ப்ருது அரசராக அபிஷேகம் செய்யப்பட்டபோது பூமியில் விளைச்சலே இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டது. ஜனங்கள் பசியால் வாடி அரசரிடம் முறையிட்டார்கள். அவர் இது எதனால் ஏற்பட்டது என்று வெகு நேரம் ஆலோசித்த பின் அதன் காரணததை உணர்ந்தார்.
வேனனின் அதர்ம ஆட்சியால் கோபம் கொண்டு பூமி தன் இயற்கைச் செல்வத்தை எல்லாம் மறைத்துக்கொண்டதை அறிந்து மக்கள் துன்பத்திற்குக் காரணமான பூமி மேல் எய்வதற்கு அம்பைத் தொடுத்தார் . அப்போது பூமி ஓர் பசுவின் உருவம் கொண்டு வேடனால் துரத்தப்பட்ட மான்போல் பயந்து ஓடக்கண்டு, அதைத் துரத்தினார்.
மூவுலகும் ஓடியும் பின்னால் துரத்தும் அவரைக் கண்டு பயந்து பூமி தன்னைத்துரத்தும் காரணம் கேட்க, அவர் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான உணவு முதலியவைகளை மறைத்துக் கொண்டு அவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தியதால் பூமியை தண்டிக்க விரும்புவதாகக் கூற பூமிதேவி அவரை ஹரியின் அம்சமாக அறிந்து துதிக்க த்தொடங்கினாள்.
மாயையினால் பலவகைத் தோற்றமளிக்கும் பரமபுருஷனான உமக்கு நமஸ்காரம். என்னை எல்லா உயிர்களுக்கும் இருப்பிடமாக எவர் ஸ்ருஷ்டித்தாரோ அவரே என்னை அழிக்க முற்பட்டால் நான் யாரிடம் முறையிடுவேன்?
மாயையின் வசத்தில் உள்ளவரையில் , ஒன்றாக இருப்பினும் பலவாகத் தோற்றம் அளிப்பவரும், பிரம்ம தேவரை சிருஷ்டித்து அவரிடம் உலகை சிருஷ்டிக்கும் திறனையும் அளித்தவருமான அந்த பரமாத்மாவின் திருவுள்ளத்தையும் செயலையும் யார் அறிய முடியும்!
சர்வசக்திமானாகிய புருஷோத்தமருக்கு வணக்கம், வராஹ ரூபம் கொண்டு என்னை பாதாளத்தில் இருந்து மீட்டு சமுத்திரத்தின் மேல் வைத்து எல்லா ஜீவராசிகளுக்கும் இருப்பிடமாகச் செய்தவரே இன்று மக்களைக் காக்க ப்ருது என்ற பெயரில் என்னை அழிக்க முற்படுவதோ ? முக்குணங்களால் மறைக்கப்பட்டு உங்களை அறிய முடியாமல் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு இரங்கவேண்டும்.
அடுத்து பூமியின் வேண்டுகோளின்படி ஒவ்வொரு இனத்தில் இருந்தும் ஒவ்வொரு கன்றையும் கறப்போனையும் நியமித்து பூமியின் செல்வங்கள் அனைத்தையும் கறந்த வரலாறு கூறப்படுகிறது.
————
ஸ்ரீமத் பாகவதம்- ஸ்கந்தம் 4- அத்தியாயம் 18
பூமிதேவி கோபத்துடன் உதடு துடிக்கும் ப்ருதுவைப்பார்த்துக் கூறினாள்.
“துஷ்ட ஜனங்களால் யாகத்திற்காக உபயோகிக்கப்படும் த்ரவ்யங்களை துஷ்ப்ரயோகம் செய்ததைப் பார்த்து அவைகளை பத்திரப்படுத்தவே என்னுள் அடக்கிக் கொண்டேன். என்னுள் பாலாக இருக்கும் அவைகளை வெளிக்கொணர்வதற்கு தகுந்த கறப்பவர்களைத் தேர்ந்தெடுத்துக் கறந்திட வேண்டும். “
அதைக்கேட்ட ப்ருது ஸ்வாயம்புவ மனுவைக் கன்றாக வைத்து சகல தானியங்களையும் தன் கையாகிய பாத்திரத்தில கறந்தார். பிறகு ஸகல இனத்தவரும் தம் தம் இனத்தில் ஒருவரைக் கன்றாகவும் ஒருவரை கறப்பவனாகவும் தேர்தெடுத்து தங்களுக்கு வேண்டியவற்றைக் கறந்துகொண்டனர்.
இதை பாகவதம் பின்வருமாறு வர்ணிக்கிறது.
கறப்பவர்- கன்று – பாத்திரம் -பால்
ரிஷிகள்- ப்ருஹஸ்பதி-இந்த்ரியங்கள்- வேத சாஸ்திரங்கள்
தேவர்கள்-இந்திரன்- தங்கப் பாத்திரம்- அம்ருதம்
அசுரர்கள் – ப்ரஹ்லாதன்-இரும்புப் பாத்திரம்- மதுபானம்
கந்தர்வர்- விசுவாவசு –தாமரை – இசை , இனிய சொற்கள், அழகு
பித்ருக்கள் –அர்யமா-மண்பாத்திரம்- கவ்யம்
சித்தர்கள் – கபிலர்- ஆகாயம் – அஷ்டசித்திகள்
வித்யாதரர்கள் – கபிலர்- ஆகாயம்- ஆகாயமார்கமாகச் செல்லுதல்
கிம்புருஷர்கள்-மாயை- மறையும் ஆற்றல்
விஷ ஜந்துக்கள் – தஷகன்- வாய் – விஷம்
காட்டு மிருகங்கள் – சிங்கம்-சரீரம்- மாமிசம்
மரங்கள்- ஆலமரம்- ருசிகள்
மலைகள் –ஹிமயமலை- ரத்னங்கள், ஓஷதிகள்
இவ்வாறு எல்லோரும் பூமியை காமதேனுவாகவும்,தங்கள் ஸ்வதருமத்தை கன்றாகவும் பாவித்து தம் தம் நிலைகளாகிய பாத்திரத்தில் தனித்தனியே விரும்பியவற்றைக் கறந்தனர்.
பிறகு ப்ருது சக்ரவர்த்தி ப்ரீதியுடன் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்த பூமியைத் தன் மகளாக நேசித்துத்தான் புதல்வி எனவே பாவித்தார் அதனால் பூமிக்கு ப்ரு திவீ என்ற பெயர் ஏற்பட்டது
.
இதற்கு முன் பூமியில் பட்டினம் கிராமம் என்ற பிரிவுகள் இல்லை. ப்ருதுவே மக்களுக்குவழி காட்டும் பிதாவைப்போல் ஆங்காங்கு பட்டினம், கிராமம், வயல்கள் மலைவாசஸ்தலங்கள் என்ற பிரிவுகளை ஏற்படுத்தினார். அதனால் மக்கள் பயமில்லாமல் அங்கங்கு இஷ்டம் போல் சுகமாக வாழ்ந்தனர்
———–
மைத்ரேய உவாச
இத்த²ம்ʼ ப்ருʼது²மபி⁴ஷ்டூய ருஷா ப்ரஸ்பு²ரிதாத⁴ரம் .
புனராஹாவநிர்பீ⁴தா ஸம்ʼஸ்தப்⁴யாத்மானமாத்மனா .. 1..
ஸன்னியச்சா²பி⁴போ⁴ மன்யும்ʼ நிபோ³த⁴ ஶ்ராவிதம்ʼ ச மே .
ஸர்வத꞉ ஸாரமாத³த்தே யதா² மது⁴கரோ பு³த⁴꞉ .. 2..
அஸ்மின் லோகே(அ)த²வாமுஷ்மின் முனிபி⁴ஸ்தத்த்வத³ர்ஶிபி⁴꞉ .
த்³ருʼஷ்டா யோகா³꞉ ப்ரயுக்தாஶ்ச பும்ʼஸாம்ʼ ஶ்ரேய꞉ப்ரஸித்³த⁴யே .. 3..
தானாதிஷ்ட²தி ய꞉ ஸம்யகு³பாயான் பூர்வத³ர்ஶிதான் .
அவர꞉ ஶ்ரத்³த⁴யோபேத உபேயான் விந்த³தே(அ)ஞ்ஜஸா .. 4..
தானநாத்³ருʼத்ய யோ(அ)வித்³வானர்தா²னாரப⁴தே ஸ்வயம் .
தஸ்ய வ்யபி⁴சரந்த்யர்தா² ஆரப்³தா⁴ஶ்ச புன꞉ புன꞉ .. 5..
புரா ஸ்ருʼஷ்டா ஹ்யோஷத⁴யோ ப்³ரஹ்மணா யா விஶாம்பதே .
பு⁴ஜ்யமானா மயா த்³ருʼஷ்டா அஸத்³பி⁴ரத்⁴ருʼதவ்ரதை꞉ .. 6..
அபாலிதாநாத்³ருʼதா ச ப⁴வத்³பி⁴ர்லோகபாலகை꞉ .
சோரீபூ⁴தே(அ)த² லோகே(அ)ஹம்ʼ யஜ்ஞார்தே²(அ)க்³ரஸமோஷதீ⁴꞉ .. 7..
நூனம்ʼ தா வீருத⁴꞉ க்ஷீணா மயி காலேன பூ⁴யஸா .
தத்ர யோகே³ன த்³ருʼஷ்டேன ப⁴வாநாதா³துமர்ஹதி .. 8..
வத்ஸம்ʼ கல்பய மே வீர யேனாஹம்ʼ வத்ஸலா தவ .
தோ⁴க்ஷ்யே க்ஷீரமயான் காமானனுரூபம்ʼ ச தோ³ஹனம் .. 9..
தோ³க்³தா⁴ரம்ʼ ச மஹாபா³ஹோ பூ⁴தானாம்ʼ பூ⁴தபா⁴வன .
அன்னமீப்ஸிதமூர்ஜஸ்வத்³ப⁴க³வான் வாஞ்ச²தே யதி³ .. 10..
ஸமாம்ʼ ச குரு மாம்ʼ ராஜன் தே³வவ்ருʼஷ்டம்ʼ யதா² பய꞉ .
அபர்தாவபி ப⁴த்³ரம்ʼ தே உபாவர்தேத மே விபோ⁴ .. 11..
இதி ப்ரியம்ʼ ஹிதம்ʼ வாக்யம்ʼ பு⁴வ ஆதா³ய பூ⁴பதி꞉ .
வத்ஸம்ʼ க்ருʼத்வா மனும்ʼ பாணாவது³ஹத்ஸகலௌஷதீ⁴꞉ .. 12..
ததா²பரே ச ஸர்வத்ர ஸாரமாத³த³தே பு³தா⁴꞉ .
ததோ(அ)ன்யே ச யதா²காமம்ʼ து³து³ஹு꞉ ப்ருʼது²பா⁴விதாம் .. 13..
ருʼஷயோ து³து³ஹுர்தே³வீமிந்த்³ரியேஷ்வத² ஸத்தம .
வத்ஸம்ʼ ப்³ருʼஹஸ்பதிம்ʼ க்ருʼத்வா பயஶ்ச²ந்தோ³மயம்ʼ ஶுசி .. 14..
க்ருʼத்வா வத்ஸம்ʼ ஸுரக³ணா இந்த்³ரம்ʼ ஸோமமதூ³து³ஹன் .
ஹிரண்மயேன பாத்ரேண வீர்யமோஜோ ப³லம்ʼ பய꞉ .. 15..
தை³தேயா தா³னவா வத்ஸம்ʼ ப்ரஹ்லாத³மஸுரர்ஷப⁴ம் .
விதா⁴யாதூ³து³ஹன் க்ஷீரமய꞉பாத்ரே ஸுராஸவம் .. 16..
க³ந்த⁴ர்வாப்ஸரஸோ(அ)து⁴க்ஷன் பாத்ரே பத்³மமயே பய꞉ .
வத்ஸம்ʼ விஶ்வாவஸும்ʼ க்ருʼத்வா கா³ந்த⁴ர்வம்ʼ மது⁴ ஸௌப⁴க³ம் .. 17..
வத்ஸேன பிதரோ(அ)ர்யம்ணா கவ்யம்ʼ க்ஷீரமது⁴க்ஷத .
ஆமபாத்ரே மஹாபா⁴கா³꞉ ஶ்ரத்³த⁴யா ஶ்ராத்³த⁴தே³வதா꞉ .. 18..
ப்ரகல்ப்ய வத்ஸம்ʼ கபிலம்ʼ ஸித்³தா⁴꞉ ஸங்கல்பநாமயீம் .
ஸித்³தி⁴ம்ʼ நப⁴ஸி வித்³யாம்ʼ ச யே ச வித்³யாத⁴ராத³ய꞉ .. 19..
அன்யே ச மாயினோ மாயாமந்தர்தா⁴நாத்³பு⁴தாத்மனாம் .
மயம்ʼ ப்ரகல்ப்ய வத்ஸம்ʼ தே து³து³ஹுர்தா⁴ரணாமயீம் .. 20..
யக்ஷரக்ஷாம்ʼஸி பூ⁴தானி பிஶாசா꞉ பிஶிதாஶனா꞉ .
பூ⁴தேஶவத்ஸா து³து³ஹு꞉ கபாலே க்ஷதஜாஸவம் .. 21..
ததா²ஹயோ த³ந்த³ஶூகா꞉ ஸர்பா நாகா³ஶ்ச தக்ஷகம் .
விதா⁴ய வத்ஸம்ʼ து³து³ஹுர்பி³லபாத்ரே விஷம்ʼ பய꞉ .. 22..
பஶவோ யவஸம்ʼ க்ஷீரம்ʼ வத்ஸம்ʼ க்ருʼத்வா ச கோ³வ்ருʼஷம் .
அரண்யபாத்ரே சாது⁴க்ஷன் ம்ருʼகே³ந்த்³ரேண ச த³ம்ʼஷ்ட்ரிண꞉ .. 23..
க்ரவ்யாதா³꞉ ப்ராணின꞉ க்ரவ்யம்ʼ து³து³ஹு꞉ ஸ்வே கலேவரே .
ஸுபர்ணவத்ஸா விஹகா³ஶ்சரம்ʼ சாசரமேவ ச .. 24..
வடவத்ஸா வனஸ்பதய꞉ ப்ருʼத²க்³ரஸமயம்ʼ பய꞉ .
கி³ரயோ ஹிமவத்³வத்ஸா நானாதா⁴தூன் ஸ்வஸானுஷு .. 25..
ஸர்வே ஸ்வமுக்²யவத்ஸேன ஸ்வே ஸ்வே பாத்ரே ப்ருʼத²க்பய꞉ .
ஸர்வகாமது³கா⁴ம்ʼ ப்ருʼத்²வீம்ʼ து³து³ஹு꞉ ப்ருʼது²பா⁴விதாம் .. 26..
ஏவம்ʼ ப்ருʼத்²வாத³ய꞉ ப்ருʼத்²வீமந்நாதா³꞉ ஸ்வன்னமாத்மன꞉ .
தோ³ஹவத்ஸாதி³ பே⁴தே³ன க்ஷீரபே⁴த³ம்ʼ குரூத்³வஹ .. 27..
ததோ மஹீபதி꞉ ப்ரீத꞉ ஸர்வகாமது³கா⁴ம்ʼ ப்ருʼது²꞉ .
து³ஹித்ருʼத்வே சகாரேமாம்ʼ ப்ரேம்ணா து³ஹித்ருʼவத்ஸல꞉ .. 28..
சூர்ணயன் ஸ்வத⁴னுஷ்கோட்யா கி³ரிகூடானி ராஜராட் .
பூ⁴மண்ட³லமித³ம்ʼ வைன்ய꞉ ப்ராயஶ்சக்ரே ஸமம்ʼ விபு⁴꞉ .. 29..
அதா²ஸ்மின் ப⁴க³வான் வைன்ய꞉ ப்ரஜானாம்ʼ வ்ருʼத்தித³꞉ பிதா .
நிவாஸான் கல்பயாஞ்சக்ரே தத்ர தத்ர யதா²ர்ஹத꞉ .. 30..
க்³ராமான் புர꞉ பத்தனானி து³ர்கா³ணி விவிதா⁴னி ச .
கோ⁴ஷான் வ்ரஜான் ஸஶிபி³ரானாகரான் கே²டக²ர்வடான் .. 31..
ப்ராக்ப்ருʼதோ²ரிஹ நைவைஷா புரக்³ராமாதி³ கல்பனா .
யதா²ஸுக²ம்ʼ வஸந்தி ஸ்ம தத்ர தத்ராகுதோப⁴யா꞉ .. 32..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
சதுர்த²ஸ்கந்தே⁴ ப்ருʼது²விஜயே அஷ்டாத³ஶோ(அ)த்⁴யாய꞉ .. 18..
————————————
பூமி தேவி கோபத்துடன் உதடு துடிக்கும் ப்ருதுவைப் பார்த்துக் கூறினாள்.
துஷ்ட ஜனங்களால் யாகத்திற்காக உபயோகிக்கப்படும் த்ரவ்யங்களை துஷ் ப்ரயோகம் செய்ததைப் பார்த்து
அவைகளை பத்திரப்படுத்தவே என்னுள் அடக்கிக் கொண்டேன். என்னுள் பாலாக இருக்கும் அவைகளை
வெளிக் கொணர்வதற்கு தகுந்த கறப்பவர்களைத் தேர்ந்தெடுத்துக் கறந்திட வேண்டும். “
அதைக்கேட்ட ப்ருது ஸ்வாயம்புவ மனுவைக் கன்றாக வைத்து சகல தானியங்களையும் தன் கையாகிய பாத்திரத்தில கறந்தார்.
பிறகு ஸகல இனத்தவரும் தம் தம் இனத்தில் ஒருவரைக் கன்றாகவும் ஒருவரை கறப்பவனாகவும் தேர்தெடுத்து
தங்களுக்கு வேண்டியவற்றைக் கறந்து கொண்டனர்.
இதை பாகவதம் பின்வருமாறு வர்ணிக்கிறது.
கறப்பவர்- கன்று – பாத்திரம் -பால்
ரிஷிகள்- ப்ருஹஸ்பதி-இந்த்ரியங்கள்- வேத சாஸ்திரங்கள்
தேவர்கள்-இந்திரன்- தங்கப் பாத்திரம்- அம்ருதம்
அசுரர்கள் – ப்ரஹ்லாதன்-இரும்புப் பாத்திரம்- மதுபானம்
கந்தர்வர்- விசுவாவசு –தாமரை – இசை , இனிய சொற்கள், அழகு
பித்ருக்கள் –அர்யமா-மண்பாத்திரம்- கவ்யம்
சித்தர்கள் – கபிலர்- ஆகாயம் – அஷ்டசித்திகள்
வித்யாதரர்கள் – கபிலர்- ஆகாயம்- ஆகாயமார்கமாகச் செல்லுதல்
கிம்புருஷர்கள்-மாயை- மறையும் ஆற்றல்
விஷ ஜந்துக்கள் – தஷகன்- வாய் – விஷம்
காட்டு மிருகங்கள் – சிங்கம்-சரீரம்- மாமிசம்
மரங்கள்- ஆலமரம்- ருசிகள்
மலைகள் –ஹிமயமலை- ரத்னங்கள், ஓஷதிகள்
இவ்வாறு எல்லோரும் பூமியை காம தேனுவாகவும்,தங்கள் ஸ்வதருமத்தை கன்றாகவும் பாவித்து
தம் தம் நிலைகளாகிய பாத்திரத்தில் தனித்தனியே விரும்பியவற்றைக் கறந்தனர்.
பிறகு ப்ருது சக்ரவர்த்தி ப்ரீதியுடன் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்த பூமியைத் தன் மகளாக நேசித்துத்
தான் புதல்வி எனவே பாவித்தார் அதனால் பூமிக்கு ப்ருதிவீ என்ற பெயர் ஏற்பட்டது
.
இதற்கு முன் பூமியில் பட்டினம் கிராமம் என்ற பிரிவுகள் இல்லை. ப்ருதுவே மக்களுக்கு வழி காட்டும் பிதாவைப் போல்
ஆங்காங்கு பட்டினம், கிராமம், வயல்கள் மலைவாசஸ்தலங்கள் என்ற பிரிவுகளை ஏற்படுத்தினார்.
அதனால் மக்கள் பயமில்லாமல் அங்கங்கு இஷ்டம் போல் சுகமாக வாழ்ந்தனர்
——————–———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply