அத்யாயம் -1-யது குல வம்சர் இழிவு நிலை
அத்யாயம் -2-யுத்த காலத்தில் நம்பிக்கை அத்யாயம் –
அத்யாயம் -3-ஸ்ரீ பூமாதேவியின் ஸ்தோத்ரம் -கலியுக தோஷங்களும் பரிகாரங்களும்
அத்யாயம் -4-பிரளய வகைகள்
அத்யாயம் -5-ஸ்ரீ பரீக்ஷித் மஹாராஜருக்கு சரம உபதேசங்கள்
அத்யாயம் -6-ஸ்ரீ பரீக்ஷித் மஹாராஜர் மோக்ஷம் -வேத உபதேசம்
அத்யாயம் -7-சம்ஹிதா வகைகளும் புராணங்களுள் உள்ள பத்து விஷயங்களும்
அத்யாயம் -8-ஸ்ரீ மார்க்கண்டேயரின் வைராக்ய சீர்மை -அவரது ஸ்ரீ நர நாராயணர்களுக்கு பிரார்தனை
அத்யாயம் -9-ஸ்ரீ மார்கண்டேயருக்கு ஸ்ரீ பரப்ரஹ்ம மஹிமை காட்டுதல்
அத்யாயம் -10-ஸ்ரீ சிவன் ஸ்ரீ மார்கண்டேயருக்கு உபதேசம்
அத்யாயம் -11-ஸ்ரீ மஹா விஷ்ணுவின் விசேஷணங்கள்-சூர்ய கதி மூலம் மாசங்களின் அடைவுகள்
அத்யாயம் -12-ஸ்ரீ மத் பாகவதத்தில் உள்ளவற்றின் தொகுப்பு
அத்யாயம் -13-ஸ்ரீ மத் பாகவதத்தில் மஹிமை
—————-
ஸ்கந்தம் 12 – அத்தியாயம் 1-ல் 41 ஸ்லோகங்கள் உள்ளன.
12:02 கலியுகத்தின் தீமைகளை விளக்குகிறார். கலியுகத்தின் அழிவில் பகவான் கல்கி அவதாரம் எடுத்து
தீயவர்களை அழிப்பார் என கூறுகிறார். மொத்தம் 44 ஸ்லோகங்கள் உள்ளன.
12:03 மொத்தம் 52 ஸ்லோகங்கள்.
கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவானின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே
மோக்ஷம் கிட்டும் என விளக்கப்படுகிறது. முத்ன்முதலில் ஸத்ய யுகம் இருந்தது.
அப்போது மக்கள் இரக்க குணத்தோடும், அமைதியாகவும், நட்பாகவும் இருந்தனர்.
கலியுகத்தின் மக்களின் இழிந்த நிலையை விரிவாக விளக்குகிறார்.
12:04-ல் நாலு விதமான் அழிவுகள் (பிரளயங்கள்) சொல்லப்படுகின்றன.
நைமித்திக பிரளயம், ப்ராக்ரித்கா, அத்யாந்திகா பிரளயங்கள் விளக்கப்படுகின்றன. மொத்தம் 43 ஸ்லோகங்கள்.
12:05 மொத்தம் 13 ஸ்லோகங்கள். பரீக்ஷித் மஹாராஜாவின் மரணம் குறித்த பயங்களை போக்குகிறார்.
12:06 ஒரு ப்ராஹ்மணனின் உருவத்தில் வந்த தக்ஷக என்ற பாம்பு பரீக்ஷித் மஹாராஜாவை கடிக்க
அவர் இவ்வுலகம் நீத்து வைகுந்தம் போகிறார்.
பரீக்ஷித்தின் மகனான ஜெயமேஜெயன் என்ற அரசனுக்கு பாம்புகள் மீது கோபம் வர,
ஒரு யாகம் செய்து எல்லா பாம்புகளையும் அழிக்கிறார். இந்திரனின் பாதுகாப்பில் இருந்த தக்ஷகனும்
யாகத்தின் அக்னியில் விழ வரும் போது, ஆங்கீரஸ ரிஷியின் மகனான ப்ரஹஸ்பதி குறுக்கிட்டு,
தக்ஷகனுக்கு உயிர் அளிக்கிறார். மொத்தம் 80 ஸ்லோகங்கள்.
12:07-ல் ஸ்ரீ ஸூத கோஸ்வாமி அதர்வண வேதம், அதன் பிரிவுகள், புராணங்கள்
குறித்து விளக்குகிறார். மொத்தம் 25 ஸ்லோகங்கள்.
12:08-ல் ஸ்ரீ மார்க்கண்டேய ரிஷியைப் பற்றி சொல்லுகிறது. மொத்தம் 49 ஸ்லோகங்கள்.
12:09-ல் ஸ்ரீ மார்க்கண்டேய ரிஷியைப் பற்றி மேலும் சொல்லுகிறது. மொத்தம் 34 ஸ்லோகங்கள்.
12:10-ல் ஸ்ரீ மார்க்கண்டேய ரிஷி ஸ்ரீ சிவன் ஸ்ரீ பார்வதியிடமிருந்து ஆசிகள் பெற்றது விளக்கப்படுகிறது.
மொத்தம் 42 ஸ்லோகங்கள்.
12-11-ல் ஸ்ரீ மஹாபுருஷன் (ஸ்ரீ பகவான்) குறித்து விளக்கப்படுகிறது.
ஸ்ரீ ஸுரிய பகவான் ரூபத்தில் அவரது 6 குணங்களை சொல்லப்படுகிறது. 50 ஸ்லோகங்கள்.
12:12-ல் ஸ்ரீமத் பாகவத புராணம், ஸ்ரீ பகவானின் லீலைகள் மீண்டும் சுருக்கமாக சொல்லப்படுகின்றன.
மொத்தம் 69 ஸ்லோகங்கள்.
—————-
நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம் ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம் பிபத பாகவதம் ரஸம்
ஆலயம் முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா: ஸ்ரீமத் பாகவதம்,
வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட
அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம்,
ஸ்ரீ ஸூக தேவரின் (’ஸ்ரீ ஸூக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால்,
மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது.
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply