ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
————-
உபாய பூதனான ஈஸ்வரன் நமக்கு பவ்யனாய் இருந்தாலும் அநாதி காலம் தத் ஆஜ்ஞா ரூப ஸாஸ்த்ர மரியாதையை உல்லங்கித்து-
கரண த்ரயத்தாலும் அதி குரூரமான பாபங்களைக் கூடு பூரித்து இப்போதும் அதிலே முதிர நடவா நின்ற அளவிலே
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு உண்டான சீற்றத்தை அவன் தன்னையே இரந்து கால் கட்டி ஆற்றிக் கொள்ள வேண்டி அன்றோ இவனுக்கு இருப்பது-
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திரு உள்ளமாக
தான் மருந்து குடித்துப் பிள்ளை நோயைப் போக்கும் வத்ஸலையான தாயைப் போலே இதத் தாயான தேவரீரும்
ஆஸ்ரிதரான அடியோங்களுக்காக ஸ்ரீ பிராட்டிக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் சர்வ அபராதங்களையும்
பொறுத்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அருளுகையாலே அடியோங்களுக்கு அந்தக் குறையில்லை என்கிறார் –
தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்*
இன்புறுமோ? தந்தை எதிராசா! * – உன் புதல்வன்
அன்றோ உரையாய் யான் ஆதலால்* உன் போகம்
நன்றோ? எனை ஒழிந்த நாள்–5-
அன்னை குடி நீர் அருந்தி முலையுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ? என்னே
எனக்கா எதிராசா! எல்லாம் நீ செய்தால்
உனக்கது தாழ்வோ? உரை–7-
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையாக சாபராத சேதனரக்கு ஸ்ரீ பகவத் ஷமை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லை
என்று சொல்லா நிற்க நீர் நம்மை அபராதங்களைப் போக்கி தர வேணும் என்றும்
ஸ்ரீ தேவரீர்க்கு அதில் சக்தி உண்டு என்றும் நிபந்தியா நின்றீர்
இது சங்கதமோ என்ன –
அந்த ஷமை தானும் தேவரீருடைய ப்ரார்த்தநா சித்தமாய் தேவரீர் சம்பந்திகளுக்கு ரஷகமாய்
இருக்கையாலே சங்கதம் என்கிறார்–
கால த்ரேய அபி கரண த்ரய நிர்மிதாதி –இத்யாதியாலே
கால த்ரேய அபி கரண த்ரய நிர்மித அதி
பாப க்ரியஸ்ய சரணம் பகவத் ஷமைவா
சாச த்வயைவ கமலா ரமணே அர்த்தி தாயத்
ஷேமஸ் ஸஏவஹி யதீந்திர பவஸ் ஸ்ரிதா நாம் –18-
யதீந்த்ரரே முக் காலத்திலும் முக் கரணங்களாலும் பாபங்களை செய்பவனுக்கு பகவானின் ஷமா குணமே தான் தஞ்சமாகும்
அந்த ஷமை குணமும் ஸ்ரீ காந்தன் இடம் உம்மாலேயே பிரார்த்திக்க பட்டது –
அதுவே உம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு மோஷம் என்னும் ஷேமம் ஆகும்
பதவுரை:-
யே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,
கால த்ரயே அபி – கழிந்த காலம், நிகழும் காலம், வருங்காலமாகிய முக் காலங்களிலும்,
கரண த்ரய நிர்மித – மனம் மொழி மெய்களென்கிற மூன்று கருவிகளாலும் செய்யப்பட்ட,
அதி பாப க்ரியஸ்ய – (எல்லாவற்றையும் பொறுக்கும் தன்மையை யுடைய பகவானாலும் பொறுக்க முடியாதவளவுக்கு) மிகவும் விஞ்சின பாவச் செயல்களைச் செய்யும் ஜீவாத்மாவுக்கு,
ஸரணம் – பாவங்களைப் போக்கும் உபாயமானது,
பகவத் க்ஷமைவ – குற்றம் போக்குமவனாய் குணங்களுக்கு இருப்பிடமான பகவானுடைய பொறுமையே ஆகும்.
அந்தப் பொறுமையோ எனில்,
த்வயா ஏவ – பகவானையும் ஆணையிடும் ஆற்றல்படைத்த தேவரீராலேயே,
கமலா ரமணே – கருணையே வடிவெடுத்தவளாய் பகவானுடைய தயை பொறுமை முதலிய குணங்களை வெளிக் கிளப்புகிற ஸ்ரீரங்கநாச்சியாருடைய அழகிய மணவாளனாகிய ஸ்ரீரங்கநாதனிடத்தில்
அர்த்திதா இதி யத் – (ஸரணாகதி கத்யத்தில்) ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று உண்டோ,
ஸ ஏவ – அந்த ப்ரார்த்தனையே,
பவஸ் ஸ்ரிதாநாம் – (தேவரீருடைய அபிமானத்திற்கு இலக்காக) தேவரீரால் கைக் கொள்ளப் பட்ட அடியார்களுக்கு,
க்ஷேம:ஹி – உய்யும் உபாயமல்லவா?
——–
கால த்ரேய அபி
பூத காலத்தில் உள்ள பாபம் மாத்திரம் அன்றிக்கே கால த்ரயத்திலும் உண்டான பாபங்களுக்கும் ஆய்த்து
பொறை கொள்ள வேணுமாய்த்து
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம் ஸ்வ -என்றதைச் சொன்னபடி –
கரண த்ரய
ஒரு கரணத்தால் பண்ணினவற்றுக்கு பொறை கொள்ளுகை அன்றிக்கே கரணத்ரய
உபார்ஜிதங்களானவற்றுக்குப் பொறை கொள்ள வேணும்
இத்தால் மநோ வாக் காயை -என்றத்தைச் சொல்கிறது –
நிர்மிதாதி
இவை தான் சங்கல்பம் மாத்திரம் அன்றிக்கே பத்தும் பத்தாக செய்தவை என்கை
பாப க்ரியஸ்ய
என்று அக்ருத்ய கரணத்தையும்
அதி பாப
என்று பகவத் அபராதிகளையும் சொல்லுகிறது –
இத்தால் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்யா அபச்சார ரூப
நாநா வித அநந்த அபசாரான்-என்றதைச் சொன்னபடி –
சரணம் பகவத் ஷமைவா
இப்படி இருந்துள்ள பாபத்தை யுடையவனுக்கு ஸ்ரீ எம்பெருமானுடைய அபராத சஹத்வம் ஆகிய
க்ஷமை ஒழிய வேறு புகல் இல்லை –
சா ச த்வயைவ கமலா ரமணே அர்த்தி தாயத்
அந்த பொறை தானும் தேவரீர் தம்மால் ஸ்ரீ யபதி திருவடிகளில் மநோ வாக் காயை -என்று தொடங்கி
சர்வான் அசேஷதஸ் க்ஷமஸ்வ -என்று பிரார்திக்கப்பட்டது யாது ஓன்று உண்டோ –
அது தேவரீரைப் பற்றி இருக்கும் ஆஸ்ரித ஜனங்களுக்குப் பிழைக்கலாம் படி தேவரீர் வைத்த தண்ணீர் பந்தல் இறே
த்வயைவ
அபிமான அந்தர் பூதருக்குக் கார்யம் செய்ய வேணும் என்று ஈஸ்வரனோடு மன்றாடும்படியான ஸ்வரூபத்தை யுடைய
தேவரீர் அன்றோ பிரார்த்தித்து அருளிற்று –
இனி யாம் உறாமை –அடியேன் செய்யும் விண்ணப்பமே–மெய் நின்று கேட்டு அருளாயே -என்று ஸ்ரீ பிரதம ஆச்சார்யர்
பிராரத்த படி கண்டால் அவர் அடி பணிந்த இவர்க்கும் இது அன்றோ அனுஷ்டானம் –
கமலா ரமணே
அஹ்ருதயமான யுக்தியையும் சஹ்ருதயமாக்கிக் கார்யம் கொள்ளும் அவளும்
அவள் தன்னையும் அதி சங்கை பண்ணி ஆஸ்ரிதரை நோக்குமவனான சேர்த்தியில் அன்றோ பிரார்தித்தது –
அர்த்தி தாயத்
தாமும் அவனுமாக அறிந்து நெஞ்சால் அபேக்ஷித்தது அளவும் அன்றிக்கே பின்புள்ளவருக்கும் இது கொண்டு
வழக்கு பேசலாம் படி பாசுரம் இட்டு அன்றோ பிரார்த்தித்தது
அர்த்தித்தார் கார்யம் செய்தே நிற்க வேண்டும் படி பல் காட்டி அன்றோ போந்தது
ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்திர பவஸ் ஸ்ரிதாநாம்–
தேவரீருடைய ஸ்வ பாவத்தையும் அபிமான விஷய ஸ்வபாவத்தையும் பிரார்த்தனா பிரகாரத்தையும் அனுசந்தித்தால்
தேவரீர் திருவடிகளைப் பற்றினவர்களுக்கு ஆனைக் கழுத்தில் இருப்பாரைப் போலே
நிர்ப் பரராய் இருக்கைக்கு உறுப்பான ரக்ஷை அதுவே இறே –
(உம் பெருமை அடியார் பெருமை அர்த்தித்த பெருமை மூன்றுமே ராமானுஜர் அடியவர்களுக்கு ஷேம கரம் )
தாத்பர்யம்
அழகிய மணவாளன் -திருவடிகளில் பெரிய பிராட்டியார் ஸந்நிதியில்
ஆஸ்ரித அபராதங்களைப் பொறுத்து அருள தேவரீர்
பிரார்த்தததுவே ரக்ஷை
——————–
கால த்ரேய அபி –
பூத பவிஷ்யத் வர்த்தமான ரூபேண-மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கால த்ரயத்திலும்
கரண த்ரய –
மநோ வாக் காய ரூபேண மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கரண த்ரயத்தாலே
நிர்மிதாதி பாப க்ரியஸ்ய –
செய்யப்பட மஹா பாதக உபபாதங்களை உடையவனுக்கு
கால த்ரேய அபி –
ஒரு காலம் இல்லா ஒரு காலத்திலே யாகிலும் -சாதன அனுஷ்டானம் இன்றிக்கே எல்லாக் காலத்திலும்
பாபங்களையே யாய்த்து இவன் செய்வது
கரண த்ரய –
அது தான் ஒவ்வொரு கரணத்தால் அன்றிக்கே கரண த்ரயத்தாலும் யாய்த்து பாபங்களைச் செய்வது
நிர்மிதாதி
சங்கல்பித்து விடுகை யன்றிக்கே அனுஷ்டான பர்யந்தமாகச் செய்வது –
அன்றிக்கே
ஆரம்பித்து விடுகை யன்றிக்கே முட்ட முடிய வாய்த்துச் செய்வது
அதி பாப க்ரியஸ்ய-
பிராயச் சித்த அனுபவ விநாச்யங்களான பாபங்களை செய்கை மாத்ரம் அன்றிக்கே —
அவற்றால் நசியாத பாபங்களையும் யாய்த்துச் செய்வது
பிராயச் சித்த அனுபவ விநாஸ்யம் இல்லாத பாபம் உண்டோ என்னில்
கோக்நே சைவ ஸூராபேஸ ஸ்தேய பக்ந வ்ரதே ததா -நிஷ் க்ருதிர் விஹிதா சத்பி கருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்றும்
யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நு பவேப்ய நாச்யம் -(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )என்றும் சொல்லுகையாலே உண்டு –
அதில் க்ருதக் நதையாவது –
பிராயச்சித்த நாஸ்யம் யன்றிக்கே அனுபவ ஏக நாஸ்யமாய் இருக்கும் –(பசு வதை கள்ளுக்குடித்தல் திருட்டு -பிராயச்சித்தம் பண்ணிப் போக்கிக் கொள்ளலாம் -செய்நன்றிக்கு அவ்வாறு இல்லையே)
இனி பிராயச் சித்த அனுபவ நாஸ்யம் அல்லாததாய் –
புண்ய பாபங்களுடைய அனுஷ்டானத்துக்கு காரணமாய் உபாசக பர்யந்த
அனுதாவனமாய் இருப்பதொரு பாபம் உண்டு -அப் பாபத்தையும் யாய்த்து இவன் செய்வது –கரண த்ரய என்கையாலே
இவன் செய்த குற்றம் எல்லாம் புத்தி பூர்வகம் என்கிறது —
நிர்மித என்கிறது பூத காலத்துக்கு சேருமே யாகிலும் -வர்த்தமான பவிஷ்ய காலங்களுக்கும் உப லஷணமாகக் கடவது –
கருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம் ச-என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –
அன்றிக்கே –
பூத கால அபராதங்கள் போலே வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் இன்னபடி செய்யக் கடவோம் என்று சங்கல்ப்பித்து
வைத்தவையாய் அவை தான் பாவன பிரகர்ஷத்தாலே அனுஷ்டித்தவை போலே தோற்றுகையாலே-நிர்மித -என்கிறார்
அதுவும் அன்றிக்கே –
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹஸ்ர ஸோ யன்னமயா வ்யதாதி -ஸ்தோத்ர ரத்னம் -23-என்றும்
பூர்வம் யத் சமபூத்ததேவ ஹி புநர் —பவேத் -என்றும் சொல்லுகிறபடியே
வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் பூத காலத்தில் பண்ணின பாபங்களுக்கு சஜாதீயங்கள் யாகையாலே –
நிர்மித -என்கிறார் ஆகவுமாம் –
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||ஶ்லோகம் 23 –
மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.
அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||-ஶ்லோகம் 25 –
ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;
ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.
அங்கன் அன்றிக்கே –
கால த்ரயமாவது -ப்ராதர் -மத்யந்தி ந சாய்ந்த ரூபமான காலமாய் –
அபி -சப்தம் அநுக்த சமுச்சாயகமாய்
காலத் த்ரேயேஅபி என்று பஞ்ச காலத்திலும் என்னவுமாம் –
ப்ராஹ்மே முஹூர்த்தே ஸோத்தாய சிந்தயேத் ஆத்மனோ ஹிதம் -என்றும் –
ப்ராதர்த் யூத பிரசங்கே ந மத்யாஹ்னே ஸ்திரீ பிரசங்கே தாராத் ரௌ சோர பிரசங்கே ந என்றும் –(யூத பிரசங்கேசொக்கன் ஆட்டம் மஹா பாரதம் –ஸ்த்ரீ பிரசங்கம் ராமாயணம் –சோர பிரசங்கே--ஸ்ரீ மத் பாகவதம் )
யத்சாயம் ப்ராதர்மத் யந்தி நம் ச -என்றும்
இத்யேவ மாதிகளாலே பகவத் த்யான ஆராதன குண அனுபவாதிகளுக்கு உபயுக்ததயா சாஸ்த்ர விஹிதமான
ப்ராதர் மத்யந்தி ந சாய்ந்த ரூபமான கால த்ரயத்திலே -என்னுமாம் –
பரேத் யுபச்சிமே யாமே யாமின்யாஸ் சமுபஸ்தி தோ பிரபுத்ய சரணம் கதவா பரம் குரு பரம்பராம் -என்று தொடங்கி
தத் ப்ரத்யுஷ சிஸ் நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணி கீ க்ரியா யதீந்திர சரணத் வந்தவ ப்ரவணே நைவ சேதஸாம்
அத ரங்க நிதிம் சம்யக் அபிகம்ய நிஜம் பரப்பும் ஸ்ரீ நிதானம் சனைச் தஸ்ய சோதயித்வா பதத்த்வயம் ஆராத்ய ஸ்ரீ நிதிம்
பஸ்சாத் அனுயாகம் விதாய(17) ச ததஸ் சேதஸ் சமாதாய புருஷே புஷ்கரே ஷணே உத்தம் சித கரத் வந்தவம் உபவிஷ்ட முபஹ்வரே
ததஸ் ஸூ பாஸ்ரயே தஸ்மின் நிமக்னம் நிப்ருதம் மன யதீந்திர பிரவணம் கர்த்தும் யதமானம் நமாமி தம் -என்றும்
சாய்ந்த நம் தத க்ருத்வா சம்யகாராதனம் ஹரே -என்றும் இப்படி இறே இவர் விஷயமான தினசரியிலே
ஸ்ரீ அப்பா பஞ்ச கால பராயணத்வத்தை அருளிச் செய்தது –
இத்தால் –அக்ருத்ய கரணம் மாதரம் அன்றிக்கே க்ருத்ய அகர்ண ரூப பாபமும் உண்டு என்கிறது –
அங்கனும் அன்றிக்கே –
தேஹாத்மா அபிமானியாய் இருக்கும் காலமும் –
ஸ்வஸ்மிந் ஸ்வா தந்த்ர்ய அபிமானியாய் இருக்கும் காலமும்
அந்ய சேஷமாய் இருக்கும் காலமும் என்று கால த்ரைவித்யம் சொல்லவுமாம்
அப்போது இம் மூன்று காலத்திலும்
தத்தத் அபிமான அனுகுணமாக சாத்திய சாதனங்களிலே ஸ்வயமே பிரவர்த்திக்கை நிஷ்க்ருஷ்ட ஸ்வரூப விரோதி யாகையாலும் –
தத்தத் அதிகார அநுகுண சாஸ்திர அதிக்கிரமம் வருகையாலும் பாபம் உண்டு என்று கொள்ள வேணுமாம்
அன்றிக்கே
தமக்கு பூர்வ காலத்திலும் சம காலத்திலும் தமக்கு உத்தர காலத்திலும் உள்ள சாபராத சேதனருக்கு என்றும் ஒக்க
பகவத் ஷமையே இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களுக்கு உபாயம் என்று அனுசந்திக்கிறார் ஆகவுமாம்
இப்படி இன்றிக்கே -கால த்ரயமாவது –
நாஸ்திகனாய்-சாஸ்திர வஸ்யன் அன்றிக்கே இருக்கும் காலமும்
ஆஸ்திகனாய் சாஸ்திர வஸ்யனாய் இருக்கும் காலமும் –
ஜ்ஞானாதிகனாய் ஸ்வரூப வஸ்யனாய் இருக்கும் காலமும் -என்று காலத்தை பேதித்து
இம் மூன்று வகைப்பட்டு இருந்துள்ள காலத்திலும் என்றும் சிலர் சொல்லுவார்கள் –
அவர்கள் பஷத்தில் நாஸ்திகனான தசையில் விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும் (பாபம் வரும் )–
ஆஸ்திகனான தசையில் விதி பரதந்த்ரனாய் ஸ்வரூப விருத்தங்களைச் செய்கையாலும்(பாபம் வரும் )
ஸ்வரூப வஸ்யனான தசையிலும் சாஸ்திர வஸ்யதை இல்லாமையாலே விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும்(-ந ஸாஸ்த்ரம் ந க்ரமம் -பாபம் வரும் )
அபராதம் உண்டு என்பார்கள் –அது கூடாது –
ஸ்வரூப வஸ்யனான தசையில் சாஸ்திர வஸ்யதை இல்லாமையாலே விதி நிஷேத அதிக்கிரமம் பாபமாக மாட்டாது
அத ஏவ துஷ்க்ருதா சரணத்தால் அனுதாபம் பிறந்து ஸ்வரூப வஸ்யன் ஆகையாலே ஸ்வரூப விருத்தங்களைச் செய்து
அனுதபிக்க விரகு இல்லை –(அந்தரங்க கைங்கர்யம் செய்பவனுக்கு ஸந்த்யாவந்தன காலம் தப்பினாலும் குற்றம் இல்லையே
சித்ர தேர் -பெரிய நம்பி திருமாளிகையில் இன்றும் நின்று சேவை சாதித்தபின்பே போகும்
மாறனேர் நம்பிக்கு அந்திம கிரியை செய்த பாப்பம் இல்லையே )
சாஸ்திர வஸ்யனுக்கு சாமான்ய விசேஷ ந்யாயத்தாலே ஸ்வரூப விருத்தமான விதி அதிக்கிரமம் கூடும்(ஸந்த்யாவந்ததில் வருணனை இந்திரனை தொழுவது அநந்யார்ஹ சேஷத்வ விரோதி )
இவன் தனக்கு விதி நிஷேத அதிக்கிரமம் ஸ்வரூப விரோதியாய் (மடல் எடுத்தல் -மன்மதன் காலில் விழுவது-பேற்றுக்குத் த்வரிக்கை-உற்ற நல் நோய் இது தேறினோம் )ராக பிராப்தம் ஆகையாலே தவிர விரகு இல்லை
ஸ்வரூப வஸ்யனுக்கு சாஸ்திர வஸ்யதை இல்லை என்கிறதும் கூடாது -ஸ்வரூப வஸ்யனுக்கு பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டு இறே-
அவர்களுக்கு விஷயம் ஸ்ரீ பகவத் இஷ்ட அநிஷ்டங்கள் என்று கொள்ளும் அளவில் அவற்றை நேர் கொடு நேரே அறியப் போகாமையாலே
சாஸ்திர முகமாகவே அறிய வேண்டும் -அப்போது சாஸ்திர வஸ்யதை தன்னடையே உண்டாமாகையாலே
நாஸ்திகத்வாதிகளை இட்டு கால த்ரைவித்யம் சொல்லுகை அசங்கதம்-
சாஸ்திர வஸ்யதை உண்டாகில் இறே விசேஷ சாஸ்திர வஸ்யதை உண்டாவது
ஸ்வரூப வஸ்யனுக்கும் விதி பாரவஸ்யம் உண்டு -ஆகை இறே த்யஜ -வ்ரஜ -என்று த்யாக ஸ்வீ காரங்களை விதித்தது
அனுகூலங்களாக தோற்றுகையாலே ராக பிராப்தங்களாய் இருக்கும் -ஆகையாலே நாஸ்திகத் வாதிகளை
இட்டு காலத்தைப் பிரிக்கும் போது
இரண்டு என்றே கொள்ள வேணும் –ஆகையாலே கால த்ரேயேபி என்றதுக்கு கீழ்ச் சொன்ன படியே பொருளாகக் கடவது –
பவிஷ்யத் காலம் சரணாகத யுத்தர காலமாகையாலே அதில் புத்தி பூர்வாகம் கொள்ளும் அளவில்
சாஸ்திர விரோதம் வாராதோ என்னில் -வாராது
பூர்வம் மானசமாக சங்கல்பிதமான வற்றுக்கே உத்தர காலத்தில் ப்ராமாதிக அனுஷ்டானம் கூடுகையாலே –
அன்றிக்கே –
ஜாதேபி -கௌடில்யே சதி சிஷ்யாப் யநகையன் -தத்வ சாரம் -என்கிறபடியே புத்தி பூர்வகமாக உத்தராகத்திலே
பிரவ்ருத்திக்கும் படி மாத்ருச கடின சித்தரும் உண்டாகையாலே பவிஷ்ய காலத்திலும் புத்தி பூர்வாகம் உண்டு என்னுமாம் –
அது ஷமா விஷயம் அன்றிக்கே சிஷா விஷயமாய் யன்றோ சொல்லப் படுகிறது என்னில் –
அந்த சிஷை தானும் –லகுர் தண்ட பிரபன்னஸ்ய ராஜ புத்ர அபராதவத் –என்கிறபடியே –
கல்ப கோடி சதே நாபி ந ஷமாமி வஸூந்தரே -(வராஹ நாயனார் பூமா தேவிக்கு அருளிச் செய்தது )என்னும்படியான பாபத்தை இஸ் ஸரீரத்தோடு அல்ப காலத்தில் அனுபவிக்கும் படி-பண்ணுகையாலே ஷமா கார்யமாகக் கடவது –
ஆக கால த்ரயத்தாலும் சாபராதியான இச் சேதனனுக்கு
சரணம்
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயம் –
பகவத் ஷமைவ-
ஆஸ்ரித கார்ய கரத்வோபயோகிகளான ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்களை யுடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
பொறுத்தோம் என்கிற ஷமை தானே –
ஏவ காரத்தாலே மற்று ஓன்று இல்லை என்கிறது –சரணாகதி தானும் ஷமாவ்யஞ்சகம் இறே –
இத்தை இறே ஷாம் யஸ்யஹோ ததபி ஸந்தி விராம மாத்ராத் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -61-என்று
ஸ்ரீ ஆழ்வான் அருளிச் செய்தது
யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவேபி அநாஸ்யம்
தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துர் இஹ க்ஷணார்த்தே
ஏவம் சதா சகல ஜென்மஸூ சாபராதம்
ஷாம்யஸி அஹோ ததபிஸந்தி விராம மாத்ராத் –61-
எம்பெருமானே யாதொரு பாபமானது லக்ஷக்கணக்கான ப்ரஹ்ம கல்பங்கள் அனுபவித்தாலும் மாளாததோ
அப்படிப்பட்ட பாபத்தை சேதனன் இங்கு அரை நொடியில் செய்கிறான்
இப்படி எல்லா பிறப்புகளிலும் எப்போதும் குற்றவாளனாகவே இரா நின்ற சேதனனை –
இனி நாம் குற்றம் செய்யலாகாது என்று கை ஒழிந்த அளவையே கொண்டு க்ஷமித்து அருளா நின்றீர் —
ஆச்சர்யமான குணம் இது –
ஷமா குணத்தின் பெருமையைப் பேசுகிறார் இதில் –
சா ச –
எப்பேர்பட்ட அபராதங்களுக்கும் புகலிடமாக பிரசித்தமான அந்த ஷமை தானும்
த்வயைவ
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதே -இவர்கள் துர்கதியில் நின்றும் நிவ்ருத்தராய் ஸ்வரூப அனுரூபமான
தாஸ்யத்திலே அன்வயித்து வாழும்படி எங்கனே என்று கரை புரண்ட கிருபையை உடைய தேவரீராலேயே
ஏவ காரத்தாலே
இன்று ஒருவன் அறிவுடையவனாய் பிரார்த்திக்க வேண்டாத படி ஸ்வ ஆஸ்ரித சகல சேதன விஷயமாக
தேவரீராலே பிரார்த்திக்கப் பட்டது என்கிறது
இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் தாமே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக பிரபத்தி செய்து அருளுகையாலே
தனித்து ஒருவர் பிரபத்தி பண்ண வேண்டா என்கிறது –
இவ்வர்த்தம் ஸ்ரீ எம்பெருமானார் தம் சரம தசையிலே ஸ்ரீ பெரிய பெருமாள் திரு முன்பே சென்று சேவித்து நிற்க அவ்வளவிலே
ஸ்ரீ பெரிய பெருமாளும் அருளப் பாடிட்டு ஓன்று சொல்வான் போலே இருந்தாயீ-என்ன
நாயந்தே அடியேன் சம்பந்தி சம்பந்திகளும் தேவரீர் ஷமைக்கு விஷயராய் உஜ்ஜீவிக்கும் படி கிருபை செய்து அருள வேணும் என்ன
ஸ்ரீ பெருமாளும் அப்படியே யாகக் கடவது என்று அனுக்ரஹித்தார் என்று பிரசித்தம் இறே
ந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்–60-
நாம் பிரார்த்தித்தமை யுண்டு -அவன் ஸ்வா தந்த்ர்யத்தால் செய்யா விடில் செய்வது என் என்ன –
கமலா ரமேண-
தேவரீர் சொல்லிற்றை மறுக்கும் விஷயத்திலேயோ தேவரீர் பிரார்த்தித்து
அவன் தேவரீர் பிரார்த்த படி செய்யா விடில் ஸ்ரீ பெரிய பிராட்டியார் அவனுக்கு முகம் கொடுப்பாளோ என்னுதல்
தேவரீர் பிரார்த்தனையை செய்விக்கும் சாஷி உண்டு என்னுதல் -கமலத்தில் திரு வவதரிக்கையாலே கமலை என்று
திரு நாமம் உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல்
கஸ்ஸ மஸ்ஸ கமௌ கமௌ லாதீதி கமலா என்று வ்யுத்பத்தியாய் அத்தாலே ஸூக பிரதனான ஸ்ரீ ஈஸ்வரனையும்
ஜ்ஞான பிரதனனான சேதனனையும் உபதேசத்தாலும் சௌந்தர்யாதி களாலும் -ஸ்வ வசமாக்கிக் கொள்ளும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல் –
அர்த்திதா
மநோ வாக் காயை -என்கிற சூர்ணிகையாலே பிரார்த்திக்கப் பட்டது
இதியத் –
என்கிறது யாதொன்று உண்டு
ச ஏவ
லிங்க வ்யத்யயம்-விதேய பிரதான்யத்தாலே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக தேவரீர் –
மநோ வாக் காயை -என்று தொடங்கி-
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம் ச சர்வாந் அசேஷாத ஷமஸ்வ -என்று
இருவருமான சேர்த்தியிலே பிரார்த்தித்த பிரார்த்தனை தானே
ஷேம
ரஷை-ரஷையாவது -ஸ்வ சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி ரஷகமாம் போலே தேவரீருடைய பிரார்த்தனையும்
தேவரீர் சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி தானே ரஷகம் ஆகிறது –
பவஸ் ஸ்ரிதா நாம் –
ஸ்வ அனுவ்ருத்தி நிரபேஷராய் கிருபா மாத்திர பிரசன்னாசார்யாரான தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -என்னுதல்
தேவரீர் சம்பந்தி பரம்பரையும் உஜ்ஜீவிக்கும் படி பகவத் விஷயீ காரம் பெற்ற தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு என்னுதல்
இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் உண்டாகவே பகவத் ஷமை இவன் பிரார்த்திக்க வேண்டாத படி தன்னடையே யுண்டாம் என்கிறது –
இத்தால் ஸ்ரீ ஈஸ்வர சம்பந்திகளுக்கு ஸ்வ அபராதங்களை ஸ்ரீ ஈஸ்வரன் ஷமிப்பனோ ஷமியானோ என்று சம்சயிக்கவும் கூடும்
அஸ் சம்சயமும் இல்லை ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்திகளுக்கு என்கிறது –
ஏவ காரத்தாலே இதா நீந்தனை பிரார்த்தனை (இப்போது செய்யும் பிரார்த்தனை )ரஷகம் அன்று என்கிறது
ஹி
இவ் வர்த்தம் அடியேன் விண்ணப்பம் செய்ய வேணுமோ
அர்வாஞ்ச இத்யாதியால் பிரசித்தம் அன்றோ என்கிறார்
அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:
கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்
இத்தால் ஸ்ரீ ஆசார்ய அபிமானமே உத்தாரகம் என்கிறது
இப்படி இவர் விண்ணப்பம் செய்த வாறே நம்முடைய யத்னம் சபலமாய்த்து என்று திரு உள்ளம் உகந்தபடி இருக்கக் கண்டு
ஸ்ரீ யதீந்திர
என்கிறார்
பவாஸ் ஸ்ரிதா நாம்
ஸ்வ யத்னமே ஸ்வ ஆஸ்ரிதர் ரஷகமாம் படி இருக்கிற தேவரீர் சம்பந்திகளுக்கு என்னவுமாம் –
———–
கீழ் ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் யதிராஜருக்கு வஸப்பட்டவனென்றார்.
ந அபூர்வம் -அபேக்ஷ ணீய –இப்பொழுது அடியேனுக்காக பெரியபெருமாளைப் பிரார்த்திக்க வேண்டாம்
நம் ஆச்சார்யரும் நமக்காகப் பிரார்த்திக்க வேண்டாமே
பூர்வமேவ -தேவரீர் பண்ணி அருளிய பிரார்த்தனை முன்பே -அபிமான விஷயாந்த பரர்களுக்கு விரோதிகளை போக்கிக்கொடுக்க –
நாநா வித அபசாரங்களையும் ஸமஸ்தங்களையும் தொலைத்து அருள பிரார்த்திக்க
அவனும் அப்படியே செய்கிறோம் என்று ஒத்துக்கொண்டு அருளிச் செய்தார்
திரும்பவும் கேட்க வேண்டாம்
ஆனாலும் தேவரீரால் இன்று செய்ய வேண்டியது இவன் என்னுடைய பையல் என்று அபிமானிக்கவே வேண்டியது
நமது ஆச்சார்யரும் உடையவர் சம்பந்தி என்று தானே ஸமாஸ்ரயணம் பண்ணி தாஸ்ய நாமமும் அருளிச் செய்கிறார்கள் –
இந்த ஸ்லோகத்தில் அந்த ஸ்ரீரங்கநாதனை இன்று புதிதாக, அடியேனுடைய பாவத்தைப் போக்கும்படி தேவரீர் ப்ரார்த்திக்க வேண்டாம். முன்பே கத்யம் விண்ணப்பிக்கும் போது ‘மநோ வாக் காயை:’ என்று தொடங்கும் சூர்ணையாலே, ‘க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாந் ச ஸர்வாந் அஷேஷத: க்ஷமஸ்வ’ (முன்பு செய்யப்பட்டவையும், இப்போது செய்யப்படு மவையும், இனிமேல் செய்யப்போமவையுமான எல்லாவிதமான அபசாரங்களையும் (பாவங்களையும்) ஒன்றையும் விடாமல் பொறுத்தருளவேணும்) என்று. அடியோங்களுடைய பாபங்களையும் பொறுத்தருளும்படி ப்ரார்த்தித்தாய் விட்டதே. அந்த ப்ரார்த்தனையே போதாதோ அடியோங்களுக்கு உஜ்ஜீவநோபாயம் என்கிறார்.
(முன்பு எடுத்த கத்ய வாக்யத்தில் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாவத்தைப் பொறுக்கும்படி ப்ரார்த்தித்தாரென்பது ஸ்பஷ்டமாக இல்லாவிட்டாலும், ‘இமையோர் தலைவா! இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை, அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளாய்’ என்று தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும், அறியாமையும், தீவினையும் பிறப்புமாய் ஓயாமல் நடந்து செல்கிற ஸம்ஸார ஸம்பந்தத்தை இனிமேல் அடையாமலிருப்பதற்காக, எல்லாருக்குமாகத் தாமொருவரே எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்த மாறனாம் நம்மாழ்வாருடைய திருவடிகளைப் பணிந்து உய்ந்தவராகையாலும்,
உண்மையில் – பிறர் துன்பங்கண்டு பொறாமயென்னும் தயையை எம்பெருமானைக் காட்டிலும் அதிகமாக பெற்றுள்ளவராகையாலே, திருகோட்டியூர் நம்பிகள் தம்மைப் பதினெட்டுத் தடவைகள் நடக்க வைத்து மிகவும் வருத்தி உபதேஸித்த சரம ஸ்லோகார்த்தத்தை எந்த வருத்தத்தையும் கொடாமல் தம்மிடம் ஆசையோடு கேட்டவர்களுக்கு உபதேஸித்த பெருமையை உடையவராகையாலும்
யதிராஜர் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாபத்தையும் பொறுக்கும்படி நிஸ்சயமாக ப்ரார்த்தித்திருப்பரென்று நம்பியே ‘க்ஷேமஸ்ஸ ஏவஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம்’ (தேவரீர் ப்ரார்த்தித்த ப்ரார்த்தனையே, தேவரீரை ஆஸ்ரயித்த அடியோங்களுக்கும் உஜ்ஜீவநோபாயமாகும்) என்று மணவாளமாமுனிகள் அருளிச்செய்தார் என்று கொள்ளல் தகும்.
இக் கத்ய வாக்யத்தில் “மம (அபசாராந்)” என்று இல்லாததனாலும், எல்லாருடைய அபசாரங்களையும் பொறுக்கும்படி ப்ரார்த்தித்ததாகக் கொள்ளுதல் பொருந்தும்.)
ஸர்வம் ஸஹ -திரு நாமம் -சாத்தப்பட்ட அவராலும் பொறுக்க முடியாத அபசாரங்களைச் செய்து இருந்தாலும்
சிஷை -தண்டனை -உபாதான ஸங்கல்பம் -மாற்றி -ஸஹித்துக் கொள்ளும்படி பண்ணி
க்ஷமைவ –ஏவ காரம் -இத்தைத் தவிர வேறே வழி இல்லையே –
பரம காருணிகரான தேவரீராலே -பெருமாள் இடம் நமக்காகாகக் கேட்டு -உரிமையுடன் -அங்கு -அன்பு கருணை இங்கு -புருஷகார உபயுக்தம் இவையே
இதனாலேயே ஆழ்வார் ஆச்சார்யர்கள் திரு நக்ஷத்திரத்தில் கைங்கர்யம் செய்யும் நமக்கு பேறு நிச்சயம்
பரகால நாயகி பராங்குச நாயகி -மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
குறையல் பிரான் அடிக்கீழ் -இருந்து
உடையவர் -நம்மிடம் பரம கருணையும் -அவன் இடம் உரிமை -இவையே உபய விபூதி நாயக்கர் நம் பாஷ்யகாரர்
இவை அவன் இடம் இல்லையே -நம் உடையவர் இடம் அசாதாரணம் இவையே –
தேவரீராலேயே -இங்கும் ஏவகாரம் இத்தையே காட்டும்
தயா ஷாந்தி -கமலா ரமணன் -இடத்தில் வேண்டினீர் -ராமணனை பிரார்திக்கவில்லை
காருண்ய ரூபயா -லஷ்மீ சஹாயா ரிஷிகேசா -கருணையைக் கிளப்பி விடுபவள்
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னும் அவன் அன்றோ
நிரதிசய பிரியம் கொண்டவன் –
தேவரீர் பிரார்த்தித்தீர் அன்றோ
யத் ததேவ -தேவரீர் பிரார்த்தத்த்து -யத் தத் ஸப்தம் இல்லாமல் -விதேய அனுஷராத் புல்லிங்கம்
அபிமானத்தில் ஒதுங்கினவர்களுக்கு இதுவே அநிஷ்டம் போக்கும் உபாயம்
ஏவ காரம் -தேவரீருடைய பிரார்த்தனை மட்டுமே ஒரே வழி –
பொறுமையே க்ஷேமம் முக்கியார்த்தம் அல்ல நமக்கு –
அந்தப்பெரிய பெருமாள் இடம் -வசப்பட்டவர் இடம் பிரார்த்திக்க வேண்டுமோ -உரிமையும் கேட்டுப்பெறலாமே
ராமானுஜர் ஆணையை காத்து இருப்பவர் இடம் இவ்வாறு -பிரார்த்தித்தால் அவசியம் சங்கையே இல்லாமல் கார்யகரம் ஆகுமே –
ஸாஸ்த்ரம் உபாயங்கள் பலவும் சொல்லும் -கர்மயோகம் போல்வனவும் -ப்ரபத்தியும் -ஸ்வ பர கத கத -இரண்டும் -பகவான் -ஆச்சார்யர் இடமும் உண்டே-ஸ்வீ காரத்தில் உபாய புத்தியும் தவிர்க்க வேண்டுமே
ராமானுஜர் அபிமானத்தில் ஒதுங்க வேண்டும்
இதில் நம்பிக்கை துர்லபம்
இதுவே ஆச்சார்யர் அனுக்ரஹத்தால் நமக்கு ஏற்பட வேண்டும்-இத்தை நிர்ணயிக்கவே இந்த ஸ்லோகம்
எம்பெருமானாருடைய திவ்ய வைபவத்தைப்ரேமாநுகுணமாய்ப் பேச வந்த மாமுநிகள்:
தமது ப்ரேமாபாவத்துக்கும்,-இதர விஷய ப்ராவண்யத்திற்குமடியான பாபத்தைப் போக்கியருள வேணுமென்று விண்ணப்பித்து; பத்த்ரயார்த்த நிஷ்டைக்கு விரோதிகளான அக்ருத்ய கரணாதிகளையும், அபசாராதிகளையும் பரக்கப் பேசி; மூன்றுவகைப்பட்ட தாபத்ரயீயான ஸமூஹங்களாலே உண்டான பாபார்ஜந்த்தினின்றும் மீளாதவனாய், ஸரீர
நிவ்ருத்திகளிலும் அபேஷையில்லாதவனாய்,
யாமுநாசார்ய ப்ரப்ருதிகள் அருளிச்செய்த தோஷ ஸமூகங்களுக்கெல்லாம் கொள்கலமான, “தோஷமே வேஷமான” தனக்கு, எம்பெருமானாரே! இஷ்டங்களைத் தொலைத்து அநிஷ்டங்களைப் போக்கும் ஸ்ரீ விஷ்ணுலோஹ மணிமண்டப மார்க்கதாயியான,
ஆஸ்ரித பாபவிமோசந சக்தியுள்ள தேவரீரின் க்ருபையொழிய தனக்கு வேறுகதியில்லை என்று “ஆசார்யாபிமாநமே உத்தாரகம்” என நமக்கு மாமுநிகள் காட்டிக் கொடுத்த பின்பும்:
அநாதிகாலமாக ஸாஸ்த்ரமர்யாதையைத் தாண்டி கரணத்ரயத்தாலும் அதிக்ரூரமான பாபங்களைக் கூடுபூரித்து இப்போதும் அதிலேயே மூழ்கிக்கிடக்கும் அடியோங்களை ” மருந்து குடித்துப் பிள்ளை நோயைப்போக்கும் வாத்ஸல்யையான தாயைப் போன்றவரும்; எம்பெருமானாருக்குத் திருவுள்ளமாக இருக்கும்
“ஸ்வாமியே”; புத்திபூர்வகமாக உத்தரகாலத்மிலே ப்ரவ்ருத்மிக்கும்படி ஸரணாகதி பண்ணுவதிலும் நேர்மையில்லாமல் பண்ணும் அடியேனைப்போன்ற கடுமையான சித்தர்களின் ஸ்வாபராதங்களையும் பொறுத்தருள வேணுமென்றுப்ரார்த்தித்து-இத்தால் “ஆசார்யஅபிமாநமே உத்தாரகம்” என்றிருக்கும் ஆஸ்ரிதரான அடியோங்களுக்கு குறையொன்றுமில்லை என்பதே இக்காலஷேபமடியாக அடியோங்கள் அறிந்துகொண்ட “தர்சனம்” என்று சொல்லி, தர்சனப்ரவர்த்தகரான ஸ்வாமி திருவடிகளைப் பற்றினவர்க்கு ஆனைக்கழுத்திலிருப்பாரைப் போலே நிர்ப்பரராயிருக்கைக்கு உறுப்பான *ரஷையும்” அதுவே; “தர்சனமும்” அதுவே என்று சத்தைப் பெற்றபடி ஸ்வாமிக்குப் பல்லாண்டு பாடிக் கால க்ஷேபம் செய்வோம்
—————————————————————–———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply