என்புஇழைகோப் பதுபோலப் பனிவாடை ஈர்கின்ற
என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கென்று ஒருவாய்சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே! யான்வளர்த்த நீயலையே?
பொ-ரை : எலும்பினைச் செதுக்குகின்ற இளமை பொருந்திய கிளியே, எலும்பினைத் தொளைத்து அத்தொளையில் நூலினிழையைக் கோத்தலைப் போன்று, குளிர்ந்த வாடைக்காற்று அறுக்கிறது; என் குற்றங்களையே நினைந்து அருள் செய்யாத திருமகள் கேள்வனிடத்தில் சென்று, ‘சுவாமியான உம்முடைய பொறுமைக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று ஒரு வார்த்தை சொல்லல் வேண்டும்; நான் வளர்த்த நீ அல்லையோ?
வி-கு : வாடை ஈர்கின்ற – ஒருமை பன்மை மயக்கம், நினைந்தருளி – ஒரு சொல். திருவடி – கடவுள்; கடவுளையும் பெருயோர்களையும் ‘அடிகள்’ என்று கூறுவது இருவழக்கிலும் உண்டு. ‘திருவடியை நாரணனைப் பரஞ்சுடரை’ என்பர் மேலும் வாய் – வார்த்தை. சொல் – முன்னிலை ஏவல். ‘வாடை ஈர்கின்ற’ என்னுமிடத்தில், ‘தண் என்று, இன்னாது எறிதரும் வாடையொடு, என்னாயினள்கொல் என்னாதோரே’ என்ற குறுந்தொகைச்செய்யுளை (செய். 110.) நினைவு கூர்க.
ஈடு : ஏழாம் பாட்டு. ‘தத்தமுடைய குற்றங்களைப் பாராமல், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி’ என்று சொல்லும் இத்தனையோ வேண்டுவது என்று அவர்க்குக் கருத்தாக, ‘எங்கள்
குற்றம் ஒன்றுமேயோ பார்ப்பது? தம்முடைய அபராதஹத்வம் பார்த்தல் வேண்டாவோ என்று சொல்,’ என்று தன் கிளியை இரக்கிறாள்.
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்க்கின்ற-எலும்பினைத்தொளைத்து அதிலே கடினமானது ஒரு கயிற்றினைக் கோத்தது போன்று நஞ்சு ஊட்டின வாடையானது அறுக்கின்றது. எலும்பும் நரம்புமேயாம்படி உடல்தான் மிகவும் இளைத்தது ஆதலின், உடல் என்னாது ‘என்பு’ என்கிறாள். 1‘பம்பா நதிக் கரையின் சோலையிலிருந்து வருங்காற்று’ நாயகனுக்கு இருந்தது போன்று, இருக்கிறதுகாணும் இவ்வாடை இவளுக்கு. நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிலந்தவாறே, 2அந்தர ஜாதி காலிலே துகை உண்பதே இப்படி. 3‘மனைவியானவள் இப்படி வாடைக்கு இடைந்து நோவு படாநிற்க, இதனை நீக்குதற்கு, அவர் கடல் அடைத்தல், படை திரட்டல் ஆகிறபடி என்?’ என்னில், என் பிழையே நினைந்தருளி-நான் படுகிற துன்பம் போராது என்று 4கீழாண்டைச்சிகை வாசியா நின்றார். அதாவது, அடியார்களுடைய குற்றங்களை அறியாதவராய் இருந்தமை தவிர்ந்து, 5‘கணக்கு அற்ற ஞானங்களையுடையவர்’ என்கிறபடியே, இப்போது குற்றங்களை அறிவதில் முற்றறிவினராய் இருக்கிறார் என்றபடி, அருளாத திருமாலார்க்கு-இதற்குக் 6‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க, எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகை
யால் அன்றோ என்று இன்னாதாகிறாள்,’ என்று 1திருக்குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர். ‘ஆயின், பிராட்டியின்மேல் வெறுப்பாக, பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின், உறவு உள்ள இடத்திலேயன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு – ‘தத்தம் குற்றம் பாராமல் அருளச் சொல்லும் இத்தனையோ வேண்டுவது?’ என்று சொல்ல நினைந்தாராகில், ‘சுவாமியினுடைய திருவருளுக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று நீங்கள் சொல்லுங்கள். இனி, இதற்கு, என் குற்றத்தைப் பார்த்துத் 2தமிக்க நினைந்தாராகில், தம் பொறையாகிற நேர்தரவைக் காட்டுங்கள் என்னுதல். அதாவது, ‘சுவாமியான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றஞ்செய்யப் போமோ?’ என்று சொல்லுங்கள் என்றபடி. ‘ஏன் செய்யப் போகாதோ?’ என்னில், 3ஆஸ்ரயத்துக்குத் தக்கபடி அன்றோ எல்லாம்? நாங்கள் குற்றம் செய்வதும் எங்கள் அளவிலே; தாம் பொறுப்பதும் தம் அளவிலேயன்றோ? ஆதலால், செய்யப் போகாது. இனி, இதற்கு ‘தேவரீர் திருவருளுக்குத் 4தண்ணீர் துரும்பாக வலம் வருதல், வணங்குதல் முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று கூறலுமாம். 5‘பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள் என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள். 6‘கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,
‘இராஜபுத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது, அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள். இதனை இங்கு நினைவு கூர்க. ஒரு வாய் சொல் – ஒரு வார்த்தை சொல்லு. என்பு இழைக்கும் இளங்கிளியே – இளமையாலும், அன்புடன் கூடிய சொற்களாலும், வடிவில் பசுமையாலும், வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டுபண்ணுவதனால், எலும்பைச் சிதைக்கின்ற கிளியே! இனி, ‘என்பு இழைக்கும்’ என்று பிரிக்காமல், என் பிழைக்கும் என்று கொண்டு, ‘என் நிலையை அறிவித்தால் என்ன தவறு உண்டாம்?’ என்று கோடலுமாம். யான் வளர்த்த நீ அலையே – திருமகள் கேள்வனாய்த் தான்தோன்றியாய் இருப்பார் செய்வனவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வரோ? இனி, இதற்குக் ‘கலந்து பிரிந்தார் செய்வனவற்றை வளர்த்தவர்களும் செய்வர்களோ?’ எனலுமாம். இனி, ‘அவன் தான் இப்படிச் செய்யவேண்டும் என்று செய்தானோ? என்னுடைய சம்பந்தம் அன்றோ அவன் இப்படிச் செய்தான்? அப்படி, என்னுடைய சம்பந்தம் உனக்கும் உண்டான பின்பு, நீ நலியச் சொல்லவேண்டுமோ?’ என்பாள், ‘யான் வளர்த்த நீயலையே’ என்கிறாள் என்றுகூறலுமாம். இனி, ‘எனக்குத் தகுந்தாற்போலே அன்றோ நீயும் இருப்பாய்’ உன்மேல் குறையுண்டோ?’ என்பாள், அங்ஙனங் கூறுகின்றாள் என்றலும் ஒன்று.
அபராத சகத்வம்
நிதான பாசுரம் ஏழாவது
உயர்வற /உடல்மிசை இரண்டும் நிதான
பத்துடை முதல்
இதில் இது தான் நிதான பாசுரம் –
தம் தாமுடைய அபராதத்தை பாராமல் -ஒரு நாள் வர சொல்லி -அவர் வார்த்தை போல்
ஓன்று நினைவு படுத்தும்
எங்கள் குற்றம் ஒன்றுமா பார்ப்பது
அபராத சகத்வம் நினைவு படுத்தும் –
ஸ்வா தந்த்ர்யம் மேலே எழ அதை கீழே தள்ளி அபராத சகத்வம் நினைவு பண்ணுவது புருஷகாரம் –
மருந்து குலுக்கி -அபராத சகத்வம் கீழே போக ஸ்வா தந்த்ரம் மேலே
அவனை குலுக்கி -சதாபிஷேகம் ஸ்வாமி-
இவள் அதை நினைவு படுத்த சொல்லி கிளி இடம் சொல்லி விடுகிறார் –
என் பிழை -நான்கு வரியில் இதே சொல்லி
எம்பு இழை எலும்பு இழை கோப்பது போல் பனி வாடை ஈர்க்கின்றது –
என் பிழையே நினைந்து அருளி -அருளாத திருமாலார்
என் பிழைத்தாள் -திருவடியின் தகைவினுக்கு திருவடி =ஸ்வாமி யே சொல்லும் இங்கு
நான் வளர்த்த கிளி இதை சொன்னால் என்ன தப்பு உனக்கு
சரீரம் கோர கிரிசம் எலும்பும் நரம்புமாக –
உபவாச கிரிசை எலும்பை துளைத்து -உருவத்துடன் காற்று பனி வாடை துளைக்கின்றது
நஞ்சு ஊட்டின வாடை -போல
கிஷ்கிந்தையில் -சுக்ரீவன் -பெருமாள் இது போல் துக்கம்
பாம்போ பவன மாருதம் -பம்பை நதி இடம் இருந்து வீசும் காற்று பெருமாளை துன்பம்படிதனது போல் –
கலம்பகம் சூடுவாரை போல் பத்மம் சௌகந்திகம் செங்கழுநீர் இரண்டு மனத்தையும் –
பூவில் இழியும் -வெப்பம் இன்றி மேலாக பரிமளம் -அரி மிதியான வண்டு துவைத்த வாசனை
சிவம் -மங்களகரம் கலப்பற்ற தென்றல் புறம்புமற்றவர்க்கு படாமல் நேராக வந்த காற்று
தாய் தென்றல்-சிவம்
சோக விநாசனம் -துக்கம் போக்கும்
பெருமாளுக்கு துக்கம் அதிகரிக்க -பிராணனை உடன் போக்க -என்னை அழிக்க வந்த காற்று –
பிராணன் உடன் வைத்து நலியாது உயிர் வாங்கி போகும்
தன்யாகா -காற்று வாரா இருக்க ஏகாந்த ஸ்தலம் தேடி படுக்க போவாரும் உண்டே
ஏகாந்த ஸ்தலம் தேடி போவார் -பாக்யசாலி -லஷ்மண சேவந்தே-
இது எப்போதோ என்று எதிர்பார்த்து இருப்பார்
பாம்போ பாவனா மாதரம் -ஆதரத்தில் நெருப்பு போல் –
அந்த இடத்தில் உள்ள வஸ்துவுக்கு ஏற்றம் போல்
நாயக நாயகி பிரிந்து அந்தர் காலிலே துவை கொள்வார்
வாடைக்கு நோவு படா நிற்க -இத்தை பரிகைக்கு அவர் கடல் அடைப்பது படை திரட்டுவது பண்ண வேண்டுமே
அந்தர ஜாதி -கண்டவர் காலில் விழ கால் =காற்று -சாதுர்ய வாக்கியம்
அந்தரத்தை பிறப்பிடமாக கொண்ட காற்று அந்தர ஜாதி காலாலே துவை பட்டது –
கண்ட சண்டாளன் காலில் விழும்படி -கலப்பட ஜாதி –
என் பிழையே நினைந்து அருளி -நான் படுகிற கிலேசம் பத்தாது என்று
கீளாண்டிதிகை வாசியானவன் போல் -பழம்கிணறு தூருவாருவார் போல்
தோஷத்தில் -அவிக்ஜ்ஞாதா அசேஷம் -அஞ்ஞானம் உள்ளவர் -ஆஸ்ரித தோஷம் அறியாதவர் -பட்டர்
அபராதம் அறியாதவன் –
சர்வ சக்தன் சர்வஞ்ஞன் தப்பு -அவனுக்கும் அஞ்ஞானம் உண்டு தோஷம் அறியாதவன்
அடியவரை கைவிட அசக்தன் -உபலம்பா -யதோ பக்தைய தோஷம் -கூரத் ஆழ்வான்
ஓன்று பத்தாக பெருக்குகிறவன்-சகஸ்ராம்சு
தோஷத்தில் -இவை
அருளாத திருமாலார் –
அவளும் அருகே இருக்க -பிராட்டி முகம் கொடுக்க மாட்டாள் -அனுக்ரகம் செய்யாவிடில் –
ஸ்ரீ தேவி -குற்றமாவாது ஒன்றாவதா
பூ தேவி குற்றம் எனபது ஒன்றா
நக சித் ந அபராதி கசிதபி ந -ஒருவரும் இல்லை பிராட்டி வார்த்தை -நினைவு படுத்த
எங்கள் குற்றம் பார்த்து இவன் அவள் இடம் முகம் காண முடியாது
நான் இப்படி நோவு பட வேண்டியது –
பிள்ளான் -அவள் இடம் மோகித்து கிடக்க –
நஞ்சீயர் அவனை மட்டும் வைய
1. ‘திருமாலார்’ என்ற சொல்லுக்கு நஞ்சீயர் நிர்வாகத்தில், ‘திருவினிடத்தில்
மாலார்’ என்பது பொருள், பிள்ளான் நிர்வாகத்தில், ‘திருவின் மாலுக்கு
விஷயமாக இருப்பவர்’ என்பது பொருள்.
உறவு உள்ள இடத்தில் தான் குறை சொல்லலாம் வெறுப்பும் கட்டலாம் என்று
அருளாது ஒளிகிறது என் –
தம் தாம் குற்றம் பாராதே அருளை வேற கேட்ப்பாரா -அவன் வார்த்தை
என் பிழைத்தாள் -திருவடியின் கிருபைக்கு கூட கோபம் வரும் படி என்ன தப்பு செய்தேன்
போரை ஓன்று உண்டே அதை காட்டும்
நெருப்பு இருந்தால் ஜலம் கொண்டு அணைக்கலாமே
சுவாமிகளான தம் பொறை வயிறு நிறைய -எங்களால் குற்றம் பண்ண போம்
ஆஸ்ரயித்து தக்க படி -தானே வஸ்து –
இருக்கும் இடம் பொறுத்து தான் அளவு
ஆத்மா இடம் ஆஸ்ரயம் குற்றம்
எம்பெருமான் இடம் குணம்
எது அதிகம் இருக்க வேண்டும்
நாங்கள் குற்றம் செய்வது எங்கள் அளவிலே
எம்பெருமான் பொறை செய்வதும் அவன் அளவிலே
தாம் பொறுப்பதும் தம் அளவிலே அன்றோ –
தயா சதாகம் -தேசிகன் –
இல்லாதவற்றையே தான் கொடுத்தால் சிறப்பு –
அவன் இடம் இல்லாதது நம் இடம் இருப்பது தோஷம் -அதுவும் நிறைய
உத்சாகமாக சம்பாதித்து —
தயா தேவி உடனே –லேகியம் நக்கி உண்பது போல் -தாது -லிக் ஆலிக்ய- திருப்தியாக உண்டு -லிக் -நக்கி – lick
தாய் பாசு -அன்று அதனை ஈன்று அகன்ற தாய் -ஆலிக்ய -வாத்சல்யம் –
நிரவிசேஷம் -மிச்சம் இன்றி அனைத்தும் -அவ்வளவு ஆசை கொண்டு -ப்ரீதி
அலப்ய திருப்தி -இன்னும் திருப்தி இன்றி –
தாம்யசி -இன்னும் கிடைத்தால் நிறைய -ஏங்கி அகோ -ஐயோ நீல மேனி ஐயோ
திவ்ய மங்கள குணம்விக்ரகம் கொண்டு ஐயோ –
தோஷ போக்யத்வம் -தோஷ காணா கண் இட்டு இருப்பான் -தோஷ அதிருஷ்டம்
நம்பிள்ளை அருளி செய்த படி -தனியாக ஈடு பட்டு அருளிய வார்த்தை –
எதுவும் சாதனா புதியாக செய்ய கூடாது –
பிரசாத ஜன்யமாக நினைக்க வேண்டும் பிரசாதம் ஜனகமாக நினைக்க கூடாது
பிரசாதமாக நினைத்து கொண்டு பிரசாதகமாக நினைக்க கூடாது
இதற்கு தேவரீர் திரு வருளுக்கு
தண்ணீர் துரும்பாக வலம் வருதல் -வணங்குதல்
பிரதட்ஷின நமஸ்காரம் முதலியன செய்தோனோ கேள் –
தண்ணீர் துரும்பு -தொண்டை மாட்டிக் கொண்டால் -உள்ளே போகாதே
பிரவாகம் கூட தடுக்கும் துரும்பு
கிருபை பிரவாகம் தடுக்க துரும்பு போல் நாம் செட்டும் சாதனா புத்தி
பிரதட்ஷின த்வயம் -ஏகமாக செய்ய கூடாது
அதிகாரி பேதம் -சாதனம் பலம் -மாம் பழம் நமக்கு வியாபாரிக்கு –
ஆண்ரு சம்சயம் பொறுமை பரோ தர்மா பிராட்டி வார்த்தைபெருமாள் முன்பு அருளியது
கிம் கோப மூலம் -தாரை வார்த்தை
ராஜ புத்ரர்கள் –
பொறியை நினைத்து இருக்கும் காரணத்தால் –
தசரதர் பிள்ளையாக இருந்து -60000-ஆண்ட சக்கரவர்த்தி -அவருக்கு பிள்ளை-குற்றம் என்று தலை கவிழ்ந்து
சாஸ்திர வஸ்யம் அன்றிக்கே -திர்யக் -நீங்கள் போகம் அனுபவிக்க அனுப்பி –
நீர் சொன்னதை செய்தோம் என்று கோபிக்கலாமா –
ஒரு வாய் சொல் -ஒரு வார்த்தை சொல்லு -வாய்ச் சொல் இல்லை இங்கே
என் பிழைக்கும் இளம் கிளி
நாயகன் போல் -அறியாமை பவ்யம் புஷ்டி வடிவில் பசுமை வாயில் பழுப்பு
எலும்பை இழைத்த கிளி
என் பிழை க்கும் -தான் தோன்றி செய்வதை நான் வளர்த்த கிளி
கலந்து பிரிந்தார் செய்வதை நீ செய்யலாமா
பார்த்தா செய்வதை பிள்ளை செய்யலாமா
என் சம்பந்தம் இருப்பது எல்லாம் இப்படி தான் பண்ண வேண்டுமா
எனக்கு தக்க படி நீயும் இருக்கிறாய்
நீ சொல்லாதபடி இருக்கும் பிழை செய்தேனா
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Related
This entry was posted on August 30, 2012 at 10:35 pm and is filed under ஸ்ரீ ஈடு. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply