ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -84.கண்டு கொண்டேன் /85ஓதிய வேதத்தின் /86.பற்றா மனிசரை பற்றி – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

85—-கண்டு கொண்டேன்

கண்டு கொண்டேன் எம் ராமானுசன் தன்னை காண்டலுமே

தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம் நோய்

விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று

உண்டு கொண்டேன் இன்னம் உற்றனன் ஓதில்   உலப்பு இல்லையே

இன்னும் பெற்றவற்றை சொல்லி முடிக்க முடியாது -உலப்பு-முடிவு….சில சொல்லி அருளுகிறார் ..கண்டு கொண்டேன் ஸ்வாமியை– சொரூப  ஸ்வாபம் அறிந்தேன்–இவர் நம்மோடு சஜாதியர் அல்லர் — நம்மை உத்தரிப்பிக்க வந்தவர் என்று அசமத் சுவாமி யான எம்பெருமானாரை உள்ளபடி கண்டு கொண்டேன்..கண்டதும் -உடனே-அவன் தொண்டர் இடம் அடிமை பட்டேன்- ஸ்வாமி ஆனந்தம்– இதுவே என்று —-இப்படி தர்சித்த அளவிலே அவர் தம் அளவிலே நின்று விடாதே அவர்க்கு அனந்யார்கார் ஆனவர்கள் உடைய அழகிய திருவடிகளிலே அடிமை பட்டேன்..பாகவதர் ஸ்ரீ பாத துள்ளி பட்டதும்-ஞான யோகம்-ஜடா பரதர்/கர்ம-ஜனகன்/ பக்தி-பிரகலாதன்- என்பர்///என் உடைய அநாதியாய் அதி க்ரூருமான கர்மங்களை நீக்கி கொண்டேன் /ஞான மார்க்கம் விட பக்தி சிறந்தது ஸ்ரீ பாகவதத்திலும் ஸ்ரீ பாத தூளி  மகாத்மயம் உண்டு /அவர் உடைய குணா பூரமாகிற சமுத்ரத்தை பெரு  விடாயர் மடுவிலே வாய் மடுத்து பருகுமா போல பெரிய அபிநிவேசதொடே இன்று புஜித்தி கொண்டேன்/ குணா கரம்- குணா சாகரம்- மனசால் வாங்கி வாயால் பாடி இந்த பிர பந்தம் அருளி இருக்கிறார்/ சமுத்திர ஜலம் வெளியில் வருமா -கடல் தீர்த்தம் -உப்பு கடல் குடிக்க முடியாது – திரு பால் கடல் எங்கு தெரியாது கடல்-ஏரி-குணத்தை தாண்ட முடியாது-இது பார்க்கிற இடத்தில் இருக்கும் ஓடியும் வரும் -கடல் விட பிரபாவம் என்கிறார்..இன்னமும்  நான் பெற்றவற்றை சொல்லில் சொல்லில் அதுக்கு ஒரு முடிவு இல்லை //காண்டலுமே- கண்ட அளவிலே /விள்ளுதல்-நீங்குதல்/வாரி-சமுத்ரம் /

வாய் மடுத்து-பாத்ரம் கொண்டு இல்லை /பசு மாட்டின் மடி பாலை கண்ணன் பருகுவது போல/அரசை அருளி செயல் சமைத்த மடு-அதிலே தேங்கின மாடு போல அர்ச்சா அவதாரம்–அருளி செயல் – சாய் கரம்-/கொட்டிண்டே  இருக்கும் -உண்மையாக அவதார ரகசியம் அறிந்தவன்-உள்ள படி யாதாத்மா ஞானமே மோஷ ஹேது/தொண்டர்-உன்னை ஒழிய மற்றை தெய்வம் அறியா வடுக நம்பி நிலை போல அவருக்கே அற்று தீர்ந்தவர் /சரம பர்வ நிஷ்ட்டையில் இருப்பவர்கள் //அதி க்ரூருமான வினை-பாகவத அபசாரம் /விண்டு -நீக்கி /சீர் வெள்ள வாரி-சீர் வாரி- சாய் கரம் –கங்கை என்னும் வெள்ளம் போல சீர் என்கிற வெள்ளம் வாரி பருகினேன் /திவத்திலும் பசு நிறை உவத்தி- கன்று குட்டிகளுக்கு குடிக்க கற்று தருவான்-கர்ம பக்தி யோகம் இல்லை அதனால் விடையார் வாய் மடுத்தால் போல/ இன்று -கண்ட அன்றே /வெள்ள வாரியை உண்டாரா நெய் உண்ணோம் பால் உண்ணோம்-குடிப்போம்-த்ரவமா கடினமா தெரியாது -கண்ணன் பிறந்த பின்பு பார்த்து அறியாதவர்கள் /குணம் தலையில் விழுந்தது என்று தான் தெரியும் அதனால் வெள்ளம் உண்டு என்கிறார் ../தொண்டு கொண்டேன்-தொண்டு பட்டேன்/அடிமையை கை கொள்ளுதல் /உலப்பிலானை எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி உலப்பு-எல்லை/

ஐஸ்வர்யம் த்யாஜ்யம் தோஷ தரிசனம்  கண்டு பகவத் அனுபவம் போகலாம் பாகவத நிஷ்ட்டை போக பகவன் இடம் தோஷம் இல்லை கடினம் / ஸ்வாமி கண்டதும்-ஆசை பெருகி-கொழுந்து விட்டு ஓடி படர்ந்து ததீய பர்யந்தமாக வளர்ந்து –கர்ம தொலைய- இருக்கும் பொழுது கல்யாண குணங்களை அனுபவிக்க முடியாது /கர்மா தடுக்கும்–இவை நீங்க ஆழ்வான் ஆண்டான் திருவடிகளை பற்றி-ஸ்வாமி -கல்யாண குண  கடல் அம்ர்ததை-பருகி- /கண்டு கொண்டு-ரூபம் காஷாய சோபி -திரு மேனி ஒளி வரும்-கமநீய சிகாநிவேசம்-சிகை-தண்ட திரைய -உஜ்வல விமல உபவீதம் -பூணல் பிரம தேஜஸ் கொடுக்க /உதயத்து  தினேச ஊர்த்வ புண்டரம் உதய  சூர்யன் போல ஒளி /ஒரே நாள் கல்யாண புஷ்கரணி வெட்கி  ஓடி போவார் -முட்டாக்கு போட்டு கொண்டு ..திரு மண் காப்பு சாத்தி கொண்டு உத்சவம் நாள் முழுவதும்./பற்பம் என திகள்..எதிராசர் வடி அழகு இல்லை எனக்கு எதிர்- தீர்த்தம் ஆடி வரும் ஸ்வாமி யை பார்த்து எம்பார் அருளியது/பல்லவம்-மொட்டு போல விரல்கள்/ பாவனமாகிய துவர் ஆடை பதிந்த  மருங்கு-இடை அழகு /முப்புரி  நூலோடு முன் கையில் ஏந்திய /முறுவல் நிலா அழகும்/முன்னவர் தந்திடு  மொழி -/காரி சுதன் கழல்  சூடி -கன சிகை முடியும்-..கண்டு கொண்டேன்-எப்படி எதனால் விசெஷனம் ஒன்றும் இல்லை கண்டோம் கண்டோம்  கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -ஸ்ரீ வைஷ்ணவ சமுகம் கண்டார் ஆழ்வார் /திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் ..ஆழி கண்டேன்-ததீயரை கண்டாரை போல சாஷாத்கரித்து ..

முதலில் கண்டு கொண்டதுக்கும்  கல்யாண குணங்களும் தெரிந்த பின் கண்டு கொண்டதுக்கும் வாசி/அர்ஜுனன் முதலிலும் சோகம் விஸ்வ ரூபம் தரிசனம் ஆனா பின்பும் சோகம்- முதலில் என்ன பண்ண வண்டும் என்று தெரியாமல் பின்பு ஒன்றும்  பண்ண வேண்டியது இல்லை என்று /உணர்ந்து கொண்டது -மனசால் வைபவம் தெரிந்து .-சேமம் குருகையோ-தெரியாமல்-ஆய் ஜகனாதாச்சர்யர் ஸ்வாமி-மா முனிகள்/இருவரும் மாறனா ராமானுஜரா திரு மாலா / இவரையும் -ஸ்ரீ பதியா சேஷனா சேன நாதனா -உபய விபூதியும்  கொண்டவர் என்பதால் //உள்ளபடி தெரிந்து கொள்வது-கடைத்தேற வந்தவர் ஸ்வாமி என்று // -கண்டேன் கமல மலர் பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்தன  வினை ஆயின எல்லாம்—ஆழ்வார் //

தரிசித்த அளவிலே ப்ரீதி பெருகி வந்து -ததீயர் தொடர்ந்து -கைங்கர்யம் பெற்றேன்..துத் தாச தாசகனனா -சரம பர்வ நிலை -அநாதி கால ஆர்ஜித -சேர்த்து வைத்து இருக்கிற கர்மா-பிரளயம் வந்தாலும் அழியாத -கர்மா பலனும் கிருபை பலனும் அனுபவித்தே தீர்க்கவேண்டும்/கிருபை கர்மா அன்யோன்ய ஆச்ரயம்/திருவடி சம்பந்தம் கிருபை தூண்ட கர்மா விலகும்/ந ததாமி-தான் கர்மா /நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன அடியே போகும்/ஷிபாமி-பல நீ காட்டி படுப்பாயோ-அகத்த நீ வைத்த மாய ஐம் புலன்கள் /ததாமி -கர்மா  யோகம் ஞானம் பக்தி உள்ளவர்களுக்கு  /ஸ்வாமி அனைவருக்கும் கொடுப்பார்/கல்யாண குணங்கள் ஆகிய சமுத்ரத்தை -போலியாக -கரை புரண்டு வெள்ளம் இட்டு ஓடி -எண்ணில் அடங்காதவை என்பதால் -அபூத வுவமை-அக்கார கனி-போல சக்கரை பழம்-இல்லை-சக்கரை விதை மரமாக வளர்ந்து பழம் பெற்றால் போல/

ரூபம் குணம் -இரண்டு கால்  மாடு -என்று சொல்லுவது போல/பரி பூரணமான கடல்/ கல்யாண  குணம் நிறைந்த -போய் சேர்ந்த கடல்  /சீர் கடலை உள் பொதிந்த சிந்தையேன்// அடியேன் வாய் மடுத்து பருகி களித்தேன்// உடல் உருகி வாய் மடுத்து உன்னை நிறைத்து கொண்டேன்-பெரி ஆழ்வார் //சாம்சார துக்கம் கொதிப்பில் விடாய் தீரும் படி விஷயீ  காரம் பெற்று அருகில் சென்று /பால் தேன் கன்னல் அமுதம் போல – பாலே ய் போல் சீர்-உண்டு கொண்டது சொல் இட்டு பாடுதல்- –சப்த ராசி கொண்டு- ராமானுஜ நூற்று அந்தாதி அருளியது ./பெற்றவற்றுக்கு கணக்கு இல்லை

85–ஓதிய வேதத்தின்

ஓதிய வேதத்தின் உள் பொருளாய் அதன் உச்சி மிக்க

சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்

பேதைமை தீர்த்த ராமானுசனை தொழும் பெரியோர்

பாதம் அல்லால் எந்தன் ஆர் உயிர்க்கு யாது ஒன்றும் பற்று இல்லையே

ஐஸ்வர்யம் கைவல்யம் விட்டு பகவத் சம்பந்தம் பெற்று –பந்தம் மோஷம் இரண்டுக்கும் ஹேது /மோஷம் ஒன்றுக்கே ஸ்வாமி -அதையும் விட்டு தொண்டர்க்கு என்று இருக்கும் நிலை-/நாம் இரு கரையோம் அல்லோம் ஸ்வாமி அடியார்க்கு என்றே இருப்பேன் என்கிறார் ../ஆச்சர்யர் அடியார்கள் பற்றினால் இதுவே பேறு-பிராப்யம்  /ஆச்சார்யர் உபாயமாக அங்கு கொண்டு சேர்ப்பார்/ சயமேஅடியார்,  நீக்கம் இல்லா அடியார்,கோதில் அடியார்– பரதன் லஷ்மணன் சத்ருக்னன் -மூவரையும் – /தனி மா தெய்வம்  சேராமல் /உன்னை ஒழியமற்றை தெய்வம் அறியாத வடுக நம்பி /மதுரகவி நிலையே பெறுவோம்//தொழும் பெரியோர் பாதம் -அல்லால்-வேறு ஒன்றும் பற்று இல்லை/நாதன் என அறியாத உழல்கின்ற தொண்டர் -மற்றவர்க்கு தொண்டு பட்டு வீணாகும் தொண்டர்-அவனே நாதன் என்று தெரியாதவர்கள்/சாஸ்திரம் தெரிந்தும்-வேதம் -பொருளை கற்றார்கள்/-வசையு அக்னி வருணன் இந்த்ரன்-தெரிந்து கொண்டு-சுத்திர விஷயங்களில் ஆசை கொண்டு- // உச்சி வேதாந்தம் -உள் பொருளை கற்றார்கள் இல்லை – வேதாந்தங்களில்  ஒளி விடும் நாதனை அறியாமல்- இவர்கள் சரீரம் பிரகாரம் என்று தெரியாமல்//உணர்த்தி-பரன் திறம் இன்றி வேறு ஓன்று இல்லை/ மற்றும் உம் தெய்வமும் ஆகிநின்றான் பொலிந்து நின்ற பிரான் //தன் நிஷ்ட்டையை வெளி படுத்துகிறார் இதில்…இரண்டு சொன்னாலே எது என்று குழப்பம்-கர்மா ஞான யோகம்-ஒன்றை நிச்சய படுத்தி எனக்கு நல்லதை சொல்லு என்றான் அர்ஜுனன்//அது போல அமுதனாரை எதில் வூற்றம் என்று கேட்க இதை அருளுகிறார் /அமுதனார் ஸ்வாமி தண்டி அடியவர் தாளே பணிந்து இருக்கும் நிஷ்ட்டையை அருளுகிறார்

/தாங்கள் அதிகரித்து இருக்கிற வேதத்தின் உடைய ஆந்தர – ப்ரமேயமாய் –உள் பொருள்-சுருதி சிரசி விதீப்தே -/தேவ  தாந்த்ரங்கள் சீக்கிரம் பலம் கொடுக்க வைத்து நம்பிக்கை வூட்டுகிறான்//ஆராதிக்கும் அவன் ஆராதிக்க  படும் தெய்வத்துக்கும் அந்தர்யாமியாய் இருந்து பலம் தருகிறான் -பிரளத்தில் இந்த்ரன் போனாலும்-ஜோதிஷ்ட ஹோம யோகம் பலம் கொடுக்க /அந்தர்யாமியே பல பிரதன்–கரண்டி நெய் தீ ஸ்தம்பம் ஹவுஸ் எல்லா வற்றுக்கும் அந்தர்யாமி- நுன் தெய்வமும் ஆக நின்றான் /பேதைமை தீர்த்து வைத்தார்

உச்சி மிக்க சோதியை- வேத சிரசி விதீப்தே- தமிழ் படுத்தினார்/அந்த வேத சிரசிலே நிரவதிகமாக-மிக்க-பிரகாசித்து இருக்கிறவனை -நமக்கு நாதன் -என்று அறியாத வ்யதிரிக்த விஷயங்களிலே தொண்டு பட்டு உழன்று திரிகின்ற –அசேவை சேவை-அப்ராப்த விஷய பஜனத்துக்கு  அடியான அஞ்ஞானத்தை போக்கி அருளின எம்பெருமானாரை- தொழுகையே நிரூபகமாம் படியான பெருமை வுடையவர் -திருவடிகளை ஒழிய என் ஆத்மாவுக்கு வேறு ஏதேனும் அபாஸ்ர்யம் இல்லை ../கைங்கர்யமே நிரூபகம்/வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள்-மேகத்தை ஆண்டாள்-மேகம்  தன் – நாதன் பதி என்று தெரிந்து கொண்டதே-பேதைமை தீர்த்த -தீர்க்கும் இரண்டு பாட பேதம்/

சாஸ்திரம்-சொல்லும்-அஷ்ட வர்ஷம் உபநயனம் கற்ப வாசம் சேர்த்து -பிறந்து ஏழுவாய்ஸில்- வேத  அத்யாபனம் பண்ணி-வேத பாகம் புரிந்து அதனாலே அதற்க்கு பிறகு பிரம விசாரம் பண்ண வருகிறான் -கர்மத்தில் வெறுப்பு கொண்டு- வேத உச்சாரணம் அநு உச்சாரணம்-கற்ற நூல் மறையாளர் கண்ணா புரம் -புத்தகத்தை பார்த்து அறிந்தார் இல்லை-ஓதிய வேதம்–ஆச்சர்ய பிரிய தனம் சேறு-சத்யம் வத தர்மம் -மாத்ரு தேவோ பவ ..ஆச்சர்ய தேவோ பவ அதிதி தேவோ பவ /சார தமம்-சரணாகதி -முமுஷு சரணம் அகம் பிரபத்யே-அசார அல்ப  சாரா சார சார தரம் விட்டு /மறையை நால் வேதத்தின் உள்ள மறை சுடரே-பாசுரம் போல-/-சொல்ல பட்ட- மறைத்து சுட்ட பட்ட சுடர்-/வேதே ராமாயண புண்யம் /உளன் சுடர் மிகு சுருதியுள் /வேதைச சர்வம் நானே சொல்ல படுகிறேன் கீதை-

ஏ பாவம் பரமே மா பாவம் விட அரக்கு — கோபால கோளரி –பிர பாவம் சொல்ல முடியுமா -யானையை தேடி கண்டு பிடிக்க சொல்லுமா போல-பிரசித்தம்-/வேத வேத்யனே பெருமாள் /உடன் மிசை உயிர் எங்கும் கரந்து எங்கும் பறந்து சுடர் மிகு சுருதியுள் உளன்-/பிரமம் சுருதி சிரசி வேதீப்தே- மேலே ஏற்றி வைத்த விளக்கு ஸ்ரீநிவாசன்/ வேதாந்தத்தில் வெளி பொருள் இவன்/ உள் பொருள் உபநிஷத்/ஜோதிசாம் ஜோதி இவன்/தேஜஸ் பதர்ந்தங்களின் கற்றை இவன் இருட்டாய் ஆக்குவான் /உழல்கின்ற  தொண்டர்–இன்னாருக்கு தொண்டர் தெரியாமல் எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்று திரிகிறான் இவன்-உழல்கின்ற – உழலுகையே – ஸ்வாபம் இவர்களுக்கு /நிலை நிற்காமல் //புராணம்- 800000  யோஜனை-இல்லை என்பர் ஹரே கிருஷ்ண- பாகவதம் சரி என்று பதில்///மைத்ரேயர் -பாஷாண்டிகள் அச்சுதனை கலி யுகத்தில் தொழ வர மாட்டார்கள் என்று சொல்லியது போல –நாதன் புருஷோத்தமன் -தம்மையே தமக்கு நல்கும் தன்மையன்-சூத்திர தேவர்களுக்கும் மனிசர்க்கும் தனக்கும் தொண்டு புரியும்–தேக ஆத்ம விபாகம் இன்றி–வாசனை யில் உழன்று-அடிமை என்று புரிந்து கைங்கர்யமும் பண்ணி கொண்டு–அவிஷயங்களில் பிராவண்யம்-மாறி மாறி   பல பிறப்பும் பிறந்து– நில்லவா நில்லாத நெஞ்சு -சுழலில்-யோனிகள்-உழலும்-

அஞ்ஞானம் போக்கி -ராமானுஜ திவாகரன்-புண்யம் போக விகாசாய -ஸ்ரீ மான்- கைங்கர்ய ஸ்ரீ படைத்து ஆவிர்பாகம்/வாசனையோடு போக்கி அருளினார் /சர்வ உத்தாரகர்/ வேதம் அறியாதவர்களுக்கும்– அறிந்து நாதன் என்று தெரியாதவர்களுக்கும்–தெரிந்தவர்களுக்கும் /ஆழ்வார் அனைவருக்கும் உபதேசம்-இதை கயறாக கொண்டு -அறியாதவர்க்கும் கரை ஏற்றுபவர்க்கும் நாலு ஐந்தும் ஐந்தும் அறிவித்தால் போல /நம் உடைய ராமானுசர் என்று நம்பி இருக்கும் பெரியோர் -ஆழ்வான்  ஆண்டான் பிள்ளான் -போல்வார் -செயல் க்கு அரிய செய்வார் பெரியோர்-அடியை தொழும் ஐ  வர்கட்காய்-இவர்கள் சிறுவர்கள்/ குங்குமம்  சுமந்த  கழுதை போல –கொற்ற போர் ஆழியான் திருவடிகள் பணியாதவர் -சிறுவர்-ஸ்வாமி அடி பணிந்தொர்க்கு அந்த சிறுமை இல்லை/ என் தன் ஆர் உயிர்- ததீயர் பற்றியதால் ஆர் உயிர் என்று கொண்டாடுகிறார் /விலக்ஷன ஆத்மா-கண்டு கொண்டேன் எம் ராமானுசன் தன்னை சொன்னது உபாயமாக கொண்டு அவன்தொண்டர்  பொன் தாளில் தொண்டு கொண்டேன் என்பதே பிராப்யம் என்கிறார்..

86–பற்றா மனிசரை பற்றி

பற்றா மனிசரை பற்றி அப் பற்று விடாதவரே

உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல்

கற்றார் பரவும் ராமானுசனை கருதும் உள்ளம்

பெற்றார் யவர் அவர் எம்மை நின்று ஆளும்  பெரியவரே

முன்பு அப்ராப்த விஷயங்களை பற்றி இருப்பாரை பந்துகளாக நினைத்து அவர்கள் அளவிலே தாம் ப்ரவனராய் போந்த படிகளை அனுசந்தித்து ,இனி அது செய்யேன் //எம்பெருமானாரை சிந்திக்கும் மனசு உடையார் ஆரேனும் ஆகிலும் என்னை ஆழ உரியவர் என்கிறார் /..பற்றா-காதல் செய்யாத ஆபாச பந்துகள் .-/அடியார்க்கு அடியான் இப் பொழுது பற்றினார் முன்போ-/ பற்றா  மனிசரை பற்றி-அப் பற்று விடாதவரே உற்றார் என உகந்து -இது வேற – ஓடி-ஓடி வேற போனேன்-நைந்து இருந்தார் //ஒள்ளிய நூல்- ரகஸ்ய  த்ரயம்  -பரவும்-அடைவு கெட கொண்டாடும் –கருதும் உள்ளம் பெற்றார்-ஞானம் இருக்க வேண்டும் இல்லை-மனசு இருந்தாலே போதும்-அவர்கள் என்னை ஆளும் பரமரே//கொண்ட பெண்டிர்- ஆழ்வார்-அநு கூலம்  உடன் இருப்பவருடன் வாழலாம்/

பணம் காசு கொடுத்து கொண்ட பெண்டிர்//எல்லா உறவுமாக கொண்ட பெண்டிர் /குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை /அப்ராப்த விஷயங்களைபற்றியவர்  த்யாஜ்யம் -ஆபாச பந்து உத்தேச்யம் //ஒன்றுக்கும் பற்றாத -துயரில் மலியும் மனிசர்/சூத்திர மனுஷ்யரை ஆச்ரயித்து –அந்த ஆச்ரண்யம் விடாதே நிற்கிரவர்களையே பந்துக்கள் என்று அநு சந்தித்து ,அவர்கள் பின்னே திரிந்து உழன்று ,அவர்கள் விஷயமான ப்ராவன்யத்தாலே

அவர்கள் முகத்தில் விழிக்க பெறுவது,எபொழுது என்று ஓடி ,அவர்கள் உடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷா சொஹங்களாலே இனி சிதிலன் ஆகேன் –..தத்வ ஹித புருஷ்ஹார்த்தங்களை–மூன்று படி பல்லவிதம்-மொட்டு போல பகவான் தத்வம் உபாயம் புருஷார்த்தம்/ பாகவதர் -புஷ்பிதம் /ஆச்சர்யரே பழுத்தால் போல — சுவ்யக்தமாக பிரகாசிப்பிக்கும் சாஸ்த்ரங்களை அதிகரித்து இருக்கும் -ரகஸ்ய த்ரயம் ஓர் ஆண் வழியாக பெற்று-அவர்கள்- தங்கள் கல்விக்கு பிரயோஜனம் இது என்று பிரேமத்தாலே அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ள-பரவும்- எம்பெருமானாரை -ஒருவரையே-அநு சந்திக்கையே யாத்ரை யாய் இருக்கும்-கருதும்–பரவ தெரியா விடிலும்-துருவனை கன்னம் பாஞ்ச சந்யத்தாலே தடவி ஸ்தோத்ரம் பண்ண வைத்தாரே– மனசை நிதி பெற்றால் போலே லபித்தது இருக்கும் அவர்கள்யவர்- யாவர் சிலர்—கருதும்  உள்ளம் உடையார் இல்லை பெற்றார் நிதி போல-மரக்கலம் கரை சேர்ந்தால் போல- – சிலர் அவர்கள் குல சரண கோத்ரங்கள் ஏதானுமாக-யாராகவாய் இருப்பினும் – அமையும் ..அவர்கள் நம்மை இவ் ஆத்மா உள்ள அளவும் -நம்மை- அனைவரையும் எம்மை என்று நம்மையும் சேர்த்து கொள்கிறார் ஒரு படி பட அடிமை கொள்ளும் மகானுபாவர்–ஆளும்–  -நிற்கும்-ஆத்மா உள் அளவும் ஒரு படி பட ஆள்வார்கள் தரு துயரம் தடையேல்-பந்தமும் மோஷமும் அவன் தருவான்-,/ஸ்வாமி -முற்றும் துறந்தவர் –மருமான் தாசரதி விட வில்லை/ திரு குருகை பிரான் பிள்ளானை புத்திரன்/கோவில் அண்ணன் ஆண்டாள் சகோதரி //கொண்டாட்டும் குலம் புனைவம் தமர் உற்றால் மனை ஒழிய உயிர் மாய்தல்-பொருள் இருந்தால் வருவார்கள் //உற்றார் என உழன்று-பிரமித்து போனான்-//கழிய மிக்கதோர் காதல்-பிரிய பிரிய காதல் பெருக ஆழ்வாருக்கு /ஈரும் வெம் ஆவி –நைந்து பிரிவால்–

பற்றா மனிசர் –பற்று விடாதே -அந்த ஆஸ்ராயணம் விடாமல் என்றும் கொள்ளலாம் /தாயே தந்தை என்னும் தாரமே கிளை மக்கள் என்னும் ..-நோயே  பட்டு ஒழிந்தேன்– ஏவ காரம் ஒருவரே போதும்-

அபயம் -சேர்ந்து இருந்தால்/பிரிந்தால் பயம்//பிறக்கே உழைத்து ஏழை  ஆனேன்-ஆத்மா ஞானம் இன்றி–/பழுதே பல பகலும் போயின /ஓட்டை ஓடத்துடன் ஒழுகல் ஓடம் போல தேவதாந்தர பஜனம்//நக்க பிரானோடு அங்கு உய்ய கொண்டது நாராயணன் அருளே // அம்மனை மீர் ஆசை இல்லை விடுமினோ-அஞ்சலி- கும்பிடு போட்டு விலகனும்//சர்வம் அஷ்டாஷரம் -எட்டு எழுத்தும் /சுடர் மிகு சுருதி/ரகஸ்ய த்ரயமே ஒள்ளிய நூல் /ஆந்தர-ததீய சேஷத்வம் -ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம்./தேவு மற்று வேறு அறியேன் /இத தாய் ராமானுசன்-பட்டர் /ஏய்ந்த பெரும் கீர்த்தி-அனந்தாழ்வான் –அனுசந்திப்பதே கால ஷேபம்–குல தாங்கு -எவரேலும் அவர் கண்டீர்-அவர் எம்மை நின்று ஆளும் பரமரே /மிலேச்சனாய் இருந்தாலும் பக்தனே முனி ரிஷி பண்டிதன் -தொழுமினீர் கொள்மின் கொடுமின் குக்கரில் பிறப்பர் ஏலும் //தொண்டர் அடி போடி ஆழ்வார் போல..

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading