தேவ பிரானின் ஆறு வார்த்தை ..

பெருமாள் கோவில்..

தேவாதி ராஜன் 

வரததன்

 வரத ராஜன் பேர் அருள் ஆளன்

ஹஸ்த கிரி வேள மலை 

 த்யாகேசன் -சொத்தை விட்டு கொடுத்தார்..

பெரும் தேவி சொத்தாக இருந்தாலும் உயரினும் மேலான ராமானுஜ திவாகரனை விட்டு கொடுத்தார்

திரு கச்சி நம்பி கஜேந்திர தாசர் திரு நாமம் மாசி மிருக சீர்ஷ நட்ஷத்ரம் அவதாரம் .அர்ச்சை சமாதி குலைத்து /முடி மன்னவரும் -தொண்டை மானவன் இடம் திரு வேங்கட பெருமாளும் திரு விளக்கு பிச்சன் ரெங்கநாதன் பேசினது போலவும்..குளிர் அறவி வேங்கடத்தில் வீச வேண்டாம் ..தினப் படி வீசும் கைங்கர்யம்..கச்சிக்கு வாய்த்தான்மண்டபதில் வீசி கொண்டு பேசுவாராம் ..அவரை -போனகம் செய்த அதை உண்ண ஆசை கொண்டார் ராமானுஜர்..

சு பாவனம் போனகம் செய்த அன்னம். விரும்பி கிடைக்க வில்லை .சந்தேகம் தீர பேசி தர வேண்டினார் .கேட்காமலே தன உடைய திரு வாக்கால் ஆறு வார்த்தைகள் அருளினார் …

பதில் வைத்து தான் கேள்விகளை ஊகித்து  கொள்ளணும்/அஹம் மேவ பரதத்வம்..தன்னை  காட்டிலும் மேம் பட்டவர் இல்லை. தைரியமான வார்த்தை இது..நான் ஒருத்தனே என்கிறார்..பேதம் அபேதம் சித்தாந்தம்..

தரிசனம் பேதம் ஏவச ..ஆத்மா பரமாத்மா ஐக்கியம் –பேதம்..உபாயம்-பக்தி யா  பிரபதியா – உபாயங்களில் மிக பிரபதியே சிறந்தது ..இறுதி நினைவு தேவையா இல்லையா ..நினைத்தை போல பிறப்பாய் ..பக்தனுக்கும் பிற பத்தனுக்கும் இது வேணுமா .அந்திம ஸ்மரதி வேணுமா வர்ஜனம் தேவை இல்லை நான் நினைவில் வைத்து கொண்டு  மோஷம் அளிப்பேன் -விலக்க பட்டது ..தேகாசவேன முக்தி ..அவனுக்கு அது வரை தான் கால தாமதம் அது விலக்கப் பட்டதும் மோஷம் இது சாஸ்திர வாக்கியம்..உபாசகனுக்கு பிராரப்த கர்மம் தொலைந்ததும் மோஷம் ..எந்த பிறவியில் சரண கதி பண்ணினானோ அந்த தேகத்தின் முடிவில்-கர்மத்தின் முடிவில் இல்லை என்று விளக்கினார் / யாரை பற்ற வேணும்..ஐந்து ஆச்சார்யர்கள் பெரிய நம்பி ..ஏகலைவனை போல துரோனாச்சர்யர் இடம் ..ஆளவந்தார் இடம் நேராக பெற வில்லை பொறுப்பை ஐந்து பேர் இடம் கொடுத்தார்.திரு மலை நம்பி/பெரிய நம்பி திரு கோஷ்டியூர் நம்பி /திரு மாலை ஆண்டான் /ஆழ்வார் திரு அரங்க  பெருமாள் அரையர் /திரு கச்சி நம்பி/திரு கரம்பனூர் துறையில் -ஆளவந்தாரின் சரம திரு மேனி சேவை /பூர்னாச்சர்யர்..துரோனச்சர்யர்க்கு ஏகலைவன் போல ஆளவந்தாருக்கு ராமானுஜர்..பூரண ஆச்சார்யர் -பெரிய நம்பிகள் ஸ்ரீ ரெங்கத்தில் திரு அவதாரம் .அவரையே சமாஸ்ராயகம் பண்ண சொல்லி அருளினார்

அசித் சித் பக்தன் முக்தன் நித்யன் நால்வரை விட உயர்ந்தவன்  புருஷோத்தமன் 15 th அத்யாயம் அபுருஷம்-அசித்/புருஷம் -பக்தர் /வேறு பட்டவர் பேதம். உயர்ந்தவர் வைலஷன்யமும் உண்டு ..வியாபகம் ,தாங்குகிறான் ,சகலதுக்கு ஆதாரமிவன் ,தார்யம் அனைத்தும் இவனே..நியமிக்கிறான் /ஸ்வாமித்வம் ஸ்வாஸ் சுவாமி சம்பந்தம் ..அதனால் தான் பரம் பொருள் அவன்..

பக்தர் வர்க்கத்தில் அணைத்து தேவர்களும் அடக்கம்.. பிரம்மா முதல்  எறும்பு  வரை அனைத்தும் சேரும்..தேவர் முனிவர் அனைவரும் பார்க்காத இடம் பரம பதம்..வானுளார் அறியலாகா தெளி விசும்பு திரு நாடு ..ஆரோக்கியம் பாஸ்கர ..செல்வம்-அக்னி ஞானம் ருத்ரன் மோட்ஷம் ஜகன்னாதன் ..இதையே அளிப்பவன் அனைத்தையும் அளிப்பான் ..மர்கண்டேயனும் கரியே..மோஷ பிரதத்வம் அவன் இடம் மட்டும் தான் ..

சிவ லிங்க ஸ்கந்த புராணங்களிலும் உண்டு /மற்றைய தேவர்களும் சரீரம் அங்கம் போல..ஜகத்துக்கு முழு முதல் காரணம் இவனே ..காரணத்தை உபாசித்து மோஷம் பெறலாம் -உபநிஷத்.. தனக்கு ஒரு காரணம்  இல்லாதவன் அவன்./ அகில  காரணமும் நிஷ் காரணமும்  இரண்டும் வேணும்./.பிரம்மா ஆத்மா சத்து  பெரிசு காரணம் என்று பொது சொல்கள் பல சொல்லும்..அது இது வுது அவன் இவன் வுவன் போல..முதலில் சொல்லி பின்பு அவர் என்றால் புரியும்..பெயரை சொல்லும் நாராயண உபநிஷத் போல்வன சொல்லும்..பிரளயத்தில் அவன் மட்டுமே இருந்தான் ஏக : நாராயண . ஒன்றும் தேவும்…. குன்றம் போல நின்ற ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுகிரீர்களே .

லஷ்யம் புரிந்து கொண்டு -அவனையே கொள்ளணும்..மோஷ பிரத்வ குணம் திரு கண்ண புரம் சௌரி ராஜ பெருமாள் காட்டினார் நாயனார் /ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயன்..  பொன் அப்பன் மணி அப்பன் ..தன ஒப்பார் இல் அப்பன் எனக்கு ஆர் உயராய்  உள்ளான் தந்தனன் தன தாள் இணையே ஆழ்வார்

தரிசனம்-சித்தாந்தம்.. பேதமே என்று அருளினார்  ..பேத அபேத ஸ்ருதிகள் இரண்டும் உண்டு..ஐக்கியம் சொல்லும் ஸ்ருதிகள் பல உண்டு.. ஒன்றாகவே இருந்தது.. அபேதம் சொல்லி/ போக்தா போக்கியம் ப்ரேரிதா-தூண்டுபவன் ..மூன்றும் சொல்லும் ஸ்ருதிகள் பேத ஸ்ருதிகள்..கடக சுருதி இரண்டையும் சேர்த்து வைக்கும்..முரண்பாடு இல்லை ..அஜந பிறப்பிலி. அவதாரம் பிறந்தவாறும் பிறந்த மாயா ஒருத்தி மகனாய் பிறந்த .இரண்டும் சொல்லும் /அஜயாமான புஹுதாம் விஜாயதே-பிறப்பில் பல் பிறவி பெருமான் /ஒரே இடத்தில் இரண்டையும் சொல்லும். /இச்சாதீனமாக பிறக்கிறான் கர்மம் அடியாக பிறக்க வில்லை ..

கானல் நீர் போல பொய் எங்கும் அத்வைதம் பிரமம் மட்டுமே உண்மை. ..தத் துவம் ஆசி.. ஒன்றையே பார் ..இரண்டின்மை ..சொரூபத்தாலே ஐக்கியம் ஏகமேவ தத்வம் ஞானம்  கூட இல்லை பிரமத்துக்கு ஞானம்  என்றால் இரண்டாகுமே .. பூ பறிக்கும் பொழுதும் ஓன்று ஓன்று என்று எண்ணுவாராம் ஆதி சங்கரர் ..அபேத சுருதி சிக்கல் எடுத்து பேதம் சொல்லி அருளுவார் ..சரீர ஆத்மா சம்பந்தம்..இதனால் அபேதத்தை சொல்லலாம்..நான் அடித்தேன் என் சரீரத்தை கொண்டு அடித்தேன் என்று சொல்ல வில்லை/ நான் மனிதன் ஸ்தூலன் போன்ற சொல்கள்/ஆடு -சரீரம் ஜீவாத்மா அதன் உள் உள்ள பரமாத்மா வரை குறிக்கும்..எந்த சப்தம் சொன்னாலும் பிரமத்தை குறிப்பதால் இரண்டு இல்லை..

அப்ரிதக் சித்த விசேஷணம்-பிரியாமல் சார்ந்து இருக்கும் புஷ்பத்தில்- புஷ்பத் தன்மை /மணம் இரண்டும் சார்ந்து இருக்கணும் பிரிந்து இருக்காது..பிரமத்தை விட்டு பிரியாமல் சார்ந்து எல்லாம் இருக்கும்..இதுக்கு தான் கடக சுருதி..தத்வம் வேற தான் .. சரீர ஆத்மா பாவத்தால் ஓன்று ..பர சப்தம் ஒப்புமை இருந்தால் தான் சொல்லலாம்.. உத்தம என்றால் பல இருக்கணும்..பிரமத்தை ஆத்மாவாக கொள்ளாத இரண்டாவது தத்வம் இல்லை..

காரணத்தை உபாசிக்கணும் ..பக்தியா பிரபத்தியா ..பக்தி ஆரம்பிக்க விடாமல் பாபங்கள் தடுக்கும்..பிராய சித்தம் பண்ணி தீர்க்க முடியாது அப்போதும் பாபம் சேர்ப்போம்…சரணா கதியே சிறந்தது.. நம் முயற்சி பக்தி. -சாத்திய உபாயம் இது ..அவன் சித்த உபாயம்..இதுவே சுலபம்.. சரணம் என்று ஏற்று கொள்ளுதல் ஒன்றே நாம் செய்ய வேண்டியது ..புரிவது கஷ்டம் பண்ணுவது சுலபம். நான் சரண் பண்ணினேன் மோட்ஷம் அடைந்தேன் சொல்ல கூடாது .சித்த வஸ்து..ஸ்வதந்த்ரம் லேசமும் கூடாது ..அவன் அவன் சொத்தை அவன் திரு வடிகளில்அவனே  சேர்த்து கொண்டான் ..நாம் பண்ணுவது ஒன்றும் இல்லை ..ருசியை வளர்த்து கொள்ளணும் ..அந்தரங்கர்களுக்கு இதையே உபதேசிக்க அருளினார்

வேறு பாடு உயர்த்தி அடுத்து..மரண படுக்கையில் அந்திம ஸ்மரதி வேண்டும். ஜட பரதர் மான் போல ஆனார் சாயுஜ்ய  மோஷம் பெற அவனை நினைக்கணும்.. நினைவு வேணும் …பொறுப்பு அவர் ஏற்று கொள்கிறார் .வராக சரம ஸ்லோகம் ..அஹம் ஸ்மராமி மத பக்தம் நயாமி பரமாம் கதி ..அந்திம ஸ்மரதி வர்ஜனம் என்கிறார்

முக்தி எப்பொழுது கிடைக்கும்..அவனுக்கு அது வரை தான் கால தாமதம்-ஸ்மரதி ..அனுபவிக்க தொடங்கிய கர்மங்கள்- பிராரப்த கர்மம் முடியும் பொழுது.. சஞ்சித கர்மம் அடுத்த வகை. அரை வினாடி சேர்த்த கர்மம் தொலைக்க பல கல்ப காலம் வேணும்.. சஞ்சித கர்மம் நீக்கி பிராரப்த கர்மம் தொலைத்து -அந்த சரீரத்திலே -தொலைய வைக்கிறார்.. தொலைக்க படுகிறது.. பொறுப்பு அவன் இடம் தான் இதில்..நாம் தொலைக்க கல்பம் பல வேணும்..

அந்த பிறவியிலே மோட்ஷம்.. சரண் அடைந்த உடன் இல்லையே –தேகம் தொலையும் பொழுது மோட்ஷம்..இவனுக்கு ருசி வராமையால்..உடனே கொடுத்தால் வருகிற நால் பெரும் வர மாட்டார்கள்..கஷ்டம் கொடுக்கும் பொழுதே சம்சாரம் வெறுப்பு வர வில்லையே ..

மஹா பூர்ணர் பெரிய நம்பியை பற்ற  அருளியதும் ராமானுஜர் உடன் போனார் -மதுராந்தகம் ஏரி காத்த நம்பி -அங்கேயே உபதேசம் பெற்றார் ..கண்ட வாற்றால் தேவாதி ராஜன் எனபது  தோற்றும்..

அப்போதுக்கு இப்போதே சொல்லி விட்டோம் என்று இருக்கணும் ..காரேய் கருணை ராமானுஜர் ..

திரு கச்சி நம்பி திரு வடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்  திரு வடிகளே சரணம்..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading