ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய
ஜன்மாத்யஸ்ய யதோ அந்வயாத் இதரஸ் சார்தேஷூ அபிஜ்ஞஸ் ஸ்வராட்
தேனே ப்ரஹ்ம ஹ்ருதா ய ஆதி கவயே முஹ்யந்தி யத் ஸூரய
தேஜோ வாரி ம்ருதாம் யதா வினிமயோ யத்ர த்ரி சர்கோ அம்ருஷா
தாம்நா ஸ்வேந சதா நிரஸ்த குஹகம் சத்யம் பரம் தீமஹி -1-1-1-
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -நேராகவும் பிறர் மூலமாகவும் -அந்தர்யாமியாய் இருந்து
சர்வ காரண ப்ரஹ்ம சங்கல்பத்தாலேயே தேவாதிகள் பஞ்சபூதங்கள் பிரவிருத்தி நிவ்ருத்திகள்
அன்வயாத் – உடன்பாட்டாலும், இதரஸ்ச –எதிர்மறையாலும்., அஸ்ய – இந்த உலகத்தின்,
ஜன்மாதி – பிறப்பு முதலியன, யத: -எதிலிருந்து உண்டாவதாக ஊகிக்கப்படுகிறதோ ,
அர்த்தேஷு அபிக்ஞ:-எல்லாவற்றிற்கும் உள்ளிருந்து அனைத்தையும் அறிவதாய்,
ஸ்வராட்- ச்வயம்ப்ரகாசமாகவும் உள்ள , ய: – எந்தப பரம்பொருள் ,
முஹ்யந்தி யத் சூரய: – மகான்களும் அறியமுடியாமல் மயங்கும், ப்ரம்ம-வேதத்தை,
ஆதிகவயே – ஆதி ரிஷியாகிய பிரம்மாவிற்கு, ஹ்ருதா – சங்கல்பத்தின் மூலம், தேனே -அளித்ததோ
யத்ர- எதனிடம், தேஜோ வாரி ம்ருதாம்-அக்னி, நீர் மண் போன்ற பஞ்ச பூதங்களும் ,
யதா விநிமய:-ஒன்று மற்றொன்று போல் தோற்றமளிக்கும் ,
த்ரிஸ்ர்க: ம்ருஷா – முக்குண ஸ்ருஷ்டியானது ஒரு பொய் தோற்றமோ,
ஸ்வேன தாம்னா- தன் ஒளியால் , ஸதா- எப்பொழுதும், நிரஸ்த குஹகம் – நிஷ்களங்கமாய் விளங்குவது எதுவோ,
பரம் சத்யம் – அந்த உண்மையான பரம்பொருளை தீமஹி- தியானம் செய்வோம்.
இதன் விளக்கம்.
‘ஜன்மாத்யஸ்ய யத:’ என்பது ப்ரஹ்ம ஸூத்ரத்தின் இரண்டாவது ஸூத்ரம் ஆகும்.
முதல் ஸூத்ரத்தில் ‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா ‘ என்று ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய முற்படுகையில்
இந்த ஸூத்ரம் அதைப்பற்றி தெரிவிக்கிறது.
இதன் பொருள் என்னவென்றால் எதனிடமிருந்து ஜன்மாதி, அதாவது இந்த பிரபஞ்சத்தின் பிறப்பு முதலியவை
(பிறப்பு, இருப்பு , அழிவு) ஏற்படுகிறதோ அதுதான் ப்ரஹ்மம் என்று பொருள்.
இதற்கு மூலம் ‘யதோ வா இமானி பூதானி ஜாயந்தே , யேன ஜாதானி ஜீவந்தி யஸ்மின் அபிசம்விசந்தி
தத் விஜிக்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம,’ என்ற உபநிஷத் வாக்கியம்.
எதிலிருந்து இந்த உயிர்கள் எல்லாம் தோன்றினவோ எதனால் இவை உயிர் வாழ்கின்றனவோ எதில் போய் முடிவில்
ஐக்கியம் ஆகின்றனவோ அதை தெரிந்துகொள் அதுதான் ப்ரஹ்மம் என்று பொருள்.
இதைத்தான் பாகவதத்தின் ஆரம்ப ஸ்லோகம் கூறுகிறது,
ப்ரஹ்மமே பரம் சத்யம் உண்மையான பரம்பொருள் அதை தீமஹி, த்யானிப்போம் என்று.
இந்த ப்ரஹ்மத்தை அன்வயம் மூலமும் வ்யதிரேகம் மூலமும் தெரிந்து கொள்ளலாம் என்பது முதல் வரியின் அர்த்தம்.
அன்வயம் என்பது உடன்பாடு. ப்ரஹ்மமும் ஜீவனும் ஒன்று என்று கூறும் வேத வாக்கியங்கள் ,
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம , இவை எல்லாமே ப்ரஹ்மம் என்று கூறுபவை.
வ்யதிரேகம் என்பது எதிர்மறை -ப்ரஹ்மம் இல்லாதது எதுவும் இல்லை என்பது.
சத்யம் , தாம, பரம் இவை ‘சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம ,’ என்ற வேத வாக்கியத்தைக் குறிக்கின்றன.
இந்த மங்கள ஸ்லோகம் இந்த பாகவத புராணத்தின் சாராம்சம் நாராயணனாகிய பர ப்ரஹ்மமே என்பதை வலியுறுத்துகிறது.
———-
இரண்டாவது ஸ்லோகம் அநுபந்த சதுஷ்டயம் என்ற ஒரு நூலின் முக்கியமான நான்கு லக்ஷணங்களை விவரிக்கிறது.
அவை என்னவென்றால், க்ரந்தம் , நூலின் பெயர் , விஷயம் , எதைப்பற்றி சொல்கிறது, ,
அதிகாரி, இதைப்படித்து புரிந்து கொள்ளும் தகுதி உடையோர் யாவர், பலம்- இதைப் படிப்பதனால் என்ன பலன்.
தர்ம ப்ரோஜ்ஜித கைத வோ அத்ர பரமோ நிர்மத் சராணாம் சதாம் வேத்யம் வாஸ்தவம் அத்ர வஸ்து
சிவதம் தாப த்ரய உன் மூலநம் ஸ்ரீ மத் பாகவதே மஹா முனி க்ருதே கிம் வா பரைர் ஈஸ்வர
சத்யோ ஹ்ருதய வ ருத்ய தே அத்ர க்ருதிபி ஸூஸ் ரூஷூபி தத் ஷணாத் –1-1-2-
மகாமுநி க்ருதே – மஹா முநிவரான வியாசரால் செய்யப்பட்ட
அத்ர ஸ்ரீமத் பாகவதே – ஸ்ரீமத் பாகவதம் என்ற இந்த நூலில்
நிர்மத் ஸராணாம் ஸதாம் –பொறாமை இல்லாத சாதுக்களுக்கு
ப்ரோஜ்ஜிதகைதவ: -கபடம் நீங்கிய
பரமோதர்ம: -உயர்ந்த தர்மம் உள்ளது.
அத்ர-இங்கு
வாஸ்தவம் – அழியாததாகவும்
சிவதம் – சிறந்த மங்கலத்தைத் தருவதும்
தாப்த்ரயோன்மூலனம் – ஆதி தைவிகம் ஆதி பௌதிகம் ஆதிதமு இகமாகிய மூன்று துன்பங்களை
அடியோடு களைவதாகவும் உள்ள
வஸ்து – விஷயம்
வேத்யம் – அறியப்படுகிறது.
அத்ர – இங்கு
க்ரிதிபி: – புண்ணியம் செய்தவர்களும்
சுச்ரூஷிபி: – இதை ஸ்ரவணம் செய்ய விரும்பினவர்களாகவும் உள்ளவர்களால்
ஸத்ய: தத் க்ஷணாத் -அந்த க்ஷணத்திலேயே
ஈஸ்வர: – பகவான்
ஹ்ருதி- ஹ்ருதயத்தில்
அவருத்யதே- நிறுத்தப்படுகிறார்
கிம் வா பரை:- மற்றவைகளால் ஆவதென்ன
இதில் ஸ்ரீமத்பாகவதம் என்று கிரந்தத்தின் பெயர் சொல்லப்படுகிறது.
பொறாமையற்ற சாதுக்கள் என்பது அதிகாரி லக்ஷணம் .
கபடம் நீங்கிய உயர்ந்த தர்மம் என்பது விஷயம்.
இதனால் ஏற்படும் பலன்கள், மங்கலத்தை தருவது, தாவ்பத்ர்யத்தை அழிப்பது,
ஹ்ருதயத்தில் பகவானை நிறுத்துவது ஆகியவை ஆகும்.
தாபத்ரயம் என்பது, ஆதி பௌதிகம், மற்றவர்களால் ஏற்படுவது,
ஆதிதைவிகம், இயற்கையாலும் தெய்வச் செயலாலும் ஏற்படுவது,
ஆத்யந்திகம் – நம் மனம் புத்தி இவைகளின் குறைபாடுகளால் உண்டாவது,
இங்கு உயர்ந்த தர்மம் என்பது “ஏஷா மே சர்வ தர்மாணாம் தர்மோ அதிக தமோ மத: “ என்று பீஷ்மர் கூறியபடி
நாராயணனை வணங்குவது துதிப்பது சரணமடைவது இவைதான் மேலான தர்மம் என்பது பொருள்.
மேலும் ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ,’ என்று கண்ணனே கூறியபடி,
பீஷ்மர் இதைத் தான்’ ‘யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேத் நர:ஏஷ தர்ம: சனாதன்: என்று கூறினார
பரிபூர்ண ஸூத்த ஹ்ருதயஸ்தராய் ப்ரஹ்ம யாதாத்மா ஞானம் இந்த ஸ்ரீ மத் பகவத ஸ்ரவணத்தால் பெறலாமே —
தாப த்ரயங்களும் அழிந்து போகுமே -வேறே ஒன்றையும் தேடித் போக வேண்டாம் –
——————
நிகம கல்ப தரோர் களிதம் பலம் ஸூக முகாத் அம்ருத த்ரவ்ய சம்யுதம் பிபத
பாகவதம் ரசம் ஆலயம் முஹு ரஹோ ரசிகா புவி பாவுகா –1-1-3-
ரஸ த்ரவ்யமாக எளிதில் பருகும்படி அன்றோ ஸ்ரீ ஸூகர் கொடுத்துள்ளார் –
புவி ரஸிகா: – புவியில் உள்ள ரசிகர்களே
பாவுகா: – நுட்பம் அறிந்தவர்களே
நிகமதரோ; வேதமாகிய மரத்தினுடைய
அம்ருதத்ரவசம்யுதம் – அம்ருதரசம் நிறைந்த
சுகமுகாத் – சுகருடைய வாயினின்று
கலிதம் – விழுந்த
பாகவதம் – பாகவதம் என்ற
ரஸமாலயம்- ரசம் நிறைந்த
பலம் – பழத்தை
முஹு: முஹு; – திரும்பத் திரும்ப
பிபத- பருகுங்கள்.
சுகப்ரம்மரிஷு கிளி முகம் கொண்டராதலால் சுகமுகாத் என்றால் கிளியின் வாயில் இருந்து விழுந்த பழம்
என்று பாகவதத்தைக் குறிப்பிட்டுள்ளது. கிளி கொத்திய பழம் ரசம் நிறைந்தது அல்லவா.
இது வேத சாராம்சங்களை உள்ளடக்கிய அம்ருத மயமான அதாவது முக்தியைக் கொடுக்கும் பழம்
————–
நை மிஷே அநிமிஷ க்ஷேத்ரே ருசயஸ் ஸுவ்ந காதயஸ்
சத்ரம் ஸ்வர்க்காய லோகாய சஹஸ்ர சம மாசத –1-1-4-
நைமிஷே -நைமிசாரண்யம் என்ற
அனிமிஷக்ஷேத்ரே- பகவான் கண்கொட்டாமல் வீற்றிருக்கும் க்ஷேத்திரத்தில்
சௌனகாதய: -சௌனகர் முதலிய முனிவர்கள்
ஸ்வர்காய லோகாய – தேவர்களும் அடைய விரும்பும் உலகத்தை (வைகுண்டத்தை)
ஸஹஸ்ர ஸமம்- ஆயிரம் வருடங்கள்
ஸத்ரம் ஆஸத- யாகம் செய்தார்கள்.
ஸ்ரீ நைமிசாரண்ய ஷேத்ரத்தில் ஸூவ்னகாதி முனிகள் சஹஸ்ர சம்வத்சரம் தபஸ் இருந்தார்கள் –
நைமிசாரண்யத்தில் பகவான் வன ரூபத்தில் இருக்கிறார் என்பதது ஐதீஹம் .
அவர் அனிமிஷ அல்லது கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
நைமிசாரண்யம் என்பதன் பொருள் நேமி: சீர்யதே யத்ர, அதாவது கர்மா என்ற சக்கரத்தின் முனை இங்கு
மழுங்கப்படுகிறது என்பதாகும்.: அதாவது பிறப்பு இறப்பு என்ற சம்சாரத்தின் சுழற்சி நின்றுவிடுகிறது.
ஏனென்றால் பகவானின் கண்கொட்டாத பார்வை இந்த க்ஷேத்ரத்தில் எப்போதும் கிடைப்பதால்.
ஸ்வர்கம் என்ற சொல் இங்கு ஸ்வர்பி: கீயதே இதி ஸ்வர்க்க: : என்று பொருள் கூறப்படுகிறது .
அதாவது சுவர்க்கவாசிகளும் விரும்பும் உலகம் , பரமபதமாகிற வைகுண்டம் அல்லது மோக்ஷம்.
நைமிஷே அனிமிஷக்ஷேத்ரே ரிஷய: சௌனகாதய:
ஸத்ரம் ஸ்வர்காய லோகாய ஸஹஸ்ர ஸமம் ஆஸத
நைமிஷே -நைமிசாரண்யம் என்ற
அனிமிஷக்ஷேத்ரே- பகவான் கண்கொட்டாமல் வீற்றிருக்கும் க்ஷேத்திரத்தில் சௌனகாதய: -சௌனகர் முதலிய முனிவர்கள்
ஸ்வர்காய லோகாய – தேவர்களும் அடைய விரும்பும் உலகத்தை (வைகுண்டத்தை)
ஸஹஸ்ர ஸமம்- ஆயிரம் வருடங்கள்
ஸத்ரம் ஆஸத- யாகம் செய்தார்கள்.
.நைமிசாரண்யத்தில் பகவான் வன ரூபத்தில் இருக்கிறார் என்பதது ஐதீஹம் . அவர் அனிமிஷ அல்லது கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
நைமிசாரண்யம் என்பதன் பொருள் நேமி: சீர்யதே யத்ர, அதாவது கர்மா என்ற சக்கரத்தின் முனை இங்கு மழுங்கப்படுகிறது என்பதாகும்.: அதாவது பிறப்பு இறப்பு என்ற சம்சாரத்தின் சுழற்சி நின்றுவிடுகிறது. ஏனென்றால் பகவானின் கண்கொட்டாத பார்வை இந்த க்ஷேத்ரத்தில் எப்போதும் கிடைப்பதால்.
ஸ்வர்கம் என்ற சொல் இங்கு ஸ்வர்பி: கீயதே இதி ஸ்வர்க்க: : என்று பொருள் கூறப்படுகிறது . அதாவது சுவர்க்கவாசிகளும் விரும்பும் உலகம் , பரமபதமாகிற வைகுண்டம் அல்லது மோக்ஷம்.
.அச்சமயம் அங்கு சூதபௌராணிகர் வருகிறார்.. அவரை அந்த ரிஷிகள் சில கேள்விகள் கேட்கிறார்கள் அதன் விடையாக அவர் ஸ்ரீமத்பாகவத புராணத்தைக் கூறுகிறார்.
1. எல்லா சாஸ்திரங்களுடைய சாரமானது எது?
2. பகவான் எதற்காக தேவகி வசுதேவரிடம் தோன்றினார்
3.அவருடைய அவதாரங்களைப்பற்றி கூறுங்கள்.
4. தன்னை மறைத்துகொண்டு மனிதனைப்போல் நடித்த அவருடைய மனித இயல்பினை மீறிய செயல்களைப் பற்றி கூறுங்கள்.
5.கிருஷ்ண பகவான் மறைந்த பிறகு தர்மம் யாரை சரண் அடைந்திருக்கிறது?
————-
த ஏகதா து முனயஸ் ப்ராதர் ஹுத ஹுத அக்நயஸ்
சத் க்ருதம் ஸூத மாஸீ நம் பப்ரச்சு ரித மாதரத் –1-1-5-
த ஏகதா -ரிஷிகள் ஒரு நாள்
து –ஆனால்
முனயஸ் -ரிஷிகள்
ப்ராதர் -காலை
ஹுத -எரியச் செய்து
ஹுத அக்நயஸ்-வேள்வித் தீ
சத் க்ருதம் -தகுந்த மரியாதைகளுடன்
ஸூத மாஸீ நம் –ஸ்ரீ ஸூத ஸ்வாமியை அமரச் செய்து -வியாஸ ஆசனம் இட்டு –
பப்ரச்சு -விசாரணை செய்தார்
இத மாதரத் –இவற்றின் மீது பின்வருமாறு -தகுந்த மரியாதைகளுடன்
மரியாதை பணிவுடன் ஸூக மகரிஷி இடம் கேட்டார்கள் –
ருஷய ஊசுஸ்
த்வயா கலு புராணாநி சேதி ஹாஸானி சாநக
ஆக்யா தான் யப்ய தீ தானி தர்ம சாஸ்த்ராணி யான்யுத –1-1-6-
ருஷய ஊசுஸ்–ரிஷிகள் கூறினார்கள்
த்வயா கலு -உங்களால் சந்தேகம் இல்லாமல்
புராணாநி
ச இதிஹாஸானி
ச அநக ஆக்யாதானி -எல்லாக் களங்களில் இருந்தும் விடுபட்டி விளக்கி உள்ளீர்
அபி அதீதானி –ஆயினும் கற்று அறிந்து
தர்ம சாஸ்த்ராணி
யானி உ த -இவை எல்லாம் கூறிய
ஆச்சார்யர் மூலம் புராண இதிகாசங்களை அறிந்தீர் -சாரார்த்தங்களை உபதேசித்தீர் –
யானி வேத விதாம் ஸ்ரேஷ்டோ பகவான் பாதராயண
அன்யே ச முநயஸ் ஸூத பராவர விதோ விது –1-1-7-
யானி -அவை அனைத்தும்
வேத விதாம் ஸ்ரேஷ்டோ -வேத விற்பன்னர்களில் அனைவரிலும் ஸ்ரேஷ்டரான
பகவான் பாதராயண-வியாஸ பகவான் பற்றியும்
அன்யே ச முநயஸ் பராவர – மேலும் பிற முனிவர்கள் -கற்று அறிந்த பண்டிதர்கள் பற்றியும்
ஸூத -தேவரீர்
விது –நன்கு அறிந்து உள்ளீர்
வேத்த த்வம் ஸூவ்ம்ய தத் சர்வம் தத்த்வதஸ் தத் அனுக்ரஹாத்
ப்ரூயுஸ் ஸ்நிக்தஸ்ய சிஷ்யஸ்ய குரவோ குஹ்ய மப்யுத –1-1-8-
வேத்த த்வம் -மேன்மை தாங்கிய தேவரீர் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்
ஸூவ்ம்ய -தூய்மையும் எளிமையும் உள்ளவர் –
தத் சர்வம் தத்வதஸ் தத் அனுக்ரஹாத் ப்ரூயுஸ் -அவர்கள் அனுக்ரஹத்தால் யாதாத்ம்ய தத்வங்கள் அனைத்தையும் உமக்கு உபதேசித்து உள்ளனர்
ஸ்நிக்தஸ்ய சிஷ்யஸ்ய –அடக்கமும் பணிவும் உள்ள சிஷ்யராதலால்
குரவோ குஹ்ய மப்யுத -குருக்கள் ரஹஸ்யார்த்தங்கள் எல்லாம் உமக்கு அளித்து உள்ளனர் –
தத்ர தத்ராஞ்ஜஸ் ஆயுஷ்மன் பவதா யத் வினிஸ் சிதம்
பும்ஸாம் ஏகாந்த தஸ் ஸ்ரேயஸ் தன்னஸ் சிம்சிதும் அர்ஹஸி -1-1-9-
தத்ர தத்ராஞ்ஜஸ் -அதனுடைய -அதனுடைய -அனைத்தையும் சுலபமாகி
ஆயுஷ்மன் -நீண்ட ஆயுள் உடன் வாழ ஆசீர்வதிக்கப் பட்டு
பவதா –உங்களால்
யத் வினிஸ் சிதம்-எதுவாகிலும் ஆராய்ந்து கண்டு பிடித்து இருப்பதை
பும்ஸாம் -பொது மக்களுக்காக
ஏகாந்த தஸ் ஸ்ரேயஸ் –பூர்ணமாயும் முடிந்த நன்மை யுடைத்தாயும் இருக்கிற
தத் ந சம்சிதும் அர்ஹஸி -அது எங்களிடம் விளக்குவதற்கு தகுதியாக
விளக்கி உபதேசிக்க பிரார்த்திக்கிறார்கள்
ப்ராயேண ஆல்பாயுஷஸ் சப்ய கலா வஸ்மின் யுகே ஐநா
மன்தாஸ் ஸூ மந்த மதயோ மந்த பாக்யா ஹ்யுபத்ருதா -1-1-10–
ப்ராயேண ஆல்பாயுஷஸ் சப்ய
கலவ் அஸ்மின் யுகே ஐநா-கலியுகத்தில் இங்கே பொது மக்கள்
மந்தாஸ் ஸூ மந்த மதயோ -மந்தமான -தவறான பாதையில் செலுத்தப் பட்ட
மந்த பாக்யா –பாக்யம் அற்ற
ஹி யுபத்ருதா -அதோடு அனைத்துக்கும் மேலான குழப்பத்தோடு
கலியுகத்தில் மக்கள் -அல்ப ஆயுஸ் -சண்டை பிரியர் -மந்த புத்தி உள்ளவராய் -அதிர்ஷ்டம் அற்று -அமைதி அற்று உள்ளார்கள்
பூரீணி பூரி கர்மாணி ஸ்ரோதவ்யானி விபாகஸஸ்
அத சாதோ அத்ர யத் சாரம் சமுத் திருத்ய மநீஷயா
ப்ரூஹி பத்ராய பூதா நாம் யே நாத்மா சம் ப்ரஸீததி –1-1-11-
பூரீணி பூரி கர்மாணி -பல வகைப்பட்ட பல கடைமைகள்
ஸ்ரோதவ்யானி விபாகஸஸ்-கற்கப்பட வேண்டிய விஷயங்களின் பிரிவுகளால்
அத சாதோ -எனவே முனிவரே
அத்ர யத் சாரம் -இங்கு எதுவாகிலும் ஸாராம்சம்
சமுத் திருத்ய மநீஷயா-உங்கள் திரு உள்ளத்தில் தேர்வு செய்து
ப்ரூஹி பத்ராய பூதா நாம் -ஜீவராசிகள் நன்மைக்காக தயவு செய்து உபதேஸிப்பீர்
யேந ஆத்மா ஸூ ப்ரஸீததி –எதனால் ஆத்மா பூர்ண திருப்தி அடைகிறார்
தங்களின் உபதேசங்களால் அவர்களுடைய இதயங்கள் பூர்ணமாகத் திருப்தி யடையக் கூடும்-
ஸூத ஜானாசி பத்ரம் தே பகவான் ஸாத்வதாம் பதி
தேவக்யாம் வாஸூ தேவஸ்ய ஜாதோ யஸ்ய சிகீர்ஷயா –1-1-12-
ஸூத ஜானாசி -உங்களுக்குத் தெரியும்
பத்ரம் தே –உங்களுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்
தேவக்யாம் வாஸூ தேவஸ்ய ஜாதோ யஸ்ய -தேவகி வஸூ தேவ புத்திரனாக அவதரித்து
பகவான் ஸாத்வதாம் பதி சிகீர்ஷயா –பர ப்ரஹ்மம் ஸாத்விக ரக்ஷகன் என்று தாங்கள் அறிவீர்கள்
தன்னஸ் ஸூஸ்ரூஷ மாணாநாம் அர்ஹஸ் யங்க அநு வர்ணிதம்
யஸ் யாவதாரோ பூதாநாம் க்ஷேமாய ச பவாய ச -1-1-13-
தன்னஸ் -அந்த எங்களிடம்
ஸூஸ்ரூஷ மாணாநாம் -அதற்காக முயற்சி செய்பவர்கள்
அர்ஹஸி -அதைச் செய்ய வேண்டும்
யங்க -குற்றம் அற்ற ஸ்வாமியே
அநு வர்ணிதம்-முன்னோர் அடிச்சுவடுகளைப் பற்றி முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் –
யஸ் யாவதாரோ -எவருடைய அவதாரம்
பூதாநாம் க்ஷேமாய -ஜீவராசிகளின் நன்மைக்காகவும்
ச பவாய ச -முன்னேற்றத்துக்காகவும்
அவராதங்களைப் பேசுவதாலும் கேட்பதாலும் ஒருவர் முன்னேற்றம் அடைவார்கள் அன்றோ-
ஆபன்னஸ் ஸம்ஸ்ருதிம் கோராம் யன்நாம விவசோ க்ருணன்
ததஸ் சத்யோ விமுச்யேத யத் பிபேதி ஸ்வயம் பயம் -1-1-14-
ஆபன்னஸ் ஸம்ஸ்ருதிம் கோராம் -கோரமான பிறப்பு இறப்பு துக்க சூழலிலே சிக்குண்டு இருந்தாலும்
யன்நாம விவசோ க்ருணன்-எந்த திரு நாம சங்கீர்த்தனம் அறியாமல் -நாவினால் மட்டுமே நவின்றாலும் –
ததஸ் சத்யோ விமுச்யேத -அதில் இருந்து உடனே விடுபடுகிறார்களோ
யத் பிபேதி ஸ்வயம் பயம் -அது தானாகவே பயத்துடன் அஞ்சி ஓடுமே
யஸ் பாத ஸம்ஸரயாஸ் ஸூத முனயஸ் பிரச மாயநஸ் சத்யஸ்
புனந்தி உப ஸ்ப்ருஷ்டா ஸ்வர்துனி ஆபோ அநு சேவயா –1-1-15-
யஸ் பாத ஸம்ஸரயாஸ் –எவருடைய தாமரைப் பாதங்களில் புகலிடம் கொண்டுள்ள
ஸூத
முனயஸ் -மஹா முனிவர்கள்
பிரச மாயநஸ் –பகவத் பக்தியில் ஆழ்ந்துள்ள
சத்யஸ் புனந்தி உப ஸ்ப்ருஷ்டா -உடனே புனிதப்படுத்த ஸஹ வாஸத்தினாலேயே
ஸ்வர்துனி ஆபோ அநு சேவயா –புனிதமான கங்கையின் தீர்த்தம் உபயோகத்துக்கு கொண்டு வர –
சக வாஸம் உடனே புனிதப்படுத்தும்
ஆனால் கங்கை நீரோ தானே புனிதமாக்கும் –
கோ வா பகவதஸ் தஸ்ய புண்ய ஸ்லோகேட்ய கர்மண
ஸூ த்தி காமோ ந ஸ்ருணு யோத் யசஸ் கலி மலாபஹம் -1-1-16-
கோ வா பகவதஸ் -யார் மாறாக பகவானின்
தஸ்ய புண்ய ஸ்லோகேட்ய -அவனது மாசற்ற ப்ரார்தனைகளால் வழிபடத் தக்கவர்
கர்மண-கர்மங்கள்
ஸூ த்தி காமோ -எல்லாப் பாபங்களில் இருந்து விடுபெற விரும்பும்
ந ஸ்ருணுயோத்-கேட்பவர் இல்லை
யசஸ் -மஹிமைகளை
கலி மலாபஹம் -கலி யுகத்தில் தூய்மை பெற வழியாகும்
இங்கே அவன் மஹிமைகளைக் கேட்க விரும்பாதவரும் உண்டோ
தஸ்ய கர்மாண் யுதாராணி பரிகீ தானி ஸூ ரபிஸ்
ப்ரூஹி ந ஸ்ரத்த தாநாநாம் லீலயா தததஸ் கலா -1-1-17-
தஸ்ய கர்மாண் யுதாராணி -அவருடைய உன்னதமான -அற்புதமான சேஷ்டிதங்கள்
பரிகீ தானி ஸூ ரபிஸ்-நாரதாதி முனிவர்களால் புகழ்ந்து பாடப்படுகின்றன-
ப்ரூஹி ந ஸ்ரத்த தாநாநாம் -மரியாதையுடன் வரவேற்கத் தயாரான -ஆவலாக கேட்க்கத் தயாரான எங்களிடம்
லீலயா தததஸ் கலா -அவதரித்து செய்த லீலைகளை
அதாக்யாஹி ஹரேர் தீமன் அவதார கதா ஸூ பா
லீலா விததஸ் ஸ்வரைம் ஈஸ்வரஸ் யாத்ம மாயயா -1-1-18-
தீமன் -விவேகம் உள்ளவரே
அதாக்யாஹி -எனவே விளக்கி உபதேசித்து அருளுவீர்
ஹரேர் அவதார கதா ஸூ பா-பகவானின் மங்கள காரமான அவதார சேஷ்டிதங்கள்
லீலா விததஸ் ஸ்வரைம் -இயற்றப்பட்ட சாகஸங்கள் -லீலைகள்
ஈஸ்வரஸ் யாத்ம மாயயா -பரம நியாந்தாவின் ஸூய
சக்திகள்
அனைத்து திருவிளையாடல்களை அவனது அந்தரங்க சக்திகளால் செய்யப்படுகின்றன அன்றோ
இவற்றைச் சொல்பவர்களும் கேட்பவர்களும் -இருவருமே நன்மை அடைவார்கள் அன்றோ –
வயம் து ந வித்ருப்யாம உத்தம ஸ்லோக விக்ரம
யச் ச்ருண்வதாம் ரசஞ்ஞானாம் ஸ்வாது ஸ்வாது பதே பதே -1-1-19-
வயம் து ந வித்ருப்யாம -ஆனால் நாங்கள் ஓய்ந்து இருக்க வில்லை
உத்தம ஸ்லோக விக்ரம-உத்தம ஸ்லோகங்களால் போற்றப் படுபவரான பரம புருஷனின் சேஷ்டிதங்கள்
யச் ச்ருண்வதாம் ரசஞ்ஞானாம் -எத்தைத் தொடர்ந்து கேட்பதால் ஞானாதிகரின் மனநிலை
ஸ்வாது ஸ்வாது பதே பதே -சுவையான ஒவ்வொரு அடியிலும்
ஒவ்வொரு க்ஷணமும் கேட்டு இன்பம் அடைகிறார்கள்-
க்ருதவான் கில வீர்யானி ஸஹ ராமேண கேசவ
அதி மர்த்யானி பகவான் கூட கபட மானுஷ -1-1-20-
க்ருதவான் கில வீர்யானி -என்ன செயல்கள் செய்யப்பட்டன
ஸஹ ராமேண கேசவ-நம்பி மூத்த பிரான் உடனே கேசவனும்
அதி மர்த்யானி பகவான் -அமானுஷ்யமான பகவான்
கூட கபட மானுஷ -மாறு வேடம் பூண்டு -மனித வேஷத்துடன் –
கலிம் ஆகதம் ஆஞ்ஞாய க்ஷேத்ரே அஸ்மின்
வைஷ்ணவே வயம் ஆஸீநா தீர்க சதரேண கதாயாம் சஷணா ஹரே -1-1-21-
கலிம் ஆகதம் -கலி யுகம் வந்து அடைந்தது
ஆஞ்ஞாய க்ஷேத்ரே -இதை அறிந்து இந்த நிலப்பகுதியில்
அஸ்மின் வைஷ்ணவே வயம் –இதில் ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களான நாங்கள்
ஆஸீநா -அமர்ந்து இருக்கிறோம்
தீர்க சத்ரேண ஹரே –நீடித்த யாகங்களை செய்ய -தொடர்ந்து பகவத் கதா ஸ்ரவணம் பண்ண -பரம புருஷனின் உன்னதமான சொற்களில் –
கதாயாம் சஷணா –எங்கள் நேரத்தின் வசதிக்கு ஏற்ப
த்வம் ந சந்தர் சிதோ தாத்ரா துஸ்தரம் நிஸ்தி தீர் ஷதாம்
கலிம் சத்தவ ஹரம் பும்ஸாம் கர்ணதார இவார்ணவம் -1-1-22-
த்வம் -மேன்மை தங்கிய தாங்கள்
ந -எங்களுக்கு
சந்தர் சிதோ -சந்திக்கும்
தாத்ரா -இறை அருளால்
துஸ்தரம் –கடக்க முடியாத
நிஸ்தி தீர் ஷதாம்-கடக்க விரும்புமவருக்கு
கலிம் –கலி யுகத்தை
சத்தவ ஹரம் –நற் குணங்களை சீர் அழிப்பது
பும்ஸாம் கர்ணதார -ஒரு மனிதரின் தலைவர்
இவார்ணவம் -இவ்வாறு சமுத்திரத்தை
கலி யுமாகிய துன்பக் கடலைக் கடக்கும் கப்பல் தலைவராக நீங்கள் எங்களைக் கரை ஏற்ற வேண்டும்
ப்ரூஹி யோகேஸ்வரே கிருஷ்னே ப்ரஹ்மண்யே தர்ம வர்மணி
ஸ்வாம் காஷ்டாம் அது நோ பே தே தர்மஸ் கம் சரணம் கத -1-1-23-
ப்ரூஹி –தயவு கூர்ந்து கூறுவீராக
யோகேஸ்வரே -எல்லா யோக சக்திகளுக்கும் எஜமானரான
கிருஷ்னே ப்ரஹ்மண்யே –பரம ஸத்யம்
தர்ம வர்மணி–தர்மம் காப்பவர்
ஸ்வாம் காஷ்டாம் –சொந்த வசிப்பிடம்
அது நோ பே தே -இக்காலத்தில் திரும்பிச் சென்று விட்டதால்
தர்மஸ் கம் சரணம் கத -தர்மம் யாரிடம் புகலிடமாகச் சென்றுள்ளதோ
ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளிய பின்பு
தர்மம் இப்போது யாரிடம் புகலிடமாக சென்றுள்ளது என்பதை உபதேசித்து அருள்வீராக
இதன் பதில் பின்பு உள்ளது
ஸ்ரீ மத் பாகவததமே அவன் ஸ்வரூபம்
————
அங்கு சூத பௌராணிகர் வருகிறார்.. அவரை அந்த ரிஷிகள் சில கேள்விகள் கேட்கிறார்கள்
அதன் விடையாக அவர் ஸ்ரீமத் பாகவத புராணத்தைக் கூறுகிறார்.
1.எல்லா சாஸ்திரங்களுடைய சாரமானது எது?
2.பகவான் எதற்காக தேவகி வசுதேவரிடம் தோன்றினார்
3.அவருடைய அவதாரங்களைப் பற்றி கூறுங்கள்.
4.தன்னை மறைத்துக் கொண்டு மனிதனைப் போல் நடித்த அவருடைய மனித இயல்பினை மீறிய செயல்களைப் பற்றி கூறுங்கள்.
5.கிருஷ்ண பகவான் மறைந்த பிறகு தர்மம் யாரை சரண் அடைந்திருக்கிறது?
பிரதம ஸ்கந்த பிரதம அத்யாயம் சம்பூர்ணம் –
—————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply