அவதாரிகை –
ஸ்ரீ யபதி தான் சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான் —
அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாய் இருக்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைக் காட்டி உபகரித்தான் –
இப் பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இருக்க -நிர்ஹேதுகமாக தானே உபகாரகன் ஆனான் –
ஸ்வ ஸ்வரூபாபன்னராய் இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான் —
தன்னுடைய திவ்ய விக்ரஹ வைலஷண்யத்தைக் காட்டி உபகரித்தான் -என்று -அவன் பண்ணி அருளிய உபகாரங்களை அடையச் சொல்லி
இப்படி உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கப் பாராய் -என்று தம் திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –
ஆறு கிண்ணகம் எடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறியுண்டு போய் கடலிலே புகும் -நீர் வஞ்சி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும் –
அது போலே பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை –
அவன் திருவடிகளிலே தலை சாய்த்து பிழைக்க வாராய் -நெஞ்சே -என்கிறார் –
உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடரடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார் –
அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -என்னுமா போலே இளைய பெருமாளை -நீர் இவர்க்கு என்னாவீர் என்ன
பெருமாளும் ஒரு படி நினைத்து இருப்பர் -நானும் ஒரு படி நினைத்து இருப்பேன் -என்றார் –
அவர் நினைத்து இருக்கும் படி என் -நீர் நினைத்து இருக்கும் படி என் -என்ன
அவர் தம் பின் பிறந்தவன் என்று இருப்பர் -நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனே இருப்பன் -என்றார் இறே
அப்படியே இவரும்-உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடர் அடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார்
இவர் தாம் முற்பட குணங்களிலே இழிவான் என் என்னில் -தாம் அகப்பட்ட துறை அதுவாகையாலே இவரை குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது –
———————
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவ்ன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-
—————-
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் –
பகவத் ஆனந்தத்தைப் பேசப்புக்க வேதங்கள்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி-ப்ரஹ்ம ஆனந்தத் அளவும் சென்று
பின்னையும் அவ்வருகே உத்ப்ரேஷித்துக் கொண்டு சென்று -பின்னையும் -பரிச்சேதிக்க மாட்டாதே
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டவன இறே –
இது ஆனந்த குணம் ஒன்றிலுமே இறே –
குணங்கள் எல்லாம் இப்படியே இறே இருப்பது -இக் குணங்கள் எல்லாம் தமக்கு நிலமாய் பேசுகிறாரே இவர் –
உயர்வு -வருத்தம் –
எல்லாருக்கும் உயர்த்தி உண்டாம் போது வருத்தம் உண்டு -அப்படி வருந்த வேணுமோ -என்றால் உயர்வற உயரா நிற்கும்-
இத்தைப் பற்ற விறே ஆளவந்தார் -ஸ்வா பாவிக -என்று அருளிச் செய்த சந்தை –
பகவத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகதமான சர்வ பிரகாரத்தாலும் உண்டான உச்சராயத்தை -உயர்வு -என்கிறது –
அற –
இன்றியிலே ஒழிய -இத்தால் அத்யந்தா பாவத்தைச் சொல்லுகிறது அன்று -பின்னை என் சொல்லுகிறது என்னில் –
தன்னுடைய உச்சாரத்தையும் இவற்றையும் பார்த்தால் -ஆதித்ய சந்நிதியில் நஷத்ராதிகளைப் போலேயும் –
மேரு சிகரத்தில் நின்றவனுக்கு கீழ் உள்ள சர்ஷ பாதிகள் இருக்குமா போலேயும்
உண்டாய் இருக்கச் செய்தே இல்லை என்னலாம் படி இருக்கை –
இப்படி அல்லாதவற்றை இல்லை என்னலாம் படி பண்ணினால் தனக்கு ஓர் எல்லை உண்டாய் இருக்குமோ என்னில்
உயர் –
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும் அவ்வருகாய்க் கொண்டு வாங் மனஸ்ஸூக்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி உயரா நிற்கும் —
ஆனால் சர்வேஷா யாந்தா நிசயா பத நாந்தாஸ் சமுச்சரயா சம்யோகா விப்ரயோ காந்தா மரணாந்தஞ்ச ஜீவிதம் -என்கிறபடியே
இருக்கிறதோ என்னில் -அன்று -இயத்தாரா ஹித்யத்தைச் சொன்னபடி –( அளவிட்டுக் கூற இயலாத படி உயர்ந்தே இருக்கும் -)
இப்படி கரை கட்டாக் காவேரி போலே பரந்து இருந்தால் இப்பரப்பு எல்லாம் -பிரயோஜனமாய் இராதே காடு பட்டு கிடக்குமோ என்னில் –
நலம் –
கண்ட இடம் எங்கும் பயிர் பட்டு இருக்கும் நிலம் போலே எங்கும் ஒக்க உபாதேயமாய் இருக்கும்
நலம் -என்று ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லுதல் -என்னுதல்
குண சமூஹத்தை சொல்லுகிறது -என்னுதல்
ஆனந்தாவஹமான விபூதியைச் பற்றிச் சொல்லுகிறது -என்னுதல் –
உடையவன் –
இக் குணங்கள் தன்னை அஸ்தி -என்று விடும் அளவன்றிக்கே இவற்றையிட்டு நிரூபிக்க வேண்டும்படியாய் இருக்கும் –
அதாவது ஆகந்துகம் -அன்றிக்கே ஸ்வரூப அநு பந்தியாய் -இருக்கும் -என்றபடி
ஆழ்வான்-பிள்ளை பிள்ளையைப் பார்த்து நிர்க்குணம் என்பார் மிடற்றை பிடித்தாற் போலே –
ஆழ்வார் நலம் உடையவன் -என்றபடி கண்டாயே -என்று பணித்தான் –
இத்தால் சமஸ்த கல்யாண குணாத் மகோசௌ-என்றபடி
வர்ஷாயுதை -இத்யாதி -என்றும்
தாதூநாமிவ சைலேந்த்ரோ குணா நாமா கரோ மஹான்-என்றும்
பஹவோ ந்ருப கல்யாண குண கணா புத்ரச்ய சந்தி தே-என்றும்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண –ஸ்தோத்ர ரத்னம் -11-இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் சந்தை –
இப்படி குணங்கள் கரை புரண்டு இருந்தால் இக் குணங்களாலே தனக்கு நிறமாம் படி இருக்குமோ திவ்யாத்ம ஸ்வரூபம் என்னில் –அங்கன் இராது –
அஸ் ஸ்வரூபத்தை பற்றி குணங்களுக்கு நிறம் பெற வேண்டும்படி இருக்கும் என்று ஸ்வரூப வைலஷண்யத்தைச் சொல்லுகிறது –
யவன் -என்று –
யதா சைந்தவகந- (உப்புக் கட்டி உள்ளும் வெளியிலும் உப்பாகவே இருப்பது போலே -ஞான மயமாகவே உள்ளவன் ) பிரமாண பிரசித்தியைப் பற்ற -யவன்-என்கிறார் –
இத்தால் குண நிரபேஷமான ஸ்வரூப பிரசித்தியைச் சொல்லுதல் –
குண விசிஷ்டமான ஸ்வரூப வைலஷண்யத்தைச் சொல்லுதல் –
அவன் –
இதுக்கு அவ்வருகே ஒரு உபகாரத்தைச் சொல்ல நினைத்து -கீழ் நின்ற நிலையை அமைத்து மேலே தோள் படி கொள்ளுகிறார்
அந்த உபகாரம் தான் ஏது என்னில்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன் –
மயர்வற —
ஜ்ஞான அநு தயம் -அந்யதா ஜ்ஞானம் -விபரீத ஜ்ஞானம் –என்கிற இவை வாசனையோடு போம்படியாக –
ஜ்ஞான அநு தயமாவது –தேஹாத்ம அபிமானம் –
அந்யதா ஜ்ஞானம் ஆவது -தேவதாந்திர சேஷம் என்று இருக்கை –
விபரீத ஜ்ஞானமாவது -ஸ்வ தந்த்ரமாகவும் ஸ்வ போக்யமாகவும் நினைத்து இருக்கிற கேவலனுடைய ஜ்ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
தம் வாயாலே -மயர்வற -என்று சொல்லலாம் படி கானும் அவன் தான் இவர்க்கு அஜ்ஞ்ஞானத்தை வாசனையோடு போக்கின படி
மதி நலம் –
ஜ்ஞான பக்திகள் இரண்டையும் தந்தான் -என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அன்றிக்கே –நலமான மதியைத் தந்தான் -என்றாய் -முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பதார்த்தம் போலே -( கருங்காலி மரம் போலே )
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தைத் தந்தான் என்கிறார் -என்று பட்டர் அருளிச் செய்யும் படி –
கர்ம ஜ்ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்திலே பகவத் பிரசாதமாய்
அநந்தரம்-கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான பக்தியாயிற்று இவரது —
ஆழ்வார் பிரபன்னரோ -பக்தி நிஷ்டரோ -என்று எம்பாரை சிலர் கேட்க –
ஆழ்வார் பிரபன்னர் -பக்தி இவருக்கு தேக யாத்ரா சேஷம் –என்று அருளிச் செய்தார் -என் போலே என்னில்
நாமும் எல்லாம் பிரபன்னராய் இருக்கச் செய்தே ஆண்டாறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் -6-7-1-இ றே இவர்க்கு –
அருளினன் –
நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு நம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே –
அருளினன் –
இத்தால் அர்த்திக்க வன்றிக்கே-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
தாதுபிரசாதான் மஹிமா நமீசம் -தைத்ரியம் -என்கிறபடியே நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
இத்தலையில் நினைவு இன்றிக்கே இருக்க வந்து அருளினவன் –
-தன்னருள் கொள்வார் இல்லாதான் ஒருவனோ என்னில் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –
தான் அருளாத வன்று சத்தை இன்றிக்கே இருப்பாரை ஒரு நாடாக யுடையவன் –
அயர்வாகிறது -விச்ம்ருதி-அது இன்றிக்கே இருப்பவர்கள் –ப்ராகபாவத்தைப் பற்றச் சொல்கிறது -பிரத்வம்சா பாவம் உண்டு இ றே முக்தர்க்கு –
அமரர்கள் –
பகவத் அனுபவ விச்சேதத்தில் தாங்கள் உளர் அன்றிக்கே இருக்குமவர்கள் –
ந ச சீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ -என்கிறபடியே –
அமரர்கள் –
த்ரிபாத் விபூதி யோகத்தைப் பற்றச் சொல்கிறது
பரம சாம்யா பன்னராய் இருக்கையாலே ஓலக்கம் இருந்தால் யாயிற்று அவர்களுக்கும் அவனுக்கும் வாசி அறியலாவது –
பிராட்டிமாராலே யாதல் -ஸ்ரீ கௌஸ்து பாதிகளாலே யாதல் -சேஷி என்று அறியும் இத்தனை —
ஆனால் இப்படி இருக்கிற அவர்கள் பலராய் தான் ஒருவன் ஆனால் இவர்களை அனுவர்த்தித்துக் கொண்டு தன்னுடைய சேஷித்வமாம் படி இருக்குமோ -என்னில்
அதிபதி –
அவர்களுக்கும் தொட்டுக் கொள் தொட்டுக் கொள் என்ன வேண்டும்படி ஆனைக்கு குதிரை வைத்து அவ்வருகாய் இருக்கும் என்னுதல்-
ஸ்வாமி வாசகம் -என்னுதல்
இதுக்கு அவ்வருகே விக்ரஹ வைலஷண்யம் சொல்ல ஒருப்பட்டு கீழே நின்ற நிலையைக் குலுக்கி -அவன் என்று அவ்வருகே போகிறார்
துயர் அறு-
துயர் அறுக்கும் என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி
சமஸ்த துக்காப நோதன ஸ்வ பாவமான திருவடிகள் சகல ஆத்மாக்களுடையவும் துக்கத்தைப் போக்குகையே ஸ்வ பாவமான திருவடிகள்
துயர் அறு சுடர் அடி -என்று எம்பெருமானார் அருளிச் செய்யும் படி வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்றால் துக்க நிவ்ருத்தியும் அவனதாய் இருக்கும் இ றே
இவர் துயர் அற-தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை-
இத்தால் இவன் மயர்வற -அவன் துயர் அற்றபடி –
சுடரடி –
நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தைச்
சொல்கிறது –
சுடர் –
பஞ்ச சக்திமயமான புகரைச் சொல்லுகிறது
அடி –
சேஷபூதன் பக்கல் சேஷி கணிசிப்பது திருவடிகளை இ றே-
ஸ்தனன்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே இவரும் உன் தேனே மலரும் திருப் பாதம் –1-5-5-என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்
தொழுது –
நித்ய சம்சாரியாய்ப் போந்த இழவு எல்லாம் தீரும்படி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயித்து
எழு-
அசநேவ ச பவதீ -என்னும் நிலை கழிந்து -சந்தமேனம் ததோ விது-என்கிறவர்கள் கோடியிலே என்னலாம் படி உஜ்ஜீவிக்கப் பார் –
அடியிலே தொழாமையாலே வந்த சங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது உஜ்ஜீவிக்கப் பார் –
என் மனனே –
இப்போது ஆயிற்று தம்மைக் கண்டது
அருளினான் என்று நின்ற இத்தனை இ றே முன்பு
இருவர் கூடப் பள்ளியோதி இருந்தால் -அவர்களில் ஒருவனுக்கு உத்கர்ஷம் உண்டானால் மாற்றையவன் தனக்கு
அவனோடு ஒரு சம்பந்தத்தைச் சொல்லிக் கிட்டுமா போலே
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா-என்கிறபடியே நெடுநாள் பந்த ஹேதுவாய் போந்தது
இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே-அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப் பட்டு -என் மனனே -என்கிறார் –
பாட்டை முடியச் சொல்லி -அவன் -என்ன அமையாதோ -அடி தோறும் சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில்
இவர் தம் இத் திருவாய்மொழி தன்னில் ஈச்வரத்வம் ஆயிற்று பிரதிபாதிக்கிறது
அந்த ஈச்வரத்வதுக்கு ஒரோ குணங்களே நிரபேஷமாக போந்து இருக்கையாலே சொல்லுகிறது –
உயர்வற யுயர்நலம் யுடையவன் -எவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்-என்றும்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் -அவன் -அமரர்கள் அதிபதி -என்றும்
அமரர்கள் அதிபதி எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும் இங்கனே வாக்யைக வாக்ய பாவத்தாலே யோஜிக்கவுமாம் –
அன்றிக்கே
உயர்வற யுயர்நலம் யுடையவன் -எவன்-அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும்
அமரர்கள் அதிபதி எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும்–வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம் –
நம புரஸ்தாதத புருஷ்ட தஸ்தே-ஸ்ரீ கீதை -11-30 கண்ணா உனக்கு முன் பக்கமும் பின் பக்கமும் நமஸ்காரம் என்றால் போலே –
ஆனால் -உயர்வற உயர்நலம் உடையவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி –மயர்வற மதி நலம் அருளினன்-என்ன வேண்டி இருக்க —
உயர்வற உயர் நலம் உடையவன் -என்ற அனந்தரம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று அவ்வளவும் போக மாட்டாமை -உபகார ச்ம்ருதியாலே
– மயர்வற மதி நலம் அருளினன் -என்கிறார்
குணம் இல்லை விக்ரஹம் இல்லை விபூதி இல்லை -என்று சொல்லுகின்றவர்கள் எல்லாரும் நிரஸ்தர் இப்பாட்டாலே —
அவர்களை எதிரிகள் ஆக்கிச் சொல்ல வேண்டா விறே- ஸ்வ பஷத்தை ஸ்தாபிக்கவே பர பாஷம் நிரஸ்தமாம் இறே -நெல் செய்யப் புல் தேயுமா போலே தன்னடையே நிரஸ்தர் ஆவார்கள் இ றே அவர்கள் –
உயர்வற உயர்நலம் உடையவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்கையாலே பிராப்ய வேஷம் சொல்லிற்று –
மயர்வற -என்கையாலே -விரோதி போனபடி சொல்லிற்று –
அருளினன் -என்கையாலே -அவனே சாதனம் என்கிறது –
தொழுது எழு -என்கையாலே பிராப்தி பலமான கைங்கர்யத்தைச் சொல்லிற்று –
என் மனனே -என்கையாலே பரி ஸூ த்த அந்த கர்ணனே அதிகாரி -என்னும் இடம் சொல்லுகிறது –
———————————————————————————————-
அவதாரிகை –
யதோ வா இமானி -இத்யாதி ஸ்ருதி பிரக்ரியையாலே –தைத்ரியம் -கார்ய ஆகாரமான ஜகத்தை பிடித்து -ஜகத் காரண வஸ்து உபாஸ்யம் -என்னுதல் –
அன்றிக்கே –
ஸ்வரூபத்தை முற்படச் சொல்லி -பின்னை விபூதியில் போருதல் செய்யாதே முற்படக் குணங்களிலே இழிவான் என் என்னில்
சர்வேஸ்வரன் தம்மை வசீகரித்தது குணங்களைக் காட்டி ஆகையாலே தாம் அகப்பட்ட துறையிலே முற்பட இழிந்து பேசினார் —
அக்குணங்கள் தான் ஸ்வரூபத்தைப் பற்றி யல்லது இராமையாலே -அவற்றுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை –
அவன் -என்று பிரசங்கித்தார் -முதல் பாட்டில் —அங்கு பிரஸ்துதமான-திவ்யாத்ம ஸ்வரூபம் –
ஹேய பிரத்ய நீகதையாலும் -கல்யாணகுணகதா நதையாலும் சேதன அசேதன விலஷணமாய் இருக்கும் என்று
அந்த ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் இப்பாட்டில் –
மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–
மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணரளவிலன் –
ஜீவாத்மா ஸ்வரூபத்தில் பகவத் ஸ்வரூபம் விலஷணம்-என்கிறார் –
ஆனால் மனனகம் -என்று தொடங்கிச் சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில் –
ஸ்வரூப வைலஷண்யத்தை அனுபவிக்கிற இவருடைய பிரதிபத்தி க்ரமம்-இருக்கிறபடி –மனன் -என்றது -மனம் -என்றபடி –
அகம் -நிரவவயமாய் இருக்கிற மனஸ் ஸூ க்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே -மனனகம் -என்றது -மனசிலே -என்றபடி –
அன்றியே –
பராகர்த்த விஷயமாயும் -பிரத்யகர்த்த விஷயமாயும் போருகையாலே -பராகர்த்தத்தைத் தவிர்ந்து –
பிரத்யகர்த்த விஷயமானத்தை அகம் -என்கிறது ஆகவுமாம்-உட் பொ ருளிலே செல்லும் மனம் என்றபடி –
மலமற –
மனனகத்தில் உண்டான மலங்கள் -உண்டு -அவித்யாதிகள் -அவையாவன –
காம க்ரோதச்ச லோபச்ச ஹர்ஷ மாநமதா குணா விஷாதச் சாஷ்டம ப்ரோக்த இத்யேத மநஸோ மலா –என்று
ஆத்ம ஸ்வரூபமும் நித்யமாய் -ஜ்ஞானமும் நித்யம் ஆகையாலே -இத் தோஷம் ஸ்வரூப கதமுமல்ல – -ஜ்ஞான கதமுமல்ல
ஆத்மாவினுடைய தர்மபூத ஜ்ஞானதிற்கு உதய அச்த்மதய வ்யவஹாரம் பண்ணுகிறது -ஜ்ஞான ப்ரஸ்ருதி த்வாரத்தைப் பற்ற வாயிற்று –
ஆக -ஜ்ஞான ப்ரஸ்ருதி த்வாரமான மனசைப் பற்றிக் கிடக்கிற தோஷமானது-
யோக சாஸ்த்ரத்திலே சொல்லுகிற கிரமத்திலே பாஹ்ய விஷய பிரவணமான நெஞ்சை பிரத்யக் விஷயமாக்கி
-யம நியமாதி -யமம் -நியமம் -ஆசனம் -ப்ராணாயாம் பிரத்யாகாராம் தாரணை தியானம் சமாதி –
அஷ்ட அங்கங்கள் – க்ரமத்தாலே அனுசந்திக்கப் புக்கவாறே கழியக் கடவது –
அற-என்றது
அறவற -என்றபடி
அநந்தரம் –
மலர் -விகசிதமாய்
மிசை -மேல் நோக்கி
எழுதரும் -கொழுந்து விட்டு மேல் மேல் எனக் கிளரா நின்றுள்ள
மனன் உணர்வுண்டு –மானஸ ஜ்ஞானம்
இப்படி விகசிதமாகக் கொழுந்து விட்டு மேல் மேல் எனக் கிளரா நின்றுள்ள மானஸ ஜ்ஞான கம்யமாய் இருக்கும் -ஆத்மா –
அளவிலன் –அதின் அளவல்லன் ஈஸ்வரன்
மானஸ ஜ்ஞான கம்யமாய் இருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபம் -பகவத் ஸ்வரூபம் அங்கன் இராது என்றதுக்கு கருத்து என் என்னில்
ஏகேந்த்ரிய கிராஹ்யத்வமும் இல்லை -என்கை
பொன்னுக்கும் கரிக்கும் அத்யந்தம் வைஷம்யம் உண்டாய் இருக்கச் செய்தே க்ரஹிக்கைக்கு சாமக்ரி ஒன்றாய் இருக்கும் இ றே
அப்படி ஏக பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை -என்கை –
ஆனால் மநஸா து விசுத்தேன-என்று பரிசுத்தமான அந்த கரணத்தாலே கிரஹிக்கலாம் என்னா நின்றது இ றே அத்தோடு விரோதியாதோ வென்னில்
நேதி நேதி -என்று கிரஹிக்கும் அத்தனை அல்லது ஈத்ருக்த்தயா இயத்தையா பரிச்சேதித்து க்ரஹிக்கப் போகாது என்கை
முதலிலே ஞான விஷயம் அன்று என்னில் துச்சத்வம் வரும் இ றே-
அணு த்ரவ்யத்தை கிரஹிக்குமா போலே விபுத்ரவ்யத்தைக் கிரஹிக்கப் போகாது என்கை-
பொறி உணர்வு யவை இலன் –
பொறி -என்று சஷூராதி கரணங்கள்-அவற்றால் அறியப்படும் பதார்த்தங்களின் படி அல்லன் –
யமாத்ம ந வேத யம் பிருதிவி ந வேத -என்கிறபடியே –
இவ்வோபாதி ஜீவாத்ம ஸ்வரூபத்தில் விலஷணன் என்றதும் என்கை –
ஜாத்யந்தன் பதார்த்த தர்சனம் பண்ணிற்றிலன் என்பதுவும் -கண்ணில் வைசத்யமுடையவனும் கண்டிலன் என்பதும் -காணாமை இருவருக்கும் ஒக்கும் இ றே –
அப்படியே அசித் விலஷணன் என்றவோவாதி சித் விலஷணன் என்றதவும் என்கைக்காகச் சொல்கிறது –
இப்படி உபய விலஷணனாய் இருக்குமேயாகில் அவனைப் பிரதிபத்தி பண்ணும் படி என் என்னில்
இனன் –
ஏவம் விதன்-என்னும் இத்தனை – -உக்தத்தை சொல்லவுமாம் -வஹ்ய மாணத்தைச் சொல்லவுமாம் –
எப்படிப்பட்டவன் என்னில் –
உணர் முழு நலம் –
உணர்வு -என்று ஜ்ஞானம் –நலம் என்று ஆனந்தம் -முழு -என்று இரண்டு இடத்திலும்
கட்டடங்க ஞானமுமாய் கட்டடங்க ஆனந்தமுமாய் இருக்கும்
இத்தால் ஸ்வரூபத்தில் அப்ரகாசமாயாதல் –அனநுகூலமாயாதல்-இருக்கும் இடம் இல்லை -என்கை
அன்றிக்கே –
ஆனந்தம் ஆகிறதும் ஞான விசேஷம் ஆகையாலும் ஆனந்தத்தைச் சொன்ன போதே ஜ்ஞானத்தையும் சொல்லிற்றாய் வரும் இ றே
புனர் உகத தோஷம் வாராது
ஆகையால் -இனன் உணர் முழு நலம் –
நேர் கொடு நேர் தன்னை அறியப் போகாமையாலே -என்றும் ஒக்க -இனனாலே -உபமானத்தாலே -அறியப் படுமவனான முழு நலமாய் இருக்கும்
யதா சைவந்தவகன -என்கிறபடி நிரதிசய ஆனந்த மயமாய் இருக்கும் –
ஆனந்தோ ப்ரஹ்ம -என்றும் ஆனந்த மய-என்றும் சொல்லக் கடவது இ றே –
எதிர் நிகழ கழிவினும் இனன் இலன்
காலத்ரயத்தாலும் இனன் உண்டு -ஒப்பு -அது இல்லாதவன் –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயமே யாயிற்று நம் தர்சனத்துக்கு உள்ளவை –
அதில் சித் அசித் விலஷணம் முன்பே சொல்லிற்று
இங்கு சொல்லிற்றாகிறது என் என்னில்
திரள் ஒப்பு இல்லையாகில் ஒரு வகையாலே தான் ஒப்பு உண்டோ என்னில் -அதுவும் இல்லை என்கிறது -என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அங்கன் அன்றிக்கே
பட்டர் -சாதர்ம்ய திருஷ்டாந்தம் -ஒத்த தர்மங்கள் உடைய பொருள்கள் -இல்லை என்றது முன்பு –
வைதர்ம்ய திருஷ்டாந்தம் -வேறு பட்ட தர்மங்களை உடைய பொருள்கள் -இல்லை என்கிறது இங்கு -என்று –
வைதர்ம்ய திருஷ்டாந்தத்துக்கு உதாஹரணம்
ந பரேஷூ மஹௌ ஜசச் சலாதப குர்வந்தி மலிம்லுசா இவ -சிறந்த வீரர்கள் விரோதி விஷயத்தில் திருடர்கள் போன்று வஞ்சனை செய்ய மாட்டார்கள் –
எனன் உயிர் –
இப்படி இருகிறவன் எனக்கு தாரகன் –யச்யாத்மா சரீரம் -என்கிறபடி -இத்தத் தனக்கு சரீரமாகக் கொண்டு –
தான் சரீரியாய் -தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவது ஓன்று இ றே
மிகுநரையிலனே –
மிக்காரை உடையன் அல்லன் –
தான் ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு -தாரகனாய் நியமகனாய் இருக்குமா போலே –
தன்னையும் நியமிக்கக் கடவதொரு வஸ்த்வந்தரம் உண்டோ வென்னில் –
தனக்கு மேற்பட்டாரை உடையான் அல்லன் —
ந தத் சமச்ச அப்யதிகச்ச த்ருச்யதே -என்னுமா போலே
மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணர்வு அளவிலன்-பொறி உணர்வு யவை இலன் –
-எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் -மிகுநிரையிலன் -உணர் முழு நலம் -இனன் எனன் உயிர் -என்று அந்வயம்
அன்றிக்கே
என் உயிரானவன் துயர் அடி தொழுது எழு என் மனனே -என்று கீழ்ப் பாட்டோடு அந்வயம் –
———————————————————————————————–
அவதாரிகை –
முதல் பாட்டிலே –
பிரதான்யேன கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –விக்ரஹ வை லஷண்யத்தையும் அனுபவித்து –
அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சித் அசித் விலஷணமுமாய்-உபமான ரஹிதமுமாய் இருக்கும் என்று
இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து நின்றார் –
அவற்றோடு சேர் ஓர் கோவையாய்த் தோற்றும் இ றே -ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் இவர்க்கு –
நோ பஜநம் ஸ்மரன் நிதம் சரீரம் என்னா நிற்கச் செய்தே -ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் உத்தேச்யம் ஆகா நின்றது இ றே முக்தனுக்கு
இவருக்கும் கர்ம நிபந்தனமான ஆகாரம் கிடக்கச் செய்தே -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையால்ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார் –
ராஜாக்களுக்கு நாடு எங்கும் செல்லா நிற்கச் செய்தே மகிஷிகளும் தாங்களுமாக சில பூம் தோட்டங்களுக்கு குடிநீர் வார்த்து -ஆக்குவது அழிப்பதுமாய் -லீலா ரசம் அனுபவிக்குமா போலே
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெரும்தேவுடை மூவுலகு -6-3-5- என்கிறபடியே
சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாய் கடாஷித்த போது வுண்டாய்-இல்லையாகில் இல்லையாய்-
அவர்களுக்கு லீலா ரச விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார்
இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-
இலனது உடையனிது என நினைவரியவன்
அது இலன் -இது உடையவன் -என நினைவு அரியவன் –
அநு பூதமாய் இருப்பதொன்ற்றைச் சொல்லி -அது இலன் என்றவாறே -அது ஒழிந்தத்தை உடையவன் என்று தோற்றும் –
ஒன்றைக் காட்டி இத்தை உடையவன் என்றவாறே இது ஒழிந்தது இல்லையாய் தோற்றும் –
இலனது –என்றால் பரிச்சின்ன விபூதிகனாம் –
உடையன் இது என்றால்-இது ஒழிந்தது இல்லாமையாலே அல்ப விபூதிகனாம் –
இரண்டு வழி யாலுமாக ஐஸ்வர்யம் குறைந்து தோற்றும்
என
இப்படி இருக்கும் என –
நினைவரியவன் –
அனுப பந்தங்களைச் சேர்த்து நினைக்கலாம் இ றே
ஓர் ஊசி நிற்கிறதாகவும் -அதின் மேல் கலசம் இருக்கிறதாகவும் -அதின் மேல் சால் -நெல் –இருக்கிறதாகவும் –
அதின் மேலே மகா மேரு இருக்கிறதாகவும் -இப்படி அனுப பந்தகங்களைச் சேர்த்து நினைக்கலாம் இ றே
இப்படியேதான் மநோ ரத்தத்துக்கு விஷயமாய் இருக்குமோ என்னில் மநோ ரத சமயத்திலும் பரிச்சேதிக்க அரியனாய் இருக்கும் –
ஆனால் இவனது ஐஸ்வர்யம் பேசும்படி தான் என் என்னில் –
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன் –
பதிம் விச்வஷ்ய -என்னும் இத்தனை –
நிலனிடை -என்கிற இது பாதாளத்து அளவும் நினைக்கிறது
விசும்பிடை -என்கிற இது பரம பதத்துக்கு இவ்வருகு உள்ளதை எல்லாம் நினைக்கிறது
உருவினன் -உருக்களை உடையவன் -சரீரங்களை உடைய சேதனர்கள் உடையவன் –
-அருவினன் -அருக்களை உடையவன் –
இனன் -என்ன -உடையவன் என்று காட்டுமோ என்னில்
காராயின காள நன் மேனியினன்-9-3-1-என்றால் -மேனியை உடையவன் என்று காட்டுமா போலே
ஆக கீழ் மேல் உண்டான சேதன அசேதனங்களை உடையான் என்றபடி –
இத்தால் ப்ராதேசிகமான ஐஸ்வர்யம் உடையவர்களது அன்று லீலா விபூதி -சர்வாதிகனது -என்கை
இப்படி சர்வத்தையும் உடையவனாய் -தான் போகத்தில் அந்ய பரனாய் கோயில் சாந்து பூசி நித்ய விபூதியிலே இருக்குமோ என்னில்
புலனொடு புலன் நலன் ஒழிவிலன் –
புலனொடு –
இவை பட்டத்தை தானும் பட்டு -உடன்கேடாய் நின்று நோக்கும் என்கிறது –
புலன் -என்கிறது புலப்படும் பதார்த்தங்களை
த்ருச்யதே ச்ரூயதேபி வா -என்கிறபடியே பிரமாண் கோசரங்களான பதார்த்தங்களை
ஓடு –
தத் த்ருஷ்ட்வா என்கிறபடியே -இவற்றை உண்டாக்கி ஜீவத்வாரா அனுப்ரவேசித்து பின்னை இவற்றுக்கு வஸ்த்துத்வ நாம பாக்த்வங்கள்
உண்டாம் படி பண்ணி -அந்த பிரவிஷ்டாச் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்கிறபடியே சர்வாத்ராந்தராமாவாய் நிற்கும்படியைச் சொல்கிறது
ஆனால் பின்னை தான் சர்வாத்மாவாய் நின்றால் அசித்தினுடைய பரிணாமாதிகளாதால்-சேதனருடைய ஸூகித்வ துக்கிதங்களாதல் தனக்கு
ஸ்பர்சிக்கும் படி இருக்குமோ என்னில்
புலனலன் –
தத் தர்மா வல்லன் –
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாயா வ்ருஷம் பரிஷஸ் வஜாதே தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத் வத்த்ய நச் நன் நன்யோ அபிசாக தீதி -என்று
முண்டக உபநிஷத் –மரம் -உடல் –ஜீவாத்மா பரமாத்மா இரண்டு பறவைகள் –பலத்தை ஜீவன் மட்டுமே அனுபவிக்கிறான் -என்கிறது தான்
ஓட்டற்று நின்று விளங்கா நிற்கும்
ஒழிவிலன் பரந்த
ஒரு வஸ்துக்கள் ஒழியாமே இப்படி வியாபித்து இருக்கும் -என்னவுமாம்
அன்றிக்கே
கால பாரமாக்கி எக்காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும் என்னவுமாம் –
அந் நலனுடை ஒருவனை
கீழ் இரண்டு பாட்டாலும் சொன்ன குண விசிஷ்ட ஸ்வரூபத்தை நினைத்து அந் நலனுடை ஒருவனை -என்கிறார்
நணுகினம் –
மயர்வற மதி நலம் அருளினன்-என்கிற ஞான மாத்ரம் அன்றிக்கே கிட்டப் பெற்றோம்
நாமோ
இது பொய்யோ -கிந்து ஸ்யாத் சித்த மோஹோயம்-இது ஏதேனும் பிரம ஸ்வப்நாதிகளோ என்றால் போலே
இவர் ஈச்வரோஹம் என்றால் போலே அவனுக்கும் குடி வாங்க வேண்டும்படியாய் இ றே இருப்பது
அஹம் என்றால் அவன் அளவிலே பர்யவசிக்க வேண்டும்படியாய் இருக்க -தேஹத்து அளவிலே யாம் படியாய் இ றே முன்பு போந்தது
மன்யே ப்ராப்தாஸ் ஸ்ம தம் தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -கைகேயி ராஜன் என்று சம்போதிக்கும்படி பிறந்து
ஸ்ரீ பரத்வாஜ பகவான் -அவள் மகனாய் கீழ் வயிற்றுக் கழலை அறுக்க வருகிறானோ –என்று கச்சினன துஷ்டோ வ்ரஜசி என்னும்படியான நான்
அவன் சொன்ன ஆஸ்ரமத்திலே புகுந்தேனோ என்று சங்கியா நின்றான் என்றான் இ றே –
வா நராணாம் நாரணாஞ்ச கதம் ஆஸீத் சமாகம -காட்டிலே வர்த்திக்கக் கடவ குரங்குகளும் நாகரீகரான சக்கரவர்த்தி பிள்ளைகளுக்கும்
ஒரு சேர்த்தி உண்டான படி எங்கனே -என்ன –
ராம ஸூ க்ரீவயோர் ஐக்யம் தேவ்யேவம் சம்ஜாயாத -பெருமாளும் மகா ராஜரும் சேர்த்த சேர்த்தி -பின்னே பிறந்த இளைய பெருமாள் நிற்க –
அடியேன் அந்தப்புர கார்யத்துக்கு வரும்படியாய் இ றே -நாமும் இங்கனே கூடிக் கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை –
நாமே
இவ்வனுபவத்துக்கு புறம்பான –
பகவத் கந்த ரஹிதரான நாம் –
நாமே
இது பொய்யோ
——————————————————————————————-
அவதாரிகை –
கீழில் பாட்டிலே -ததீயத்வ ஆகாரத்தாலே அவன் குனங்களோபாதி உத்தேச்யமாகத் தோற்றுகையாலே-லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
இனி மேலில் பாட்டுக்கள் எல்லாம் லீலா விபூதி விஷயமாய் இருக்கிறது –
நித்ய விபூதியில் வந்தால் -அவ்விபூதி பாவஜ்ஞமாய் -அவனுடைய சந்தத்தைப் பின் செல்லுமதாய் இருக்கும் –
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப -4-9-10–என்னும்படி யாய் இ றே இருப்பது
கர்ம நிபந்தனமான அசித் சம்சர்க்கத்தோடே கூடி -ஈஸ்வர சங்கல்பத்தை பின் செல்லுமதாய் இருக்கும் இந்த விபூதி –
அந்த விபூதியில் வந்தால் அவ்விருப்பு கண்டு உகக்கும் அதுக்கு அவ்வருகு ஒன்றும் இல்லை –
அந்ய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்த்ர்யங்கள் நடையாடுகிறது இவ்விபூதியில் ஆகையாலே –
இரண்டையும் தவிர்த்து -பகவத் அதீநம் என்று சொல்ல வேண்டுவது இங்கே யாய் இருந்தது –
இனி ஒரு மூன்று பாட்டாலே
இதினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் அதீனமாய் இருக்கும் என்று
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் சரீராத்மா பாவம் என்று
குத்ருஷ்டிகளை நிரசித்து –
சூன்ய வாதியை நிரசித்து –
வ்யாப்தி சௌகர்யத்தைச் சொல்லி
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார்
அதில் ஸ்வரூபம் அவன் அதீநம் என்றார் -இப்பாட்டில் -அது ஆகிறபடி -எங்கனே என்னில் –
சிருஷ்டி காலத்தில் வந்தவாறே இவற்றை உண்டாக்கி –ஜீவத்வாரா அனுப்ரவேசித்து -வஸ்துத்வ நாம பாக்த்வங்களும் உண்டாம் படி பண்ணியும்
இது அடங்கலும் அழிந்த வன்று சத்யவச்த பிரபை போலே தன பக்கலிலே ஸூ ஷ்ம ரூபேண கிடக்கும் படி ஏறிட்டுக் கொண்டு தரித்தும்
காரண தசையோடு கார்ய தசையோடு வாசி அற தன்னைப் பற்றி ஸ்வரூப ஸ்தித்யாதிகளாம் படி
இருக்கையாலே ஸ்வரூபம் அவன் அதீநம் என்கிறது –
அதில் -லோகத்தில் சகல பதார்த்தங்களையும் தனித் தனியே சொல்லி
-இதனுடைய ஸ்வரூபம் அவனாலே -இதனுடைய ஸ்வரூபம் அதனாலே -என்னில் பணிப்படும் இறே ஜீவா அனந்த்யத்தாலே-
இனி பிரயோஜகத்தில் சொல்லிவிடும் அன்று பிரதிபத்திக்கு விஷயம் ஆகாது –
ஆகையாலே -தேவாதி பதார்த்தங்களை நாலு மூன்று வகையாலே சேர்த்து அவற்றினுடைய ஸ்வரூபம் அவன் அதீநம் -என்கிறார் –
பெண்பால் -3-ஆண்பால் -3-பலவின்பால் -3-ஒன்றன்பால் -1-
அழியக் கூடியவை -1-நன்மை தீமை -1-கால பேதம் -1- ஆக 7-என்பதால் நான்கு மூன்று வகையாகச் சேர்த்து என்கிறார்
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-
நாம் அவன் இவன் உவன் எவன் –
நான் என்றும் நாம் என்றும் -யான் என்றும் யாம் என்றும் தந்தாமைச் சொல்லக் கடவது
சந்நிஹிதம் என்ன -தூரஸ்தம் என்ன -அதூரவிப்ரக்ருஷ்டம் என்ன -வினவப் படுகிறது –என்ன –
அவள் இவள் உவள் எவள் –
ஸ்திரீ லிங்க நிர்திஷ்ட வஸ்துக்களைச் சொல்லுகிறது –
தாம் அவர் இவர் உவர்
பாஹூ மந்தவ்யரை –
அது விது வுது வெது –
நபும்சக லிங்க நிர்திஷ்ட வஸ்துக்களைச் சொல்லுகிறது
வீமவை யிவை வுவை அவை –
நச்வர பதார்த்தங்கள் –
நலம் தீங்கிவை-
நன்மை தீமை -என்னுதல்
நன்றானவை தீதானவை -என்னுதல் –
ஆமவை யாயவை –
கழிந்த வற்றிலும் -வருமவற்றிலும் அடைப்புன்னும் இ றே வர்த்தமானம் –
ஆய நின்ற
ஆய நின்ற பதார்த்தங்கள்
இவற்றைப் பதார்த்தளவிலே கொண்ட போது மேல் ஐக்யம் சொல்லப் போகாது –
அசித்தும்-அசித் அபிமானியான ஜீவனும் -ஜீவா அந்தர்யாமியான பரமாத்மாவுமான இஸ் சங்காதம் இத்தனைக்கும் வாசகமாய் இருக்கிறது இச் சப்தம் –
அவரே –
இவையே நிற்கிறார் அவர்
இதம் சர்வம் ப்ரஹ்மம் கலு -என்னுமா போலே
தத் தவம் அஸி-என்றால் போலே
இருக்கிறது –
முதல் பாட்டிலே -கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் -விக்ரஹ வை லஷண்யத்தையும் சொல்லி
இரண்டாம் பாட்டிலே ஸ்வரூப வைலஷண்யத்தையும் சொல்லிற்று
தச் சப்தம் -பிரக்ருத பராமர்சியாகையாலே –சுட்டு -ஆகையாலே
அவர் -என்று கல்யாண குண விசிஷ்ட வேஷத்தைச் சொல்லி
ஆய நின்ற -என்று அசிஜ்ஜீவ விசிஷ்ட பரமாத்மாவைச் சொல்லி
சாமா நாதி கரண்யத்தாலே ஐக்யம் சொல்லுகிறது –
ஆக
ஸ்திரீ புன்ன பும்சக பேதத்தாலும்
பூஜ்ய பதார்த்தங்கள் நச்வர பதார்த்தங்கள் என்கிற பேதத்தாலும்
விலஷண அவிலஷண பேதத்தாலும்
பூத பவிஷ்யத் வர்த்தமான கால பேதத்தால் வந்த விசேஷங்களாலும்
சகல சேதன அசேதனங்களையும் சங்க்ரஹித்து -அவற்றினுடைய ஸ்வரூபம் பகவத் அதீநம் என்றதாய் விட்டது
————————————————————————————–
அவதாரிகை –
ஸ்வரூபம் அவன் அதீநம் ஆனவோபாதி -ஸ்திதியும் அவன் அதீனை என்கிறார் –
ஒருவன் ஒரு கிருஹத்துக்கு கடவனாய் இருக்கும்
ஒருவன் ஒரு க்ராமத்துக்குக் கடவனாய் இருக்கும்
ஒருவன் ஒரு ஜன பதத்துக்குக் கடவனாய் இருக்கும்
ஒருவன் த்ரை லோக்யத்துக்கு கடவனாய் இருக்கும்
ஒருவன் சதுர்தச புவனத்துக்கும் கடவனாய் இருக்கும்
ஆக -சதுர தச புவனத்துக்கு கடவன் ஆனவனோடு -ஒரு கிருஹத்துக்கு கடவன் ஆனவனோடு வாசியற
அவர்கள் ரஷகர் ஆகிறதும் இவை ரஷ்யமாய் உபகாரம் கொண்டது ஆகிறதும் -சர்வேஸ்வரன் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே –
அவன் இப்படி நடத்திக் கொண்டு போராத வன்று இவர்கள் ரஷகர் ஆகமாட்டார்கள் என்கிறார்
ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம்
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம் -தைத்ரிய நாராயண வல்லி-
எல்லா நன்மைகளையும் பண்ணித் தர வல்லனாய் -விரோதிகளையும் போக்க வல்லவன் ஆனவனை ஒழிய
வேறு ஒருவர் பக்கலிலே இந்த ரஷகத்வம் கிடவாது –
யத் வேதா தௌ-ஸ்வர ப்ரோக்தோ வேதாந்தே ஸ ப்ரதிஷ்டித -செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு
பின்னையும் அவ் வாபரணத்தை வாங்கி செப்புக்குள்ளே இட்டு வைக்குமா போலே
ஆத்யந்த பீஜமாய் இருப்பது யாதொன்று -தஸ்ய பிரகிருதி லீ நஸய -அது தன்னுடைய பிரக்ருதியிலே லீனமாய் இருக்கிறதாகிறது-அகாரம்
அது ரஷகனைக் காட்டுவது ஓன்று இ றே
ய பரச்ச மகேஸ்வர-அதுக்கு வாச்யதயா பரனாய் இருக்கிறான் யாவன் ஒருவன் அவன் சர்வேஸ்வரன் என்றது இ றே
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-
அவரவர் –
தம்ம்முடைய அநாதரமும்-அவர்களுடைய வைவித்யமும் தோற்றுகிறது-
தமதமது –
குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது
அறிவறி –
அதுக்கடியான ஞான பதத்தைச் சொல்லுகிறது
வகைவகை –
மார்க்க பேதங்களாலே –
தமதமது –அறிவறி –வகைவகை —
சேதன பேதத்தோபாதியும் போருமாயிற்று ருசி பேதங்களும்
தம்தாமுடைய குண அனுகுனமாகப் புறம்பே ஆஸ்ரயிப்பாரும்-ஆஸ்ரயணீயருமாய் இருப்பாருமாய் இருக்கும் இ றே-
ரஜோ குண பிரசுரராய் இருப்பாரும் –தமோ குண பிரசுரராய் இருப்பாரும் -அளாவனான சத்வத்தை உடையாருமாய் இருபாரும் இ றே இருப்பது –
அப்படியே குண அனுகுணமாகப் பிறந்த ஜ்ஞானமும் –
இப்படி அறிந்த அறிந்த வகைகளாலே
அவரவர் இறையவர் என
அவ்வவர் ஆஸ்ரயணீயர் என்று
வடி யடைவார்கள்
அவ்வவ தேவதைகள் தான் துராராத தேவதைகளாய் -பிரஜையை அறுத்துத் தா -ஆட்டை அறுத்துத் தா -ஏன்னா நிற்கச் செய்தேயும் –
ஆஸ்ரயணம் ஆவது -அவற்றின் காலிலே குனியுமதுக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கிறார் இவர் –ஸ்வ கோஷ்டீபிரசித்தியாலே –
ஓர் அஞ்சலி சாத்யவஸ்துவோடே இ றே தமக்கு வாசனை –
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதிநீ க்ருதா பரா தஸ்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேணாஞ்சலிம்
பத்த்வா லஷ்மணஸ்ய பிரசாத நாத் -ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை –
இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷத்தைக் கேட்டு மகாராஜர் கழுத்திலே மாலையை அறுத்துப் போகட்டு காபேயமாக சில
வ்யாபாரங்களைப் பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து -இவ்வளவில் நமக்குச் செய்ய வடுப்பது என் என்ன
அபராத காலத்திலேயே அனுதாபம் பிறந்து மீண்டோமாய் எளியன சில செய்கிறோம் அல்லோம்
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது -என்றான் இ றே
இப்படி குணாதிகனாய்-பிராப்தனாய் -இருக்கிறவன் உடன் உண்டான வாசனையாலே -அடியடைவர்கள் -என்கிறார் –
மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு தொழுது எழுதும் -9-3-9-என்னுமிது மிகையாய் இ றே-இவர் பற்றின விஷயம் இருப்பது –
அவரவர் இறையவர் குறைவிலர் –
ஆஸ்ரயிக்கிறவர்கள் உடைய இறையவர் -என்னுதல் –
அவ்வவ ஆஸ்ரயணீயர் ஆனவர்கள் என்னுதல் –
அவர்களுக்கு ஆஸ்ரயணீ யாரானவர்கள் அவர்களுக்கு பல பிரதான சக்தராகைக்கு குறை உடையர் அல்லர் –
அதுக்கடி என் என்னில்
இறையவர்-
பொதுவிலே — இறையவர் –இறையவர்- -என்கிறார்
அவர்களோடு -அவர்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு -தம்மோடு -வாசியற -எல்லார்க்கும் ஒக்க இறையவர் ஆகையாலே
-பதிம் விச்வச்ய -என்கிறபடியே -எல்லார்க்கும் ஒக்க ஸ்வாமி யானவர் –
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –
அவ்வவ ஆஸ்ரயணீயர் தந்தாமுடைய ஆகமாதிகளிலே விதித்து வைத்த பிரகாரங்களிலே அடையும்படியாக நம் இறையவர் அந்தராத்மாவாக நின்றார்
அன்றிக்கே
சர்வேஸ்வரன் காம நாதிகாரத்தில் அருளிச் செய்தபடியே -அவர்கள் அடையும்படியாக -என்னுதல் –
சர்வேஸ்வரன் இரா மடம் ஊட்டுவாரைப் போலே முகம் தோற்றாதே அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய்-இவர்களும் பல பிரதான சக்தர் ஆகிறார்கள் இத்தனை –
அவனை ஒழிந்த அன்று இவர்கள் ஆஸ்ரயிக்கவும் மாட்டார்கள் -அவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் -என்கிறார்
ஐயன் பாழியில் ஆனை போருக்கு உரித்ததாம் அன்று ஆயிற்று -அவ்வோ தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளது –
—————————————————————————————
அவதாரிகை –
லீலா விபூதியினுடைய ஸ்திதியும் பகவத் சங்கல்ப அதீனம் என்கிறார் கீழ் –
அதினுடைய பிரவ்ருத்தியும் நிவ்ருத்தியும் பகவத் சங்கல்ப அதீனம் என்கிறார் இதில்
ஆகிருதி வாசக சப்தம் வ்யக்தியிலே பர்யவசித்து நிற்குமா போலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான சப்தமும்
அபர்யவசா நவ்ருத்த்யா -அவன் அளவிலே சென்று அல்லது நில்லாது –
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-5-
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் -நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
அருணயா பிங்காஷ்யா ஸோமம் க்ரீணாதி -என்கிற இடத்தில் -சிறந்த நிறம் உள்ளதும் பொன் நிறம் போன்ற நிறம் உள்ள கண்கள் கொண்டதும்
ஆகிய பசுவைக் கொடுத்து ஸோமம் என்ற கோடியை வாங்குவான் -என்றது போலே
குண விசிஷ்ட வஸ்து தோற்றா நிற்கச் செய்தேயும்
ஆருண்யாம் சத்திலே தாத்பர்யம் ஆகிறாப் போலே -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஆஸ்ரயமான வஸ்துக்களின் உடைய ஸ்வரூபமும்
அவன் அதீனம் என்று
முன்னே சொல்லுகையாலே பிரவ்ருத்தி நிவ்ருத்தி யம்சத்திலே நோக்கு என்று சொல்வாரும் உண்டு —
அப்போது சாமா நாதி கரண்யம் சித்தியாது -எம் திடர் என்ற பதத்துடன் சாமா நாதி கரண்யம் பொருந்தாது -என்றபடி –
ஆக -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான இச் சப்தம் -அவற்றுக்கு ஆஸ்ரயமான சேதனனைக் காட்டி
அவன் தனக்கு ஈஸ்வரனை ஒழிய -ப்ருதக் ஸ்திதி யாதல் -உபலம்பமாதல் -இல்லாமையாலே அவனளவும் காட்டுகிறது
பிரவ்ருத்தி அவன் அதீனை யாகிறது வேனுமாகில் -நிவ்ருத்திக்கு அவன் வேணுமோ -என்று எம்பாரைக் கேட்க
ஸ்வர்க்கத்தின் நின்றும் விழுகிற த்ரிசங்குவை சக்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்று கண்டாயே —
அப்படியே நிவ்ருத்திக்கு அவன் வேணும் காண்-என்று அருளிச் செய்தார்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
இப்படி அநேக பிரகாரராய் இருக்கையாலே -காலதத்வம் உள்ளதனையும் ஆராயா நின்றாலும் இன்னபடிப்பட்ட
ஸ்வ பாவத்தை உடையவர் என்று நினைக்கவும் கூட அரியவர் –
என்றும் ஓர் இயல்வொடு நின்ற –
வ்ருஷல விவாஹ மந்த்ரம் போலே ஓர் இயல்வொடு நின்றவராவது என் என்னில் ஸ்வ பாவத்தை உடையவர் என்று நினைக்க
அரிதான நிலை என்றும் ஒருபடிப்பட்டு இருக்கும் -என்கை-
எம் திடரே –
அபௌ ருஷேயமான வேத பிரதிபாத்யன் ஆகையாலே வந்த தார்ட்யத்தைச் சொல்லுகிறது -இப்படி ஸூ த்ருட பிரமாண
சித்தரான நிலை தம்முடைய லாபமாகத் தோற்றுகையாலே-எம் திடர் -என்கிறார் –
————————————————————————————————
அவதாரிகை
கீழே சாமா நாதி கரண்யம் சொன்ன இது பாவி பிரதி சந்தான நியாயத்தாலே யாய் -அத்தாலே பலித்த சம்பந்தம் சாரீராத்ம பாவம் என்கிறார் ஆதல்
அன்றிக்கே
கீழே சாமா நாதி கரண்யத்தாலும்-வையதி கரண்யத்தாலும் சொன்னார் -அப்படி சொன்ன ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்கிறார் ஆதல்
அநேன ஜீவே நாத்ம நா நு பிரவேச்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக்யம் -என்கிறபடியே
த்ரிவ்ருத்க்ருதமான அச்சித்திலே ஜீவத்வாரா அநு பிரவேசித்து வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் உண்டாம்படி பண்ணி இவை-தான் -என்னலாம் படி இருந்தால் -ம்ருதாத்மகோ கட -என்னும்படி இருக்கை யன்றிக்கே
அந்தப் பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா நாம் -என்கிறபடி-சர்வேஷாமாத்மாவாய் -இவற்றை நியமிக்கும் இடத்தில் இந்த சரீரத்துக்கு இந்த ஆத்மா தாரகனாய் நியாமகனாய் சேஷியாய் இருக்கிறாப் போலே
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் என்கிறபடியே –
தான் இரண்டுக்கும் தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் -நின்று நடத்திக் கொண்டு போரும் என்று கீழ்ச் சொன்ன சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்கிறார் –
வருஷத்தில் தேவதத்தன் நின்றான் என்றால் அங்கே சரீராத்மா பாவம் இல்லை
ஜாதி குணங்கள் வ்யக்தியிலே கிடந்தது என்றால் அங்கு சரீராத்மா பாவம் இல்லை
விசிஷ்டத்திலே இ றே சரீராத்மா பாவம் கொள்ளலாவது
திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-
திட விசும்பு -எரி அளி நீர் நிலம் —
இது எல்லாவற்றிலும் ஏறி-த்ருடமான எரி-த்ருடமான காற்று -என்று கிடக்கிறதாகவுமாம்
அன்றிகே
ஆத்மந ஆகாசஸ் சம்பூத -என்று சொல்லுகிறபடியே அல்லாத பூதங்களுக்கு முன்பே உண்டாய் அவை அழிந்தாலும்
சில நாள் நிற்கக் கடவதாகையாலே த்ருடமான விசும்பு என்னவுமாம் –
அன்றிக்கே
சத்வார்யேவ பூதானி -என்கிறவனை நிராகரிக்கிறார் -நான்கு தத்வம் -அருக வாதம் ஆகவு மாம்
ஆக பூத பஞ்சகங்களையும் சொல்லுகிறது
இவை மிசை படர் பொருள் முழுவதும் யாய் –
இவற்றை அடியாகக் கொண்டு மேல் விஸ்த்ருதமாகா நின்றுள்ள பதார்த்தங்கள் எல்லாவற்றையும் உண்டாக்கி
ஆய -என்றது -ஆக்கி என்றபடி –
ஆய -என்பான் என் என்னில் பஹூச்யாம் என்கிற தன விகாசமே யாகையாலே வைதிக நிர்த்தேசம் -இருக்கிறபடி –
யவை யவை தொறும்
அவ்வவோ பதார்த்தங்கள் தொறும்
அவற்றிலே வியாபிக்கும் இடத்தில் -பல துணுக்காக ஒரு உத்தரம் கிடந்தாப் போலே அன்றிக்கே -ஜாதி வ்யக்தி தொறும்
பரி சமாப்ய வர்த்திக்குமா போலே எல்லாவற்றிலும் தனித்தனியாக குறைவற வியாபித்து நிற்கும் –
இப்படி வியாபித்து நிற்கும் இடத்தில்
உடன் மிசை யுயிர் எனக் –
இச் சரீரத்துக்கு ஆத்மா தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் -இருக்குமா போலே இச் சரீராத்மாக்களுக்கு
தான் தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் இருக்கும் –
கரந்து –
இப்படி இருக்கச் செய்தே யமாத்மா ந வேத -ப்ருஹத் உபநிஷத் -என்கிறபடியே அந்யை ரத்ருச்யனாய் இருக்கும்
எங்கும் பரந்து –
அந்தர் பஹிச்ச வியாபித்து
இதில் பிரமாணம் என் என்னில்
உளன் சுடர்மிகு சுருதியுள் –
அபௌருஷேயமாய் -நிர் தோஷமாய் இருக்கிற வேதத்தாலே பிரதிபதிக்கப் பட்டு இருக்கும் –
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரத்தால் கழிக்க ஒண்ணாத ஒளியை உடைத்தாய் இருக்கை –
சுருதி
பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்றி உத்தர உத்தர உச்சார்யமாணத்வத்தை பற்றச் சொல்லுகிறது
இத்தால் முதல் பாட்டுத் தொடங்கி சொன்ன அர்த்தங்களுக்கு எல்லாம் பிரமாணம் நிர்தோஷ சுருதி -என்கிறது –
இவை யுண்ட சுரனே —
இவற்றை சம்ஹரித்த தேவன்
முன்பே சிருஷ்டி ஸ்திதிகள்-அவன் அதீநம் என்று சொல்லிற்று –
சம்சாரம் வேறு ஒரு சேதனன் அதீனமாகில் -இது தன்னது அல்லாமையால் வரும் ஐஸ்வர்யம் குறையும் இ றே
அதுக்காக சம்ஹாரம் அவன் இட்ட வழக்கு -என்கிறார் –
இத்தால் சிருஷ்டி சம்ஹாரங்களை ப்ரஹ்மாதிகளே நடத்துகிறார்கள் -என்கிற குத்ருஷ்டிகளை நிரசிக்கிறார்
சுடர் மிகு சுருதியுள் -என்கையாலே நாராயண அனுவாகாதிகளில் சொல்லுகிற -பரத்வம் லஷ்மீ சம்பந்தம் -இவை
எல்லாவற்றையும் அங்கீகரித்தார் ஆகிறார்
—————————————————————————————–
அவதாரிகை –
சுருதி சித்தன் அவனே -என்றும்
சர்வ சரீரியாய் நிற்கிறான் அவனே என்றும் -சொல்லா நின்றீர்
அல்லாதாரும் ஒரோ கார்யங்களில் அதிகரித்து -அவையும் நடத்தி யன்றோ போருகிறது —
ப்ரஹ்மா சிருஷ்டிக்கு கடவனாய் -ருத்ரன் சம்ஹாரத்துக்கு கடவனாய் அன்றோ போருகிறது –
இவற்றை ஒரு ஒரு வ்யக்தியிலே ஏறிட்டால்-நீர் பஷ பாதத்தால் சொன்னீர் ஆகீரோ என்ன –
ஒரு வ்யக்தியில் பஷ பாதத்தாலே சொல்லுகிறேன் அல்லேன் -பிரமாண கதிகளை ஆராய்ந்தால் –
அவை அவர்கள் பக்கலிலே கிடவாமையாலே சொல்லுகிறேன் -என்கிறார் –
சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-
சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும் –
ப்ரஹ்மாதிகளால் அறிய வரிய ஸ்வ பாவத்தை உடைத்தாய் இருக்கிற விண் உண்டு -மூல பிரகிருதி
அது தொடக்கமான உண்டான எல்லாவற்றுக்கும் வரிஷ்டமான காரணமாய் -அஷரம் அம்பராந்த தருதே –
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -ஆகாயத்துக்கு காரணமான மூல பிரக்ருதியைத் தரிப்பதால் அஷரம் என்பதே ப்ரஹ்மம்–என்றது
-அம்பராந்தம் -என்று சொல்லக் கடவது இ றே
ப்ருஹத் உபநிஷத்தில் கார்க்கி வித்யையிலே-கச்மின்நு கல்வாகாச ஒதச்ச ப்ரோதச்ச -என்று ஆகாச சப்தத்தாலே
மூல பிரக்ருதியைச் சொல்லுகையாலே இவரும் ஆகாச சப்தத்தாலே மூலப் பிரக்ருதியை அருளிச் செய்கிறார் –
பிரகிருதி கார்யமான ஆகாச வாசி சப்தத்தை இட்டு காரணமான மூல பிரக்ருதியை உபசரிக்கிறது –
வரன் முதலாய் –
காரண தசையிலும் ஸூ ஷ்ம ரூபேணவியாபித்து தன மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்
கார்யமாம் அளவிலே வந்தவாறே அவயகதம் -மஹான் -அஹங்காரம் -என்கிற இவற்றிலும் ஸூ ஷ்ம ரூபேண வியாபித்தும்
காரண பரம்பரையோடு கார்ய பரம்பரையோடு வாசியறத் தானே நின்று நடத்திக் கொண்டு போருகையாலே வரிஷ்டமான காரணம் என்கிறது
அவை முழுதுண்ட
சம்ஹாரத்தில் வந்தால் முழுக்க சம்ஹர்த்தா ஆகிறவனும் அவனே
கட உபநிஷத் -யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதன ம்ருத்யுர் யஸ்ய உபசேசனம் -என்று
யாவன் ஒருவனுக்கு ப்ரஹ்ம ஷத்ராத்மகராய் இருக்கிற இது எல்லாம் ஓதனமாய் இருக்கிறது –
யாவர் ஒருவனுக்கு ம்ருத்யு உபாசேசன கோடியிலே நிற்கிறான் –
க இத்தா வேத யத்ர ச – –
அப்படி இருக்கிறவன் பெருமை ஒருவர்க்கு அறிய நிலமோ என்னா நின்றது இறே
பரபரன்
ப்ரஹ்மாதிகள்-அதிகாரி புருஷர்களாய் இருக்கையாலே நம்மைக் குறித்து அவர்கள் பரராய் இருப்பது ஓன்று உண்டு இ றே
பர பராணாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே அவர்கள் தங்களுக்கும் பரனாய் இருக்குமவன் –
மனிசர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவா -8-1-5- என்னக் கடவது இறே –
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
ருத்ரன் திரிபுர தஹனம் பண்ணினான் என்றும்
அமரர்க்கும் அறிவை ஈந்து -அன்றிக்கே வியத்தல் -கடத்தல் -கொடுத்தாலும் ஆகையாலே -அறிவைக் கொடுத்து -என்னவுமாம் –
ப்ரஹ்மா தேவர்களுக்கு ஜ்ஞான பிரதானம் பண்ணினான் என்றும் -ஒரு பிரசித்தி உண்டு இ றே நாட்டிலே அவர்களுக்கு
அங்கன் அன்றே என்னில் -அவற்றை ஆராய்ந்தால்
விஷ்ணுராத்மா பகவதோ பவச்யாமித தேஜஸ -தஸ்மாத் தனுர்ஜ்யா சம்ஸ்பர்சம் ச விஷேஹே மகேஸ்வர -என்னா நின்றார்கள் இ றே
அத்தை அடி அறிவார் –நண்ணார் நகரம் விழ நனிமலை சிலை வளைவு செய்து அங்கழல் நிற அம்பது ஆனவனே -பெரிய திருமொழி -6-1-3-
என்னா நின்றார்கள் இ றே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள்
தான் பூட்டின நாணி தன கழுத்தை அறுத்துக் கொண்டு போகாது ஒழியும் பொழுது ஈஸ்வரன் அந்தராத்மாவாக இருக்க வேணும்
ப்ரஹ்மா தேவர்களுக்கு ஜ்ஞான பிரதானம் பண்ணினார் என்று பிரசித்தி உண்டு இ றே
அதுக்கடி ஆராய்ந்தால் -யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் என்கிறபடியே அவன் அடியாய் இருக்கும் –
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –
அரன் செய்தான் அயன் செய்தான் என உலகு அழித்து அமைத்து உளன் –
ஏதௌ த்வௌ விபுத ஸ்ரேஷ்டௌ பிரசாத க்ரோதஜௌ சம்ருதௌ ததா தர்சித்த பந்தா நௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-என்கிறபடியே
பிரமாண கதிகள் இருந்த படியாலே
ஏக தேச சிருஷ்டியும் ஏக தேச சம்ஹாரமுமே ப்ரஹ்மாதிகளுக்கு உள்ளது –
அது தானும் இவர்களுக்கு அந்தராத்மாவாய் நின்று சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகிறவன் சர்வேஸ்வரன் ஆகையாலே சொன்னேன் அத்தனை
ஒரு வியக்தியிலே பஷ பாதத்தாலே சொன்னேன் அல்லேன் என்று குத்ருஷ்டிகளை நிரசிக்கிறார்
———————————————————————————————–
அவதாரிகை –
ஸூ ந்யவாதியை நிரசிக்கிறார் -நிரசிக்கிறபடி தான் என் என்னில் பாஷ்யத்தில் ஸூ ந்யவாதியை நிரசித்த க்ரமத்திலே –
இவ்வாழ்வார் தாம் அடியாக பாஷ்யகாரர்க்கு அவனை நிரசிக்கலாம் –
இவர் தாம் அவனை நிரசிக்கைக்கு அடி என் என்னில் அதுவும் இவ்வாழ்வார் பக்கலிலே உண்டு
புறம்பே சிலர் ப்ரஹ்மாதிகள் பக்கலிலே ஈச்வரத்வ பிரதிபத்தியைப் பண்ணி -பிரமாணங்களையும் அதுக்கு ஈடாக நியமித்துக் கொண்டு
வந்து தோற்ற தாம் அங்கீ கரித்தவனே சர்வ சமாத் பரன் என்னும்
ஜகத் அவனுக்கு சரீரதயா சேஷம் என்றும்
தத் பிரதிபாதிக பிரமாணம் வேதம் என்றும்
தம்முடைய மதத்தை உபன்யாசித்து நின்றார் கீழ்
இவை இத்தனையும் இல்லை என்னும் போது-பூர்வ பஷமாக இவற்றை அங்கீ கரித்து-அநு பாஷித்து கழிக்க வேணும் இ றே
அதில் இவற்றை அங்கீ கரித்து அநு பாஷித்து அவனால் இல்லை என்னப் போகாது
முதலிலே ஸூ ந்யம் என்னில் சர்வ ஸூ ந்யவாதம் சித்தியாது -இனி உன்னைக் கேட்போம் –
நீ தான் ஈஸ்வரன் உளன் என்கிற சொல்லாலே அவன் இல்லாமையை சாதிக்கப் பார்க்கிறாயா
இல்லை என்கிரசொள்ளாலே இல்லாமையை சாதிக்கப் பார்க்கிறாயா -என்ன –
இங்கன் விகல்பிக்கைக்கு கருத்து என் -என்ன -உளன் என்கிற சொல்லாலே சொன்னால் உனக்கு அபிமதமான அபாவம் சித்தியாதோபாதி
இல்லை என்கிற சொல்லாலே உனக்கு அநபிமாதார்த்தமே காண் சித்திப்பது –
இங்கே உள்ளது இப்போது உள்ளது இப்படியாக உள்ளது -பாவம்
இங்கே இல்லை இப்போது இல்லை இப்படியாக இல்லை -அபாவம் என்றபடி
ஆனபின்பு நீ இல்லை என்கிற சொல் கொண்டே அவன் உண்மையை சாதிப்பான்
லோகத்தில் பாவ அபாவ சப்தங்களுக்கு யாதொருபடி பொருள் கொள்ளுகிறோம்
அப்படி கொள்ளில் நீ நினைக்கிற அர்த்தம் உன்னால் சாதிக்கப் போகாது -அங்கனே கொள்ளாயாகில் வாதம் தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை –
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
ஈஸ்வர சத்பாவம் -முதலிலே இல்லை என்கிற நீ -அவன் உண்மைக்கு இசையாய் இ றே
நான் உளன் என்கிறாப் போலே சொல்லில் தான் உளன்
ஈசிதவ்ய நிரபேஷமாக வன்று இ றே ஈஸ்வரன் உளனாவது
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -என்கிறபடியே ஜகத்து அவனுக்கு சரீரதயா சேஷமாய் உண்டாம்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் அலன் என்பாயோ -அப்போது அபாவ தர்மியாய்த் தோற்றும்
அப்போது நாஸ்தி சப்த வாச்யமாய் அவஸ்தாந்திர பாக்காய்க் கொண்டு இவற்றின் உண்மை தோற்றும்
கடோ அஸ்தி என்றால் -வாயும் வயிருமான ஆகாரம் தோற்றும்
கடோ நாஸ்தி என்றால் -நாஸ்தித்வ தர்ம விசிஷ்டமாய்த் தோற்றும்
இங்கு இல்லை என்றால் -வேறு ஓர் இடத்தில் உண்டாம்
இப்போது இல்லை என்றாகில் வேறு ஒரு கால விசேஷத்திலே உண்டாம்
எங்கும் எப்போதும் ஒரு பிரகாரத்தாலும் கடம் இல்லை என்னக் கூடாமையாலே நிருபாதிக நிஷேதம் இல்லை இ றே –
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளனாகிற இத்தையும்
இலனாகிற இத்தையும்
இவை இரண்டையும் குணமாக உடையனாகையாலே -இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே —
உளன் என்கிற சொல்லாலும்
இலன் என்கிற சொல்லாலும்
சொன்ன இரண்டு ஸ்வ பாவத்தாலும் உளன் ஆனான் –
ஒழிவிலன் பரந்தே –
நான் உளன் என்கிற சொல்லாலே உண்மையை சாதித்தேன்
நீ இலன் என்கிற சொல்லாலே உண்மையை சாதித்தாய்
ஆக இருவருமே உண்மையை சாதித்தோம்
இனி அவன் உளனாகில் உளனாம் போலே ச விபூதிகனாகவே உளனாகவே அமையாதோ -என்கிறார்
——————————————————————————————
அவதாரிகை –
ஜலத்தை சரீரதயா சேஷமாக உடையனாய் -எங்கும் வியாபித்து -தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் இருக்கும் என்று கீழே சொன்னார் –
இப்படி வியாபித்து நின்றால்-அசித் சம்வர்க்கத்தாலே சேதனனுக்கு ஒரு சங்கோசம் பிறவாது நின்றது இ றே
அப்படியே அவனுக்கும் இவற்றோட்டை சம்வர்க்கத்தாலே சங்கோசம் பிறக்குமோ என்னில் -அது செய்யாது
அசங்குசிதமாக வியாபித்து நிற்கும் என்று வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்கிறார் –
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்து குளிர்ந்து இருந்துள்ள கடலில் ஜல பரமாணுக்கள் தோறும வியாபித்து இருக்கும்
நீர் செறிவாலே திரண்டு தோற்றுகிற இத்தனை இ றே -பரமாணு சங்காதம் இ றே
ஜ்யாய அந்த்தரிஷாத்-சாந்தோக்யம் -ஆகாயத்திலும் உயர்ந்தவன் -என்கிற வஸ்து –
ஜல பரமாணுக்களிலே வியாபியா நின்றால் அல்ப அவகாசமே நெருக்குப் பட்டு இருக்குமோ எனில் –
பரந்த வண்டமிதென –
அந்த ஜல பரமாணுக்கள் தான் பரந்த அண்டமிது எனவாயிற்று வியாபித்து இருப்பது
ஓர் அண்டத்தை சமைத்து அதிலே ஓர் ஏகாகியை வைத்தால் போலே இருக்கும் –
இப்படி ஜல பரமாணுக்களில் வியாபித்து விடும் அத்தனையோ என்னில்
நில விசும்பு ஒழிவறக்
பூமி அந்த்ரிஷங்களிலும் அப்படியே
இவை மூன்றும் அஞ்சுக்கும் உப லஷணமாய்-அஞ்சாலும் ஆரப்தமான அண்டத்தளவும் நினைத்து -மேல் கார்யமான பதார்த்தங்களில் வியாபித்து இருக்கும் படி சொல்கிறது
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றில் முடியும்படியான ஸூ ஷ்மமான அல்ப சரீரங்கள் தோறும –
அவ்வவ சரீரங்க ளிலே-ஜ்ஞானானந்த லஷணமாகக் கொண்டு மிளிருகிற ஆத்மாக்கள் தோறும –
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே —
கரந்து –
வ்யாப்ய பதார்த்தங்களுக்கு தெரியாதபடி அன்யைர த்ரஷ்டனாய்
எங்கும் பரந்துளன் –
சேதனன் சரீரத்திலே வியாபிக்கும் போது அதில் ஏக தேசத்திலே நின்று ஜ்ஞானத்தாலே எங்கும் வ்யாபிக்கக் கடவனாய் இருக்கும்
அவன் அங்கன் அன்றிக்கே ஸ்வ ரூபத்தால் எங்கும் வியாபித்து இருக்கும் விபுத்வத்தை அவனுக்குச் சொல்லி அணுத்வத்தை இவனுக்குச் சொல்லி
இதுக்குள்ளே அவன் குறைவற வியாபித்து இருக்கும் என்றால் அது கூடுமோ என்னில்
இவை யுண்ட கரனே
சிறிய வடிவைக் கொண்டு பெரியவற்றை எல்லாம் தன வயிற்றிலே வைத்தால் -தயிருண்ட பொன் வயிறு இவ் வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் -பெரிய திரு -11-5-3–என்கிறபடி
பின்னையும் அவ்வயிறு இ றே இடம் உடைத்தாம் படி இருக்க வல்ல சர்வ சக்தி -சிறிய வற்றில் குறைவற இருக்க மாட்டானோ என்கிறார்
கரனே –
இப்படி ஸூ த்ருட பிரமான சித்தன்
இவை யுண்ட கரன் -பரந்த தண் பரவையுள் -நீர் தொறும் பரந்த வண்டமிதென பரந்துளன் –
நில விசும்பு ஒழிவற பரந்துளன்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் -என்று அந்வயம்
———————————————————————————————
அவதாரிகை
நிகமத்திலே
முதல் பாட்டிலே -கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –விக்ரஹ வை லஷண்யத்தையும் சொல்லி
இரண்டாம் பாட்டில் -இவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சேதன அசேதன விலஷணம் என்று சொல்லி
மூன்றாம் பாட்டிலே -நித்ய விபூதியோபாதி -ததீயத்வாகாரத்தாலே அவனுக்கு அந்தரங்கமாகத் தோற்றுகிற லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
நாலாம் பாட்டில் -அந்த லீலா விபூதியினுடைய ஸ்வரூபம் அவன் அதீனம் -என்றார்
அஞ்சாம் பாட்டிலே -அதினுடைய ஸ்திதியும் அவன் அதீனை என்றார்
ஆறாம் பாட்டிலே -அதினுடைய பிரவ்ருத்தி நிவ்ருத்தி யும் பகவத் அதீனம் என்றார் –
ஏழாம் பாட்டிலே -சரீர சரீரிகளுக்கு உண்டான லஷணம் ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டாகையாலே
இதுக்கும் அவனுக்கும் சொன்ன -ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்றார்
எட்டாம் பாட்டிலே குத்ருஷ்டிகளை நிரசித்தார்
ஒன்பதாம் பாட்டிலே ஸூ ந்யவாதியை நிரசித்தார்
பத்தாம் பாட்டில் வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்தார்
இப்படிகளாலே அவனுடைய பரத்வத்தை நிஷ்கரிஷித்தாராய் நின்றார் கீழ்
இத் திரு வாய் மொழி யில் அன்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –
கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-
கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
கரமான விசும்பு -த்ருடமான விசும்பு -என்றபடி
அன்றியே
கரந்த விசும்பு –
அச்சமான விசும்பு -என்னுதல்-அத்ர க்ருத்ர பததி என்று நிரூபிக்க வெண்டும்படியாய் இருக்கும் இ றே –
எரி -தேஜஸ் தத்வம் –
வளி -காற்று
நீர் -ஜலம்
நிலம் -பூமி
இவை மிசை -இவற்றின் மேலே உண்டான
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற –
வரனான -ஸ்ரேஷ்டமான
நவில் -வரிஷ்டமான சப்தம்
அக்னியினுடைய -தாஹகத்வ சக்தி
காற்றினுடைய மிடுக்கு
ஜலத்தினுடைய தண்ணளி
பூமியினுடைய பொறை
இப்படி ஸ ஸ்வ பாவமான பூத பஞ்ச கங்களையும்-சொல்லி -இத்தாலே லீலா விபூதியைச் சொல்லிற்றாய்
ரஜஸ் தமஸ் ஸூ க்களைக் கழித்து நிஷ்க்ருஷ்ட சத்வமேயாய்-இருக்கும் இ றே நித்ய விபூதி
ஆக இது தானே உப லஷணமாய் -ஆக உபய விபூதி யுக்தனாய் இருக்கிற சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளிலே
இவை பத்தும் பரனடி மேல் வீடே —
அவன் திருவடிகளிலே விடப்பட்டன -சமர்ப்பிக்கப் பட்டன –
குருகூர்ச் சடகோபன் சொல் –
வால்மீகிர் பகவான் ருஷி -என்னுமா போலே ஆப்திக்கு உடலாய் அருளிச் செய்கிறார் –
-நிரனிறை யாயிரத்து
நிரல் நிறை -என்னுதல் -சப்தங்களும் நிறைந்து அர்த்தங்களும் புஷ்கலமாய் இருக்காய் –
நிரன் நிறை என்னுதல் -நேரே நிறுத்தப் படுக்கை -என்றபடி
ப்ரமாணைஸ் த்ரி பிரந்விதம் பாத பத்தோஷர சமஸ் தந்த்ரீ லய சமன்வித –ஸ்ரீ ராமாயணத்துக்கு சொல்கிறபடியே
லஷணங்களில் குறையாமே -எழுத்தும் -சொல்லும் -பொருளும் -அந்தாதியும் -க்ரமத்திலே நிறுத்தப் படுகை
ஆயிரம் –
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ் நமீத்ருசை கரவாண்யஹம்-என்னுமா போலே
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே -மேல் உள்ளத்து அடையத் தோற்றா நின்றது –
வாச க்ரமவர்த்தித்வாத் அடைவே சொல்லும் அத்தனை யாகையாலே -ஆயிரம் -என்கிறது –
அன்றிக்கே
ஆயிரமும் சொல்லி யல்லது நிற்க ஒண்ணாத விஷய ஸ்வ பாவத்தாலே சொல்லுகிறார் ஆதல்
இவை பத்தும் வீடே –
இவை பத்தும் பரனடி மேல் விடப் பட்டது -என்னுதல்
அன்றிக்கே
இச் செய்யடைய நெல் -என்னுமா போலே நெல்லை விளக்குமது என்று காட்டுமா போலே
இவை பத்தும் வீடு என்றது -வீட்டை விளைக்கும் என்றபடியே -மோஷப்ரதம்-என்கிறார் ஆதல்
பகவத் பிரசாதத்தாலே தமக்கு பரத்வ ஜ்ஞானம் பிறந்த படியையும்
அந்த ஜ்ஞானத்துக்கு பலம் மோஷம் என்னும் இடத்தையும்
இப்பிரபந்தத்தில் ஏதேனும் ஒரு படி அந்வயம் உடையார்க்கும் பலம் நம்முடைய பலம் என்னும் இடத்தையும் அருளிச் செய்கிறார்
————————————————————————————–
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply