ஸ்ரீ வசன பூஷணம் அவதாரிகை -1-..

1–புருஷகார வைபவஞ்ச சாதனச்ய கெளரவம்

தத் அதிகாரி க்ருத்யவம்  அசய சத்குரு  உபவேசனம்

ஹரிதயாம் அஹேது  கீம் குரோர் உபாயதாஞ்ச யோ

வசன பூஷன அவதத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

2–சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத

சாரார்த்த சந்க்ரக மகாரச வாக்ய ஜாதம் சரவஞ்ச

லோக  குறு நிர்மிதம்  ஆர்யபோக்யம் வந்தே

சதா வசன பூஷண திவ்ய  சாஸ்த்ரம்

3–அகுண்ட உத்கண்ட வைகுண்ட ப்ரியாணாம்

கண்ட பூஷணம்  குருணா   ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்

4-

பேறு தருவிக்கும் அவள் தன பெருமை

ஆறு பெறுவான் முறை அவன் கூறு

குருவை பனுவல் கொள்வது  இலையாகிய குளிர்ந்த அருள்

தான்  மாறில் புகழ் நற்குருவின் வண்மையோடு

எலாம் வசன பூடணம் அதில் தேறிட

நமக்கு அருள் முடும்பை இறைவன்  கழல்கள் சேர் என் மனனே

5–திரு மா மகள் தன சீர் அருள் ஏற்றமும்

திருமால் திருவடி சேர் வழி நன்மையும்

அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்

மெய்வழி வூன்றிய மிக்கோர் பெருமையும்

ஆரணம் வல்லவர் அமரும் நன்னெறியையும்

நாரணன் தாள் தரு நற் குறு நீதியும்

சோதி  வான் அருள் தூய மா குருவின் பாத மா மலர்  பணிபவர் தன்மையும்

தீதில் வானவர் தேவன் உய்ர்களை ஏதும் இன்றி  எடுக்கும் படியையும்

மன்னிய இன்பமும்

மா கதியும்

குரு என்னும் நிலை பெறும் இன்பொருள் தன்னையும்

அசைவிலா வேதம் அதனுள்  அனைத்தையும்

வசன பூஷண  வழியால் அருளிய

மறையவர் சிகாமணி  வான் புகழ் முடும்பை

இறையவன் எங்கோன்  ஏர் உலகாரியன்

தேன் மலர் சேவடி  சிந்தை செய்பவர்

மாநிலத்து இன்பம் அது எய்தி  வாழ்பவர்..

6–லோகாசார்ய க்ருதே லோக ஹிதே வசன பூஷனே

தத்வார்த்த  தர்சினோ லோகே  தன்னிஷ்டாச சுதுர்லப :

7–ஜகதாசார்யா ரசிதே ஸ்ரீமன் வசன பூஷனே

தத்வ ஞாநஞ்ச  தன்னிஷ்டாஞ்ச  தேஹிநாத  யதீந்திர மே

சகல வேத சங்கரஹமான திரு மந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதி பாடப் படுகிற ஆகார த்ரயமும் (அனந்யார்த்த சேஷத்வம், அநந்ய சரணத்வம்,அநந்ய போக்யத்வம் ) சர்வாத்ம சாதாரணம் ஆகையாலே  யத்ரர்ஷய: பிரதம ஜாயே புராண: என்கிற  நித்ய சூரிகளோபாதி, சுத்த சத்வமான பரம பதத்திலே  நித்யாசங்குசித ஞானராய் கொண்டு  நிரந்தர பகவத் அநுபவ ஜனித, நிரதிசயாநந்த த்ருப்த்தராய் இருக்கைக்கு  யோக்யதை உண்டாய் இருக்க செய்தேயும் அநாதி மாயயா சுப்த: என்கிற படியே,  திலதைலவத்  தாருவஹ்நிவத்  துர்விசேச (எள்ளில் உள்ள எண்ணெய் போன்றும் ,கட்டையில் உள்ள நெருப்பு போன்றும் ,பிரித்து அறிய இயலாத தன்மை கொண்டும் )த்ரி குண த்ருரத்யா அநாதி  பகவன் மாயாதி ரோஹித ஸ்வ பிரகாசராய் அநாதி அவித்யா சஞ்சிதானந்தபுண்ய அபுண்ய  கர்ம அனுகுணமாக சூர நர திர்யக் ஸ்தாவர யோநிகள் தோறும் மாறி மாறி  பல பிறப்பும் பிறந்து (திருவாய்மொழி 2-6-9-,) பிறந்த பிறந்த ஜன்மங்கள் தோறும் தேக ஆத்ம அபிமாநமும், ச்வாதந்த்ர்யமும்  அந்ய சேஷத்வம் ஆகிற படு குழிகளிலே விழுந்து தத் அனுகுண சாத்ய சாதனங்களிலே மண்டி யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை (  திரு விருத்தம் -95) ஏறிட்டு கொண்டு ,ப்ராப்த சேஷியாய், பரம ப்ராப்ய பிராபக பூதன் ஆனவன்  பக்கல் அத்யந்தவிமுகராய், கர்ப்ப ஜன்ம பால்ய யவ்வன வார்த்தக  மரண நரகங்கள் ஆகிற அவஸ்த்தா சப்த கத்திலே நிரந்தர வித்தவிவித நிரவதிக துக்கங்களை அனுபவித்து திரிகிற விச சம்சாரி சேதனரிலே ஆரேனும் சிலருக்கு ஜாயமான கால பகவத் கடாஷ விசேஷத்தாலே ரஜஸ் தமச்கள் தலை மடிந்து சத்வம் தலை எடுத்து  மோஷ ருசி உண்டானாலும்

தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி அறிந்தே உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் ,அவை தன்னை சாஸ்திர முகத்தாலே அறிய பார்க்கும் அளவிலே  சாஸ்த்ரங்களில் தலையான வேதம்  ஆனது அனந்த வை வேதா என்கிற படியே  அனந்தமாய் , ச்வார்த்த நிர்ணயத்தில் சர்வ சாகா ப்ரத்யய  நியாயாதி  சாபேஷமாய்  இருக்கையாலே அல்ப மதிகளுக்கு அவகாஹித்து அர்த்த நிச்சயம் பண்ணுவது அரிது ஆகையாலும்அநந்த வேத பாரகராய் ச்வயோக மஹிம சாஷாத் கருத பராவர தத்வ  விபாகரான வ்யாசாதி பரம ரிஷிகளாலே , பரணீ தங்கலாய் வேதோ உப ப்ரகனங்களான ஸ்ம்ருதி இதிகாச புராணங்களிலும் சார அசார விவேக சதுரர்க்கு ஒழிய தாத்பர்யாம்சம் தெரியாமையாலும் ,அவை போல் அன்றிக்கே ,சம்சாரி

சேதனோக் ஜீவன காமனான சர்வேஸ்வரன் தானே ஆச்சர்யனாய் வெளிப்படுத்தின சகல வேத சாரமான ரகஸ்ய த்ரயமும்  அதி சங்கரகதையா  அதி கூடார்தங்கள் ஆகையாலும் பாகவதா கச்மிக கடாஷ விசேஷத்தாலே மயர்வற மதி நலம் அருள பெற்ற பராங்குச பரகாலாதி களான ஆழ்வார்கள் அருளி செய்த திராவிட ,வேத ததோ உபாங்களான திவ்ய பிரபந்தங்களும் அளவிலிகளால் அர்த்த தர்சனம் பண்ண போகாமையாலும் ருசி பிறந்த சேதனர் இழந்து போம்படி இருக்கையாலே ஆழ்வார் உடைய நிர்கேதுக கடாஷ லப்த திவ்ய ஞானரான நாத முனிகள் தொடக்கமாக சத் சம்ப்ராதய  சித்தராய் சகல சாஸ்திர நிபுணராய்  பரம தயாளுக்களான பூர்வ  ஆச்சார்யர்கள் அந்த வேதாதி அர்த்தங்களை சந்க்ரகித்து மந்த மதிகளுக்கும்  சுக்ரஹமாம் படி பிரபந்தீ கரித்தும் உபதேசித்தும் போந்தார்கள்

அப்படியே சம்சாரி சேதனர் இழவு சகிக்க மாட்டாத பரம கிருபையாலே தத் உஜ்ஜீவன அர்த்தமாக தாமும் பல பிரபந்தங்கள் அருளி செய்த ,பிள்ளை லோகாசார்யர் ,ஆச்சர்ய பரம்பரா  ப்ராப்தங்களான அர்த்தங்களில் அவர்கள் தாங்கள் கவ்ரவ அதிசயத்தாலே ரகஸ்யமாய் உபதேசித்து போந்தவையாய் அருமை பெருமைகளை பற்ற

,இதுக்கு முன்பு தாமும் ,பிரகாசிக்காமல் அடக்கிக் கொண்டு   போந்தவையான அர்த்த விசேஷங்கள் எல்லா வற்றையும் பின்பு உள்ளோரும் இழக்க ஒண்ணாது என்கிற தம் உடைய க்ருபா அதிசயத்துக்கு மேலே பெருமாளும் ஸ்வப்பனத்திலே திரு உள்ளமாய் அருளுகையாலே  ஸ்ரீ வசன பூஷணமா கிற இப் பிரபந்த முகேன வெளி இட்டு அருளுகிறார்

முன்பே பேர் அருளாள பெருமாள்  தம் உடைய நிர்ஹ்கேதுக கிருபையாலே மனற்பாகத்தில் இருப்பதோர் நம்பியாரை விசேஷ கடாஷம் பண்ணி அருளி தஞ்சமாய் இருப்பன சில அர்த்த விசேஷங்களை தாமே அவர்க்கு ஸ்வப்பன முகேன அருளி செய்து ,நீர் போய் இரண்டு ஆற்றுக்கு நடுவே போய் வர்த்தியும்..இன்னமும் இவ் அர்த்தங்கள் எல்லாம் விசதமாக நாம் அங்கெ சொல்லுகிறோம் என்று திரு உள்ளமாய் அருளுகையாலே ,அவர் இங்கே வந்து பெரிய பெருமாளை சேவித்து கொண்டு ,நமக்கு முன்னே அங்கு அருளி செய்த அர்த்தங்களையும் அசல் அறியாதபடி அனுசந்தித்து கொண்டு ,ஏகாந்தமான ஒரு கோவிலிலே ,வர்த்தியா நிற்க செய்தே தம் உடைய ஸ்ரீ பாததக்கு அந்தரங்கரான முதலிகளும் ,தாமுமாக பிள்ளை ஒரு நாள் அந்த கோவிலிலேயாத்ருச்சிக மாகவே எழுந்து அருளி ,அவ விடம் ஏகாந்தமாய் இருக்கையிலே ரகச்யார்தங்களை அவர்களுக்கு அருளி செய்து கொண்டு அருளா நிற்க ,அவை தமக்கு பேர் அருளாள பெருமாள் அருளி செய்த அர்த்த   விசெஷங்கலாய் இருக்கையாலே , அவர் போரவித்தராய் உள் இன்றும் புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீ பாதத்திலே விழுந்து அவரோ நீர் என்ன ஆவது ஏது என்று பிள்ளை கேட்டு அருள ,பேர் அருளாள பெருமாள் தமக்கு இவ் அர்த்தங்களை பிரசாதித்து அருளின படியும் இத் தேசத்திலே போர விட்ட படியையும் விண்ணப்பம் செய்ய கேட்டு

யாத்ருச்சிக மாகவே எழுந்து அருளி ,அவ விடம் ஏகாந்தமாய் இருக்கையிலே ரகச்யார்தங்களை அவர்களுக்கு அருளி செய்து கொண்டு அருளா நிற்க ,அவை தமக்கு பேர் அருளாள பெருமாள் அருளி செய்த அர்த்த   விசெஷங்கலாய் இருக்கையாலே , அவர் போரவித்தராய் உள் இன்றும் புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீ பாதத்திலே விழுந்து அவரோ நீர் என்ன ஆவது ஏது என்று பிள்ளை கேட்டு அருள ,பேர் அருளாள பெருமாள் தமக்கு இவ் அர்த்தங்களை பிரசாதித்து அருளின படியும் இத் தேசத்திலே போர விட்ட படியையும் விண்ணப்பம் செய்ய கேட்டு

யாத்ருச்சிக மாகவே எழுந்து அருளி ,அவ விடம் ஏகாந்தமாய் இருக்கையிலே ரகச்யார்தங்களை அவர்களுக்கு அருளி செய்து கொண்டு அருளா நிற்க ,அவை தமக்கு பேர் அருளாள பெருமாள் அருளி செய்த அர்த்த   விசெஷங்கலாய் இருக்கையாலே , அவர் போரவித்தராய் உள் இன்றும் புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீ பாதத்திலே விழுந்து அவரோ நீர் என்ன ஆவது ஏது என்று பிள்ளை கேட்டு அருள ,பேர் அருளாள பெருமாள் தமக்கு இவ் அர்த்தங்களை பிரசாதித்து அருளின படியும் இத் தேசத்திலே போர விட்ட படியையும் விண்ணப்பம் செய்ய கேட்டு

மிகவும் ஹிருஷ்டராய் அவரையும் அபிமாநித்து அருள அவரும் அங்கு உத்தைக்கு அந்தரங்கராய் வர்த்திக்கிற நாளிலே ,,பெருமாள் அவருக்கு ஸ்வப்பனத்திலே இவருக்கு இவ் அர்த்தங்கள் மறந்து போகாது இருக்கும் படி இவற்றை ஒரு பிரபந்த ஸ்தமாக்க சொன்னோம் என்று நீர் பிள்ளைக்கு சொல்லும் என்று திரு உள்ளம் ஆக ,அவர் இப் படி பெருமாள் திரு உள்ளமாய் அருளினார் என்று விண்ணப்பம் செய்ய ,ஆனால் இப்படி செய்வோம் என்று திரு உள்ளம் பற்றி அநந்தரம் இப் பிரபந்தம் இட்டு அருளினார் என்று பிரசித்தம் இறே

மிகவும் ஹிருஷ்டராய் அவரையும் அபிமாநித்து அருள அவரும் அங்கு உத்தைக்கு அந்தரங்கராய் வர்த்திக்கிற நாளிலே ,,பெருமாள் அவருக்கு ஸ்வப்பனத்திலே இவருக்கு இவ் அர்த்தங்கள் மறந்து போகாது இருக்கும் படி இவற்றை ஒரு பிரபந்த ஸ்தமாக்க சொன்னோம் என்று நீர் பிள்ளைக்கு சொல்லும் என்று திரு உள்ளம் ஆக ,அவர் இப் படி பெருமாள் திரு உள்ளமாய் அருளினார் என்று விண்ணப்பம் செய்ய ,ஆனால் இப்படி செய்வோம் என்று திரு உள்ளம் பற்றி அநந்தரம் இப் பிரபந்தம் இட்டு அருளினார் என்று பிரசித்தம் இறே

மிகவும் ஹிருஷ்டராய் அவரையும் அபிமாநித்து அருள அவரும் அங்கு உத்தைக்கு அந்தரங்கராய் வர்த்திக்கிற நாளிலே ,,பெருமாள் அவருக்கு ஸ்வப்பனத்திலே இவருக்கு இவ் அர்த்தங்கள் மறந்து போகாது இருக்கும் படி இவற்றை ஒரு பிரபந்த ஸ்தமாக்க சொன்னோம் என்று நீர் பிள்ளைக்கு சொல்லும் என்று திரு உள்ளம் ஆக ,அவர் இப் படி பெருமாள் திரு உள்ளமாய் அருளினார் என்று விண்ணப்பம் செய்ய ,ஆனால் இப்படி செய்வோம் என்று திரு உள்ளம் பற்றி அநந்தரம் இப் பிரபந்தம் இட்டு அருளினார் என்று பிரசித்தம் இறே

ரத்ன பிரகாரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்று பேர் ஆமா போலே பூர்வாச்சார்யர்கள் உடைய வசன பிரசுரமாய் அனுசந்த்தாதாக்களுக்கு ஒவ்ஜ்வல்யகரமாய் இருக்கையாலே ,இதுக்கு வசன பூஷணம் என்ற திரு நாமமாய் ஆயிற்று

இப் பிரபந்தத்தில் -வேதாந்தம் அறுதி இருவது -என்று தொடக்கி-அத்தாலே அது முற்பட்டது -என்னும் அளவாக -நான்கு சூர்ணம் வரை -வசஷ்ய மாணார்த்த நிர்ணாயக பிரமாணம்  நிர்த்தேசம் பண்ணுகிறது ஆகையாலே பிரபந்த உபோத்காதம்-முன்னுரை-இதிகாச ஸ்ரேஷ்டம் என்று தொடக்கி ப்ரபத்ய உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக -என்னும் அளவு சாபராத சேதனர்கள் உடைய சர்வ அபராதங்களையும் சர்வேஸ்வரன் சகிப்பித்து ரஷிப்பிக்கையே ஸ்வரூபமான புருஷாகார வைபவரும்  அந்த புருஷாகாரம் மிகை ஆம் படியான உபாய வைபவமும் சொல்லுகிறது

ப்ரபத்திக்கு என்று தொடங்கி எகாந்தீவ்ய பதேஷ்டவ்ய -என்னும் அளவும் இவ் வுபாய வரண ரூப பிரபத்தியின் உடைய தேச காலாதி  நியமா  பாவம்  , விஷய நியமம் ,ஆஸ்ரய விசேஷம் ,இத்தை சாதனம் ஆக்கில் வரும் அவத்யம் ,இதின் ஸ்வரூப ரூப அங்கங்கள்  முதலான வற்றை சேர சொல்லி பிரபத்தவ்யனே உபாயம் என்று சாதிக்கையாலே பூர்வோக்த்ய உபாய சேஷம் ஆகையாலே உபாய பிரகரணம்..

இதில் பிராப்திக்கு உகப்பானே அவனும் என்னும் அளவும் பிரதான பிரமேயம்   மேல் என்னும் அளவு  இவ்வுபாயத்தை கொண்டு உபேயத்தை பெறுவான் ஒரு சேதனனுக்கு உபாய உபேய அதிகார பிரதான அபேஷிதங்களையும் உபாயாந்தர  த்யாக ஹெதுககளையும்  த்யாஜ்ய உபேதேயன்கலாய் உள்ளவற்றையும் விச்தரென சொல்ல்லுகையாலே  அதிகாரி நிஷ்ட க்ரமம் சொல்லுகிறது

தான் ஹித உபதேசம் பண்ணும் போது என்று தொடங்கி உகப்பும் உபகார ஸ்மிர்தியும் நடக்க வேணும்  என்னும் அளவாக  ஹித உபதேசசமயத்தில் ச்வாச்சர்ய பாரதன்ராதிகலான சதாச்சர்ய லஷணம், சச்சிஷ்ய லஷணம் தத் உபயர் பரிமாற்றம் தீ மனம் கெடுத்த ச்வாச்சர்ய விஷயத்தில் சிஷ்யன் உபகார சமுர்தி க்ரமம் இவற்றை சொல்லுகையாலே சித்தோ உபாய நிஷ்டனான அதிகாரியின் உடைய ச்வாச்சர்ய அனுவர்தன க்ரமம் சொல்லுகிறது

சவ தோஷ அநுசந்தானம் பயஹேது என்று தொடங்கி நிவர்த்தக ஞானம் அபயஹேது என்னும் அளவாக இவ் அதிகாரிக்கு அத்வேஷம் தொடங்கி ப்ராப்தி பலமான கைங்கர்ய பர்யந்தமாக வுண்டான பேருகளுக்கு எல்லாம் ஹேதுவாய், சவ கர்ம பய நிவர்தகமான பகவன் நிர்ஹெதுக க்ருபா பிரபாவம் சொல்லுகிறது ..ச்வதந்த்ரனை உபாயமாக தான் பற்றின போதிரே என்று தொடங்கி  மேல் எல்லாம் மிக்க வேதியர் வேதத்தின் உட பொருளான  சரம பர்வ நிஷ்ட்டையை வெள்ளிதாக சொல்லுகிறது ..வேதார்தம் அறுதி இருவது என்று தொடங்கி இவ் அர்த்தத்திலே தலை கட்டுகையாலே ,இப் பிரபந்தத்திலே சரம பிரகரண பிரதிபாத்  பாத்தியமான வர்த்தம் வேத தாத்பர்யம் என்னும் இடம் சம்ப்ரதிபந்தம் ..ஸ்ரீ கீதைக்கு சரம ச்லோஹம் போலே இறே இப் பிரபந்தத்துக்கு சரம பிரகரணம்..அங்கு சாத்ய உபாயங்களை உபதேச்த்திக் கொண்டு போந்து ,ச்வாதந்த்ர்யா பீதான் ஆனவனுக்கு அவற்றை தள்ளி சித்தோ உபாயம் காட்டப் பட்டது ..இங்கு சித்தோ உபாயத்தை சொல்லி  கொண்டு போந்து ,ஈஸ்வர ச்வாதந்த்ரயதுக்கு அஞ்சினவனுக்கு பிரதம பர்வதத்தை தள்ளி சரம பர்வம் காட்டப் பட்டது ..ஆக இப்படி ஆறு பிரகரணமாய் ஆறு அர்த்த பிரதி பாதகமாய் இருக்கும்..

 ஒன்பது ப்ரகரணமாய் ஒன்பது அர்த்த பிரதி பாதகமாய் இருக்கும் என்னவுமாம் ..அந்த பஷத்திலும் பிரதம பிரகரணம் பூர்வவத்..
மேல் பிரபதிக்கு என்று தொடங்கி பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் என்னும் அளவும் பூர்வ பிரகரண உக்தபாய சேஷம் ஆகையாலே  உபாய பிரகரணம்  ..

பிரபகாந்தர பரித்யாகத்துக்கு -என்று தொடங்கி -ஆகையாலே சுக ரூபமாய் இருக்கும் -என்னும் அளவும் உபாயாந்தர  தோஷ பிரகரணம்  இப் ப்ரகரணத்திலே பிரபத்த்ய உபாய வைலஷண்யம்  கதனம் ப்ராசன்கிதம்

இவன் அவனை பெற நினைக்கும் பொது -என்று தொடங்கி -இடைசியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும்-என்னும் அளவும் சித்தோ உபாய நிஷ்ட்டர் உடைய வைபவ பிரகரணம்

இப்படி சர்வ பிரகாரத்தாலும் -என்று தொடங்கி உபய விரோதிக்களுமாய் இருக்கும் -என்னும் அளவும் பிரபன்ன திநசர்யா பிரகரணம் ..
தான் ஹித உபதேசம் பண்ணும் போது-என்று தொடங்கி சேதனன் உடைய ருசியாலே வருகையாலே -என்னும் அளவும் சதாச்சர்யா லஷண பிரகரணம்
சிஷ்யன்  எனபது -என்று தொடங்கி  உபகார சமுர்தியும் நடக்க வேணும் என்னும் அளவும் சஸ் சிஷ்ய லஷண பிரகரணம்
ச்வதோஷ அநுசந்தானம் -என்று தொடங்கி நிவர்தாக ஞானம் அபய ஹேது -என்னும் அளவும் பகவன் நிர்ஹெதுக விஷஈகார பிரகரணம்
ச்வதந்த்ரனை என்று தொடங்கி மேலடங்க  சரம ப்ராப்ய பிராபக பிரகரணம்
இவ் இரண்டு கர்மத்தையும் பற்ற விறே-பேரு தருவிக்கும் அவள் தன பெருமை -திரு மகள் தன -என்கிற தனியன்கள் இரண்டும் அவதரித்தது ..ஆகையாலே இரண்டு பிரகாரங்களையும் அநுசந்திக்க குறை இல்லை

இப் ப்ரபந்தம் தான் தீர்க்க சரணா கதியான திருவாய்மொழி போல த்வய விவரணமாய் இருக்கும் ..எங்கனே என்னில் திரு வாய் மொழியில் முதல் மூன்று பத்தாலே உத்தர கண்ட அர்த்தைதையும் மேல் மூன்று பத்தாலே  பூர்வ கண்ட அர்த்தைதையும் சொல்லி, மேல் நாலு பத்தாலே அவ வுபாய வுபேய யோகியின் குணங்களையும் ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியையும் ,அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக பந்தத்தையும் ,தாம் பிரார்த்தித்த படியே பெற்ற படியையும் ,பிரதி பாதிக்கையாலே தத் அனுரூபார்தங்களை  சொல்லி தலை கட்டினார் போல

இதிலும் பிரதமத்திலே புருஷ காரத்தையும் ,அனந்தரம் உபாயத்தையும் ,அனந்தரம் எதத் உபாய அதிகாரி நிஷ்ட்டையையும் சொல்லுகையாலே பூர்வ கண்ட அர்த்தைதையும் ,அவ அதிகாரி நிஷ்ட்டை சொல்லுகிற அளவிலே உபய அதிகாரி அபேஷிதங்களை சொலுகிற இதற்க்கு உள்ளே உத்தர காண்ட அர்த்தத்தையும் சொல்லி , மேல் பிரபந்த சேஷத்தாலும் தத் உபதேஷ்டாவான ஆசார்யன் அளவில் இவனுக்கு உண்டாக வேண்டும் பிரதிபத்திய அனுவர்த்தன பிரகாரங்களையும் ,இவனுக்கு மகா விசுவாச ஹேதுவான பகவன் நிர்ஹெதுக க்ருபா பிரபாவத்தையும் ,வாக்ய த்வய  யோகத உபாய உபேய சரமாவதியையும் சொல்லி தலை கட்டுகையாலே ஒன்பது அர்த்த பிரதிபாதிக பஷத்திலும் பூர்வ வாக்யத்தில் க்ரியாபதோக்தமான ச்வீகார உபயாந்திர  பரித்யாக பூர்வகமாய் அல்லாது இராமையாலும்  திநசர்யையும் அப் பதத்தில் சொல்லப் படுகிற அதிகாரிக்கே உள்ளதாகை யாலும் , சதாச்சர்ய லஷணம் த்வய உபதேஷ்டாவான ஆசார்யன் படி சொல்லுகிறது ஆகையாலும் த்வய விவரணமாக நிர்வஹிக்க குறை இல்லை

இப்படி த்வய விவரணமான இதிலே த்வயம் தன்னில் போல மற்றை ரகஸ்ய த்வய அர்த்தங்களும் சங்கர ஹே ணோ தங்கலாய் இருக்கும் ..எங்கனே என்னில் அஹம் அர்த்தத்துக்கு என்று தொடங்கி அடியான் என்று இறே என்னும் அளவாகவும் ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இறே பிரதானம் என்றும் பிரணவார்த்தம் சொல்லப் பட்டது

ச்வயத்ன நிவ்ருத்தி இத்யாதியாலும் ,தன்னைத் தானே முடிக்கை ஆவது என்று தொடங்கி ,இப்படி சர்வ பிரகாரத்தாலும் ,என்கிறதற்கு கீழில் உள்ளத்தாலும் நமாஸ் சப்தார்தம் சொல்லப் பட்டது ..பர பிரயோஜன பிரவ்ருத்தி இத்யாதியாலும் ,உபேயத்துக்கு இளைய பெருமாளையும் இத்யாதியாலும் கைங்கர்யம் தான் பக்தி மூலம் அல்லாத போது இத்யாதியாலும் ,த்ருதீய பதார்த்தம் சொல்லப் பட்டது ..அஞாத்தாலே இத்யாதியாலும் பிரபாகந்தர பரித்யாத்யாகதுக்கு இத்யாதியாலும்

உபாயாந்தர த்யாகத்தைசஹேதுகமாய் சொல்லுகையாலே தத் த்யாஜ்யதையும் த்யாக பிரகாரத்தையும் ,சொல்லுகிற பத த்வய அர்த்தமும் சொல்லப் பட்டது ..இது தனக்கு ஸ்வரூபம் இத்யாதியாலும் ,ப்ராப்த்திக்கு உபாயம் அவன் நினைவு இத்யாதி யாலும் மா மேகம் சரணம் என்கிற பதங்களின் அர்த்தம் சொல்லப் பட்டது ..பிரபத்தி உபாயத்துக்கு இத்யாதியாலே -வ்ரஜ-என்கிற -ச்வீகார வைலஷண்யம் சொல்லப் பட்டது ..அவன் இவனை என்று தொடங்கி ச்வாதந்த்ர்யத்தாலே வரும் பார தந்த்ர்யம் பிரபலம் என்னும் அளவும் சர்வ பாபங்களையும் தள்ளி அங்கீகரிக்கும் ஈஸ்வர ச்வாதந்த்ர்யதையும் ,க்ருபா பலமும் அனுபவித்தே அறவேனும் என்று பல சித்தியிலே கண் அழிவு இல்லாமையும் சொல்லுகையாலே உத்தராரத்தில் அர்த்தம் சொல்லப் பட்டது..

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading