திவ்யார்த்த தீபிகா -திருவாய்மொழி -சாரம் -துளிகள் –
துணையும் சாரவும் -துணை -இளைய பெருமாள் –சார்வு -ஸ்ரீ பரத ஆழ்வான் போலே
குழாம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் -அவன் பக்கலிலே நிஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர்
இங்கு இருக்கும் நாலு நாளும் த்யாஜ்யமான அர்த்த காமங்களை பற்றி சீறு பாறு என்னாதே நம் பெரிய குழாத்திலே
போய்ப் புகும் அளவும் ஒரு மிடரே அனுபவிக்கப் பாருமின் -நம்பிள்ளை –
பொரு மா நீள் படை -ஆல்வாருடன் உண்டான கலவி சொல்கிறது என்பர் முன்னோர் -பட்டர் அந்த கலவி தான்
நிர்ஹேதுகம் என்பதையும் காட்டும் என்பர் தனது சீல குணத்தை வெளிப்படுத்தி உருக வைத்தான் என்று
நம்பிள்ளை காட்டி அருளுவார் -இதனையே தேசிகரும் -அவ்யாஜோ தாரபாவாத் –
பொலிக பொலிக -ஆளவந்தார் நிர்வாகமாக -திருந்திய ச,சாரிகளைக் காண நித்ய சூரிகள் வர -அவர்களுக்கு பல்லாண்டு –
எம்பெருமானார் கிர்வாகம் -நித்ய சூரிகள் திருந்திய சம்சாரிகளை வாழ்த்துவதாக —
அடிமை புக்காரையும் –கண்டு காப்பிட்டு -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூ க்திகள்
கூவு மாறு அறிய மாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ
மேவு சீர் மாரி என்கோ விளங்கு தாரகைகள் என்கோ
நாவியல் கலைகள் என்கோ ஞான நல்லாவி என்கோ
பாவு சீர் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ணனையே –
எழுவாயை முதலில் சேர்த்து பொருள் விளங்கி அருளுவார்
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத்தலை வாழை பாயும் வயல் அணி யநந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே -10-2-7–10-2-7-
துடைத்த -ஓன்று ஒழியாமல் சம்ஹரித்த
படைத்த -மறுபடியும் படைத்து அருளின
கடைத்தலை சீய்க்கப் பெற்றால்–திருவாசல் விலக்குதல் முதலிய கைங்கர்யங்களை பண்ணப் பெற்றால்
மண்ணை இருந்து துழாவி-என் பெண்ணை பெரு மையல் செய்தார்க்கு என் செய்கேன் பெய் வளையீரே
-ஒன்றும் மாட்டுகிறிலேன் -திருத் தாயார் –சுடர் வளையும் கலையும் கொண்டு –பங்கயக் கண்ணன் சுடர் பவள வாயன்
–குருகினங்கள் இடம் இப்படிப் பட்டவனை அனுபவித்து ஆறி இருப்பாளோ -சொல்ல வேணும் –
காண் கொடுப்பான் அல்லனார்க்கும் -மகா பலி போல்வாருக்கும் தனது வடிவு அழகைக் காட்டி ஆட்கொண்டது போலே
ஆழ்வாருக்கும் மாண் குறள் வடிவைக் காட்டி அருளி சர்வத்தையும் கொள்ளை கொண்டு போனான்
அமரராய்த் திரிகின்றார்கட்கு -குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே –பசுக்களுக்கும் இடையருக்கும் கையாளாக இருப்பவன் கிடீர்
கெட்ட துரபிமானம் உள்ளோர்க்கும் துன்பம் தீர்த்து அருளி -அப்படிப் பட்ட இறைவன் நமக்கு தன்னைக் காட்டி அருள அரூமை படுத்த மாட்டாத சீலவான்
கோயில் கொண்டான் தன திருக் கடித்தானத்தை -ஆழ்வார் திறத்தில் உள்ள எல்லையான அன்பினால்
திருக் கடித் தான நகரொடு -ஸ்ரீ வைகுண்ட அனுபவங்களுடன் -ஸ்ரீ கிருஷ்ணாவதார வைபவங்களுடன் கூடி வந்து புகுந்தான் –
தெய்வம் எலாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட -குடக் கூத்த வம்மான் -திரு அவதாரத்து
திரு விளையாடல்களை குறிக்கும் என்று காட்டி அருளுவார்
இங்கே திரிந்தேற்கு –புலன் கொள் வடிவு என் மனத்தாய்-எப்படிப் பட்ட திட மனத்தவரது
இந்திரியங்களையும் கொள்ளை கொள்ளும் திரு வடிவு அன்றோ
மின்னிடை மடவார்கள் -நவவித சம்பந்தம் -பர்த்ரு பார்யா-சம்பந்தம் இதில் -திரு மந்த்ரத்தில் நாராயண பதார்த்தம்
உகாராத்ர்தின் பொருள் -அனன்யார்ஹ சேஷத்வம் -கரு மாணிக்கச் சுடர்
அருளாத நீர் அருளி -அபராத சஹத்வம் -என்னுள் கலந்தவன் -தெய்வ வாரி -போன்ற திரு நாமங்கள் சாத்துவார்
குரவை ஆய்ச்சியரோடும் கோத்ததும் -ஆழ்வார் தமக்கு உண்டான பெருமிதத்தை பெரு மிடறு செய்து வெளியிடுகிர்ரர்
அராவமுதே -முகம் கொடுக்காமையாலே வருந்தி அவனைக் கூவுகிறார்
முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம்
தீர்ப்பாரை யாமினி –கீழ்மையினால்–ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் -இதற்கு ஏட்டில் -செம்பருத்தார் கைக்குப் போக வேணுமோ –
நெல் போன்றவற்றை அறுத்தால் அதைக் கட்ட கயிறு தேட வேண்டும் -செம்பை அறுத்தால் அதைக் கொண்டே கட்ட முடியும்
-வேறு கயிறு தேட வேண்டியது இல்லை
அது போலே பராங்குச நாயகிக்கு -நோய் தீர்க்க -கண்ணன் கழல்கள் வாழ்த்துவது தவிர
தேவதாந்தர சம்பந்தம் பொறுக்காத -சம்பந்தத்தின் வாசனையும் கூட பொறுக்காத -ஆழ்வார் பிரிவின் சிறப்பு எடுத்துக் காட்டப் படுகிறது
உடையார்ந்த ஆடையன் -பாசுரம் -உடையார்ந்த ஆடையன் -கண்டிகையன் -உடை நாணினன் -புடையார் பொன் நூலினன்
-திவ்ய ஆபரண அழகை அருளிச் செய்கிறார்
மருவித் தொழும் மனமே தந்தார் திரிவிக்ரமன் –ஆழ்வார் திரு உள்ளத்தை திருத்தினது மட்டும் அன்றி
கரு உலகத்தில் உள்ள ஒன்றை எடுத்து கொடுத்து அருளினார் –
நொந்தாராக் காதல் -விளக்கை கண்டு அதுவும் தம்மைப் போலே வேவுவதாக -ஜ்வாலாபேத அனுமானம் இருந்து பார்க்கிறாள் அன்றோ
கருமமும் கரும பலனுமாகிய –ஒருமை மனத்துள் வைத்து –ஒரு பயனைப் பெறுவதற்காக அன்றியே நெஞ்சிலே இருக்கையே
பயனாகக் கொண்டு நெஞ்சிலே வைத்து அவன் குணங்களைப் பற்றி வாய் வந்தபடி சொல்ல வேணும் –
ஆடும் பறவை மிசைக்கண்டு -திருவாறன்விளை எம்பெருமானை காண ஆழ்வார் ஆசைப்பட அந்த எம்பெருமான்
வெற்றியை யுடைய கருடன் மேல் ஏறி வர நடு வழியிலே கண்டு பெருமிதம் அடைகிறார் ஆழ்வார்
வேதம் வல்லார்களைக் கொண்டு -முந்திய பாசுரத்தில் -வணங்கீர்கள் மாயப்பிரான் தமர் வேதம் வல்லாரையே –
வைணவர்கள் அடையத் தக்கவர்கள் -ஆனாலும் சஜாதீயர்கள் இடம் அன்பு நம்பிக்கை வைப்பது அரிதாகையாலே
அவர்களை உயர்ந்த சேஷியாக கொள்ள இசைவு வாராதே -ஆயினும் புருஷகாரமாகவாவது கொள்ளப் பாருமின் -என்கிறார்
அளவியன்ற வேழு லகத்தவர் பெருமான் கண்ணனை –அஞ்சிறைய மட நாராய் -இறைவன் ஆழ்வாரை இழக்கக் கூடாது என்று பதறி சேவை சாதிக்க –
கண்ணன் -அடியார்க்கு எளியவன் என்று அருளுகிறார்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருக் கண் அழகிலே தோற்று நித்யர் சன்னி சுரத்தால் ஆடுவது போலே முறை கெட ஸ்தோத்ரம் செய்கிறார்கள்
சதிரம் என்று தம்மைத் தாமே –வைகி மற்று ஓன்று கூறுவர் -சாஸ்திரப் பொருள்களின் நடுவில் உலக விஷயங்களையும் நம்பிள்ளை கூட்டி உரைப்பர்
நின்ற குன்றத்தினை நோக்கி நெடு மாலே வா வென்று கூவும் -பெரிய வடிவு கொண்ட திரி விக்ரமன் -பிள்ளான் –
மையல் -உலகையும் அளக்க வளர்ந்த
இறைவனது மையலை அறிய முடியுமோ -நஞ்சீயர்
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -பிள்ளான் வருந்திச் சொல்ல சிஷ்யர் நஞ்சீயர் வருந்த –
அங்குப் பொய் பெறப் போகும் பேறு இந்த பூ லோக அனுபவத்துக்கு குறைந்தது அன்று என்பாராம்
திருவுடை மன்னரை கானில் -நாதமுனிகள் அரசன் சிற்றரசன் கழுத்தில் காலை வைத்து யானையில் ஏறுவதைப் பார்த்து -இறைவனது போலி என்று மயங்கி -ஐதிகம்
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே -செல்வ நம்பி திரு மாளிகையில் திருவனந்த புர யாத்ரை செல்வாருக்கு
நூறு கோட்டை விதை நெல் -இ கோட்டை =21 மரக்கால் -பரமபதத்தில் விளைவதாக வித்திட்டேன்
நீர்மையில் -பாண்டவ பஷபாதியாக ஸ்ரீ கிருஷ்ணன் குணங்களை நினைத்து ஈடுபடாதவர்கள் பெற்ற தாய் வயிற்றினை பெரு நோய் செய்யவே பிறந்தவர்கள்
ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வார் –
கூரத் ஆழ்வான் பெரிய நம்பிக்கு சோழ ராஜ சபை நிகழ்வு காட்டுவார்
அருள் தான் இனி யான் அறியேன் -இது வல்லால் பொருள் தான் எனில் மூவுலகும் பொருள் அல்ல -ஆச்சார்யர்களின் திரு உள்ளத்தில் ஓடிய
பொருளாட்சி இறைவனுடைய எண்ணமாக சொல்லும் நிலைமைக்கு ஏற்ப அமைந்ததே சிறந்தது
நமக்கு பூவின் மிசை –சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -முன்புள்ள ஆசார்யர்கள் இறைவன் பரமாக பொருளாட்சி அமைந்ததையும்
பட்டர் -இறைவனது கண் அழகிலே ஈடுபட்டு குறல் தழு தழுத்து இருந்த நிலைமையால் வந்த ஆழ்வாரின் தன்மையில் நோக்கு -அமைக்க –
என்ற சொல்லுக்கு ஏற்ப -பட்டருடைய பொருளாட்சி
அவன் கையதே எனதாருயிர் -தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ -தூது விடும் பதிகம் -பராங்குச நாயகிக்கு ஏற்படும் துன்பம் காட்டும்
திருமேனி அடிகளுக்கு தீ வினையேன் விடு தூதாய் –அவசா ப்ரதிபேதிரே-பாண்டவ தூதன் சபையிலே வடிவு அழகாலே அனைவரையும் தோற்ப்பித்தான்
தான் ஒரு உருவாய் தனி வித்தாய் -தான் ஓர் வித்து நிமித்த உபாதான சஹகாரி -மூன்றுமே
பராங்குச நாயகி நோக்கே அவனுக்கு உணவு -அவனது உணவை அவனே நோக்கி அருள வேணும் -ஆற்றாமையை எடுத்துரைக்கும் இனிமை
உயிர்கள் எல்லா உலகும் உடையவன் –ஆழ்வாரைத் தரிக்கச் செய்ததால் உண்டான இறைவனுக்கு இப்பொழுது தான் அனைத்து உடைமைகளும் விளக்கம் பெற்றது
கார் கடல் வேதம் வேத கீதன் உள்ளளவும் திருவாய் மொழி பக்தர்களுக்கு அமுதம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள்
செஞ்சொல் பதிக நூற்றில் -பதிகம் பதிகமாக விசைத்தனனே -சடகோபர் அந்தாதி -பதிகம் சொல் பயன்பட்டு
உயர்வற உயர்நலம் உடையவன் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரய விளக்கம் -மண்ணை இருந்து துழாவி –தீர்ப்பாரை யாமினி –ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஊற்றம்
ஏறாளும் இறையோனும் -மணிமாமை -மட நெஞ்சம் -நிறைவு -தளிர் நிறம் -அறிவு -கிளர் ஒளி-மேகலை -உடம்பு -உயிர் –
அடிமை செய்ய உறுப்பு இல்லாத போதே வேண்டாம் –
மாசறு சோதி -இருந்தும் வியந்து -ஆழ்வார் ஆசை மிகுந்து -விருப்பக் காட்சியில் ஈடுபட்டு நாயகி பாவம்
ஆசறு சீலன் -கலக்கும் பொழுது தனது பேறாக கலபபவன்-
திருக் கண்களால் சர்வத்தையும் கொள்ளை கொண்டவன்
ஆழ்வார் திறத்து இறைவனத்ஹு மிகுந்த விருப்பத்தை இருக்கும் வியந்து பதிகம் காட்டும் -கண்டு கொண்டு வீற்று இருந்தான்
பிரபல நோயில் இருந்து தப்பிப் பிழைத்த மகனை தகப்பன் தாய் நோக்குவது போலே வைத்த கண் வாங்காதே -பார்த்துக் கொண்டே இருந்தான்
அவன் என்னுள் வீற்று இருந்தான் -அற வீற்று இருந்தான் -தூய சுடர்ச் சோதி என்னுள் வைத்தான் –
நாலடி வருதல் -புன் முறுவல் செய்தல் -நல் வார்த்தை அருளுதல் -தானும் பிராட்டியுமாக வீற்று இருந்தான் கண்டு கொண்டே
திண்ணன் வீடு -மேன்மையை உபதேச பரமாக -ஏத்த ஏழு உலகும் கொண்ட -பாசுரம் -உலகு அளந்த சரிதம் ஒன்றே போதும்
உயிர்ச் சொல் -உயிர்த் தொடர் -உயிர்ப் பாசுரம் -உயிர்ப் பதிகம் -இப்படி 31 இடங்கள் கணக்கிடப் பட்டுள்ளன
சிற்ற வேண்டா -ஆயாசிக்க வேண்டா -முயல வேண்டா -உயிர்ச் சொல் –
அமரத் தொழுவார்கட்கு –உயிர்ச் சொல் -அமரர்க்கு அரியானை பாசுரத்தில் -அநந்ய பிரயோஜனர் -வேறு பயனைக் கருதாதவர்
மனப் பாரிப்போடு அழுக்கு -தான் தண் சீற்றத்தினை முடிக்கும்-உயிர்த் தொடர் -சீற்றம் இருந்தால் தானே ஆற்றல் வீரம் பராக்ர குணங்கள் வீறு பெரும்
அடியார்களின் விரோதிகளை தனது கையாலே முடித்து தனது சீற்றத்தினை ஆற்றிக் கொள்ளும்
எடுத்த பேராளன் –அடுத்ததோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனத் தேறுவர் அமரே -நீ உதவாது இருந்தால் உன்னைத் தஞ்சம் என்று இருப்பார் எங்கனே உன்னை நம்புவர் –
தாயன்பு காட்டி கண்ணனாய் வந்தது போலே வர வேண்டும்
இன்று என்னைப் பொருளாக்கி -உயிர்ப் பாசுரம் -திருமால் இரும் சோலை பதிகம் –
வலக்கை யாழி இடக்கை சங்கம் இவையுடை மால் வண்ணனை மலைக்கு நா வுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே –
செருக்கு தோற்ற அருளி -பரனான அவனுக்கே அங்குசம் -பரர மதத்தாருக்கு அங்குசம் பராங்குசன் –
ஆற்றாமைக்கு -பிரிவு /சம்சாரிகள் நடுவில் இருப்பு /சப்தாதி விஷயங்களால் துன்பம் மூன்று காரணங்கள் -எம்பார் கூரத் ஆழ்வான்
நிர்வாஹம் நண்ணாதார் முறுவலிப்ப –
அப்பனே அடல் ஆழியானே –எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்து துவர்ந்து -திரு உருவை நினைந்து நினைந்து
ஆனந்தக் கண்ணீரும்
நினைத்த படி கண்ணுக்கு புலப்படாத படியால் சோகக் கண்ணீரும் உண்டே
சீலமில்லாச் சிறியேன் -செய் வினையோ -தீயன செய்து தலைக் கட்டினேன் -நல்லது செய்யாமல் செய்ய வேண்டும் நினைப்பே
பலன் கொடுக்கும் -தீயன செய்ய நினைந்து செய்யா விடில் குற்றம் இல்லை -ஆனால் நானோ செய்தே தலைக் கட்டினேன்
அணியார் ஆழியும் சங்கமும் –நித்யருக்கும் இப்படியே திவ்ய ஆயுதங்கள் உடன் காட்சி கொடுக்க அவர்களும்
அதி சங்கை பண்ணி பயப்படும்படி துடிக்கிறார்கள்
பங்கயக் கண்ணன் என்கோ பவளச் செவ்வாயன் என்கோ
அங்கதிர் அடியன் என்கோ அஞ்சன வண்ணன் என்கோ
செங்கதிர் முடியன் என்கோ திரு மறு மார்வன் என்கோ
சங்கு சக்கரத்தான் என்கோ சாதி மாணிக்கத்தையே
முதல் உறவு செய்த திருக் கண்களை சொல்லி -அதற்குத் தப்பினாலும் தப்ப முடியாத புன் முறுவலைக் காட்டிய செவ்வாயைச் சொல்லி
இவற்றுக்குத் தோற்று விழுந்த திருவடிகளைச் சொல்லி அனுபவிக்கும் அழகில் ஈடுபட்டு அஞ்சன வண்ணன் என்கிறார்
இப்படிப்பட்டவன் அனைவருக்கும் சேஷி -செங்கதிர் முடியன் -அஞ்சி பின் வாங்க வேண்டாத படி திரு மறு மார்பன் –
புருஷகாரம் செய்யும் பிராட்டி சம்பந்தம் உண்டு –
இச் சேர்த்தி அழகுக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாதபடி சங்கு சக்கரத்துடன் இருக்கும் இருப்பு
-காட்டியதால் -சங்கு சக்கரத்தான் -என்கிறார்
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க –ஆழ்வார் நோவும் படி -இச் செயலை நினைப்பவர்கள் உள்ளம் நோவும்படி
அறிந்து அறிந்து தேறி தேறி –நறுத் துழாயின் கண்ணி யம்மா நான் உன்னைக் கண்டு கொண்டே –இறைவன் காட்சி தந்தான் என்று தோன்றும்
அடுத்த பாசுரத்தில் கண்டு கொண்டு -வருவதால் இது மானச அனுபவம் மாத்ரமே -வெளியிலே காண விரும்புவது -ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ சூக்திகள்
இது போன்றே சொல்ல மாட்டேன் பாசுர உரையிலும் சாதிப்பார்
இன்று என்னைப் பொருளாக்கி -இன்று என் அளவு அல்லாதபடி த்வரிக்கின்ற தேவரீர் இதற்கு முன்பு நெடு நாள் விட்டு ஆறி இருந்த படி எங்கனே –
எந்தாய் -முன்னிலைச் சொல் உள்ளதே -அதற்கு தலை துலுக்கி உகப்பு காட்டினானாம் –உற்றேன் உகந்து பணி செய்து-என்கிறார் அடுத்து –
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பு -என்னுயிரை அறவிலை செய்தனன் -பேர் உதவிக்கு கைம்மாறாக தனது ஆத்மாவை
கன்னிகா தானம் செய்கிறார் புகர் இதனால் அடைய -சோதீ -என்று விழிக்க -அனைத்து அவயவங்களும் பணைக்கத் தொடங்கிற்று –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய்-என்று பேசுகிறார்
நிற்கும் நான்மறை வாணர்கள் வாழ் -தோழி பாசுரம் –இருந்தாலும் தலைவி பேச்சும் உண்டு -கற்கும் கல்வி எல்லாம் -தோழியின் பேச்சாகவும்
தலைவியின் பேச்சாகவும் கூட்டி வியாக்யானம்
இவள் பேச்சு எல்லாம் இறைவனது திரு நாமம் -தோழி பரமான வியாக்யானம்
யார் எந்த கல்வி கற்றாலும் இறைவன் பரமே ஒழிய அவன் அளவில் சென்று நில்லாத கல்வி ஏதும் இல்லை -தலைவி வார்த்தை
பரமான வியாக்யானம் –இவ்வாறு ஏழு இடங்களில் உரைகள் உண்டு
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்
வெங்கண் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்து
செங்கண் கரு முகிலைச் செய்ய வாய்ச் செழும் கற்பகத்தை
எனக்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே
கிளிகள் -யாரிடம் செல்ல வேணும் -எங்கே செல்ல வேணும் -என்ன சொல்ல வேணும் -என்று கருதியைக் காட்டி
பராங்குச நாயகி அருளுவதாக உரைகள் இதிலும் – –இங்கனே -திரங்களாகி எங்கும் -இடரில் போகம் மூழ்கி -திருந்தக் கண்டு
-இத்தனை வேண்டுவது -ஆகிய பாடல்களுக்கும் உரைகள் சாதிப்பார்
கையுள் நன்முகம் வைக்கும் -திருக் குறுங்குடி நம்பி உடைய செந்தாமரைக் கண்ணும் -அல்குலும் இடையும் வடிவும் திருத் தோள்களும்
பராங்குச நாயகிக்குத் தோன்றி –அவற்றை அணைக்க கை எட்டாமையாலே கையுள் முகம் வைத்து நைகிறாள்-
இறைவனை ஆரக் கண்டு களித்ததும் பண்டை வல்வினை பற்று அறுத்ததையும் விட -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள்
சொல்ல வைத்ததே ஆழ்வாருக்கு பேரின்பமாம்
அமரர்க்கு அரியான் -தமரர்கள் -நித்ய சூரிகள் -அவர்கள் பிரயோஜனாந்த பரர்கள் -பயனைப் பெற்று எதிர் அம்பு கோத்தும் இருப்பவர்கள் அன்றோ
மாடக்கொடி மதிள் தென் குளந்தை வண் குடபால் நின்ற மாயக் கூத்தன் -எல்லோரையும் மயக்கி ஒரு கூத்து காண்பான் –
மாயையினால் திருவவதாரங்கள் -குடக் கூத்து -மரக்கால் கூத்து -குரவைக் கூத்து -எண்ணும்படியான பல வகைக் கூத்துக்கள் செய்பவன்
நம் போல்வார் நெஞ்சினாலும் நினைக்க முடியாதபடி ஒரு மாயக் கூத்தைச் செய்பவன் –
கண்ணனாய் திருவவதரித்து பதினெட்டு வகையான கூத்துக்கள் செய்து அருளியதை அற்புதமாக விளக்கிக் காட்டி அருளுவார் –
வம்பு அவிழ் கோதை பொருட்டா –பாடலில் தோல் புகழ் -வருத்தம் இன்றி செய்து அருளியதை சொல்வதாக நினைப்பார்
அவனது சௌலப்யம் புரை அறக் கலக்கும் தன்மையையே குறிக்கும்
ஆதி யாம் சோதி உருவை அங்கு வைத்து -இங்கு பிறந்த -அங்கெ வைத்து விட்டு இங்கே பிறந்த என்று அல்லாமல் அங்குவைத்து
முழுச் சொல்லாகக் கொண்டு அங்கு உள்ளபடியே கொண்டு என்றே பொருள்
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் -அந்தர்யாமித்வம் -இத்தையே புகழு நல் ஒருவன் -கால தேச அவஸ்தா
பரிச்சேதம் இல்லாமல் எல்லாப் பொருள்களிலும் தானாக இருப்பதால் அனந்தன் என்ற பெயர் கொண்டவன்
துன்பமும் இன்பமும் ஆகிய –இன்புறும் இவ்விளையாட்டு உடையான்
-லோக வத்து லீலா கைவல்யம் -ஸ்ரீ பிரம்மா ஸூ த்ர ஒப்புமை காட்டி அருளுவார்
சேர்ந்தார் தீ வினைக்கு —அவனைச் சேர்ந்தார் தீ வினைகள் -பாவ சம்பந்தம் அறவே ஒளிந்து விடும் -மாற்றாருக்கு அனுபவித்தே தீர்க்க வேண்டும்
-என்று ஸ்ரீ பாஷ்ய பொருள் சாதிப்பார் –இங்கனமே -உளன் எனில் உளன் -உலகில் திரியும் கரும கதியாய்
-வாழ்தல் கண்டீர் -வாரிக் கொண்டு -நாகத் தணையான் -பாடல்களுக்கும் உரை சாதிப்பார்
உள்ளதும் அல்லதும் -அஸ்தி -நாஸ்தி –சித் அசித் -சத்ய-அந்ருத-சப்தங்கள் உபநிஷத் –இவ்வாறே தன்னில் மூவர் முதலாய -பாசுரத்திலும் –
கரு மாணிக்க மாலை -அனந்யார்ஹத்வம்
நெடுமாற்கு அடிமை -பாகவத சேஷத்வம் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -நம பத -யாதாம்ய சரம அர்த்தம்
இறைவன் மேல் உள்ள பக்தியின் உறைப்பே பாகவத சேஷத்வம் -சம்பந்த சம்பந்தம் அளவில் பெருகிப் பாயுமே
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம் -மாய்த்தோம் தன்மை வினை முற்று இருப்பதாலும் முன்னிலை வினை முற்று இல்லாமையாலும் –
தம்மைப் பற்றிச் சொல்வதாக சங்கை வரும் -முகுந்தமாலையிலும் இது போலே -நாம் நன்றாக வாழ்ந்து விட்டோமே -பிறரைச் சொன்னபடி
ஊழி தோறு ஊழி–உலகுக்கு நீர் கொண்டு –மதுசூதன் பாழிமையில் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே –
உலகம் எல்லாம் வெள்ளம் இடும்படி வேண்டிய நீரைச் சொரிந்து –
குன்றம் எடுத்த பிரான் அடியரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -ஆயர்கள் உடனும் -பின்புள்ள அடியவர்கள் உடனும் –
ஒன்றி நின்ற சடகோபன் என்ற உரைகள் நீர்மையிலும் -அழகிலும் ஈடுபட்டவர்களுடன் கூடி நின்று தாமும்
ப்ரீதராய் ப்ரீதிக்கு போக்குவீடாகச் சொன்ன பாசுரம் –
அமரர் தொழப்படுவானை —-அவன் தன்னோடு ஒன்றாக அமர துணிய வல்லவர்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம் –
அமரர் தொழப்படுவானை-பக்தி பண்ண வல்லவர்கள் -மூழ்கியவர்கள் -அத்யவசாயம் உள்ளவர்கள் -என்று கொண்டு
அல்லாதவர் எல்லாம் பக்தி கை வராதவர்கள் என்று இல்லை
கைவல்யத்தில் அகப்படாதே இறைவனுடைய குணங்களுக்கு தோற்றவர்கள் எல்லாம் -என்பதே பிரகரணத்துக்கு சேரும்
முந்திய பொருள் பொருந்தாது -ஐந்தாம் பாட்டில் காட்டியபடியே
என் நா முதல் வந்து புகுந்து நல்லின்கவி -ஆழ்வார் தமது வார்த்தை
மறையாய நால் வேதத்துள் -என்றே உண்டு -மறையினுள் நின்ற -நால் வேதத்தினுள் நின்ற -எண்ணாமல்
மறை –மறைத்துக் காட்டும் -நாஸ்திகர்களுக்கு மறைத்துக் காட்டும்
வேதம் -விளக்கிக் காட்டும் -இறைவன் உண்டு என்பதை வெளிப்படுத்திக் காட்டும்
மறையாய நால் வேதம் -சொல் திறமையைக் காட்டும்
கேட்பார்கள் கேசவன் -திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே –சாயுச்யம் பெற்ற படி
கேட்குமவர்கள் -பெரும் குணம் உடையவர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்தும் அவர்கள் இடம் சென்று கேளாமல் மற்றும் கேட்பாரோ என்றபடி
செய்கின்றது என் கண்ணுக்கு –மாயத்தினால் எங்கும் மன்னி –மாயம் -ஆச்சர்யம் விட இச்சையாலே
-நித்தியரும் முக்தரும் எங்கும் மன்னி -பொருள் உரைப்பர்
நின்றிடும் திசைக்கும் -திருக் குறுங்குடி நம்பி அழகை நினைத்து சற்று நேரம் நிலைத்து நிற்பது பின்பு அறிவற்ற பொருள் போல் இருப்பது
மாரீசன் ஸ்ரீ ராமனின் உருவத்தை ஒவ் ஒரு மரத்திலும் கண்டது போலே என்று காட்டி அருளுவார்
விரும்பிப் பகவரைக் காணில்–வியலிடம் உண்டானே என்னும் -பகவர் -துறவி-ஞானம் அனுஷ்டானம் நிறைந்தவர்கள் -ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் –
பூவை வீயாம் மேனிக்கு -பூவைவீ -பூவைப்பூ காயாம்பூ -பொருள் -வீ பூவிற்கு பெயராக வீ கமழ் நெடுஞ்சினை புற நானூறு தொடர் காட்டி அருளுவர்
ஈடும் எடுப்பும் –ஈசன் மாடு விடாது என் மனனே -மாடு இடப்பொருள் -பொன் பக்கல் செல்வம் நிகண்டு
இங்கனம் -அணங்கே -செங்கண் மால் -தொடு யுண்ட -இடங்களிலும் நிகண்டு காட்டி உரை வழங்குவர்
மாதவன் என்றதே கொண்டு –தீது அவம் கெடுக்கும் அமுதம் -பிராயச் சித்தந்களாலேயே போக்கக் கூடிய பாவங்களை கெடுப்பான் –
எந்நன்றி கொன்றார்க்கும் -திருக்குறள் -இது போலே எட்டு இடங்களில் திருக் குறல் மேற்கோள் காட்டி விளக்கி உள்ளார்
கண்டவின்பம் –கண்டு கோடற்கு அறிய -ஒருவராலும் அளவிட்டு அறிய முடியாத -ஒரு வகையாக நிச்சயித்து இறைவனை அறிய முடியாது
கம்பர் யுத்த காண்ட காப்புச் செய்யுள் -காட்டி உரை சாதிப்பார்
யாமுடை ஆயன் தன மனம் கல்லாலோ -மாலைப் பூசல் –
சேவிக்க வாழ்விக்கும் எங்கோன் அரங்கன் திருக் கோயில் சூழ் காவில் கலந்து ஆசை தந்து ஏகினார் நெஞ்சு கல் நெஞ்சமோ -திருவரங்க கலம்பகம்
கல் நெஞ்சம் என்று கை வாங்க விடாமல் குழல் ஓசை கை வாங்க ஒட்டுகிறது இல்லையே
உலகம் உண்ட பெருவாயா -தெய்வக் கோமானே -எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம் தானே என்பதை
திருமலையில் விளங்கக் காட்டிக் கொண்டு நிற்பதை திருவரங்க கலம்பப் பாடல் கொண்டு காட்டி உரை சாதிப்பார்
தஞ்சமாகிய –அவை அல்லனாய் -என்பதற்கு -சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலான
தாய் தந்தையும் அவரே இனி யாவரே -எடுத்துக் காட்டி உரை சாதிப்பார்
ஆவி காப்பார் இனி யார் -குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அழியாதத மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று -த்வயத்தில் ஆழ்ந்த பொருளைக் காட்டி உரை சாதிப்பார்
சாது சனத்தை நலியும் -ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை –
பொன்னுலகு ஆளீரோ-ஆசார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பன்னலாவது விபூதி சதுஷ்டயமும் ஈஸ்வர த்வயமும் உண்டாகில் –
புவனி முழுது ஆளீரோ -உபய விபூதியும் தான் இட்ட வழக்கு -சிறை இருந்தவள் ஏற்றம் -பிராட்டி உடைய அருள் வெளியிட்ட படி
—————————————————————————————-
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply