ஸ்ரீ பாண்டுரங்காஷ்டகம்–

ஸ்ரீ பாண்டுரங்கனைப் பணிவது சகல மங்களங்களையும் தரும் என்பது ஐதிகம்
ஸ்ரீ பாண்டுரங்கனைப் போற்றும் உயர்வான இந்த அஷ்டகத்தை இயற்றியவர் பகவத் பாதரான
ஸ்ரீ ஆதிசங்கர மகான் என்பது கூடுதல் சிறப்பு.

ஸ்ரீ பாண்டுரங்காஷ்டகம்

மஹா யோக பீடே தடே பீமரத்யா
வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரைi
ஸமாகத்ய தீஷ்டந்தம் ஆனந்த கந்தம்
பர ப்ரஹ்ம லிங்கம் பஜே பாண்டு ரங்கம்ii

சிறந்த யோக பீடமான பீமா நதிக் கரையில்
புண்டரீகனுக்கு வரம் அளிப்பதற்காக முனிவர்களுடன் கூடி நின்று கொண்டிருப்பவரும்,
ஆனந்தம் என்ற பயிருக்கு ஆதாரமானவரானவரும்,
அருவமான பரப் ப்ரஹ்மத்துக்கு அடையாளமான உருவத்துடன் விளங்குபவருமான ஸ்ரீ பாண்டுரங்கனை வணங்குகிறேன்.

தடித் வாஸஸம் நீல மேகாவ பாஸம்
ரமா மந்திரம் சுந்தரம் சித் பிரகாசம்i
வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்த பாதம்
பர ப்ரஹ்ம லிங்கம் பஜே பாண்டுரங்கம்ii

மின்னல் போன்று பளிச்சிடும் ஒளியுடைய உடையணிந்தவரும், நீலமேகத்தைப் போன்ற நிறமுடையவரும்,
ஸ்ரீ லக்ஷ்மியின் இருப்பிடமானவரும், அழகானவரும், மிகச் சிறந்தவரும், செங்கல் மீது சமமாகப் பதிந்திருக்கும்
பாதத்தை உடையவரும் (மகாபலியிடம் மூவடியால் மூன்று உலகளந்தவரின் இருகால்கள் ஒரு செங்கல்களின் மேல்)
அருவமான பரப் ப்ரஹ்மத்தின் உருவ அடையாளமாக ஒளிரும் ஸ்ரீபாண்டுரங்கனை வணங்குகிறேன்.

ப்ரமாணம் பவாப்தேரிதம் மாமகானாம்
நிதம்ப கராப்யாம் த்ருதோயேன தஸ்மாத்i
விதாதுர் வஸத்யை த்ருதோநாபி கோச
பர ப்ரஹ்ம லிங்கம் பஜே பாண்டுரங்கம்ii

என் போன்ற சாமான்யர்களுக்காக (ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் சொல்கிறார்!!) ஜனன மரணமென்கிற
சம்சார சாகரம் என்பது இவ்வளவே என்று கூறுவது போல், எவரால் தன் இடைப் பிரதேசம் தன் கைகளால் தாங்கப்படுகிறதோ,
பிரம்மா வாசம் செய்வதற்காக தனது தொப்புள் கொடி தாங்கியிருப்பவர் எவரோ அந்த அருவமான
ஸ்ரீ பரப் ப்ரஹ்மத்தின் அடையாள உருவமான ஸ்ரீ பாண்டுரங்கனை நான் பூஜிக்கிறேன்.

(தன்னை நம்பும் அடியார்களுக்கு சம்சார சாகரம் சிறு குட்டையைப் போன்றதாகி விடும் என்பதைக் காட்டவே
இடுப்பளவைச் சுட்டுவதுபோன்ற முத்திரை காட்டுகிறார் ஸ்ரீ பாண்டுரங்கன்)

ஸ்புரத் கௌஸ்து பாலங்கிருதம் கண்டதேசே
ச்ரியா ஜூஷ்ட கேயூரகம் ஸ்ரீநிவாஸம்i
சிவம் சாந்த மீட்யம் வரம் லோகபாலம்
பர ப்ரஹ்ம லிங்கம் பஜே பாண்டு ரங்கம்ii

கழுத்துப் பிரதேசத்தில் ஸ்ரீ கௌஸ்துப மணியால் அலங்கரிக்கப்பட்டவரும்,
ஸ்ரீதேவியால் அணிவிக்கப் பட்ட தோள் வளையினை உடையவரும்,
ஸ்ரீதேவிக்கு இருப்பிடமானவரும், சிவஸ்வரூபியும், சாந்த வடிவினரும், புகழத் தக்கவரும், மிகச் சிறந்தவரும்,
உலக ரட்சகரும், அந்த அருவமான ஸ்ரீ பரப் ப்ரஹ்மத்தின் உருவ அடையாளமாக விளங்குபவருமாகிய
ஸ்ரீ பாண்டுரங்கனை வணங்குகிறேன்.

சரச் சந்த்ர பிம்பானனம் சாரு ஹாஸம்
லசத் குண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம்i
ஜபாராக பிம்பாதரம் கஞ்ஜ நேத்ரம்
பர ப்ஹ்ம லிங்கம் பஜே பாண்டுரங்கம்ii

சரத்கால சந்திரனின் உருவைப் போன்ற ஒளியுடையவர்,புன்னகை தவழும் முகத்தினை உடையவர்,
ஒளிரும் குண்டலங்களால் இடிபடும் கன்னப் பிரதேசத் தை உடையவர்,செம்பருத்தியைப் போன்ற சிவந்த
இதழ்களையுடையவர்,செந்தாமரைக் கண்ணன் என்கிற உருவமற்ற
ஸ்ரீ பரம்பொருளின் உருவ அடையாள மாகத் திகழும் ஸ்ரீ பாண்டுரங்கனை துதிக்கிறேன்.

கிரீடோஜ்வலத் ஸர்வதிக் ப்ராந்த பாகம்
ஸுரை ரார்ச்சிதம் திவ்ய ரத்னைரனர்கைi
த்ரி பங்கா க்ருதிம் பர்ஹமால்யாவதம்ஸம்
பர ப்ரஹ்ம லிங்கம் பஜே பாண்டுரங்கம்ii

எல்லா திசைகளிலும் ஒளிரும் கிரீடத்தை அணிந்தவர்,மதிப்பிட முடியாத சிறந்த ரத்தினங்களைக் கொண்டு
தேவர்களால் அர்ச்சிக்கப்பட்டவர், மூன்று வளை வாக நளின எழிலுடன் உடலை வளைத்து நிற்பவர்,
மயிலிறகு மாலையை அணிந்தவர்,அருவமான ஸ்ரீபரப் ப்ரஹ்மத்தின் உருவ அடையாளமாக விளங்கும்
ஸ்ரீ பாண்டுரங்கனை வணங்குகிறேன்.

விபும் வேணு நாதம் சாந்தம் துரந்தம்
ஸ்வயம் லீலயா கோபவேஷம் ததானம்i
கவாம் ப்ருந்த காநந்ததம் சாருஹாஸம்
பர ப்ரஹ்ம லிங்கம் பஜே பாண்டுரங்கம்ii

எங்கும் வியாபித்திருப்பவர், குழலிசைப்பவர், முடிவற்றவர், விளையாட்டாகவே இடையர் வேடம் பூண்டவர்,
மாடு கன்றுகளை மேய்த்தவர், புன்னகையால் மிளிர்பவர், நீக்கமற பிரபஞ்ச வெளியில் வியாபித்தவராக
ஸ்ரீ பரப் ப்ரஹ்மத்தின் உருவ அடையாளமாகத் திகழும் ஸ்ரீ பாண்டுரங்கனைப் போற்றுகிறேன்.

அஜம் ருக்மிணீ ப்ராண ஸஞ்ஜீவனம் தம்
பரந்தாம கைவல்ய மேகம் துரீயம்i
ப்ரஸன்னம் ப்ரபன்னார்த்தி ஹரம் தேவ தேவம்
பர ப்ரஹ்ம லிங்கம் பஜே பாண்டு ரங்கம்ii

பிறப்பற்றவர், ஸ்ரீ ருக்மிணியின் உயிரைத் தழைக்கச் செய்பவர், பரமபத நிலையானவர்,
விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்றுக்கும் அப்பாற்பட்ட ஆத்மாநுபூதியான நான்காவது நிலையில் இருக்கும் ஒரே ஒருவர்,
அருட்பொலிவுள்ளவர், அடியார்களின் துயரை அழிப்பவர், தேவாதி தேவர்,
அருவமான ஸ்ரீ பரப் ப்ரஹ்மத்தின் உருவ அடையாளமாக இருப்பவரான ஸ்ரீ பாண்டுரங்கனை வணங்குகிறேன்.

ஸ்தவம் பாண்டுரங்கஸ்யவை புண்யதம்யே
படந்தி ஏக சித்தேன பக்த்யா ச நித்யம்i
பவாம் போநிதிம் தே அபிதீர்த்வா அந்தகாலே
ஹரேர் ஆலயம் சாஸ்வதம் ப்ராப்னுவந்திii

புண்ணியத்தைக் கொடுக்கும் ஸ்ரீ பாண்டுரங்கனின் மீதான இந்த துதியை எவர் ஒன்றிய மனதுடன் தினமும் படிக்கிறார்களோ,
அவர்கள் சகல சௌபாக்யமும் பெற்று ஆரோக்யமாய் வாழ்ந்து முடிவில் ஜனன மரணமாகிய இந்த சம்சார கடலைக் கடந்து
ஸ்ரீ ஹரியின் ஆலயத்தை (ஸ்ரீ வைகுண்ட பதவியை) நிலையான இருப்பிடமாகக் கொள்வர்.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading