ஸ்ரீ திரு விருத்தம் -22-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

(தோழி தலை மகள் புனத்தில் இருக்க
கொம்பார் தழை கொண்டு தலைமகன் வர
உன்னைப் பிரிந்து எவ்வாறு வாடி உள்ளேன் என்பதைக் காட்டவே கையில் தழையைக் கொண்டு வந்துள்ளார்
வில் தழும்பு கூட இல்லாமல் -சுவடே இல்லாமல் -வேட்டையாட வந்தது போல்
யானை வந்ததோ என்று வினவும் ஐயர்- பூஜ்யர்
கருட வாகனத்தில் வந்து மனம் கொள்ளை கொள்ளும்
லீலா விபூதி -பார் அகத்தில் -இவ்வாறு காண வில்லையே
அவரது உக்திக்கும் அனுஷ்டானத்துக்கும் சேராதவை
நீர் கேள்விக்கு பதில் சொல்லவோ இங்கே வைத்தீர்
திவ்ய தேசத்தில் இங்கே வைத்தது இவர்களைத் திருத்த அன்றோ
சம்பந்தம் இல்லாதா கேள்விகள் கேட்டு
தோழி கேலி பேசுவது -தலைவனைப் பார்த்து நகையாடும் துறை
நல்குரவும் -சேராச் சேர்க்கை -வெல்லும் வ்ருத்த விபூதிமான் -பதிகம் இதன் விரிவு

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-)

அவதாரிகை-

உங்களை புனம் காக்க இங்கன்   கொண்டு வைத்த தார்மிகரோ என்கிறாள்-
அபிமத விஷயம் இருந்த இடத்தே -தண்ணீர் -என்று கொண்டு புகுவாரை போலே
கையிலே தழையை முறித்து பிடித்து இவர்கள் இருந்த இடத்தே சென்று ,-
இங்கனே ஓர் யானை போந்ததோ என்று-கேட்க

அவர்கள் நாங்கள் புனம் காக்க இருக்கிறோமா
உமக்கு மறு மாற்றம் சொல்ல இருக்கிறோமா
என் சொன்னீர் ஆனீர் என்கிறார்கள்–

தழை கொண்டு போகிறது என் என்னில்
ஆஸ்ரயத்தை இழந்த தளிர் வாடுமா போலே காண்
உன்னை பிரிந்து-நான் பட்டது என்று
தன் தசையை அவர்களுக்கு அறிவித்து கொண்டு சொல்லுகிறபடி –

இவன் உடைய கர ஸ்பர்சத்தாலே ,இது-சதசாகமாக பணைத்த படியை கண்டு ,
உம்முடைய ஆற்றாமை அறிவிக்க வந்தீர் ஆகில் ,
கொம்பிலே நிற்கச் செய்தே காட்டா விட்டது என் என்கிறாள் —

பிறந்த இடத்தை விட்டு உம்முடைய பாடு வந்தாருக்கும் உண்டோ வாட்டம் –
உம்மை பிரிந்து பிறந்த இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் என்கிறாள் –

(திரு மார்பிலே தானே திருவுக்கு வாழ்ச்சி
நின் பிரிவிலும் சுடுமோ காடு
விட்டுப் பிரிந்தால் ஸ்வர்க்கமும் நரகம் ஆகுமே
உன் நாமங்களை சொன்னாலே நரகமே ஸ்வர்க்கமாகுமே )

வேறு ஒரு அரும்பதம்
கயலோ நுமது கண்கள் களிறு வினவி நின்றார் –15-
அங்கும் அசங்கதமான பாஷணம் கேள்விகள்
களிறு வினவ வந்த பாகவதர் ஆகிய நாயகன் -கலந்து பிரிந்த சமநந்தரம்
பல பல ஊழிகள் -16 -என்று -இரவு நெடுகி நோவு பட்ட நாயகியை சர்வேஸ்வரன் -நாயகன் – கலந்து
அந்த இரவிலே பிரிந்ததால் -கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் -16 –
போன வழியில் தேர் காலைக் கண்டு தரிக்கும் தசையில் அன்பார் தேர் வழி தூரல் -இருள் விரிந்தால் அன்ன -17-பாசுரத்தில்
வரவைக் குறித்த வர்ஷா காலம் வரவே -18-காலத்தை மயக்கி தோழி -புயல் காலம் கொலோ
அத்தை அழிக்கும் படி அடுத்த மழை வர -19–தோழியும் நாயகியும் மோகிக்க
மாரி கை ஏறி அறை இடும் காலத்தில் -19- திருத் தாயார் சேரி பழி
வேலன் நோய் பரிகரிக்கப் புக -20-ஸஹி வெறி விலக்குதல்
அத்தைத் -தோழி விலக்கி -21-
உமக்காக வந்தது அறிவிக்கை -சூட்டு நன் மாலைகள் -கிருஷ்ண அவதாரம்
உம்மை வைத்து -எனக்குப் பிடித்த புனல் -திவ்ய தேசம் -காவல் காக்க அன்றோ உம்மை வைத்தேன்
உமக்குப் பிடித்தவற்றை உண்ண வந்தேன்
கிருஷ்ண அவதாரம் ஈடுபட்ட ஆழ்வார்
ஆழ்வாரை வைக்க தெளிவு பிறந்த ஆழ்வார்
பிராணிகளாக பயிர்களை ரக்ஷிக்க வைத்தது –
சொல்ல ஈடுபட்ட ஆழ்வார் பாசுரத்தை
தலை மகள் பாசுரம் -சங்கதி

தோழி நகையாடல் என்றும் உண்டே
தலைமகள்
தென்னானை –இத்யாதி ஆனையை வினவ வந்த நாயகன் -கிளவித் தலைமகன்
புனம் காக்க வைத்த புருஷோத்தமனைக் கொண்டாடி
ஆழ்வார் இடம் அவனைக் கொண்டாடச் சொல்லிக் கொண்டு ஆழ்வாரைப் பிரிந்தால் வாடுவோம் என்று சொல்லிக் கொண்டே
உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை பேசும்
அசங்கத பாஷணம் -ஆழ்வாரைக் கொண்டாடி அவனைப் பற்றிக் கேட்க்கும் இரு கரையர் போல் கேட்க
அவதாரிகை அருளிச் செய்கிறார் –
பாகவதர்கள் பிரபாவம் சொல்ல வந்தேனே ஒழிய

———-

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவது ஐயர் ,புள் ளூரும் கள்வர்
தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-

பாசுரம் -22-கொம்பு ஆர் தழை கை ,சிறு நாண் எறிவிலம் -தோழி தலைவனைக் கேலி செய்தல் –
நல்குரவும் செல்வமும் -6-3-

பதவுரை

ஐயர்–இப்பெயரிவருடைய
கை–கையிலுள்ளது
கொம்பு ஆர் தழை–மரக்கிளையிற் பொருந்திய தழையாகும்;
சிறு நாண் எறிவு இலம்–(இவர் கையில் வில் இல்லாமையால்) சிறிய நாணியை
(கை விரலில்) தெறித்து ஒலி செய்தலைக் கேட்டிலோம்;தழும்பே இல்லையே
கொண்டாடு–(இவர் தமக்கு) ப்ரியமாக வெளிக் காட்டுவது
வேட்டை–வேட்டையாம்;
வினவுவது–(இவர் நம்மை நோக்கிக்) கேட்பது
அம்பு ஆர் களிறு–(எய்யப்பட்ட) அம்போடு பொருந்திய யானையாம்;
(இவரது செயல்களும் சொற்களும்)
புன் ஊரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன–கருடப் பறவையை ஏறி நடத்துகிற
வஞ்சகரான மாயவரான திருமாலினது உரிய பொருளாகிய இவ்வுலகத்தில் எக்காலத்திலும் நடவாதனவும்
தம்மில் கூடாதென–தமக்குள் ஒன்றொடொன்று பொருத்த மில்லாதனவுமாகவுள்ளன:
வம்பு ஆர் வினா சொல்லவோ–புதுமை மிக்க கேள்விகளுக்கு விடை கூறும் பொருட்டோ
எம்மை–நம்மை
இவ் வான் புனத்தே வைத்தது–இந்தப் பெரிய கொல்லையிலே (நமது முதுகுவரல் காவல்) வைத்தது?

வியாக்யானம்-

கொம்பார் தழைக் கை —
தழையைக் காட்டி ஜெயிக்கும் இடத்தே ,
வில்லைக் காட்டி ஜெயிக்க ஒண்ணாது இறே

சிறு நாண் எறிவிலம்–
கையிலே வில் பிடித்த தழும்பு கண்டிலம்
நாண் என்ற வில்லுக்கு தர்மம்-
தர்மம் ஆகிறது
தர்மியை ஒழிந்து அன்று இறே இருப்பது
உம்முடைய கையிலே வில் கண்டிலம் என்கிறாள்

இது இறே வில் என்று தழையை காட்டுகிறான்

வேட்டை கொண்டாட்டு–
வில் இதுவே இருந்தது —
நீர் புக்க இடம் எங்கும் கொண்டாடுகிறது வேட்டையாய் இருந்தது-
இது ஒரு சேர்த்தி இருந்த படியே என்கிறார்கள் –

வில் இதுவாகில் அம்பு எங்குற்று என்ன —
இலக்கான ஆனையில் பட்டு ,உள்ளே குளித்தது (பிரவேசித்தது)என்கிறான்

அம்பார் களிறு வினவுவது ஐயர் –
ஐயர் சொல் சேர்த்தியான வார்த்தைகளை சொல்லா நின்றீர்
பெரு முதலியாய் இருந்தீரே என்கிறார்கள்

புள் ஊரும் கள்வர்-
சர்வாதிகர்

தம் பாரகத்  தென்று மாடாதன —
இவருடைய லீலா விபூதிக்குளே நடை ஆடாதனவாய் இருந்தது ..
நித்ய விபூதியில் உண்டோ ?-இல்லையோ ? என்று அறிய மாட்டுகிறிலோம்

தம்மில் கூடாதன —
இரண்டு இடத்திலும் இல்லை ஆகிலும் ,
இன்று தொடங்கி இத்தை வார்த்தையாகக் கொண்டாலோ என்னில்-
இருவர் கூட நிரூபத்தால் சேருகிறதில்லை–
தமக்கும் தம்முடைய வார்த்தைக்கும் ஒரு சேர்த்தி இல்லை

சதாகாரையான ப்ரநீதியும் ,அசாதகாரையான பிரநீதியும் ஒழிய —
சதசத் விலஷணம் – என்ற தனக்கு என்ற ஒன்றை
மாயாவதி சொல்லுமா போலே
லீலா விபூதியிலும் ,
நித்ய விபூதி யிலும்  அன்றியே
உமக்கு என்ன ஓன்று எங்கனே சம்பாதித்த படி-என்கிறார்கள்

வம்பார் வினா சொல்லவோ எம்மை வைத்தது —
புதுமை மிக்கு இருந்துள்ள பிரசன்னத்துக்கு ,பிரதி வசனம் பண்ணவோ ?–எங்களை வைத்தது ..
புதுமை மிக்கு இருந்துள்ள வார்த்தைக்கு நீர் பிரசனம் பண்ணவோ ?எங்களை வைத்தது என்னவுமாம்

இவ் வான் புனத்தே —
இதுக்கு அவசரம் உண்டோ ?
இப் பரம்பு நோக்கவே போராதோ பணி என்கிறாள்-
(திவ்ய தேசங்கள் கைங்கர்யத்தில் போது போக்கலாய் உள்ளதே )

ஸ்வாபதேசம்-
எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குணங்களிலே ஈடு பட்ட ஆழ்வார் உடைய
ஸ்வரூப ரூப குணங்களை-கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்
(திரு வேங்கடமுடையானைப் பற்றிச் சொல்லும் என்ற )வார்த்தைக்கு
ஆழ்வார் வார்த்தை-

அரும்பதம்
கையிலே -கொம்பார் தழை
கொண்டாடுகிறது- வேட்டை
ஐயர் வினவுவது -அம்பார் களிறு
புள்ளூரும் கள்வர்
என்றும் ஆடாதன
தம்மில் கூடாதன
ஆகையால் இந்த வான் புனத்தே எம்மை வைத்தது வம்பார் வினாச் சொல்லவோ
என்று கேட்க்கிறார்

———

தாத்பர்யம்
இப் பாசுரத்தில்
சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூபாதிகளில் ஈடுபட்ட பாகவதர்கள்
ஸர்வேஸ்வரனுடைய குண சேஷ்டிதங்களை அருளிச் செய்ய வேணும் என்று ஆழ்வாரைக் கேட்க
சர்வஞ்ஞரான உங்களுக்கு நான் எத்தைச் சொல்வது
என்கிற ஆழ்வார் வார்த்தையை
புனம் காத்து இருக்கும் நாயகி நாயகன் வரவைப் பார்த்து அருளிச் செய்த பாசுரமாக அருளிச் செய்கிறார்

நாயகன் கையில் தழையைப் பிடித்து வந்து விரஹ வேதனையை நாயகிக்கு அறிவிக்கக் கருதி
நாயகியைக் கண்டு ஸல்லாபிக்க ஆசை கொண்டு
இங்கே அம்பு பட்ட களிறு வந்ததோ என்று நாயகி இடம் வினவினான்
வேட்டையாட வந்தீராகில் கையிலே வில்லைக் காணோம்
தழையைப் பிடித்து நின்றீர்
இவ்வாறு பொருந்தாத உக்திகளும் அனுஷ்டானங்களை எங்கும் காணோம்
இப்படி அசம்பாவித வினாக்களுக்கு உத்தரம் சொல்லவோ எங்கள் பெரியோர்கள் எங்களை இங்கே வைத்தது
உமக்குப் பதில் சொல்ல எங்களுக்குப் போதில்லை
போம் என்கிறாள்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading