்பொழுதும் பிரிவதில்லை. மிகவும் அருமையான விளக்கம்.🙏🏻

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading