கீழ் திருவாய்மொழியில் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று அருளிச் செய்தது
எம்பெருமான் உடைய திரு உள்ளக் கருத்தை அனுவாதம் செய்த படி அன்றோ –
ஆழ்வீர் உமக்கு தேக அவசானத்திலே பேறு என்று நாளிட்டுக் கொடுத்து அருளினான் ஆயிற்று
தேகத்தின் முடிவு என்றைக்கு –
இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது -என்றும்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ -என்றும் அருளிச் செய்தவர் ஆகையாலே
கட்டுக் குலைந்த திரு மேனி முடிவு அணித்தாகிறது என்று அறுதி இட்டுக் கொண்டார்
திரு நாட்டுப் பயணம் குறித்து சந்நாஹம் செய்ய முந்துற முன்னம் வழித் துணையாக
திரு மோகூர் காள மேகப் பெருமாளை பற்றுவதாகச் செல்லுகிறது இத் திருவாய்மொழி –
பரம பதம் செல்ல வழித்துணை வேண்டுமோ
அர்ச்சிர் தின பூர்வ பஷ ஷடு தங்மா சாப்த வாதாம் சுமத் க்லௌ வித்யுத் வருணேந்திர தாத்ரு மஹித் -நடாதூர் அம்மாள்
அர்ச்சிராதிகள் வழி நடத்த அன்றோ போகிறது
வேறு வழி துணை எதற்கு சங்கை பிறக்குமே
ததஸ் தம் ம்ரியமாணாம் து –அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்று
எம்பெருமான் தானே வழி நடத்தி செல்கிறான்
அப்படி வழித் துணையாகும் பெருமாள் சந்நிஹிதனாய் திரு மோகூரில் எழுந்து அருளி இருக்க
அவனையே வழி துணையாகப் பற்றுகிறார்
வழித் துணையாம் இடத்தில் ஞானத்திலும் சக்தியிலும் குறைவற்று
விரோதி நிரசன சமர்த்தனாய் இருக்கும் படிகளை அனுசந்தித்து அவ்வெம்பெருமானையே வழித் துணையாகப் பற்றுகிறார் –
———————————————————————————————————————————————————————————————
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே –10-1-1-
கொடிய தாபத்தில் அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காள மேகம் வர்ஷிப்பதையோ எதிர்பார்ப்பது சஹஜம்
இவனே தயரதன் பெற்ற மரகத மணித் தடாகம்
இந்த திவ்ய தேச தடாகம் இன்றும் தாள தாமரை தடம்
வான மா மலை சோலை -தேனமாம் பொழில்
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட
வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சித்து தலை வணங்கும் தண் அரங்கமே –
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று -பரம பதத்தைக் காட்டிலும் இனிதாய் இருக்குமே
அங்கு பகல் விளக்கு போலே
அசுரரைத் தகர்க்கும் தோளும் நான்குடைச் -அர்ச்சாவதாரத்தில் அனுபவத்திலும் விபவ அவதாரத்தில் அசுரர்களை தகர்த்த சாமர்த்தியம் ஆழ்வாருக்கு பிரகாசிக்க –
இப்போது அறிந்தபடி எங்கனே என்னில் -விடு காது ஆனாலும் தோடு இட்டு வளர்ந்த காது என்று தெரியும் காணும் –
சுரி குழல் கமலக் கனி வாய் காளமேகத்தை -நெடுநாள் பட்ட சம்சார தாபம் எல்லாம் ஆறும்படி
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ-என்றும்
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று -என்றும் -திருக் குழல் ஒழுங்கையும்
செவ்வித் தாமரை மலர்ந்தால் போல் உள்ள கடாஷ வீஷணத்தையும்
உள்ளுள்ள அபி நிவேசத்தை எல்லாம் கோள் சொலித் தரும் முறுவலையும் -அனுபவத்து அருளிச் செய்கிறார் –
இப்படிப் பட்ட காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-என்கிறார்-
———————————————————————————————————————————————————————————————————————————————-
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே –10-1-2-
திரு மோகூர் நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும்-
அவன் திருவடி கள் அல்லது வேறு புகலிடம் இல்லை
நலம் கழல் அவன்-திரு மோகூர் எம்பெருமானுக்கு திரு நாமம் சாத்துகிறார் –
நன்மை மிக்க திருவடிகளை உடையவன் -திருவடிகளுக்கு நன்மை யாவது -அனலோசித விசேஷா சேஷ லோக சரண்ய-என்று
கத்ய த்ரயத்தில் அருளிச் செய்தால் போலே இத்திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை என்னும்படி –
ஆஸ்ரிதர் உடைய குண தோஷ நிரூபணம் பண்ணாத திருவடிகள் -ஈடு –
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர் -நலம் கொள் விசேஷணம்-
நான் மறைக்கும் -அபௌருஷேயத்வம்-நித்ய -நிர்தோஷத்வம் -ஆகிய நலங்கள் –
-நான் மறை வாணர்க்கும் -வேத தாத்பர்யங்களை நன்கு அறிந்தும் -அனுஷ்டித்தும் -போருகை யாகிய நலங்கள்-
——————————————————————————————————————————————————————————————————————————————-
அன்றியாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம்மூவுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமதிடர் கெடவே –10-1-3-
எல்லா துயரங்களும் கெடுமாறு திரு மோகூர் சென்று கிட்டுவோம் –
ப்ரஹ்மாதி தேவர்களும் -அன்றியாம் ஒரு புகலிடம் இலம் என்று-என்றே அலற்றி –
பிரயோஜனாந்தர பரர்களும் அநந்ய பிரயோஜனர் போலே
வஞ்சமாக பேசினாலும் அவர்கள் உடைய அநிஷ்ட நிவாரணத்தையும் இஷ்ட ப்ரபாணத்தையும் செய்து நிற்பான் -வென்றி இம்மூவுலகளித்து உழல்வான்-
வென்று -என்றது -அவர்கள் விரோதிகளை வென்று -என்றபடி-
—————————————————————————————————————————————————————————————————————————
இடர் கெட வெம்மைப் போந்ளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர்கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே –10-1-4-
தேவரும் முனிவரும் -இடர் கெட வெம்மைப் போந்ளியாய் என்று-பல காலும் ஏத்தி தொடருகின்றார்கள்
அவர்களுக்காக எம்பெருமான் செய்வது என் என்னில் -படர்கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான்-ஸூ க ஸூ ப்த பரந்தப -என்றபடி
கிடந்த கிடையிலே அவர்கள் இடர் கெடும்படி இருப்பன் –
சங்கல்ப மாத்ரத்திலே எதையும் நிர்வஹிக்க வல்லவன்
ஈஸ்வர அபிமானிகளான தேவர்களும்
சாப அனுக்ரஹ சமர்த்தர்களான முனிவரும்
பாம்பனை பள்ளி கொண்டு இருக்கும் திருக் கோலத்திலே தொடர -என்றுமாம்
சுடர் கொள் சோதியை-இது ஸ்வா பாவிகமான தேஜஸ் சொன்னது அன்று
பிரயோஜனத்தை விரும்பி ஆகிலும் நம்மைத் தேடி வருகிறார்களே -வடிவு புகர் பெற்ற படி
அன்றிக்கே
ஸ்வயம் பிரயோஜனமாக இல்லாமல் அல்ப பலன்களுக்கு வருகிறார்களே பரிதாபம் தோற்ற என்றுமாம்
ஆழ்வார் உடைய இடர் வேறு
அவர்கள் உடைய இடர் வேறு
ஏஹி பஸ்ய சரீராணி -ராஷசர் தின்ற உடம்பைக் காட்டி உடம்புக்கு பூண் கட்டப் பார்ப்பார்கள்
அழுக்கு உடம்பு இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று உடம்பை கழற்றத் தேடுவார் ஆழ்வார்
ஆக இடரில் நெடு வாசி உண்டே-
————————————————————————————————————————————————————————————————————–
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூவுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்காடுதும் கூத்தே –10-1-5-
தொண்டீர் வம்மின்-யாரும் இலக்கக் கூடாது என்று மீண்டும் தொண்டீர் வம்மின்-என்கிறார்
இன் கனி தனி யருந்தான்
ஏக ஸ்வாது ந பஞ்ஜீத
திரு மோகூரை வலம் செய்து கூத்தாடலாம் வாருங்கோள் என்கிறார்
அங்குள்ளவன் -சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்-
சுடர் ஒளியையும்
வடிவு அழகையும்
தனது முதன்மையையும்
காட்டி நம்மை ஈடுபடுத்திக் கொண்டவன்
தனி முதல்வன் -படைப்பவன் என்றார்
படைத்து விடுகை அன்றிக்கே -வலியார் அபஹரித்தால் எல்லை நடந்து கொண்டு ரஷிப்பவன் -அண்ட மூவுலகளந்தவன்
கொண்ட கோயிலை-தன் உள்ளத்தால் உகந்து பரிஹரித்துக் கொண்ட திவ்ய தேசம்
வலம் செய்தும் -கூத்தாடியும் -பக்தர்களை அழைக்கிறார்
———————————————————————————————————————————————————————————————————————
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை அடி யன்றி மற்றிலம் அரணே –10-1-6-
கூத்தன் -அழகிய நடையை உடையவனாய் -நெஞ்சை கவருபனாய் இருக்கை
நடக்கப் புக்கால் வல்லார் ஆடினால் போல் இருக்கை -ஈடு
அக்ரத ப்ரயயௌ ராம -யௌ என்னாமல் ப்ரயயௌ என்று நடை அழகை காட்டினால் போலே
இந்த நடை அழகு ராம பிரான் மட்டும் இன்றி கண்ணபிரான் இடத்திலும் இருப்பதால் கோவலன்
கானகம் படி யுலாவி யுலாவி கரும் சிறுக்கன் குழலூதின போது
மேனைகையோடு திலோத்தமை யரம்பை உருப்பசி யரவர் வெள்கி மயங்கி
வானகம்படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே
குதற்று வல்லசுரர்கள் -ஜாதியோ அசுர ஜாதி -வன்மையே வடிவெடுத்தவர்கள்
அதற்கு மேலே -குதற்று -சாதுக்களுக்கு பீடை செய்வதையே தொழிலாக கொண்டவர்கள்
அப்படிப்பட்டவர்களுக்கு கூற்றம் -மிருத்யு
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்-இன்று ஆஸ்ரயிக்கும் நமக்கும் நித்ய ஆஸ்ரிதர்களான வர்களுக்கும் இன்பன்
வாசி அற்று இருந்தாலும் இன்பனாம் இடத்தில் முந்துற நமக்கு
அப்படிப்பட்டவன் திரு மோகூர் ஆத்தன் -ஆப்தன் -பரம பந்து
தான் தனக்கு இல்லாத மரண சமயத்தில் -அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி -என்னும் பரம ஆப்த தமன் -ஈடு
இப்படிப்பட்ட ஆப்தன் உடைய தாமரை அடியை அன்றி வேறு அரண் இலோம் –
வேறு சிலரை ரஷகராக உடையோம் அல்லோம் –
—————————————————————————————————————————————————————————————————————————-
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்று நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே –10-1-7-
வான் பெரும் பாழ் -மூல பிரகிருதி -மோக போஷங்களை விளைத்துக் கொள்ள வல்ல பெரிய நிலம்
தனி முதலா -பெரும் பாழுக்கு விசேஷணம்
சுற்றும் நீர் படைத்து-ஆவரண ஜலம் படைத்து
அதன் வழித் தொல் முனி முதலா முற்றும் தேவரோடு உலகு செய்வான்-நான்முகன் தேவர்கள் ஜாதி உலகு எல்லாம் படைத்து
திரு மோகூர் சுற்று நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே
-பிரதஷிணாதிகள் செய்து துயர் விரைவில் தொலையும் -வழித் துணை இல்லை என்று நாம் படுகிற துக்கம் தொலையும் -என்கை
————————————————————————————————————————————————————————————————————————————————
துயர் கெடும் கடிதடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே –10-1-8-
வெளியே தாள தாமரைத் தடாகம்
உள்ளே தயரதன் பெற்ற மரகத மணித் தடம்
கண் கை கால் தூய செய்ய மலர்களா சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -8-5-1-
கர சரண சரோஜே காந்திமன் நேத்ர மீனே ச்ரம மூஷி புஜவீசி வ்யாகுல அகாத மார்க்கே ஹரி சரசி -முகுந்த மாலை
உத்புல்ல பங்கஜ தடாகமிவ -என்றும்
பிப நயன புரஸ் தே -என்றும்
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் பட்டரும் அருளிச் செய்தார்
வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே-இத்தால் அரக்கர்களை
பெருமாள் தானாக முடித்திலர்
விட்டில்கள் விளக்கில் தாமாக விழுந்து முடிந்து போவது போலே
தாங்களாகவே எதிரிட்டு முடிந்து போனார்கள் –
பெயர்கள் ஆயிரம் உடைய-தயரதன் பெற்ற மரகத மணித்தடம் அன்வயிக்கும்
அரக்கர்கள் இடமே அன்வயிக்கும்
ஈஸ்வரன் ரஷித்துப் படைத்த பெயர்களோபாதி போருமாய்த்து இவர்கள் பர ஹிம்சை பண்ணி படைத்த பெயர்
யஜ்ஞசத்ரு -ப்ரஹ்ம சத்ரு என்றால் போலே இ றே இவர்கள் பெயர்-ஈடு ஸ்ரீ ஸூ க்தி
——————————————————————————————————————————————————————————————————————
மணித்தடத் தடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால்தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே –10-1-9-
தம்முடைய லாபத்தை பேசி மகிழ்கிறார்
தெளிந்த தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும்
அப்போது அலர்ந்த செந்தாமரை ஓலே இருக்கிற திருக் கண்களையும்
பவளம் போலே சிறந்த திரு அதரத்தையும் உடையனாய்
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல நான்கு திருத் தோள்களையும் உடையனாய்
அத் திரு தோள்களுக்கு இரை போரும்படியான எதிரிட்டு வரும் அசுரர்களை துணிக்குமவனான எம்பெருமான்
நித்ய வாசம் செய்து அருளும் இடமாய் சோலைகள் சொந்த திரு மோகூர் திருப்பதி யானது கிட்டிற்று-
—————————————————————————————————————————————————————————–
நாம் அடைந்த நல்லரண் நமக்கு என்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்று அடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திரு மோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள் –10-1-10-
அடியார்களின் விஷயங்களில் அபீஷ்ட விக்ரஹம் பண்ணி ரஷித்து அருளும் எம்பெருமான்
வர்த்திக்கும் திவ்ய தேசம் திரு நாமம் சொல்லி ஏத்துங்கோள் என்று தம்முடன் அன்வயம் உடையார் இடம் அருளிச் செய்கிறார்
நல்லமரர் –தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்று -நாம் அடைந்த நல்லரண்-என்று அடைந்தால்-
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான்
ஆபத் ரஷணம் அநு ரூபமாக வேண்டின படி பரிக்ரகுஇக்கும் திரு மேனி தானே காம ரூபம்
இச்சையினால் பரிக்ரஹிக்கப் பட்ட ரூபம்
இந்த திவ்ய தேச திரு நாமத்தை வாயாலே சொல்லி அனுசந்தித்து
அன்பு மிகுதியினால் ஏத்துங்கோள்-
———————————————————————————————————————————————————————————————
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே –10-1-11-
சரீர அவசானத்தில் வழித் துணை இல்லை என்ற துயர் தீரும்
கண்ணன் குடமாடும் பொழுது -நம் சேஷ்டிதத்தை உகப்பார் எல்லாரும் வந்து கண்டு வாய் படைத்த
பிரயோஜனம் பெறும்படி ஏத்துங்கோள் -என்று தானே சொல்லிக் கொண்டு ஆடினான்
இத்தால் பிறருக்கும் போலே தனக்கும் மநோ ஹரமான சேஷ்டிதங்களை உடையவன் என்றது ஆயிற்று
ஆழ்வார் வாசிகமான அடிமையிலே அதிகரித்தார்
அவை தகுதியான ஆயிரமாக அவதரிக்கத் தொடங்கிற்று
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் –
முகில் வண்ணன் அடி சொன்ன சொல் மாலை ஆயிரம்
திருவாய் மொழி ஆயிரமும் ஸ்ரீ ரெங்க நாதன் திருவடிகளுக்கே சமர்ப்பிக்கப் பட்டது
திரு வேங்கடத்துக்கு இவை பத்தும்
திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை
இவை பத்தும் திருக் குறுங்குடி அதன் மேல் -என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்கிறார் -என்றார்களாம்-
———————————————————————————————————————————————————————————————–
திருவாய்மொழி நூற்றந்தாதி –
தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காள மேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
கேதம் உள்ளது எல்லாம் கெடும் –91-
——————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply