நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் –
தசரதன் மகனுக்கு அன்றி தஞ்சம் இல்லேன் -சக்கரவர்த்தி திரு மகன் வீர தீர ஏக தேசம்
பெருமாளுக்கு நஞ்சீயர் சொல்ல–அங்காளராயன் அரசன் ஆபேஷிக்க
இவன் பெருமாள் திரு உள்ளம் அறியாதவன்-எல்லாம் நம் ஐயர் -என்று பெருமாள் அபிப்ராயம் –
பிராட்டியும் திருவடிக்கு முதலில் சக்கரவர்த்தி மருமகள் என்று தம்மை அறிமுகம்
குமரன் – வெண்ணெய் களவு கண்டான்–பெண்களை களவு கண்டான்–ஊரை மூலையடி ஆக்கினான்–
என்று எல்லாரும் வந்து முறைப்பட்டால்-
என் கண் வட்டத்திலே வந்து தோற்றினான் ஆகில் நியமிக்கக் கடவேன் -என்று பெரிய உத்யோகத்தோடு இருந்தால்
அவர் முன்னே தோற்றும் போது–ச விநயமாக தோற்றுகையாலே
கெட்டேன் இவனையோ எங்கனே பழி இட்டது -என்று–அவர்களையே பொடியும் படியாய் இருக்கை-
யசோதை பிராட்டி பொடியும் போதும் -உந்தம் அடிகள் முனிவர் -என்று அன்றே பொடிவது —
படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே –கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் – என்று இறே இவள் இருப்பது
நந்த கோபன்-ப்ரஹ்மானந்தம் அனுபவிக்கும் -ஆச்சார்ய பதம் –
குமரன் –பவ்யதை -சிஷ்யன் -லக்ஷணம் -தானே அனுஷ்ட்டித்து காட்டுவான் –
யசோதை பிராட்டி கண்ணிலே அழகு குடி கொண்டாய்த்து இருப்பது –
பிள்ளையை மாறாதே பார்த்துக் கொண்டு இருக்கையாலே–அவ் வாசி யடைய கண்ணிலே தோற்றும்படியாய் இருக்கை –
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும் -இவை கண்ட கண் இறே–அம்பன்ன கண்ணாள் யசோதை –
விலாசாட்சி -சஹ பத்ன்யா -கிண்ணகம்-அனுபவிக்க தேசிகர் சீதா பிராட்டி -அர்ச்சாவதார அழகு விபவம் விட ஏற்றம் –
யசோதா அறிவுறாய்-என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி–இறே இவர்கள் திறத்தில் அவள் அனுகூலித்து இருக்கும்படி
இளஞ் சிங்கம்-ஸ்ரீ நந்தகோபர் ஹித காமர் ஆகையாலே அங்கு விநயம் தோற்ற நின்ற படியைச் சொல்லிற்று –
இவள் பிரியமே நடத்துபவள் ஆகையாலே செருக்கும் மேணானிப்பும் தோற்ற நின்ற நிலையைச் சொல்லுகிறது –
அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -என்று–இவன் செய்தது எல்லாம் உத்தேச்யமாக விறே இவள் நினைத்து இருப்பது
ஆரேனும் வந்து முறைப்பட்டால் -அஞ்ச உரப்பாள்—இவன் தீம்பிலே தகண் ஏறும்படியாக வாய்த்து உரப்பது –
இளஞ் சிங்கம் —சிறுமியருக்கு ஒத்த பருவமாய் இருக்கை–சிங்கக் குருகு என்று பட்டர் அருளிச் செய்வர்-
யாதவ ஸிம்ஹம் -ராகவ ஸிம்ஹம் – நர ஸிம்ஹம் -ஸ்ரீ ரெங்கேந்திர ஸிம்ஹம் –
————
மாயன் -மன்னு வடமதுரை மைந்தன் -தூய பெரு நீர் யமுனைத் துறைவன் –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு –தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் -5-
மாயனை –பரத்வத்தில் எத்திறம் இவளுக்கு– இங்கு ஊராக உடம்பு கொடுத்து அங்கு நாட்டுக்காக–
சதா பச்யந்தி–சீர் மல்கும் ஆய்ப்பாடிக்கு ஊற்று அதுவே
தாம்பாலே பந்தித்த ஊர்–சதா பச்யந்தி- கடைக் கண் என்னும் நெடும் கயிறு கொண்டு கட்ட-
தேவகி வயிற்றில் பன்னிரண்டு மாசம் குடி இருந்து–பிறந்த பிள்ளைத் தனத்தில்– குறை வறப் பிறந்தவன்-
கிருஷ்ணனாக வந்து–வெண்ணெய் திருடி–நகரை ஷோபம் கலக்கி–இத்தை நினைத்து எத்திறம் என்னவுமாம்-
சூட்டு நன் மாலைகள் இத்யாதி —-மாயையினால் -அங்கும் உண்டே–வெண்ணெய் தொடு உண்ண போந்து–
கோட்டிடை பின்னைக்காக வந்தான்-
சதைக ரூப ரூபாயா அங்கு-அது அறிந்த படி என் என்னில்
பரமபத நிலையமுமாய்-ஸூரி நிர்வாஹகமுமான வஸ்துவுக்கு
அசாதாராணமான-சிஹ்னமான ஆழ்வார்களோடே அவதரிக்கையாலே –
மன்னு வட மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –-
முன்பு சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் நெடும் காலம் தபஸு-பண்ணி-
சத்ருக்ன ஆழ்வான் வன்னிய மறுத்து படை வீடு செய்து-
சர்வேஸ்வரன் எப்போதும் அவதரித்து போருவதொரு தேசம்-
மல்லை மூதூர் வடமதுரை -ஆழ்வாரும் ஈடு பட்டு அருளுகிறார் இறே –
வட மதுரை-
நலமந்தம் இல்லதோர் நாடு -என்றாப் போலே–பரம பதம் போலே போக்யதையால் பிரசித்தமான ஊர் ––
பரமபதம் கலவிருக்கை என்னும்படி பிறந்து விரும்பின படை வீடு –
அவனைத் தருகைக்கு உபாயமாகை ––விரோதி நிரசனத்துக்கும் தானே யாகை—பிராப்யமும் தானே யாகை-
இத் தனைக்கும் அடி திரு அவதரித்து அருளுகை ––தன் பிரஜைகள் பட்ட ஆபத்தை நீக்குகைக்கு–
அவர்களை இழக்க மாட்டாமல் பிறந்தபடி –
அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்னுமா போலே–அஜஹத் ஸ்வ பாவனாய் கொண்டு–நித்யனானவன்–
ஆஸ்ரித சஜாதீயனாய் பிறந்த மெய்ப்பாடு
மாயனை –வடமதுரை அனுபவம் -ஸூசகம்-மதுரா நாம நகரீ புண்யா பாபா ஹரி சுபா யஸ்யாம் சாதோ ஜகந்நாத –
மைந்தனை–மிடுக்கனை
தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ நள்ளிருட் கண் வந்த எந்தை -என்று–
மாதா பிதாக்கள் காலில் விலங்கு கழல வந்து–திரு அவதரித்த படி –பிள்ளை -என்றுமாம்
திரு அவதரித்து எனக்கு உபகரித்த பின்பு இளகிப் பதித்த படியாததால் ––ராஜா என்றுமாம் ––
தன் அழகைக் காட்டி–இருந்ததே குடியாக தன் வசம் ஆக்கின படி-
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை –
விரஜை போலே போந்த இடத்துக்கு ஒரு ஆறு உண்டானபடி –
அடி அறிவான் கருத்து அறிந்து கார்யம் செய்ய அதுவும் இங்கே வர–கருப்பு உடுத்து ராஜா வர கூட வருவார்-
திருவடி திரு வனந்த ஆழ்வான் போல் விரஜையும் வர
யமுனைத் துறைவனை–கவி பாட ஊரும் பேரும் வேண்டுமே–
முத்து படும் துறை–சங்கணித் துறைவன் நம் ஆழ்வார்
திருக் குரவை ஸ்தானம் ஆகையாலே பெண்கள் படும் துறையை உடையவன்-
கிருஷ்ணனுக்கு பெண்கள் படும் துறை–நல்ல சரக்கு படுவது நீரிலே இறே –
அமுதில் வரும் பெண் அமுது கடலில் ஒரே பிராட்டி–இங்கே பஞ்ச லஷம்
மறைத்து -கம்ச பயத்துக்கு அஞ்சி ஒழிக்க வல்லார் -யமுனைத் துறைவன்
தூய
1-ஸ்ரீ வசுதேவர் எழுந்து அருளுவித்துக் கொண்டு போகிற போது பாங்காக வற்றிக் கொடுத்த படி –
2-ஸ்ரீ கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிப் கொப்பளிக்கையால் வந்த தூய்மை ஆகவுமாம் –
3-நீரில் தெளிவை சொல்லிற்று ஆகவுமாம்
பெரு நீர் –
அத்ய காதமான ஆறு பாங்காக வற்றிக் கொடுத்தது ––
மநோஹரம் ஆகையாலும்–பாவனம் ஆகையாலும்–ஸ்லாக்யதையை சொல்லிற்று ஆகவுமாம்
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை –
பரம பதத்தில் காட்டில் குணங்கள்–இடைச் சேரியிலே அத்யுஜ்ஜ்வலம் ஆனபடி–அந்த காரத்தில் தீபம் போலே தோன்றும் –
1-கர்ப்பத்தில் தொற்று இல்லாமை-கீழைத் திக்குக்கு ஆதித்யனோடு உள்ள சம்பந்தம்-இவளோடு அவனுக்கு உள்ளது –
2-ஸ்ரீ மதுரையிலே திரு அவதரித்து இருக்கச் செய்தே-திரு அவதார பிரகாசம் திரு ஆய்ப்பாடியிலே சென்றது என்றுமாம் –
3-ஆயர் குலம் என்றது–அநந்ய சாதனரான பாகவத குலம் -என்றபடி-
அணி விளக்கை
திரு ஆய்ப்பாடிக்கு மங்கள தீபம் என்றுமாம் –
அணி விளக்கு -கண் காட்டி- இவர்களுக்கு கை விளக்கு–அந்தகாரத்தில் தீபம் போலே அங்கே
மணி விளக்கு–
அழுக்கு அற்ற படி இங்கே பிறந்த பின்பு
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு –
வெங்கதிரோன் குலத்துக்கு விளக்கு
கோபால ரத்னம் -ராம சந்திரன்–கதிர் மதியம் போல் இருவரும் -விளங்கும் –
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
வயிற்றில் தழும்பாலே யசோதைப் பிராட்டி விளங்கப் பண்ணினவனை –
தாயைக் குடல் விளக்கம் செய்த-
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்-என்று–
நாட்டார் புகழ்ச்சியாலே பெற்ற வயிற்றுக்கு பட்டம் கட்டினவனை –
தாமோதரனை –
தன்னுடைய பவ்யதையாலும்–அவளை நாட்டார் கொண்டாடும்படி பண்ணினவனை –
நம்முடைய பந்தம் நம்மால் அறுக்கப் போகாதது போலே–அவனுடைய பந்தமும் அவனால் அறுக்க ஒண்ணாதே –
இப் பந்தத்தை அனுசந்தித்தால் ஆஸ்ரிதர் உடைய சம்சார பந்தம் போம் என்கை –
நடுவில் விசேஷண பூஷணம் தாமோதர பந்தம் -நம பதம் -அவளும் -உகாரார்த்தம் –
தன்னடியார் சிதகுரைக்குமேல் என்று அவள் விலக்கினாலும் விடாத திருட தீக்ஷணம் –
மத்யமாம் பதார்த்தம் -சீர்மை அனுஷ்ட்டித்து ஏறிட்டுக் கொண்ட -ஆஸ்ரித பாரதந்தர்யம் –
தாமோதரம்–
சேஷியினுடைய திரு இலச்சினை -தாமோதரம்–
சேஷ பூதர் சங்கு சக்கரம் போலே பட்டர் அருளிச் செய்த–பிரணவம் கோள் சொல்லி கொடுக்கும்
கிளை தாவ –கோபிகள் சிரிக்க -தழும்பு தோற்றமல் திரு மஞ்சனம் -இன்றும் வஸ்த்ரம் மாற்றி
—————-
வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகன் -21-
வள்ளல் பெரும் பசுக்கள்-சிலருக்கு உபகரித்ததாய் இருக்கை இன்றிக்கே-தன் கார்யம் செய்ததாக உபகரிக்கை –
கிருஷ்ணனைப் போலே-பெண்ணுக்கும் பேதைக்கும் அணைக்கலாம் படி பவ்யமாய் இருக்கை
ஸ்ரீ சத்ருஞ்ஜயனைப் போலே இருக்கை –
கிருஷ்ண ஸ்பர்சத்தாலே வளர்ந்து அவன் ஏழு வயசிலே பதினாறு வயஸூ குமாரன் என்னும்படி
இருக்குமா போலே இருக்கும்
தொகை இன்றிக்கே இருக்கை –அவர்க்கு ஆர்ஜித்து வந்தது -இவன் பிறந்து படைத்த சம்பத்து
இத்தால்
ஸ்ரீ நந்த கோபர் சம்பத்துக்கு இட்டுப் பிறந்த ஏற்றம் –
நீர் தாழ வந்து -நீர்மை நீரின் தன்மை சௌலப்யம்
இடையனுக்கு மகனாய் பிறந்ததே சௌலப்யம்-நந்த கோபன் மகனே
பரமபதம் போலேயும்–நாரயணத்வம் போலேயும்–தான் தோன்றி அன்றே இது –
அசங்க்யாதமாக ஆர்ஜித்துப் படைத்த- ஆச்சார்யனுக்கு புத்ரவத் விதேயன் ஆனவனே –
————-
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –24-
ஒருத்தி –அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனாநாம் சர்வாத்மா -என்கிறபடியே
சர்வ லோகங்களுக்கும் நியாமகனானவனையும் கூட நியமிக்குமவள் என்கையாலே
நாட்டில் தனக்கு ஒப்பற்று இருக்குமவள்-
ஒருத்தி மகனாய்-சர்வ லோகங்களுக்கும் பிதாவானவன்–ஒருத்தி மகனாய் ஆவதே –
சக்கரவர்த்தி தபஸ்ஸூ பண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளைப் பெற்றாப் போலே–
நால்வரும் கூடி தபஸ் ஸூ பண்ணி–ஒரு மகனைப் பெற்றபடி –
மகனாய் பிறந்து –
பிறந்த போதே–சொல்லிற்று செய்கை —சக்கரவர்த்தி திருமகன்-பெருமாள் -24 திரு நஷத்ரம்-
பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் –
இவன் பிறந்த போதே–ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –
சங்கு சக்கர கதாதர -உபசம்கரித்தான் —சொன்ன உடன் மறைத்துக் கொண்டான்
என் நின்ற யோனியுமாய் பிறந்து நாட்டில் பிறந்து படாதன பட்டு
மகனாய் பிறந்த –
மகனாய்-ஆய -கிருத் பிரத்யம் -இல்லாததை ஆக்குவது —குண்டலம் குண்டலீ கிருதம் –
மகன் ஒருவருக்கு இல்லாத -மகனாய் ஆனான்
கிருபையினால் —மகனாகவே இருக்கிறான்–மாதா பிதா பரதந்த்ரன்
பிறந்து –
ஆவிர்பவிக்க லாகாதோ —பத்து மாசம் வயிற்றிலே இருப்பார்கள் ஆகில் பன்னிரண்டு மாசம்
வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டவிறே —
பிறந்தான் -என்கை அவத்யம் -என்று பரிஹரித்தான் ரிஷி
அது தான் அவத்யம் என்று பிறந்தான் என்கிறார்கள்–
நம்முடைய கர்மம் நம்மோடு அவனை சஜாதீயன் ஆக்கும்
அவனுடைய கிருபை நம்மை அவனோடு சஜாதீயன் ஆக்கும் —
அவன் பிறவி நமக்கு என்று கோல –நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் —
நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –
சிறையர் சிறைக் கூட்டத்தில் பிணை உண்கைக்குப் புகும் –
நியாமகன் சிறைக் கூட்டத்தை விடுவிக்கப் புகும்
புகுகையிலே இத்தனை நெடுவாசி உண்டு
அவன் பிறந்தால் இவன் பிறவி தனக்குத் தட்டாமை யல்ல
நம் பிறவியைப் போக்கி நம்மை தன் போலே யாக்க வல்லனாய் இருக்கும்
ஜென்ம கர்மா ச மே திவ்யம் இத்யாதி
அஷ்டாஷரீ பிரதிபாத்யனாய்க்–குண விக்ரஹ விபூதி விசிஷ்டனாய்–அவதரித்து –
சம்சாரிகள் தண்மை—பிறந்த குழந்தையை இருக்க ஒட்டாமல் —நெய்யாடல் சோபனம் சொல்லாமல்
எண்ணம் சுண்ணம் -பெரியாழ்வார் அனுபவம் தானே–கூரியம் கொட்டி -வாத்திய கோஷம் இல்லாமல்
சர்வேஸ்வரன் இங்கே வந்தால் நம்முடைய கர்மம் அவனுக்கு சாம்யம் கொடுக்கும்–
அங்கே போனால் தன்னுடைய சாம்யம் கொடுக்கும் கிருபை
தம்மையே ஒக்க அருள் செய்வர்–இணைவனாம் எப் பொருள்களுக்கும் -முதல் பிரமாணம்–
தன்னையே ஒக்க அருள் செய்வர்
நம் பிறவி அவனை விட்டு நீக்கும்–அவன் பிறவி நம்மை அவன் இடம் கூட்டிச் செல்லும்
ஜன்ம கர்ம மே திவ்யம் அவதார ரகசியம் புனர் ஜன்மம் இல்லை–
அவன் பெற்றவர் காலில் விலங்கு பட்டது படும்
யசோதை அனுபவம் ரிஷிகள் யாரும் சொல்ல வில்லையே–
பெரியாழ்வார் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே-
தொழுகையும் இவை கண்ட யசோதை –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே ––
பரமபதம் அந்தமில் பேர் இன்பம் பரிச்சின்னம் ஆனதே
எனக்கு யார் நிகர் -ஆழ்வார் —வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும்–
வீங்கி இருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கு–
காண்டல் இன்றி வளர்ந்தது -அந்தர்யாமி பட்டது படுகிறான் –
இரா மடம் ஊட்டுவாரை போலே உள்ளே கிடந்தது சத்தையை நோக்கி போகும்–
உன்னை அர்தித்து வந்தோம் –
உன்னிடம் வந்தோம் அல்லோம்
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னையே தந்த கற்பகம் –
ஆழ்வார்-அர்த்தி கல்பக ஆபத் சகன் -கதய த்ரயம் யாசகர்களை கல்பக மாக நினைக்கிறான் –
ஓர் இரவில் –
அவ்விரவிலே யசோதை பிராட்டிக்கும் பிள்ளையாக வேண்டுகையாலே-திருவாய்ப்பாடியிலே புக்கு –
நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே-
கம்சாதிகள் தன்மை ஸூ திகா கிருஹத்திலே-ஓர் இராத் தங்க ஒட்டிற்றிலை -என்கை –
ஓர் இரவு –
அவ்விரவை ஒக்கும் இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை –
ஓர் இரவில் –
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்தில் வஸ்து-கால அதீனமான தேசத்தில் பிறப்பதே –
அவர்கள் தங்களோபாதியும் பெற்றிலன் -என்கை –
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்து–வீங்கு இருள்வாய்–
அந்த இரவே நமக்கு தஞ்சம் -பிள்ளை உறங்கா வல்லி தாசர்
ஒருத்தி மகனாய் –
ஒருத்தி -இவனை மகனாய் பெற வேணும் -என்று ஆஸ்ரயிக்க-
அவளுக்கு அவதார ரசத்தைக் கொடுத்து-
இவளுக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்த படி –
அந்ந வான் அந்நாதோ பவதி -இரண்டையும் உபநிஷத் சொல்லுமே —
அன்னம் கிடைக்கப் பெற்றவள் ஒருத்தி-தேவகி வசுதேவர்கள் –
அன்னம் புஜித்தவள் ஒருத்தி -யசோதை நந்தகோபர்கள் –
ஓர் அவதாரத்திலே யாதவ சஜாதீயனுமாய்-கோப சஜாதீயனுமாய் -ஆனபடி –
மகனாய்
பிறப்பில் புரை இல்லாதாப் போலே-இவள் மகனான இடத்திலும் புரை அற்று இருக்கை –
அவள் கரும்பின் கோதைக் கொண்டவோபாதி இவளும் கரும்பின் நடுவைக் கொண்டால் போலே இருக்கிறது –
கட்டவும் அடிக்க்கவும்படி -நியமிக்கப் படும்படி மகனாய் –
நந்தன் பெற்றனன்-என்னை கை பிடித்த -நல் வினை இல்லா -நாங்கள் கோன்-
மணி வாய் இடை முத்தம் தருதலும் நின் தாதையைப் போலே வடிவு கொண்டு-
தனக்கும் -வார்த்தை சொல்ல -வெகுளியாய் நின்று உரைக்கும்
மழலை சொல்லும்-பாக்ய ஹீனத்தால்-திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன்-
இசைந்து அம்மே என்றால் அடியேன் என்கைக்குக் கிட்ட இருக்கிறான் –
கும்குமு -வெண்ணெய்-திரண்டு வர —என்னது -பூதம் மிக -விழுங்கும்–
நான் விழுங்குவேன் முன்னம்–அம்மா நவநீதம் -போலே பூதம் இருக்கே –
நேர கேட்ட யசோதை–மந்த ஸ்மிதம் –
திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும்–ஜீரணோத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்-
ஈன்ற முதல் தாய் சடகோபன் -மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் –
இதனால் தான் இராமானுசன் தர்சனம் என்று பேரிட்டு நம் பெருமாள் நாட்டி வைத்தார் –
ஒளித்து வளரத் –
கம்சனுடைய விஷ திருஷ்டி படாமே வளர்ந்தபடி-நாட்டார் செய்வன செய்யப் பெறாதே–
கள்ளர் பட்டது படுவதே
திரு அவதரித்து இருக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது படுவதே –
உள்ளே இருக்கச் செய்தேயும் இவனில்லை என்று எழுத்திடுமவன்–முகம் காண சம்மதிக்குமோ -என்கை –
அந்தர்யாமியாய் மறைய நிற்கிறது -பிச்சேறின பிரஜை தாய் முன்னே நிற்கில் தாயைக் கொல்லும் –
அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொள்ளும்-
அதுக்காக முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கும் மாதாவைப் போலே-
இசைந்து அம்மே -என்றால் ஏன் என்கைக்கு கிட்டே விருக்கிறபடி -என்றுமாம் –
பேர் சொல்லாதே ஒருத்தி -என்றது-அத்தத்தின் பத்தா நாள் -என்றவள் மகள் ஆகையாலே-
பயத்தாலே ஒளிக்கிறாள் –
அபிசரிக்கிலும் அதுவோ இதுவோ என்று சந்தேஹிக்கைக்காக –
ஒளித்து வளர
பிறந்த இடம்-வளர்ந்த இடத்திலும்–நாட்டார் போலே–பூதனை -போல்வார்–
அசுரர்கள் தலைப்பெய்யில் யவம் கொலாம் என்று ஆழும் என்னாருயிர் ஆன பின் போகல் -என்றும்
கண்ணா நீ நாளைத் தொட்டு கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு -என்றும்
வானிடை தெய்வங்கள் காண -அந்தியம் போது அங்கு நில்லாய்-என்பவள் பிரதிகூலரை காண விடுவாளே-
கன்று பின் போகல்–சதா தர்சனம் பண்ணி அனுபவிக்க வேண்டிய வஸ்து–கள்ளர் பட்டது பட்டான்
லௌகிகர் அறியாத அத்விதீய காலத்தில் –
வாசுதேவ த்வாதச அஷரீ பிரதிபாத்யனாய் -குண விக்ரஹ விபூதி களாலே சங்குசித்து
ஸ்வரூப மாத்ரேண வளரா நிற்க –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்-ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்-
உபநயனம் -ப்ராஹ்மண ஜென்மம் கொடுக்கும் -ஸமாச்ரயணம்-
ப்ரபந்ந ஜென்மம் கொடுக்கும் -சடக்கென பண்ண வேண்டும் –
ஒருத்தி -திருக்கண்ணபுரம் அனுபவம் -ஸூசகம்-
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் –
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன்-
ஒருத்தி மகனாய் –
வேண்டித் தேவர் இரக்க -திருவாய்மொழி -6-4-5-
இரண்டிலும் கண்ணன் தேவகி புத்ரனாய் அவதரித்ததும் -யசோதை புத்ரனாய் வளர்ந்ததும் –
கஞ்சனைக் கொன்றவாற்றையும் ஒரே க்ரமத்தில் அனுபவித்தார்கள்-
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -திருவாய்மொழி -5-10-1-
இரண்டிலும் பிறந்தவாற்றையும் வளர்ந்தவாற்றையும் அனுபவம்-
————————
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்–-3-8-
திருவரைக்குத் தகுதியாய் இருப்பன சில பரியட்டங்களை திருவரையிலே சாத்தி -சேஷித்த வற்றை குருந்திலே இட்டு வைத்து
கண்டி கோளே இவை நம் சௌகுமார்யத்துக்கு சேர்ந்து இருந்த படி -என்ன அழகியதாய் இருந்தது
நாங்கள் தான் அவற்றைத் தரச் சொன்னோமோ
மேன்மை இல்லாத மரத்திலே கிடக்கிற வற்றைத் தா -என்கிறார்கள்
——————
கஞ்சன் வலை வைத்த வன்று கார் இருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தான் 3—9-
கஞ்சன் வலை வைத்த வன்று அவன் உபய விபூதியையும் அழிக்கக் கோலின அன்று –
சத்தாயோகி -சகல பதார்த்தங்களையும் முடிக்க கோலின அன்று –
விபூதி அழிந்தால் அவன் உளனாக உண்டாக்கிக் கொள்ளலாம்
அவனுக்கு ஒரு நலிவு பிறந்ததால் பின்னை ஒன்றும் இல்லை இறே
ஸ்தன்யம் தத் விஷ சம்மிச்ரம் ரஸ்ய மாஸீஜ் ஜகத்குரோ —
விஷம் தானே தாரகமான பின்பு யாய்த்து ஜகத்துக்கு ஒரு சேஷி உண்டாய்த்து
விஷம் பாதகமாவது அம்ருதம் தாரகமாவது என்னும் மரியாதைகள் கட்டினவன் பக்கல் அது கார்யம் செய்ய மாட்டாதே –
தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் -திருவாய் -1-5-9-
காரிருள் எல்லில் பிழைத்து –
அவன் தப்பாத படி நலியக் கோலினான் –அற்றை அளவிலே ரஷகமாகைக்கு ஓர் இருள் உண்டாவதே –
கொடு போகிற இடத்தில் பிறர்க்கு தெரியாத படி கொடு போகலாம் படி திருமேனி யோடு ஒத்த நிறமாகையும் –
காத்துக் கிடக்கிறவர்களுக்கு நித்ரா பாரவச்யத்துக்கு உடலாகையும் இரண்டும் உண்டு இறே
வீங்கு இருள்வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும் -திருவாய் -1-5-9-என்னக் கடவது இறே –
இதுக்கு பிள்ளை உறங்கா வல்லி தாசர் -இவன் தான் பருவம் நிரம்பாமையாலே தன்னை நோக்கிக் கொள்ள மாட்ட்றிற்று இலன் –
புறம்பு தான் பரிந்து நோக்குகைக்கு ஒருத்தர் இல்லை -கம்சாதிகள் தப்பாமல் அகப்படுத்த கோலி நின்றார்கள் –
அவ்வளவிலே உதவித் தந்தது இருள் அத்தைச் சரணம் புகும் அத்தனை இறே -என்று பணிப்பாராம் –
கம்சன் வலையில் அகப்படாதே தப்பின இது -பெண் பிறந்தாரை ரஷிக்கைக்கு உடல் என்று இருந்தோம் –
இது எங்களை நலிகைக்கு உடலாய் விட்ட அத்தனை ஆகாதே
——————–
அணி வாள் நுதல் தேவகி மா மகன் மிகு சீர் வாசுதேவன் தம் கோ மகன் வரில் கூடிடு கூடலே-––4–3-
அழகிய ஒளியை உடைத்தாய் வேறு ஒரு ஆபரணம் மிகையான நுதலை யுடைய தேவகிக்கு
அவள் வளர்த்த செருக்காலே மகன் அல்ல -உடன் பிறந்தான் என்னலாம் படி -மிக்க மகன்
தாய் வழியால் வந்த ஏற்றம் ஒன்றுமேயோ உள்ளது -என்ன –
மிகு சீர் வசுதேவர் தம்- கோமகன்- கோவான மகன் –சக்கரவர்த்திக்கு போலே நியாம்யன் அல்லன்
இவர் தம்மையும் நியமிக்கும் மகன்
அவரை நியமிக்கையாவது -கம்ச பயத்தாலே இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்தால்
அப்பரே நீர் என் பயப்படுகிறீர்
அஞ்சாதே நான் சொல்வதைக் கேட்டு சுகமாய் இரும் -என்றால் போலே நியமிக்கை
வரில் –இரண்டு பிறப்பாலும் உள்ள -இருவர் சாயையும் தோற்ற -நடையிலே நடந்து வருமாகில்
கூடிடு கூடலே-நீ கூடி என்னையும் அவனையும் கூட்டு –
———————
மதுரையார் மன்னன் –6–5-
பரம பதத்தை விட்டுப் போந்து விரும்பின ஊருக்கு நிர்வாஹகன் இறே –
பரம பதத்தில் இருப்புக்கு மேலே ஓர் ஏற்றம் போலே காணும் அவ் ஊருக்கு கடவன் -என்னுமது
மன்னு வடமதுரை மைந்தனை -என்று இவள் தான் ஆதரிப்பதும் அங்கே இறே –
ஒருவன் ஒரு பிள்ளையை உகந்து அருளப் பண்ணி -இவனுக்கு என்ன திரு நாமம் சாற்றுவோம் என்று இருக்கச் செய்தே-
அதுவே இதுவே என்று அழையாதே-என்னை மதுரை மன்னன் -என்று அழை-என்று ஸ்வப்னத்திலே அருளிச் செய்தாராம் –
——————-
பெற்று இருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்து ஒரு தாயில் வளர்ந்த நம்பி –12-1-
அநந்த வ்ரதம் -அனந்தனை குறித்து -வ்ரதம் அளவற்ற வ்ரதம் -அனுஷ்டித்து பின்னைப் பிள்ளை முகத்தில் விழிக்க வேண்டும்
என்று கிலேசப் பட்டு பெற்று பின்னை -போக விட்டு இழந்து இருந்தாள் ஆய்த்து–
போய்ப் பேர்த்து –
இவள் இரக்கத்தாலே இழவு பொறுக்க மாட்டாமே கண்ணும் கண்ண நீருமாய் இருந்தாள்
அவன் முலைச் சுவடி அறியாமையாலே கால் தாழவும் மாட்டாதே போனான் –
பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி- வேறு ஒருதாய் க்ரஹத்திலே வளர்ந்தான் ஆய்த்து
பெற்றவள் இழவுடன் இருக்க -அவளுக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி தாயானமையில்
ஒரு வாசி தோற்றாத படி யாய்த்து வளர்ந்தது -அவள் தானும்-
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே–பெருமாள் திருமொழி -7-5-என்றாள்-இறே
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-பெருமாள் திருமொழி -7-8 என்னக் கடவது இறே –
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-
தன்னை ஒழியச் செல்லாமை உடையாரை நலிகையே அவனுக்கு சத்தா பிரயுக்தமாய்த்து
தாய் முலை –பெருமாள் திரு-6-4-இத்யாதி -இது இறே -ஊடினார் வார்த்தை
முலை கொடுத்து அல்லது தரியாதாள் ஆய்த்து-
தனக்கு ஜீவன ஹேதுவாய் தான் வந்து முலை உண்ணாமையாலே-முலைக் கண் நெறித்து அவள் இருக்க
தன் மௌக்த்யம் தோற்ற தனக்கு விநாசத்தைப் பலிக்குமதான விஷத்தை உண்டு -அத்தாலே
பாவ பந்தம் உடையாருக்கும் பாவ தோஷம் உடையாருக்கும் வாசி அறியாதான் ஒருவன் காண் இவன் –
என்று கண்டார் இகழும்படி நின்றான்
நம்பி-சாலப் பூர்ணன் ஆய்த்து –
————-
கொந்தளம் ஆக்கிப் பரக்கு அழித்து குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற நந்த கோபாலன் -12- 3 –
கொந்தளமாக்கி -சிலுசிடுகை –கொந்தளமாக்கிப் பரக்கழித்துக்-சண்டையிட்டு பழி விளைத்து –
குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற – ஸ்ரீ நந்தகோபர் தம்முடைய ராஜ்யத்தில் வன்னியம் அடிக்கைக்காக
நோன்பு நோற்றுப் பிள்ளை பெற்றாராய்-அது கண்டி கோளே-அவன் இவனை நியமியாதே இருக்கிறபடி
நந்த கோபாலன் கடைத்தலை -என்றால் பிரசித்தம் இ றே – பட்டர் அருளிச் செய்வர் என்று –
இவனால் புண்பட்ட பெண்கள் அடைய கட்டணங்களும்-stretcher -கையும் பசும் துவலுமாய்த்து-
அவர் வாசல் விஷம் தீர்ப்பார் வாசல் போலே -பசும் துவல் -வைவர்ண்யம்-
————–
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்-12-8-
பசுக்களை மேய்க்கை நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்தது என்னலாம் படி கன்றுகளின் பின்னே
அவற்றினுடைய ரஷணத்துக்காக திரிவான் ஒரு பாலனுமாய்-
ஓர் ஊரிலே தங்குகையும் அன்றிக்கே -பசுக்களுக்கு நீரும் புல்லும் உள்ள விடத்தே தங்குவான் ஒருத்தனுமாய்-
எளியராய் இருப்பார் செய்வித்தை செய்து -எளிய த்ரவ்யங்களைப் புசித்து -இப்படி திரிவான் ஒருவன் காண்-
வானிளவரசாய்-பெரியாழ்வார் -3-6-3- இருக்குமவன் –திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –திருவாய் -10-3-10-என்கிறபடியே-
(தெய்வத்தை காட்டிலும் ஐந்தாம் வேற்றுமை -அதை விட / இரண்டாம் வேற்றுமை அங்கேயும் -டியோ டியோ -சொல்லி –
பசு மேய்க்கும் மந்த்ரம் என்பான் -ஹாவு ஹாவு சொல்வது போலே )பசுக்களை மேய்க்கையை உகந்தான் –
அது தன்னிலும் ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத கன்றுகளை மேய்க்கையையே மிகவும் பெறாப் பேறு பெற்றானாக
நினைத்து இருந்தான் –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16-
இவனுக்கு ஒரு ஜன்மம் இல்லை காண் என்னும் இழவு தீர பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காட்டைத் தேடி
அங்கு தங்கும்படியான ஜன்மமும் ஆகப் பெற்றான் –
———
நந்த கோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமாலால் –13-6-
நந்த கோபன் மகன் என்னும் அவன் வயிற்றில் இவன் ஒருவன் எங்கனே வந்து தோற்றின படி
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய் -என்று அவர்கள் பேற்றுக்கு பரிகரமாக நினைத்து இருப்பதும் இவரையே
நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருள் கண் என்னை உய்த்திடுமின் -12-3–என்று
ஆற்றாமை கரை புரண்டால் பொகடச் சொல்வதும் அவர் வாசலிலே
ஸ்ரீ நந்தகோபரும் சிறியாத்தான் போலே பரம தார்மிகராய் இறே இருப்பது –
கொடிய –
அவ்வளவு அல்ல -ஸ்வ கார்ய பரன் -கண்ணன் மீது வெறுப்பு அவன் பெற்றோர் மீதும் ஏறிப் பாய்கிறது
கடிய –
பிறர் நோவு அறியான்
திருமாலால்-
பெற்றவர்களும் அங்கனே யாய் –அஞ்ச உரப்பாள் ஆணாட விட்டிட்டி இருக்கும் -3-9-
வளர்ந்தவர்களும் இங்கனே யானால் –பெற்ற தாய் வேம்பெயாக வளர்த்தாளே-13-7- நாம் இவனை வெறுக்கிறது என்
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டானே -பெரிய திருமொழி -8-10-1—பெரிய பிராட்டியாரும்
கொடுமையும் கடுமையும் மிக்கவனாக வளர்த்தாளே என்றபடி –
இழவேயாய் போருகிற பிரகரணம் ஆகையாலே -பேற்றுக்கு பரிகரமாகச் சொல்லுமவற்றை எல்லாம் இழவுக்கு பரிகரமாகச் சொல்லுகிறாள்
அருளாத திருமாலார்க்கு -என்னக் கடவது இறே-நம்மாழ்வாரும் பெரிய பிராட்டியாரை வெறுத்தாரே –
இதுக்கு –அருளாமைக்கு -புருஷகாரமாக அனுசந்திக்கிறார் -என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி –
பிள்ளானை இதுக்கு கருத்து என் என்று நான் –நஞ்சீயர் -கேட்டேன் –
இப்படி நம்மை நலிகைக்கு குருகுல வாசம் பண்ணிற்று அவளோடு அன்றோ –என்று பணித்தார் –
இத்தை பட்டருக்கு விண்ணப்பம் செய்தேன்
பேற்றுக்கு அடி அவள் என்று இருந்தால் -இழவுக்கும் அடி அவள் அவள் என்று வெறுத்து
வார்த்தை சொல்ல தட்டுண்டோ என்றார் என்று நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
——————-
வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து வேற்ற வெறிதே பெற்ற தாய் –13–7-
தன் ஆஜ்ஞ்ஞையாலே சர்வத்தையும் கீழ்ப்படுத்தி விஜய த்வஜம் எடுத்து இறே இருப்பது –
அம்மரியாதை –தன் ஸ்வா தந்த்ர்யமும் என்னுடைய பாரதந்த்ர்யமும் -குலைய வன்று கார்யம் பார்க்கிறது –
தன்னுடைய ஆஸ்ரிய பாரதந்த்ர்யமோ பிரணயித்வமோ தோற்றும்படி கார்யம் செய்வது இல்லை -என்றபடி –
ஈஸ்வர ஆஜ்ஞை தான் நின்ற அளவும் வர நடக்கிறது இறே -அன்புக்கு உரியவளாய் இருந்தாலும் தன்னையும் கட்டுப்படுத்துமே
அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கோர் பெண்பால் பொருளோ எனும் இகழ்வோ
இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ –திருவிருத்தம் -33–என்ற பராங்குச நாயகியும் அருளிச் செய்தாள் அன்றோ
பீஷாஸ்மாத் வாத பவதே -என்றும் —மேகோதயஸ் சாகர சந்நிவிருத்தி -என்றும் சொல்லுகிறபடியே-
தன் ஆஜ்ஞை தான் ஒருவரால் அதிக்கிரமிக்க ஒண்ணாத படி இறே நடத்துவது –
மீ மீ தாடா வுலகத்து-தன் மேன்மைக்கு மேலே போகக் கடவது அன்றிக்கே இருக்கிற லோகத்திலே
மீது -என்று மேல் –
கருளக் கொடியான் தன் மேன்மைக்கு மேலே ஓன்று இல்லாத லோகத்திலே –
முதல் மீது -மேன்மையை குறிக்கும் -அடுத்த மீது -மேல் என்றபடி –
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே
பிரயோஜன நிரபேஷமாக பிறருக்கு அனர்த்தத்தை விளைப்பார் உண்டாகாதே
வெற்றே வெறிதே வீப்சையால் –பர அனர்த்தமேயோ இதுக்கு -மற்றும் ஏதேனும் பிரயோஜனம் உண்டோ
நந்த கோபன் மகன் என்னும் -பெற்ற தகப்பனை வெறுத்தாள் கீழ்ப் பாட்டில்
இங்கு பெற்ற தாயாரை வெறுக்கிறாள் -அவனை வெறுக்கிறது என் –
அவனுக்கு ரஷ்ய வர்க்கம் பரப்புண்டே -பசுக்களை நோக்க வேணும் இறே அவனுக்கு
ரஷணத்தில்-அந்ய பரனே அவன் -நம்மே பாதி யன்றே அவனும் -கூடி இருந்த போது இவனைத் திருந்தாமல் விட்டது போலே – –
அவனை நோக்குகையே பணியாய் இருக்கும் இவளைச் சொல்லீர்
இவள் அவனைக் கட்டுவது -அடிப்பதாக -அவனும் அழுவது முலை உண்பதாக புக்கவாறே இவள் பெற்றவள் ஆகாதே என்று இருந்தோம்
இப்போதைச் செயலைப் பார்த்தவாறே வளர்த்துக் கொள்ளி யாகாதே -செவிலித் தாய் –என்று
தெளிவாகத் தெரிகிறதே -என்று தோற்றி இரா நின்றதே
வேம்பே யாக-வேம்பும் கரும்புமாக வளர்க்கை அன்றிக்கே வெறும் வேம்பேயாக வளர்த்தாள்
அவன் வேம்பானது வளர்த்த பொல்லாங்கு என்று இருக்கிறாள் -அவனை இன்னாதாகிறது என் –
இவள் அன்றோ இப்படி வளர்த்தாள் –
அவன் வாராது ஒழிகிறான்–இழவு உன்னது -நடுவே பெற்ற தாயை இன்னாதாகிறது என்-என்ன
குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு-
என் பக்கல் தான் குற்றம் உண்டோ –
அவன் வேம்பானால் –வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது -பெரிய திருமொழி -11-8–7- என்று இருக்கும் முலை-
அவரைப் பிராயம் தொடங்கி துவரைப் பிரானை ஆதரித்து எழுந்த என் தட முலை –-1-7–என்றும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4- முலை அன்றோ
அநசூயை பிராட்டியைப் பார்த்து -ஸ்திரீக்கு பரதேவதை பர்த்தாவே கிடீர் –என்ன
அது கொடு கார்யம் என் -பெருமாள் குணவான்களாய்க் கெட்டேன்-
நமக்கு அவர் பக்கல் உண்டான நிருபாதிக ச்நேஹம் சோபாதிகமாய்த் தொடரா நின்றது இறே
குணங்களை வ்யதிரேகித்து-அந்த தர்மியை பிரதிபத்தி பண்ண ஒண்ணாமை யாலே –
ஸ்வரூப க்ருத பக்தியை அருளிச் செய்தால் இறே –
க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க வற்றோ இம்முலை
இதுவே குற்றம் அற்ற முலை -என்றது
குமரன் –
இம்முலைக்குத் தக்க பருவத்தை உடையவன் –
—————–
அல்லல் விளைத்த பெருமான் ஆயர் பாடிக்கு அணி விளக்கு –13–10-
இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊராக இருண்டாய்த்து கிடப்பது
ராம குணங்கள் வேம்பாய்-இவன் தீம்புகள் கரும்பாய் -பிரகாசத்தையும் பண்ண யாய்த்து திரிவது
————–
மாலாய்ப் பிறந்த நம்பி மாலே செய்யும் மணாளன் ஏலாப் பொய்கள் உரைப்பான் —14-3-
பெண்கள் பக்கல் வ்யாமோஹம் தானே ஒரு வடிவு கொண்டால் போலே யாய்த்து இருப்பது –
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ் சிதேதி -தை ஆ -1-1-என்னுமா போலே
தர்மியை தர்மமாக சொன்ன இடங்கள் உண்டே –மாலே மணி வண்ணா- போலே
நம்பியை –
இது ஒரு பல ஷண மாத்ரமாய் –ஒரு குணமாய் -சொல்லிச் சொல்லாத குணங்களால் பூர்ணனாய் இருக்கை
—————–
நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் –1-
மாயன் -மன்னு வடமதுரை மைந்தன் -தூய பெரு நீர் யமுனைத் துறைவன் –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு –தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் -5-
வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகன் -21-
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –24-
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்–-3-8-
கஞ்சன் வலை வைத்த வன்று கார் இருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தான் 3—9-
அணி வாள் நுதல் தேவகி மா மகன் மிகு சீர் வாசுதேவன் தம் கோ மகன் வரில் கூடிடு கூடலே-––4–3-
மதுரையார் மன்னன் –6–5-
பெற்று இருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்து ஒரு தாயில் வளர்ந்த நம்பி –12-1-
கொந்தளம் ஆக்கிப் பரக்கு அழித்து குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற நந்த கோபாலன் -12- 3 –
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்-12-8-
நந்த கோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமாலால் –13-6-
வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து வேற்ற வெறிதே பெற்ற தாய் –13–7-
அல்லல் விளைத்த பெருமான் ஆயர் பாடிக்கு அணி விளக்கு –13–10-
மாலாய்ப் பிறந்த நம்பி மாலே செய்யும் மணாளன் ஏலாப் பொய்கள் உரைப்பான் —14-3-
———–
ஸ்ரீ ஆண்டாள் பாசுரப்படி ஸ்ரீ கிருஷ்ண அவதார கிரீடா –
மதுரையார் மன்னன் அணி வாள் நுதல் தேவகி மா மகன் மிகு சீர் வாசுதேவன் தம் கோ மகன்
பெற்று இருந்தாளை ஒருத்தி மகனாய் பிறந்து ஒழியவே போய்ப் பேர்த்து
ஒரு தாய் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த நம்பி
கஞ்சன் வலை வைத்த வன்று கார் இருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்த
வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம்
மாயன் -மன்னு வடமதுரை மைந்தன் -தூய பெரு நீர் யமுனைத் துறைவன் –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு –தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்
கோமள வாயர் கொழுந்து-கொந்தளம் ஆக்கிப் பரக்கு அழித்து குறும்பு செய்வானோர் மகன்
நந்த கோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமால்
வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து வேற்ற வெறிதே பெற்ற தாய்
அல்லல் விளைத்த பெருமான் ஆயர் பாடிக்கு அணி விளக்கு
மாலாய்ப் பிறந்த நம்பி மாலே செய்யும் மணாளன் ஏலாப் பொய்கள் உரைப்பான்
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்-
—————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply