பத்மாயாஸ் ப்ரணய ரஸாத் ஸமாஸ ஜந்த்யா ஸ்வம் பாஹும் ஸூ பஹு மதோ புஜேன தேந
காம் நாம அந்வ பவத் அஹோ தஸாம் தாதத்வே கண்டஸ் தே கரி கிரி நாத கம்பு காந்த -41-
ஹே கரி கிரி நாத
கம்பு காந்த -சங்கம் போல் அழகிய
தே கண்ட — உன்னுடைய திருக் கழுத்தானது
ப்ரணய ரஸாத்-ப்ரீதி ரசத்தாலே
தேந புஜேன ஸ்வம் பாஹும்ஸமாஸ ஜந்த்யா-அப்படிப்பட்ட உன்னுடைய புஜத்தோடே தன்னுடைய புஜத்தைத் தழுவி முழுசா நின்ற
பத்மாயாஸ் -பிராட்டிக்கு
ஸூ பஹு மதஸ் ஸந் -மிகவும் பஹு மான பாத்திரமாய்க் கொண்டு
தாதத்வே–அக்காலத்திலே
காம் நாம தஸாம் அந்வ பவத் அஹோ-எந்த அவஸ்தையை அனுபவித்ததோ -அந்தோ –
திருக்கழுத்தானது -க்ரமுக தருண க்ரீவை போலவும் சங்கம் போலவும் -ரேக த்ரய விபக்த அங்கமாய் இருக்குமே –
அத்தைக் கண்டவாறே -ப்ரணய விலகல் லஷ்மீ விஸ்வம்பரா கரகந்தலீ கனக வலய கிரீடா சம்க்ராந்தரேக
இவோல்லசந் -என்றால் போலே ஆழ்வான் ஈடுபடுகிறார்
தழுவி முழிசிப் பரிமாறின சமயங்கள் பலவும் உண்டே
திருப் பாற் கடல் கடைந்த போது திவ்ய மால்யாம்பர தரையாய்-சர்வ பூஷண பூஷிதையாய் சகல தேவர்களும் பார்க்க
கரவத அநந்தரம் பண்ணி அருளிய பரிஷ்வங்கம் -ஒளஷதமாக காடாலிங்கனம்
இவை எல்லாம் ஆழ்வானுக்கு விவஷிதம் இல்லையாம்
விசேஷித்து கிருஷ்ணாவதாரத்தில் கண்டா ஸ்லேஷம் பண்ணி அருளி
எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டால் இந்தப்பக்கம் நின்றவர் என் சொல்லார் என்று
அஞ்ச வேண்டிய நிலத்தில் இன்றிக்கே
பொய்கை முது மணல் முல்லை பந்தல்களிலே பண்ணும் விகாரம் ஆகையால்
ஆலிங்க தாயாம் புநர் ஆயதாஷ்யா மாம் ஆஸாஸ் மஹே விக்ரஹயோர பேதம் -என்னும்படி
ப்ரணய ரசம் மீதூர்ந்து இருக்கும் அன்றோ
அர்ச்சையிலும் விபவதார தாதாம்ய அனுசந்தான உறைப்பு இருக்கும் படி –
பிராட்டி யுடைய பஹு மான விசேஷங்களுக்குப் பாத்திரமான உனது திரு மிடரானது –
நெஞ்சால் நினைப்பரிதால்–சொலப் புகில் வாய் அமுதம் பரக்குமே –
அந்த சமயத்தில் இமிடறு படும் பாட்டை நேராக காணப் பெறாத இழவு சொல் நலத்தில் வெளிப்படுகிறதே
இந்த ஸ்லோகம் தொடங்கி -11-ஸ்லோகங்கள் ப்ரஹர்ஷிணீ வ்ருத்தம்
—————
சாயாமா த்ருத பரிணத்தய அப்தயோ வா தாத்ருஸ்யஸ் ஸ்புட மத திசச் சதஸ்ரஸ்
ஸத்வாரோ வரத வர பிரதாஸ் த்வதீயாஸ் பாஸந்தேந் புஜ பரிகாஸ் தமால நீலா–42-
ஹே வரத
தமால நீலாஸ் -பச்சிலை மரம் போலே கறுத்தவையாயும்
வர பிரதாஸ் -அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அளிக்க வல்லவையாயும்
ஸத்வாரோஸ் -நான்காயும் உள்ள
த்வதீயாஸ் புஜ பரிகாஸ் சாயாமா –ஊழல் தடி போன்ற உனது புஜங்களானவை தீட்சியோடே கூடி
த்ருத பரிணத்தய –சுற்றுப் பரப்பு உடைத்தான்
அப்தயோ வா -கடல் போலவோ
அத -அன்றி
தாத்ருஸ்யஸ் சதஸ்ரஸ் திசோ வா –அத்தனை நீட்சியும் சுற்றுப்பரப்பும் உடைத்தான் நான்கு திசைகள் போலவோ
பாஸந்தே–விளங்கா நின்றன
ஸ்புடம் -உத்ப்ரேஷா ஸூசக மவ்யயம்
பாஹுச் சாயாம் அவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மனா -ஒதுங்கினவர்கள் சுருங்கி நிழலே விஞ்சி விஸாதல மங்கலமாய் இருக்குமே
அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் அன்றோ பேர் அருளாளன்
கற்பகக் காவென நற் பல தோளன்
பறிக்கும் -ஊழல் தடி -ஆஸ்ரயித்தர் அஞ்ச வேண்டாம் படி ரக்ஷணத்துக்கு ஸூ த்ருட பரிகரம்
நீளம் -சுற்றுடைமை -நைல்யம் -ஸ்ரமஹரத்வம்-வதூஸ் சங்கத்தவம் – பற்ற கடல் போலே –
இத்தாலேயும் திருப்தி பெறாதே –
நான்கு திசைகள் -கடலுக்கு அகல நீளங்கள் ஓர் அளவிலே விச்சித்தி உண்டே –
திக்குகளில் விஸ்தாரம் அங்கன் அல்ல இறே
—————–
ஆஸ்லேஷ வரத புஜாஸ் தவ இத்திராயாஸ் கோபீ நம் அபி மத ராஸ பந்தநே வா
பந்தே வா முதம் அதிகம் யசோதயாஸ் ஆஹோ ஸம்ப்ராப்தாஸ் தவ நீத மோக்ஷ தோஷாத் –43-
ஹே வரத
தவ புஜாஸ் –உன்னுடைய புஜங்கள்
இத்திராயாஸ் ஆஸ்லேஷ வா –பிராட்டியின் ஆலிங்கத்தினாலேயோ
கோபீ நம் அபி மத ராஸ பந்தநே வா –ஆய்ச்சிகளுக்கு அபிமதமாகத் திருக் குரவை கோத்ததிலேயோ
ஆஹோ–அல்லது
தவ நீத மோக்ஷ தோஷாத் –வெண்ணெய் களவு கண்ட குற்றத்துக்காக
யசோதயாஸ் பந்தே வா -யசோதையினால் கட்டுண்டதாலேயோ
அதிகாம் முதம் ஸம்ப்ராப்தாஸ் -அதிகமான மகிழ்ச்சியை அடைந்தன
மீண்டும் திருப்புஜ அனுபவம் –
அபிமதலாபம் கிடைக்கப் பெற்ற ஹர்ஷத்தாலே ஓங்கி உலகளந்தது போலே –
வளர்த்திக்கு ஹேதுக்கள் இதுவோ அதுவோ என்று –ப்ரச்ன த்ரயங்கள் –
பத்மா பரிஷ்வங்கமோ -ராஸ பந்தநமோ -தாம பந்தநமோ -மூன்றனுள் அளவிறந்த ஹர்ஷம்
எந்த அவசரத்தில் சொல்லாய் என்கிறார் –
——————
சாலீயா இவ விடபாஸ் ச பல்லவாக்ராஸ் கல்லோலா இவ ஜலதேஸ் ஸவித்ருமாக்ராஸ்
போகீந்த்ரா இவ ச பணாமணீத்த வக்த்த்ரா பாஸந்தே வரத புஜாஸ் தவா ருணாக்ராஸ் –44-
ஹே வரத
ருணாக்ராஸ் தவ புஜாஸ் – சிவந்த நுனிகளை யுடைய -சிவந்த திரு விரல்களை யுடைய -உன்னுடைய புஜங்கள்
ச பல்லவாக்ராஸ் சாலீயா-தளிரொடு கூடின நுனிகளை யுடைத்தான சால வ்ருஷத்தினுடைய
இவ விடபாஸ் -கிளைகள் போலவும்
ஸவித்ருமாக்ராஸ் ஜலதேஸ் -பவளங்களோடு கூடின நுனிகளை யுடைய கடலினுடைய
கல்லோலா இவ -பெரிய அலைகள் போலவும்
பணாமணீத்த வக்த்த்ரா-படங்களினுடைய மணிகளால் பிரகாசிக்கின்ற முகங்களை யுடைய
போகீந்த்ரா இவ ச-சேஷன் வாஸூகி முதலிய அரவரசர்கள் போலவும்
பாஸந்தே –விளங்குகின்றன —
இந்த ஸ்லோகத்தால்
பணைகள் போலவும் -அலைகள் போலவும் -அரவங்கள் போலவும் -நீண்டு மநோ ஹரங்களாய் விளங்கும் திருக்கைகளையும்
செவ்விதழ் போலவும் பவளங்கள் போலும் செம்மணி போலும் விளங்குகின்ற திரு விரல்களும் அனுபவிக்கப் பட்டன
அருணாக்ர–திரு விரல்களுக்கு வாசகம் வ்யக்தமாக இல்லை எனிலும் அக்ர பதம் அங்குளியை லஷிக்கிறது
——————–
அம்போதேஸ் ஸ்வயம் அபி மந்தநம் சகர்த்த ஷோணீத்ரம் புநர் அபிபச் ச சப்த ராத்ரம்
சப்தா நாம் வீவலயசி ஸ்ம கண்டம் உஷ்ணம் அம்லாநா வரத ததாபி பாணயஸ் தே –45-
ஹே வரத
ஸ்வயம்-நீ தானே
அம்போதேஸ் அபி மந்தநம் சகர்த்த -கடல் கடைவதை செய்து அருளி நின்றாய்
புநர்-அன்றியும்
ஷோணீத்ரம் அபிபச் ச சப்த ராத்ரம் -கோவர்த்தன மலையை ஏழு நாள் அளவும் தாங்கி நின்றாய்
சப்தா நாம் உஷ்ணம் கண்டம் ச -ஏழு ரிஷபங்களினுடைய கழுத்தையும்
வீவலயசி ஸ்ம -நப்பின்னைப் பிராட்டிக்காக முறித்தாய்
ததாபி-இத்தனையும் செய்து வைத்து அருளையும்
தே பாணயஸ் அம்லாநா –உனது திருக்கைகள் வாட வில்லை –
இத்தனை ஆனைத் தொழில்கள் செய்தாலும் வாட வில்லையே என்று விஸ்மிதராகிறார் –
சமுத்திர மதனம் -கோவர்த்தன உத்தரணம்-சப்த ரிஷப பஞ்சனம் மூன்று திவ்ய சேஷித்தங்களையும்
அருளிச் செய்கிறார்
அந்த மிடுக்குத் தோன்ற ஸ்ரீ ஹஸ்தி கிரி மூர்த்தாவில் எழுந்து அருளி சேவை சாதிக்கின்றானே –
கொடி ஏறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிட்று இல
வடிவேறு திரு உகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் ஸம்பிரதம் -பெரியாழ்வார்
—————-
ரிங்காதோ வ்ரஜ சதந அங்கணேஷு கிம் தே
கோ யஷ்டி கிரஹண வசாந்நு கோப கோஷ்ட்யாம்
ஆலம்பாத் ஹய நய ஸூத்ர தோத்ரயோர் வா
பாணீநாம் வரத தவ அருணத்வம் ஆஸீத் -46-
ஹே வரத
வ்ரஜ சதந அங்கணேஷு–திருவாய்ப்பாடியில் உள்ள மனைகளின் முற்றங்களில்
ரிங்காதோ கிம் -தவழ்ந்து விளையாடிதானாலேயோ
கோப கோஷ்ட்யாம் –ஆயர்கள் திரளிலே
கோ யஷ்டி கிரஹண வசாந்நு -பசுக்களை மேய்க்கும் கோல்களைப் பிடித்ததாலேயோ
ஹய நய ஸூத்ர தோத்ரயோர் ஆலம்பாத் வா –பார்த்த சாரதியாய் இருந்த போது தேர்க் குதிரைகளை
சிஷித்து நடத்தும் கருவிகளாய் இருந்த கடிவாளத்தையும் சாட்டையும் பிடித்ததானாலேயோ
தவ பாணீநாம் –உனது திருக்கைகளுக்கு
அருணத்வம் ஆஸீத் -சிகப்பு உண்டாயிற்று –
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்க தவழ்ந்து போய் பொன் முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி அளைகின்றான்
தண்ணம் தாமரைக் கண்ணனே கண்ணா தவழ்ந்து எழுந்து தளர்ந்ததோர் நடையால் மண்ணில் செம்பொடி யாடி வந்து –
வேலிக் கோல் வெட்டியிலே யசோதை யானவள் காக்கையை நோக்கி
காலிப்பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா
கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா
கோலால் நிரை மேய்த்து ஆயனாய்
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
லீலா யஷ்டிம் கரகி சலயே தஷிணேந் யஸ்ய தன்யாம் –ஸ்ரீ தேசிகரும் இத்தை ஒட்டியே அனுபவம்
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
தோத்ரம் -குதிரைச் செலுத்தும் சாட்டை
ரிங்கா -பாலானாம் ஹஸ்த பாத கைமணம் -இரண்டு கைத் தலங்களையும் தரையிலே ஊன்றி
முழந்தாள்களாலே தவழ்ந்து செல்லுகை –
———————–
சர்வஞ்ஞாஸ் சமுசித சக்தயஸ் சதைவ த்வத் சேவா நியம ஜூஷஸ் த்வத் ஏக போகாஸ்
ஹேதீநாம் அதிபதயஸ் சதா கிம் ஏதாந் சோபார்த்தம் வரத பிபர்ஷி ஹர்ஷதோ வா -47-
ஹே வரத
ஹேதீநாம் அதிபதயஸ்–திவ்ய ஆயுத தலைவர்களான சங்க சக்ராதிகள்
சர்வஞ்ஞாஸ் -சர்வஞ்ஞர்களாயும்
சமுசித சக்தயஸ் -அந்த ஞானத்துக்கு ஏற்ற சக்தி உள்ளவர்களாயும்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஓக்க அருள் செய்பவன் அன்றோ –
த்வத் ஏக போகாஸ்-அநந்ய போகர்களாயும்–அத ஏவ —
சதைவ –எப்போதும்
த்வத் சேவா நியம ஜூஷஸ் –உன்னையே சேவித்துக் கொண்டு இருப்பதில் நையத்யம் உடையவர்களாயும்
சந்தி -இருக்கிறார்கள்
ஏதாந்-இப்படிப்பட்டவர்களை
சோபார்த்தம் வா -அழகுக்காகவோ
ஹர்ஷதோ வா -சந்தோஷத்தினாலோ
சதா பிபர்ஷி–எப்போதும் வஹித்துக் கொண்டு இருக்கிறாய்
ரதாங்க சங்க அஸி கதா தநுர் வரை –ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்கள் திவ்ய ஆயுத கோடியிலும்
திவ்ய ஆபரண கோடியிலும் பரிகணநம் உண்டு அன்றோ
ஆயுதத்வ ஆகாரேண சதா தாரணம் அநாவஸ்யம் ஆகையால் ஆபரணத்வேன தாரணமே அடுக்கும் என்று
திரு உள்ளம் பற்றி ப்ரஸ்ன வ்யாஜ்யேன அருளிச் செய்கிறார்
மாணிக்ய மந்திரத்துக்கு மங்களார்த்தமாக மணி விளக்கு ஏற்றுமா போலே சோபார்த்தமாகவே ஏந்தி உள்ளாய் –
ஆபரணங்களை அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ –
வகுத்த ஸ்தானத்தில் இல்லாத பொழுது அழகு இழக்குமே
அத்தானிச் சேவகரை ஹர்ஷ மிகுதியால் அணைத்துக் கொண்டு இருக்குமா போலே இவர்களுடைய
ஸர்வஞ்ஞத்வ- சர்வசக்தித்வாதி அனுசந்தான ஜெனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
விடமாட்டாதே தரித்துக் கொண்டுள்ளாயா
—————————–
கிம் தாதுர் ககந விதாந் மாத்ருகா அபூத் வஷிஸ் தே வரத வரேண்ய யத்ர நாம
பத்மாயா முகம் அத கௌஸ்துபச் ச ஜாதவ் சந்த்ர அரக்கவ் உடு நிகாரயதே து ஹார –48-
ஹே வரத வரேண்ய-வரம் அழிக்கும் தேவர்களில் சிறந்த வரதராஜனே
யத்ர வஷிஸி–யாதொரு திரு மார்பில்
பத்மாயா முகம்-பிராட்டியின் திரு முகமும்
அத கௌஸ்துபச் ச -கௌஸ்துப மணியும்
சந்த்ர அரக்கவ் ஜாதவ் -சந்த்ர ஸூர்யர்களாய் ஆயினவோ
ஹாரஸ் து –முக்தா ஹாரமோ என்றால்
உடு நிகாரயதே–நக்ஷத்ர சமூகம் போன்றதோ
ததிதம் -அப்படிப்பட்ட இந்த
தே வக்ஷஸ் -உன்னுடைய திரு மரபானது
தாதுர் -ப்ரஹ்மாவுக்கு
ககந விதாந் மாத்ருகா அபூத் நாம -ஆகாசம் என்ற பூதத்தை ஸ்ருஷ்டிப்பதற்கு மூல நிதர்சனமாக ஆயிற்றோ –
உனது திருமார்பையே மாத்ருகையாக நான்முகனுக்கு காட்டி அருளினாயோ
பிரதி சம்பந்தி புத்ரிகை –
ககனம் ஆகிற புத்ரிகைக்கு திரு மார்பு மாத்ரிகை –சத்ருசம் -சாதரம்யம்
இத்தால் திரு மார்பின் வைஸால்யமும் நைர்மல்யமும் அருளிச் செய்யப்பட தாயிற்று –
——————-
அண்டா நாம் த்வத் உதரம் ஆம நந்தி சந்தஸ்
ஸ்தானம் தத் வரத கதம் நு கார்ஸ்யம் அஸ்ய
மஹாத்ம்யம் ஸ்வத இஹ யேஷு நூநம் ஏஷாம்
ருத்திஸ் ஸ்யாந் மஹி மகரீ ந ஹீதரேஷாம் –49-
ஹே வரத
த்வத் உதரம்-உனது திரு வயிற்றை
அண்டா நாம் -அண்டங்கள் அனைத்துக்கும்
ஸ்தானம் -இருப்பிடமாக
சந்தஸ்-பராசராதி ப்ரஹ்ம வித்துக்கள்
ஆம நந்தி -இயம்புகின்றனர்
அண்டரண்ட பகிரண்டத் தொரு மா நிலம் எழு மால் வரை முற்றும் உண்டவன் அன்றோ
தத் அஸ்ய கார்ஸ்யம் -அப்படி இருக்க இந்தத் திரு வயிற்றுக்கு மெலிவானது
கதம் நு -எங்கனேயோ -என்று–உண்டது உருக் காட்டாதே சிறுத்துக் கிடப்பான் என் -என்று
சங்கித்துத் தாமே ஸமாஹிதர் ஆகிறார் –
இஹ யேஷு–இந்த யுலகில் எந்த வஸ்துக்களில்
மஹாத்ம்யம் –பெருமையானது
ஸ்வத –ஸ்வதஸ் சித்தமோ
ஏஷாம்-இந்த வஸ்துக்களுக்குத் தான்
ருத்திஸ்–உண்டாகிற அந்த ஸம்ருத்தியானது –பெருமையை விளைக்க வற்று
இதரேஷாம் -இயற்கையான பெருமை இல்லாத -மற்ற வஸ்துக்களுக்கு உண்டாகிற
ருத்திஸ் -ஸம்ருத்தி யானது
மஹி மகரீ ந ஹீ–பெருமையை விளைக்க வல்லது அன்று
நூநம் –இது திண்ணம்
மஹாத்ம்யம் –ஆகார ப்ரயுக்த மஹாத்ம்யமும் குண ப்ரயுக்தமான மஹாத்ம்யமும் உண்டே –
சிறு மா மனுசர் என்று உண்டே
குலம் ரூபம் வாயோ வித்யா -போன்ற சிறந்த குணங்களால் வந்த மஹாத்ம்யம் போலே
இங்கு குண ப்ரயுக்தம் இல்லை
ஸ்வரூப மஹாத்ம்யம் என்றவாறு –
——————
ஸுந்தர்ய அம்ருத ரஸவாஹ வேகஜஸ் ஸ்யாத்
ஆவர்த்த ஸ்தவ கில பத்ம நாப நாபிஸ்
தத் பத்மம் வரத விபாதி காந்தி மய்யாஸ்
லஷ்ம்யாஸ் தே சகல வபுர் ஜூஷஸ் நு சத்ம–50-
பத்ம நாப ஹே வரத
தவ நாபி
ஸுந்தர்ய அம்ருத ரஸவாஹ வேக ஜஸ் –திருமேனி அழகு ஆகிற அம்ருத ரஸ ப்ரவாஹத்தின் வேகத்தால் உண்டான
ஆவர்த்த ஸ்யாத்–சுழியாம்
தத் பத்மம்-அந்த நாபியில் உள்ள தாமரை மலரானது
தே சகல வபுர் ஜூஷஸ்–உன்னுடைய திரு மேனி எங்கும் வியாபித்து இருக்கிற
ஸ்தவ கில நாபிஸ்
காந்தி மய்யாஸ் லஷ்ம்யாஸ் –காந்தி யாகிற லஷ்மிக்கு
சத்ம-நு -விபாதி–இருப்பிடம் போலே விளங்குகின்றது –
கொப்பூழில் எழு கமலப் பூ அழகில் ஈடுபட்டு திரு நாபியையும் திரு நாபி கமலத்தையும் வர்ணிக்கிற படி –
ஸுந்தர்ய ப்ரவாஹத்தின் வேகத்தால் உண்டான சுழியே திரு நாபி
தன் நாபி வலயத்துப் பேர் ஓளி சேர் மன்னிய தாமரை மா மலர் பூத்து –பெரிய திரு மடல்
திரு நாபி லாவண்ய சம்பத்தை ஸ்ரீ லஷ்மீ முகேன ரூபணம் பண்ணி –
திரு நாபீ கமலம் திரு மேனி முழுமைக்கும் சோபாவஹமாய் இருக்கும் படியை அனுபவிக்கிறார்
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply