அருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம் -முதல் பாகம் -பரத்வம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

திருமந்திரம்

மான ஆதீன மேய சித்தி -ப்ரமேயம் சித்திப்பது பிரமாணத்தாலே-
ஆதவ் வேதா பிரமாணம் -என்கிறபடியே மூல பிரமாணம் -நிரபேஷ பிரமாணம் -அபவ் ருஷேய பிரமாணம் –வேதம் –வேதாந்தம் -வேதாந்த சாரம் –
வேதத்தில் கூறப்படும் தர்மம் கர்மம் –வேதார்த்த விசாரம் -ஸ்ரீ ஜைமினி பகவான் – கர்ம விசாரம் -பூர்வ மீமாம்சை –
வேதாந்தத்தில் –தர்மம் -பக்தி ரூபாபன்ன ஞானம் –வேத வியாச பகவான் வேதாந்தார்த்த விசாரம் -உத்தர மீமாம்சை –
வேதாந்த சாரம் -ரகஸ்ய த்ரயம் -இதில் விசாரம் செய்யும் தர்மம் சாஷாத் தர்மமான பகவான் -ராமோ விக்ரஹவான் தர்ம -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
வேதார்த்த தர்மம் -கர்மமும்–வேதாந்தார்த்த தர்மம் – பக்தியும் -தர்மம் ஆவதும் பகவத் சம்பந்தத்தாலே இ றே -அவ்யவஹித தர்மம் பகவானே –
ரகஸ்ய த்ரய விசாரம் -ரகஸ்ய த்ரய மீமாம்சை எனப்படும் –
கர்ம மீமாம்சை -16 அத்தியாயங்கள் -முதல் 12 -கர்ம விசாரம் / மேல் நான்கும் தேவதா விசாரம் -இத்தை தேவதா காண்டம் என்பர் –
இது காஸக்ருத்ஸ்ன பிரகாசித்தம் ஆகையால் -காஸக்ருத்ஸ்நீயம் -என்றும் சொல்வார் -இந்த தேவதா காண்டமும்
கர்ம காண்ட சேஷம் ஆகையால் கர்ம காண்டம் என்றே சொல்வர் –
இதனாலே அத கர்ம விசார அநந்தரம் -என்று ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்கிறார் –
மேலே பக்தி ரூபா பன்ன ஞானம் ஆகிற வேதாந்த விஹித தர்மத்தை விசாரித்தாலும்-ப்ரஹ்ம ஜிஜ்ஜாஞாசா -என்றே
ப்ரதிஞ்ஞஜை -பண்ணினார் -பகவானே சாஷாத் தர்மம் என்ற திரு உள்ளத்தின் உறைப்பால்–
பக்தியான உபாயம் மூன்றாம் அத்யாயம் -உபேயமான முத்தியை நான்காம் அத்தியாயத்திலும் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் –
அதாதோ தர்ம ஜிஜ்ஞாசா -என்ற கர்ம மீமாம்ச அந்திம ஸூத்ரமே-க்ருத்ஸ்ந மீமாம்ச சாஸ்திர ப்ரதீஜ்ஞ்ஞா ஸூ த்ரம்-என்பர் நம் பூர்வர்கள் –

உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் நது குணவ்-ஸ்ரீ பராசர பட்டர் -பகவான் ஒருவனே ப்ராப்யமும் ப்ராபகனும் –
அந்த உபாய உபேய பாவத்தை ஸூ வியக்தமாக ஸூ ஸ்பஷ்டமாக கூறும் அது இ றே நாராயண பதம் –
தத் கடிதமான திரு மந்த்ரமும் -தத் விவரணமான த்வய சரம ஸ்லோகங்கள் -இ றே ரகஸ்ய த்ரயம்
-இதுவே வேதாந்த சாரம் -இது தன்னில் பரமாத்மா சேஷீ -சரண்யன் – ப்ராப்யன்-என அறுதி இடப்பட்டுள்ளான்-
இந்த ரகஸ்ய த்ரயத்தை உபதேசிக்கும் அவனே ஆச்சார்ய பதத்துக்கு சாஷாத் வாக்யார்த்தம் ஆகிறான் நேரே ஆச்சார்யன் என்பது
சம்சார நிவர்த்தகமான பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவனை –ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி -315 –
இத்தைச் சொல்லவே அவற்றினுடைய உபதேசமும் தன்னடையே சொல்லிற்றாம் -ஆகையால் இது ரகஸ்ய த்ரய உபதேசத்துக்கும்
உப லக்ஷணம் -என்ற பெரிய ஜீயர் வியாக்யானமும் அத்ர அனுசந்தேயம் –
யுவ யஞ்சயந்தம் மனும் தம் தத் ப்ராப்யம் ச த்வயம் அபி விதன் சம்மத சர்வ வேதீ-அர்த்த பஞ்சக அதிகார ஆரம்பம் – ஸ்ரீ தேசிகன்
வேதாந்த சாரமான இந்த ரகஸ்ய த்ரயத்திலும் வைத்துக் கொண்டு பெரிய திருமந்த்ரம் முதல் ரகஸ்யம் –
முதல் கண் அறிய வேண்டிய ஸ்வ ஸ்வரூபத்தை உள்ளபடி தெரிவிக்கிறது ஆகையால் பிரதம ரகஸ்யம் –
தஸ்மை வியாபக முக்யாய மந்த்ராய மஹதே நம -என்று அர்லிச் செய்தார் ஸ்ரீ தேசிகன் –
அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதுக்குள்ளே உண்டு -மற்று எல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்து -8-10-3- கலியன் –
முமுஷு ஞாதவ்ய சகலார்த்த ப்ரதிபாதகம் இ றே திரு வெட்டெழுத்து -இதனுடைய விவரணம் மேலில் ரகஸ்ய த்வயம் -இம் மூன்றும் வேதாந்த சாரம் –

திரு மந்த்ரத்தை பதரியில் நரேனுக்கு நாராயணன் உபதேசித்தான் –
த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் பகவான் பெரிய பிராட்டிக்கு உபதேசித்தான் –
சரம ஸ்லோகத்தை கீதாச்சார்யன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்
இம் மூன்றையும் சேர உபதேசித்தான் ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு திருவரங்கத்து எம்பெருமான் –
ஆகையால் குரு பரம்பரையில் பிரதம ஆச்சர்யம் திருவரங்கன் -லஷ்மீ நாத சமாரம்பாம் -இந்த திருவரங்கனையே குறிக்கும் –
ஆழ்வார்கள் ஆருளிச் செயல்கள் நாலாயிரமும் இவனுக்கு –
வடிவுடை வானோர் தலைவனே என்னும் -பரத்வமும் –கடலிடம் கொண்ட கடல் வண்ணா -என்னும் வியூஹமும்
கடக்கிலேயே என்னும் அந்தர்யாமித்வமும் -கண்ணனே காகுத்தா -என்னும் வைபவமும் -வண் திருவரங்கனே-எல்லாம் திருவரங்கனுக்கே –
ரகஸ்ய த்ரய உபதேஷ்டா திருவரங்கன் –
ரகஸ்ய த்ரய விவரணம் அருளிச் செயல் நாலாயிரமும்
அருளிச் செயலுக்கு விஷயமே திருவரங்கனே
பரத்வாதி பஞ்சகமும் திருவரங்கனுக்கே உள்ளது –

——————————————————————————————-

ஸ்ரீ நடாதூர் அம்மாள் என்று ஸூ ப்ரசித்தரான ஸ்ரீ வாத்சல்ய வரதாச்சார்யார் ஸ்வாமி அருளிச் செய்த பரத்வாதி பஞ்சகம் –
வந்தே அஹம் வரதார்யம் தம் வத்ஸ அபிஜன பூஷணம்
பாஷ்யாம் அம்ருத பிரதா நாத் யஸ் சம்ஜீவ யதிமாம் அபி —

உத்யத் பானு சகஸ்ர பாஸ்வர பர வியோமாஸ் பதம் நிர்மல
ஞான ஆனந்த கந ஸ்வரூப மம லாஜ்ஞ்ஞா நாதிபிஷ் ஷட் குணை
ஜுஷ்டம் ஸூரிஜனாதிபம் த்ருத ரதாங்காப்ஜம் ஸூ பூஷ உஜ்ஜ்வலம்
ஸ்ரீ பூ ஸேவ்யம் அநந்த போகி நிலயம் ஸ்ரீ வா ஸூ தேவம் பஜே –1–

ஆமோதே புவநே ப்ரமோத உத சம்மோதே ச சங்கர்ஷணம்
ப்ரத்யும்னம் ச ததா அநிருத்தம் அபி தான் ஸ்ருஷ்டி ஸ்திதிதீ சாப்யயம்
குர்வாணான் மதிமுக்ய ஷட் குண வரை யுக்தான் த்ரி யுக்மாத்மகை
வ்யூஹ அதிஷ்டித வாஸூதேவம் அபி தம் ஷீராப்தி நாதம் பஜே –2-

வேதான் வேஷண மந்த ராத்ரி பரண ஷ்மோத்தாரண ஸ்வ ஆஸ்ரித
ப்ரஹ்லாதாவன பூமி பிஷண ஜகத் விக்ராந்தயோ யத்க்ரியா
துஷ்ட க்ஷத்ர நிபர்ஹணம் தசை முகாத்யுந் மூலநம் கர்ஷணம்
காலிந்த்யா அதி பாப கம்ச நிதனம் யத்க்ரீடிதம் தம் நும் –3-

யோ தேவாதி சதுர் விதேஷ்ட ஜநிஷூ ப்ரஹ்மாண்ட கோசாந்தரே
சம் பக்தேஷூ சராசரேஷூ நிவஸன் நாஸ்தே சதா அந்தர்பஹி
விஷ்ணும் தம் நிகிலேஷ் வணுஷ் வணு தரம் பூயஸ் ஸூ பூயஸ் தரம்
ஸ்வ அங்குஷ்ட ப்ரமிதம் ச யோகி ஹ்ருதயேஷ் வாஸீ நமீசம் பஜே –4-

ஸ்ரீ ரங்க ஸ்த் தல வேங்கடாத்ரி கரி கிரி யாதவ் சதே அஷ்டோத்தர
ஸ்த்தானே க்ராம நிகேத நேஷூ ச சதா சா நித்ய மாஸே துஷே
அர்ச்சா ரூபிணம் அர்ச்சகாபி மதித ஸ்வீகுர்வதே விக்ரஹம்
பூஜாம் சாகில வாஞ்சி தான் விதரதே ஸ்ரீ சாய தஸ்மை நம –5-

ப்ராதர் விஷ்ணோ பரத்வாதி பஞ்சக ஸ்துதி முத்தமாம்
படன் ப்ராப்னோதி பகவத் பக்திம் வரத நிர்மிதாம் –

————————————————————————————–

பரத்வாதி பஞ்சகம் –திரு அஷ்டாக்ஷரம் –

நர நாராயணனாய் அற நூல் விரித்தது –

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாதுரைக்கும் உரை யுண்டே –மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகையுண்டு –இன்னொருவர்
தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார் -95 –

———————————-

திரு அஷ்டாக்ஷர அனுசந்தானம் –

எட்டும் எட்டும் எட்டுமாய ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனை
எட்டினாயா பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே –திருச் சந்த –77 –

மூன்று எழுத்ததனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய எம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உருவானான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே –பெரியாழ்வார் -4-7-10-

பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக்கு எல்லாம்
தேசமாய் த் திகழும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே –பெரிய திருமொழி -1-8-9 –

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை அம்மானே –பெரிய திருமொழி -8-10-3-

திரு மந்த்ரம் போதிக்கும் 7 தத்தவங்கள் –
1-தேகமே ஆத்மா என்னும் பிரமம் நீங்குதல்
2-தான் ஸ்வ தந்த்ரன் என்னும் கொள்கை நீங்குதல்
3-தேவதாந்தரங்களுக்கு அடிமை யாகாமை –
4- பேற்றின் பொருட்டு தன் முயற்சி தவிர்த்தல்
5-உறவு அல்லாதாரை உறவினராகக் கொல்லாமை
6 -ஐம் புலன் ஆசை ஒழித்தல்
7-பாகவத சேஷத்வம் -பிரபன்னன் அனுஷ்ட்டிக்க வேண்டுவது
இவை பிரணவத்தில்-மகாரத்தாலும் -சதுர்த்யந்தமான அகாரத்தாலும் -உகாரத்தாலும் -நம பதத்தாலும் –
நாராயணாய என்ற சரம பதத்தில் ப்ரக்ருத்யம்சமான நாராயண பதத்தாலும்
ஆய என்கிற வியக்த சதுர்த்தியாலும் -சாப்தமாகத் தேறும்
பாகவத சேஷத்வம் நம பதத்தில் ஆர்த்தமாகத் தேறும் –
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன்-என்றார் இ றே பெரியாழ்வார் –

ப்ரக்ருதி யாத்ம பிராந்தி கலதி சிதசில் லக்ஷணதியா
ததா ஜீவே சைக்ய ப்ரப்ருதி கலஹ தத் விபஜநாத்
அதா போக்தா போக்யம் ததுபய நியந்தேதி நிகமை
விபக்தம் ந தத்வத்ரயம் உபதிசந்தி அஷததிய–தத்வ த்ரய சிந்தனாதிகாரம் -ரகஸ்ய த்ரய சாரம் –
தத்வத்ரயவாதம் சாஸ்திர சம்பிரதாய சித்தம்
திரு அஷ்டாக்ஷர ப்ரமேயமே தத்வத்ரயம் –

ஆத்ம தத்துவமான ஜீவனுக்கு விரோதியான ப்ரக்ருதியான அசித் அம்சத்தைக் கழித்துத் தருமது இ றே பகவத் பிரசாதம் –
இஷ்டமான மோக்ஷ ஸூ கத்தை அளிப்பதும் இதுவே இவன் பண்ணும் பிரபத்தி வியாஜ மாத்ரமாகும் –
அத்ருஷ்ட த்வாரகம் இ றே மோக்ஷம் இராமானுச மதத்தில் அங்கீ கரிக்கப் பட்டது –
மயர்வற மதி நலம் அருளினன் –அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -என்று இ றே ப்ரபந்ந ஏக அர்த்த்யம்
இவை இத்தனையும் இ றே மூல மந்த்ரார்த்தம் இ றே

————————————————

நாராயண பரத்வம் /பரத்வம் /எல்லாம் நீயே/ சர்வ ரக்ஷகன் எம்பெருமானே -/சகலமும் உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே ஒடுங்கியது -/ஜைன புத்த மத கண்டனம்/
உலகம் – படைத்து -அளித்து -காத்து – உண்டு -உமிழ்ந்தது -/ ப்ரஹ்ம ஸ்ருஷ்ட்டி /பிரமனுக்கு நல் வேத உபதேசம் /பிரமன் கர்வம் அடக்கியது /
பிரமன் திருவடி விளக்க -கங்கை -கங்கை சுத்தி பெற அருள் /பாணாசுர யுத்தத்தில் சிவன் தோற்றல்/சிவாதி தேவதாந்தரங்கள் பகவானை வழிபடுதல் /
சிவன் பிரமன் அறிய மாட்டாதவர்கள் /சிவன் சாபம் நீக்கி அருள் புரிந்தது -/ப்ரஹ்ம சிவாதிகளுக்கு திருமேனியில் ஒதுங்க இடம் கொடுத்தது -/
விஷ்ணுக்கும் சிவனுக்கும் உள்ள தாரதம்யம் /திரிபுரஹதம் /மார்க்கண்டேயன் கண்ட பகவத் பரத்வம் /சந்த்ர சாப விமோசனம் -/சுமுகனுக்கு அபயம் /
சேஷ சயனம் /கருடத்வஜன் /கருட வாஹனன் கஜேந்திர வரதன்/

—————————————

நாராயண பரத்வம் –

நான்முகனை நாராயணன் படைத்தான்-நான் முகனும் தான் முகமாய்ச் சங்கரனை தான் படைத்தான் –நான் திரு -1-
நான் முகன் திருவந்தாதியும் -திருச் சந்த விருத்தமும் பரத்வத்தை பன்னி யுரைக்குமே
ஆறு சடைக் கரந்தான்–வேறு ஒருவர் இல்லாமை நின்றானை எம்மானை –நான் திரு -4-
தமராவார் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும் -அமரர்க்கு ஆடரவார்த்தார்க்கும் அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன் -தாள் தாமரை யடைவோம் என்று –நான் திரு -91 –
புறம் தொழா மாந்தரை -தேவதாந்தரம் பண்ணாதவர்கள் -கண்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் -என்று எம கிங்கர்களுக்கு யமன் கட்டளை –
திறம் பேன் மின் கண்டீர் திருவடி தன் நாமம் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு –68 –

———————————————–

பரத்வ ஸ்தாபனம் –
போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும் -போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறன் ஏற தூர்தி என்று வேத நூல் ஒத்துகின்றதுண்மை நல்லதில்லை மாற்றுரைக்கிலே –திரு சந்த -72-

———————————————

எல்லாம் நீயே –
நீயே உலகு எல்லாம் –நான் திரு -20 –
வானுலவு –திருமாலகைப்பு–நான் திரு -37 –
பாட்டும் முறையும் –நான் திரு -76 –
இனி அறிந்தேன் நான் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற் கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் -நான் திரு -96-

——————————————————

சர்வ ரக்ஷகன் எம்பெருமானே –
இமய பெருமாளை போல் இந்திரனார்க்கிட்ட சமய விருந்துண்டு ஆர் காப்பார் –சமயங்கள்
கண்டானவை காப்பான் கார்க்கண்டன் நான் முகனோடு உண்டான் உலகோடுஉயிர் –நான் திரு -87 –

——————————————-

சகலமும் உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே ஒடுங்கியது –
தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல் -தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிரப்பவும் திரிபவும் நின்னுளே யடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –திரு சந்த –10-
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே —திரு சந்த –11-
ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ -ஆனில் மேயவைத்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே –திரு சந்த –94-
ஆழாதா பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ நீரும் நீயாய் நின்ற நீ -பெரிய திரு -11 –

———————————————-

சமணர் புத்தர் கண்டனம் –
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியோர் சிவப்பட்டார் செப்பில் வெறியாய்
மாயவனை மாணவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று -நான் -திரு -6-
திருமால் தன் பேரான பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு ஆசைப் பட்டு ஆழ்வார் பலர் -நான் -திரு -14-
இடமாவது என் நெஞ்சம் இன்று எல்லாம் பண்டு பட நாகணை நெடியமாற்கு திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான் வையேன் ஆடிசெய்யேன் வலம் –நான் திரு-66-
புலையற மாகி நின்ற புத்தோடு சமணம் எல்லாம் கலை யாறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம் –திருமாலை -7-
எம்பெருமானார் கூரத் தாழ்வான் ஐதிக்யம் காண்க
வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகி -திருமாலை -8-

————————————————-

சமணர் சாக்கியர்
பிணக்கற வறு வகைச் சமயமும் -திருவாய் -1-3-5-
இலங்கித்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் -வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான் –திருவாய் –4-10-5-
உருவாகிய ஆறு சம்யங்கட்க்கு எல்லாம் பொருவாகி நின்றானவன் –திரு வாய் -9 -4-8-
பொங்கு பொதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை தங்கள் தேவரும் தங்களுமேயாக என் நெஞ்சம் என்பாய் –பெரிய திரு -2-1-5-
துவரியாடையார் மட்டையர் சமன் தொண்டர்கள் மண்டியுண்டு பின்னரும் தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய் –பெரிய திரு -2-1-6 –
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை நெருக்கு வாரலக்கணது கண்டு என் நெஞ்சம் என்பாய் –பெரிய திரு -2-1-7-
பிச்சச் சிறுபீலி பிடித்து உலகில் பிணந்தின்னி மடவாரவர் போல் அங்கனே அச்சமிலர் நாண் இரா தண்மையால் அவர் செய்கையை வெறுத்து -பெரிய திரு -4-4-8-
பிச்சச் சிறு பீலிச் சமண் குண்டர் முதலாயோர் விச்சைக்கிறை என்னும் அவ்விறையைப் பணியாதே –பெரிய திரு -2-6 -5-
துவரித்த உடையவர்க்கு தூய்மையில்லாத் சமணர்க்கும் அவர்கட்க்கு அங்கு அருளில்லா அருளாணை –பெரிய திரு -5-6 -8-
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன் -பெரிய திரு -7-4-5-
தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி மருவி பிரிந்தவர் வாய் மொழி மதியாது வந்தடைவீர் -பெரிய திரு மொழி -7-9 -2-

———————————————-

பரத்வம் –
மற்றோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்–கற்றினம் மேய்த்த வெந்தை கழிலிணை பணிமின் நீரே –திருமாலை -9 –
ஓன்று எனப்பலவென அறிவரும் வடிவினுள் நின்ற நன்று எழில் நாரணன் நான் முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை யறுத்து நன்று என நலம் செய்வது அவனுடை நம்முடை நாளே –திருவாய் -1 -3 -7 –
நம் கண்ணன் கண் அல்லது இளையோர் கண்ணே –திருவாய் -1 -2 -1 –
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார் -மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி ஏறன்றியே –திருவாய் -1-2-2-
அணைவது அரவணை மேல் பூம்பாவையாகம் புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்க்கும் வீடு முதலாம் புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –திருவாய் -2-8-1-
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம் புணர்த்த தன்னுந்தியோடு ஆகத்து மன்னி
புணர்த்த திருவாகித் தன் மார்வில் தான் சேர் புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –திருவாய் -2-8-3-
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –திருவாய் -2-8-6-
ஒளி மணி வண்ணன் என்கோ ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர் மதிச் சடையன் என்கோ நான் முக்கட் கடவுள் என்கோ
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்தவை ஏத்த நின்ற களி மலர்த் துளவன் என்னம்மான் கண்ணனையே மாயனையே –திருவாய் -3-4-8-
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை சாவமுள்ள நீக்குவானை –திருவாய் -3-6-2-
திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமகன் கருவில் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களை –திருவாய் -5-10-8-
நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே -திருவாய் –6-10-8-
அங்குயர் முக்கண் பிரான் பிரம பெருமானவன் நீ வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ –திருவாய் -7-6-4-
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய் தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவையென்ன நியாயங்களே –திருவாய் -7-8-1-
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய் வியப்பாய் வென்றிகளாய்
வினையாய்ப் பயனாய் பின்னும் நீ துயக்காய் நீ நின்றவாறு -திருவாய் -7-8-6-
அவனே அவனும் அவனும் அவனும் அவனே மாற்று எல்லாமும் அறிந்தனமே -திருவாய் -9-3-2-

மூவராகிய ஒருவனை -கலியன் -3-1-10-
யாவருமாய் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய் மூவருமாய் முதலாய மூர்த்தி -கலியன் -4-1-2-
வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பிரான் -கலியன் -4-1-3-
இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த சந்த மலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என நின்று அருளுமிடம் –கலியன் -4-1-4-
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களொடு நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை -கலியன்4-5-7-
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி யோம்பும் பொங்கிய முகிலும்
அல்லாப் பொருள்களும் ஆய எந்தை -திருமணிக் கூடத்தானே—கலியன் -4-5-8-
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம் தானும் கோவமும் அருளும்
அல்லாக் குணங்களும் ஆய வெந்தை –திருமணிக் கூடத்தானே–கலியன் -4-5-9-
சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி அந்தமாய் ஆதியாகி அருமறை யாவையும் ஆனாய் -கலியன் -4-6-9-
நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் -கலியன் -4-8-7-
பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா மகள் மலர் மா மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திரு நாமம் நங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நாராயணமே –கலியன் -6-10-9-
கிரேத திரேதா துவாபர கலி யுகம் இவை நான்கும் முனானாய்-கலியன் -7-7-6-
மற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பரோடு உற்றிலேன் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை -கலியன் -8-10-3-
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிக்கள் வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலோ -கலியன் –11-5-1
நந்தன் குலமதலையாய் வளர்ந்தான் நான்முகற்குத் தந்தை காண் –கலியன் –11-5-2-
இவ்வேழ் உலகும் உண்டும் இடமுடைத்தால் சாழலே– கலியன் –11-5-3-
பொன் வயிற்றுக்கு எறி நீருலகனைத்தும் எய்தாதால் சாழலே–கலியன் –11-5-4-
கட்டுண்டானாகிலும் எண்ணற்கரியன் இமையோர்க்கும் சாழலே –கலியன் –11-5-5-
கூத்தாடினான் ஆகிலும் என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே -கலியன் -11-5-6-
சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான் சாழலே -கலியன் –11-5-7-
தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே -கலியன் –11-5-8-
மண்ணிரந்தான் ஆகிலும் விண் ஏழு உலகுக்கும் மிக்கான் காண் சாழலே -கலியன் -11-5-9-
வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் கலி கன்றி உள்ளத்தினுள்ளே உளன் கண்டாய் சாழலே –கலியன் -11-5-10-

————————————————

உலகம் – படைத்து -அளித்து -காத்து – உண்டு -உமிழ்ந்தது –

இது நீ படைத்து -இடந்து உண்டு உமிழ்ந்த பார்–பொய்கையார் -2 –
மண்ணும் மலையும் மறி கடலும் மருதமும் விண்ணும் விழுங்கியது மெய் என்பர் -பொய்கையார் -10-
என்னொருவர் மெய் என்பர் ஏழு உலகு உண்டு -பொய்கையார் -34-
முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு -பொய்கையார் -92-
செற்று எழுந்து தீ விழித்து மாற்றிவைய வென்று வாய் அங்காந்து முற்றும் மறையவர்க்கு காட்டிய
மாயவனை அல்லால் -மார்கண்டேயர்க்கு -பொய்கையார் -94-
உண்டதும் தான் கடந்த ஏழு உலகு -பூதத்தார் -18
அறியாமை மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று -பூதத்தார் -36
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த -பூதத்தார் -47-
உலகு எழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பூதத்தார் -94-
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க -பூதத்தார் -98-
உலகம் உண்டும் உமிழ்ந்து –பேயார் 4
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டுறையும் தண் துழாய் கண்ணன் -பேயார் 8
முன்னுலகம் உண்டு உமித்தாய்க்கு -பேயார் 20
தூ நீர் உலகம் முழுதுண்டு -பேயார் 25 –
உலகு எல்லாம் மேல் ஒரு நாள் உண்டவனே -பேயார் -33 –
பேர் அக்காலத்து உள் ஒடுக்கும் பேரார மார்வனார் -பேயார் -43 –
மண்ணுண்டும் பீய்ச்சி முலையுண்டும் -பேயார் -91 –
அனைத்துலகும் உள் ஒடுக்கி ஆல் மேல் -பேயார் –93 –
உகத்தில் ஒரு நான்று நீ உயர்த்தி உள் வாங்கி நீயே –நான்-திரு -5
ஆரே அறிவார் அணைத்து உலகும் உண்டு உமிழ்ந்த பேராழியான் பெருமையை –நான் திரு -73
மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க கறந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -நான் திரு -80
உலகு தன்னை உள் ஒடுக்கி வைத்து -திருச்சந்த -12
ஞாலம் ஏழும் உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற -திருச்சந்த –
இரந்த மண் வயிற்றுள்ளே கரத்தி-திருச்சந்த -25
படைத்த பார் இடந்து அளந்த அது உண்டு உமிழ்ந்த -திருச்சந்த -28
வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழு கடல்களும் போனகம் செய்து ஆலிலைத் துயின்ற -திருச்சந்த -30
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒரு பாலனாய பண்பனே -திருச்சந்த -31
ஆய்ச்சி பாலை யுண்டு மண்ணை யுண்டு -திருச்சந்த -37
மண் ஓன்று சென்று அது ஒன்றை யுண்டு -திருச்சந்த -48
மண்ணை யுண்டு உமிழ்ந்து -திருச்சந்த -100-
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ -திருமாலை –
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும் உண்டகண்டம் கண்டீர் -அமலனாதி -1-
ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டாய் -அமலனாதி -9
அன்று உலகம் உண்டவனே -பெருமாள் -8-7-
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய -பெரியாழ்வார் -1-2-13-
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு -பெரியாழ்வார் -1-2-18-
உய்ய உலகு படைத்ததுண்டா மணி வயிறா -பெரியாழ்வார் -1-5-1-
மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம் திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் -பெரியாழ்வார் -4-1-9-
கோட்டு மண் கொண்டு இடந்து மீட்டும் அஃது உண்டும் உமிழ்ந்து விளையாடும் விமலன் -பெரியாழ்வார் -4-3-9-
துற்றி ஏழ் உலகுண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதவர் பெற்ற தாயார் வயிற்றினை பெரு நோய் செய்வான் –பெரியாழ்வார் -4-4-2-
ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே -பெரியாழ்வார் -5-1-2-
உலகு ஏழும் யுண்டான் சொன்மொழி-திருச்சந்த -20-
காள வண்ண வண்டுண் துழாய்ப் பெருமான் மது சூதனன் தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாயை -திருச்சந்த -49
வியலிடமுண்ட பிரானார் விடுத்த திரு வருளால் -திருச்சந்த -56-
உலகு எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த -திருச்சந்த -65-
ஊழிகளாய் உலகு எல்லாம் உண்டான் என்று இலன் -திருச்சந்த -71-
வையம் விழுங்கியும் -திருச்சந்த -74-
ஞாலம் விழுங்கும் நாதனை தொழுவார் -திருச்சந்த -79-
வையம் முற்றும் ஒருங்குற யுண்ட பெரு வயிற்றாளனை -திருச்சந்த -91-
உலகம் படைத்துண்ட எந்தை -திருவாசிரியம் -2-
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து -திருவாசிரியம் -6-
மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பரிதே–பெரிய திரு வந்தாதி -16
சோம்பாது இப் பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா -பெரிய திருவந்தாதி -18
பாருண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான் பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பெரிய திருவந்தாதி -42-
கார் கலந்த –பார் கலந்த பல் வயிற்றான் -பெரிய திருவந்தாதி -86-
உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்து -சிறிய திருமடல்
தன்னைப் பிறர் அறியாத தத்துவத்தை –முத்தினை –முன் இவ்விளக்கம் உண்ட மூர்த்தியை -பெரிய திரு மடல்
வரன் முதலாயாவை முழுதுண்ட பரபரன் -திருவாய் மொழி -1-1-8-
உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு -திருவாய்மொழி -1-5-8-
உண்டான் ஏழ் வையம் -திருவாய்மொழி -1-8-7-
உண்டானை யுலகு ஏழும் ஓர் மூவடி கொண்டானை -திருவாய்மொழி -1-10-5-
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட –நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -திருவாய்மொழி -2-2-1-
யாவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற -திருவாய்மொழி -2-2-6-
ஏழ் உலகும் கொள்ளும் –வள்ளல் வல் வயிற்றுப பெருமான் -திருவாய்மொழி -2-2-7-
பொழில் ஏழும் யுண்ட வெந்தய -திருவாய்மொழி -2-3-4-
மன்னு முழு வேழ் உலகும் வயிற்றினுல தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இல்லையே -திருவாய்மொழி -2-5-3-
உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் -திருவாய்மொழி -2-6-2-
முழு வேழ் உலகுண்டான் -திருவாய்மொழி -2-6-7-
ஞாலம் உண்டவனை -திருவாய்மொழி -2-7-12-
மூவாத் தனி முதலாய் மூ உலகும் காவலன் -திருவாய்மொழி-2-8-5-
தன்னுள் கரக்கும் உமிழும் -திருவாய்மொழி – 2-8-7-
முறையால் இவ்வுலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் -திருவாய் மொழி -3-1-10-
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை -திருவாய்மொழி -3-4-9-
உலகு ஏழும் உண்டவன் கண்டீர் -திருவாய்மொழி -3-6-1-
உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை -திருவாய்மொழி -3-6-8-
அடியார்த்த வையமுண்டு -திருவாய்மொழி -3-7-10-
நக்க பிரானொடு அயன் முதலாக எல்லாரும் அவையும் தன்னுள் ஓக்க ஒடுங்க விழுங்க
வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்விலனே -திருவாய் -3-10-9-
பாலனாய் ஏழு உலகு யுண்டு பரிவின்றி -திருவாய் மொழி -4-2-1-
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை -திருவாய் மொழி -4-3-2-
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே -திருவாய் மொழி -4-3-6-
உண்டும் உமிழ்ந்து கடந்தும் இடத்தும் கிடந்தும் நின்றும் -திருவாய்மொழி-4-5-10-
ஒருங்காகவே யுலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட -திருவாய் மொழி -4-6-4-
ஞாலம் யுண்டாய் -திருவாய் -4-7-1-
உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி -திருவாய்மொழி -4-8-11-
பரந்த தெய்வமும் பல்லுக்கும் படைத்து அன்று உடனே விழுங்கி கரந்து உமிழ்ந்து கடந்து கிடந்தது -திருவாய்மொழி -4-10-1-
பார் எல்லாம் உண்ட நம் பாம்பணையான் -திருவாய்மொழி -5-4-1-
ஆழ் கடல் மண் விண் மூடி மா விகாரமாய் -திருவாய்மொழி -5-4-2-
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும்
-கடல் ஞாலம் யுண்டேனும் யானே என்னும் -திருவாய் -5-6-1-
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் -திருவாய் -5-6-5-
முழு ஏழு உலகும் யுண்டாய் -திருவாய்மொழி -5-7-7-
இஞ்ஞாலம் யுண்ட நம்பிரான் தன்னை நாடோறுமே–திருவாய்மொழி-5-9-7-
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து -திருவாய்மொழி-5 -10-5-
உலகம் உண்ட ஒண் சுடரே -திருவாய்மொழி-5 -10-6-
ஞாலம் எல்லாம் உண்ட நம்பெருமானை -திருவாய்மொழி-6-1-2-
கடல் ஞாலம் உண்டிட்ட நின்மலா நெடியாய் –திருவாய்மொழி-6 –2–7-
வியன் ஞாலம் முன் படைத்தாய் –திருவாய்மொழி-6-2-10-
முழுவேழ் உலகும் தன் வாயகம் புகை வைத்து உமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம் –திருவாய்மொழி-6-4-11-
நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச சிறுகே கள்வன் அவற்கு –திருவாய்மொழி-6-6-3-
முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் –திருவாய்மொழி-6-8-1-
உலகமுண்ட பெரு வாயா –திருவாய்மொழி-6-10-1-
ஆதியாகி யகலிடம் படைத்து உண்டு உமிழ்ந்து –திருவாய்மொழி-7-1-3-
முன் செய்த இவ்வுலகம் உண்டு உமிந்து அளந்தாய் –திருவாய்மொழி-7-2-2-
கார்க்கடல் ஞாலம் யுண்ட கண்ணபிரான் –திருவாய்மொழி-7-3-9-
அப்பன் ஊளி எழ உலகமுண்ட ஊணே–திருவாய்மொழி-7-4-4-
அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே –திருவாய்மொழி-7-4-9-
பா மரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ –திருவாய்மொழி–7-6–1-
அகலிடம் முழுதும் படைத்த இடந்து உண்டு உமிழ்ந்த –திருவாய்மொழி-8-1-5-
பொங்கு மூ வுலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம்மருவன் -திருவாய்மொழி -8-4-2-
தேனை நன் பாலைக் கன்னலை யமுதை திருந்துலகுண்ட அம்மானை –திருவாய்மொழி -8-4–11-
ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுதுண்ட –திருவாய்மொழி -8-5 -5-
மூ உலகும் தன் நெறியா வயிற்றில் கொண்டு சிறியேனுடைச் சிந்தையுள் நின்று ஒழிந்தாரே –திருவாய்மொழி -8-7-8-
நின்ற ஒரு மூ உலகும் தன் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை –திருவாய்மொழி -8-7-9-
சீர் வளங்கிளர் மூ வுலகுண்டு உமிழ் தேவ பிரான் –திருவாய்மொழி–8–9–4-
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த –திருவாய்மொழி-8–10-4-
தான் தோன்றி முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த –திருவாய்மொழி–8–10–7-
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே –திருவாய்மொழி-9-1-1-
அவனே அகல் ஞாலம் உண்டு படைத்து இடந்தான் அவனே அஃது உண்டு உமிழ்ந்து அளந்தான் —9—3–2—
அகலிடம் படைந்தது இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து –9–9–2-
அவனி யுண்டு உமிழ்ந்தவன் –9–9–11-
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொன் முனி முதலா முற்றும் தேவரோடு உலகு செய்வான் —10–1–7-
உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் –10–2–3-
உலகு உயிர் தேவும் மற்றும் படைத்த எம் பரம மூர்த்தி —10–2–7-
தானே படைத்து தானே யுண்டு யுமிழ்ந்து தானே யாள்வானே –10—5–3-
செழு மூ உலகும் தன் ஒரு மா வயிற்றினுள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும் –10–7–6-
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே—10- 8–2-
முற்ற இம்மூவுலகும் பெரும் தூறாய்த் தூற்றில் புக்கு முற்றக் கரந்து ஒளித்தாய் –10–10–8-

பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட –திரு நெடும் தாண்-20-
உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து –திரு நெடும் தாண் -24-
கொண்டல் மாருதங்கள் குலவரை தொக்கு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும் உண்ட மா வயிற்றோன்
ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான் –கலி—1—4–9-
பாரார் உலகும் பனிமால் வரையும் கடலும் சுடரும் இவை
பாராயதுண்டு உமிழ்ந்த –2–5–1-
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா யுண்டவன் -2–9–4-
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் வயிற்று அடக்கி
ஆலின் மேலோர் ஓர் இளந்தளிரில் கண் வளர்ந்த ஈசன் -2–10–1-
மூ வுலகுண்டு உமிழ்ந்து அளந்தானை –3–1–10-
உலகுண்ட மாயன் —3–2—8-
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுது செய்த திரு வயிற்றன் –3–9–3-
உலகுண்ட காளை –3–9–7-
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும் உண்ட பிரான் –4-1–5-
ஏழுலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டமும் மோழை எழுந்து
ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகத்தில் ஒடுக்கிய எம் மூர்த்தி –4-4-9-
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் –4–8–6-
ஏழுலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டமும் மோழை எழுந்து
ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகத்தில் ஒடுக்கிய எம் மூர்த்தி –4-4-9-
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் –4–8–6-
பாரினை யுண்டு பாரினை உமிழ்ந்து –4–10-5-
கரும் தண் கடலும் மலையும் உலகும் அருந்தும் அடிகள் அமருமூர் –5–2–7-
உலகுண்டவன் எந்தை பெம்மான் –4–5–1-
வையம் உண்டு ஆலிலை மேவும் மாயன் –5–4–2-
இவ்வுலகுண்ட பெரு வயிற்றன் –5-5-4-
காரார் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ்வுலகு ஏழும் உண்டு ஆராது என்று இருந்தானை -5–6–2-
அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை –5–6–6-
ஒரு கால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயானாய் –5–7–9-
வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும் அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை -5-9-2-
அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை —5–9–2-
உலகு ஏழும் ஒழியாமே முன நாள் மெய்யின் அளவே யமுது செய்ய வல்ல ஐயனவன் மேவு நகர் தான் –5–10–2-
உம்பர் உலகு ஏழும் கடல் ஏழும் மலை ஏழும் ஒழியாமை முன நாள் தம் பொன் வயிறார அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட மார்வர் —5–10–3-

மேல் ஏழு உலகங்கள் –பூ -புவ-ஸூ வ –மஹ–ஜன –தப –சத்யம் –
கீழ் ஏழு உலகங்கள் –அதல -விதல -ஸூ தல –நிதல –தராதல–ரஸாதல –மஹா தல —
ஏழு கடல்கள் –உப்பு -கருப்பஞ்சாறு -தேன்- நெய்-தயிர் -பால் -புனல்
ஏழு மலைகள் -இமயம் மந்த்ரம் -கைலாசம் -வடவிந்தம் -நிமதம் -ஏமகூடம் -நீலகிரி –

நிலவொடு வெய்யில் நிலவிரு சுடரும் உலகும் உயிர்களும் உண்டு ஒரு கால் –6–1–4-
பார் ஏழு கடல் ஏழு மலை ஏழுமாய்ச் சீர் கெழும் இவ்வுலகு ஏழும் எல்லாம் ஆர் கெழு வயிற்றினில்
அடக்கி நின்று அங்கு ஓர் எழுத்து உருவும் ஆனவனே –6–1–5-
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் யுண்ட கண்டன் –6–6–1-
உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில் வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை -6–8–6-
மூ உலகோடு அளை வெண்ணெய் யுண்டான் –6–9–3-
இவ்வுலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் –6–9–5-
வற்றா முது நீரொடு மால் வரை ஏழும் துற்றாக முன் துற்றிய தொல் புகழோனே -7–1–2-
அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட வாயா –7–1–9-
உடையானை ஒலி நீர் உலகங்கள் படைத்தானை –7–6–3-
உலகுண்ட ஒருவா –7–7–1-
பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை –7–8–10-
எண் திசையும் எழு சுடரும் பெரு விசும்பும் உண்டு உமிழ்ந்த பெருமான் –8–3–7-
பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு ஏழும் ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால் -8–10–2-
எண் திசையும் எறி நீர்க் கடலும் ஏழ் உலகும் உடனே விழுங்கி –9–2–9-
பூவலருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த –9–9-1-
உண்டு உலகு ஏழினையும் —9–9–3-
உலகு ஏழினையும் ஊழில் வாங்கி முனித்தலைவன் முழங்கு ஒலி சேர் திரு வயிற்றில் வைத்து
உம்மை உய்யக் கொண்ட கனிக் களவத் திரு வுருவத் தொருவன் –11 –6- 4-
பாராரும் காணாமே பரவை மா நெடுங்கடலே யான காலம் ஆரானும் அவனுடைய திரு வயிற்றில்
நெடுங்காலம் கிடந்தது உள்ளத்தோராத வுணர்விலீர்—11–6–5-
பேயிருக்கு நெடுவெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகும் காலம் தாயிருக்கும் வண்ணமே
உம்மைத் தண் வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் —11–6–6-
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் உண்ணாத பெரு வெள்ளம்
உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட –11–6–7-
மரம் கிளர்ந்து கரும் கடல் நீருரம் துரந்து பரந்தேறி அண்டத்து அப்பால் புறம் கிளர்ந்த காலத்து பொன்னுலக
மேனையுமூழில் வாங்கி அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம் படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட –11-6–8-
அண்டத்தின் முகடு அழுத்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆ ஆ வென்று தொண்டர்க்கு அமரர்க்கும் முனிவருக்கும் தான் அருளி
உலகம் ஏழும் உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட –11–6–9-
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
கா வளரும் பொழில் மங்கைக் கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார் பூ வளரும்
திரு மகளால் அருள் பெற்று பொன்னுலகில் பொலிவர் தாமே —11–6–10-
உருகா நிற்கும் என்னுள்ளம் ஊழி முதல்வா —11–8–4-
உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் –9–10–3-
பொங்கார் கடலும் பொருத்தும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறு அத்தனை போது அங்காந்தவன் காண்மின் -10–6–1-
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடல் ஏழ் மலை ஏழ் உலகு ஏழ் ஒழியாமை நம்பி அன்று உண்டவன் காண்மின் –10–6–2-
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகி யாவர் நம்மை யாள்வர் பெரிதே –11- 4–3-
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இவ் வேழ் உலகும் உண்டும் இடமுடைத்தால் –11–5–3-
உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு எறி நீர் உலகனைத்து மெய்தாதால் –போதாது -11–5–4-
சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன் உண்டு உமிழ்ந்தான் —11–5–7-
நெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர் –11–6–1-
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே அவன் அருளே யுலகாவது அறியீர்களே –11–6–2-
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால் வாய் ஒற்றைக்கை வெண் பகட்டின் ஒருவனையும்
உள்ளிட்ட அமரரோடும் வெற்றிப் போர்க் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட —11–6–3-

——————————————

பிரமனைப் படைத்தது-

நான்முகனை நாராயணன் படைத்தான் –நான்முகன் -1-
அயனைப் படைத்ததோர் எழில் உந்தி –அமலன் –3-
அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி –நாச்சியார் -14-9-
நிறை நான்முகனைப் படைத்தவன் –திருவாய் –1-5-3-
பூவில் நான்முகனைப் படைத்த தேவன் –திருவாய் –2–2–4-
நான்முகன் பயந்த ஆதி தேவன் –திருச் சந்தவிருத்தம் -5-
இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான் முகனைத் தன் எழிலாரும் உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் –கலியன் -4–2-9-
உந்தி மேல் நான்முகனைப் படைத்தான் –5–4–1-
ஒருவனை உந்திப் பூ மேல் ஓங்குவித்து -5–9–3-
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை -6-8–6-

பிரமனுக்கு நல் வேத உபதேசம்
அன்னே இவரை அறிவன் மறை நான்கும் முன்னே உரைத்த முனிவர் இவர் -11–3–3-

மறைத்து வந்த ராவணனை பிரம்மாவுக்கு காட்டிக் கொடுத்தது
பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு -பொய்கையார் –45-
ஆய்ந்த வரு மறையோன் நான் முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன்
ஏய்ந்த முடிப் போது மூன்று ஏழு என்று எண்ணினான் –பேயாழ்வார் -77-
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்த் தண்ட வரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி –நான்முகன் -44-

பிரமன் கர்வம் அடக்கியது
நான்முகன் நாள் மிகைத்து தருக்கையிருக்கு வாய்மை நலமிகு சீருரோமசனால் நவிற்றி –கலி -3–4–2-

பிரமன் திருவடி விளக்க -கங்கை –
அங்கை நீர் ஏற்றார்க்கு அலர் மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல் -பேயாழ்வார் –6-

கங்கை சுத்தி பெற அருள்
பொடி சேர் அனல் கங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர்ப்பொன்
உன் தன் அடி சேர்ந்து அருள் பெற்றான் அன்றே –பொய்கையார் –97-

பாணாசுர யுத்தத்தில் சிவன் தோற்றல்
உவரிக்கடல் நஞ்சமுண்டான் கடன் என்று வாணற்கு உடன் நின்று தோற்றான் ஒருங்கு –நான்முகன் –56-
பரிவின்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த திரிபுரம் செற்றவனும் மகனும்
பின்னும் அங்கியும் போர் தொலையப் பொரு சிறைப் பிள்ளைக் கடாவிய மாயனை –திருவாய் -3- 10-4-
வாண புரம் புக்கு முக்கட் பிரானைத் தொலைய –திருவாய் -7-10-7-
ஈசன் தன் படையொடும் கிளையொடும் ஓட–கலியன் -4–2–5-
சடையானோடே வடல் வாணன் தடம் தோள் துணித்த –5-1-7-
வெஞ்சினத்த கொடும் தொழிலோன் விசை யுருவை யசைவித்த –5–6–6-
விடையனோடே அன்று விறல் ஆழி விசைத்தானை –7-6 -3-

சிவன் பூஜையினால் பகவானுடைய அவிக்ருதத்வம் -பெருமை
நலமாகத் தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூக் கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத –நான்முகன் -75-

சிவன் விஷ்ணு நாமத்தை கேட்டு பரவசன் ஆனமை
நீண் முடியான் தன் பெயரே கேட்டிருந்தது அங்கார லங்க லானமையால் ஆய்ந்து –நான்முகன் -78-

சிவன் ஆழ்வாருக்கு ஒவ்வான்
பிதிரும் மனமிலேன் பிஞ்சகன் தன்னோடும் எதிர்வன் அவன் எனக்கு நேரான் –நான்முகன் -84-

சிவாதி தேவதாந்தரங்கள் பகவானை வழிபடுதல்
நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகம் செய்ய நின்ற திருமாலை –பெரியாழ்வார் -4-1-5-
தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன் நீதியால் வணங்கு பாத நின்மலா —திருச் சந்தவிருத்தம் -9-
நாள் தொறும் வானவர் தம்மை யாளுமவனும் நான்முகனும் சடை முடி அண்ணலும் செம்மையால்
அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே –திருவாய் -3- 6-4-
தெரிவரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும் –திருவாய் -4–8–8-
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் ஆனவனே –திருவாய் -4-10-4-
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை யான் என்று கொல் சேர்வது அந்தோ –7–6–2-
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்ற இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என்—8–3-9-
சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த வம்மானே –10–7–6-
அருளை ஈ என்னம்மானே என்னும் முக்கண் அம்மானும் –இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும்
அம்மான் திருமலை திருமால் இரும் சோலை மலையே -10—7–7-
வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை –திரு குரும் தாண்–20-
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர் கோனும் நின்று ஏத்தும் -கலியன் –2–1-9-
பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த -6–9–9-

சிவன் பிரமன் அறிய மாட்டாதவர்கள்
ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியாப் பெருமையோனே முற்ற உலகு எல்லாம் நீயே யாகி
மூன்று எழுத்தாய முதல்வனேயோ –பெரியாழ்வார் –4-10-4-
ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை –திரு எழு கூற்று
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி வண்ணனையே –திருவாய் –2- 7-12-
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –திருவாய் –3–1–10-

சிவன் சாபம் நீக்கி அருள் புரிந்தது –
பண் புரிந்த நான் மறையோன் சென்னிப் பலி ஏற்ற வெண் புரி நூல் மார்பன் வினை தீர
புண் புரிந்த வாசகத்தான் தாள் பணிவார் கண்டீர் –பொய்கையார் -46-
ஒற்றைப் பிறை இருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக் குறையிரந்து தான் முடித்தான் கொண்டு –பூதத்தார் –17-
எரி யுருவத்து ஏறு ஏறி பட்ட விடு சாபம் பார் ஏறி யுண்ட தலைவாய் நிறையக் கோட்டங்கை ஒண் குருதி –பூதத்தார் –63-
கண்ட பொருள் சொல்லில் கதை மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் –நான்முகன் -31-
என் நெஞ்சமேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்தாயானுக்கு ஆக்கினேன் அன்பு –நான்முகன் -58-
வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன் சடைக் கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன் கபால்மிசை –
-ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தனை–திருச்சந்தவிருத்தம் -42-
அடைக்கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும் முடைக்கலத்தூண் முன் அரனுக்கு நீக்கியை –திருச்சந்த விருத்தம் –86-
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வன் துயர் கெட வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர் –திருச்சந்த விருத்தம் –113-
துண்டை வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –அமலனாதிபிரான் -6-
கண்ட கடலும் மலையும் உலகு ஏழும் முண்டத்துக்கு ஆற்றா முகில் வண்ணா ஓ ஓ என்று
இண்டைச் சடை முடி ஈசன் இரக் கொள் மண்டை நிறைத்தானே –பெரியாழ்வார் -1- 8-9-
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி ஏறு அன்றியே –திருவாய் –2–2–2-
குமாரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே –திருவாய் –10–2–6-
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் –திருக் குரும் தாண்-19-
அயன் அரனைத் தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் –கலியன் -1–4–8-
வெந்தார் என்பும் சூடு நீறும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன்
தான் சென்று –என் எந்தாய் சாபம் தீர் என்ன இவங்கமுது நீர் திரு மார்பில் தந்தான் –1-5-8-
புரம் எரி செய்த சிவனுறு துயர் களை தேவை –2–3–1-
நக்கன் ஊன்முகமார் தலை யோட்டூண் ஒழித்த வெந்தை –3–4–2-
அரன் கொண்டு திரியும் முண்டமது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும் முதல்வன் அவன் –3—9–3-
வாளையார் தடம் கண் உண்மை பங்கனவன் சாபம் மற்றது நீங்க மூளையார் சிரத்தையும் முன் அளித்த –4–2–8-
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த –5–1–8-
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் துக்கம் துடைத்த -5–2–6-
ஆகம் தன்னால் ஒருவனை சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான் -5—9–3-
ஊனமர் தலை ஓன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன் –ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான்–5-9–4-
ஆறும் பிறையும் யரவும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் நீறும் பேசி ஏறு ஊரும் இறையோன் சென்று
குறை இரப்ப மாறு ஓன்று இல்லா வாச நீர் வரை மார்பகலத்து அளித்து உகந்தான் –6–7-9-
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன் இடர் கெடுத்த திருவாளன் -6–9–1—
சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர் நடலை தீர்த்தவனை –10-1–5-

———————————–

ப்ரஹ்ம சிவாதிகளுக்கு திருமேனியில் ஒதுங்க இடம் கொடுத்தது –

மா மதிள் மூன்று எய்த இறையான் நின்னாகத்திறை –பொய்கையார் -28-
பொன் திகழும் மேனிப்புரிசடை யம் புண்ணியனும் –ஒருவன் ஒருவனங்கத்து என்றும் உளன் –பொய்கையார் -98-
நறவேற்றான் பாகத்தான் –பேயார் -31-
பனி நீர் அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்முகத்தான் நின்னுந்தி முதல் –பெரிய திரு –71-
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத்துந்தித் தலத்து எழு திசைமுகன் படைத்த நல்லுலமும் தானும் –திருவாய் –1–3–9-
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து –மால் தன்னில் மிக்குமோர் தேவுமுளதே –2–2–3-
அயனிடமே கொப்பூழ் ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ ஒருவிதம் ஓன்று இன்றி என்னுள் களந்தானுக்கே –திருவாய் -2–5–2-
ஏறாளும் இறையோனும் திசைமகனும் திருமகளும் கூறாளும் தனிவுடம்பன் –4–8–1-
தடம் புனல் சடை முடியன் தனியொரு கூறு அமர்ந்து உறையும் -4–8–10-
தாள மா மறையான் உனதுந்தியான்–வாள் கொள் நீள் மழு வாள் உன்னாகத்தான் –9–3–10-
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திருவாகம் –9–9–6-
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானை பாகத்து வைத்தான் –10–4–6-
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கத்தாய் –திரு நெடும் தாண் -9-
பிணங்கள் அடு காடதனுள் நடமாடும் பிஞ்ஞகனோடு இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கு இடம் –கலியன் –2–6-9-
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனை தன்னுந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் –3- 4-9-
அலர்மகட்க்கும் அமரர்க்கும் கூறாகக் கொடுத்து அருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் —3–9–8-
சூழல் நிற வண்ணன் நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் –6-1–3-
வானார் மதி பொதியும் சடை மழு வாளி யோடு ஒரு பாலதனாகிய தலைவன் –7–9–4-
வாசவார் குழலாள் மலை மங்கை தன் பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னை —7–10–3-
கண்ணுதல் கூடிய அருத்தனை -7–10–7-
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்க்கு இசைந்து உடம்பிலோர் கூறு தான் கொடுத்தான் குல மா மகட்க்கு இனியான்–9–10-4-
மல்கிய தோளும் மானுரிய தளமுடையவர் தமக்குமோர் பாகம் நல்கிய நலமோ –10-9–4-

————————————-

விஷ்ணுக்கும் சிவனுக்கும் உள்ள தாரதம்யம்

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி –கார் மேனி ஓன்று —பொய்கையார் -5-
ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான் நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால் மங்கையான்
பூ மகளான் வார் சடையான் நீண் முடியான் கங்கையான் நீள் கழலான் காப்பு –பொய்கையார் -74-
விஷ்ணுவோ -ஹரி -சர்வ வியாபகன் -நாராயணன் -சர்வ ரக்ஷகன் / சிவனோ -ஹாரன் -சர்வத்தையும் அழிப்பவன்-
விஷ்ணுவுக்கு வாஹனமோ வேத மூர்த்தியான பெரிய திருவடி /சிவனுக்கு மூட தனத்துக்கு உதாரணமாக காட்டும் எருது
விஷ்ணுவுக்கு பிரமாணம் அப்வருஷேயமான வேதம் -/சிவனுக்கோ மணிசாரால் ஆக்கப்பட்ட ஆகமம்
வாசஸ் ஸ்தானம் –நீர்மைக்கு தகுதியான திருப் பாற் கடல் / இவனுக்கோ கடினமான கைலாச பர்வதம் –
ரக்ஷணம் தொழில் / சம்ஹாரம் அவனுக்கு –/ திருச்சக்கரம் -சூலாயுதம் / காள மேக உருவம் -காலாக்கினி அவனுக்கு /
அனைவரையும் சரீரமாக கொண்டவன் -சிவன் சரீர பூதன் /நீண்ட கிரீடம் -நீண்ட ஜாடை முடி அவனுக்கு
நோண்ட திருவடி ஸ்பர்சம் பட்டு புனிதமான கங்கையை தலையிலே தரித்து சிவனானான்
பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும் நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத்தால் திரிவரேலும் ஒருவன் ஒரு வனங்கத்து என்றும் உளன் –பொய்கையார் –98-

————————————

திரிபுரஹதம்
புரம் ஒரு மூன்று எரித்து –திருவாய் -1-1–8-
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்கவாறும் கலந்து அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெல்ல நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் -5- 10-4-
எயில் மூன்று எரித்த –7–6–7-
திரிபுரம் மூன்று எரித்தானும் -2–8–1-
நண்ணார் நகரம் வீழ நனிமலை சிலை வளைவு செய்து அங்கழல் நிற வம்பது வானவனே–7–1–3-

————————————-

சிவ பிரான் நால்வருக்கு உபதேசித்தது –
அறிவானாம் ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த ஆலமர் கண்டத்து அரன் –பொய்கையார் -4-
ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு மேலையுகத்து யுரைத்தான் மெய்த் தவத்தோன் –ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை –
-ஆல் மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு –நான்முகன் -17-

—————————————————-

சிவன் நஞ்சுண்டது –
அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே –கலியன் -6-1–2-

———————

மார்க்கண்டேயன் கண்ட பகவத் பரத்வம்
மார்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் –நான்முகன் –15-
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை நக்கபிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே –திருவாய் -4-10-8-
மறுத்துவம் அவனோடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே-திருவாய் -5–2–7-
மார்க்கண்டேயனுக்கு வாழு நாள் இண்டைச் சடை முடி ஈசனுடன் கொண்டு உசாச் செல்ல கொண்டு அங்குத்
தன்னோடும் கொண்டு உடன் சென்றதும் உணர்ந்துமே–திருவாய் -7–5–7-
மன்னு நான் முறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றம் தன்னை யஞ்சி
நின் சரண் எனச் சரணாய்த் தகவில் காலனை யுக முனிந்து ஒழியா -கலியன் -5-8-6-

————————————-

இந்திரனுக்குப் பதவி அளித்தல்
வெந்திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும் இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் –கலியன் -1-4-7-

——————————————

சந்த்ர சாப விமோசனம் –
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் –நான்முகன் -12-
மா மதி கோள் முன்னம் விடுத்த முகில் வண்ணன் –பெரிய திரு மடல்
பான் மதிக்கு இடர் தீர்த்தவன் –கலியன் -1-8-6-
மதி கோள் விடுத்த தேவா -6–2-8-
பனி சேர் விசும்பில் பான் மதி கோள் விடுத்தான் இடம் –6–4–9-
பனி மதி கோள் விடுத்து உகந்த –8-3-3-
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை –8–9-7-
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து –11–8–7-

———————————————

சுமுகனுக்கு அபயம்
அடுத்த கடும் பகைஞ்ஞற்கு ஆற்றேன் என்று ஓடிப் படுத்த பெரும் பாழி சூழ்ந்த -விடந்தரவை வல்லாளன் கைக் கொடுத்த
மா மேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள் -பொய்கையார் -80-
பதிப் பகைஞ்ஞற்கு ஆற்றாது –வாள் அரவம் தன்னை மதித்து அவன் தன் வல்லாகத்து ஏற்றிய மா மேனி மாயவனை –நான்முகன் -74-
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –கலியன் –5-8-4-

——————————————–

க்ஷத்ர பந்து உபாக்யானம்
கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் –திருமாலை -4-

——————
மந்தேஹ அசுரர்கள் கதை -அர்க்க்ய பிரதான வைபவம்
மீண்டு அவற்றுள் எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே –திருச்சந்த விருத்தம் -82-

————————-

தேவாசுர யுத்தம்
தேவாசுரம் பெற்றவனே திருமாலே –திருவாய் –9–8–7-

——————–

நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்கள் யுடைய நம்பீ -திருமாலை -12-

———————————–

சேஷ சயனம்
அஞ்சி அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன் –பொய்கையார் -16-
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த –பொய்கையார் -42-
அவரவர் என்று இல்லை அரவணையான் பாதம் எவர் வணங்கி ஏத்தார் எண்ணில் –பூதத்தார் -12-
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு –பூதத்தார் –15 –
விடம் காலும் தீவாய் அரவணை மேல் –பூதத்தார் -71-
பொங்கு பட மூக்கில் ஆயிரவாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய் –பூதத்தார் –97-
பாம்பணையான் மேலான் –பேயார் -11–
அடைந்தது அரவணை மேல் –பேயார் -28-
செவி தெரியா நாகத்தான் –பேயார் -31-
பாம்பும் –இடமாகக் கொண்டான் –பேயார் -32-
நேமி அரவணையான் சேவடிக்கே –பேயார் –80-
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார அரவணையான் பொன் மேனி யாம் காண வல்லமே யல்லமே –நான்முகன் -10-
வெள்ளத்து அரவணை மேல் கிடைக்குமே –நான்முகன் –30-
ஐந்தலை வாய் நாகத்தணை –நான்முகன்-35-
பட நாகணை நெடியமாற்கு–நான்முகன் -66-
பை தெளிந்த பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு வேம்பும் கறி யாகும் என்று –நான்முகன் -94-
தடம் கடல் பணத்தலைச் செங்கண் நாகணைக் கிடந்த செல்வ மல்கு சீரியனாய் –திருச்சந்த விருத்தம் -15-
நாக மூர்த்தி சயன நலம் கடல் கிடந்தது –திருச் சந்த விருத்தம் -17-
பவ்வ நீர் அரவணைப் படுத்த பாயல் பள்ளி கொள்வது என் கொள் வேலை வண்ணனே -திருச்சந்த -18-
புள்ளின் மெய்ம் பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே –திருச்சந்த -19-
கூசம் ஒன்றும் இன்றி மாசுணம் படுத்து வேலை நீர் –20-
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -45-
நச்சு அரவணைக் கிடந்த நாத –85-
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -117-
படுத்த நாகணைப் பள்ளி கொண்டான் –திருப் பல்லாண்டு –9-
அரவணையாய் ஆயர் ஏறே–பெரியாழ்வார் –2–2–1-
அரவின் அணை மேலான் –2–6–6-
அரவில் பள்ளி கொண்டு -3–5–11-
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின்னிலக ஆயிரம்
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற –5–1–7-
அரவணை மேல் பள்ளி கொண்டாய் –நாச்சியார் -3–1-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –திருச்சந்த -26-
பாம்பணையான் –பெரிய திருவந்தாதி -86-
மன்னிய பல் பொறி சேர் ஆயிரவாய் வாள் அரவின் –மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மா மலை போல் –பெரிய திருமடல் –
நாண் மதியே நீ இந்நாள் ஐவாய் அரவணை மேல் ஆழிப் பிரானார் மெய் வாசகம் கேட்டு உன் மெய் நீர்மை தோற்றாயே –திருவாய் –2–1–6-
பைத்த பாம்பணையான் திருவேங்கடம் —3-3-10-
அனந்தன் மேல் நன்கு நன்கு உறைகின்றானே -3–4–9-
பட அரவின் அணைக்கிடந்த பரஞ்சுடர் -3–6–10-
பை கொள் பாம்பு ஏறி உரை பரனே –3–8–4-
பணம் கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ –4–1–8-
பட நாகத்து அணைக் கிடந்த –4–8–3-
நாக மிசை துயில்வான் போல் உலகு எல்லாம் நன்கு ஒடுங்க –4–8–9-
அரவின் அணை அம்மானே -5–7–1-
நச்சு அரவணை மேல் நம்பிரானது நன்னிலமே—5–9–4-
நச்சு நாகணையானே –5–10–10-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று –5–10–11-
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளை –6–4–1-
பை யரவின் அணைப் பள்ளியினானுக்கு –6–6–7-
பை கொள் பாம்பின் அணையாய் –7–2–6-
பை விடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே –7-7-6-
பாம்பணை அப்பன் அமர்ந்துறையும் –7–10–5-
பணங்கள் ஆயிரமும் உடைய பைந்நாகப் பள்ளியாய் பாற் கடல் சேர்ப்பா -8—1–8-
பட அரவு அணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே —8—9–8-
பாம்பணைப் பள்ளியாய் தழுவுமாறு அறியேன் –9-3–9-
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் -9-4–5-
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர் -10–1–4-
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் –10–2–1-
பாம்பணைப் பள்ளி கொண்டான் –10–2–7-
படமுடை வரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண –10–2–8-
நாகத்தணையானை —-10- -4–6-
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் —10–6–6-
நஞ்சரவில் துயில் அமர்ந்த நம்பீ -திரு நெடும் தாண் –12-
பணங்கள் ஆயிரம் யுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமா வென்று இணங்கி வானவர் மணி முடி பணி தர –கலியன் –1–2–6-
பட நாகத்தணைக் கிடந்து—-2- 5–10-
உரந்தரு மெல்லணைப் பள்ளி கொண்டான் ஒரு கால் முன்னம் மாவுருவாய் கடலுள் —-2–9–3-
அரவணைத் துயின்ற ஆழியான் –4–10–9-
பை கொள் நாகத்து அணையான் —5–4–2-
தீ வாய் நாகணையில் துயில்வானே –7–7–9-
ஐவாய் அரவணை மேல் உறை அமலா –7–7–8-
வரி அரவின் அணைத் துயின்று –8–3–2-
ஆயிர வாய் அரவிணை மேல் பேராளர் பெருமான் –8–3–9-
பாம்பின் அணையான் –9–4–8-
அண்டரும் பரவ அவர் அரவணைத் துயின்று –9–8–2-
விடம் கலந்தமர்ந்த அரவணைத் துயின்று –9–8–9-
பாந்தட் பாழியில் பள்ளி விரும்பிய –10–1–7-
ஐவாய் பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ–11—8–7-

—————————————————-
கருடத்வஜன்
வெஞ்சிறைப் புள்ளுயர்த்தான்–திருவாய் –1–4–1-
கொடியா அடு புள்ளுயர்த்த –1–6–9-
புள்ளூர் கொடியானே –3–8–1-
கொடி மன்னு புள்ளுடை யண்ணல் கழல்கள் குறுகுமினோ –4–1–9-
ஆடு புட்கொடி—4–10–7-
கருளப் புட்கொடி—-5–7–3-
ஆடல் பறவை உயர்ந்த –8–2–4-

————————————————-

கருட வாஹனன் கஜேந்திர வரதன்

இருஞ்சிறைப் புள் ஊர்ந்தான் –பொய்கையார் –17-
பிறை மருப்பின் பைங்கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த செங்கண் மால் –29-
மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல் –47-
வேழம் தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த –78-
பிடி சேர் களிறு அளித்த பேராளா–97-
தொடர் எடுத்த மால்யானை –அன்று இடர் அடுக்க ஆழியான் பாதம் பணிந்தன்றே –பூதத்தார் –13-
கரியதோர் வெண் கோட்டு மால் யானை வென்று முடித்தன்றே –தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து –22-
ஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் -73-
ஆழ்ந்த மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான் –பேயார் –50-
குட்டத்துக்குக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான்—99-
மதித்தாய் மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு –நான்முகன் -12-
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று –திருச்சந்த –40-
ஆனைக்காகி செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார் –திருமாலை -28-
விண்ணுளார் வியப்ப வந்து ஆணைக்கு அன்று அருளை ஈந்த -44-
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ் வாய் வெள் எயிறு உற வதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் யரும் துயர் கெடுத்த –திருப்பள்ளி -2-
பதக முதலை வாய்ப்பட்ட களிறு கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன உதவப் புள்ளூர்ந்து
அங்குறு துயர் தீர்த்த அதகன் –பெரியாழ்வார் -2–1–9-
தடம் பெரும் பொய்கை வாய் வாழு முதலை வலைப்பட்டு வாதிப் புண் வேழம் துயர் கெட
விண்ணோர் பெருமானாய் ஆழி பணி கொண்டான் –அதற்கு அருள் செய்தான் —2-10-8-
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் -4-2-5-
கண்ணனே கரி கோள் விடுத்தானே -5–1–9-
மதயானை கோள் விடுத்தாய் –நாச்சியார் -2–3-
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம் அழகனார் -4–10-
பாரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் — விருந்தாவனத்தே கண்டமை -14–10-
ஒரு தனி வேழத் தரந்தையை ஒரு நாள் இரு நீர் மடுவுள் தீர்த்தனை –திரு எழு கூற்று
போரானை பொய்கை வாய்க் கோட்பட்டு நின்று அலறி –தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக ஈரா வதனை இடர் கடிந்தான் எம்பெருமான் –சிறிய திருமடல்
ஓரானை கொம்பு யோசித்து ஓரானை கோள் விடுத்த சீரானை –சிறிய திருமடல் –
பூந்தண் புனல் பொய்கையானை இடர் கடிந்த –திருவாய் -2-8-2-
கைம்மா துன்பம் கடிந்த பிரானே –2–9–1-
தொழுங்காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே –3–1–9-
பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் –3–5–1-
கைம்மா துன்பு ஒழித்தாய என்று கைத்தலை பூசலிட்டே–5–1–7-
அன்றி மற்று என்றிலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய் நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் –7-10–8-
பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்ச்சினப் பறவை இருந்தேனே—9–2–5-
திண் கைம்மா துயர் தீர்த்தவன் –கலியன் –1–8–5-
மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் –கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை –2–3–9-
காரானை இடர் கடிந்த கற்பகத்தை –2–5–1-
தூம்புடைத் திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து -2–9–5-
கொழுந்து அலரும் மலர் சோலைக் குழாங்கள் பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி அழுந்திய
மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை –2- 10–3-
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை –2–10–11-
முதலைத் தனி மா முரண் தீர வன்று–முது நீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய விதலைத் தலைச் சென்று அதற்க்கே உதவி வினை தீர்த்த அம்மான் –3–8–2-
கொலைப்புண்ட லைக்குன்றம் ஓன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர் செய்து –
-கொங்காரிலைப் புண்டரீகத்தின் அவள் இன்பன் அன்போடு அணைந்திட்ட வம்மான் –3- -8–3-
கத நாகம் காத்து அளித்த –4–4–1-
தூம்புடைப் பணைக் கை வேழம் துயர் கெடுத்து அருளி -4–5–1-
தாவளந்து உலகம் முற்றும் தடா மலர் பொய்கை புக்கு நா வள நவின்று அங்கு ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் –4-6-1-
பொள்ளைக் கரத்த புத்தகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன் -5–1–2-
உலகில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து –5–7–8-
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்ப
கொடியவா விலங்கினுயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உளது அறிந்து உன் அடியனேனும் வந்து அடியிணை அடைந்தேன் –கலியன் -5- 8-3-
தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம் மூவாமை நல்கி முதலை துணித்தானை —-6–8–3-

குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள் செய்த –7–6–4-
குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அங்கு நின்று நிலத்திகழும்
மலர்ச் சுடர்யேய் சோதீ என்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் -7-8-3-
மலர்ப்பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக்கு அருள் புரிந்தான் -8-6-7-
கைம்மான மதயானை இடர் தீர்த்த கரு முகிலை -8–9–1-
கவள மா கதத்த கரி உய்யப் பொய்கை காரங்கொளக் கலங்கி யுள் நினைந்து துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடுபடை துரந்தோன்–9–1-2-
கறை சேர் பரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த செங்கண் –11–3–2-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading