திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–ஓராயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்–9-3-

கீழ்த் திருவாய் மொழியில்
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்று
இடம் கொள் மூ வுலகும் தொழ எழுந்து அருளாய் -என்றும்
மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே -என்றும்
பலவாறு பிரார்த்தித்தார்
நாம் நாராயணன் என்று அறிவீரே
என்னுடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேண்டுமா
உமக்கும் நமக்கும் உண்டான குடல் துவக்கி அறிந்து வைத்தும் இப்படி பிரார்த்திப்பதும் கிலேசிப்பதும் தகுதி அன்று -என்று சொல்லி அருள
அது கேட்டு ஆழ்வார் ஒருவாறு சமாஹிதராய் -இது என்ன சீலகுணம் என்று ஈடுபட்டு அருளிச் செய்யும் திருவாய் மொழி இது –
வார்த்தை கேட்டு சமாஹிதர் ஆவாரோ என்ற சங்கை வேண்டாம்
பெய்யும் மா முகில் போல் வண்ணா உந்தன் பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ –
பெருமாள் ஸ்ரீ கௌசல்யையார் தேவி இடம் வார்த்தை சொல்லக் கேட்டு காட்டுக்கு உடன்கூடப் போவது தவிர்ந்து மங்களா சாசனம் பண்ணி அருளினாரே
இத் திருவாய் மொழிக்கு நடுவில் திரு வீதிப்பிள்ளை வேறுஒரு அவதாரிகை சாத்தி நிர்வஹிப்பார்
கண்கள் சிவந்து -பதிகம் தொடங்கி திருமந்த்ரார்த்தம் அருளிச் செய்யப் பட்டு வந்து
கீழ் -பண்டை நாளாலே -கைங்கர்ய பிரார்த்தனை பண்ணும் முகத்தாலே வ்யக்த சதுர்த்தியின் அர்த்தம் அளவாக
அர்த்தம் அனுசந்திக்கப் பட்டு தலைக் கட்டிற்று
இப்படி அர்த்த அனுசந்தானம் பண்ணினவர் அந்த அர்த்தம் திரு அஷ்டாஷர மகா மந்த்ரமே என்று வெளியிட வேண்டி இப்பதிகம் அருளிச் செய்கிறார்
நாராயணன் நாங்கள் பிரான் அவனே -என்றதில் முழு நோக்கு இந்த நிர்வாஹத்தில்
ஷட் அஷரி-அஷ்டாஷரி -த்வாதச அஷரி -குன்றும் வ்யாபக மந்த்ரங்கள்
ஆகவே அர்த்தம் மட்டும் வெளியிட்டால் பயன் இல்லையே
சப்தமும் வெளியிட்டு பெரிய திரு மந்த்ரமே -அஷ்டாஷரியே மிகச் சிறந்தது என்று காட்டி அருள வேண்டுமே –
இதுவே இரண்டாவது நிர்வாஹத்தின் சாராம்சம் –

———————————————————————————————————————————————————————————————————————————-

ஓராயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேராயிரம் கொண்டதோர் பீடுடையான்
காராயின காள நன் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே –9-3-1-

நம் அபேஷிதம் நாராயணன் ஆகையால் தலைக் கட்டி அருளுவான் இது திண்ணம் –
ஒரு திருநாமமே ஆயிரம் திரு நாமங்களின் கார்யம் செய்ய வல்லது
தேவோ நாம சஹஸ்ரவான் -எண்ணிறந்த திரள்
ஐதிகம் -கோயில்யாத்தான் புத்திர வ்யோகத்திலே பட்டர் ஸ்ரீ பாதத்திலே தம் சோகம் எல்லாம் தோற்ற விழுந்து கிடக்க
அவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –
பட்டரையே தெய்வமாக கொண்டு பிள்ளைக்கும் அதே பெயரை வைத்து இருந்தார்
நீ நம்முடைய திருநாமம் இடப்பெற்ற பிள்ளை போனான் அன்று என்றோ துக்கப் படுகிறது
அந்த திருநாமம் உடைய நாம் இருக்க துக்கப் படுவான் என் -என்று பட்டர் அருளிச் செய்தாராம்
திரு நாமம் உடைய எம்பெருமான் நிலை நின்று அருளி நம்மை காத்து அருளுவான் என்பதைக் காட்ட இந்த சம்வாதம்
கரை கட்டா காவேரி போலே பறந்து உள்ள திரு நாமங்களை ஒரு முகம் செய்து அனுபவிக்கப் பாங்காக
திரு மங்கள விக்ரஹம் அமைந்ததே என்கிற ஹர்ஷம் தோற்ற காராயின காள நன்மேனியன் -என்கிறார்
நாராயணனே நங்கள் பிரான் அவனே -என்று திரு நாமத்தை முக்த கண்டமாக சொல்லி முடிக்கிறார்
அவதாரிகையில் முதல் நிர்வாஹத்துக்கு நாராயணன் -அர்த்தத்தில் நோக்கு
இரண்டாம் நிர்வாஹத்துக்கு சப்தத்தில் நோக்கு-

——————————————————————————————————————————————————————————————————————-

அவனே யகல் ஞாலம் படைத்து இடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே –9-3-2-

பொருளை பன்னி உரைக்கிறார்
அவனே யகல் ஞாலம் படைத்து இடந்தான் -இத்தால் காரணத்வம் ரஷகத்வம் காட்டி அருளுகிறார்
ஏவகாரத்தால் சஹகாரி ஒன்றும் அபேஷியாதே பெருமை தெரிவிக்கப் பட்டது
நாராயண அனுவாகத்தில் -ப்ரஹ்மா ச சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரம ஸ்வராட் -ச ச ச என்ற உபநிஷத் சாயலில் அவனே அவனும் அவனும் அவனும் -என்கிறார்
சகல சேதன அசேதனங்களும் அவன் இட்ட வழக்கே
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையால் உணர்ந்தார்

————————————————————————————————————————————————————————————————————————————

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருளாதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே –9-3-3-

வேதங்களாலும் வேத வித்துக்களாலும் அறிய முடியாத எம்பெருமானை நான் அறிந்தேன்
அரும் பொருள் அறிந்த வேத நூல்கள் -அனுமானத்தாலும் பிரத்யஷத்தாலும் அறிய முடியாத அந்த அரும் பொருளை –
அன்றியே
அறிந்தவையே இருக்கிற வேதங்களிலே அறிந்து கொள்ள முடியாத அர்த்தங்களை
நிஷ்கர்ஷித்து தரவல்ல ப்ரஹ்ம சூத்ரம் -இதிஹாச புராணம் நூல்கள்
ஆக இப்படிப் பட்ட சாஸ்திரங்கள் எல்லாம் –அறிந்தன கொள்க அரும் பொருளாதல்-
-அரும் பொருளாதல்-அறிந்தன கொள்க -என்று அந்வயம் -எம்பெருமான் அறிவதற்கு அரிய பொருள் என்பதை அறிந்தன
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் –அறிந்தோம் சொன்னாலும் -அரிய முடியாதவன் என்றே அறிந்தன –
வேதங்கள் கிடக்கட்டும்
வேத வித்துக்கள் வால்மீகி வ்யாசாதிகள் நிலை என்ன
அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே-அரி என்கிற திரு நாமத்தைப் பற்றிக் கொண்டு
ஹரணாதேவ துக்கா நாம் ஹரிரித்ய பிதீயதே-என்றபடி
துரிதன்களை போக்குமவன் என்பதை மட்டும் அறிந்தார்கள்
அவனுடைய போக்யதையையும்
அவனே நிரபேஷ உபாய பூதன் என்பதையும்
தெரிந்து கொண்டார்கள் அல்லர் –
நோய்கள் அறுக்கும் மருந்து -என்ற இவ்வளவே தெரிந்து கொண்டார்கள் –
கீழ்ப் பாட்டில் முடிவில் அறிந்தனமே -என்பதை இங்கேயும் ஆகர்ஷித்துக் கொண்டு சகல வியாக்யானங்களும் அருளிச் செய்யும் –

—————————————————————————————————————————————————————————————————————————————————–

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே –9-3-4-
நித்ய சூரிகளுக்கு பரம போக்யனாய் இருந்து வைத்து
அங்கு நின்றும் போந்து ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து
நம்மையும் நித்ய சூரிகள் நடுவே கொண்டு வைக்கும் எம்பெருமானை ஒருவாறு கிட்டப் பெற்றோம்
நெஞ்சே அவனை விடாதே கொள் –
உன் அழகாலே எங்கள் போகத்துக்கு வர்த்தகன் ஆனவனே என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் -ஆறாயிரப்படி
உன்னுடைய அனுபவத்தால் எங்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு வர்த்தகன் ஆனவனே -ஈடு
நம -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -களையாவது தனக்கு எண்ணப் பண்ணுகி -முமுஷூப்படி
இப்பிரார்த்தனை நம்மது மட்டும் இல்லை
திரு நாட்டிலும் உண்டு -மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு -என்னா நின்றது இ றே-
அவ்விடத்துக்கு மணவாள மா முனிகள் -கந்தல் கழிந்த அந்நிலத்திலும் ஸ்வ போக்த்ருத்யோதயம் உண்டாமோ என்ன அருளிச் செய்கிறார் —

-மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு -என்னா நின்றது இ றே-என்று
அதாவது -உன்னுடைய அனுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு ஸ்வ போக்த்ருத்வ புத்தியை விளைவித்து
ஸ்வரூபத்தை அழியாதபடி சாத்மிப்பிக்கும்
ச்வரோப்ப அணு ரூபமாக அவன் ஆனந்திக்க அது கண்டு ஆனந்திப்பார் நித்ய முக்தர்களும்
இந்த அர்த்தம் குஹ்ய தமம் என்பதால் ஆறாயிரப்படி முதலியவற்றில் தெரிவிக்காமல்
ரகஸ்ய கிரந்தங்களில் வெளியிட்டு அருளுகிறார்கள் முன்னோர்
பிணிக்கு மருந்து -பசிக்கு -மருந்து இரண்டு வகை உண்டே
ஓன்று பிணியைப் போக்கும் ஓன்று பசியை உண்டாக்கும்
அது போலே போக மகிழ்ச்சிக்கு மருந்து -மகிச்சியை அடக்குபவன் என்றும் விருத்தி செய்விப்பவன் என்றும் கொண்டு இரண்டு அர்த்தங்கள்
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா-அஷ்டச்லோகி -பட்டர் இதே அர்த்தம் காட்டி அருளுகிறார்
கரும் தேவன் அம்மான் -நித்ய சூரிகளுக்கு போகமான வடிவை காட்டி என்னை ஈடுபடுத்திக் கொண்டவன்
கண்ணன் -அவதார முகத்தாலும் உபகாரம் செய்து அருளியவன்
விண்ணுலகம் தரும் தேவன் -சோரேல் கண்டாய் மனமே –
நம்மை பெற எவ்வளவு கிருஷி பண்ணினான்
அந்த கிருஷி ஒருவாறு பலித்து இருக்கும் பொழுது விபலமாக்கி விடாதே கொள்

———————————————————————————————————————————————————————————————————————————————————————-

மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூம் தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே –9-3-5-

கீழ் சொன்னதையே வற்புறுத்தி சொல்கிறார்
மனமே யுன்னை வல்வினையேன் இரந்து கனமே சொல்லினேன்-பால் குடிக்க கால் பிடிக்கவோ
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -உனக்கு பிராவண்யம் இயற்கையாக மிக்கு இருக்கச் செய்தேயும்
நான் செல்லாமையாலே சொல்லுகிறேன் இத்தனை உனக்கு சொல்ல வேண்டியது இல்லை
கனகம் -கனம் -திடம் -பொன் போன்ற பரமார்த்தம்
பரம போக்யனான அவனை
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய் யுடைய அம்மான் –
புனமேவிய பூம் தண் துழாய் அலங்கல் இனமேதும் இலானை அடைவதுமே
தன்னிலத்திலே வளர்ந்து
அழகியதான திருத் துழாய் மாலையை அணிந்து
போக்யதை மிக்க சர்வேஸ்வரனை விட்டுப் பிரியாமை -இவ்வர்த்தம் திடமாக அருளிச் செய்கிறார்-

———————————————————————————————————————————————————————————————————————————————-

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவர்க்கே யொருங்காகவே–9-3-6

திரு உள்ளத்தை வேண்டினார்
வேண்டுதல் பலித்து நினைந்து நைந்து உள் கரைந்து உருகுகிற படியை பேசுகிறார் இதில்
எம்பெருமான் பெரிய பிராட்டியார் உடன் சம்ச்லேஷ்க்கிற படியை நினைத்து நெஞ்சு உடைகிறதாம்
அதுக்கும் மேலே
அவன் ஆஸ்ரித விரோதிகளை போர்க்களத்தில் முடித்து
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹரிஷினாம் ஸூகாவஹம் பபூவ ஹ்ருஷ்டா வைதேஹி பர்த்தாரம் பரிஷச்வஜே -என்கிற சந்நிவேசத்தை சிந்தித்து உடைகிறதாம்
அதுக்கும் மேலே
பிரயோஜனாந்த பரர்களுக்காக திருமேனி நோவ கடல் கடைந்தத்தை நினைத்து உடைகிறதாம்
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் உடைவதும் அவர்க்கே யொருங்காகவே
அவன் பனிக்கடலைக் கடைய இவர் மனக்கடல் உடையப் புக்கது
விரகராய் இருப்பார் கோழை களாய் இருப்பார் பக்கல் த்ரவ்யம் வாங்க நினைத்தால்
முந்துற மிடுக்கராய் இருப்பாரை நெருக்கி வாங்கவே இவர்கள் தாங்களே கொடு வந்து கொடுப்பார்களே
அப்படியே அவனும் மஹத் தத்வமான கடலை உலக்கை விடுநகமிட்டு நெருக்கி அதன் நல்லுயிரை வாங்க
இவருடைய திரு உள்ளம் உடையத் தொடங்கிற்று -ஈடு
ஆழ்வார் திரு உள்ளம் உருவதற்காகவே எம்பெருமான் கடல் கடைந்தான் –

——————————————————————————————————————————————————————————————————————————————————

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தானுறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் என்னும் இராப் பகல் இன்றியே –9-3-7-

அவன் இவ்விடத்தே செய்து அருளின சேஷ்டிதங்களை நினைத்து உருகின நெஞ்சு அவன் உறையும் அவ்விடம் செல்ல ஆசைப்படா நிற்கிறது
ஆகம் சேர் நரசிங்கமதாகி -ஒரே ஆகத்திலே நரமும் சிம்ஹமும் சேர்ந்து -விலஷண சங்கல்பத்தாலே
விருத்தே வையக்ரீ ஸூகடித சமாநாதிகரனே ந்ருசிம்ஹத்வ பிப்ரத் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –
ஆகம் -தம் திரு உள்ளத்தை சொல்லி -நெஞ்சிலே மறக்க ஒண்ணாத ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தி என்றுமாம்
ஒரு சிறுக்கனுக்காக -செருக்கனை முடிக்க ஒரு கால் தோன்றி மறைந்தாலும்
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்குமே
ஒராகம் வள்ளுகிரால் பிளந்தானுறை -ஹிரண்யன் முரட்டு உடலை வாயால் சொல்லக் கூசி
மாக வைகுந்தம் மஹாகம் -பரமே வ்யோமன் -பெருமை தங்கிய வைகுந்தம்
இரவும் பகலும் வாசி இன்றி மனம் என்னுமே
சம்சாரிகளுக்கு இரவு ஒரு கார்யம் பகல் ஒரு கார்யம்
ஆழ்வாருக்கு எப்போதும் -ஒரே கார்யம் ஏகம்

——————————————————————————————————————————————————————————————————————————-

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீள் நிலத்துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே –9-3-8-

இந்த சரீரத்துடனே அனுபவிக்கும் திருமலை இங்கேயே இருக்க மாக வைகுந்தம் காண ஆசைப் படுவதில் என்ன விசேஷம்
இது வாஸ்தவமே
ஆனால் காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -எனக்கு இங்கும் அங்கும்
நித்யர்கள் -தேவர்கள் – அன்றோ திருவேங்கடம் வந்து தொழுவார்கள்
இன்றிப் போக இருவினையும் கெடுத்து -இரு வினை கருமங்களும் வாசனையோடு இல்லாமல் போக –
பாவம் போலே புண்ணியமும் ஹேயம் முமுஷூக்களுக்கு
ததா வித்வான் புண்யபாப விதூய –
அனுபவித்தே அற வேண்டிய இரண்டும் எம்பெருமான் கிருபா விசேஷத்தாலே அறுத்து ஒழிப்பது சில அதிகாரி விசேஷங்களில்
யாக்கை புகாமை-பின்னையும் வாசனைகள் ருசி இருந்தால் -யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டு தடுமாற வேண்டி இருக்குமே
உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் -அவசரம் பார்த்து நிற்கும் இடம் -உய்யக் கொள்ளுகைக்காகவே நிற்கிறான் –
சிறந்த இந்நிலத்தே உள்ளது
அறிவோம் ஆனால் காலாலும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
அங்கு சென்று தொழுமவர்கள் மனுஷ்யர்களாக இருக்க முடியாது
தேவர்களோ நித்ய முக்தர்களோ தான்

———————————————————————————————————————————————————————————————————————————–

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுதும் என்னுமிது மிகையாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே –9-3-9-

தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்யப் பாரித்தேன் முன்பே
ஆலோசித்திப் பார்த்தால் தூப தீப புஷ்பாதிகளைக் கொண்டு அடிமை செய்வோம் என்றால்
அது மிகை என்னும்படி அன்றோ உன் ஸ்வ பாவம் இருப்பது
என் செய்வோம் தடுமாறுகிறார்
பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேதம் -சுருதி வாக்யத்துக்கு
அதிகமான நம உக்தியை உனக்குச் செய்வோம் -என்பர் சிலர்
பூயிஷ்டாம் நம உக்திம்-தே விதேதம்-என்று அந்வயம் கொண்டு
நம் பூர்வர்கள் -தே பூயிஷ்டாம் நம உக்திம் விதேதம் -உம்முடைய திரு உள்ளத்தாலே மிகையான நம உக்தியைப் பண்ணக் கடவோம் –
தே -உன்னுடைய கருத்தாலே -நம சொல்வதையே மிகையாக கொள்பவன் நீ
உன் கருத்தாலே பூயிஷ்டமான
நாம் செய்யும் ஸ்வல்ப கிஞ்சித் காரத்தையும் மிகையாக -பஹூ வாக நினைக்கும் சீலத்தை நினைத்தவாறே –
ஆதலில் -தழுவுமாறு அறியேன் உன தாள்களே
பழுதில் தொல் புகழ் -ஆராதனைக்கு எளியன் என்கிற புகழ்
பாம்பணைப் பள்ளியாய் -சென்றால் குடையாம் -திரு வநந்த ஆழ்வான் போல்வார் அன்றோ உனக்கு அடிமை செய்து வாழ்வார்
வீழ்ந்து கிடக்கும் எனக்கும் அந்த வாழ்வு கிட்டுமோ -என்ற குறையைக் காட்டுகிறபடி –

—————————————————————————————————————————————————————————————————————————————

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழுவாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ்கோ உன் சீலமே –9-3-10-

பிரயோஜனாந்தர பரர்களாய்
அடிமைச் சுவடு அறியாதவர்களாய்
ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் முகம் காட்டி அருளும்
உனது சீல குணம் என் வாக்குக்கு நிலம் அன்றே
தாமரையில் பிறந்தான் என்ற துர்மானம் உடையவன் -அவனுக்கும் உடம்பு கொடுத்து –
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி சேஷத்வ லஷணம்
இன்றிக்கே கொலைக் கருவியான மழுவை உடைய ஒருவனுக்கும் திரு மேனியில்இடம் கொடுத்த சீலம் என்னே
அமரர்கள் -நித்யர்களுக்கு உரித்தாய் இருக்கும் இப்பெயரையும் தேவர்களுக்கு கொடுத்து
உனக்கு ஆட்பட்டவர்களாக சொல்லிக் கொண்டு திரியும்படி அவர்களுக்கும் முகம் கொடுத்து நிற்பதுவும் என்னே
காலதத்வம் உள்ள அளவும் கூடினாலும் உன் சீல குணத்தை எத்தைச் சொல்லி புகழ்வேன்-

—————————————————————————————————————————————————————————————————————————

சீலம் எல்லையிலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை யாயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே –9-3-11-

இப்பதிகம் கற்றார் திரு நாடு செல்லுகை ஆச்சர்யம் அன்று பிராப்தம்
எம்பெருமான் உடைய சீலாதிக்யமே பேசப்பட்ட திருவாய்மொழி
மஹதோ மந்தைஸ் சஹ நீரந்தரேண சம்ச்லேஷ -சீலம்
நெஞ்சை உருக்கும்படி இருக்கும் எல்லா குணங்களும் சீலம்
இப்பதிகத்துடன் ஏதேனும் ஒருபடி சம்பந்தம் கொண்டார்
கண்டபாடமாக சொல்லுவதோ
அர்த்தானுசந்தானம் பண்ணுவதோ
பிறர் அனுசந்திக்கக் கேட்பதோ
திருவாய் மொழி சேவிக்கும் இடத்தில் இருந்து உறங்குவதோ
செய்யும் அவர்கள் எல்லாரும் இப்பத்தினின் பாலர்
வைகுந்தம் ஏறுதல் பான்மையே-பித்ரு தனம் புத்ரனுக்கு தாயப் பிராப்தமாய் இருக்கும் இ றே -ஈடு-

————————————————————————————————————————————————————————————————————————————

திருவாய்மொழி நூற்றந்தாதி –

ஒர நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்துமை –83-

——————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading