அவதாரிகை
இதில் மனசை குறித்து -பகவத் விஷயத்தில் வாசிகமாக அடிமை செய்த
ஸ்ரீ ஆழ்வார் திரு நாமத்தை நிரந்தர அனுசந்தானம் பண்ணும்படி சொல்லுகிறது
மற்று ஒன்றும் வேண்டா மனமே மதிள் அரங்கர்
கற்றினம் மேய்த்த கழல் இணைக் கீழ் -உற்ற
திருமாலைப் பாடும் சீர்த் தொண்டர் அடிப் பொடி எம்
பெருமானை எப்பொழுதும் பேசு –
வியாக்யானம் –
மற்று ஒன்றும் வேண்டா மனமே-
என்று சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லா என்றபடி –திருவாய்மொழி -7-10-10-
பர வாசுதேவன் திரு நாமத்தையும் கூற விரும்பாமல் மற்று என்கிறார் இங்கே
மற்று ஓன்று என்று –
பரதத்வாதிகளின் பேரைப் பற்றி சொல்லுகிறது ஆதல்
புருஷார்த்தங்களைப் பற்றி சொல்லுகிறது ஆதல்
பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக வேறு ஒன்றும் வேண்டா என்கிறது
மனமே –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான மனசே –
அந்த பொதுவான ஆகாரத்தை குலைத்து –
அதில் ஒன்றையே என்றும் அனுபவிக்கப் பார் –
அது என் என்னில் —
மதிள் அரங்கர்
கற்றினம் மேய்த்த கழல் இணைக் கீழ் -உற்ற திருமாலைப் பாடும் சீர்த் தொண்டர் அடிப் பொடி எம்
பெருமானை எப்பொழுதும் பேசு -என்கிறது
மதிள் அரங்கர் –மதிள் திருவரங்கத்தானே -திருமாலை -42- என்று இவரே பேசும்படி
திருமங்கை ஆழ்வார் கட்டின மதிளை இட்டு நிரூபிக்கும்படியான கோயிலை உடையவர் –
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே -பெரிய திருமொழி -5-4-9- என்று அவர் தாமும் அருளிச் செய்தார் –
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் – திருவாய்மொழி -7-2-3-என்னும்படியான அரங்கர்
கற்றினம் மேய்த்த கழல் இணைக் கீழ் -உற்ற திருமாலைப் பாடும்-
அதாவது –
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை –9-என்று உபக்ரமித்து
மழைக் கன்று வரைமுன் ஏந்தும் -36–என்றும்
வள வெழும் தவள மாட மதுரைமா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்கமாலை
துளபத் தொண்டாய தொல் சீர் தொண்டர் அடிப் பொடி சொல் –45-என்றும் –
அவதாரத்தோடே அரங்கமாலை அனுசந்தித்து தலைக் கட்டிற்று –
அதிலே தேங்கின மடு இறே அர்ச்சாவதாரம்
கழல் இணை-விக்ரஹ ஏக தேசமான திருவடிகளை சொன்னது-விக்ரஹத்துக்கும் உப லஷணம் –
அழகிய பைம் பொன்னின் கோலம் கை கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
மலம் கன்று இனங்கள் மறித்து திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-
பெரிய பெருமாள் திருவடிகளை சேவித்தவாறே –
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை–என்னும் ஆகாரம் தோற்றி இருக்கும்
அதாவது
கன்றின் பின் போன சிறுக்குட்ட செங்கமல அடியும் வெதும்பி
உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -பெரியாழ்வார் திருமொழி-3-3-4-என்று
வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்கும்
காவிரித் தென்னரங்கம் மன்னிய சீர் மதுசூதனா உன்னை
இளம் கன்று மேய்க்க சிறு காலே யூட்டி ஒருப்படுத்தேன்-பெரியாழ்வார் திருமொழி–3-3-2-என்றும்
காவிரித் தென்னரங்கன் பண்டு அவன் செய்த கிரீடை –பெரியாழ்வார் திருமொழி—2-9-11-என்றும் -இறே
பட்டர் பிரான் அருளிச் செய்தது
வண்டினங்கள் ஆலிக்கும் சோலை அரங்கத்தரவணை யான் காலிப்பின்
போன கழல் -என்னக் கடவது இறே
மழைகன்று வரை முன் ஏந்தும்–36-என்றும்
கொடி ஏறு செந்தாமரைக் கை -பெரியாழ்வார் திருமொழி–3-5-10–என்னலாய் இருக்கும் –
குன்றம் ஏந்தி கோநிரை காத்தவன் என்னும்-திருவாய்மொழி-7-2-8-
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் -அரங்கமா நகர் அமர்ந்தான் -பெரிய திருமொழி -5-7-9-இறே –
திருமுக மண்டலத்தை கண்டவாறே
வெண்ணெய் உண்ட வாயன்-அமலனாதி பிரான் -10- என்று-கவ்ய சேவை பண்ணின ஆகாரம் தோற்றி இருக்கும் –
பாவ த்ரயமும் இப்படி சர்வ சேதன-சம் ரஷண சமர்தங்களாய் இருக்கும்
கேயத் தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும்-திருவாய்மொழி-6-4-2-
நீடு உலகுண்ட திறம் கிளர்வாய்-திருவாய்மொழி–6-6-3-
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுள் -பெரியாழ்வார் திருமொழி—-1-1-6-
முற்றம் உண்ட கண்டம் இறே –அமலனாதி பிரான் –6-
வாயிலும் வயிற்றிலும் வைத்து இறே நோக்குவது
கற்றினம் மேய்த்த கழல் இணைக் கீழ் -உற்ற திருமாலைப் பாடும்–
ஆஸ்ரித ரஷணதுக்கு உறுப்பாக-அதி ஸூ லபமான திருவடிகளுக்கு ஒக்கும்படியான
அதிலே ஊன்றி அடிபட்டு –
அடி சூட்டலாகும் அந்தாமம் -திருவாய்மொழி -2-4-11-என்கிறபடி
அரங்கமாலுக்கும் திருமாலையை பாடி திருவடிகளிலே சூட்டும்
செய்ய சுடர் ஆழி அடியானுக்கே சூட்டினேன் சொல் மாலை -முதல் திருவந்தாதி -என்னக் கடவது இறே
பாடும் சீர் –
பாடுகை தானே இவருக்கு ஸ்ரீ யாய்த்து
சீர் தொண்டரடிப்பொடி –
துளபப் தொண்டைய தொல் சீர் தொண்டர் அடிப் பொடி இறே
தொண்டர் அடிப் பொடி எம்பெருமானை –
அவருக்கு அரங்கநகர் எம்பிரான் -பெருமாள் திருமொழி -3-6–என்னும்படி –
இலங்கையர் கோன் வழிபாடு செய்யும் கோயில் எம்பெருமான் -திருப்பள்ளி எழுச்சி -5–
நம்பெருமாளாய் இருப்பார் –
இங்கு
தொண்டர் அடிப்பொடி எம் பெருமானாய் இருக்கும் –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சேஷ பூதரான ஆகாரத்தாலே நமக்கு நாதராய் இருப்பர் –
இப்படி நமக்கு ஸ்வாமியானவரை
எப்போதும் ஈதே சொல் என்கிறபடியே -பெரியதிருவந்தாதி -87—சர்வ காலத்திலும் அனுசந்தித்து போரு –
இத்தால்
குரோர் நாம சதா ஜபேத் -என்னும் அர்த்தம் சொல்லிற்று
———-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply