பயம் கவலை துக்கம் வேறே வேறே நிலைகள்
பொறுத்துக் கொள்ள உபதேசம்
மாத்ரா ஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ண ஸுக துக்கதா–
ஆகமாபாயிநோ நித்யாஸ்தாம் ஸ்திதி க்ஷஸ்வ பாரத৷৷2.14৷৷
மாத்ரா = பொருள்கள், இயற்கை
ஸ்பர்ஸா = உணர்ச்சி
து = அது
கௌந்தேய = குந்தி புத்திரனே
ஸீ²த = குளிர்ச்சி
உஷ்ண = சூடு
ஸுக = சுகம்
து³:க²தா³: = துக்கம்
ஆக³ம் = வரும்
அபாயிநோ = போகும்
அநித்யாஸ் = நிரந்தரம் இல்லாதது
தாம் = அவை
ஸ்திதிக்ஷஸ்வ = பொறுத்துக் கொள்ள வேண்டும்
பா⁴ரத = பாரத குல தோன்றலே
குந்தீ புத்திரனே தந் மாத்ரா கார்யமான -சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்களோடும் -அவற்றை உடைய பொருள்களோடும்-
இந்திரியங்களின் சேர்க்கைகள் குளிர் வெப்பம் முதலானவற்றால் உண்டான இன்ப துன்பங்களைக் கொடுக்கின்றன –
இவை உண்டாகி அழிபவை-மோக்ஷ நிலையில் அடியோடு அழியக் கூடியவை -அவற்றைப் பொறுத்துக் கொள்
மனுஜேந்த்ர புத்ர -தாரை போல் இங்கும் பாரத -வழி நடத்திப் போக வேணும்
ஆத்மா நித்யம் தேகம் அநித்யம் என்று அறிந்தாலும் இங்கு யுத்தத்தில் வரும்
இன்ப துன்பங்கள் -பொறுக்க முடியாமல் அன்றோ உள்ளன
இதனால் வரும் நன்மைகள் அடுத்த ஸ்லோகம் –
ஆதி காரணம்
தன் மாத்ரா -பஞ்ச பூதங்கள் தொடங்கி -இவை வந்தே தீரும் என்று உணர்த்தி –
நேராக ப்ரத்யக்ஷ காரணம் தற்காலம்
பூநிலாய ஐந்துமாய் -திருச்சந்த –
சரீரமும் பஞ்ச பூதங்களால் –
ஆகாசம் -சப்தம் -காது
வாயு -ஸ்பர்சம் -தோல் த்வக்
நெருப்பு கண்
தண்ணீர் சுவை -ரசமாகவே நான் இருக்கிறேன் கீதையில்
இவை வரும் -வந்தது நிச்சயம் கடந்து போகமும்
இந்த covid -19-அப்படியே
வந்தது தானே போகும்
நினைவில் கொண்டு –துக்கத்தை -பொறுத்துக் கொள்ள வேண்டும் –
ஷமா பொறுமை வேறே –
பூமா தேவி உணர்ந்து -இவற்றால் மோக்ஷம் அடையச் செய்கிறார்கள் என்ற உணர்வே -ஸ்திதிக்ஷஸ்வ-
————-
யம் ஹி ந வ்யத யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப—
ஸம துக்க ஸுகம் தீரம் ஸோம் அருதத்வாய கல்பதே—৷৷2.15৷৷
யம் = அவன்
ஹி = அதனால்
ந = இல்லை
வ்யத²யந்த் = சேர்ந்திருது
யேதே = அவை
புருஷம் = மனிதன்
புருஷர்ஷப = புருஷ + ரிஷப = காளை போல உயர்ந்தவன்
ஸம துக ஸுகம் = துக்கத்தையும் சுகத்தையும் சமமாக
தீ⁴ரம் = வீரம் உள்ளவன்
ஸோ = அவன்
அம்ருதத்வாய = நிரந்தரமாக, இறப்பு இல்லாதவனாக
கல்பதே = காலம் தோறும் இருப்பான்
புருஷர்களுள் சிறந்தவனே-ஸூக துக்கங்களை சமமாக எண்ணுபவனாய் -தைர்யம் உடையவனாக எந்தப் புருஷன்
இவைகள் -புலன்கள் -மற்றும் போகங்களின் சேர்க்கைகள் -கலங்க வைப்பது இல்லையோ
அந்த மனிதனே மோக்ஷத்தை அடைய வல்லவனாவான்-
தீரன் -ஆத்ம ஞானம் வந்து தைரியமாக இருப்பவன் –
கப்பல் மூழ்கி -விமானம் விபத்து -covid 19 கர்மம் மட்டும் காரணம் இல்லை
ஆத்யாத்மிக ஆதி தைவிக -ஆதி பவ்திக-தாப த்ரயங்கள் –
லோகத்தில் பிறந்தது நமது கர்மம் அடியாகவே
துன்பப்பட மாட்டான் என்பது இல்லை துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவன் -என்றவாறு –
கால சக்கரத்தாய்
தேர் சக்கரம்
ஓடிக் கொண்டே இருக்கும் –
அநித்யம்
இந்த மாதிரி துக்கம் வரும் பொழுது தான் பொறுமை வேண்டும் -அப்படி இருப்பவனே தீரன்
சாதுர்மாஸ விரதம் -மழைக்காக -சீதாப்பிராட்டி தேடும் சமயத்திலும் சுக்ரீவாதிகளுக்கு கால அவகாசம் கொடுத்து
இயற்கைக்கு அருகில் இருக்க இருக்க பொறுமை வளரும் –
த்வய்யுத்3த4வாஶ்ரயதி யஸ்த்ரிவிதோ4 விகாரோ
மாயாந்தராபததிநாத்3யபவர்க3யோர்யத் |
ஜன்மாதயோऽஸ்ய யத3மீ தவ தஸ்ய கிம் ஸ்யுர
ஆத்3யந்தயோர்யத3ஸதோऽஸ்தி ததே3வ மத்4யே -ஸ்ரீ உத்தவர் கீதை-13-|| 7 ||
உத்தவா! ஆத்மாவாகிய உன்னிடத்தில் இந்த உலகமானது மூன்று விதமாக பிளவுபட்டுள்ளது.
அவைகள் அத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவதம் என்கின்ற தேஹம், புலன்கள், தேவதைகள் ஆகியவைகளாகும்.
ந ஆத்ய அபவர்கயஹ அஸ்ய – அது தொடக்கத்தில் இல்லை, இறுதியிலும் இல்லை
அந்தரா ஆபத்தி – இடைக்காலத்தில் மட்டும் இருப்பது)
அமீ ஜன்மாத்ய அஸ்ய: – இந்த பிறப்பு, இறப்பு போன்ற மாற்றங்கள் இந்த உலகத்தில் உள்ள பொருட்களில்,ஜீவராசிகளில் இருக்கிறது
தவ தஸ்ய கிம் ஸ்யு – இவைகளால் உனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை.
அஸதஹ – இந்த பொய்யான உலகத்திற்கு (அஸத்துக்கு)
அஸ்தி தத்3 ஏவ மத்3யே – முன்னும், பின்னும் இருந்து கொண்டு இடைக்காலத்திலும் இருப்பது.
யதோ யதோ நிவர்தேத விமுச்யேத ததஸ்தத: |
ஏஷ த4ர்மோ ந்ருணாம் க்ஷேம: ஶோகமோஹப4யாபதஹ: 15-|| 18 ||
யதோ யதோ நிவர்தேத – எந்தெந்த விஷயங்களிடமிருந்து பற்றற்று இருக்கிறாயோ
ததஹ ததஹ விமுச்யதே – அவைகளிலிருந்து துயரத்தை அடைவதில்லை, அந்தந்த பொருட்களிலிருந்து வரும் துயரத்திலிருந்து விடுபடுகிறான்.
ந்ருணாம் ஏஷ தர்மஹ – மனிதனுக்கு இதுதான் தர்ம மார்க்கம்
க்ஷேமம் – நன்மையானது, மோட்சத்தை தரக்கூடியது
ஶோக மோஹ ப4ய அபதஹ – சோகம், மோகம், மதிமயக்கம், பயம் இவைகளிலிருந்து விடுதலை அடைவதுதான் க்ஷேமம்.
விஷயேஷு கு4ணாத4யானாத்பும்ஸ: ஸங்கऽதோ ப4வேத் |
ஸங்3காத்தத்ர ப4வேத்காம: காமாதே3வ கலிர்ந்ருணாம்15- || 19 ||
விஷயேஷு குண த்4யானாத் பும்ஹ: – புலனுகர் போகப்பொருட்களில் உள்ள தற்காலிகமான பாதுகாப்பு,
மற்றும் சுகத்தக் கொடுக்கும் பகுதியை மட்டும் நினைத்துக் கொண்டிருப்பதால் மனிதனுக்கு
ஸங்கஹ தத் பவேத் – அந்தப் பொருட்கள் மீது உணர்வு பூர்வமான மதிப்பு ஏற்படுகின்றது
ஸங்காத் தத்ர பவேத காம – அதன்பிறகு அதை அடைய வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது.
அந்தப்பொருளோடு நம்மை சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம்
காமாதேவ கலிர் ந்ருணாம் – இந்தப்பற்றுக்களால் சண்டை, சச்சரவு, போன்ற தீய உணர்ச்சிகள் ஏற்படுகிறது.
விரஹ தாபம் போன்றவற்றில் பொறுமை வேண்டாம்
திவ்ய தேச சேவை இழந்து பொறுமை காத்து இருக்க முடியாதே
சம்சார இயல்பால் -அநித்யமானவற்றில் தான்
நித்ய அனுபவத்தில் தேவை இல்லையே
க்ஷிப்ரம் நிவேதயத –
இனி இனி இருப்பதின் கால் கூப்பிட்டு த்வரிப்பார்கள்
உடையவர் –மேல் நாடு
அபீதஸ்தவம்
பட்டர் கூரத்தாழ்வான் ஸ்ரீ ரெங்கம் பிரிந்து பிரார்த்தித்து
உத்தவர் இடம் கண்ணன் சொல்ல -உன் விஷயத்தில்
ஸ்ரீ மத் பாகவதத்தில் புகுந்தேன்
சப்த ரூபமாக உடனே இருப்பேன்
துக்கம் பொறுத்துக் கொள்ள வேண்டும்
இன்பமும் துக்கமும் சமமாக
ராகம் பயம் க்ரோதம் -வராமல்
இந்த கீதா உபதேசம் மூலமே பொறுமையை வளர்க்க வேணும்
அறிவிலா மாநிடங்கள் உற்ற போது உணர மாட்டீர்
வசவு -கொண்டே உத்வேகம்
இதுவே எதிர்ப்பு சக்தி வளர்க்க வேண்டும்
திருந்தி வர உபதேசம்
ஆத்ம ஞானம் பரமாத்ம ஞானம் -ஆச்சார்ய உபதேசம் தடுப்பு ஊசி –
கிளப்பி விடப்பட்ட தற்காப்பு சக்தியே பொறுமை –
குண அனுசந்தானம் அபய ஹேது
தோஷ அனுசந்தானம் பய ஹேது -பிள்ளை லோகாச்சார்யார்
ஆபத்து வர -திரௌபதி கஜேந்திரன் திரு நாம சங்கீர்த்தனம்
குணங்களை அனுசந்திக்கவே திரு நாம சங்கீர்த்தனம்
தீர்த்தங்கள் ஆயிரம் -நாமங்கள் ஆயிரம் –
ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் –
அம்மே என்கைக்கு ஆபத்தே பற்றாசாக அனைவரும் அதிகாரிகள்
அவன் தொடர்பே நித்யம்
ஸ்திதிக்ஷஸ்வ-சம்சார வியாதியையே போக்கும் இத்தையும் போக்கும் –
————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply